Monday 13 September 2010

சிலுவை

அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
புதிய ஏற்பாடு. மார்க்கு: அதிகாரம் 14 வசனம் 18
==================
ஏனென்று தெரியவில்லை. சில நாட்களாக உறக்கம் பிடிப்பதில்லை. விட்டு விட்டு கத்தும் தவளை போல தூக்கமும் விழிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் புதர் நடுவே இருந்த அந்த கற்பாறையில் மெதுவே புரண்டு படுத்தேன். என்னை சுற்றிலும் கற்பாறைகளும் குற்றுச் செடிகளும் கடல் நடுவே துள்ளி எழும் மீன் கூட்டம் போல சூழ்ந்திருக்க மீட்பரால் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றவர்கள் கரை ஒதுங்கிய படகுகளை போல கால் விரித்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். மீட்பரை தொடர்ந்து வந்த நாள் முதலாய் இப்படி உறங்குவதே சுகமாக இருக்கிறது.

மீட்பரிடம் பேசி நாட்களாயிற்று. இப்பொழுதெல்லாம் அடிக்கடி தனிமையில் இருக்கிறார். நீண்ட நாளாய் புதைந்திருந்த திராட்சை ரசம் போல அவரிடம் இது வரை நான் காணாத ஒரு துக்கம் அடர்ந்திருக்கிறது. எப்பொழுதும் விழிப்பாயிருங்கள் என்று சொல்பவரிடம் என் தூக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் துணிவில்லை. நான் உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருக்க மண் துளைத்து எழும் கற்றாழை போல‌ தூரத்தே நீட்டியிருந்த மற்றொரு கற்பாறையிலிருந்து அந்த மனிதன் எழுந்து நின்றான். நான் அந்த இரவில் கண்களை கசக்கிக் கொண்டு உற்று பார்த்து அது கலிலியேனாகிய யூதாஸ் காரியேத்து என்று அடையாளம் கண்ட அதே நேரம் அவன் திருடனை போல சுற்றிலும் பார்த்து விட்டு மெதுவாக எங்கோ நடக்க ஆரம்பித்தான்.

எனக்கு விழிப்பாயிருங்கள் என்று மீட்பர் சொல்லியது நினைவில் வந்து அடி வயிற்றில் சூடாக எதுவோ கசிய ஆரம்பித்தது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களில் யூதாஸ் மேல் எனக்கு ஒரு போதும் முழு நம்பிக்கை இருந்தது இல்லை. மீட்பர் அறியாதது ஒன்றுமில்லை என்பதால் மீட்பரை கேள்வி கேக்கவும் முடியவில்லை. நான் மெதுவே எழுந்து நின்று பாறைகளுக்கும் குத்து செடிகளுக்கும் இடையில் பதுங்கி புல் ஊறும் பாம்பு போல அவனறியாது யூதாஸை தொடர ஆரம்பித்தேன்.
============================
நான் பார்த்த போது உயரமான கற்பாறையில் இஸ்ரவேலின் ராஜாவாக‌ மீட்பர் அமர்ந்திருக்க யூதாஸ் காரியேத்து அவர் முன்னே மண்டியிட்டு இருந்தான். நிலவொளி மீட்பரின் கண்ணில் பட்டு கருணை போல வழிய நான் இருவரின் பக்கவாட்டு முகமும் தெரியும் படி பாறைகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன். மணலில் புதையும் ஒட்டகத்தின் கால்கள் போல என் மனம் ஏனோ தள்ளாட ஆரம்பித்தது.

பிதாவின் சித்தப்படி நடக்கும்.இன்றிலிருந்து மூன்றாம் நாள். மீட்பரின் குரல் மெதுவாக ஒலிக்க யூதாஸ் கற்பாறையில் முகம் தேய்த்து ரபீ ரபீ என்று அலற ஆரம்பித்தான். அவன் குரல் வாதை மிகுந்த கழுதையின் குரல்வளை நெறிக்கப்படுவது போல தீனமாக இருந்தது. அவன் நீண்ட நேரம் அழுது புலம்பி என்னைக் கைவிட்டீர் பிதாவேவென்று எழுந்து நிற்க நான் ஒளிந்திருந்த நிலையில் பின் நகர்ந்து அவன் முகம் பார்த்தேன். பாறை கிழித்து தோல் வ‌ழன்ற முகத்தில் நிலவொளியுடன் ரத்தம் ஒழுக அவன் தலை கலைந்து முள்முடி சூட்டப்பட்ட மனிதன் போல இருந்தான். அவன் தள்ளாட்டத்துடன் தன் இடத்துக்கு திரும்பாது எதிர் திசையில் நடக்க ஆரம்பிக்க நான் மீட்பரிடம் பேசத் துணிவின்றி யாரும் அறியாவண்ணம் என்னிடம் வந்து படுத்துக் கொண்டேன்.
===============
அன்றிலிருந்து மூன்றாம் நாள் நாங்கள் கெத்சமனே போய் இருக்கையில் மீட்பர் மிகுந்த துக்கமாயிருந்தார். எங்களை விடுத்து தனிமையில் போய் நீண்ட நேரம் ஜெபமாயிருந்தார். பின்னர் அவர் எங்களிடையே பேசிக் கொண்டிருக்கையில் பலர் புடை சூழ வந்த யூதாஸ் ரபீ ரபீ என்று மீட்பரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். அவனுடன் வந்தவர்கள் உடனடியாக மீட்பரை கைது செய்து அழைத்துப் போக மீட்பரின் சீடர்கள் யூதாஸ் காரியேத்துவை பலவாறாக தூஷிக்க ஆரம்பித்தார்கள்.

அவனோ அவர்களை விடுத்து மானமுள்ள‌ திருடன் போல‌ தலைகுனிந்து நடக்க ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகி அவனை பின் தொடர ஆரம்பித்தேன்.
================================
முதுகு பிறவிக் கூன் போல வளைந்து இஸ்ரவேலின் மிகப் பெரிய சிலுவையை சுமப்பவன் போல யூதாஸ் காரியேத்துவின் நடை தள்ளாடியது. கெத்சமனே நகரிலிருந்து விலகி வெகு தூரம் நடந்த அவன் அந்த காட்டுப்பகுதி வந்ததும் நின்றான். சுற்றிலும் பார்த்து விட்டு தன் பணப்பையிலிருந்து சில வெள்ளிக் காசுகளை எடுத்து வாயில் போட்டான். தோற்பையிலிருந்த நீரை குடித்து விட்டு அவன் மீண்டும் நடக்க ஆரம்பிக்க அவன் வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அவன் மேலும் சிறிது தூரம் நடந்து வயிற்றை பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து மண்ணில் விழுந்தான்.

அவனறியாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்த நான் அவன் விழுந்ததும் அவனை நோக்கி ஓடினேன். அவன் வாயிலிருந்து வடிந்த ரத்தம் இஸ்ரவேலின் மண்ணை நனைக்க அவன் முகம் ரத்தத்தில் தோய்ந்திருக்க மண்ணில் புரண்டவாறே என் திசை நோக்கி கை நீட்டி கத்தினான். எனக்குத் தெரியும். உனக்கு தெரியும். எல்லாம் தெரியும்.

நான் யூதாஸ் காரியேத்து கண் சொருகி வாய் கோணி கைகள் வயிற்றை அழுத்திப் பிடித்து உடல் இரண்டாக மடிந்து வாயிலிருந்து ரத்தம் வடிய உயிர் துறப்பதை ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
========================

நான் ஓட்டமும் நடையுமாக கெத்சமனே திரும்பி வந்து மீட்பரின் மற்ற சீடர்கள் நின்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன். காவலர்கள் பேதுருவானவனிடம் மீட்பர் குறித்து விசாரிக்க அவன் அவரை ஒரு போதும் அறிகிலேன் என்று மறுதலித்தான். அப்பொழுது கோழிக் கூவிட அவன் முகம் பொத்தி பெரும் அழுகையுடன் கூட்டம் விலக்கி ஓட கூடியிருந்த மக்களில் சிலர் மீட்பரையும் சிலர் யூதாஸையும் தூஷிக்க ஆரம்பித்தார்கள்.

காவலர்களில் ஒருவன் என்னை கவனித்திருக்க வேண்டும். அவன் என்னை நோக்கி வந்து சவுக்கை நீட்டி கேட்டான். இந்த மக்கள் தூஷிப்பதை கேட்டாயா. அவர்களை நீ அறிவாயா.

நான் மறுதலிப்பாக தலையசைத்தேன். இம்மக்கள் யாரை தூஷணை செய்கிறார்கள், நான் எதுவும் அறிகிலேன்.

சொல்லும் போதே இனி எப்பொழுதும் நான் பேச முடியாது என்பதை உணர்ந்தேன். என் இதயம் திடீரென்று மிகவும் கனமாக இருந்தது.அந்த கனம் இனி ஒரு போதும் இறங்காது என்பது எனக்குத் தெரியும்.
==========================================
பின் குறிப்பு 1: இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்ததில் யூதாஸின் பங்கு பற்றி நிறைய விவாதம் இருக்கிறது. பிதாவின் சித்தம் படியே நடந்தது என்பது இயேசுவின் வாக்கு எனில் பழி ஏன் யூதாஸின் மேல் என்பது அதில் ஒரு முக்கிய பக்கம். ஆகவே இது முற்றிலும் என் சிந்தனை அல்ல. ஆனால், இப்படி ஒரு கோணத்தில் போர்ஹே எழுதியிருப்பதாக படித்ததும் இதை எழுதிப் பார்க்க தோன்றியது. நான் போர்ஹே எழுதியதை படித்ததில்லை என்பதால் இது காப்பி அல்ல.

பின் குறிப்பு 2: பல்வேறு எரிச்சல்களுக்கும் கசப்புகளுக்கும் மத்தியில் காலைப் பிடித்த முதலை போல கிறுக்கும் பழக்கம் தொடர்வதால் இது தமிழ்ப்பதிவுலகில் காஞ்சிரம் ஆகிக் கொண்டிருக்கும் ஒருவனின் நூற்றி ஒன்றாவது கிறுக்கல். எத்தனை காலம் தொடரும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

34 comments:

MSK / Saravana said...

நல்லா இருக்கு அதுசரி..

கலகலப்ரியா said...

கனமாகத்தான் இருக்கு...

கலகலப்ரியா said...

இன்னொரு நாள்... இன்னொரு தடவை படித்துப் பார்க்கிறேன்...

must be a masterpiece...

கலகலப்ரியா said...

|| நூற்றி ஒன்றாவது கிறுக்கல்.||

ம்ம்... நிறைய மிஸ் பண்ணிட்டேனோ...

வாழ்த்துகள்... சம்ப்ரதாயத்துக்கு...

குடுகுடுப்பை said...

I am sure I cannot understand this.

குடுகுடுப்பை said...

its sad to see comment moderation.

vasu balaji said...

எழுத்துக்கள் எங்கோ கடத்திப் போய்விட்டன. இதுவரை இப்படியோர் கோணத்தில் படித்ததில்லை. மீண்டும் படிக்கத் தூண்டும். We need this quality writing often.

ம்ம். அப்புறம் 101க்கு வாழ்த்துகள். இதுக்குள்ளதான் எத்தனை வரைட்டி. :) I can only say thanks that you gave this for READING. ஒன்னு கூட மேலோட்டமா படிச்சிட்டு போற இடுகையில்லை.

vasu balaji said...

/தமிழ்ப்பதிவுலகில் காஞ்சிரம் ஆகிக் கொண்டிருக்கும் ஒருவனின் நூற்றி ஒன்றாவது கிறுக்கல்./

எப்புடி சாமி இப்படி எழுத வருது:))

பழமைபேசி said...

அது சரி அண்ணாச்சி, வாழ்த்துகள்!!!

Unknown said...

முதல்ல 101க்கு வாழ்த்துகள்.

101ம் 101 ரத்தினங்கள். இது கோஹினூர் வைரம்.

இந்த இடுகை நான் பஸ்ல படிக்கும்போது யாரோ எழுதுனதை பேஸ்ட் பண்ணியிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா மூணாவது பத்தி வரும்போதே உங்க டச் தெரிய ஆரம்பிச்சிருச்சி.

Mahesh said...

கருத்தும் நடையும் வித்தியாசமா இருக்கு... கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு :(

Santhini said...

Very good writing. You really took me out there. You certainly got that "powerful" way of saying things, whatever they are. "Quality writing Man !!"

Robin said...

//பிதாவின் சித்தம் படியே நடந்தது என்பது இயேசுவின் வாக்கு எனில் பழி ஏன் யூதாஸின் மேல் என்பது அதில் ஒரு முக்கிய பக்கம்.//

யூதாஸ் ஏற்கனவே மோசமானவன் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. பிதாவின் சித்தப்படி நடந்தாலும் யூதாஸ் பண ஆசையினால் செய்தான் என்பதுதான் உண்மை. எனவே அந்தப் பழி அவன்மேல் விழுந்தது.

தருமி said...

//பிதாவின் சித்தப்படி நடந்தாலும் யூதாஸ் பண ஆசையினால் செய்தான் என்பதுதான் உண்மை./

ரொம்ப ambiguous ஆக இல்லை?!
சித்தமா, பண ஆசையா?

தருமி said...

இன்னொரு முரண்தொடை எனக்குண்டு.
யூதாஸ் தான் செய்த தவறுக்காக மிக மிக மனம் நொந்து உயிரை மாய்த்துக் கொண்டான். பீட்டர் ஏசு யாரென்று தெரியாது என்று பொய் சொல்லிவிட்டு (கவலையோடு) வாழ்ந்தார்.

அப்போ யூதாஸ் தான் நல்லவனோ பீட்ட்ரை விட?

தருமி said...

//யூதாஸ் ஏற்கனவே மோசமானவன் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. //

கடவுள் யூதாஸை அப்படி "படைத்திருக்கிறார்" - அவர் வேலை நடக்கணுமேன்னு!

அது சரி(18185106603874041862) said...

நன்றி சரவணா. நீங்க என்ன எல்லாம் பஸ்ல போட்றீங்க..ப்ளாக்ல ஏத்துனா என்ன?

நன்றி ப்ரியா. மாஸ்டர் பீஸ்லாம் இல்லை. வழக்கம் போல பாட்டில் தீரும் நேரம் கிறுக்கியது. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.

குடுகுடுப்பை, நன்றி. புரிஞ்சிக்கிட்டு புரியலைன்னு சொல்றது அரசியல்வாதிங்க ஸ்டைல் :))

நன்றி வானம்பாடிகள் சார். இது டூரிங்க் டாக்கீஸ் சார். அப்படித் தான் விதவிதமா படம் வரும். அடுத்த படம் சம்பூர்ண ராமாயணம். மாயா பஜார் பார்த்திருக்கீங்களா? பார்க்கலைன்னா சொல்லுங்க. அடுத்த படம் அதையே போட்ரலாம். எப்படி இப்படில்லாம்னா...அது ச்சும்மா தான் :))

பழமைபேசி அண்ணாச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

நன்றி முகிலன், வேணாம்..எனக்கு ஏற்கனவே தலைக் கனம் ஜாஸ்தி :)).

நன்றி மகேஷ். பொறாமை ம்யூச்சுவல் "நாயம்" எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

அது சரி(18185106603874041862) said...

நன்றி கடவுளே. இஸ்ரேலுக்கு ஃப்ரீயா போய் வந்துட்டீங்களா...:))

விளக்கத்துக்கு நன்றி ராபின். இது பைபிள் பத்தி விவாதம் இல்லைன்னாலும், யூதாஸ் பற்றிய இந்தக் கோணம் நிறைய பேருக்கு இருக்கு. உங்களுக்கு பின்னாடியே தருமி சார் சொல்றாரு பாருங்க.

தருமி சார், நன்றி. நீங்க சொல்றது தான் கதையின் அடிப்படை. யூதாஸின் பண ஆசையே பிதாவின் சித்தம் தான் என்பது என் கோணம். அவனின்றி அசைவதில்லை அணுவும்கிற மாதிரி. யூதாஸ் பீட்டரை விட நல்லவரான்னு தெரியலை. ஆனா, யூதாஸோட ரோல் முன்னாடியே தீர்மானிக்கப்பட்டது. ஒரு வகையில் யூதாஸின் பிறப்புக்கு முன்பே. இது என்னோட கோணம். உங்க கோணமும் அப்படியே இருக்க மாதிரி தெரியுது.

பின்னூட்டம் இட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

அது சரி(18185106603874041862) said...

தருமி சார், உங்களுக்கு தெரியலாம்கிறதுனால ஒரு கேள்வி. யூதாஸ் யூதர்கள் (Judas - Jews) இது தற்செயலா இல்லை உருவகமா? இந்த டவ்ட் எனக்கு ரொம்ப நாளா இருக்கு.

Unknown said...

//தருமி சார், உங்களுக்கு தெரியலாம்கிறதுனால ஒரு கேள்வி. யூதாஸ் யூதர்கள் (Judas - Jews) இது தற்செயலா இல்லை உருவகமா? இந்த டவ்ட் எனக்கு ரொம்ப நாளா இருக்கு//

எனக்கும் வந்திருக்கு இந்த டவுட்...

குறிப்பா தங்க்லீஷ்ல யூதர்கள்ங்கிறதை ஒரு தடவை யூதாஸ்னு சொல்லிட்டு அப்புறமா யோசிச்சுப் பாத்தேன்..

கபீஷ் said...

//தருமி சார், உங்களுக்கு தெரியலாம்கிறதுனால ஒரு கேள்வி. யூதாஸ் யூதர்கள் (Judas - Jews) இது தற்செயலா இல்லை உருவகமா? இந்த டவ்ட் எனக்கு ரொம்ப நாளா இருக்கு//

ரொம்ப நாள் சந்தேகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. புது சந்தேகத்தோட வாங்க

settaikkaran said...

வார்த்தைக்கும் வார்த்தைக்கும் நடுவே இறுக்கமாய் தொனிக்கிற அழுத்தம். பிரமாதம்! நூற்றி ஒன்றாவது இடுகைக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் மேலும் மேலும்...!

ராஜ நடராஜன் said...

புனைவா?

பிதாவே இவர்களை மன்னியும்!

ராஜ நடராஜன் said...

//தருமி சார், உங்களுக்கு தெரியலாம்கிறதுனால ஒரு கேள்வி. யூதாஸ் யூதர்கள் (Judas - Jews) இது தற்செயலா இல்லை உருவகமா? இந்த டவ்ட் எனக்கு ரொம்ப நாளா இருக்கு.//

தருமி புதுசா பாட்டு எழுதிகிட்டு இருக்கிறதால என்னை அனுப்பி பொற்காசுகளை வாங்கிட்டு வரச்சொன்னார்.ஏதோ பார்த்து போட்டு கொடுங்க.

யூதாஸ் ஒரு தனி மனிதனின் பெயர்.ஜூஸ்(யூதர்கள்) ஒரு குழுவின் பெயர்.

ரொம்ப நாளா எனக்கும் ஒரு டவுட்!

டாவின்ஸியோட ஓவியங்களின் படி ஆடு மேய்ப்பவன்,கடைசி போஜன அங்கிகளையெல்லாம் பார்த்தா இப்போதைய இஸ்ரேலியர்களுக்கு(யூதர்கள்) தொடர்பு இருக்கிற மாதிரி தெரியல.மாறாக எகிப்தில் சய்தி எனப்படும் எகிப்து வனாந்தர மக்களும் அரேபியர்களுமே உடை விசயத்தில்(நீள அங்கி,தலைப்பா கட்டு,பெண்களின் கருப்பு அங்கி) டாவின்சியுடன் பொருந்தி போகிறார்கள்.

எறும்பு said...

அது சரி உங்களுக்கு நான் போடுற முதல் கமெண்ட் இது என எண்ணுகிறேன். வழக்கமா படிச்சுட்டு போய்டுவேன், இத படிச்ச பிறகு கமெண்ட் போடாம போக முடியலை. வித்யாசமான கோணத்தில் நல்ல முயற்சி. மேல உங்கள வாழ்த்தி இருக்கிற எல்லாரும் உண்மையதான் சொல்லி இருக்காங்க.Wishes.
:)

அது சரி(18185106603874041862) said...

//

கபீஷ் said...
//தருமி சார், உங்களுக்கு தெரியலாம்கிறதுனால ஒரு கேள்வி. யூதாஸ் யூதர்கள் (Judas - Jews) இது தற்செயலா இல்லை உருவகமா? இந்த டவ்ட் எனக்கு ரொம்ப நாளா இருக்கு//

ரொம்ப நாள் சந்தேகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. புது சந்தேகத்தோட வாங்க

//

கபீஷ்...ஓஹோ..நீங்க அப்படி வரீங்களா? சரி..புதுசா ஒரு சந்தேகம். Judas ...இந்த பேரை வச்சி தான் Judaism வந்ததா? :)

அது சரி(18185106603874041862) said...

முகிலன், ஒட்டு மொத்த யூதர்களை யூதாஸ்னு சொல்லிட்டீங்களா? :)))

நன்றி சேட்டைக்காரன். நான் இப்ப தான் உங்களை படிக்க ஆரம்பிச்சிருக்கேன். அந்த ஆப்பம் ரெடி கதை :0))))

நடராஜன் அண்ணா. என்னண்ணா ரொம்ப நாளா காணோம்? ஹாலிடேவுக்கு ஊர் பக்கம் போய்ட்டீங்களா? ஆமா, எதுக்கு மன்னிப்பு?

யூதாஸ் தனிமனிதனின் பெயர்னு தெரியுது. ஆனா, அது உருவகமாக வந்த பேரான்னு தான் டவுட். யூதர்களால ஜீஸஸ் இறந்தப் பின்னாடி தான் பைபிள் எழுதினாங்க. அதுவும் சில நூறு வருஷம் கழிச்சி.

டவின்ஸி மேட்டர் எனக்கு தெரியலை. பட், ஜீஸஸ் இருந்த காலத்துல அப்படி உடை அணிந்திருக்கலாம்.

@எறும்பு. வாங்க சார். முதல் வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளும் நன்றி.

தருமி said...

அதுசரி,
//யூதாஸ் யூதர்கள் ..உருவகமா?//

ஒண்ணு ஆளு பேரு. இன்னொண்ணு 'ஜாதி' பேரு.

காலதாமதமா பதில் சொல்றதுக்கு காரணம் ஒரு புத்தகம் தேடினேன். காணவில்லை. அதில் யூதாசின் 'குலப்பெயர்' இருக்கும். - 12 tribe-களில் ஒன்று. போராட்டக் குணம் கொண்ட ஒன்று. அவன் ஏசு ரோமர்களிடமிருந்து யூதர்களை விடுவிக்க வந்தவர் என்ற நம்பிக்கையோடு அவரோடு இணைந்திருந்து அது நடை பெறாததால் ஏமாந்தவன் என்று ஒரு வரலாறு அப்புத்தகத்தில்.

முழு விளக்கம் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

தருமி said...

ராபினைக் காணோம். வந்தால் அவருக்கு இன்னொரு கேள்வி:

//நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? கடவுள் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? மனிதன் இதற்கு எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?// -- இப்படி கேட்டிருக்கிறேன் பழைய பதிவில்

தருமி said...

//இப்படி ஒரு கோணத்தில் போர்ஹே எழுதியிருப்பதாக படித்ததும்...//

link please...

அது சரி(18185106603874041862) said...

தருமி சார்,

விளக்கத்திற்கு நன்றி. நீங்க சொல்றது புரிஞ்சாலும், யூதர்கள் அப்படிங்கிறதை குறிக்கவே யூதாஸ்னு அந்த கேரக்டருக்கு பேரு வச்சாங்களான்னு ஒரு டவ்ட். ரொம்ப நாளா இருக்கது தான்.

அப்புறம் போர்ஹே எழுதின அந்த கதைக்கு லின்க் இல்லை. அவரு அப்படி ஒரு தீம்ல கதை எழுதினது தான் என்கிட்ட லின்க் இருக்கு. விக்கிபீடியா. http://en.wikipedia.org/wiki/Three_Versions_of_Judas

ஆனா, இந்த புக் அமேசான்ல இருக்கு. "Fictions"னு டைட்டில்.

அது சரி(18185106603874041862) said...

வாங்கலாம்னு நினைச்சேன். ஆனா நிறைய புக் வாங்கி படிக்காமலயே இருக்கு. அதுவும் போர்ஹேல்லாம் எனக்கு புரியாது. ம்ம்ம்ம்...பார்ப்போம்.

செல்வ கருப்பையா said...

தேர்ந்தேடுத்த களன்களுக்கான மொழியும் நடையும் உங்களுக்கு வெகு எளிதாக வருகிறது - ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருக்கு. இதைப் படித்ததும் Sharehunter ராவணனைப் பற்றி எழுதிய ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் சற்றே சுருக்கமாக முடிந்து விட்டது போல் தோன்றுகிறது - இன்னும் கொஞ்சம் அனுபவம்தந்திருக்கலாமோ?

அது சரி(18185106603874041862) said...

நன்றி செல்வா. பைபிள் படித்த வகையில், கதாபாத்திரத்தின் மொழி என்று முயற்சி செய்தது.

நீங்கள் சொல்வது சரி தான். நீளமாக இருக்கிறது என்று சில இடங்களில் வெட்டி விட்டேன். பப்ளிஷ் செய்ததும் அதையும் சேர்த்திருக்காலமோ என்று தோன்றியது. நீங்கள் சொல்வது அதை உறுதிப்படுத்துகிறது. மீண்டும் நன்றி.