முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.
இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்..பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று, பாகம் நான்கு
முன்கதைச் சுருக்கம்:
எடின்பரோவில் தனது கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்ட்ராண்டில் இருந்த மாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொல்லை செய்கிறான்..வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸ் செல்லும் விக்கிரமனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது..
இருபத்தொரு வயதான திருக்குமரன் தனது முதல் வேலையில் சேர அலுவலகம் செல்கிறான்..அங்கு அவனது மேலதிகாரி குருமூர்த்தி அவனுக்கு வைஜெயந்தியை அறிமுகப்படுத்தி வைக்கிறார்...வைஜெயந்தியை பார்க்கும் திருக்குமரன் திகைப்புடன் நிற்கிறான்.
இனி.....
அலை பாயுதே....
வாழ்க்கையில் ஒரு கணமேனும் காதலிக்காதவர்கள் இல்லை..ஆனால் காதல் எப்பொழுது வருகிறது...ஏன் வருகிறது..யார் மீது வருகிறது..எதற்காக எதை எதிர்பார்த்து வருகிறது...சங்க காலத்திலிருந்து இந்த காலம் வரை யாரும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை...மல்லிகை மலர்வதும் மனங்கள் திறப்பதும் எதிர்பாராத தருணத்தில் எப்படியோ நடக்கிறது...யாயும் யாயும் யாராவீரோ என்று இருந்தவர்கள் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் கலந்து விடுவதும் நடந்து விடுகிறது....
அவள் கண்கள் இப்படித்தான் இருக்கும்...இப்படித்தான் சிரிப்பாள்..பேசும் போது முகம் இப்படியெல்லாம் மாறும்...யாருக்கும் தெரியாமல் மனம் அதன் போக்கில் கட்டி அமைக்கும் பிம்பங்கள்...
அத்தனையும் பிம்பம்...பிம்பத்தை எங்கு சென்று தேடுவது என்ற கையறு நிலையில் என்றாவது ஒரு நாள் அவளை எதிர்பாராமல் சந்திக்க...அதே மனம் ஆனந்த கூச்சல் இடுகிறது...இவளா இவளா என்று தேடி எந்த இடத்திலும் திறக்காத கதவுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஹோவென திறந்து விடுகிறது...
வைஜெயந்தியை பார்த்த திருக்குமரனின் மனக்கதவுகள் தடேரென்று திறந்து கொண்டன...இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறேனா? இல்லையே...எத்தனையோ முறை ஏந்திய முகமாயிற்றே இது..எத்தனை முறை இந்த விரல்களை வருடியிருப்பேன்..கரம் கோர்த்த உணர்வு இப்பொழுதும் இருக்கிறதே..இந்த புன்னகை...ஜென்ம ஜென்மமாக வருவதல்லவா...எப்படி பிரிந்தேன்...ஏன் பிரிந்தேன்..எந்த ஜென்மத்தில்...
கள் குடித்த குரங்குக்கும் காதல் கொண்ட மனதிற்கும் காலங்களும் சூழ்நிலைகளும் தெரிவதில்லை...ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...குருமூர்த்திக்கு காத்திருக்க காலம் இல்லை..
"என்ன குமரன் ரொம்ப ஸ்டன் ஆகி நிக்கிறீங்க...இவங்களை முன்னாடியே தெரியுமா..."
வேகமாய் ஓடி வந்து கீழே விழுந்த குழந்தை போல மனம் திடீரென்று மட்டுப்பட்டது...யார் இவங்க...ரொம்ப நாள் பார்த்த மாதிரி இருக்கு...ஆனா இவங்க யாருன்னே எனக்கு தெரியாதே..இது என்ன கனவா.....
"ம்ம்ம்..ஆமா ஸார்...இல்ல சார்..."
"என்ன இது....தெரியுமா தெரியாதா...வைஜெயந்தி....இவர் உங்களுக்கு தெரிஞ்சவரா..."
திருக்குமரன் திரு திரு குமரன் ஆக விழிப்பது பார்த்து வைஜெயந்திக்கு சிரிப்பாக இருந்தது...யார் இவன்...இது வரை பெண்களையே பார்க்காத பிறவி போல்...
"இல்ல ஸார்...நானும் இப்ப தான் பார்க்கிறேன்..."
குருமூர்த்தி சலித்துக் கொண்டார்...
"சரி சரி, அவரு உங்கள எங்கயோ பார்த்திருப்பார் போலருக்கு...மிஸ்டர் குமரன், இவங்க வைஜெயந்தி...அக்கவுண்ட்ஸ்...வைஜெயந்தி...இவர் திருக்குமரன்...புதுசா ஜாய்ன் பண்றாரு...இவர கூட்டிப் போயி டாக்குமெண்ட்ஸ், பேங்க் அக்கவுண்ட் டீட்டெய்ல்ஸ் எல்லாம் வாங்கிடுங்க..முடிச்சிட்டு நாராயணன் கிட்ட அனுப்புங்க...அவரு ஹெச்.ஆர். விஷயத்தை முடிச்சிருவாரு..."
"ஓக்கே ஸார்...வாங்க குமரன்..." வைஜெயந்தி திருக்குமரனை அழைத்து கொண்டு வெளியேற முனைந்தாள்...
"வைஜெயந்தி...ஒரு நிமிஷம்...ஸாட்டர் டே அபர்ணாவுக்கு பர்த்டே...காலைல கோயிலுக்கு போய்ட்டு ஈவ்னிங் சின்னதா ஒரு பார்ட்டி...நீங்களும் சுபாஷினியும் வந்தா தான் அவ பர்த்டேவே கொண்டாடுவேன்னு ஒரே அடம் பிடிக்கிறா....கொஞ்சம் சிரமம் பார்க்காம வரமுடியுமா? நானே உங்களையும் சுபாவையும் பிக்கப் பண்ணிட்டு ட்ராப் பண்ணிர்றேன்..."
"ஓ...கண்டிப்பா வந்துர்றேன் ஸார்...நானும் அபர்ணாவ பார்த்து ரொம்ப நாளாச்சு..சுபாவும் ரொம்ப சந்தோஷப்படுவா...."
"தேங்க்ஸ் வைஜெயந்தி.."
"நோ மென்ஷன் ஸார்...அப்ப... நான் இவரை கூட்டிக்கிட்டு போயி பார்மாலிட்டியெல்லாம் முடிச்சிட்டு அனுப்பி வைக்கிறேன் ஸார்..."
சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியேறும் வைஜெயந்தியையும், பள்ளிக்கூட சிறுவன் போல் அவள் பின்னாலேயே செல்லும் திருக்குமரனையும் பார்த்தவாறே குருமூர்த்தியின் மனம் உழல ஆரம்பித்தது...
வைஜெயந்தியின் பின்னால் செல்வது திருக்குமரன் மட்டும் தானா...என் மனமும் போகிறதே...உன்னை பார்த்து திகைப்பது அவன் மட்டுமல்ல... நானும் தான் வைஜெயந்தி...நான் உன்னை மனதுக்குள் பூஜிப்பது உனக்கு தெரியுமா...ஓவ்வொரு நாளும் உன் நினைவுகளுடன் தான் விடிகிறது...ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளுடன் தான் முடிகிறது...எப்பொழுதும் உன்னுடன் இருக்கத் துடிப்பது என் மகள் மட்டுமல்ல...அவளை விட அதிகம் துடிப்பது நான் தான்...
நாற்பது வயதாகி விட்டால் ஆண் புத்தி நாய் புத்தி ஆகிவிடும்....உங்களுக்கு நாற்பத்தி ரெண்டே ஆகிவிட்டது..நீ சொல்லலாம்...இல்லை வைஜெயந்தி....பதினெட்டு வயதில் தான் காதல் வரும் என்று யார் சொன்னார்கள்....நாற்பது வயதில் எனக்கு முப்பத்தி ரெண்டு வயதான உன் மீது காதல் வரக்கூடாது என்று விதி இருக்கிறதா...
குருமூர்த்தி...இது என்ன அயோக்கியத்தனமான சிந்தனை...இன்னொரு மனம் கடிந்து கொண்டது...
இல்லை இது அயோக்கியத் தனம் இல்லை...என் மனைவி இருந்த வரை என் மனதில் வேறு யாருக்கும் இடம் இல்லையே...அவள் இல்லாத வெற்றிடத்தில் அல்லவா இப்பொழுது அலை பாய்கிறது...எத்தனை கோவில்கள்...எத்தனை டாக்டர்கள்...அவளை மட்டும் யாராவது கேன்சரில் இருந்து காப்பாற்றி இருந்தால்...கோடி கோடியாய் சொத்திருக்கிறது...ஆனாலும் என் மகளுக்கு ஒரு தாய் இல்லை...நான் மனம் விட்டு பேச ஒரு ஜீவன் இல்லை...அவளுக்கு ஒரு தாயை கொடுக்க வேண்டியது என் கடமையல்லவா...வைஜெயந்தியை விட நல்ல தாய் யார் இருக்க முடியும்...அவள் மகளுக்கும் என்னால் நல்ல தந்தையாக இருக்க முடியுமே..
இதை விரைவில்...விரைவில் என்ன இந்த ஸாட்டர் டேவே அவளிடம் சொல்லி விட வேண்டியது தான்...அதற்காக தானே வரச் சொல்லியிருக்கிறேன்...ப்ளீஸ், நல்ல பதில் சொல் வைஜெயந்தி...
எனக்கு நீ வேண்டும்...நீ மட்டுமே வேண்டும்...
குருமூர்த்தி சுய சிந்தனையின்றி தான் இதுவரை கிறுக்கிக் கொண்டிருந்த தன் கம்பெனியின் லெட்டர் பேடை பார்த்தார்...அதில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் பல முறை அழுத்தமாக எழுதப்பட்டிருந்தது...
வைஜெயந்தி....
=========போர் இனி ஆரம்பம்===========
39 comments:
Me the first.. :)
இதைதான் எதிர்பார்த்தேன்.. அதாவது கதையை.. இந்த முறை வேதாளம் கதையை மட்டும் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி..
அதுக்காக கொஞ்சமும் விக்ரம் - வேதாளம் பேச்சுக்கள், அரசியல் நையாண்டி இல்லாம எழுதினதில் கொஞ்சம் வருத்தமே..
//அவள் கண்கள் இப்படித்தான் இருக்கும்...இப்படித்தான் சிரிப்பாள்..பேசும் போது முகம் இப்படியெல்லாம் மாறும்...யாருக்கும் தெரியாமல் மனம் அதன் போக்கில் கட்டி அமைக்கும் பிம்பங்கள்...
அத்தனையும் பிம்பம்...பிம்பத்தை எங்கு சென்று தேடுவது என்ற கையறு நிலையில் என்றாவது ஒரு நாள் அவளை எதிர்பாராமல் சந்திக்க...அதே மனம் ஆனந்த கூச்சல் இடுகிறது...இவளா இவளா என்று தேடி எந்த இடத்திலும் திறக்காத கதவுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஹோவென திறந்து விடுகிறது...//
ஒவ்வொரு முறையும் உங்கள் எழுத்து நடை பிரம்மிக்க வைக்கிறது அதுசரி அண்ணா..
//போர் இனி ஆரம்பம்//
சீக்கிரம் போரை ஆரம்பிங்க..
//
Saravana Kumar MSK said...
Me the first.. :)
//
ஆமா, நீங்க தானுங்கோ ஃபர்ஸ்ட்டு :))
//
Saravana Kumar MSK said...
இதைதான் எதிர்பார்த்தேன்.. அதாவது கதையை.. இந்த முறை வேதாளம் கதையை மட்டும் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி..
//
ஆமா, நீங்க போட்ட ஒரு கமெண்ட்ட நான் நேத்தி தான் பார்த்தேன்...உங்களுக்கு என்ன, ஈஸியா சொல்லிட்டீங்க...ஆனா அந்த வேதாளத்து வாயை மூட்றது அவ்வளவு ஈஸி இல்ல...என் கஷ்டம் எனக்கு :))
//
Saravana Kumar MSK said...
அதுக்காக கொஞ்சமும் விக்ரம் - வேதாளம் பேச்சுக்கள், அரசியல் நையாண்டி இல்லாம எழுதினதில் கொஞ்சம் வருத்தமே..
//
ரொம்ப கவலைப்படாதீங்க...வேதாளம் ஒண்ணும் சும்மா இருக்காது...சீக்கிரமா வந்துரும்!
பூந்து வெளாடுராங்கப்பா,ஆமா ஏன் கதை மட்டும் இருக்கு, ராஜநடராஜன் இன்னும் வேதாளம்/விக்கிரமாதித்தனை விடவில்லையா? இதன் மறுகேள்வி நமீதா கூட இருந்தால் கதை மட்டும்தான் சொல்லமுடியுமாகவும் இருக்கக்க்கூடும். ஆனால் அந்தக்கேள்வியை நான் கேட்க எண்ணவில்லை என்று சொல்லமாட்டேன்
நான் தான் முதல்ன்னு சொல்லலாம்னு பார்த்தா அதுகுள்ள இத்தன பேரா??
உன்னை பார்த்த பின்பு தான் நான் நானாக இல்லையே..
இந்த பாட்டு தான் நினைவுக்கு வருது
கதைய சொல்லுவீங்கன்னு பார்த்தா போன பாகத்துல விட இந்த பாகம் சுவாரசியம் குறைவு தான் அண்ணே..
உங்க டச்சு இதுல இல்லியே ??
ஏன் ஏன்னா ஆச்சு??
ரொம்ப எதிர் பார்த்தேன்..
கொஞ்சமா ஏமாத்திட்டீங்க...
அட என்னய்யா இது? ஒரே சஸ்பென்சா இருக்கு!!! சீக்கிரம் சொல்லி முடிங்கப்பா கதையை ;
//
குடுகுடுப்பை said...
பூந்து வெளாடுராங்கப்பா,ஆமா ஏன் கதை மட்டும் இருக்கு, ராஜநடராஜன் இன்னும் வேதாளம்/விக்கிரமாதித்தனை விடவில்லையா? இதன் மறுகேள்வி நமீதா கூட இருந்தால் கதை மட்டும்தான் சொல்லமுடியுமாகவும் இருக்கக்க்கூடும். ஆனால் அந்தக்கேள்வியை நான் கேட்க எண்ணவில்லை என்று சொல்லமாட்டேன்
//
ஆமாங்க...வேதாளம் ஒரு குட்டி ட்ரிப் போயிருக்கு...கிறிஸ்துமஸ் ஹாலிடேஸ்...அது போன என்ன...நமீதா கூட இருக்குல்ல...
கேள்வியை கேட்பது நீங்கள் என்று நான் சொல்லவில்லை..ஆனால் நீங்களாகவும் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.
//
உருப்புடாதது_அணிமா said...
நான் தான் முதல்ன்னு சொல்லலாம்னு பார்த்தா அதுகுள்ள இத்தன பேரா??
///
நீங்க கொஞ்சம் லேட்டு...ஆனா, இது தான் என்னோட மொதல் கமெண்டுன்னு நீங்க சொல்லலாம் :))
//
உருப்புடாதது_அணிமா said...
உன்னை பார்த்த பின்பு தான் நான் நானாக இல்லையே..
இந்த பாட்டு தான் நினைவுக்கு வருது
//
ஏன், நீங்க உருப்புட்ட அணிமா ஆயிட்டீங்களா?
//
உருப்புடாதது_அணிமா said...
கதைய சொல்லுவீங்கன்னு பார்த்தா போன பாகத்துல விட இந்த பாகம் சுவாரசியம் குறைவு தான் அண்ணே..
//
ஏய்...கதையே இதான்ப்பா...நீங்க எந்த கதைய கேக்கறீங்க :))
சுவாரஸ்யம் குறைவுன்னா சொல்றீங்க...இந்த பாகம் குருமூர்த்தியோட பார்வையில அவர் என்ன நினைக்கிறார்ன்னு எழுதுனது....இனிமே அந்தாளை எதுவும் நெனைக்கப்படாதுன்னு சொல்லிர்றேன்...:0))
//
உருப்புடாதது_அணிமா said...
உங்க டச்சு இதுல இல்லியே ??
//
ஐ! அது என்ன எனக்கே தெரியாம என்னோட டச்சு? சொல்லவே இல்ல...
//
உருப்புடாதது_அணிமா said...
ஏன் ஏன்னா ஆச்சு??
ரொம்ப எதிர் பார்த்தேன்..
கொஞ்சமா ஏமாத்திட்டீங்க...
//
கொஞ்சமான்னா எவ்ளோ? ஒரு கால் கிலோ இருக்குமா?? அடுத்த தடவை நீங்க கடைக்கு வரும்போது உங்களுக்கு மட்டும் சேத்து போட்ருவோம் :0))
//
மிஸஸ்.டவுட் said...
அட என்னய்யா இது? ஒரே சஸ்பென்சா இருக்கு!!! சீக்கிரம் சொல்லி முடிங்கப்பா கதையை ;
//
வாங்க மிஸஸ் டவுட் (பேரு ரொம்ப நல்லாருக்கே....பாவங்க உங்க மிஸ்டர்!)
இது தான் உங்க முதல் வருகை போல...வருகைக்கு நன்றி...கவலைப்படாதீங்க...கதைய சீக்கிரம் சொல்லி முடிச்சிருவோம்...
என்னது...எவ்ளோ சீக்கிரமாவா...அப்படில்லாம் கேக்கப்படாது..
:-)))...
செம்ம வெயிட்ட்டு மச்சி!!!
அது சரி என்னோட ஃப்ரெண்டு...அது சரி என்னோட ஃப்ரெண்டு...அது சரி என்னோட ஃப்ரெண்டு...
சரிதானா நண்பரே!!!
எங்க மிஸ்டர் எதுக்குப் பாவம்? அவருக்கென்ன ? என் பதிவுகளைப் படிக்கச் சொல்லி நான் அவரை சங்கடப் படுத்துவதே இல்லையே எப்போதும்? பிறகென்ன அவர் பாவம்!!!
//
விஜய் ஆனந்த் said...
:-)))...
செம்ம வெயிட்ட்டு மச்சி!!!
அது சரி என்னோட ஃப்ரெண்டு...அது சரி என்னோட ஃப்ரெண்டு...அது சரி என்னோட ஃப்ரெண்டு...
சரிதானா நண்பரே!!!
//
எனக்கு என்ன ஆச்சின்னே தெரியலை..இது வரை சில பதிவுகள் தான் புரியாது...வர வர பின்னூட்டமும் (அதுவும் என் பதிவுக்கே) புரிய மாட்டேங்குது...
நீங்க ஃப்ரண்டு தான்...ஆனா திடீர்னு அத ஏன் இத்தனை தடவை சொல்றீங்கன்னு ஒண்ணுமே புரியலை போங்க!
//
மிஸஸ்.டவுட் said...
எங்க மிஸ்டர் எதுக்குப் பாவம்? அவருக்கென்ன ? என் பதிவுகளைப் படிக்கச் சொல்லி நான் அவரை சங்கடப் படுத்துவதே இல்லையே எப்போதும்? பிறகென்ன அவர் பாவம்!!!
//
உங்க பதிவை இப்பத் தான் படிச்சேன்...க்ரேட் எஸ்கேப்புன்னு சொல்லலாம்னு நெனைச்சேன்...முடில...நீங்க நல்லா தான் எழுதுறீங்க...ப்ளீஸ் கண்டினியூ!
உங்க மிஸ்டரை எல்லாரும் மிஸ்டர் டவுட்னு தானே கூப்பிடுவாங்க...அதனால தான் பாவம்னு சொன்னேன்...
மிஸ்டர் டவுட்னு கூப்ட்டா என்ன பாவம் ? தந்தை பெரியாரே சொல்லி இருக்காரே ஏன்...எதற்கு...எப்படின்னு கேட்கணும்னு ? அப்படிக் கேட்கறவங்க எல்லாருமே மிஸ்டர் அண்ட் மிசஸ்.டவுட்ஸ் தானே? யு டூ மிஸ்டர்.அதுசரி ?! என்ன நான் சொல்றது சரி தானே?
அப்புறம் என் பதிவைப் படித்ததற்கும்...மிஸ்டர் டவுட்னு கூப்ட்டா என்ன பாவம் ? தந்தை பெரியாரே சொல்லி இருக்காரே ஏன்...எதற்கு...எப்படின்னு கேட்கணும்னு ? அப்படிக் கேட்கறவங்க எல்லாருமே மிஸ்டர் அண்ட் மிசஸ்.டவுட்ஸ் தானே? யு டூ மிஸ்டர்.அதுசரி ?! என்ன நான் சொல்றது சரி தானே?
அப்புறம் என் பதிவைப் படித்ததற்கும்...கருத்து சொன்னதுக்கும் நன்றி...மீண்டும்...மீண்டும் வந்து உங்கள் மிஸ்டர் டவுட்னு கூப்ட்டா என்ன பாவம் ? தந்தை பெரியாரே சொல்லி இருக்காரே ஏன்...எதற்கு...எப்படின்னு கேட்கணும்னு ? அப்படிக் கேட்கறவங்க எல்லாருமே மிஸ்டர் அண்ட் மிசஸ்.டவுட்ஸ் தானே? யு டூ மிஸ்டர்.அதுசரி ?! என்ன நான் சொல்றது சரி தானே?
அப்புறம் என் பதிவைப் படித்ததற்கும்...கருத்து சொன்னதுக்கும் நன்றி...மீண்டும்...மீண்டும் வந்து உங்கள் கருத்து சேவையைத் தொடர்வீர்களாக!!!
:-)))...
//அண்ணன் அணிமா சொன்னது
உங்க டச்சு இதுல இல்லியே ??//
எனக்கும் அதே பீலிங் தான்.
//
மிஸஸ்.டவுட் said...
மிஸ்டர் டவுட்னு கூப்ட்டா என்ன பாவம் ? தந்தை பெரியாரே சொல்லி இருக்காரே ஏன்...எதற்கு...எப்படின்னு கேட்கணும்னு ? அப்படிக் கேட்கறவங்க எல்லாருமே மிஸ்டர் அண்ட் மிசஸ்.டவுட்ஸ் தானே? யு டூ மிஸ்டர்.அதுசரி ?! என்ன நான் சொல்றது சரி தானே?
அப்புறம் என் பதிவைப் படித்ததற்கும்...மிஸ்டர் டவுட்னு கூப்ட்டா என்ன பாவம் ? தந்தை பெரியாரே சொல்லி இருக்காரே ஏன்...எதற்கு...எப்படின்னு கேட்கணும்னு ? அப்படிக் கேட்கறவங்க எல்லாருமே மிஸ்டர் அண்ட் மிசஸ்.டவுட்ஸ் தானே? யு டூ மிஸ்டர்.அதுசரி ?! என்ன நான் சொல்றது சரி தானே?
அப்புறம் என் பதிவைப் படித்ததற்கும்...கருத்து சொன்னதுக்கும் நன்றி...மீண்டும்...மீண்டும் வந்து உங்கள் மிஸ்டர் டவுட்னு கூப்ட்டா என்ன பாவம் ? தந்தை பெரியாரே சொல்லி இருக்காரே ஏன்...எதற்கு...எப்படின்னு கேட்கணும்னு ? அப்படிக் கேட்கறவங்க எல்லாருமே மிஸ்டர் அண்ட் மிசஸ்.டவுட்ஸ் தானே? யு டூ மிஸ்டர்.அதுசரி ?! என்ன நான் சொல்றது சரி தானே?
அப்புறம் என் பதிவைப் படித்ததற்கும்...கருத்து சொன்னதுக்கும் நன்றி...மீண்டும்...மீண்டும் வந்து உங்கள் கருத்து சேவையைத் தொடர்வீர்களாக!!!
//
ஐயோ...என்னங்க இது...ஒரு தடவை டைப் பண்ணி மூணு தடவை பேஸ்ட் பண்ணிட்டீங்களா? ரொம்ப குழப்பமா இருக்கு!
கருத்து சேவை தான? தொடர்ந்து செய்துட்டா போச்சி!
//
விஜய் ஆனந்த் said...
:-)))...
//
ஐயா,
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? மொதல்ல போட்ட கமெண்ட்டுக்கு என்ன அர்த்தம்?
சொந்த பதிவிலேயே மண்டை காய்றது நான் ஒருத்தனா தான் இருப்பேன் :0))
//
pathivu said...
//அண்ணன் அணிமா சொன்னது
உங்க டச்சு இதுல இல்லியே ??//
எனக்கும் அதே பீலிங் தான்.
//
சந்திரமுகில வடிவேலு சொன்னது தான் ஞாபகம் வருது....
"என்னா பீலிங்சு...."
கதைய ஆரம்பிச்சு மூணு மாசம் ஆச்சு...இன்னும் கதையே தொடங்கலியேன்னு நானு ஃபீலிங்சு விட்டதுனால கும்மி அடிக்கிறத கொறச்சிட்டேன்...
இனிமே கதை இதைவிட ரொம்ப சீரியஸா போகும்....:0))
// அது சரி said...
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? மொதல்ல போட்ட கமெண்ட்டுக்கு என்ன அர்த்தம்? //
கமெண்ட்டு போட்டா அனுபவிக்கணும்....ஆராயக்கூடாது...
:-)))...
ரொம்ப அழகான எழுத்து நடை. ஒவ்வொரு முறை இந்த தொடர் படிக்கும் போதும் எனக்கு நீங்கள் ரொம்ப குறைவாக எழுதி இருப்பது போல தோன்றும்(சரியான அளவு தான் எழுதி இருக்கிறீர்கள்) :)
//
கயல்விழி said...
ரொம்ப அழகான எழுத்து நடை. ஒவ்வொரு முறை இந்த தொடர் படிக்கும் போதும் எனக்கு நீங்கள் ரொம்ப குறைவாக எழுதி இருப்பது போல தோன்றும்(சரியான அளவு தான் எழுதி இருக்கிறீர்கள்) :)
30 December 2008 21:35
//
வாங்க கயல்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அப்பப்ப காணாம போயிடுறீங்க??
இனிமே காணாமப் போறவங்க எல்லாம் ஒரு பத்து கமெண்ட்டாவது போடணும்னு சட்டம் கொண்டு வரணும் :)))
அளவெல்லாம் இல்லீங்க....ஏண்டா மொழ நீளம் எழுதறன்னு பல பேரு கும்முறாங்க...ஆனா ஒரு தடவை க்ளாஸை ஃபில் பண்ணா அது முடியற வரை எழுதறது....எனக்கு தெரிஞ்ச அளவு அவ்வளவு தான் :0))
//அளவெல்லாம் இல்லீங்க....ஏண்டா மொழ நீளம் எழுதறன்னு பல பேரு கும்முறாங்க.//
யார் அப்படி சொன்னது? ஏற்கெனெவே தொடர் ரொம்ப சின்னதாக இருக்கிறது என்று குறைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
கலக்குங்க தல... இரசித்து படித்தேன்...
//
கயல்விழி said...
//அளவெல்லாம் இல்லீங்க....ஏண்டா மொழ நீளம் எழுதறன்னு பல பேரு கும்முறாங்க.//
யார் அப்படி சொன்னது? ஏற்கெனெவே தொடர் ரொம்ப சின்னதாக இருக்கிறது என்று குறைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
31 December 2008 00:23
//
ம்ம்ம்ம்....அப்ப அடுத்த பதிவை வழக்கம் போல பெரிசா எழுதலாம்கிறீங்க...ரெண்டு கிளாஸ் ஃபில்லப் பண்ணிக்கிட்டு உக்கார வேண்டியது தான் :0))
//
Natty said...
கலக்குங்க தல... இரசித்து படித்தேன்...
//
வாங்க நட்டி....உங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!!
Post a Comment