Monday 3 August 2009

பூஜ்யம்....



அம்மா ஆடு இலை ஈ உடுக்கையில் ஆரம்பித்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் என்றாகி...

சுற்றிலும் பார்த்து அறுப்பதற்கு எதுவும் இல்லாது போக‌
சுண்டு விரலை.....
முன் பற்களால் வலிக்காது மெல்லக் கடித்து...
கசிந்த இரத்தத்தை மெதுவே.....
உப்பாகத் தான் இருக்கிறது....

எக்ஸ் மைனஸ் ஒய் என்றால் இசட்
இசட் ப்ளஸ் எக்ஸ் என்றால் ஒய் எனில்
எக்ஸின் மதிப்பென்ன....
செர்பிய படுகொலையும் சிப்பாய் புரட்சியும்
அல்ஜீரிய தலைநகரும் அல்ஜீப்ரா விடைகளும்....

சிறு கத்தி எடுத்து இடைப் பக்கம்
சிறிதாய் கோடிழுத்து.....

தேரா மன்னா செப்புவதுடையேன்...
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின்சிரிப்பும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்....

இன்டக்ரேஷன் டிஃப்ரன்ஷியேஷன்...
எலக்ட்ரான் ப்ரோட்டான் எதுவுமில்லாத ந்யூட்ரான்
யுரேனியம் க்ரிடிக்கல் மாஸ் அணுகுண்டு...
ஃபிஷனை விட பெரிது ஃப்யூஷன்...
சி ட்டூ ஹெச் ஃபைவ் ஓஹெச்
எதில் ஆல்ஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு...

தோள் பக்கம் மெல்ல கடித்து
கழுத்து நோக்கி மெதுவே நகர்ந்து....

ப்ளான் எலிவேஷன் எஞ்சினியரிங் ட்ராயிங்...
ஃபோர்ஸ் டார்க் ஜைராஸ்கோப்...
பெட்ரோல் உடனடி பவர்...டீசல் கொஞ்ச நேரம் ஆகும்...

இன்டர்னல் கம்பஸ்டன் எஞ்சின்...
இருபது வயதில் வேலை இருபதாயிரம் சம்பளம்..
ஏசி ரூம் கம்பெனி கார்...

வலப்பக்கம் அலுப்பாய் இருக்கிறது
இடப்பக்கம் ஆரம்பித்தால் என்ன...

காலாண்டு கணக்குகள் வராக் கடன்கள்
பங்குதாரர்கள் டிவிடென்ட்.. டேக் ஓவர் மெர்ஜர்...
மார்ஜின் ட்ரேடிங்கும் ப்ரைவேட் எக்விட்டியும்...
இன்ஃப்லேஷனும் க்ரெடிட் க்ரென்ச்சும்...
காளைப் பாய்ச்சலும் கரடிப் பிடியும்....

எக்ஸ் மைனஸ் ஒய் என்றால் இசட்
இசட் ப்ளஸ் எக்ஸ் என்றால் ஒய் எனில்
எக்ஸின் மதிப்பென்ன....
கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூஜ்ஜியமாய் இருக்கலாம்...

தின்ன தின்ன தீராது
நீண்டு கொண்டே இருக்கிறது...

தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் போல‌
தின்று கொண்டே இருக்கிறேன் என்னை நானே...

=========================

படம் உதவி: http://freemasonry.bcy.ca/
(This is a repost as I am on a trip to somewhere....I would be really nice of you, if any of my friends can submit this to Tamilsh/Tamilmanam. Thanks for your visit....Cheers....)

29 comments:

பழமைபேசி said...

அண்ணன் இன்னும் வலையுலகுல இருக்காருங்கோய்.... மகிழ்ச்சி!

நட்புடன் ஜமால் said...

தலைப்பு மட்டுமே பூஜ்யம்

கவிதையல்ல

மங்களூர் சிவா said...

மகிழ்ச்சி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்குங்க.

எம்.எம்.அப்துல்லா said...

என்னையமாதிரி மொக்கச்சாமிக்கே ரொம்ப புடுச்சுருக்கு :)

குடுகுடுப்பை said...

நல்லா யோசிச்சிருக்கீர். படத்தை பாத்து யோசிச்சதா?

யோசிச்ச பின்னர் படம் கெடச்சிதா?

அது சரி(18185106603874041862) said...

// பழமைபேசி said...
அண்ணன் இன்னும் வலையுலகுல இருக்காருங்கோய்.... மகிழ்ச்சி!

03 August 2009 00:44
//

நாங்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தலைமறைவு ஆயிட மாட்டோம்ல :0))

அது சரி(18185106603874041862) said...

//
நட்புடன் ஜமால் said...
தலைப்பு மட்டுமே பூஜ்யம்

கவிதையல்ல

03 August 2009 01:35
//

நன்றி ஜமால்!!

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
மகிழ்ச்சி!

03 August 2009 08:06
//

மங்களூராரின் வருகை எனக்கும் மகிழ்ச்சி :0))

அது சரி(18185106603874041862) said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்லாயிருக்குங்க.

03 August 2009 09:52
//

ஜ்யோவ்ராம் சுந்தர் அண்ணனுக்கே பிடிச்சிருக்கா?? அப்ப நிஜமாவே நல்லாதான் இருக்கு போலிருக்கு :0))

வருகைக்கு நன்றி குரு!

அது சரி(18185106603874041862) said...

//
எம்.எம்.அப்துல்லா said...
என்னையமாதிரி மொக்கச்சாமிக்கே ரொம்ப புடுச்சுருக்கு :)

03 August 2009 11:40
//

அப்துல்லாண்ணே....அது என்ன மொக்கச்சாமி?? நீங்க அப்பிடி ஒண்ணும் மொக்கை போட்ற மாதிரி தெரியலையே...

வருகைக்கு நன்றி தல....

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
நல்லா யோசிச்சிருக்கீர். படத்தை பாத்து யோசிச்சதா?

யோசிச்ச பின்னர் படம் கெடச்சிதா?

03 August 2009 20:56
//

நல்ல கேள்வி...கூகிள்ல எதையோ தேடிக் கிட்டிருந்தேன்...திடீர்னு இந்த படம் வந்துச்சி...அப்ப வந்த எண்ணம் தான் இது... ஸோ, படத்தை பார்த்து கிறுக்கியது இது...

வருகைக்கு நன்றி...

MSK / Saravana said...

அட்டகாசமா இருக்குங்க்னா..
சான்ஸே இல்லை.. செம.. :)

அது சரி(18185106603874041862) said...

//
Saravana Kumar MSK said...
அட்டகாசமா இருக்குங்க்னா..
சான்ஸே இல்லை.. செம.. :)

04 August 2009 21:59
//

வாங்க சரவணா...

ஏதோ நாங்களும் கவுஜ எழுதுவோம்னு அப்பப்ப உலகுக்கு அறிவிக்கணும்ல?? :0))

Jaypee said...

Very Nice Thinking.. I am surprised, It reflects my state of mind...Whatever I am going through..

அது சரி(18185106603874041862) said...

//
Jaypee said...
Very Nice Thinking.. I am surprised, It reflects my state of mind...Whatever I am going through..
//

வாங்க ஜே.பி. ஐயா....

நல்லா இருக்கீங்களா??? ரொம்ப நாளாச்சே??

KarthigaVasudevan said...

உங்க கடைக்கு வந்தாச்சு அதுசரி ...
ஆனா ஆடித் தள்ளுபடி ஒன்னையும் காணோமே?!
:)
கவிதை அருமை...
வார்த்தைகளின் அர்த்தங்கள் சதிராடும் அழகு நயம் .
நல்ல சிந்தனா சக்தி .

ஆமா இதுக்குப் பேர் தான் கூப்பிட்டு வச்சு குழம்பறதா ?(குழப்பறதாக்கும்?!!!)
கொஞ்ச நேரம் தலைக்குள்ள நட்சத்திரம் பறக்கறாப்பல ஒரு பீல் !!!

என்னங்காணும் ஆச்சு அதுசரிக்கு ?

(வேதாளம் இல்லா விக்ரமாதித்தரே ...கொஞ்சம் வேதாளத்தையும் கண்ல காட்டுங்க.)

www.narsim.in said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

நர்சிம்

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...
உங்க கடைக்கு வந்தாச்சு அதுசரி ...
ஆனா ஆடித் தள்ளுபடி ஒன்னையும் காணோமே?!
:)
கவிதை அருமை...
வார்த்தைகளின் அர்த்தங்கள் சதிராடும் அழகு நயம் .
நல்ல சிந்தனா சக்தி .

ஆமா இதுக்குப் பேர் தான் கூப்பிட்டு வச்சு குழம்பறதா ?(குழப்பறதாக்கும்?!!!)
கொஞ்ச நேரம் தலைக்குள்ள நட்சத்திரம் பறக்கறாப்பல ஒரு பீல் !!!

என்னங்காணும் ஆச்சு அதுசரிக்கு ?

(வேதாளம் இல்லா விக்ரமாதித்தரே ...கொஞ்சம் வேதாளத்தையும் கண்ல காட்டுங்க.)

07 August 2009 15:31
//

உங்களுக்கு இல்லாத தள்ளுபடியா?? இதுவரை நான் கிறுக்கி தள்ளியிருக்கிற எல்லாத்தையும் இலவசமா, எந்த கட்டணமும் இன்றி படித்துக் கொள்ளலாம் என்று மிகப் பெரிய தள்ளுபடி அளிக்கிறேன்..:0)))

குழப்புறதுக்கு தாங்க கூப்பிட்டதே....ஏதோ என்னால முடிஞ்ச சேவை...:0))) நட்சத்திரம் இல்ல சில பேரு நிலாவை கூட பறக்க வைக்கிறாங்க‌...ஆனா, அது எனக்கு தெரியலை....

அழைப்புக்கு இணங்கி, வருகைக்கு மிக்க நன்றி....வேதாளம் இல்லாம மாதித்தன் எப்படி வரமுடியும்?? கண்டு பிடிச்சதும் சீக்கிரம் வருவான்...இப்ப தினமும் க்ளப்புக்கு போயி கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கறதுனால அவன் வேதாளத்தை பிடிக்கிற மாதிரி தெரியலை...சீக்கிரம் பிடிக்க சொல்றேன் :0)))

அது சரி(18185106603874041862) said...

//
www.narsim.in said...
ரொம்ப நல்லா இருக்குங்க.

நர்சிம்

10 August 2009 08:09
//

இது நர்சிம் தானா இல்ல அவர் பேர்ல யார்னா பின்னூட்டம் போட்டுட்டாங்களா??

தப்பா எதுவும் சொல்லவில்லை என்பதால், நர்சிம் என்றே நினைக்கிறேன்...

மிக்க நன்றி நர்சிம் ஐயா...

குடுகுடுப்பை said...

இதப்படிச்சு கர்த்து சொல்லுங்க
கு.ஜ.மு.க: வரலாறுபிக்சன்

Anonymous said...

I read your comment about Mohanlal's movie in Unmai thamalans post.
as I have no bloger account I couldn't comment in his post. I didn't know that you have an anonymous option.
I post this comment in lucky's post.


I want to post a comment that no way connected to this post. Could you please publish this comment.



"Unmai thamilan I want to tell you that if you can't under stand malayalam please do not write review about the movie."

I read lot of comments or questions about the movie in the comment section.

Here is my reply for that

1. Mohanlal's wife didn't kill the child in the movie. The child died beacause of the fever and no body take care of it. (His wife is in a insane state)
2. Mohanlal after the death of his wife and child went to his inlaw's house and brought the dead body to his house.
3. He is in a state of insane (paithiam) and left the body in his house and went to find the persons who was the reason for all those things.
4. He was in a split personality mode befote and after his family problom
"
The director mentioned that mohanlal has mental problem by the sound of a bee two or three places and Mohanlal also act like a lunatic person in that movie.

Subu

பழமைபேசி said...

http://maanbu.blogspot.com/

ராஜ நடராஜன் said...

//நல்ல கேள்வி...கூகிள்ல எதையோ தேடிக் கிட்டிருந்தேன்...திடீர்னு இந்த படம் வந்துச்சி...அப்ப வந்த எண்ணம் தான் இது... ஸோ, படத்தை பார்த்து கிறுக்கியது இது...//

படத்தப் பார்த்தா கவிதை வருமுங்களா?எனக்குப் பயம்தான் வரு.....

கலகலப்ரியா said...

வாங்க வாங்க.. இடுகை அப்டேட் ஆகவில்லையா... கவனிக்கவில்லையா தெரியவில்லை... லேட் கமெண்ட்..

//கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூஜ்ஜியமாய் இருக்கலாம்.//

மைனஸ் ஆகக் கூட இருக்கலாம்...

பின்நவீனத்துவம் இதுதானா... யாரோ சொன்னது போல.. சுஜாதாக்கு போட்டியாத்தான் போய்க்கிட்டிருக்கீக...

கலகலப்ரியா said...

submit pannavanga vote poda maattaangalo...:p...

vasu balaji said...

ஓஓஓஓ. இதான் பிண சை பி.ந.கவிதையா. அவிங்க அவிங்க படிச்சத சேர்த்து போட்டு கொத்து பரோட்டா போடணுமோ.=)).

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

பின்நவீனத்துவம் இதுதானா... யாரோ சொன்னது போல.. சுஜாதாக்கு போட்டியாத்தான் போய்க்கிட்டிருக்கீக...

//

ம்ம்ம்...நீங்க பாட்டுக்கு பின்நவீனத்துவம்னு ஒரு பிட்டை போட்டுட்டு போயிட்டீங்க...அடுத்து வானம்பாடிகள் என்ன கேக்குறார்னு பாருங்க :0))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
ஓஓஓஓ. இதான் பிண சை பி.ந.கவிதையா. அவிங்க அவிங்க படிச்சத சேர்த்து போட்டு கொத்து பரோட்டா போடணுமோ.=)).
//

இது பி.ந. கவிதை எல்லாம் இல்லீங்ணா...ச்சும்மா...

கொத்து பரோட்டா? :0)))