Friday, 17 April 2009

நான் கடவுளாதல்!

சுவாசம் முகம் படர‌

கழுத்தில் கை இறுக்கி

மேல் படர்ந்திருந்த காதலியை மெதுவே புறந்தள்ளி....

கடும் மழை அஞ்சி

காற்றும் வெளி வராத‌

இருள் மட்டுமே நிறைந்த நள்ளிரவில்

இலக்குகளின்றி இருளில் ஒருவனாக...

இருத்தலும் இல்லாமையும் இனி இணையே....

(படம் உதவி: www.quado.com)

=====================

32 comments:

பழமைபேசி said...

படைப்பு நல்லா இருக்கு...

ஆனா, நீங்க நல்லாத்தான இருந்தீங்க?

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
படைப்பு நல்லா இருக்கு...

ஆனா, நீங்க நல்லாத்தான இருந்தீங்க?

17 April 2009 23:54
//

என்னா அக்கிரமம்....நல்லாத்தான இருந்தீங்கன்னு இறந்த காலத்துல சொல்றீங்க?? இப்பவும் நல்லா தான் இருக்கேன் :0))

பழமைபேசி said...

//இப்பவும் நல்லா தான் இருக்கேன் :0))//

எக்சூசுமி, அதை மத்தவங்கள்ல சொல்ணும்? யாருகிட்ட?!

குடுகுடுப்பை said...

ஏன்யா உன் காதலியை கொலை பண்ணீங்க. வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரமா?

ஆ.ஞானசேகரன் said...

நன்று

butterfly Surya said...

நல்லாயிருக்கு.

வாழ்த்துகள்.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
ஏன்யா உன் காதலியை கொலை பண்ணீங்க. வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரமா?

18 April 2009 01:11
//

அடப்பாவி! ஒரு கவுஜையை எப்படி வேணும்னாலும் புரிஞ்சிக்கலாம்...ஆனா அதுக்காக வரியை உடைச்சி பார்த்தா இப்படித் தான்...

அது காதலியை கொலை பண்றதில்லை...என் மேல் பரவியிருந்த காதலியை மெதுவே புறம் தள்ளுதல்...இப்ப திருப்பி, மூணு வரியையும் சேர்த்து படிச்சி பாருங்க...

"
சுவாசம் முகம் படர‌

கழுத்தில் கை இறுக்கி

மேல் படர்ந்திருந்த காதலியை
"

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்குங்க.. சித்தார்த்தன் வெளியில் சென்ற நினைவுதான் எனக்கு தோணுது..

மங்களூர் சிவா said...

அந்த புள்ளைய எதுக்கு புறந்தள்ளணும்??
:))))

ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சிக்கலாமுன்னுதான்

பழமைபேசி said...

//"
சுவாசம் முகம் படர‌

கழுத்தில் கை இறுக்கி

மேல் படர்ந்திருந்த காதலியை
"//

இறுக்கின்னா அது கொலைதான்...

’வைத்து’ன்னா வேணா யோசிக்கலாம்... நீங்க மாத்தி வையுங்க, நாங்க அப்புறம் யோசிக்கலாம்...

KarthigaVasudevan said...

கற்பனை கொஞ்சம் அமானுஷ்யமா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு ...

//கடும் மழை அஞ்சி

காற்றும் வெளி வராத‌

இருள் மட்டுமே நிறைந்த நள்ளிரவில்

இலக்குகளின்றி இருளில் ஒருவனாக...

இருத்தலும் இல்லாமையும் இனி இணையே//

முதல் மூன்று வரிகளை விட்ரலாம் ...இந்த வரிகள் வாசிக்கும்போதே இருள் நிறைந்த நள்ளிரவில் இல்லாததைப் போல இருத்தலை உணர வைக்கிறது .

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...
//"
சுவாசம் முகம் படர‌

கழுத்தில் கை இறுக்கி

மேல் படர்ந்திருந்த காதலியை
"//

இறுக்கின்னா அது கொலைதான்...

’வைத்து’ன்னா வேணா யோசிக்கலாம்... நீங்க மாத்தி வையுங்க, நாங்க அப்புறம் யோசிக்கலாம்...
//

வைத்துன்னு மாத்தினா கவிதை தன்மை கெடும் ...இறுக்கி தான் சரியான பதம் இங்கே.பழமைபேசி அண்ணா ...கவிதை என்பது சில நேரங்களில் மரபை மீறலாம், கவிதையில் விதி மீறல்கள் அங்கீகரிக்கப் படலாம் ...அப்படின்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் !!! என்னப்பா சொல்றிங்க மத்தவங்களாம்?

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...
ஏன்யா உன் காதலியை கொலை பண்ணீங்க. வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரமா?//

குடுகுடுப்பை அண்ணா பின்னூட்டத்துல காமெடி பண்ண உங்களை மிஞ்ச முடியுமா? இறுக்கினா அதை கொலைங்கர அளவுக்கு இவ்ளோ ஆழமா தெளிவா புரிஞ்சு யாராச்சும் கவிதை வாசிப்பாங்களா ?!

ஹேமா said...

சின்னதாய் சுருக்கமாய் மனம் ஆசாபாசங்களை விட்டு வெளியேறுவதை அழகாகச் சொல்லியிருக்கீங்க.அருமை.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//இப்பவும் நல்லா தான் இருக்கேன் :0))//

எக்சூசுமி, அதை மத்தவங்கள்ல சொல்ணும்? யாருகிட்ட?!

18 April 2009 00:50
//

கண்ணாடில பார்த்தா நான் நல்லா தான் இருக்கேன்...நீங்க என்னை பார்த்ததே இல்லியே அப்புறம் எப்படி சொல்ல முடியும்?? :0))

(சீரியஸா...நீங்க கேக்குறதுக்கு அர்த்தம் புரியலை...)

அது சரி(18185106603874041862) said...

//
ஆ.ஞானசேகரன் said...
நன்று

18 April 2009 03:26
//

வாங்க ஞான சேகரன்...ஊக்குவிப்புக்கு நன்றி!

அது சரி(18185106603874041862) said...

//
வண்ணத்துபூச்சியார் said...
நல்லாயிருக்கு.

வாழ்த்துகள்.

18 April 2009 07:29
//

வாங்க வண்ணத்து பூச்சியார்...உங்க பேரு ரொம்ப நல்லாருக்குங்க...

உரமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி..

அது சரி(18185106603874041862) said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா இருக்குங்க.. சித்தார்த்தன் வெளியில் சென்ற நினைவுதான் எனக்கு தோணுது..

18 April 2009 10:11

//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.. வருகைக்கு நன்றி...

ஆமாங்க...நீங்க சொல்றது சரி தான்...எழுதும் போது அது தோணலை..ஆனா எழுதி முடிச்சதும் எனக்கே தோணிச்சி...உங்களுக்கும் தோணிருக்கு...

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
அந்த புள்ளைய எதுக்கு புறந்தள்ளணும்??
:))))

ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சிக்கலாமுன்னுதான்

18 April 2009 12:09
//

வாங்க சிவா அண்ணா...

அது எதுக்கு தள்றதுனா...நானும் கொஞ்சம் மூச்சு விடணும்ல?? ரொம்ப நேரமா கழுத்தை பிடிச்சா ரொம்ப நல்லவனா நானும் எவ்வளவு தான் தாங்கறது?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

இறுக்கின்னா அது கொலைதான்...

’வைத்து’ன்னா வேணா யோசிக்கலாம்... நீங்க மாத்தி வையுங்க, நாங்க அப்புறம் யோசிக்கலாம்...
//

அண்ணே...நீங்க அப்பிடி வர்றீங்களா??

ம்ம்ம்.....நெறுக்கி அப்படின்னா கொலைன்னு சொல்லலாம்...ஆனா இறுக்கிங்கறது இறுக்கி பிடித்தான் இறுக்கி அணைத்தான்...இப்படி அர்த்தத்துல கூட யூஸ் பண்ணலாம் இல்லியா??

தோளில் கை வைத்தாள் அப்படின்னா வேற அர்த்தம்..தோளை இறுக்கினாள் அப்படின்னா வேற அர்த்தம் இல்லியா??

இறுக்கமாக அணைத்தல்ங்கிற அர்த்தத்துல தான் நான் யூஸ் பண்ணியிருக்கேன்...

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...
கற்பனை கொஞ்சம் அமானுஷ்யமா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு ...
//

வாங்க மிஸஸ் தேவ்..உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி...

//கடும் மழை அஞ்சி

காற்றும் வெளி வராத‌

இருள் மட்டுமே நிறைந்த நள்ளிரவில்

இலக்குகளின்றி இருளில் ஒருவனாக...

இருத்தலும் இல்லாமையும் இனி இணையே//

முதல் மூன்று வரிகளை விட்ரலாம் ...இந்த வரிகள் வாசிக்கும்போதே இருள் நிறைந்த நள்ளிரவில் இல்லாததைப் போல இருத்தலை உணர வைக்கிறது .

//

விளக்கமான கருத்துக்கு நன்றி...நீங்கள் சொல்லியிருப்பது நான் நினைத்ததற்கு நெருக்கமாக வந்துவிட்டது...அப்படியே...."நான் கடவுளாதல்" என்ற தலைப்பையும், "இருத்தலும் இல்லாமையும் இனி இணையே" என்ற முடிவையும் இணைத்து பார்த்தல் வேறு அர்த்தம் வரலாம்...

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...

வைத்துன்னு மாத்தினா கவிதை தன்மை கெடும் ...இறுக்கி தான் சரியான பதம் இங்கே.பழமைபேசி அண்ணா ...கவிதை என்பது சில நேரங்களில் மரபை மீறலாம், கவிதையில் விதி மீறல்கள் அங்கீகரிக்கப் படலாம் ...அப்படின்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் !!! என்னப்பா சொல்றிங்க மத்தவங்களாம்?
//

ஆதரவிற்கு மிக்க நன்றி மிஸஸ்.தேவ்....நீங்கள் சொல்லுவதை நான் முற்றிலும் வழி மொழிகிறேன்...கவிதையின் நோக்கம் உணர்வை சொல்வதே தவிர, இலக்கண வேலிகளுக்குள் கட்டுண்டு இருப்பது அல்ல...ஒரு வேளை மரபுக்கவிதைகளுக்கும், செய்யுள் எனப்படும் செந்தமிழுக்கும் அது விதியாய் இருக்கலாம்...

கவிதைக்கே அப்படி என்றால், கவிதை மாதிரி இருக்கும் "கவுஜை"க்கு எந்த இலக்கணமும் கிடையாது...இங்கே இலக்கணங்கள் உடைக்கப்படும்...:0))

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...

குடுகுடுப்பை அண்ணா பின்னூட்டத்துல காமெடி பண்ண உங்களை மிஞ்ச முடியுமா? இறுக்கினா அதை கொலைங்கர அளவுக்கு இவ்ளோ ஆழமா தெளிவா புரிஞ்சு யாராச்சும் கவிதை வாசிப்பாங்களா ?!

19 April 2009 17:11
//

அது தாங்க குடுகுடுப்பையார் குத்து (பஞ்சுக்கு தமிழ்!)

:0))

அது சரி(18185106603874041862) said...

//
ஹேமா said...
சின்னதாய் சுருக்கமாய் மனம் ஆசாபாசங்களை விட்டு வெளியேறுவதை அழகாகச் சொல்லியிருக்கீங்க.அருமை.

19 April 2009 20:41
//

வாங்க ஹேமா...வார்த்தைகளுக்கு நன்றி....

நீங்க எழுதின "நாசமாய் போக" நேத்திக்கே படிச்சேன்.... நிஜமான கலக்கல்...தமிழிஷ்ல ஓட்டுப் போடலாம்னு நினைச்சேன்...அதுக்குள்ள ப்ரவுசர் க்ராஷ் ஆயிடுச்சி... இன்னிக்கு போட்டுட்டேன்...தொடர்ந்து கலக்குங்க...

புதியவன் said...

வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை...

குடுகுடுப்பை said...

மிஸஸ்.தேவ் said...

// குடுகுடுப்பை said...
ஏன்யா உன் காதலியை கொலை பண்ணீங்க. வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரமா?//

குடுகுடுப்பை அண்ணா பின்னூட்டத்துல காமெடி பண்ண உங்களை மிஞ்ச முடியுமா? இறுக்கினா அதை கொலைங்கர அளவுக்கு இவ்ளோ ஆழமா தெளிவா புரிஞ்சு யாராச்சும் கவிதை வாசிப்பாங்களா ?!//

இறுக்கிறார் அப்புரம் தனியா போறார், நான் கடவுள் அப்படிங்கிறார் அப்ப இது கொலை பண்ணிட்டு புலம்புற கவிதைதானே?

அது சரி(18185106603874041862) said...

//
புதியவன் said...
வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை...
20 April 2009 08:34
//

வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி புதியவன்...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

இறுக்கிறார் அப்புரம் தனியா போறார், நான் கடவுள் அப்படிங்கிறார் அப்ப இது கொலை பண்ணிட்டு புலம்புற கவிதைதானே?
20 April 2009 16:28
//

:0))

நல்ல வேளை தல, போலீசுல ஒரு கம்ப்ளைண்ட் பண்ணாது விட்டீங்க :0)

ஆனா அப்படி பார்த்தாலும் உங்க சைட் வீக்கு..

//
சுவாசம் முகம் படர‌

கழுத்தில் கை இறுக்கி

மேல் படர்ந்திருந்த காதலியை
//

அதாவது என்னோட கேர்ள் ஃப்ரண்ட் தான் கழுத்தை இறுக்கினது...அப்ப அவங்க பண்ணது தான அட்டெம்ப்டட் மர்டர்?? நான் அப்பாவி இல்லியா? :))

குடுகுடுப்பை said...

அது சரி said...

கடவுள் மேல கம்பிளெயிண்ட் குடுக்க முடியுமா சாமி? இது கூட தெரியாம சின்னப்புள்ளத்தனமா?

//
நீங்க சொல்ற மாதிரி நீங்க அப்பாவி மாதிரிதான் தெரியுது,உங்க பேர சொல்லி நிறைய உயிர்க்கொலைகள் நடக்குது.அதுக்கு நீங்க காரணம் இல்லை உங்களை கண்டுபிடிச்சவந்தான் காரணம்

MSK / Saravana said...

கலக்கல்..
நல்லா இருக்கு கவிதை..

(இன்னும் நிறைய கவிதை எழுதவும், பதிவிடவும்..)

Vadielan R said...

தல கதையெல்லாம் நல்லாவே இருக்கு தொடர்ந்து எழுதுக

வேதாளத்தை கூப்ட்டு ஒரு கதைகேளுங்க எழுதுங்க

Anonymous said...

u ididot! , if you are an athesit keep it to yourself.

dont spoil our dculture and beleifs !

fu***** bas****