Monday 27 April 2009

அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவது தவறா?

போன மாதம் வரை, ஈழத்தமிழன் என்று எவனும் இல்லை, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று அருள் வாக்கு வழங்கிய தங்கத் தாரகை, இன்று ஒரே ஒரு வீடியோ பார்த்தாராம், இப்பொழுது தனி ஈழம் அமைத்தே தீருவேன் என்று சூளுரைக்கிறாராம்..அது வரை, ஈழத்தில் மக்கள் சாகும் விஷயமே அவருக்கு தெரியாதாம்....

இப்படி ஒரு பித்தலாட்டம், அதையும் நம்பும் மக்கள் கூட்டம்! இவர் கச்சத் தீவை மீட்டெடுப்பேன் என்று சபதமிட்டது யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? பத்து வருடம் முதல்வராயிருந்து தீவை மீட்க பொர்ச்சி தலைவி செய்த தீராத பொர்ச்சிகளை யாரேனும் பட்டியலிட முடியுமா?

ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுத்தார் என்பதற்காகவே வைகோவை பொடாவில் உள்ளே தள்ளியது புரட்சி அம்மையாரா இல்லை அவரது உயிர்த் தோழியா? கைது செய்ய கையெழுத்திட்டது அம்மையாரா இல்லை என் கையெழுத்து இல்லை என்று மறுப்பாரா??

ஈழப்பிரச்சினையில் கலைஞரின் அணுகுமுறை குறித்து எனக்கும் கடும் விமர்சனங்கள் உண்டு...ஆனால் இன்றைக்கு அதிமுக அணிக்கு ஓட்டு போடுவது என்றால், யாருக்கு ஓட்டு?

ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பது அன்புமணியின் வேலை இல்லை, அது பிரணாப் முகர்ஜியின் வேலை என்று கணக்கு பேசி, தமிழரின் பிணங்களை ஏழு சீட்டுக்காக விற்ற சாதி சங்க தலைவர் ராம தாசுக்கா?? அணு ஒப்பந்தத்திற்காக பார்லிமென்டில் கலவரம் செய்வோம், ஆனால் ஈழப்பிரச்சினையில் தி.மு.க தான் செய்ய வேண்டும் என்று பங்கு பிரித்த கம்யூனிஸ்டுக்கா?

ஒரு செல்வாக்கும் இல்லாத, ஒரு பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தமிழன் கூட செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்கும் போது இந்த பிரச்சினையில் வாயே திறக்காத ஒரு நபர் உண்டு....இல்லை, தங்கபாலு இல்லை, தமிழ் குடித்தாங்கியின் தவப்புதல்வன், கடைசி நாள் வரை பதவியில் ஓட்டிக் கொண்டிருந்த அன்புமணி!

கலைஞர் முழுமூச்சில் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மையே...ஆனால், சைனாவின் கட்டளைப்படி ஆதரவை வாபஸ் வாங்கிய கம்யூனிஸ்ட் உண்டியல்கள் இந்த பிரச்சினையில் குலுக்கியது என்ன?? புறக்கடை வழியே மகனை மந்திரியாக்கி, பாட்டாளி மக்களுக்காக போராடிய ராமதாஸு என்னும் நபரின் மத்திய மந்திரிகள் இதில் சாதித்தது என்ன??

ராமதாஸ் & சன்ஸ் மீண்டும் மத்திய மந்திரி ஆகவா ஓட்டு? கலைஞர் உண்ணாவிரதம் நாடகம் என்பவர்கள் எப்படி ராமதாசுக்கும், கம்யூனிஸ்டுக்கும், பொரச்சி அன்னைக்கும் ஓட்டுப் போட சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை...

சரி, அம்மையார் வென்று விட்டால் என்ன நடக்கும்?? வாஜ்பாயின் 13 நாள் ஆட்சி யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா?? அந்த ஆட்சி கவிழ்த்தது யார்? அம்மையார் அல்லவா? கச்சத்தீவை மீட்கவோ, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவோ ஆதரவை வாபஸ் வாங்கினாரா? இல்லை தன் மீது இருந்த வழக்குகளை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டினாரா??

காங்கிரஸின் பதினாறு வேட்பாளர்களும் தோற்க வேண்டும்...ஆனால்.... இது வரை அம்மையார் என்ன செய்து விட்டார், இனி என்ன செய்து விடப் போகிறார்??

யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது உங்கள் உரிமை....ஆனால் சாத்தான்கள் ஓதும் வேதத்தை நான் நம்பத் தயாராயில்லை!

(படம் உதவி: Google.com)

==================================

33 comments:

பழமைபேசி said...

அண்ணாச்சி, வணக்கம்!

குடுகுடுப்பை said...

எங்க தொகுதில காங்கிரஸ் நிக்குது. குஜமுக நிக்கலை என்ன பண்றது.

Anonymous said...

//யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது உங்கள் உரிமை....ஆனால் சாத்தான்கள் ஓதும் வேதத்தை நான் நம்பத் தயாராயில்லை! //

ஓஒ....நீங்களும் சாத்தானோ...அப்ப அது சரி....

எம்.எம்.அப்துல்லா said...

//வாஜ்பாயின் 13 நாள் ஆட்சி யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா??

//

13 மாத ஆட்சியைத்தான் அவர் கவுத்தது.

எம்.எம்.அப்துல்லா said...

//ஓஒ....நீங்களும் சாத்தானோ...அப்ப அது சரி....

//

இது சாத்தான் இல்லப்பா...வேதாளம். தேர் ஆர் லாட் ஆப் டிப்ரன்ஸ்..ஒ.கே.

:))))

அஹோரி said...

சரி , அம்மையார் வீடியோ பார்த்து ஞானம் பெற்றார் என்று வைத்து கொள்வோம் , தங்க தலைவருக்கு பழம் புளித்தது எந்த வகை? காலம், காலமாக பிழைத்த பிழைப்புக்கு அம்மையார் ஆப்பு அடிச்சதை நினைத்து ஒரு பயலுக்கும் தூக்கம் வரவில்லை. எல்லாம் கூடை கூடையாக எலுமிச்சம் பழம் வாங்கி வீட்டில் வைத்து கொள்ளவும்.

Dr.SK said...

Her support is only for Tamil Eelam and nothing for LTTE

gracian junaid said...

இவ்வளவு ஞாபகசக்தி தமிழ்நாட்டுக்காகாது........

//Her support is only for Tamil Eelam and nothing for LTTE//

அப்ப,. அம்மா, தமிழ் ஈழம் அமைப்பது உறுதிங்கறீங்க...

Unknown said...

, தமிழரின் பிணங்களை ஏழு சீட்டுக்காக விற்ற சாதி சங்க தலைவர் ராம தாசுக்கா//

Nethii addi

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
அண்ணாச்சி, வணக்கம்!
27 April 2009 22:50
//

வாங்க தல...பதில் வணக்கம் :0))

அது சரி(18185106603874041862) said...

//
வருங்கால முதல்வர் said...
எங்க தொகுதில காங்கிரஸ் நிக்குது. குஜமுக நிக்கலை என்ன பண்றது.

27 April 2009 23:08
//

ஓ போட்ருங்க முதல்வரே!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
//யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது உங்கள் உரிமை....ஆனால் சாத்தான்கள் ஓதும் வேதத்தை நான் நம்பத் தயாராயில்லை! //

ஓஒ....நீங்களும் சாத்தானோ...அப்ப அது சரி....

28 April 2009 01
//

நான் சாத்தானான்னு தெரியலீங்க...ஆனா நான் வேதம் ஓதலைன்னு நினைக்கிறேன்...

:0)

அது சரி(18185106603874041862) said...

//
எம்.எம்.அப்துல்லா said...
//வாஜ்பாயின் 13 நாள் ஆட்சி யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா??

//

13 மாத ஆட்சியைத்தான் அவர் கவுத்தது.

28 April 2009 02:51
//

வாங்கண்ணே!

நீங்க சொல்றது கரெக்ட்...13 மாத ஆட்சி தான்...வேகமா எழுதும் போது வந்திடுச்சி...கரெக்ட் பண்ணிடுறேன்...திருத்ததிற்கு நன்றி...

அது சரி(18185106603874041862) said...

//
எம்.எம்.அப்துல்லா said...
//ஓஒ....நீங்களும் சாத்தானோ...அப்ப அது சரி....

//

இது சாத்தான் இல்லப்பா...வேதாளம். தேர் ஆர் லாட் ஆப் டிப்ரன்ஸ்..ஒ.கே.

:))))
//

கரெக்டா சொன்னிங்கண்ணே :0))

அது சரி(18185106603874041862) said...

//
அஹோரி said...
சரி , அம்மையார் வீடியோ பார்த்து ஞானம் பெற்றார் என்று வைத்து கொள்வோம் , தங்க தலைவருக்கு பழம் புளித்தது எந்த வகை? காலம், காலமாக பிழைத்த பிழைப்புக்கு அம்மையார் ஆப்பு அடிச்சதை நினைத்து ஒரு பயலுக்கும் தூக்கம் வரவில்லை. எல்லாம் கூடை கூடையாக எலுமிச்சம் பழம் வாங்கி வீட்டில் வைத்து கொள்ளவும்.
28 April 2009 09:58
//

அஹோரி அண்ணாச்சி,

அம்மையார் ஆப்பு யாருக்கு அடிச்சாங்கன்னு அவங்க ஆட்சிக்கு வந்துட்டா ஒங்களுக்கே தெரியும்...

Anonymous said...

அதுசரி, அம்மையார் ஒருவேளை காங்கிரஸோடு கூட்டு வைத்து இருந்தால் வேறு மாதிரி பேசியிருப்பார். இப்போது ஓட்டுகள் பெற என்னவெல்லாம் பேசுகிறார் பாருங்கள்.

மங்களூர் சிவா said...

நச்!

Ramesh said...

nice ;-)

லக்கிலுக் said...

இதுமாதிரி எல்லாம் எழுதுவதற்கு பயமாயில்லையா? :-)

ராஜ நடராஜன் said...

//ஒரு செல்வாக்கும் இல்லாத, ஒரு பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தமிழன் கூட செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்கும் போது இந்த பிரச்சினையில் வாயே திறக்காத ஒரு நபர் உண்டு....இல்லை, தங்கபாலு இல்லை, தமிழ் குடித்தாங்கியின் தவப்புதல்வன், கடைசி நாள் வரை பதவியில் ஓட்டிக் கொண்டிருந்த அன்புமணி! //

கூட்ட நெருக்கடில இந்த ஆளை யாரும் மொத்தாம இருந்துட்டாங்களே?உங்க கண்ணுல மட்டும் எப்படி மாட்டினார்?

இருங்க இன்னும் மீதிய படிச்சிட்டு வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//கலைஞர் முழுமூச்சில் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மையே...ஆனால், சைனாவின் கட்டளைப்படி ஆதரவை வாபஸ் வாங்கிய கம்யூனிஸ்ட் உண்டியல்கள் இந்த பிரச்சினையில் குலுக்கியது என்ன?? புறக்கடை வழியே மகனை மந்திரியாக்கி, பாட்டாளி மக்களுக்காக போராடிய ராமதாஸு என்னும் நபரின் மத்திய மந்திரிகள் இதில் சாதித்தது என்ன?? //

இங்கே சில விசயங்கள் விட்டுப் போகின்றன.கலைஞருக்கும் ஏனையவர்களுக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் கலைஞர் மற்றவர்களை விட தமிழையும் தமிழ் உணர்வையும் மதிக்கிறவர் என்ற பொதுப்புத்தியும் அது தவறாகப் போகின்ற கோபத்தின் வெளிப்பாடுகள்.

மேலும் கலைஞர் தமிழக முதல்வர் என்ற பீடத்தில் அமர்ந்திருப்பதாலும், பழுத்த அரசியல்வாதி,காங்கிரஸை தனது இழுப்புக்கு கொண்டு வந்திருக்க முடியும் என்ற கணிப்புமே அவர்மீது கோபத்தை வரவழைக்கிறது.

நண்பர் ஒருவருடன் சாட்டிங்ல இருக்கும்போது தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்டேன்.அப்படின்னா என்ன என்று கேட்டார்.அப்படி அன்புமணி யார் என்று கேட்கவும் நிறைய ஆட்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது இந்திய மொத்தப் பங்கீடு 10% என்பது.எனவே அதன் காரணம் கொண்டும் கம்யூனிஸ்ட்டுகளை பெரிதுபடுத்துவதில்லை.

ராஜ நடராஜன் said...

//இது வரை அம்மையார் என்ன செய்து விட்டார், இனி என்ன செய்து விடப் போகிறார்?? //

இதுவரை கலைஞர் மீதான கோபம் அம்மையாருக்கு சாதகமாக அமைகிறது.அதனுடன் தமிழ் ஈழம் அமைப்பேன் குரல் அரசியல் கணக்குகளை ஒட்டி எழுப்புகிறாரா அல்லது மனம் மாறி விட்டாரா என்பது அவரது மனச்சாட்சிக்கே வெளிச்சம்.

தலைப்பைப் பொறுத்த வரையில் keeping my fingers crossed.

Anonymous said...

Swine flu peaks in Mexico and US but it is expected to return with a vengeance in autumn, World Health Organisation

அது சரி(18185106603874041862) said...

//
Dr.SK said...
Her support is only for Tamil Eelam and nothing for LTTE
28 April 2009 11:23
//

oh well, so what she is going to do about LTTE? What sort of solution she is proposing and under who's leadership?

Karuna? Pillaiyan?? if that's the answer, that was Genocidal Srilanka is already doing,and they dont need jeya to do it.

She is just bullshitting without proposing any proper plan...Whoever wants to belive in bullshits can go ahead and continue to do so. After all, that's their right.

அது சரி(18185106603874041862) said...

//
gracian junaid said...
இவ்வளவு ஞாபகசக்தி தமிழ்நாட்டுக்காகாது........

//Her support is only for Tamil Eelam and nothing for LTTE//

அப்ப,. அம்மா, தமிழ் ஈழம் அமைப்பது உறுதிங்கறீங்க...
28 April 2009 13:39
//

வாங்க கிரேசியன்...கச்சத் தீவை இருவது வருஷமா மீட்டுட்ட அம்மாவல முடியாது இருக்கா என்ன??

அது சரி(18185106603874041862) said...

//
mpmohankumar said...
அதுசரி, அம்மையார் ஒருவேளை காங்கிரஸோடு கூட்டு வைத்து இருந்தால் வேறு மாதிரி பேசியிருப்பார். இப்போது ஓட்டுகள் பெற என்னவெல்லாம் பேசுகிறார் பாருங்கள்.
//

அதே தாங்க மோகன்...

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
நச்!

29 April 2009 19:37
//

தொடர் ஆதரவுக்கு நன்றி மங்களூர் அண்ணா...

அது சரி(18185106603874041862) said...

//
லக்கிலுக் said...
இதுமாதிரி எல்லாம் எழுதுவதற்கு பயமாயில்லையா? :-)
//

என்ன ஆச்சரியம்....லக்கிலுக் என்னோட பதிவெல்லாம் படிக்கிறாரா??

பயம்??? எல்லாம் உங்களைப் பார்த்து தான் தல...நீங்க எழுதாதா??

வருகைக்கு நன்றி!

அது சரி(18185106603874041862) said...

//
Virgil said...
, தமிழரின் பிணங்களை ஏழு சீட்டுக்காக விற்ற சாதி சங்க தலைவர் ராம தாசுக்கா//

Nethii addi

28 April 2009 16:32
//

வருகைக்கு நன்றி வெர்ஜில்!

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
//ஒரு செல்வாக்கும் இல்லாத, ஒரு பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தமிழன் கூட செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்கும் போது இந்த பிரச்சினையில் வாயே திறக்காத ஒரு நபர் உண்டு....இல்லை, தங்கபாலு இல்லை, தமிழ் குடித்தாங்கியின் தவப்புதல்வன், கடைசி நாள் வரை பதவியில் ஓட்டிக் கொண்டிருந்த அன்புமணி! //

கூட்ட நெருக்கடில இந்த ஆளை யாரும் மொத்தாம இருந்துட்டாங்களே?உங்க கண்ணுல மட்டும் எப்படி மாட்டினார்?

இருங்க இன்னும் மீதிய படிச்சிட்டு வருகிறேன்.

04 May 2009 08:39
//

இவரு எப்படி யாருகிட்டயும் மாட்டலைன்னு எனக்கும் ஆச்சரியம் தான்...ஒரு வேளை அன்புமணியெல்லாம் ஒரு ஆளான்னு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்...

அது சரி(18185106603874041862) said...

ராஜ நடராஜன் said...
//
இங்கே சில விசயங்கள் விட்டுப் போகின்றன.கலைஞருக்கும் ஏனையவர்களுக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் கலைஞர் மற்றவர்களை விட தமிழையும் தமிழ் உணர்வையும் மதிக்கிறவர் என்ற பொதுப்புத்தியும் அது தவறாகப் போகின்ற கோபத்தின் வெளிப்பாடுகள்.
//

கலைஞர் மீதான கோபத்தையும், அதற்கான காரணங்களையும் நான் மறுக்கவில்லை அண்ணா...ஆனால், ஜெயலலிதா மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை...அவர் சொல்கிற எந்த வார்த்தையும் டாய்லட் பேப்பரில் எழுதும் அளவு கூட மதிப்பு வாய்ந்தது அல்ல...

//
மேலும் கலைஞர் தமிழக முதல்வர் என்ற பீடத்தில் அமர்ந்திருப்பதாலும், பழுத்த அரசியல்வாதி,காங்கிரஸை தனது இழுப்புக்கு கொண்டு வந்திருக்க முடியும் என்ற கணிப்புமே அவர்மீது கோபத்தை வரவழைக்கிறது.
//

அதே கோபம் எனக்கும் உண்டு...அதற்காக ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று என்னால் கேட்க முடியாது!

//
நண்பர் ஒருவருடன் சாட்டிங்ல இருக்கும்போது தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்டேன்.அப்படின்னா என்ன என்று கேட்டார்.அப்படி அன்புமணி யார் என்று கேட்கவும் நிறைய ஆட்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
//

அன்புமணியை யாருக்கு தெரியும் என்பது இங்கு பிரச்சினை இல்லையே...ஏதோ இலங்கை தமிழர்களுக்காக போராடுவது போல அந்த கட்சி படம் காட்டிக்கொண்டிருக்கிறது...ஆனால் அன்புமணியோ வாயைக்கூட திறப்பதில்லை!

//
கம்யூனிஸ்ட்டுகளுக்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது இந்திய மொத்தப் பங்கீடு 10% என்பது.எனவே அதன் காரணம் கொண்டும் கம்யூனிஸ்ட்டுகளை பெரிதுபடுத்துவதில்லை.
//

பிரச்சினை அதுவல்ல...கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சுமார் 70 எம்.பிக்கள் உண்டு..ஆனால், என்றாவது ஒரு நாள் பார்லிமெண்டில் கம்யூனிஸ்டுகள் இந்த பிரச்சினையை எழுப்பி இருப்பார்களா??

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
இதுவரை கலைஞர் மீதான கோபம் அம்மையாருக்கு சாதகமாக அமைகிறது.அதனுடன் தமிழ் ஈழம் அமைப்பேன் குரல் அரசியல் கணக்குகளை ஒட்டி எழுப்புகிறாரா அல்லது மனம் மாறி விட்டாரா என்பது அவரது மனச்சாட்சிக்கே வெளிச்சம்.
//

மனம் மாறிவிட்டாரா?? பன்னிக்குட்டி பறந்து போனாலும் போகும், ஆனால் சில மனங்கள் மாறுவதில்லை!

அது சரி(18185106603874041862) said...

//
Ramesh said...
nice ;-)
04 May 2009 07:57
//

நன்றி ரமேஷ்...