Sunday, 25 July 2010

ஆனந்த விகடனும் சாநிதாவும் (அ) அய்யாங்...டொய்ங்..

சாருவின் மனங்கொத்தி பறவை: ஆழ்துளை கிணறு உள்ளே விழும் குழந்தை தீயணைப்பு படை மீட்பு, துளையை மூடாத பொறுப்பில்லாத தொழிலாளிகள். இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். சாநிக்கு எழுதுவதற்கு சுய சொறிதல் தவிர வேறு எந்த விஷயமும் இல்லை. மனம் கொத்தி பறவை. மண்ணாங்கட்டி பறவை என்று வைத்திருக்கலாம். ஆனந்த விகடன் ஏற்கனவே பின்பக்கம் துடைக்கு டிஷ்யூ பேப்பர் அளவு தரம். இப்பொழுது துடைத்த டிஷ்யூ பேப்பர் போல இருக்கிறது.

சுய சொறிதலை விற்றே ஒருவன் எழுத்தாளனாகும் நிலை கேடு கெட்ட தமிழ் சூழலில் தான் இருக்கிறது. நேபாள மொழியிலோ இல்லை மணிப்புரி மொழியிலோ இந்த அவல நிலை இல்லவே இல்லை. இப்படி சொறிபவன எழுத்தாளன் என்றால் அஸ்ஸாமில் செருப்பால் அடிப்பார்கள். ஆனால் தமிழில் பத்திரிக்கையில் எழுத வைக்கிறார்கள். பின்னர் எப்படி ஐயா தமிழர்கள் படிக்க வருவார்கள்? அதனால் தான் கருணாநிதி இலக்கியவாதியாகவும் முத்தமிழ் அறிஞராகவும் ஆகிவிட்டார்.

அறிஞர் என்றதும் வேறு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. திராவிட இயக்கத்தாருக்கு எதுகை மோனை மீது என்றுமே தீராத தாகம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று எகனை மொகனையில் முழங்கிய தஞ்சாவூர் தட்சிணாமூர்த்தி பெயரை மாற்றிக் கொண்டு கருணாநிதி ஆனார். கானாவுக்கு கானா...கலைஞர் கருணாநிதி. அப்படின்னா ஆனாவுக்கு ஆனா...அறிஞர் அண்ணா. நெடுஞ்செழியன்? காசா பணமா போட்டுக்க..நானாவுக்கு நானா...நாவலர் நெடுஞ்செழியன்.

லஸ் கார்னரை லூஸ் கார்னர் என்று சொல்ல வேண்டும். சாரு இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஓசியில் அவர் குடிக்க மட்டுமே போவார். ஓசியில் ப்ளாக் கிடைத்தது என்று எழுத ஓடி வந்து விடவில்லை. எழுத வரும் முன் நானூறு வருடம் படித்திருக்கிறார். கூகிள் மேப் வருவதற்கு முன்னரே ஸ்கூல் புக்கில் மேப் பார்த்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குளிரில் குண்டித் துணி இல்லாமல் அலைந்திருக்கிறார். எல்லாம் படித்து விட்டு அப்புறம் என்னை மாதிரி எவனும் எழுத மாட்டெங்குறான் என்று கடுப்பாகித் தான் எழுத வந்திருக்கிறார். இப்பொழுது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் எழுதுகிறார்.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் தான் இருக்கிறது என்று எனக்கு மீண்டும் மீண்டும் கடிதம் வருகிறது. ஐய்யா நான் பிச்சைக் காரன். விந்து விற்பவன் (என் எழுத்தை சொல்லவில்லை). ஆனால் எழுத்தை விற்க மாட்டேன்...தமிழ் சூழலில் அதை எவனும் வாங்க மாட்டேன் என்கிறான். நான் பிச்சை எடுக்கிறேன். தினமும் ஆறு மணி நேரம் தெருவில் போக வர இருபப்வர்களிடன் பிச்சை எடுக்கிறேன். யாரும் வராவிட்டால் பார் போய் ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன்...இப்படி தான் இந்த முப்பது மணி நேரம்.

தமிழ் வளமான மொழி. ஒன்று சொன்னால் சரியாக வேறு அர்த்தம் வந்து தொலைக்கும். முந்திய பத்தியை பாருங்கள். உத்தம தமிழ் எழுத்தாளன் என்னை பத்தி எழுத்தாளன் என்கிறான். அவன் குற்றாலத்தில் குளிக்கும் போது அவனை துண்டுடன் பார்த்த ஒரே தமிழ் எழுத்தாளன் நான் தான். நான் இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் போந்தேவின் கழுதை படித்தீர்கள்?

என்ன சொல்ல வந்தேன். ஆமாம். தமிழின் வளமை. ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன் என்று நான் எழுதினேன். அதாவது எனக்கு ஆறு மணி நேரம் தேவை என்று. அதையே ஃபோன் செய்து, ஆறு மணி நேரமாக பிச்சை எடுக்கறீங்க? ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அரை மணி நேரத்தில் பிச்சை கிடைக்குமே என்கிறார்கள்.

தமிழ் சூழலை குறை சொல்லிக் கொண்டே என்ன மயிருக்கு தமிழில் எழுதற என்று அஞ்சனா கேட்கிறாள். அஞ்சனம் என்றால் கறுப்பு. ஆனால் அஞ்சனா கறுப்பல்ல. செம அழகி. இப்படி அழகான பெண்கள் எனக்கு கடிதம் எழுதுவதாக எனக்கு நானே கடிதம் எழுதுவதை கூட வயிறெரிகிறார்கள். தமிழர்களுக்கு வயித்தெரிச்சல் அதிகம். உத்தம தமிழ் எழுத்தாளன போல என்னால் தமிழ் சினிமாவுக்கு எழுத முடியாது. டேனி பாயலிடமும் ரோஜர் கும்ப்ளேவிடமும் சான்ஸ் கேட்டிருக்கிறேன். மிச்சம் மீதி இருந்தால் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். பிச்சைக்காரனுக்கு பிச்சை போடாதவர்களை பற்றி என்ன சொல்ல? ஸ்டேன்லி குப்ரிக்கிடம் கேட்கலாம். அவர் செத்துப் போய்விட்டதாக சொல்கிறார்கள்.

அதை விடுங்கள். எனக்கு இந்தி தமிழ் மலையாளம் இப்படி பல மொழி தெரியும். எனக்கு சிலே மொழியில் எழுத வேண்டும். ஆனால் சிலேயில் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரிந்து தொலைக்க் மாட்டேன் என்கிறது. அமெரிக்காவின் உத்தரவுப்படி சிலேவில் யாருமே பேசுவதில்லை.

ஏன் இப்படி எல்லாரையும் திட்டிக் கொண்டே இருக்கிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். நான் யாருக்கும் நண்பனில்லை. எனக்கும் யாரும் நண்பனில்லை. தமிழ்நாட்டில் என்னுடன் நண்பன் என்று சொல்லிக் கொள்ளவே பயப்படுகிறார்கள். அந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இல்லாத அளவுக்கு எனக்கு நண்பர்கள் அதிகம். அதிலும் பெண் நண்பிகள் அதிகம். நானே உருவாக்கிக் கொள்வதால் அதில் கஞ்சத் தனம் பார்ப்பதே இல்லை.

இப்படி நண்பர்களே இல்லாததால், டெல்லியிலிருக்கும் போதே யார் என்ன சொன்னாலும் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொல்லி விடுவேன். அன்று கூட அப்படித் தான் ஒரு ஜந்தர் மந்திர் ரோடில் ஒரு பஞ்சாபி காரன் என்னவோ சொன்னான். எனக்கு பஞ்சாபி தெரியாது. ஆனால் அவன் பஞ்சாபியில் தான் பேசுகிறான் என்றும் தெரியாது. அதனால் நண்பன் என்னவோ சொல்கிறான் சொல்லிவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் இப்படி இருப்பதால் கதவை இறுக்கு பூட்டாத நேரங்களில் சித்யானந்தர் கூட டோரு நீ ஒரு குழந்தை என்பார். அப்போது பஞ்சிதா யாரென்றே எனக்கு தெரியாது.

இத்தனை தூரம் சொல்லியும் இருநூறு வருடமாக எழுதியும் ரஞ்சனா மாத்ரிதில் இருந்து ஃபோன் செய்து கேட்கிறாள். முட்டாள் தமிழர்கள் மட்டுமே Madrid என்பதை மாட்ரிட் என்று உச்சரிப்பார்கள். அதை மாத்ரித் என்று தான் ஸ்பெயில் சின்ன குழந்தை கூட உச்சரிக்கும். ஸ்பெயின் அழகான மொழி.

நான் ரஞ்சனாவிடன் சொல்லி விட்டேன். இதோ பார். நான் எழுதுவதை எந்த மொழியில் எழுதினாலும் எவனும் படிக்க மாட்டான். அதனால் தான் தமிழில் எழுதுகிறேன். இங்கே கொஞ்சம் பேராவது படிக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழல் நாசமாகி விட்டது. இருநூறு வருடமாக தினம் முப்பது மணி நேரம் எழுதும் ஒருவன் ஒரு ஃபெராரி கார் கூட வாங்க முடியவில்லை. இந்த நாடு உருப்படுமா? தமிழர்கள் கலாச்சாரம் இல்லாத மொன்னைகள். அவர்களுக்கு பெராரி கார் தெரியாது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்று பெரீஸ் பிஸ்கட் தான் தெரியும்.

மதிய நேரத்தில் எழுத வேண்டிய விஷயமா இது? இந்த கருமத்திற்கு தான் நான் ஆனந்த விகடன் போன்றவைகளை படிப்பதில்லை. அதை தமிழர்கள் மட்டுமே படிப்பார்கள். நானோ தமிழனே இல்லை என்று ராஜராஜ சோழனிடமே நேரில் போய் அறிவித்தவன்.நான் ஏன் ஆனந்த விகடன் எல்லாம் படிக்க வேண்டும்?

பஸ்ஸில் இப்படி தனியாக உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தால் வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்.

அதை தானே அய்யா நானும் நாற்பதாயிரம் பக்கம் எழுதி இருக்கிறேன். சனிப்பிணம் தனியாக போகாது என்று சொல்கிறார்கள். அதை முதலில் சொல்லியது என் அப்பத்தா. இதைச் சொன்னால் நீதான் தமிழன் இல்லையே என்கிறார்கள். அதை விடுங்கள். சனிப் பிணம் தனியாக போகிறதோ இல்லையோ சனிக்கிழமை சாருவை படித்தவன் தனியாக தண்ணியடிக்க போவான். வர்ற கடுப்புக்கு அவனும் பாவம் வேறு என்ன தான் செய்து தொலைவான்? சரி போய்ட்டு வாடா என்று நானும் விட்டு விட்டேன்.

அது என்ன அய்யாங் டொய்ங் என்று கேட்கிறார்கள். அது எப்படி ஓரு ஏழை பிச்சைக்கார ப்ளாக் எழுத்தாளன் என்றால் மட்டும் உங்களால் கேட்க முடிகிறது. இந்த கேள்வியை ஆனந்த விகடனை பார்த்து கேட்டிருக்கிறீர்களா? முதலில் அங்கே போய் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள். டப்ளினில் மீட் பண்ணலாம். ஆனால் இனிமேல் அடிக்கடி இப்படி அய்யாங் டொய்ங் வரலாம். நான் ஒரு குழந்தை எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. நாளைக்கு எமினமின் ம்யூஸிக் ஃபெஸ்டிவல் போவதாக ப்ளான் செய்திருக்கிறேன். திறந்தவெளிக் கொண்டாட்டம் தான். திறந்தவெளி என்றால் ஓப்பன் ஆடிட்டோரியம் என்று மட்டுமே தமிழர்களுக்கு புரிகிறது. என்ன செய்ய?

==================================================

46 comments:

அது சரி(18185106603874041862) said...

பஸ்ஸில் கொட்டியதை முகிலன் சொன்னபடி கூட்டி பெருக்கி ப்ளாக்கில் கொட்டியாகி விட்டது.

கலகலப்ரியா said...

||பஸ்ஸில் கொட்டியதை முகிலன் சொன்னபடி கூட்டி பெருக்கி ப்ளாக்கில் கொட்டியாகி விட்டது.||

நல்ல வே(ளை)லை செய்தீர்... படிச்சிட்டு சொல்றேன்.. :o)

கலகலப்ரியா said...

:o).. ஹையோ ஹைய்யோ... பாவம் அந்தச் சாரு... அவங்க எழுத்து ஒன்னும் படிக்காத எனக்கே ஒரு வாட்டி படிச்சுப் பார்க்கணும் போல ஆர்வத்தைத் தூண்டுது இந்தப் பதிவு... அட அட வரிக்கு வரி பயங்கர தமாஷா கீதுபா... அப்டின்னா அவங்க போஸ்ட் படிச்சா வயித்து வலி டபுளாயிடுமா...

(சாரு சார்.. உங்களுக்கு எப்பூடி எல்லாம் வெளம்பரம் கொடுக்கறாய்ங்க உங்க ஃப்ரண்ட்ஸூ... கொடுத்து வச்சவங்கையா நீங்க...)

vasu balaji said...

அல்லோவ்! என்னாச்சி? நேத்து ஃபுல்லா பஸ்ல படிச்சி சிரிசிண்டிருந்தா, மொத்தமா இடுகையில படிக்கிறப்ப முடியல:))

//ஆனந்த விகடன் ஏற்கனவே பின்பக்கம் துடைக்கு டிஷ்யூ பேப்பர் அளவு தரம். இப்பொழுது துடைத்த டிஷ்யூ பேப்பர் போல இருக்கிறது.//

க்ளாசி பேப்பர் வேலைக்காவுமா:))

//கானாவுக்கு கானா...கலைஞர் கருணாநிதி. அப்படின்னா ஆனாவுக்கு ஆனா...அறிஞர் அண்ணா. நெடுஞ்செழியன்? காசா பணமா போட்டுக்க..நானாவுக்கு நானா...நாவலர் நெடுஞ்செழியன்.//

:)). இது எங்கயிருந்து நடுவில. சும்மா சொல்லப்படாது. செம:)))

vasu balaji said...

//(சாரு சார்.. உங்களுக்கு எப்பூடி எல்லாம் வெளம்பரம் கொடுக்கறாய்ங்க உங்க ஃப்ரண்ட்ஸூ... கொடுத்து வச்சவங்கையா நீங்க...)//

வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக சாருவை சார்னு சொன்னது நீதான்மா:)).

vasu balaji said...

/வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்./

ஒரு மணி நேரத்தில் வரேன்னு போன ஆசாமிய காணவே காணோம். சரி சாரு கூட பார்ட்டின்னு நினைச்சேன்:))

அய்யாங்..டொய்ங்:)))))

Mahesh said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

நசரேயன் said...

sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)

நசரேயன் said...

என்ன சரக்கு சரியில்லையா? சைடு டிஷ்ஷா இப்படி வறுத்து எடுத்துட்டீங்க!!

Unknown said...

ஒவ்வொரு வாரமும் அய்யாக் டொய்ங் எதிர்பார்க்கலாமா?

Unknown said...

நெகட்டிவ் ஓட்டே இல்லாம இருக்கு. நான் ஒரு சேஞ்சுக்கு நெகட்டிவ் ஒட்டுப் போட்டுக்கிறேனே? போட்டு ரொம்ப நாளாச்சி. கடைசியா டோண்டுவுக்குப் போட்டது.. ப்ளீஸ் ப்ளீஸ்..

Unknown said...

ச்சை, பழக்க தோசத்துல ப்ளஸ் ஓட்டுப் போட்டுட்டேன். பொழச்சிப் போங்க..

ரவி said...

ஓட்டுகள குத்திட்டோம்யா. மகுடம் சூட்ட வாழ்த்துக்கள்.

Robin said...

Super :)

ILLUMINATI said...

//வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக சாருவை சார்னு சொன்னது நீதான்மா:)). //

ஹாஹாஹா....

பொன் மாலை பொழுது said...

அது ஒரு கிறுக்குன்னு தெரிஞ்சும் ....இந்த வாறு வாரனுமா ?? :):)
பாவம் உட்டுடுங்க ......மொத்ததுல எல்லாரும் சேந்து "அத" ஒரு காமெடி பீசு இன்னு
அடையாளம் காமிச்சிட்டீங்க . இதுவே ஒரு பெரிய இலக்கிய சேவைதான்.

Kiruthigan said...

சாரு வோட இணைப்பு நிரல் கிடைக்குமா?

வால்பையன் said...

ஹாஹாஹாஹா!

கலக்கலா வந்துருக்கு!
நீங்களும் இனிமே கேரளா மந்திரவாதி ஸாரி எழுத்தாளர்!

ஜோதிஜி said...

ஓட்டுகள குத்திட்டோம். மகுடம் சூட்ட வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

அப்போ வெள்ளிக்கிழமை தண்ணியடிக்கிறவங்கெல்லாம் சாநியோட விசிறிங்க எழுத்த படிக்கிறவங்களா!!!

ஹி ஹி ஹி

செல்வ கருப்பையா said...

ஏதோ ஒரு உன்மத்த நிலையில இதை எழுதினீங்களோ! :-) ரொம்ப நல்லாருக்கு - வழக்கம் போலவே!

vasu balaji said...

நசரேயன் said...

//sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)//

தளபதி.அவ்வ்வ்வ்வ். பட் கு அப்புறம் பிழையா அடிச்சிட்டு இலக்கியவாதின்னு ஏமாத்துறீரா. நானும் தேடோ தேடுன்னு தேடிட்டேன். அப்படி வார்த்தையே இல்லீங்கறான் வெள்ளச்சாமி. புண்ணியமாப்போவும். நான் வேணும்னா தலைவர்ட கெஞ்சி கூத்தாடி எளக்கியப் பிரிவுக்கு தலைவராக்கச் சொல்லுறேன். அர்த்தம் சொல்லும்.

Santhini said...

:))))))))))))))))))))))))) ....lovely !!!!!!!!!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
:o).. ஹையோ ஹைய்யோ... பாவம் அந்தச் சாரு... அவங்க எழுத்து ஒன்னும் படிக்காத எனக்கே ஒரு வாட்டி படிச்சுப் பார்க்கணும் போல ஆர்வத்தைத் தூண்டுது இந்தப் பதிவு... அட அட வரிக்கு வரி பயங்கர தமாஷா கீதுபா... அப்டின்னா அவங்க போஸ்ட் படிச்சா வயித்து வலி டபுளாயிடுமா...
//

ம்ஹூம்...நான் கடுப்புல எழுதினா உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கா? இது சிரிப்பு இல்ல சீரியஸ்...

அது சரி(18185106603874041862) said...

//

வானம்பாடிகள் said...
அல்லோவ்! என்னாச்சி? நேத்து ஃபுல்லா பஸ்ல படிச்சி சிரிசிண்டிருந்தா, மொத்தமா இடுகையில படிக்கிறப்ப முடியல:))
//

அலோ...நான் புகைஞ்சி புகைஞ்சி பஸ்சுல எழுதிட்டுருந்தா வந்து காமெடி ஆக்கிவிட்டுட்டீங்க...இப்ப திருப்பியும் சிரிச்சா எப்படி? இது காமெடி இல்ல சார்..சொன்னா நம்பணும்..சிரிக்கப்படாது...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//(சாரு சார்.. உங்களுக்கு எப்பூடி எல்லாம் வெளம்பரம் கொடுக்கறாய்ங்க உங்க ஃப்ரண்ட்ஸூ... கொடுத்து வச்சவங்கையா நீங்க...)//

வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக சாருவை சார்னு சொன்னது நீதான்மா:)).

25 July 2010 22:40
//

இதென்னா அநியாயம்? எல்லாருமே அவரை சாருன்னு தான் சொல்றோம்...அவரே அவரை சாருன்னு தான் சொல்லிக்கிறார்...அவ்ளோ மரியாதை...

என்ன நாங்கெல்லாம் கிராமத்தாய்ங்க...சாரே, சாருன்னு கூப்டரோம்..இவங்க சார்னு சொல்றாங்க..

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
/வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்./

ஒரு மணி நேரத்தில் வரேன்னு போன ஆசாமிய காணவே காணோம். சரி சாரு கூட பார்ட்டின்னு நினைச்சேன்:))

அய்யாங்..டொய்ங்:)))))

//

அந்த கதைய ஏன் கேக்கறீங்க? ஒன்னவர்னு போயி அங்க தான் இந்த அய்யாங்..டொய்ங் ஆகிப் போச்சு...

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//

மகேசு, ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?

அது சரி(18185106603874041862) said...

//

நசரேயன் said...
sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)

26 July 2010 04:10
//

அதென்னா Varing? நீங்க கண்டிப்பா இலக்கியவாதி தான்...

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
என்ன சரக்கு சரியில்லையா? சைடு டிஷ்ஷா இப்படி வறுத்து எடுத்துட்டீங்க!!

//

சரக்கும் சரியில்ல சைடும் சரியில்லன்னா நான் என்ன தான் பண்றது? அதான் பஸ்சுல பொலம்பிக்கிட்டு இருந்தேன்...

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
ஒவ்வொரு வாரமும் அய்யாக் டொய்ங் எதிர்பார்க்கலாமா?

//

அய்யாங் டொய்ங் எப்ப வேணும்னாலும் வரும்...இல்ல வராமயே கூட இருக்கும்...என்னவோ போங்க...பஸ்சுல போட்ட மெசேஜ் நீங்க சொன்னீங்கன்னு தான் ப்ளாக்ல போட்டேன்...திடீர்னு பாத்தா இன்னிக்கு ப்ளாக் செம சூடா இருக்கு...உங்களுக்கு தேங்க்ஸ்....அப்படியே இடுகை கணக்குலயும் ஒண்ணு ஏத்தியாச்சி...இப்படியே பொலம்புறதையெல்லாம் ப்ளாக்ல ஏத்துனா நான் சீக்கிரம் செஞ்சுரி போட்ருவேன்....

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
நெகட்டிவ் ஓட்டே இல்லாம இருக்கு. நான் ஒரு சேஞ்சுக்கு நெகட்டிவ் ஒட்டுப் போட்டுக்கிறேனே? போட்டு ரொம்ப நாளாச்சி. கடைசியா டோண்டுவுக்குப் போட்டது.. ப்ளீஸ் ப்ளீஸ்..
//

ஒங்களுக்கு பெர்மிஷன் கொடுத்து என்ன புண்ணியம்? ஒரு நெகடிவ் வோட்டு ஒழங்கா போடத் தெரியாதவங்களை வச்சிக்கிட்டு என்னய்யா இலக்கியம் எழுதறது?

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
ச்சை, பழக்க தோசத்துல ப்ளஸ் ஓட்டுப் போட்டுட்டேன். பொழச்சிப் போங்க..

//

எல்லாம் ப்ராக்டிஸ் வேணும் முகிலன்...அடுத்து நீங்க போடற இடுகைக்கெல்லாம் நெகடிவ் வோட்ட்டு போட்டு பழகுங்க....தன்னால வந்துடும்..

அது சரி(18185106603874041862) said...

//

செந்தழல் ரவி said...
ஓட்டுகள குத்திட்டோம்யா. மகுடம் சூட்ட வாழ்த்துக்கள்.

//

நன்றிண்ணே...பட் அந்த மகுடத்தை வெச்சி என்ன பண்றது? :‍-)))

அது சரி(18185106603874041862) said...

//
Robin said...
Super :)

26 July 2010 05
//

நன்றி ராபின்

அது சரி(18185106603874041862) said...

//

ILLUMINATI said...
//வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக சாருவை சார்னு சொன்னது நீதான்மா:)). //

ஹாஹாஹா....

26 July 2010 06:10
//

வருகைக்கு நன்றி இல்லுமினாட்டி...

(எனக்கு இந்த பேரு பிடிச்சிருக்கு..)

அது சரி(18185106603874041862) said...

//
கக்கு - மாணிக்கம் said...
அது ஒரு கிறுக்குன்னு தெரிஞ்சும் ....இந்த வாறு வாரனுமா ?? :):)
பாவம் உட்டுடுங்க ......மொத்ததுல எல்லாரும் சேந்து "அத" ஒரு காமெடி பீசு இன்னு
அடையாளம் காமிச்சிட்டீங்க . இதுவே ஒரு பெரிய இலக்கிய சேவைதான்.

//

அய்யோ மாணிக்கம் அண்ணே....வாரல் எல்லாம் இல்ல...இது சும்மா பஸ்சுல போட்ட பொலம்பல்...மத்தபடி அவரை வார்ற அளவுக்கு நான் ஆள் இல்ல...

நீங்க ரொம்ப சீரியஸ் டைப்பா இருப்பீங்க போலருக்கே...அடையாளம் காட்றதெல்லாம் இல்லீங்ணா...நீங்க வேற பீதிய கெளப்பாதீங்க...

அது சரி(18185106603874041862) said...

//

Cool Boy கிருத்திகன். said...
சாரு வோட இணைப்பு நிரல் கிடைக்குமா?

//

புரியலீங்க கிருத்திகன்...அவரு வெப்சைட் அட்ரஸா? www.charuonline.com

மத்தபடி, அவரு மனம்கொத்தி பறவைன்னு விகடன்ல ஒரு தொடர் எழுதறார். பட், விகடன் பே சைட் ஆச்சே?

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
ஹாஹாஹாஹா!

கலக்கலா வந்துருக்கு!
நீங்களும் இனிமே கேரளா மந்திரவாதி ஸாரி எழுத்தாளர்!

//

இங்கே பேய் ஓட்டப்படும்னு போர்ட் வெச்சிடலாமா தல? :0))))

அது சரி(18185106603874041862) said...

//
ஜோதிஜி said...
ஓட்டுகள குத்திட்டோம். மகுடம் சூட்ட வாழ்த்துக்கள்.

//

வருகைக்கு நன்றி ஜோதிஜி....

அது சரி(18185106603874041862) said...

//
ஈரோடு கதிர் said...
அப்போ வெள்ளிக்கிழமை தண்ணியடிக்கிறவங்கெல்லாம் சாநியோட விசிறிங்க எழுத்த படிக்கிறவங்களா!!!

ஹி ஹி ஹி

//

அப்படி ஒரு கணக்கு இருக்கது எனக்கு தெரியாதே சார்...நான் திங்கட்கிழமை தி.ஜானகிராமனுக்கு, செவ்வாய் கிழமை ஜெயமோகனுக்கு, புதன்கிழமை புதுமைப் பித்தனுக்கு, வியாழக் கிழமை உம்பர்ட்டோ ஈகோவுக்கு, வெள்ளிக்கிழமை எஸ்.ராவுக்கு, சனிக்கிழமை சாருவுக்கு, சண்டே மட்டும் எனக்குன்னு அடிக்கிற டைப்.

அப்போ நீங்க?

அது சரி(18185106603874041862) said...

//

செல்வ கருப்பையா said...
ஏதோ ஒரு உன்மத்த நிலையில இதை எழுதினீங்களோ! :-) ரொம்ப நல்லாருக்கு - வழக்கம் போலவே!

//

உன்மத்தமெல்லாம் இல்ல செல்வா...வழக்கமான நிலை தான் :0))))

(ரொம்ப நாள் கழிச்சி வர்றீங்க...இனிமெ தொடர்ந்து எழுதுங்க பாஸ்...)

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
நசரேயன் said...

//sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)//

தளபதி.அவ்வ்வ்வ்வ். பட் கு அப்புறம் பிழையா அடிச்சிட்டு இலக்கியவாதின்னு ஏமாத்துறீரா.

//


பிழைகள் தான சார் இலக்கியமே? :)))

அது சரி(18185106603874041862) said...

//
Nanum enn Kadavulum... said...
:))))))))))))))))))))))))) ....lovely !!!!!!!!!

26 July 2010 19:52
//

பஸ்ல சண்டை போட்டுட்டு இப்போ லவ்லியா? இருக்கட்டும்...நீங்க அடுத்த தடவை பஸ்சுல ஏறும் போது பேசிக்கிறேன்...:)))

நசரேயன் said...

////sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)//

தளபதி.அவ்வ்வ்வ்வ். பட் கு அப்புறம் பிழையா அடிச்சிட்டு இலக்கியவாதின்னு ஏமாத்துறீரா. நானும் தேடோ தேடுன்னு தேடிட்டேன். அப்படி வார்த்தையே இல்லீங்கறான் வெள்ளச்சாமி. புண்ணியமாப்போவும். நான் வேணும்னா தலைவர்ட கெஞ்சி கூத்தாடி எளக்கியப் பிரிவுக்கு தலைவராக்கச் சொல்லுறேன். அர்த்தம் சொல்லும்.

//

என்னைய இம்புட்டு நம்புன ஆளை இப்பத்தான் நான் பார்க்கிறேன்..

மங்களூர் சிவா said...

/
அது சரி said...

பஸ்ஸில் கொட்டியதை முகிலன் சொன்னபடி கூட்டி பெருக்கி ப்ளாக்கில் கொட்டியாகி விட்டது.
/

அதானே பாத்தேன்
:))))))))