Saturday, 29 November 2008

மும்பை தீவிரவாதம்: கருணாநிதி, காடுவெட்டி குருவும்,அப்சல்குருவும்!

சைனாவின் முக்கிய ஏற்றுமதி குறைந்த விலையில் செய்யப்படும் பொருட்கள்..ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி தேயிலை..பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதி ஃஃபினான்ஷியல் ஸெர்விஸஸ்...இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி ஐ.டி. செர்வீஸஸ்...ஆனால் சில நாடுகளின் முக்கிய ஏற்றுமதி தீவிரவாதம் அதனால் ஏற்படும் ஹோல்சேல் மர்டர்!


இந்த கடைசி கேட்டகரியில் வருவது பாகிஸ்தான்..மதவாதத்தையும், தீவிர வாதத்தையும் மட்டுமே ஏற்றுமதி செய்யும் இந்த பாழாய் போன, மனித நாகரீகத்தின் புற்று நோயான இந்த தேசம் அனைத்துலக தீவிரவாதிகளின் தாய்நாடு என்பதை கிட்டத்தட்ட இந்த உலகமே மிகச்சமீப காலமாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது...


மும்பையில் சில காட்டுமிராண்டி மிருகங்கள், மனித உருவம் தரித்த ஜந்துக்கள் எந்த காரணமும் இன்றி அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும் இந்த தீவிரவாத தேசத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று எனக்குத் தெரியாது... இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை...

ஆனால், சம்பந்தம் இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!

ஏனெனில் இந்த தேசத்தின் பின்ணனி அப்படி! ஆஃப்கனில் அமெரிக்க போர் ஆரம்பித்த காலத்திலிருந்து தீவிரவாதிகளின் மயிரைக் கூட புடுங்காமல், அமெரிக்க பணத்தில் கொழுத்த இந்த தேசம், ஆஃப்கனில் தலிபான் தறுதலைகள் ஓரளவு ஒழிக்கப்பட்ட பின், அடுத்து தனது கும்பி கழுவ என்ன செய்வது என்று யோசிப்பதாக தெரிகிறது.. இவர்களிடம் இருக்கும் ஒரே ஏற்றுமதி சரக்கு தீவிர வாதம்...கொன்று குவிப்பது... தங்களிடம் இன்னமும் சரக்கு இருக்கிறது என்று காட்ட இந்த புற்று நோய் தேசமே இதை செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

இதில் அந்த அரசுக்கும், ஜனாதிபதி, பிரதமருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட, அந்த அரசு எந்திரங்கள் பயன்படுத்த்ப்பட்டிருக்க கூடும்.. தலிபான் காட்டுமிராண்டிகளின் அதிகாரபூர்வ முதன்மை வேலையாளான ஐ.எஸ்.ஐ யின் பங்கு மிகவும் கேள்விக்குறியது...


அப்பிடியெல்லாம் இல்ல, பாகிஸ்தான் ஒரு புனித தேசம் என்பவர்கள் சில வாரங்களுக்கு முன் சைனா, சவுதி அரேபியா, வேர்ல்ட் பேங்க் என்று கையேந்தியதை ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது...அப்படியே உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பெரும்பான்மையான ஓநாய்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக சொல்வதையும் நினைவுப்படுத்துவது நல்லது!

ஒட்டு மொத்த‌ உல‌க‌த்தையும் ஆஃப்க‌ன் போன்று க‌ற்கால‌த்திற்கு கொண்டு செல்வ‌தே இவ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருக்க‌க் கூடும். அதே ச‌ம‌ய‌ம் இவ‌ர்க‌ள் அணிவ‌து நைக் ஷூஸ், Gap டீ ஷ‌ர்ட்! குடிப்ப‌து ஸ்காட்ச் விஸ்கி!

இந்த‌ வெறி பிடித்த‌ மிருக‌ங்க‌ளை ஒட்டு மொத்த‌மாக‌ அழிப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்றாலும், இந்தியாவை ம‌ட்டுமே அடிக்க‌டி தாக்குவ‌து ஏன்? மும்பை குண்டு வெடிப்பு, அக்ஷ‌ர்தாம் தாக்குத‌ல், பெங்க‌ளுரில் தாக்குத‌ல்..டெல்லி மார்க்கெட்டில் தொட‌ர் குண்டு வெடிப்பு...இப்பொழுது மீண்டும் மும்பையில் கொலை வெறி!

இவ‌ர்க‌ளுக்கு தைரிய‌ம் த‌ருவ‌து அவ‌ர்க‌ள் அடித்திருக்கும் க‌ஞ்சா, அபின் ம‌ட்டும் அல்ல‌, இன்னொரு முக்கிய‌ கார‌ண‌மும் உண்டு...

அந்த‌ முக்கிய‌ கார‌ண‌த்திற்கு ப‌ல‌ பெய‌ர்க‌ள்...சில‌ உதார‌ண‌ம்...கையாலாகாத‌, அறுப‌து வ‌ய‌திற்கு மேல் சினிமா க‌தாநாய‌க‌ன் ஆக‌ முய‌ற்சிக்கும் சிவ‌ராஜ் பாட்டீல்...பார்லிமெண்டை தாக்கி, சில‌ பாதுகாவ‌ல‌ர்க‌ளை கொன்ற‌ அப்ச‌ல் குருவை தூக்கிலிட்டால் சிறுபான்மையின‌ரின் ம‌த‌ உண‌ர்வுக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் என்று ஒட்டு மொத்த‌மாக‌ ஒரு ச‌மூக‌த்தையே தீவிர‌வாதியுட‌ன் இணைக்கும் முட்டாள்க‌ளான‌ காங்கிர‌ஸ்...அர‌சிய‌ல் என்றால் எவ‌ன் காலையும் ந‌க்குவேன் என்று சொல்லும் க‌ருணாநிதி....

மும்பை பிர‌ச்சினையில் த‌மிழ்நாட்டில் ஒரு முக்கிய‌ நிக‌ழ்வு பின்த‌ள்ள‌ப்ப‌ட்டு விட்ட‌து.. தேசிய‌ பாதுகாப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌ காடுவெட்டு குரு என்ற‌ அன்னை தெர‌சாவின் ம‌று பிற‌வி மீதான‌ வ‌ழ‌க்கு வாப‌ஸ் வாங்க‌ப்ப‌ட்டு அவ‌ர் விடுத‌லை செய்ய‌ப்பட்டு இருக்கிறார்...

அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது முன் இருந்த‌ ஜெ. அர‌சு அல்ல‌. இதே க‌ருணாநிதி அர‌சு தான்.. இத‌ற்கு க‌ருணாநிதி அர‌சு சொல்லிய‌ கார‌ண‌ம்...

"மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ரை கொல்லும்ப‌டி தூண்டினார்...தொகுதி எம்.எல்.ஏ வை கொல்வேன் என்று பேசினார்... ம‌த்திய‌ ம‌ந்திரி ராஜா தொகுதிக்குள் வ‌ந்தால் உயிருட‌ன் திரும்பி போக‌ முடியாது என்று பேசினார்"

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ "அன்னை தெர‌சா" காடுவெட்டி குரு தொட‌ர்ந்த‌ வ‌ழ‌க்கு சென்ற‌ வார‌ம் ஹை கோர்ட்டில் விசார‌ணைக்கு வ‌ந்த‌து...காடுவெட்டிக‌ளால் தாங்க‌ள் பேசிய‌தை ம‌றுக்க‌ முடிய‌வில்லை...அவ‌ரின் ஒரே வாத‌ம், "அதை நான் பொது ம‌க்க‌ளிட‌ம் பேச‌வில்லை...ஆக‌வே க‌ல‌வ‌ர‌த்தை தூண்டினேன் என்று குற்ற‌ம் சாட்ட‌ முடியாது"...ஆக‌, அவ‌ர் தான் பேசிய‌தை அவ‌ராலே ம‌றுக்க‌ முடிய‌வில்லை!

ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம்....தொண்ணூற்றேழு வ‌ய‌து கிழ‌வ‌ன் ஒரு இர‌வில் ப‌தினேழு வ‌ய‌து கும‌ரியாக‌ (ஆமாம் கிழ‌வ‌ன் கும‌ர‌ன் ஆவ‌து கூட‌ இல்லை, கும‌ரியாக‌வே ஆகி விட்டான்!) ஆவ‌து போல், ஓரே வார‌த்தில் க‌ருணாநிதி அர‌சு வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்கி விட்ட‌து!

இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? "அன்னை தெர‌சா" காடுவெட்டியார் த‌ன்னை மிக‌ கேவ‌லமாக‌ பேசிய‌தாக‌ ஒப்பாரி வைத்த‌ க‌ருணாநிதி இன்று ம‌ன‌ம் மாற‌க் கார‌ண‌ம் என்ன‌? காடுவெட்டியார் நிஜ‌மாக‌வே அன்னை தெர‌சா ஆகிவிட்டாரா இல்லை வ‌ள்ள‌லார் ஆகிவிட்டாரா? இல்லை கூட்டணி வைச்சா தான் க‌ட்சி பொழைக்கும், அதுனால‌, தேச‌மாவ‌து, பாதுகாப்பாவ‌து...எவ‌ன் நாச‌மா போனா என‌க்கென்னா....கூட்ட‌ணி வ‌ச்சி, நாலு சீட்ட‌ பிடிச்சி அடுத்து சென்ட்ர‌ல்ல‌ எவ‌ன் க‌வ‌ர்ன்மென்ட் வ‌ந்தாலும் நான் ரெண்டு மினிஸ்ட‌ர் போஸ்ட் வாங்க‌ணும் என்ற‌ "உய‌ர்ந்த‌, க‌லாச்சார‌ம் மிக்க‌" அர‌சிய‌ல் கார‌ண‌மா??

அதெல்லாம் இருக்க‌ட்டும்...கருணாநிதிக்கும், மும்பை தாக்குத‌லுக்கும் என்ன‌டா ச‌ம்ப‌ந்த‌ம்...மொட்டை த‌லைக்கும் மொழ‌ங்காலுக்கும் முடிச்சி போடுற‌தே ஒன‌க்கெல்லாம் வேலையாப் போச்சி... என்று சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு...

இருக்கிற‌து ஐயா, இருக்கிற‌து! இவ‌ர்க‌ளின் அர‌சிய‌லில் தேச‌ப்பாதுகாப்பு ச‌ட்ட‌த்தை கேலியாக்கி விட்டார்க‌ள்..பொடா ச‌ட்ட‌த்தை வைகோ மீது பாய்ச்சி ஜெ. கேலியாக்கிய‌து போல்..

இப்ப‌டி இவ‌ர்க‌ளுக்கு வேண்டாம் என்றால் ஒருவ‌ரை கைது செய்வ‌தும், ஓட்டு பொறுக்க‌ வேண்டுமென்றால் அவ‌ரை விடுத‌லை செய்வ‌தும் என்று விளையாடியே நாச‌மாக்கி விட்டார்க‌ள்...இந்த‌ பிர‌ச்சினையில், காடுவெட்டி குருவை குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் உள்ளே அடைத்த‌ க‌லெக்ட‌ரும், மாவ‌ட்ட‌ காவ‌ல் அதிகாரியும் கேலி பொருளாகி விட்டார்க‌ள்... நாளை ஒருவ‌ன் தீவிர‌வாதி என்று தெரிந்தாலும் அவ‌னை உள்ளே த‌ள்ள‌ ம‌ன‌ம், தைரிய‌ம் வ‌ருமா? எந்த‌ அர‌சிய‌ல் வியாதி ச‌ப்போர்டுக்கு வ‌ருவான் என்று யாருக்கு தெரியும்?

ஆக‌, இப்ப‌டி அர‌சிய‌லுக்காக‌ நாட்டையே நாச‌ம் செய்துவிட்டார்க‌ள்...இதில் வ‌ய‌தில் மூத்த‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தால்....

க‌ருணாநிதி முத‌ல் குற்ற‌வாளி!

28 comments:

விஜய் ஆனந்த் said...

பொறம்போக்குப்பசங்க...

// அர‌சிய‌ல் என்றால் எவ‌ன் காலையும் ந‌க்குவேன் என்று சொல்லும் க‌ருணாநிதி //

க‌ருணாநிதி மட்டுமில்ல....மொத்த அரசியல்வாதிங்க கூட்டமும் இப்படித்தான் இருக்கு...இவனுங்களுக்கெல்லாம் உசுருன்னா அது அவனுங்களச்சேந்நவங்க, அவனுங்களுக்கு மட்டுந்தான்...மத்தவனுதெல்லாம் வெறும் மசுருதான்...

நல்லா இருக்கட்டும்....

பழமைபேசி said...

//மூத்த‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தால்....//

இந்த இடத்துல நீங்க நூத்துக்கு நூறு வாங்கிட்டீங்க அது சரி அண்ணே! வாழ்த்துக்கள்!!

விஜயன் said...

காடுவெட்டி குருவை விடுதலை செய்தவதாக செய்தி பார்த்தபோது, எனக்கு ஏற்பட்ட மனநிலையை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. மக்களை, சட்டங்களை, அதிகாரிகளை கண்ணெதிரிலேயே முட்டாளாக்கும் செயல்களை பார்க்க மனம் வெறுக்கிறது. இவைகளும் தீவிரவாதத்தின் வேர்களோ?
விஜயன்

அது சரி said...

//
விஜய் ஆனந்த் said...
பொறம்போக்குப்பசங்க...

க‌ருணாநிதி மட்டுமில்ல....மொத்த அரசியல்வாதிங்க கூட்டமும் இப்படித்தான் இருக்கு...இவனுங்களுக்கெல்லாம் உசுருன்னா அது அவனுங்களச்சேந்நவங்க, அவனுங்களுக்கு மட்டுந்தான்...மத்தவனுதெல்லாம் வெறும் மசுருதான்...

நல்லா இருக்கட்டும்....

//

வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்.

அது சரி said...

//
பழமைபேசி said...
//மூத்த‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தால்....//

இந்த இடத்துல நீங்க நூத்துக்கு நூறு வாங்கிட்டீங்க அது சரி அண்ணே! வாழ்த்துக்கள்!!

//

வருகைக்கு நன்றி பழமைபேசி அண்ணாச்சி.

அது சரி said...

//
விஜயன் said...
காடுவெட்டி குருவை விடுதலை செய்தவதாக செய்தி பார்த்தபோது, எனக்கு ஏற்பட்ட மனநிலையை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. மக்களை, சட்டங்களை, அதிகாரிகளை கண்ணெதிரிலேயே முட்டாளாக்கும் செயல்களை பார்க்க மனம் வெறுக்கிறது. இவைகளும் தீவிரவாதத்தின் வேர்களோ?
விஜயன்

//

வருகைக்கு நன்றி விஜயன் சார்.

சட்டத்தையும், அரசாங்கத்தையும் தங்கள் இஷ்டப்படி நடத்தும் அரசியல் வியாதிகளால் அரசு எந்திரமே மொட்டையாகி, செயல் இழந்து கிடக்கிறது..தீவிரவாதிகள் நினைத்த நேரமெல்லாம் தாக்க செயல் இழந்து போன இந்த அரசு எந்திரமும் காரணம்..

வீரன்(Veeran) said...

அருமையான கருத்துக்கள்!!

//சில வாரங்களுக்கு முன் சைனா, சவுதி அரேபியா, வேர்ல்ட் பேங்க் என்று கையேந்தியதை
//உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பெரும்பான்மையான ஓநாய்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக சொல்வதையும்

இதுவே என்னுடைய கருத்தும்.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பெருகி இருப்பதற்கு சவுதி அரசின் வகாபியிசம் (இஸ்லாமின் ஒரு பகுதி மட்டும் தான்) தான் காரணம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.

1. தென் இந்தியாவில் தீவிரவாதம் பெருகி வருகிறது எனும் அறிவிக்கையை எத்தனை பேருக்கு அறிந்து இருக்கிறார்கள். இதோ அப்பதிவு.
2. இத்தீவிரவாதிகள் jews மற்றும் குறிப்பிட்ட கிறிஸ்தவர்களையும் (Americans, British) மட்டும் குறிப்பிட்டு தாக்கியதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும் இதற்கான விளக்கம்.

வாழ்த்துக்கள்!!

அது சரி said...

//
வீரன்(Veeran) said...
அருமையான கருத்துக்கள்!!


இதுவே என்னுடைய கருத்தும்.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பெருகி இருப்பதற்கு சவுதி அரசின் வகாபியிசம் (இஸ்லாமின் ஒரு பகுதி மட்டும் தான்) தான் காரணம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.

1. தென் இந்தியாவில் தீவிரவாதம் பெருகி வருகிறது எனும் அறிவிக்கையை எத்தனை பேருக்கு அறிந்து இருக்கிறார்கள். இதோ அப்பதிவு.
2. இத்தீவிரவாதிகள் jews மற்றும் குறிப்பிட்ட கிறிஸ்தவர்களையும் (Americans, British) மட்டும் குறிப்பிட்டு தாக்கியதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும் இதற்கான விளக்கம்.

வாழ்த்துக்கள்!!

//

வ‌ருகைக்கு ந‌ன்றி வீர‌ன். தீவிர‌வாத‌த்திற்கு முக்கிய‌ கார‌ண‌ம் வ‌ஹாபி இஸ்லாம் என்ப‌து உண்மையே.

ஒரு சிறு திருத்த‌ம்..தீவிர‌வாத‌ம் தென் இந்தியாவில் ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌மெங்குமே அதிக‌மாக‌ ப‌ர‌வி வ‌ருகிற‌து. அவ‌ர்க‌ள் ப‌ல‌ரும் ப‌யிற்சி பெறுவ‌து பாகிஸ்தானில் தான்.

Sundar said...

//அர‌சிய‌ல் என்றால் எவ‌ன் காலையும் ந‌க்குவேன் என்று சொல்லும் க‌ருணாநிதி..//

super!

Anonymous said...

m's has to read this. as well other secularists
http://www.faithfreedom.org/

கபீஷ் said...

அதுசரி, நச் பதிவு, உங்கள் தைரியத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!


----இது போல் பதிவு எழுத நினைத்தும் எழுதாமல் இருக்கும் கோழை கபீஷ்

குடுகுடுப்பை said...

என்னத்த சொல்ரது, கோபத்த அடக்க ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டு தூங்க வேண்டியதுதான்.

கடைசி பக்கம் said...

Always this politicians spoil almost all the laws.

Now the damage the purpose of this law.

:-))

good writing

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

நசரேயன் said...

/*
காடுவெட்டு குரு என்ற‌ அன்னை தெர‌சாவின் ம‌று பிற‌வி
*/
அவருக்கு அடைமொழியாய் பயன் படுத்தலாம்

அது சரி said...

//
Sundar said...
//அர‌சிய‌ல் என்றால் எவ‌ன் காலையும் ந‌க்குவேன் என்று சொல்லும் க‌ருணாநிதி..//

super!

//

வாங்க சுந்தர் சார். வருகைக்கு நன்றி!

அது சரி said...

//
Anonymous said...
m's has to read this. as well other secularists
http://www.faithfreedom.org/

//

படிச்சிட்டு சொல்றேங்க அனானி. வருகைக்கு நன்றி.

அது சரி said...

//
கபீஷ் said...
அதுசரி, நச் பதிவு, உங்கள் தைரியத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!


----இது போல் பதிவு எழுத நினைத்தும் எழுதாமல் இருக்கும் கோழை கபீஷ்

//

வாங்க கபீஷ்.. வருகைக்கு நன்றி.

தைரியமெல்லாம் ஒண்ணும் இல்லீங்க... ஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன். அவ்வளவு தான்..

உங்க பதிவெல்லாம் இப்ப தான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.. அப்புறமா வர்றேன்.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
என்னத்த சொல்ரது, கோபத்த அடக்க ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டு தூங்க வேண்டியதுதான்.

//

ட்ரை பண்ணிப் பாத்தேன் தல. ஒர்க்கவுட் ஆகல. அதனால் தான் இந்த பதிவு போட வேண்டியதா போச்சி!

அது சரி said...

//
கடைசி பக்கம் said...
Always this politicians spoil almost all the laws.

Now the damage the purpose of this law.

:-))

good writing

//

வருகைக்கு நன்றி கடைசிப் பக்கம்!

மிக தெளிவான, வலிமையான சட்டங்கள் இருந்தும் இந்திய தேசம் நாசமாய் போனதற்கு இப்படி உள்ளிருந்தே அரிக்கும் கரையான்களான கருணாநிதி போன்ற அரசியல்வியாதிகள் முக்கிய காரணம் என்பது என் எரிச்சல்!

Anonymous said...

karunanidhi, ramadhas , matrum nam natilil ulla 99 % arasiyalvathikal ellorum, padavikkaka ethuvum seivarkal.

PEE thinbarkal

Than Thai matrum Sagothirikalai kuda Kutti kodupparkal.

i am realy shame to tell anything about our Fuck in ass hole politiciens.

Anonymous said...

இவங்க இஷ்டத்துக்கு கேஸ் போடுவாங்க, இஷ்டத்துக்கு அதை வாபஸ் வாங்குவாங்க. என்னங்கையா நடக்குது. ஒரு வேளை மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலால் தேசத்துக்கு பாதுகாப்பே இல்லை, அப்புறம் எதுக்கு இவர் மேல தேசிய‌ பாதுகாப்பு ச‌ட்ட‌த்தில் கைதுன்னு நெனச்சிடாங்களா?

Mahesh said...

என்னண்ணே... போன 4-5 பதிவும் ஒரே கோபாவேசமா இருக்கு... கொஞ்சம் கூல் ஆகுங்கண்ணே.. பீ.பி எகிறிடும் போல.....

ஆனா நீங்க சொன்னது எல்லாம் வாஸ்தவம்ணே... இப்ப இருக்கற அரசியல்வியாதிகளால கால் காசு ப்ரயோஜனம் இல்ல (நமக்கு.. அவிங்க கோடிக்கு கம்மியா பேசவே மாட்டாங்க)

அது சரி said...

//
pathivu said...
இவங்க இஷ்டத்துக்கு கேஸ் போடுவாங்க, இஷ்டத்துக்கு அதை வாபஸ் வாங்குவாங்க. என்னங்கையா நடக்குது. ஒரு வேளை மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலால் தேசத்துக்கு பாதுகாப்பே இல்லை, அப்புறம் எதுக்கு இவர் மேல தேசிய‌ பாதுகாப்பு ச‌ட்ட‌த்தில் கைதுன்னு நெனச்சிடாங்களா?

//

இருக்கலாம் மோகன்... கொடுமை என்னன்னா, இப்பிடி எல்லா நாசத்தையும் செஞ்சிட்டு இவனுங்க ப்ளாக் கேட்ஸ், புல்லட் ப்ரூஃப் கார் இல்லாம எங்கயும் போறதில்ல...

அது சரி said...

//
Mahesh said...
என்னண்ணே... போன 4-5 பதிவும் ஒரே கோபாவேசமா இருக்கு... கொஞ்சம் கூல் ஆகுங்கண்ணே.. பீ.பி எகிறிடும் போல.....

ஆனா நீங்க சொன்னது எல்லாம் வாஸ்தவம்ணே... இப்ப இருக்கற அரசியல்வியாதிகளால கால் காசு ப்ரயோஜனம் இல்ல (நமக்கு.. அவிங்க கோடிக்கு கம்மியா பேசவே மாட்டாங்க)

//

வாங்க மகேஷ்.. நீங்க சொல்றத் உண்மை தான்...காடுவெட்டியை வெளிய விட்டுட்டானுங்கன்னு நியூஸ் படிச்சி எனக்கு டென்ஷன் ஏறுனது தான் மிச்சம்....அவரு கோழி பிரியாணியும் குவாட்டரும் அடிச்சிட்டு நல்லா தான் இருக்காரு....எந்த சொத்தை எப்படி பிரிக்கிறது, "அவாள் சவால்"னு அறிக்கைவிட்டு எப்பிடி ஜாதியை ஒழிக்கிறதுன்னு சமூக நீதி காவலரும் சந்தோஷமா தான் இருக்காரு!

பழமைபேசி said...

ஒருவாரமா ஆளைக் காணோம்! இன்னைக்கு வந்த மாதர இருக்கு?

ராஜ நடராஜன் said...

//இவ‌ர்க‌ளின் அர‌சிய‌லில் தேச‌ப்பாதுகாப்பு ச‌ட்ட‌த்தை கேலியாக்கி விட்டார்க‌ள்..பொடா ச‌ட்ட‌த்தை வைகோ மீது பாய்ச்சி ஜெ. கேலியாக்கிய‌து போல்..//

பதிவு முழுவதுமே உண்மை பேசினாலும் முத்தாய்ப்பு பொடா சட்டக் கேலிக் கூத்து.

Ashwinji said...

காசுக்கு ஓட்டுப் போடறவங்களை நம்பி இவனுங்க நாட்டையே வெல பேசிகிட்டு இருக்காங்க. சமூகநீதி, சாதிஒழிப்பு எல்லாம் பம்மாத்து. நிறைய எழுதுங்க. நன்றி.
www.vedantavaibhavam.blogspot.com