அத்தியாயம் ஒன்று - மாட்டிக் கொண்ட மாதித்தன்
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....முன்னாள் மந்திரிக்கு ஒரு ரெய்டு...உனக்கு எத்தனை சூடு மாதித்தா...எத்தனை சூடு...ஆயிரத்து நூத்தி பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது...சொன்ன வாக்கை காப்பாற்ற முடிந்ததா உன்னால்??"
மந்திரவாதியின் குரல் மாதித்தனின் செல்போனை கிழித்துக் கொண்டு அறை முழுவதும் பரவியது...
"மந்திரா...கட்சி விட்டு கட்சி ஓடும் கயவாளிகள் மாதிரி என்னை பேசாதே...நான் என்ன போகாமயா இருக்கேன்....நீ சொன்னன்னு பிரிஸ்டால் வரைக்கும் போனேன்....அந்த சனியன் பிடிச்ச வேதாளம் இந்தா வர்றேன்னுட்டு அப்பிடியே ஓடிப் போயிருச்சி ஓடுகாலி நாயி....நானும் தேடிக்கிட்டு தான் இருக்கேன்...சீக்கிரமா அதை பிடிச்சி உன்கிட்ட ஒப்படைச்சாதான் எனக்கு நிம்மதி..."
"சீக்கிரமான்னா...நீ வேதாளத்தை பிடிக்கிறதுக்குள்ள கருணாநிதி காவிரிப் பிரச்சினையவே தீத்துருவாரு...ரஜினிகாந்து அப்பா வேஷத்துல நடிக்க ஆரம்பிச்சிருவாரு போலருக்கே..."
"நீ பேசுறதா பார்த்தா நான் பிடிக்கவே மாட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கே...இன்னும் கொஞ்ச நாள் டைம் குடு...."
"ஆமா நான் நயந்தாரா...நீ ரஜினிகாந்து....கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு மரத்த சுத்தி டூயட் பாடலாம் வர்றியா..."
என்னக் கொடுமைடா மாதி இது...போயும் போயும் இந்த தாடிக்கார சடையன் கூட டூயட் பாட்ற மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை...ம்ம்ம்ம்...நினைக்கிறதெல்லாம் வெளிய சொல்ல முடியுமா...
மாதித்தன் குரலை மென்மையாக்கி கொண்டான்...
"இல்ல மந்திரா...இன்னும் மூணு மாசம் டைம் குடு..அந்த வேதாளம் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி கொண்டு வர்றேன்"
"மூணு மாசம் டைம் விக்கிரமாதித்தா...மூணே மாசம்..."
மந்திரவாதியின் மிரட்டல் குரலுடன் மாதித்தனின் மொபைல் போன் ஊமையானது.
------------------------------------------------------
மந்திரவாதி கத்தியதில் மாதித்தனுக்கு ஏற்றி வைத்திருந்த போதை எல்லாம் இறங்கியிருந்தது...
ம்ம்....சுதி மொத்தமா எறங்கிருச்சு...இன்னும் நாலு ரவுண்டு விட்டாதான் நைட்டு தூக்கம் வரும்..விஸ்கி வேற தீந்து போச்சே.....சரி அப்பிடியே மெதுவா நடந்து போயி தெருக்கடைல ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்துரலாம்...வெளிய ஃபுல்லா இருட்டிருச்சே....கடை தொறந்திருக்குமா இல்ல இன்னிக்கி நைட்டு ட்ரையா தான் தூங்கணுமா...
ஷூவை மாட்டிக் கொண்டு மாதித்தன் வெளியே நடந்த போது இரவு நேர பிரிஸ்டால் மெல்லிய மழையில் நனைந்து கொண்டிருந்தது.
தெருவுல ஒரு பயலைக் காணோமே...நைட்டு பகல் எப்ப பார்த்தாலும் இந்த தெருவுல ஒருத்தனைக் கூட பார்க்க முடியல....ம்ம்ம்...இந்நேரம் உஜ்ஜைனிலருந்தா புள்ளையார் சதுர்த்தியும் அதுவுமா ஜெகஜோதியா இருந்திருக்கும்...எல்லாம் போச்சு....ஆமா அது என்ன காரு....பழைய காரு பாத்திருக்கேன்...ஆனா இது என்ன நசுங்கி போன கெரசின் டின்னுக்கு நம்பர் ப்ளேட் மாட்ன மாதிரி...இதைக் கூட இந்த ஊர்ல ஓட்றாய்ங்களா...
மாதித்தன் யோசித்துக் கொண்டிருந்த போதே அவனை தாண்டி சென்ற கார் திடீரென்று நின்றது...அது ஒரு பழைய ஃபோர்ட் ஃபியஸ்டா கார்...கருப்பு பெயின்ட் தேய்ந்து போய் தகரம் பல இடங்களில் மார்க்கெட் போன நடிகை போல பல்லிளிக்க...நம்பர் ப்ளேட் பாதி கழன்று தொங்கிக் கொண்டிருந்தது..ஒரு டயரில் பாதி காற்று இல்லை...கமலஹாசன் போல ஈரமான ரோட்டை அழுத்தி முத்தமிட்டுக் கொண்டிருந்தது.... அதில் இருந்து வயது கணிக்க முடியாத ஒரு ஆள் இறங்கினான்...நீளமான ரெயின்கோட் பல இடங்களில் கிழிந்து ஒட்டுப் போட்டிருந்தது...தலையில் ஒரு பழைய தொப்பி...கழுத்தில் ஒரு சாயம் போன நீளமான காசித் துண்டு...இருட்டில் மாதித்தனுக்கு முகம் தெரியவில்லை...
யார்டா இவன்...அப்பிடியே ரீசைக்ளிங் பின்ல இருந்து எந்திரிச்சி வந்த மாதிரி இருக்கான்... மாதித்தன் பேச ஆரம்பிக்கும் முன் ஒரு பேப்பரை நீட்டி அந்த மனிதன் பேச ஆரம்பித்தான்...
"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்....டூ யூ நோ திஸ் அட்ரஸ் பை எனி சான்ஸ்"
லெட் மீ ஸீ...எடிங்க்டன் ஸ்ட்ரீட்...டேக் லெஃப்ட் அன்ட் தென்.."
அடுத்து நடந்ததை நிஜமாகவே மாதித்தன் எதிர்பார்க்கவில்லை...
அவன் வாயில் ஒரு அழுக்கு துணி திணிக்கப்பட்டது....தலையில் கனமான எதுவோ தாக்கியது.... மாதித்தன் நினைவிழந்தான்.....
---------------------------------------------------
"நான் எங்க இருக்கேன்..."
தமிழ்ப்பட ஹீரோயின் போல கேள்வியுடன் மாதித்தன் கண்விழித்த போது பதில் சொல்ல ஹீரோ யாரும் இல்லை...அவன் கைகள் ஒரு பாறையுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது....கண்களை சுற்றிலும் துழாவ விட்டான்....
அது ஒரு குகை...ஒழுங்கில்லாமல் குடையப்பட்டிருந்ததால் பாறைகள் துருத்திக் கொண்டிருந்தன....இருண்ட மூலைகளில் பிரம்மாண்டமான சிலந்தி வலைகள்...சில வவ்வால்கள் தலைகீழாக...ஒரு வேளை சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டிருக்கலாம்...பாறைகளில் லேசாய் ஈரக்கசிவு....விடாது பெய்யும் பிரிட்டிஷ் மழை...ஒரு மூலையில் அழுக்குத் துணிகள்...முட்டை ஓடுகள்...ஒரு காலியான வைன் பாட்டில்..சில மண் சட்டிகள்.....சிகரெட் துண்டுகள்....மூலையில் மரக்கட்டைகளை குவித்து எரியும் நெருப்பு...
"என்ன மாதி....மப்பு ரொம்ப ஜாஸ்தியோ....லேசா தட்டினதுக்கே இம்புட்டு நேரம் கழிச்சி எந்திருக்கிற.... கே.எஃப்.ஸில சிக்கன் வாங்கிட்டு வந்தேன்...சாப்ட்றியா..."
பேசிக் கொண்டே வேதாளம் உள்ளே வந்தது...இன்னமும் அதே கிழிந்த பல இடங்களில் ஒட்டுப் போட்ட ரெயின் கோட்...கழுத்தில் சாயம் போன காசித் துண்டு...தலையில் பழைய தொப்பி இல்லை...கொம்புகள் நீட்டிக் கொண்டு தெரிந்தன...
"அட சனியனே....ரொம்ப அசிங்கமா இருக்கும் போதோ எனக்கு லேசா ஒரு டவுட்டு வந்திச்சி...நீ தானா அது....எதுக்கு என்ன இங்க கடத்திட்டு வந்த...."
"ரொம்ப கத்தாத மாதித்தா...எத்தினி நாள் தான் நீ என்னை பிடிப்ப....ரொம்ப போரடிக்குது....அதான் ஒரு சேஞ்சுக்கு....நானே ஒன்னப் பிடிச்சிட்டு வந்துட்டேன்...."
"எதிர்கட்சி எம்.எல்.ஏவை பிடிக்கிற மாதிரி ரொம்பக் கேவலமா இருக்கே...சரி சரி அவுத்து விடு...ஒன்னை மந்திரவாதிகிட்ட சேத்துட்டு நான் பாட்டுக்கு போய்கிட்டே இருக்கேன்..."
வேதாளம் பலமாக சிரித்தது....
"மாதி...ஒனக்கு உறவுகள் பத்தி எதுவுமே தெரியலை...சில உறவுகள் ஒரு தடவை ஒடஞ்சிட்டா எப்பவுமே ஒட்டாது...ஒனக்கு ஒரு கதை தெரி"
"ஏய்...நில்லு நில்லு....நீ கதை சொல்ல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கே...நீ வந்தா வா...வராட்டி போ...ஆனா கதை மட்டும் சொல்லாத....ரொம்பக் கொடுமையா இருக்கு...ப்ளீஸ் என்னை அவுத்து விட்றேன்...நான் நடந்தே உஜ்ஜைனிக்கு போயிட்றேன்...இனிமே உன் பக்கமே வர மாட்டேன்..."
வேதாளத்தை இடை மறித்த மாதித்தன் கெஞ்ச ஆரம்பித்தான்....
"பெட்ரோல் செலவு பண்னி ஒன்னை இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்ததே இதுக்குத் தான்...அப்புறம் கதை சொல்லாட்டி எப்பூடீ...."
மாதித்தனின் கெஞ்சலை புறக்கணித்த வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது....
"மாதி....சுட்ட மண் என்னிக்காவது திருப்பி ஒட்டியிருக்கா??"
==================== தொடரும் ===================
24 comments:
hiyah, me the first.
again mathithan stories...cool.
ask vedhal to tell the full story atleast this time :))
welcome back.
/
"ரொம்ப கத்தாத மாதித்தா...எத்தினி நாள் தான் நீ என்னை பிடிப்ப....ரொம்ப போரடிக்குது....அதான் ஒரு சேஞ்சுக்கு....நானே ஒன்னப் பிடிச்சிட்டு வந்துட்டேன்...."
/
:))))))
/
"பெட்ரோல் செலவு பண்னி ஒன்னை இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்ததே இதுக்குத் தான்...அப்புறம் கதை சொல்லாட்டி எப்பூடீ...."
/
:)))))))))))
சூப்பர்
கலக்குங்க!
அடடா...விக்ரமாதித்தன் வந்தாச்சா ?!
.
.
.
.
.
.
.
அட போங்கையா ...
எப்போ பார்த்தாலும் கதையை விட வேதாளமும் விக்ரமனும் பேசிக்கற காமெடி ட்ராக் தான் நிறைய இருக்கு,எப்போ தான் முழுக் கதை திரைல ஓட்டுவிங்க ?
தொடரும் ..போடாம சொல்ல வந்த கதையை முழுசா சொல்லலாம் இந்த ஒரு தடவையாவது, ...
இல்லனா விக்ரமனுக்கு பதிலா வேதாளம் அதுசரியைக் கடத்தட்டும்
//
shrek said...
hiyah, me the first.
again mathithan stories...cool.
ask vedhal to tell the full story atleast this time :))
24 August 2009 01:25
//
வாங்க மிஸ்டர் ஷ்ரெக்...இந்த தடவை கண்டிப்பா முழுக்கதையையும் சொல்ல வச்சிடலாம்...
//
Indian said...
welcome back.
24 August 2009 02:08
//
Welcome Indian....
//
மங்களூர் சிவா said...
/
"ரொம்ப கத்தாத மாதித்தா...எத்தினி நாள் தான் நீ என்னை பிடிப்ப....ரொம்ப போரடிக்குது....அதான் ஒரு சேஞ்சுக்கு....நானே ஒன்னப் பிடிச்சிட்டு வந்துட்டேன்...."
/
:))))))
/
"பெட்ரோல் செலவு பண்னி ஒன்னை இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்ததே இதுக்குத் தான்...அப்புறம் கதை சொல்லாட்டி எப்பூடீ...."
/
:)))))))))))
சூப்பர்
கலக்குங்க!
24 August 2009 08:13
//
வாங்க சிவா அண்ணாச்சி....
//
மிஸஸ்.தேவ் said...
அட போங்கையா ...
எப்போ பார்த்தாலும் கதையை விட வேதாளமும் விக்ரமனும் பேசிக்கற காமெடி ட்ராக் தான் நிறைய இருக்கு,எப்போ தான் முழுக் கதை திரைல ஓட்டுவிங்க ?
//
என்னா அக்கிரமமா இருக்கு....டைட்டில் கார்டு போடும் போதே டாய்ய்ய்ய்...கதை எங்கன்னுலாம் கேக்கப்படாது..:0)))
//
இல்லனா விக்ரமனுக்கு பதிலா வேதாளம் அதுசரியைக் கடத்தட்டும்
//
என்னைக் கடத்துனா ரொம்ப செலவாகும்....வேதாளத்துக்கு வசதிப்படாது..:0))
வாவ்...
மறுபடியும் மாதித்தன் :)
கலக்குங்க.... ஆனா ஒண்ணு இப்போவே சொல்லிட்டேன்..நடுவுல பிரேக் அடிச்சிட கூடாது ஆமா...
குட் லக்.
நட்புடன்,
ராஜ்.
வாங்க மாதித்தரே. கதிய சொல்லவேண்டாம் , எப்படியும் பாதில இஸ்டாப் பண்ணிரிவீங்க அதுனால , இதுக ரெண்டையும் வெட்டியா பேசவிட்டு அரசியல் கட்சிகளோட வேட்டிய அவுருங்க, அது கு.ஜ.மு.க வா இருந்தாலும் சரி.
பதிவைப் படித்ததும் நல்ல துவக்கம் என்று நினைத்தேன். ஆனால் மற்ற பின்னூட்டங்களைப் பார்த்தால், இது துவக்கம் மட்டும் தான் முடிவு என்பது இருக்காது போலிருக்கே?
//
ராஜாதி ராஜ் said...
வாவ்...
மறுபடியும் மாதித்தன் :)
கலக்குங்க.... ஆனா ஒண்ணு இப்போவே சொல்லிட்டேன்..நடுவுல பிரேக் அடிச்சிட கூடாது ஆமா...
குட் லக்.
நட்புடன்,
ராஜ்.
24 August 2009 21:12
//
வருகைக்கு நன்றி ராஜாதி ராஜன்..
No brakes this time mate!
//
குடுகுடுப்பை said...
வாங்க மாதித்தரே. கதிய சொல்லவேண்டாம் , எப்படியும் பாதில இஸ்டாப் பண்ணிரிவீங்க அதுனால , இதுக ரெண்டையும் வெட்டியா பேசவிட்டு அரசியல் கட்சிகளோட வேட்டிய அவுருங்க, அது கு.ஜ.மு.க வா இருந்தாலும் சரி.
24 August 2009 22:53
//
நானே கு.ஜ.மு.க தொண்டன் (ஆனா, உங்க கோஷ்டி இல்ல), அதனால கு.ஜ.மு.க வேட்டி அவிழ்க்கப்படாது....மீதி எல்லாப் பேரு வேட்டியும் சான்ஸ் கெடைச்சா உருவிடுவோம் :0))
//
முகிலன் said...
பதிவைப் படித்ததும் நல்ல துவக்கம் என்று நினைத்தேன். ஆனால் மற்ற பின்னூட்டங்களைப் பார்த்தால், இது துவக்கம் மட்டும் தான் முடிவு என்பது இருக்காது போலிருக்கே?
25 August 2009 18:22
//
வாங்க முகிலன்.... வருகைக்கு நன்றி...
நீங்க சொல்றது கரெக்ட்...நானும் இப்ப தான் கவனிச்சேன்...சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் முடிவு இருக்காதுங்கிற மாதிரி தான் சொல்லிருக்காங்க...அவ்வ்வ்வ்....வ்வ்வ்வ்....வ்வ்வ்வ்
அதுல பாருங்க, நான் இதுவரைக்கும் எழுதுனது ரெண்டே கதை...ரெண்டும் உண்மைக் கதை....இது மூணாவது...ரெண்டாவது கதைல சம்பந்தப்பட்டவங்க கேட்டுக்கிட்டதுனால கதையை பாதில நிறுத்த வேண்டியதாயிடுச்சி...
காரணத்தை இந்த இடுகையில கொஞ்சம் விவரமா சொல்லியிருக்கேன்...
http://muranthodai.blogspot.com/2009/02/blog-post_20.html
>>>>>>>(அப்பாடா....ஒரு வழியா ஒழிஞ்சான்டா....அவசரமாக பாட்டிலை திறக்கும் நண்பர்களுக்கு.....அப்படில்லாம் முடிவெடுத்துடாதீங்க...நாங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிட மாட்டோம் :0))
சொன்ன மாதிரி (அடங்காம) திரும்ப வந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு! கஷ்டப்பட்டு(?!!?) கடைசி அத்தியாயம் தேடி பிடிச்சி copy paste பண்ணிட்டு பார்த்தா நீங்க இங்க link கொடுத்திருக்கீங்க :)...
நானும் சும்மா படிச்சிட்டு போகாம(wife's love/affair? & kill the lust) ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கண்டிப்பா பின்னூட்டமிட போறேன்..
>>>No brakes this time mate!
cool...we are ready for the ride :)
நட்புடன்,
ராஜ்.
romba nalla irukkunga..
//
ராஜாதி ராஜ் said...
>>>>>>>(அப்பாடா....ஒரு வழியா ஒழிஞ்சான்டா....அவசரமாக பாட்டிலை திறக்கும் நண்பர்களுக்கு.....அப்படில்லாம் முடிவெடுத்துடாதீங்க...நாங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிட மாட்டோம் :0))
சொன்ன மாதிரி (அடங்காம) திரும்ப வந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு! கஷ்டப்பட்டு(?!!?) கடைசி அத்தியாயம் தேடி பிடிச்சி copy paste பண்ணிட்டு பார்த்தா நீங்க இங்க link கொடுத்திருக்கீங்க :)...
நானும் சும்மா படிச்சிட்டு போகாம(wife's love/affair? & kill the lust) ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கண்டிப்பா பின்னூட்டமிட போறேன்..
>>>No brakes this time mate!
cool...we are ready for the ride :)
நட்புடன்,
ராஜ்.
25 August 2009 21:38
//
செய்யுங்க ராஜ்...
ஒட்டியோ, வெட்டியோ அனைத்து பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன :0)))
//
SanjaiGandhi said...
romba nalla irukkunga..
26 August 2009 09:42
//
வாங்க சஞ்ஜெய்...முதல் வருகைக்கு நன்றி...
//"என்னாது....பொக்கிஷமா....மாத்தி மாத்தி கடிதம் எழுதியே கபாலத்த பொளக்குறாய்ங்களாமே...அந்த படத்தை பாக்குறதுக்கு நான் பேசாம காங்கிரஸ் கட்சிலயே சேந்துடுவேன்...//
ரொம்பத்தான் குறும்பு:)
//நீளமான ரெயின்கோட் பல இடங்களில் கிழிந்து ஒட்டுப் போட்டிருந்தது...தலையில் ஒரு பழைய தொப்பி...கழுத்தில் ஒரு சாயம் போன நீளமான காசித் துண்டு...இருட்டில் மாதித்தனுக்கு முகம் தெரியவில்லை... //
இந்த மாதிரி இருந்தா வயசு எங்க கண்டுபிடிக்கறது!
//விடாது பெய்யும் பிரிட்டிஷ் மழை//
அதென்ன பிரிட்டிஷ் மழை.ஊட்டில கூட சாரக்காற்று ய்ம்மா!தூக்கம் போச்சுதே யம்மான்னு ஏதோ முனகல் பாட்டு மாதிரி மழை சோ ன்னு பெய்து.
மும்பாய்ல ஆகஸ்ட்,செப்டம்பர் மாச மழை கூடாத்தான் விடாம பெய்யுது.அதுக்குன்னு மும்பாய் மழையா?
உங்க ஊரு மழைக்கு எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது டயலாக்குதான் தெரியுமுன்னு கேள்விப்பட்டுருக்கேன்.
எகிப்து செக்ரட்டரி சர்க்கரை வெள்ளிக்கிழங்கு கொடுத்தா.தின்னுகிட்டே தொடருகிறேன்.
//பேசிக் கொண்டே வேதாளம் உள்ளே வந்தது...இன்னமும் அதே கிழிந்த பல இடங்களில் ஒட்டுப் போட்ட ரெயின் கோட்...கழுத்தில் சாயம் போன காசித் துண்டு...தலையில் பழைய தொப்பி இல்லை...//
அட சனியனே!நீதானா வேதாளம்!நான்கூட யார்க்க்ஷயர் செகப்பு ஊசி முடிக்காரன் கடத்திட்டுப் போயிட்டானோன்னு நெனச்சேன்:)
//"ரொம்ப கத்தாத மாதித்தா...எத்தினி நாள் தான் நீ என்னை பிடிப்ப....ரொம்ப போரடிக்குது....அதான் ஒரு சேஞ்சுக்கு....நானே ஒன்னப் பிடிச்சிட்டு வந்துட்டேன்...." //
அது சரி!
Post a Comment