Tuesday, 13 July 2010

அறிவுஜீவி அண்ணன் சிவராமனுக்கு.....

முக்கிய அறிவிப்பு: எனக்கும் "அன்பின்" அண்ணன் சிவராமன் அவர்களுக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையோ இல்லை வாய்க்கா வரப்பு தகராறோ இல்லை...எனக்கு பாப்லோ நெருதா, பூக்கோ, போர்ஹே, உம்பர்ட்டோ எக்கோ என்று எவரையும் தெரியாது....ஆனால், சாத்தான் வேதம் ஓதுவதை போன்ற ஆதாரமற்ற, போகிற போக்கில் அள்ளி விடும் இடுகைகளை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இடுகை...

நான் கேப்பிடலிஸ்ட் என்பதும், போலி நாட்டாமைகளை எனக்கு பிடிப்பதில்லை என்பதும் மற்றொரு காரணம்.

//''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
//

போலியோ மருந்து கண்டுபிடிக்கும் முன் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன? இப்பொழுது எத்தனை பேருக்கு அந்த நோய் வருகிறது? அப்படியே வந்தாலும் எந்த நாடுகளில் வருகிறது? அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக நாடுகளிலா?

//அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...
//

உங்கள் வாதமே உங்கள் முகத்தில் அறைகிறது...உங்கள் வாதப்படி, உலகம் முழுவதும் அம்மை தடுப்பூசி போடப்படுகிறது...ஆனால், அம்மைத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்களா? அப்படியானால், இந்தியாவில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் ஆறு கோடியாக இருக்கலாம்...ஆனால் உண்மை அப்படி இல்லை...இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 110 கோடி...(இல்லை, இந்த எண்ணிக்கையும் பார்ப்பானீய பொய் என்பீர்களா?)

//மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது. //

கம்யூனிஸ நாடுகளால் ஒரு கருமமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக எவன் எதை கண்டுபிடித்தாலும் அய்யோ முதலாளித்துவம் சுரண்டுகிறது என்று பின்புறத்தில் அடித்துக் கொண்டே அதை திருடும் சோவியத் மனப்பான்மை தவிர இந்த வரிகளில் வேறு எதுவும் இல்லை.

உங்களுக்கு ஒரு ஐடியா.... கம்யூனிஸ கருணைக் கடவுள் ஸ்டாலின் பற்றி போலந்தில் போய் பிரச்சாரம் செய்து பாருங்கள்...ஒரு செருப்பல்ல, ஒரு லட்சம் செருப்புகள் உங்கள் முகத்தில் எறியப்படும்...

//மருந்துகள் என்பன மருத்துவர்களாலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முறை அழித்து துடைக்கப்பட்டு -

மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது. //

மருந்துகள் ஒற்றை மருத்துவனால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே ஆதிக்க மனப்பான்மை...தவிர, அன்றைக்கிருந்த மக்கள் தொகை என்ன? இன்றைக்கிருக்கும் மக்கள் தொகை என்ன? ஒற்றை மருத்துவனை நம்பி அழிந்து போன கிராமங்கள் எத்தனை?

//1763ல் சலிசிலிக் அமிலத்தின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டன. 1817ல் அபினியிலிருந்து மார்பினும், அடுத்த ஆண்டே நக்ஸ்வாமிகாவிலிருந்து ஸ்டிரைசினும், 1820ல் சின்கோனா மரப்பட்டையிலிருந்து கொயினாவும் பிரித்தெடுக்கப்பட்டது.//

உணரப்பட்டன? ஒற்றை வரியில் திருட்டு தனமாக கடப்பதில் இருந்தே தெரிகிறது உங்கள் நேர்மைத்திறம்...

இவை எதுவும்....மார்க்ஸாலோ எங்கல்சாலோ சொல்லப்படவில்லை...மாவோவாலும், லெனினாலும் கண்டுபிடிக்கப்படவில்லை...விடாத ஆராய்ச்சியாலும், அந்த ஆராய்ச்சியை நடத்த முதலீடு செய்த சிலராலும் தான் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர ஓவர்நைட்டில் உணரப்படவில்லை......துண்டு பிரச்சாரம் செய்பவர்கள் எதையுமே கண்டுபிடித்ததாக சரித்திரம் பதிவு செய்யவில்லை...

//இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. //

விவசாயிடமிருந்து நெல்லை வாங்கி, அரவை மில்கள் விவசாயிக்கே அரிசி விற்கின்றன....இதில் என்ன தவறு?? நெல்லை யாரும் தின்ன முடியாது...

//மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

ஏன் உங்கள் துண்டு பிரச்சார பீரங்கியை முடுக்கி விட்டு, மஞ்சள் காமாலை ஆட்கொல்லி நோயல்ல, அது ஒரு வரம் என்று பிரச்சாரம் செய்திருக்கலாமே?

உணவு முறையை ஒழுங்குபடுத்துவது நோய்வராமல் வேண்டுமானால் தடுக்கலாம்...ஆனால் நோய் வந்தவர்களுக்கு என்ன செய்வது? எல்லாரும் அவனவன் பிரச்சினையை அவனே பாத்துங்கங்க..இருந்தா இருங்க செத்தா சாவுங்க என்று விட்டுவிடுவது பைத்தியக்கார அரசாங்கம் செய்யும்...இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்யும் (ஆனால், பொலிட்பீரோ மெம்பர்கள் சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம்)...

ஆனால், கொஞ்சமாவது பொறுப்புள்ள அரசாங்கங்கள் அப்படி இருக்க முடியாது.

//தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...//

பொத்தாம் பொதுவாக தடை செய்யப்பட்ட மருந்து...வழக்கமான உங்கள் யோக்யதை தெளிவாக தெரிகிறது...

என்ன மருந்து தடை செய்யப்பட்டது? என்ன காரணங்களால், எந்த வயதான, எந்த உடற்கூறு உள்ள நபர்களுக்கு தடை செய்யப்பட்டது? எந்த ஆதாரமும் தராது எதற்கு உளறி வைக்கிறீர்கள்?

//'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' பொது புத்தியில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும்.//

மீண்டும் முட்டாள்தனமான வாதம்...

உண்மையல்ல என்று ஸ்டேட்மென்ட்...தொடர்ந்து "தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ" என்ற சொல்லாடல்... அப்படியானால், நிறுத்தியது என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள்...

ஆக, இந்த தடுப்பூசிகள் உண்மையிலேயே சில நோய்களை வராது தடுத்திருக்கின்றன அல்லது குணப்படுத்தியிருக்கின்றன...ஆனால், இப்படி தடுப்பூசிகள் இல்லையென்றால் மட்டும் இந்த புதிய நோய்களோ இல்லை வேறு புதிய நோய்களோ வந்திருக்காது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

//எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. //

ஆமாம்...தானாகவே ஏற்படும்...(அப்புறம் எதற்கு இவர்களால் தோன்றியது, அவர்களால் ஏற்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?) தானாகவே மறையும்...

னால், அப்படி மறைவதற்கான காலம் என்ன? போலியோ நோய் வந்தவர்களின் கால்கள் என்றைக்கு நேராகி இருக்கின்றன? யானைக்கால் வியாதி என்றைக்கு தானாகவே குணமாகும்? எய்ட்ஸ் வந்தவர்களில் எத்தனை பேருக்கு தானாகவே குணமாகி இருக்கிறது??

//1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...//

சரி, இதற்கு என்ன ஆதாரம்? பைத்தியக்காரனின் திருமொழிகளை மட்டுமே ஆதாரமாக கொள்ள முடியாது. தவிர, 1950களில் உலக மக்கள் தொகை என்ன? இன்றைக்கு மக்கள் தொகை என்ன? எத்தனை சதவீதம்? இன்றைக்கு போலியோ நோய் கண்டவர்களின் எண்ணிக்கை என்ன?

அப்படிப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகம்? மருந்து பயன்படுத்தும் ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக, கம்யூனிஸ்டுகளால் நாசம் செய்யப்பட்ட நாடுகளிலா?

//அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.//

அம்மோனியம் சல்பேட் : இது நைட்ரஜன், ஹைட்ரஜன், கந்தகம், ஆக்ஸிஜனின் கூட்டுக் கலவை...கத்தரிக்காயில் கந்தகம் இருக்கிறது...குடிக்கும் நீரில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இருக்கின்றன...முட்டையிலும் கோழிக்கறியிலும் இருக்கும் எல்லாப் புரோட்டீன்களுக்கும் அடிப்படை நைட்ரஜன்...நடைமுறையில் பலரும் பல விதத்தில் அம்மோனியம் சல்ஃபேட் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...எத்தனை பேர் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவி இருக்கிறது?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு பொருட்களும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையாகவே உருவாவது, அல்லது உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது...மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் கூட கார்ஸியோஜெனிக் தான்...புற்று நோய் வரவைக்கும் தன்மை கொண்டது...அரிப்பு தன்மை கொண்டது...அதனால் சுவாசிக்காமல் நிறுத்தி விடலாமா?

உங்களின் மற்ற திரிபு வாதங்கள் கம்யூனிஸ்டுகளின் துண்டு பிரச்சாரம் தான்...அதற்கு வழக்கம் போல எந்த மரியாதையும் கிடையாது. முடிந்தால் ஆதாரம் கொடுங்கள்...

//சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் -

ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்...

இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?//

சுற்றுப்புற சீர்கேட்டை களைய வேண்டியது தான்...ஆனால் இன்றைக்கு சுற்றுப்புறத்தை சீர்கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சைனா...உங்களை போன்ற கம்யூனிஸ்டுகள் அதை முதலில் சரி செய்யலாம்...ஆனால் மாட்டீர்கள்...ஊருக்கு உபதேசம், பொலிட்பீரோ மெம்பருக்கு ஏசி கார் என்பது தானே கம்யூனிஸம்!

உங்கள் ஒட்டு மொத்த இடுகையும் குப்பை என்பதை நிறுவ ஒரு எளிய கேள்வியே போதும். ஐம்பது வருடங்களுக்கு முன் மனிதர்களின் ஆயுட்காலம் என்ன? இன்றைக்கு ஆயுட்காலம் என்ன? அன்றைக்கு கொள்ளை நோயால் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு எத்தனை கிராமங்களுக்கு அந்த கதி ஏற்படுகிறது?

மீண்டும் மீண்டும் கம்யூனிஸமும், நீங்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்யும் முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால், ஒரு ஆச்சரியம்...எப்படி இதுவெல்லாம் பார்ப்பானீயம், ஆணாதிக்கம், சாதி வெறி என்று நிறுவாது விட்டீர்கள்? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருகிறதோ?

பின்குறிப்பு: போர்ஹெ தெரியாதவர்களுக்கும் பூக்கோ படிக்காதவர்களுக்கும் நாட்டாமை சிவராமன் பதில் சொல்வதில்லை என்பதால் இவை பதில் எதிர்பார்த்து வைக்கப்பட்ட கேள்விகள் அல்ல... நாட்டாமைகளின் முகம் எத்தனை போலியாக உளுத்துப் போயிருக்கிறது என்பதை காட்டவே இந்த கேள்விகள் ...

மருத்துவ ரீதியான விளக்கங்களுக்கு டாக்டர் ப்ருனோவின் இந்த இடுகையை பார்க்கவும்...டாக்டர் ப்ரூனோ உண்மையான டாக்டர்...திடீர் நாட்டாமை, போலி பகுத்தறிவுவாதிகள் போல போலி டாக்டரோ இல்லை திடீர் டாக்டரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

====================================

69 comments:

அது சரி said...
This comment has been removed by the author.
அது சரி said...

errr...I am feeling sleepy...

rk guru said...

அது ரொம்ப சரி

Renga said...

சிவராமனின் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட்டரா இல்லயா???? இது ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணுகிற கம்யூனிஸ்ட் வேலை... இவரும் போலி கம்யூனிஸ்ட்... (சிவராமனின் சேர்கை அப்படி...)

புருனோ Bruno said...

//''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
//

http://www.ularal.com/2010/07/salk-and-polio/

புருனோ Bruno said...

அந்த கட்டுரையில் ஒரே ஒரு reference தரப்பட்டிருந்தது

அது எப்படி என்று அறிய
http://www.ularal.com/2010/07/politics-of-polio/

புருனோ Bruno said...

http://www.ularal.com/2010/07/need-proof-for-these/

புருனோ Bruno said...

//மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

http://www.ularal.com/2010/07/hepatitis/ பாருங்கள்

புருனோ Bruno said...

http://www.ularal.com/2010/07/politics-of-polio/

குழந்தைக்கு ஒரு வயதானவுடன் தாய்ப்பாலை நிறுத்தி விட்டு பிற உணவுகள் தாருங்கள் என்று ஒரு மருத்துவர் கூறினால்

குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்திவிடுங்கள் என்று மருத்துவர் கூறிவிட்டார், எனவே குழந்தையை பட்டினி போடுங்கள் என்று கூறுவார்கள் போலிருக்கிறது

என்ன கொடுமை சார் இது

புருனோ Bruno said...

ஒருவர் சீட் பெல்ட் அணிந்து அவரது சீருந்து விபத்துக்குள்ளானால் அவருக்கு கீழ்க்கண்ட பாதிப்புகள் வரலாம்

http://bit.ly/920QeB

சீட் பெல்ட் அணியவில்லை என்றால் இந்த் பிரச்சனையே கிடையாது ஏனென்றால் அவர் இறந்து விடுவார் !!!

--

சரி சீட் பெல்ட் அணிய வேண்டுமா, வேண்டாமா :) :)

Anonymous said...

Like to see whether shivaraman reply for your questionarries?. If not, it's just a "shit".

குடுகுடுப்பை said...

அண்ணே அவரு பதிவெல்லாம் இன்னமுமா ஒலகம் படிக்குது,அப்புறம் இந்த போலந்துக்காரங்க ஒரு முறை என் வீட்டில டிஷ் இன்ஸ்டால் பண்ண வந்தாங்க சில காரணங்களுக்காக(என்ன காரணம்) என்னை எரிக்கிற பார்வை பாத்தாங்க பாருங்க மறக்கமுடியாது.

குடுகுடுப்பை said...

ஆங்கில மருந்துகளில் பக்கவிளைவுகளால் இறப்பு, பாதிப்பு ஆங்காங்கே உண்டு, அவைகளை குறைக்க அரசுகள் கடுமையான சோதனை/கண்காணிப்புகளை ஏற்படுத்தவேண்டும். டாக்டர் புருனோ அவர்களிடம் ஆங்கில மருத்துவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என வாதிட முற்படுவார். புருனோவும் கம்யூனிச அபிமானிதான், எனக்கும் நல்லக்கண்ணு போன்ற நல்ல மனிதர்கள் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.

குடுகுடுப்பை said...

கமெண்ட்ஸூ

KarthigaVasudevan said...

for coments ...

புருனோ Bruno said...

//ஆங்கில மருந்துகளில் பக்கவிளைவுகளால் இறப்பு, பாதிப்பு ஆங்காங்கே உண்டு//

உண்டு

பக்கவிளைவே கிடையாது என்று ஊரை ஏமாற்றுபவர்களுக்கும் நல்ல அலோபதி மருத்துவர்களுக்கு அது தான் வித்தியாசம்


//அவைகளை குறைக்க அரசுகள் கடுமையான சோதனை/கண்காணிப்புகளை ஏற்படுத்தவேண்டும்.//

ஏற்றுக்கொள்கிறேன்

// டாக்டர் புருனோ அவர்களிடம் ஆங்கில மருத்துவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என வாதிட முற்படுவார்.//

கண்டிப்பாக கிடையாது

ஆனால் சரியான செயலை கூட தவறென்று கூறுபவர்களின் தவறான போக்கை கண்டிப்பாக எதிர்ப்பேன்

// புருனோவும் கம்யூனிச அபிமானிதான்,//

அப்படியா :) :) :)
இது உங்கள் கருத்து. அதை நான் மதிக்கிறேன்

// எனக்கும் நல்லக்கண்ணு போன்ற நல்ல மனிதர்கள் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.//

எனக்கும் தான் !!

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு பின்னூட்டம் போட்டு ரொம்ப நாளாகுது.கை நமநமக்குது:)

பின்னூட்டத்திலிருந்தே துவங்கலாம்.

டாக்டர்!புருனோ!நீங்கள் கம்யூனிஸ்ட்டா இல்லையான்னு வெட்டொன்னு துண்டும் ஒன்னுன்னு சொன்னா நல்லாயிருக்கும்:)

அது சரி!நீங்க எப்ப அதியமான் கூட கூட்டாளியானிங்க:)

ராஜ நடராஜன் said...

யார் சொன்னது ஒவ்வொரு நாட்டுல இருந்தும் பொருளை லண்டனுக்கு கொண்டு போய் திரும்பவும் அந்தந்த நாட்டுக்கே ஏற்றுமதி செய்றாங்கன்னு?

இப்பத்தான் ஊருக்கு ஒரு பேரு காய்ச்சலுக்கு மருந்துன்னு வந்துடுச்சு.முன்னாடியெல்லாம் அவசரத்துக்கு கஷாயம் அல்லது மருத்துவமனை கொய்னா மருந்து மட்டுமே.

தேயிலை தோட்டம் போட்ட வெள்ளைக்காரன் சின்கோனா மரத்தையும் கொய்னா மருந்தையும் இந்தியாவிலேயே விட்டுட்டுப் போயிட்டான்.

இனி உங்க பா(ட்)டு!சிவராமன் பா(ட்)டு:)

ராஜ நடராஜன் said...

போகலாமுன்னு பார்த்தா பின்னூட்ட அரிப்பு இன்னும் தீரல!அதனால இன்னுமொன்று:)

அலோபதி மருந்துகள் விஞ்ஞான பூர்வமாக R&D கடை போட்டு ஜர்னல்களில் அறிக்கையெல்லாம் சமர்ப்பித்து நீரூபித்த பின்னரே சந்தைப்படும் மருந்து.எனவே அதன் சந்தை விகிதாச்சாரம் அதிகப் படுகிறது.கூடவே பக்க விளைவும் என்னவென்றே பத்திரிகையும் அடிச்சு மருந்து டப்பாவுக்குள் சொல்லி விடுகிறார்கள்.

மற்றவை அவசரத்துக்கு கஷாய விசயமே.

ஆமா!வாலிப வயோதிக மருத்துவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை அடைத்துக்கொள்வது ஏன்:)

நசரேயன் said...

தல பேய் கதை எல்லாம் எப்ப வரும் ?

நசரேயன் said...

//டிஷ் இன்ஸ்டால் பண்ண வந்தாங்க சில காரணங்களுக்காக(என்ன காரணம்) என்னை எரிக்கிற பார்வை பாத்தாங்க பாருங்க மறக்கமுடியாது.
//

உங்க பேரு தெரிஞ்சி போச்சோ ?

கலகலப்ரியா said...

//அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது//

:o)... magnifying glass vachu parkkaratha..?

கலகலப்ரியா said...

antha jeeva oru film pannaane.. enna peruppaa athu... EE?... apdi eatho oru novel padichittu eluthi iruppanga polarukku... antha pathivu.. mm... inga irukkira excerpts mattumthan padichen... mm....

வானம்பாடிகள் said...

யப்பா சாமி! கையக் குடுங்க ராசா:) நேத்தே ரெண்டு இடுகையும் படிச்சி நடராஜண்ணன் சொல்றா மாதிரி கை நம நமன்னுச்சி. டாங்க்ஸ் ராசா. இங்க சொல்லிக்கறேன்.

வானம்பாடிகள் said...

//ஆனால், அம்மைத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்களா? //

ஹி ஹி. நீங்கள்ளாம் சின்னப்பசங்க. எங்களுக்கெல்லாம் ரெண்டு கையிலயும் வட்டமா ஆணி வெச்சி திருகின அடையாளம் இருக்கு.

வானம்பாடிகள் said...

இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.//

இங்க கம்பெனி தொறந்தாலும் தப்பு. ஏற்றுமதி செஞ்சாலும் தப்பா?

/மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

அது மட்டுமா? ஊசில தடவி இறக்கறது, உள்ளங்கால்ல சூடு போடுறது இப்புடி எத்தனையோ இருக்கே:))

//மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது.//

ப்ஸ்ச். பேசாம கம்யூனிஸ்ட் நாடுகள் மருந்து தயாரிச்சி, அசல் விலைக்கே கொடுக்கலாம் அவுட்லெட் வெச்சு. இல்லைன்னா இங்க கம்பெனி தொறந்திருக்கலாம்.

வானம்பாடிகள் said...

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...//

ஊசி போட்டது தப்பா? அமெரிக்க நிறுவனம் உற்பத்தி செஞ்சதா? தடை அவங்க ஊர்ல விக்க மட்டும்தானே? அகில உலகத்துக்குமா? இம்புட்டு அனியாயம் பண்ற காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சிகிட்டா அது என்னத்துவம்?

வானம்பாடிகள் said...

அய்யோ எனக்கு கண்டபடி சந்தேகம் வருதே:-s. கம்யூனிஸ்ட், முதலாளித்துவ எதிர்ப்பாளருக்கெல்லாம் உடம்புக்கு வந்தா மருந்து கடைக்கு போவாங்களா? மருந்து பட்டையில, புட்டியில anti-muthaliththuvam, anti-eagathipaththiyamnu போட்டிருக்கணுமோ?

வவ்வால் said...

Athu sari,

sivaraman sonnaar enpathale oppose seyvathaaga thonrukirathu.

Avar sonnathilum pala unmaikal ullathu. Athellam avar sontha karuthukal alla, old issues of outlook or week magazine la paditha niyabagam, net la lot of articles irukku.

Vaccines kills appdinu direct ah paarkka koodathu. Oru noykkana vaccine innoru noykkana immunitty affect seyyum enpathe unmai.

Swine flu paraviyathe vaccine producers seytha sathinu news channels, papers sonnathe.

Aids uruvaanthu kooda ippadipatta researchla erpatta thavaru thaan kaaranam ena news unndu.

Aids impact research seyya ,african countriesla vaccinela aids virus mix seytharkal ena oru article solluthu.

Bruno solvathai serious aga eduthu kondal neengal subramaniam swamy solvathaiyum accept seyyanum :)

bruno ponravarkal mnc pharma companykalin agents pola ,ellam sari enre pesuvarkal.

Why most of the drs recommanding brand names and avoiding generic name of the medicine.

Ange thaan matter irukku!

புருனோ Bruno said...

//Oru noykkana vaccine innoru noykkana immunitty affect seyyum enpathe unmai.//

ஆதாரம் தாருங்கள்

எந்த நோய்க்கான தடுப்பு மருந்து எந்த நோய் தடுப்பு சக்தியை கெடுக்கிறது என்று ஆதாரம் தாருங்கள்

புருனோ Bruno said...

//
Swine flu paraviyathe vaccine producers seytha sathinu news channels, papers sonnathe.
//

எந்த பத்திரிகை, தேதி, பக்கம் ப்ளீஸ்

புருனோ Bruno said...

//Aids uruvaanthu kooda ippadipatta researchla erpatta thavaru thaan kaaranam ena news unndu.//

அப்படி பலரும் சொல்லி வருகிறார்கள்.

இதுவரை அது உண்மை என்று யாரும் நிருபிக்கவில்லை. அதே போல் அது இல்லை என்றும் யாரும் நிருபிக்கவில்லை (இந்த கருத்து இந்த செய்திக்கு மட்டும்)

இல்லை என்று நிருபிக்கவில்லை என்று புருனோ கூறியாச்சு என்று வேறு எதாவது கருத்திற்கு எடுத்து போட்டு திரிக்கும் வழக்கமான கேவலமான வேலை வேண்டாம், சரியா

புருனோ Bruno said...

//Aids impact research seyya ,african countriesla vaccinela aids virus mix seytharkal ena oru article solluthu.//


அப்படி பலரும் சொல்லி வருகிறார்கள்.

இதுவரை அது உண்மை என்று யாரும் நிருபிக்கவில்லை. அதே போல் அது இல்லை என்றும் யாரும் நிருபிக்கவில்லை (இந்த கருத்து இந்த செய்திக்கு மட்டும்)

இல்லை என்று நிருபிக்கவில்லை என்று புருனோ கூறியாச்சு என்று வேறு எதாவது கருத்திற்கு எடுத்து போட்டு திரிக்கும் வழக்கமான கேவலமான வேலை வேண்டாம், சரியா

புருனோ Bruno said...

//bruno solvathai serious aga eduthu kondal neengal subramaniam swamy solvathaiyum accept seyyanum :)//

நான் கூறும் அனைத்திற்கும் ஆதாரம் தருகிறேன்

நீங்கள் எப்படி பட்டவர் என்று உங்கள் விவாதங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்

உதாரணம் 1 : கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் அளிக்கிறதா

உதாரணம் 2 : சம்பள விகிதம் என்றால் என்ன

உதாரணம் 3 : தமிழக அரசு பணியில் தமிழ் அவசியம்

வவ்வால் எவ்வளவு அறிவு மிகுந்தவர், எவ்வளவு நாகரிகம் மிகுந்தவர் என்பது மேற்கண்ட இடுகைகளில் அவர் எழுதிய மறுமொழிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம் :) :) :)

வவ்வாலுக்கு தேவைப்பட்டால் மேலும் உதாரணங்கள் வழங்கப்படும்

//bruno ponravarkal mnc pharma companykalin agents pola ,ellam sari enre pesuvarkal.//

சரி என்றால் சரி என்றும் தவறு என்றால் தவறு என்றும் கூறுவது தான் என் வழக்கம்

//Why most of the drs recommanding brand names and avoiding generic name of the medicine.

Ange thaan matter irukku! //

நான் தனியாக பிராக்டிஸ் செய்வது கிடையாது சார்

நான் generic name தான் எழுதுவது வழக்கம்

வவ்வால் said...

About immune suppression,

http://www.mercola.com/article/vaccines/immune_suppression.htm

புருனோ Bruno said...

ஐயா வவ்வால் அவர்களே

நீங்கள் mercolaவை ஆதாரம் காட்டுகிறீர்கள்

அவர் ஒரு osteopath, மருத்துவர் கிடையாது

-

அவர் தடுப்பூசிகளை எதிர்ப்பது ஆச்சரியம் கிடையாது.

--

உங்களுக்கு mercolaவை தவிர வேறு ஆதாரமே கிடைக்கவில்லையா

--

எதையாவது உளறிக்கொட்டிவிட்டு அதன் பிறகு ஆதாரத்தை தேடும் பழக்கத்தை நீங்கள் எப்பொழுது தான் விடப்போகிறீர்கள்

--

அது சரி said...

//
வவ்வால் said...
Athu sari,

sivaraman sonnaar enpathale oppose seyvathaaga thonrukirathu.

Avar sonnathilum pala unmaikal ullathu. Athellam avar sontha karuthukal alla, old issues of outlook or week magazine la paditha niyabagam, net la lot of articles irukku.
//


வவ்வால்,

சிவராமன் சொந்தமாக ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறார் என்று நானும் நினைக்கவில்லை...மருந்து சம்பந்தமான செய்திகள் அவர் படித்ததாகவே இருக்கக் கூடும்..ஆனால், ஒட்டு மொத்தமாக மருந்து கம்பெனிகளையும், முதலாளித்துவத்தையும் குற்றம் சாட்டுவதே அவரது பங்களிப்பாக இருக்கக் கூடும்....

அலோபதி என்றல்ல, ஹோமியோபதி, சித்தா என்று எல்லா மருத்துவத்திலும் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும்....அதற்காக எந்த மருத்துவமும் செய்யக்கூடாது என்று சொல்ல முடியுமா? சொன்னால் அது நடைமுறைக்கு சாத்தியப்படுமா?

புருனோ Bruno said...

Joseph Mercola, D.O. (born 1954), is an osteopathic physician, health activist, and entrepreneur practicing in Hoffman Estates, Illinois.

நம்ம ஊர் புத்தூர் கட்டு கேள்விப்பட்டிருக்கிறீர்களா

காலையும் மாலையும் தொலைக்காட்சிகளில் வந்து வாலிப வயோதிக அன்பர்களை அழைக்கிறார்களே, அவர்களின் american counterpart இந்த mercola

He is the author of two New York Times bestsellers, The No-Grain Diet (with Alison Rose Levy), and The Great Bird Flu Hoax, together with several other books.

Mercola is best known as founder and editor of the alternative-medicine website Mercola.com, where he advocates dietary and lifestyle approaches to health and markets a variety of health-related products. Mercola criticizes many of the practices of mainstream medicine and the Food and Drug Administration (FDA), particularly vaccination and the use of prescription drugs and surgery to treat diseases.

அது சரி வவ்வால் அவர்களே

நீங்கள் குறிப்பிடும் mercola அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று கூறும் வகை... நீங்கள் எப்படி

He is a member of the politically conservative Association of American Physicians and Surgeons, as well as several alternative medicine-related organizations.

புருனோ Bruno said...

Mercola has received two Warning Letters from the FDA for marketing nutritional products in a manner which violated the Federal Food, Drug, and Cosmetic Act.

அமெரிக்க சட்டத்திற்கு எதிராக லேகியம் விற்பதால் எச்சரிக்கை விடப்பட்டவர் மெர்கொலா

A 2006 BusinessWeek editorial criticized Mercola's marketing practices as "relying on slick promotion, clever use of information, and scare tactics."

இப்படித்தான் தடுப்பூசி போட வேண்டால், சிட்டு குருவி லேகியம் சாப்பிடுங்கள் என்று கூறுபவர் தானா உங்களுக்கு ஆதாரம் காட்ட கிடைத்தார்

என்ன கொடுமை சார் இது

அது சரி said...

//
வவ்வால் said...

Vaccines kills appdinu direct ah paarkka koodathu. Oru noykkana vaccine innoru noykkana immunitty affect seyyum enpathe unmai.

//

மருந்து ஒத்துக் கொள்ளாது போய், மக்கள் இறந்து கூட போயிருக்கிறார்கள் என்ப்தை நான் ஒத்துக் கொள்கிறேன்...

ஆனால், எத்தனை வாக்ஸின்கள் எத்தனை பேரை கொன்றிக்கின்றன? ஒரு வாக்ஸின் போட்டுக் கொண்டதால், அத்தனை பேரும் இறந்து விட்டார்களா??

எல்லா மருந்தும் எல்லாருக்கும் ஒத்துக் கொள்ளாது என்பது மருத்துவத்தின் அடிப்படை உண்மை...அதற்காக வாக்ஸின்கள் கொல்லும், கொல்லும் என்று தெரிந்தே மருந்து கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன என்பது அபத்தம்...

வவ்வால் said...

Swin flu scam,

http://www.guardian.co.uk/business/2010/jun/04/swine-flu-experts-big-pharmaceutical

அது சரி said...

//
வவ்வால் said...
Athu sari,


Swine flu paraviyathe vaccine producers seytha sathinu news channels, papers sonnathe.
//

பேப்பர்கள் இன்னும் நிறைய சொல்லும் வவ்வால்...பிள்ளையார் பால் குடித்தார், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு பச்சை மிளகாயை துப்பி விட்டார் என்று கூட சொல்லும்...ஏன் நான் கூட சொல்வேன்..நேற்று மாலை, முருகன் குன்றத்திலிருந்து இறங்கி வந்து என்னுடன் உட்கார்ந்து குவாட்டர் அடித்தார்...நம்புகிறீர்களா?

//
Aids uruvaanthu kooda ippadipatta researchla erpatta thavaru thaan kaaranam ena news unndu.
//

உண்மை என்னவெனில், வைரஸை யாரும் இதுவரை உற்பத்தி செய்ய முடியவில்லை..ஒரு இரண்டு வருடத்திற்கு முன் தான் பாக்டீரியாவை செயற்கையாக உற்பத்தி செய்தார்கள்...இப்பொழுது சில மாதங்களுக்கு முன் தான் வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது...ஆனால், எய்ட்ஸ் அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இருக்கிறது...

ஆனாலும், இது போன்ற அந்த தவறால் வந்தது, இந்த தவறால் வந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை...அப்படியே இருந்தாலும், அது தவறால் நிகழ்ந்த நிகழ்வே தவிர, சிவராமன் எழுதுவது போல திட்டமிட்ட நிகழ்வல்ல..

புருனோ Bruno said...

//Swin flu scam,

http://www.guardian.co.uk/business/2010/jun/04/swine-flu-experts-big-pharmaceutical

//

ஒரு சுட்டி அளித்துள்ளீர்கள்

ஆனால் நீங்கள் 13 July 2010 21:32 கூறியது என்னவென்றால்

Swine flu paraviyathe vaccine producers seytha sathinu news channels, papers sonnathe.

அதற்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன்

நீங்கள் தற்பொழுது அளித்த சுட்டியில் நீங்கள் ஏற்கனவே கூறிய கருத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை நினைவு படுத்துகிறேன்

swine flu என்று இருக்கும் எதாவது ஒரு வலைப்பக்கத்தை எடுத்து தந்தால் போதும் என்று நினைத்தீர்களா

--

இப்படிபட்ட தென்னை மரத்தில் யானையை கட்டலாம் என்ற கதை கேள்வி பட்டிருக்கிறீர்களா

அது சரி said...

//
வவ்வால் said...

Aids impact research seyya ,african countriesla vaccinela aids virus mix seytharkal ena oru article solluthu.
///

அந்த ஆர்டிக்கிளின் ஆதாரம் என்ன? அவர்களுக்கு இந்த செய்தி எப்படி கிடைத்து? பத்திரிக்கையில் வருவது எல்லாம் உண்மையல்ல என்பது உங்களுக்கும் தெரியும்...

//
Bruno solvathai serious aga eduthu kondal neengal subramaniam swamy solvathaiyum accept seyyanum :)
//

ப்ரூனோ தவறாக எதுவும் சொல்லிவிடவில்லை...நடைமுறை உண்மைகளைத் தான் அவரும் சொல்கிறார்...

//
bruno ponravarkal mnc pharma companykalin agents pola ,ellam sari enre pesuvarkal.
///

அவர் எந்த மருந்து கம்பெனிக்கு கொடி பிடித்தார்? இந்த கம்பெனி மருந்துகளை வாங்குங்கள் என்று அவர் எங்கும் சொன்னதாக தெரியவில்லை...ஆனால் பொத்தாம் பொதுவாக இப்படி சொன்னால், யார் வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாமே?..

//
Why most of the drs recommanding brand names and avoiding generic name of the medicine.

Ange thaan matter irukku!
//

யெஸ்...அங்கு தான் மேட்டர் இருக்கிறது...இப்பொழுது பராசிட்டமாலின் ஜெனரிக் பெயரை எழுதினால், எந்த மருந்து கம்பெனியின் பராசிட்டமாலை கொடுப்பது என்பது மருந்துக்கடை காரரின் தீர்ப்பாகிறது...அந்த கம்பெனி மருந்து சரியில்லாவிட்டால், அதற்கு பொறுப்பேற்பது யார்? நீங்கள் டாக்டரை கேப்பீர்களா இல்லை மருந்து கடையையா??

நீங்கள் உண்ணும் மருந்துக்கு முழு பொறுப்பு அதை எழுதித் தரும் டாக்டரே...அதன் பின்னரே மருந்து கம்பெனிகளும், பார்மஸியும் வரும்...அப்படி இருக்கையில், டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட மருந்தை எழுதித் தருவதை தவறு என்று நான் நினைக்கவில்லை...

அது சரி said...

//
rk guru said...
அது ரொம்ப சரி

//

நன்றி குரு...

வவ்வால் said...

Bruno,

aatharathai kaila stock vachukittu alaiya innum unga alavukku enakku muthavillai.

Ninaivil irunthu solvathu thaan enathu vazhakkam, athaiyum pala murai solliten. ungalai pola "aathaara priyarkal" kettal mattume thedi solven.

Sonthama sollum pazhakkam ungalai pola enakku illai.

Padichatha sollren, sonnavar history ellam research seyya time illai.

Ithellam oru aathaarama appadinu solvinga ena expect seythen, appdiye sollitinga :)

அது சரி said...

//
Renga said...
சிவராமனின் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட்டரா இல்லயா???? இது ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணுகிற கம்யூனிஸ்ட் வேலை... இவரும் போலி கம்யூனிஸ்ட்... (சிவராமனின் சேர்கை அப்படி...)

//

தெரியவில்லை ரெங்கா...அப்படி செய்துவிட்டு உபதேசம் செய்தால் அது கம்யூனிஸ்ட் வேலை தான்...ஆனால், தடுப்பூசி போடாவிட்டால், போடுவது நலம் என்றே எனக்கு தோன்றுகிறது...

புருனோ Bruno said...

//aatharathai kaila stock vachukittu alaiya innum unga alavukku enakku muthavillai.//
அது தான் எங்களுக்கே தெரியுமா

//Ninaivil irunthu solvathu thaan enathu vazhakkam, athaiyum pala murai solliten.//

பிரச்சனை என்னவென்றால் உங்களில் நினைவிலிருந்து நீங்கள் கூறுவது தவறாக, உண்மைக்கு புறம்பாக இருப்பது தான்

அடுத்த பிரச்சனை என்னவென்றால், தவறாக கூறிவிட்டேன் என்று ஏற்றுக்கொள்ளாமல், ஆதாரம் என்ற பெயரில் அந்த வார்த்தை இருக்கும் ஏதாவது ஒரு பக்கத்தை நீங்கள் காட்டி உங்கள் தவற்றை மறைக்க முயல்வது

// ungalai pola "aathaara priyarkal" kettal mattume thedi solven.//

இருப்பதை தேடி சொன்னால் பரவாயில்லை. உங்கள் கற்பனைகளை justify செய்வதற்கு நீங்கள் உருவாக்கும் சித்தாந்தங்கள் தான் பிரச்சனை. (மேலே மூன்று உதாரணங்கள் அளித்துள்ளேன் பாருங்கள்)

//Sonthama sollum pazhakkam ungalai pola enakku illai.//

ஹி ஹி ஹி
யார் சொந்தமாக பொய் சொல்கிறார் என்பதை ஊரறியும். ஆதாரத்திற்கு மூன்று உதாரணங்கள் தந்துள்ளேன். இந்த இடுகையின் மறுமொழிகள் அடுத்த உதாரணம்

//Padichatha sollren, sonnavar history ellam research seyya time illai.//

நேரம் இல்லை என்றால் அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்

//Ithellam oru aathaarama appadinu solvinga ena expect seythen, appdiye sollitinga :) //

நீங்கள் தரும் ஆதாரங்கள் அப்படி பட்டவை சார். வேறு எப்படி சொல்ல முடியும்

அது சரி said...

//
புருனோ Bruno said...
//''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
//

http://www.ularal.com/2010/07/salk-and-polio/
//

ப்ரூனோ,

உங்களின் எல்லா சுட்டிகளுக்கும் மிக்க நன்றி...இந்த சுட்டிகளை உங்கள் அனுமதியுடன் இடுகையில் பயன்படுத்திக் கொள்கிறேன்...படிப்பவர்களுக்கு உண்மை சென்று சேரும்...

புருனோ Bruno said...

//இந்த சுட்டிகளை உங்கள் அனுமதியுடன் இடுகையில் பயன்படுத்திக் கொள்கிறேன்...படிப்பவர்களுக்கு உண்மை சென்று சேரும்... //

பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அது சரி said...

//
புருனோ Bruno said...
//மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

http://www.ularal.com/2010/07/hepatitis/ பாருங்கள்
//

ஆமாம்...எனக்கு தெரிந்து மஞ்சள் காமாலையை பத்திய சோறு சாப்பிட்டு குணப்படுத்தியவர்கள் யாரும் இல்லை..அப்படி பத்தியம் இருப்பவர்கள் கூட மருந்து எடுத்துக் கொண்டு தான் சில தவிர்க்க வேண்டிய உணவுகளுக்காக பத்தியம் இருப்பார்கள்...

சிவராமன் எழுதியதை படித்து, மஞ்சள் காமாலை வந்த ஒருவர் மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், சிவராமன் அடுத்த இடுகையை எழுதிக் கொண்டிருப்பார், அந்த நோயாளியோ இடுகாட்டில் இருப்பார்...

உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் எப்படி இப்படி பொறுப்பின்றி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை...

அது சரி said...

//
புருனோ Bruno said...
http://www.ularal.com/2010/07/politics-of-polio/

குழந்தைக்கு ஒரு வயதானவுடன் தாய்ப்பாலை நிறுத்தி விட்டு பிற உணவுகள் தாருங்கள் என்று ஒரு மருத்துவர் கூறினால்

குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்திவிடுங்கள் என்று மருத்துவர் கூறிவிட்டார், எனவே குழந்தையை பட்டினி போடுங்கள் என்று கூறுவார்கள் போலிருக்கிறது

என்ன கொடுமை சார் இது

///

ஓ...கண்டிப்பாக சொல்வார்கள்...செய்வார்கள்...குழந்தை செத்துவிட்டால் டாக்டரை சைபீரியாவுக்கு அனுப்பி, மக்கள் நல அரசு என்று விளம்பரம் செய்ய வசதியாக இருக்கும்....

அது சரி said...

//
புருனோ Bruno said...
ஒருவர் சீட் பெல்ட் அணிந்து அவரது சீருந்து விபத்துக்குள்ளானால் அவருக்கு கீழ்க்கண்ட பாதிப்புகள் வரலாம்

http://bit.ly/920QeB

சீட் பெல்ட் அணியவில்லை என்றால் இந்த் பிரச்சனையே கிடையாது ஏனென்றால் அவர் இறந்து விடுவார் !!!

--

சரி சீட் பெல்ட் அணிய வேண்டுமா, வேண்டாமா :) :)

//

நீங்கள் உயிடன் இருக்க வேண்டுமானால் அணிய வேண்டும்...கம்யூனிஸம் உயிருடன் இருக்க வேண்டுமானால் அணியக் கூடாது...

அது சரி said...

//
Anonymous said...
Like to see whether shivaraman reply for your questionarries?. If not, it's just a "shit".
///

I think, he has actually given some replies in his blog...But I dont think there are answers for the fundamental questions.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அண்ணே அவரு பதிவெல்லாம் இன்னமுமா ஒலகம் படிக்குது,அப்புறம் இந்த போலந்துக்காரங்க ஒரு முறை என் வீட்டில டிஷ் இன்ஸ்டால் பண்ண வந்தாங்க சில காரணங்களுக்காக(என்ன காரணம்) என்னை எரிக்கிற பார்வை பாத்தாங்க பாருங்க மறக்கமுடியாது.

//

அது அமெரிக்கா என்பதால் சுட்டெரிக்கும் பார்வை....இதுவே போலன்ட் என்றால் உங்களை சுட்டெரித்து ஈவ்னிங் பியருக்கு நீர் தான் சைட் டிஷ்....

வவ்வால் said...

Athu sari,

news paper la vara news ellam unmai ena sollavillai ,news vanthirukku enpathai munvaithen.

Nam yaarume news paper thagavalkalai munvaipathe illaiya?

Neengal or bruno solvathu ethan adipadaiyil. Neengal paditha news sonna sari , all must accept, appadiyaanal athu ego!

100 % sarinu therinthavarkal yaar?

Bruno entha pharma companyku kodi pidithar ena enaku theriyathu, mnc pharma support seythu "agent pola" pesuvar enre sonnen.

Sivaraman communist party membership card yaaraavathu paarthangala, eppadi avar pesuvathu vaithu communist ena sonnarkal?

I'm commenting via mobile ,so no tamil, and i can't type in detail.

வவ்வால் said...

Bruno,

neenga aatharam ena solvathu ellam just few stats,mostly irrelevent to the subject and never substantiate the point.

Unga aathaaram ellam su.sami pola thaan.
Athula neengale sonthama "state fund" pottupinga. Thats all.

Thanks bruno ,neengala old links pottu enakku velai illama seythitinga.

அது சரி said...

//
வவ்வால் said...
Athu sari,

news paper la vara news ellam unmai ena sollavillai ,news vanthirukku enpathai munvaithen.

Nam yaarume news paper thagavalkalai munvaipathe illaiya?

Neengal or bruno solvathu ethan adipadaiyil. Neengal paditha news sonna sari , all must accept, appadiyaanal athu ego!

100 % sarinu therinthavarkal yaar?

Bruno entha pharma companyku kodi pidithar ena enaku theriyathu, mnc pharma support seythu "agent pola" pesuvar enre sonnen.

Sivaraman communist party membership card yaaraavathu paarthangala, eppadi avar pesuvathu vaithu communist ena sonnarkal?

I'm commenting via mobile ,so no tamil, and i can't type in detail.

//

வவ்வால்,

அதே காரணம் தான்...நானும் செய்தி தாள்களை ஆதாரமாக கொள்கிறேன் என்பது உண்மை....அதே சமயம், அதை மற்றவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது அல்லவா? (அதையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்)...இங்கேயும் அதெ லாஜிக் தான்...குறிப்பாக எய்ட்ஸ் எப்படி தோன்றியது என்பதில் பல்வேறு கதைகள் இருக்கின்றன...அது எப்படி தோன்றியது என்பதை விட, அது பல நூறு வருடங்களாக இருந்தே வருகிறது, சமீப பத்தாண்டுகளில் பிரித்து அறியப்பட்டிருக்கிறது என்பதே என் புரிதல்...

எய்ட்ஸ்க்கு என்று எந்த பிரத்தியோக நோய் அடையாளமும் இல்லை...பல்வேறு நோய்கள் ஒட்டு மொத்தமாக தாக்குவதால், அந்த நோய் இந்த நோய் என்று முன்னர் வைத்தியம் செய்திருக்க வாய்ப்புண்டு...

எல்லாரும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த ஈகோவும் எனக்கு இல்லை...அதனால தான் இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் இல்லையா?

சிவராமன் கம்யூனிஸ்ட் பார்ட்டி கார்டை நான் கண்டிப்பாக பார்த்ததில்லை...நான் கம்யூனிஸ்ட் என்று சொல்வது அவரது சிந்தனையையும் சொல்லும் வாதத்தையும் தானே தவிர, அவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி மெம்பர் என்று அல்ல..இருந்தால் அதில் தவறேதுமில்லை...அது அவர் விருப்பம்...

எனது பிரச்சினை தனிப்பட்ட சிவராமனுடன் அல்ல...நீங்கள் அவரது இடுகையை படித்திருப்பீர்கள்...பிரச்சினை என்று நீட்டி முழக்கி இருக்கிறாரே தவிர நடைமுறை தீர்வு என்று ஏதேனும் இருக்கிறதா? அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவரின் மகன் இறந்து விட்டார்...அதனால் புறக்கணிக்க வேண்டும்...சரி, அப்படியானால் நோய்க்கு என்ன தீர்வு?

இந்த இடுகை எழுத இது தான் காரணமே தவிர, சிவராமன் சொல்வதை எதிர்க்க வேண்டும் என்பது காரணம் அல்ல...

இங்கிலீஷில் கமெண்ட் எழுதுவது குறித்து எனக்கு பிரச்சினையில்லை...தொடருங்கள்...

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...//

ஊசி போட்டது தப்பா? அமெரிக்க நிறுவனம் உற்பத்தி செஞ்சதா? தடை அவங்க ஊர்ல விக்க மட்டும்தானே? அகில உலகத்துக்குமா? இம்புட்டு அனியாயம் பண்ற காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சிகிட்டா அது என்னத்துவம்?

//

பிரச்சினை அது கூட அல்ல...அமெரிக்காவில் ஒரு மருந்து தடை செய்கிறார்கள் என்றால், அது ஒட்டு மொத்த தடை என்று அர்த்தம் அல்ல...சில உடற்கூறு உள்ளவர்களுக்கு, சில வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இந்தந்த அறிகுறி இருப்பவர்களுக்கு என்று பல்வேறு ‍பிரிவுகள் உண்டு...

தவிரவும், ஒட்டு மொத்தமாக மஞ்சள் காமாலை மருந்துகள் எல்லாவற்றையும் தடை செய்ய கொஞ்சம் கூட வாய்ப்பில்லை...ஒரே கம்பெனி தயாரிப்பிலேயே ஒன்றுக்கு அனுமதி, மற்றொன்றுக்கு தடை என்று இருக்கும். இப்படி இருக்கும் போது, ஒட்டு மொத்தமாக அமெரிககா தடை செய்த மஞ்சள் காமாலை மருந்து என்று எழுதுவது சரியாக படவில்லை....

அது சரி said...

எனக்கு இப்பொழுது கன்னாபின்னாவென்று தூக்கம் வருவதால், மற்ற பின்னூட்டங்களுக்கு பதில் நாளை....தயவுசெய்து மன்னிக்க...

வவ்வால் said...

Athu sari,

thanks for the understanding.

Aids romb kaalamaga irukkalam, athu engo remote place la irunthu irukkalam ,athanai makkal aruke kondu vanthathu researches.

Deepest part of the oceanla lot of un classified animals, germs irukku, human contact illama, futurela mela thaana varathu ,manithan kondu varuvan. Aids pola new disease paravalaam.

Aids virus uruvaakinathu illai parava vaithaarkal enpathu thaan point inge. Uruvaakkavillai ena neengal solvathu irrelevent.

வவ்வால் said...

Athu sari,

branded medicine saptu pakka vilaivu varatha? Vantha dr porupu erpaara?

royalty period mudinchathum anaivarum generic namela thayarikalam. Athuvum periya pharma company product thaan.

Active ingredint thaan mukkiyam, brand name alla.

Generic med sapta pakka vilaivu varum enpathu pola neengal solvathu yen?

Ram vilas Paswan, chemical minister aga iruntha pothu niraya generic med produce seyya solli pharmas stress seythaar.

வவ்வால் said...

Enakku swine flu thaakki sagum vaaippai vida ,Road cross seyyum pothu adipattu saga vaaypu athigam, athuku treat seyya hospital pothumana alavu illai.

Aanal swine flu ku mun echarikaiyaga kodi kanakil "tommi flu" marunthu vaanga vaippaarkal pharma cartel!

Makkalai poliyaga Miratti viyapaaram nadathum pharma companykalin "unethical trade tricks" sariya?

Robin said...

சரியான பதிலடி!

வவ்வால் said...

Yaar sonnathu sariyana pathiladi @ robin

முகிலன் said...

இந்தப் பதிவை எப்படி மிஸ் செய்தேன்?

முகிலன் said...

//குடுகுடுப்பை said... அண்ணே அவரு பதிவெல்லாம் இன்னமுமா ஒலகம் படிக்குது,அப்புறம் இந்த போலந்துக்காரங்க ஒரு முறை என் வீட்டில டிஷ் இன்ஸ்டால் பண்ண வந்தாங்க சில காரணங்களுக்காக(என்ன காரணம்) என்னை எரிக்கிற பார்வை பாத்தாங்க பாருங்க மறக்கமுடியாது.
//

என்ன காரணம்னு எனக்குத் தெரியும்.

senthilbalan said...

கிட்டதட்ட இதேபோல ஒரு விவாதத்தையும், என் பதிலயும் இந்த பிளாக்கில் காணலாம். ஆங்கில மருந்து, தடுப்பூசிகளின் பலனை அனுபவித்து விட்டு இப்படி பேச எப்படி மனது வருகிறது?
அந்த பிளாக் http://consenttobenothing.blogspot.com/2010/07/matru-maruththuvam.html

மங்களூர் சிவா said...

அது ரொம்ப சரி!
:)