Thursday, 23 September 2010

ஆசை


உருவம் காட்டிய கண்ணாடி உடைத்து
சிதறிப் போன சில்லுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
ஏதேனும் ஒன்று காணாமல் போகும்.

=========================================

19 comments:

vasu balaji said...

ம்ம். சிதறிய சில்லுகள் ஒவ்வொன்றிலும் சிதறிய நாமும்:)

கலகலப்ரியா said...

போச்சிடா... கண்ணாடியும் போச்சா...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
ம்ம். சிதறிய சில்லுகள் ஒவ்வொன்றிலும் சிதறிய நாமும்:)

23 September 2010 20:55
//

பாலா,

நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அந்த பகுதி இல்லாது நீங்கள் இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//

கலகலப்ரியா said...
போச்சிடா... கண்ணாடியும் போச்சா...

//

ஆமா. உடையாத கண்ணாடி எங்கேயாவது இருக்கா? :))

vasu balaji said...

//பாலா,

நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அந்த பகுதி இல்லாது நீங்கள் இல்லை.//

அதுதான் சிதறிய நாமும்:)ஒன்னு போனா பின்னம்தான்

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//பாலா,

நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அந்த பகுதி இல்லாது நீங்கள் இல்லை.//

அதுதான் சிதறிய நாமும்:)ஒன்னு போனா பின்னம்தான்

//

ஆமா. அதாவது, நீங்கள் இல்லை.

Santhini said...

பிறிதொரு நாளில் எல்லாமும் காணாமல் போகும் !

குடுகுடுப்பை said...

ஸ்மினாப் கண்ணாடிங்களா?

அது சரி(18185106603874041862) said...

//

Nanum enn Kadavulum... said...
பிறிதொரு நாளில் எல்லாமும் காணாமல் போகும் !

//

நானும் என் கடவுளும்...

ஆமாம். அதை நோக்கியே கண்ணாடி உடைத்தல் ;))

அது சரி(18185106603874041862) said...

//

குடுகுடுப்பை said...
ஸ்மினாப் கண்ணாடிங்களா?

//

ஸ்ம்ரினாஃப் கண்ணாடில என்னைக்கு உருவம் தெரிஞ்சிருக்கு? வோட்கா அடிச்சா ஐயப்பன் பக்கத்துல உக்காந்திருப்பார், அது வேற விஷயம்.

Unknown said...

நல்லா இருக்கு.

கலகலப்ரியா said...

||அது சரி(18185106603874041862) said...

//

கலகலப்ரியா said...
போச்சிடா... கண்ணாடியும் போச்சா...

//

ஆமா. உடையாத கண்ணாடி எங்கேயாவது இருக்கா? :))||

ம்ம்... இருந்தாலும் உடைச்சிட மாட்டோம்?!

பை த வே... நேத்து யார்ட்டயோ சொல்லிட்டிருந்தேன் இந்தச் சிந்தனை பத்தி... ஆனா இங்க சொல்ல மறந்துட்டேன்... er... what did i say... ah.. of course.. a brilliant thinking..! :o)

பத்மா said...

எதனை முறை உடைந்தாலும், நம் கண்காணாமல் போனாலும், கண்ணாடி கண்ணாடியாகவே இருக்கும்

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

ம்ம்... இருந்தாலும் உடைச்சிட மாட்டோம்?!

பை த வே... நேத்து யார்ட்டயோ சொல்லிட்டிருந்தேன் இந்தச் சிந்தனை பத்தி... ஆனா இங்க சொல்ல மறந்துட்டேன்... er... what did i say... ah.. of course.. a brilliant thinking..! :o)

//

ஓ! நன்றி ப்ரியா. கண்ணாடியை பார்த்து அதிர்ச்சியில இப்படில்லாம் சிந்தனை வருது :))

அது சரி(18185106603874041862) said...

//

பத்மா said...
எதனை முறை உடைந்தாலும், நம் கண்காணாமல் போனாலும், கண்ணாடி கண்ணாடியாகவே இருக்கும்

26 September 2010 03:51
//

நன்றி பத்மா.

நீங்க சொல்றதும் சரி தான். ஆனால், கண்ணாடியின் பிரச்சினை என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

என்னாதிது இடுகையும்,பின்னூட்டங்களும் விடுகதை சொல்லிகிட்டு!

ஆமா!அடுத்தவங்க கடைல போய் பிராது செய்தா பதில் சொல்லாம போவேனா என்ன?

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
என்னாதிது இடுகையும்,பின்னூட்டங்களும் விடுகதை சொல்லிகிட்டு!

ஆமா!அடுத்தவங்க கடைல போய் பிராது செய்தா பதில் சொல்லாம போவேனா என்ன?

27 September 2010 13:23
//

நடராஜன் அண்ணா,

விடுகதையெல்லாம் இல்லை. கண்ணாடி ஒரு இன்ட்ரஸ்டிக்ங்கான விஷயம். சும்மா எழுதணும்னு தோணிச்சு. எழுதியாச்சு. :))

அநியாயம் :)) நான் எங்க பிராது செஞ்சேன்? நீங்க ஒண்ணு சொன்னீங்க, நான் அதுக்கு விளக்கம் அங்கயே கொடுத்தேன்.

பட், எனக்கு தெரிஞ்சு நாம ரெண்டு பேருக்கும் ஒரே ஒப்பீனியன் தான். அந்த கவிதையும் அது தான் சொல்லுது. நீங்க எப்படி தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு எனக்கு இன்னும் தெரியலை.

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Radhakrishnan said...

கலக்கல். சேர்த்து வைக்கும்போது கைகள் சிராய்த்து கொள்ளாமல் இருந்தால் சரி. நல்ல கவிதை.