Monday, 17 November 2008

சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு - தொடர்ச்சி...

சட்டக்கல்லூரி கலவரம் சம்பந்தமாக நான் இட்ட முந்திய பதிவின் சில விஷயங்களை தெளிவுபடுத்தவே இந்த அவசர பதிவு..

முதலில், என் பதிவில் எந்த இடத்திலும் ஜாதி பற்றி குறிப்பிடவே இல்லை..ஏனெனில் எனக்கு எந்த ஜாதியும் இல்லை, எந்த ஜாதி மீதும் தனிப்பட்ட பிடிப்போ, மரியாதையோ இல்லை.எந்த ஒரு விஷயத்தையும் ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுடன் பேசுவதே எனக்கு விருப்பமில்லை..அது யாராக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும்!

ஜாதி ந‌ம்பிக்கை உடைய‌வ‌ர்க‌ள் முடிந்தால் உங்கள் ஜாதி க‌ண்ணாடியை சிறிது நேர‌ம் க‌ழ‌ட்டி வைத்து விட்டு ப‌டியுங்க‌ள்..இல்லையேல் இத்துட‌ன் ப‌டிப்ப‌தை நிறுத்திக் கொள்ள‌லாம்.. நான் யாரையும் ப‌டிக்க‌ வேண்டும் என்று வ‌ற்புறுத்த‌வில்லை. நீங்க‌ள் ப‌டிப்ப‌தால் என‌க்கு சில‌ ல‌ட்ச‌ங்க‌ள் வ‌ர‌ப்போவ‌தும் இல்லை.. என‌வே பிடித்தால் ப‌டியுங்க‌ள்..இல்லையேல் போய்க் கொண்டே இருக்க‌லாம்..I simply don' care!

இனி...

1. உண்மையில் அன்று ந‌ட‌ந்த‌து என்ன‌? இர‌ண்டு மாணவ(?????) குழுக்க‌ள் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் அடித்து கொண்ட‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌வாக‌ வேண்டுமானாலும் இருக்க‌ட்டும். ஜாதியாக‌வும் இருக்க‌லாம் இல்லை வேறு கார‌ண‌ங்க‌ளாக‌வும் இருக்க‌லாம்.. என்ன‌ கார‌ண‌மாக‌ இருந்தாலும் உருட்டு க‌ட்டை, க‌ம்பிக‌ளுட‌ன் அலையும் ஒரு கும்ப‌லையும், க‌த்தியுட‌ன் திரியும் ஒரு கும்ப‌லையும் என்ன‌ வித‌மான‌ மாண‌வ‌ர்க‌ளாக‌ பார்க்க‌ முடியும்?? இவ‌ர்க‌ள் நிஜ‌மாக‌வே ப‌டிக்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் தானா??

க‌ல்லூரிக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்குள் பிர‌ச்சினை வ‌ருவ‌து புதித‌ல்ல‌. ஆனால், எத்த‌னை மாண‌வ‌ர்க‌ள் கொலை வெறியுட‌ன் க‌த்தி, க‌ட்டையுட‌ன் திரிகிறார்க‌ள்?

உங்க‌ளில் எத்த‌னை பேர் க‌ல்லூரியில் ப‌டித்திருக்கிறீர்க‌ள்? நீங்க‌ள் இப்ப‌டி தான் க‌த்தி, க‌ட்டையுட‌ன் அலைந்தீர்க‌ளா?

2. ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஏதோ உட‌ன‌டி ச‌ம்ப‌வ‌மாக‌ தெரிய‌வில்லை.முன் கூட்டியே திட்ட‌மிட்டு ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ந்திருப்ப‌தாக‌ தெரிகிற‌து..இப்ப‌டி கொலைக்கு திட்ட‌மிடுப‌வ‌ர்க‌ளை மாண‌வ‌ ம‌ணிக‌ள் என்று கொண்டாட‌ வேண்டுமா??

3. இந்த‌ ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ரும் ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள்..டாட்டாவின் ம‌க‌ன்க‌ளோ, பிர்லாவின் பேர‌ன்க‌ளோ இல்லை...பிள்ளை ப‌டித்து முடித்த‌தும் வேலைக்கு போவான்..குடும்ப‌த்தை முன்னேற்றுவான்..அக்கா, த‌ங்க‌ச்சிக்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைப்பான்..அவ‌ன் ப‌டிக்க‌ வாங்கின‌ க‌ட‌னை அடைப்பான்...இப்ப‌டி ப‌ல‌ க‌ன‌வுக‌ள், திட்ட‌ங்க‌ளுட‌ன் க‌ட‌ன் வாங்கி ப‌டிக்க‌ வைக்கும் பெற்றோரும் இருக்க‌க் கூடும்....ஆனால், எதைப் ப‌ற்றியும் க‌வ‌லை இல்லாம‌ல், கொலை வெறியுட‌ன் அலையும் ந‌ப‌ர்க‌ள் மீது என‌க்கு எந்த‌ ம‌ரியாதையும் இல்லை.

4. ச‌ரி, இவ‌ர்க‌ள் ஜாதிக்காக‌வே ச‌ண்டையிட்ட‌தாக‌ வைத்துக் கொண்டாலும், இவ‌ர்க‌ள் ச‌ண்டையிட்டால் இல்லை கொலை செய்தால் ஜாதி பிர‌ச்சினை தீர்ந்து விடுமா? இத‌ற்கு முந்தைய‌ ஜாதிக் க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ளின் இன்றைய‌ நில‌வ‌ர‌ம் என்ன‌?? அவ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ள் என்ன‌ நிலைமையில் உள்ள‌ன‌??

க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட‌ தூண்டி விட்ட‌வ‌ர்க‌ள் இன்று க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளாக‌வும், எம்.எல்.ஏ, எம்.பி, ம‌ந்திரிக‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள்...அடுத்து வ‌ரும் தேர்த‌லில் எந்த‌ தொகுதி வேண்டும், எத்த‌னை தொகுதி வேண்டும் என்று பேர‌ம் பேசிக் கொண்டிருக்கிறார்க‌ள்..அவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் டெல்லியிலும், சென்னையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்க‌ள்..

ஆனால், ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள்? அவ‌ர்க‌ள் செத்து சுண்ணாம்பாகி விட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் வாரிசுக‌ள் வேலை, வ‌ச‌தி இன்றி வ‌றுமையில் இருக்கிறார்க‌ள்.. இதை ச‌ந்தேக‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் தென் மாவட்ட‌ங்க‌ளிலும், வ‌ட‌ மாவட்ட‌ங்க‌ளிலும் விசாரித்து அறிய‌லாம்..

தூண்டி விடுப‌வ‌ர்க‌ள் ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு, வ‌றுத்த‌ முந்திரியும், இம்போட்ட‌ட் விஸ்கியும் குடித்துக் கொண்டு அடுத்து எவ‌னை கொல்ல‌லாம், எந்த‌ ப‌ஸ்ஸை எரிக்க‌லாம் என்று விவாதித்து கொண்டிருக்கிறார்க‌ள்..

5. அடுத்து போலீஸ்.. நீங்க‌ள் எந்த‌ க‌ல்லூரியிலாவ‌து குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு வார‌ம் ப‌டித்திருந்தால் கூட‌ தெரியும்.. பொதுவாக‌, க‌ல்லூரியின் ம‌திலுக‌ளுக்குள் உள்ளே ந‌ட‌க்கும் பிர‌ச்சினையில் போலீஸ் த‌லையிடுவ‌து இல்லை..இருக்கிற‌ வேலையில‌ இது எதுக்கு புதுசா என்ற‌ அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌மும் ஒரு கார‌ண‌ம் என்றாலும், ஒரு க‌ல்லூரிக்குள் ந‌ட‌க்கும் பிர‌ச்சினையில் போலீஸ் அவ்வ‌ள‌வு எளிதாக‌ த‌லையிட‌ முடியாது..உண்மையிலேயே க‌ல்லூரி முத‌ல்வ‌ர், க‌ல்லூரி சேர்ம‌ன், போலீஸ் உய‌ர் அதிகாரி, அந்த‌ வ‌ட்டார‌ எம்.எல்.ஏ, எம்.பி, த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அள‌வுக்கு விவாதித்து தான் த‌லையிட‌ முடியும்..

ச‌ரி, இந்த‌ பிர‌ச்சினையில் போலீஸ் த‌லையிட்டு இருந்தால் என்ன‌ ஆகியிருக்கும்? "ஏய், ஓதுங்கி போங்க‌ப்பா" என்றால் இந்த‌ கூட்டம் வில‌கியிருக்குமா? இருக்காது...அடுத்து?? போலீஸ் த‌டிய‌டி ந‌ட‌த்த‌ வேண்டி வ‌ரும்.. போலீஸ் த‌டிய‌டி ந‌ட‌த்தினால் என்ன‌ ஆகும்?? இர‌ண்டு கும்ப‌ல்க‌ளுக்கு இடையில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டை போலீஸ் ‍வ‌க்கீல்க‌ள் என்றும், அர‌சுக்கும் ஜாதிக‌ளுக்கும் இடையிலான‌ ச‌ண்டையாக‌வும் மாறும்..தென் மாவட்ட‌ங்க‌ளில் சில‌ சிலைக‌ள் உடையும்.. வ‌ட‌ மாவட்ட‌ங்க‌ளில் சில‌ ப‌ஸ்க‌ள் கொளுத்த‌ப்ப‌டும்..சில‌ர் உயிருட‌ன் கொளுத்த‌ப்ப‌டுவார்க‌ள்..சில‌ர் வெட்டிச் சாய்க்க‌ப்ப‌டுவார்க‌ள்...

இதில் எந்த‌ ஜாதிக்காவ‌து எந்த‌ ப‌ல‌னாவ‌து உண்டா? ஒரே ஒரு ப‌ல‌ன் உண்டு..புதிய‌ ஜாதி த‌லைவ‌ர்க‌ள் உருவாவ‌ர்க‌ள்..அவ‌ர்க‌ள் ம‌க‌ன்க‌ளும், பேர‌ன் பேத்திக‌ளும் ம‌ந்திரி ஆவார்க‌ள்...ஸ்விஸ் பேங்கில் அக்க‌வுண்ட் ஓப்ப‌ன் செய்வார்க‌ள்...பத்திரிக்கைகளுக்கும், சில டீ.வி.களுக்கும் சில நாட்கள் செய்தி பஞ்சமில்லை...

ஆனால் க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள், அதில் செத்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளின் குடும்ப‌ நிலைமை? செத்த‌வ‌ர்க‌ள் அடையாள‌ம் தெரியாம‌லே புதைக்க‌ப்ப‌ட‌க்கூடும்...கேட்பாரின்றி அவ‌ர்க‌ள் ம‌ண்ணில் அழுகிக் கொண்டிருப்பார்க‌ள்..அவ‌ர்க‌ள் குடும்ப‌ங்க‌ள் உயிருட‌ன் செத்துக் கொண்டிருக்கும்...

6. என் முந்தைய‌ ப‌திவுக்கு பின்னூட்ட‌மிட்ட‌ ஹ‌ரிஜ‌னா என்ப‌வ‌ர் சொல்கிறார்..

//ஏதோ புதுசா சொல்றதா நினைத்து நடந்த சம்பவத்தின் கொடுரத்தை மறைக்க என்ன அவசியம் வேண்டிருக்கு. //

நான் எதையும் ம‌றைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. நான் ஜாதி சங்க தலைவனோ இல்லை ஜாதியை வைத்து இரண்டு சட்டசபை தொகுதி, ஒரு எம்.பி. தொகுதி என்று பேரம் பேசுபவனோ இல்லை.

//நீ எல்லாம் பதிவு போடவில்லை என்று யார் அழுதார்கள்.
வெட்டி வேலையயை விட்டுவிட்டு வேறு வேலை எதாவது இருந்தால் பார்.//

நான் ப‌திவு போட‌ வேண்டும் என்று யாரும் அழ‌வில்லை..அது போல‌ இவ‌ர் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும் என்றும் நான் அழ‌வில்லை..

ஆனால் இவ‌ர் சொல்வ‌தில் ஒரு விஷ‌ய‌ம் ச‌ரியான‌து..ப‌திவு போடுவ‌து வெட்டி வேலையே.. எதை எடுத்தாலும் ஜாதியுட‌ன் பார்க்கும் காமாலை க‌ண்க‌ளுக்கு ம‌த்தியில் வேறு வித‌மாக‌ பாருங்க‌ள் என்று சொல்வ‌து கூட‌ த‌வ‌று தான்..

அடுத்து அந்நிய‌ன் என்ப‌வ‌ர் அனானியாக‌ எழுதுவ‌து..

//உனக்குள்ள‌ என்ன பெரிய பருப்புன்னு நினைப்பா!!! ஒழிஞ்சவன விடு. ஒழிச்சவன் மட்டும் உலகத்துல நல்லது பண்ணிடுவனா!!! //

நான் ப‌ருப்பும் இல்லை..செருப்பும் இல்லை. ஒழிச்ச‌வ‌ன் ந‌ல்லது ப‌ண்ணுவான் என்றும் நான் எங்கும் சொல்ல‌வில்லை. நான் சொல்ல‌ வ‌ருவ‌து ரொம்ப‌ சிம்பிள்...ந‌ட‌ந்த‌து இர‌ண்டு ர‌வுடி கும்ப‌ல்க‌ளுக்கு இடையில் வ‌ழ‌க்க‌மாக‌ ந‌ட‌க்கும் மோத‌ல்..அவ்வ‌ள‌வே.

//ஒருவேளை அவனும் உன்னப்போல வலையம் எழுதுவான். அவனை தட்டி எவன் கேட்ப்பான். பிரட்சினையின் வீரியம் தெரியாமல் ம*** போல எழுத்தாதே!!!//

ச‌ரி, பிர‌ச்சினையில் வீரிய‌ம் தெரிந்த‌ இவ‌ர் என்ன‌ செய்ய‌ போகிறார் என்று தெரிய‌வில்லை.ஒரு வேளை இவ‌ர் சில‌ பேரை வெட்டி சாய்க்க‌ போகிறாரோ என்ன‌வோ?

அப்ப‌டி எண்ண‌மிருந்தால் செய்யுங்க‌ள்...அவ‌ர்க‌ள் உங்க‌ள் ஜாதி காக்க‌ வ‌ந்த‌ தெய்வ‌ங்க‌ள் என்று கூட‌ கும்பிடுங்க‌ள். என‌க்கு ஆட்சேப‌ம் இல்லை..

8. இங்கு பின்னூட்ட‌மிடுப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். உங்க‌ளுக்கு எதிர் க‌ருத்து இருந்தால் த‌வ‌றில்லை..ஆனால் அதை எழுதும் போது அநாக‌ரீக‌மாக‌ எழுதி உங்க‌ள் த‌ர‌த்தை நீங்க‌ளே குறைத்து கொள்ளாதீர்க‌ள்...அப்ப‌டியெல்லாம் இல்ல‌, என‌க்கெல்லாம் த‌ர‌மே இல்லை...என்று கேவ‌லமாக‌ எழுதினால் அது உங்க‌ள் பாடு!

=======================

24 comments:

குடுகுடுப்பை said...

நான் மென்மையா ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன். இப்போ எங்கே திசை திரும்பப்படுமோ என்று பயமாக உள்ளது.

Dr.Rudhran said...

you have written it well. but it is still a caste based clash, the usual vulgarity in colleges now only this time the magnitude was more.

புதுகை.அப்துல்லா said...

ரொம்பச் சரி

Anonymous said...

I agree with you. The public outcry on 'police attrocity' is unneccesarily blown up. They have done the right thing by being a mute witness.

Ravi

Sundar சுந்தர் said...

//க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட‌ தூண்டி விட்ட‌வ‌ர்க‌ள் இன்று க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளாக‌வும், எம்.எல்.ஏ, எம்.பி, ம‌ந்திரிக‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள்...அடுத்து வ‌ரும் தேர்த‌லில் எந்த‌ தொகுதி வேண்டும், எத்த‌னை தொகுதி வேண்டும் என்று பேர‌ம் பேசிக் கொண்டிருக்கிறார்க‌ள்..அவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் டெல்லியிலும், சென்னையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்க‌ள்..//
so true!

ராமய்யா... said...

நல்ல பதிவு...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்??

விடுங்க சார் இவங்க எப்பவுமே இப்படி தான் அடிசிக்கிட்டெ இருப்பாய்ங்க..

E.Parthiban said...

Good outlook .Pls spread this message to every one to avoid religion and caste... already I'm religion-less person. We are leaving in abroad, my colleague(non Indians) still ask about Indian caste system and dowry, I can’t say a word on this issues , at least this coming generation must emerge as casteless and religion-less society. Please don’t beleive in caste & religion. Root for caste system is Religion then boycott the religion.

Anonymous said...

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்க உங்கள் பணியை!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
நான் மென்மையா ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன். இப்போ எங்கே திசை திரும்பப்படுமோ என்று பயமாக உள்ளது.

//

ஆமா, அப்படி தான் ஆகும்..மொதல்ல கமெண்ட் மாடரேஷன் எனேபிள் பண்ணிருங்க..இல்லாட்டி பின்னூட்டம் போட்டே ஒரு ஜாதி கலவரத்தை உண்டாக்கிருவாங்க போலருக்கு :0(

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
உள்ளேன் ஐயா

//

உங்களுக்கு ஆஜர் போட்டாச்சிங்க :0)

அது சரி(18185106603874041862) said...

//
Dr.Rudhran said...
you have written it well. but it is still a caste based clash, the usual vulgarity in colleges now only this time the magnitude was more.

//

Thanks for your words Doctor.

I agree, the underlying reason could very well be caste. But my point is, looking at the behavious of these so called students, they would have been fighting for anything and everything, not just for caste.

அது சரி(18185106603874041862) said...

//
புதுகை.அப்துல்லா said...
ரொம்பச் சரி

//

நன்றி அப்துல்லா அண்ணே!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
I agree with you. The public outcry on 'police attrocity' is unneccesarily blown up. They have done the right thing by being a mute witness.

Ravi

//

Thanks for your visit and comments Ravi.

அது சரி(18185106603874041862) said...

//
Sundar said...
//க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட‌ தூண்டி விட்ட‌வ‌ர்க‌ள் இன்று க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளாக‌வும், எம்.எல்.ஏ, எம்.பி, ம‌ந்திரிக‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள்...அடுத்து வ‌ரும் தேர்த‌லில் எந்த‌ தொகுதி வேண்டும், எத்த‌னை தொகுதி வேண்டும் என்று பேர‌ம் பேசிக் கொண்டிருக்கிறார்க‌ள்..அவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் டெல்லியிலும், சென்னையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்க‌ள்..//
so true!

//

வருகைக்கு நன்றி சுந்தர் சார்.

அது சரி(18185106603874041862) said...

//
ராம்ஜி said...
நல்ல பதிவு...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்??

விடுங்க சார் இவங்க எப்பவுமே இப்படி தான் அடிசிக்கிட்டெ இருப்பாய்ங்க..

//

நீங்க சொல்றது உண்மை. ஜாதிக் கலவரங்களால் அழிந்தவர்கள் பலர். இதுவெல்லாம் தெரிந்தும் ஜாதி சண்டை போடுபவர்களை என்ன சொல்ல?

அது சரி(18185106603874041862) said...

//
இளங்கோ பார்த்திபன் said...
Good outlook .Pls spread this message to every one to avoid religion and caste... already I'm religion-less person. We are leaving in abroad, my colleague(non Indians) still ask about Indian caste system and dowry, I can’t say a word on this issues , at least this coming generation must emerge as casteless and religion-less society. Please don’t beleive in caste & religion. Root for caste system is Religion then boycott the religion.

//

வாங்க இளங்கோ!

எனக்கும் மதமும், ஜாதியும் இல்லை என்பதால் உங்கள் கருத்தை முழுவதும் ஒப்புக் கொள்கிறேன்!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்க உங்கள் பணியை!

//

நன்றி நண்பரே!

ஏதோ நம்மால் முடிந்தது...

பழமைபேசி said...

சம்பிரதாய வருகைப் பதிவு!

Anonymous said...

Hi,whats up with that vikram story mate? we are waiting here for ages.
beat the shit out of vedhal until it tells you the story :)

Anonymous said...

நானும் ஆஜர் போட்டுக்குறேன். (என்ன சொல்லுறதுன்னு தெரியலை)

நண்பரே , 50 வது பதிவு போட்டுள்ளேன். வந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
சம்பிரதாய வருகைப் பதிவு!

//

பழமைபேசி அண்ணாச்சிக்கு ஆஜர் போடுங்கப்பா!

அது சரி(18185106603874041862) said...

//
Shrek said...
Hi,whats up with that vikram story mate? we are waiting here for ages.
beat the shit out of vedhal until it tells you the story :)

//

Sorry mate! I was hoping to write the next part last Saturday, and suddenly got very tensioned with all these law college problem..

Hope to do it this week end. Saturday may be!

அது சரி(18185106603874041862) said...

//
pathivu said...
நானும் ஆஜர் போட்டுக்குறேன். (என்ன சொல்லுறதுன்னு தெரியலை)

நண்பரே , 50 வது பதிவு போட்டுள்ளேன். வந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

//

உங்களுக்கு ஆஜர் போட்டாச்சி மோகன்.. அம்பதுக்கு வாழ்த்து..

Anonymous said...

The other side of this violence: visit http://vinavu.wordpress.com/2008/11/17/law2/