Thursday, 20 November 2008

முடிவே இல்லா பாதையில்....

சின்ன‌ பொறியில் வடை..
ஆசையாய் தான் இருக்கிற‌து...

நேற்றும் இன்றும் நாளையும்
காலையும் மாலையும்

இர‌வில் கூட‌ க‌ன‌வில்...

தின‌ந்தோறும் அதே முக‌ங்க‌ள்

உள்ளே போனால் என்ன‌...
இட‌மும் வ‌ல‌மும்
முன்னும் பின்னும்
மேலும் கீழும்...

அங்கு என்ன வெளிச்சம்..
உள்ளே யாரது...

இல்லை அது இன்னொரு பொறி..

இத‌ற்கு மேல் எங்கே செல்ல?

முடிவே இல்லா பாதையில்

விடிவே இல்லா இரவுகளின்

விடையே இல்லா கேள்விகள்..

==========================

அழுத்து அழுத்து இன்னும்

கீழே கீழே கீழே... இன்னும் கீழே

இத‌ற்கு மேல் ஆழ‌ம் இல்லை...

சரி விட்டுத் தொலை ச‌னிய‌னை..

=========================

செத்திருந்த‌து சுண்டெலி

முடிவே இல்லா பாதையில்

விடிவே இல்லா இரவுகளின்

விடையே இல்லா கேள்விகளுடன்!

============

12 comments:

குடுகுடுப்பை said...

மார்க்கெட் கவிதையா.கவிதை நல்லா இருக்கு.ஆனா முடிச்சிபுட்டாங்களே

குடுகுடுப்பை said...

கவிதை படாத பாடு படுது. நீங்க முரண்தொடையார், நான் என்ன ஆகப்போகுதோ

நசரேயன் said...

இது என்ன கவிதை வாரமா?

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
மார்க்கெட் கவிதையா.கவிதை நல்லா இருக்கு.ஆனா முடிச்சிபுட்டாங்களே
//

மார்க்கெட் ப‌த்தின‌ க‌விதைனும் வ‌ச்சிக்க‌லாம்..சிட்டி பேங்க் ப‌த்தின‌ க‌விதைன்னும் வ‌ச்சிக்க‌லாம்....

ஆனா, பொறியில‌ சிக்கின‌ எலி மாதிரி ஆகிப்போன‌ ம‌னித‌ வாழ்க்கை ப‌த்தின‌ க‌வுஜ‌...

எல்லாருக்கும் அப்பிடியான்னு தெரிய‌ல‌..ஆனா, நெறைய‌ பேருக்கு அப்பிடி ஆகிப் போச்சி!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
கவிதை படாத பாடு படுது. நீங்க முரண்தொடையார், நான் என்ன ஆகப்போகுதோ

//

புதுசா என்ன ஆகப்போகுது?

டவுசர் கிழிந்ததென்று
புதிதாய் வாங்கினான்...

அந்த டவுசரில்
ஆயிர‌ம் ஓட்டை!

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
இது என்ன கவிதை வாரமா?

//

கவிதை வாரமான்னு தெரியலை நசரேயன்..

ஆனா, என்னைப் பொறுத்த வரை கழுதை வாரம்....என்னா ஒதை உதைக்குது? :0(

நசரேயன் said...

இந்த கவுஜ கொஞ்ச நாளைக்கு முன்னே வந்து அப்புறமா காக்கா தூக்கிட்டு போய் அழவு படுத்தீட்டு கொடுத்த மாதிரி இருக்கே

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
இந்த கவுஜ கொஞ்ச நாளைக்கு முன்னே வந்து அப்புறமா காக்கா தூக்கிட்டு போய் அழவு படுத்தீட்டு கொடுத்த மாதிரி இருக்கே
//

அதே! அதே தான்...

ரொம்ப நாளா இந்த கவுஜய பப்ளிஷ் பண்ணனும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்...இப்ப தான் வெறி வந்துச்சி! எல்லாம் கொலை வெறி தான் :0)

பழமைபேசி said...

//டவுசர் கிழிந்ததென்று
புதிதாய் வாங்கினான்...
அந்த டவுசரில்
ஆயிர‌ம் ஓட்டை!//

இதுதான் அலாதி!

விஜய் ஆனந்த் said...

// டவுசர் கிழிந்ததென்று
புதிதாய் வாங்கினான்...

அந்த டவுசரில்
ஆயிர‌ம் ஓட்டை! //

:-)))...

கமெண்ட்டு கவித ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாயிருக்கிறது!!!

Sundar சுந்தர் said...

//மார்க்கெட் ப‌த்தின‌ க‌விதைனும் வ‌ச்சிக்க‌லாம்..சிட்டி பேங்க் ப‌த்தின‌ க‌விதைன்னும் வ‌ச்சிக்க‌லாம்....

ஆனா, பொறியில‌ சிக்கின‌ எலி மாதிரி ஆகிப்போன‌ ம‌னித‌ வாழ்க்கை ப‌த்தின‌ க‌வுஜ‌...

எல்லாருக்கும் அப்பிடியான்னு தெரிய‌ல‌..ஆனா, நெறைய‌ பேருக்கு அப்பிடி ஆகிப் போச்சி!
//

//
புதுசா என்ன ஆகப்போகுது?

டவுசர் கிழிந்ததென்று
புதிதாய் வாங்கினான்...

அந்த டவுசரில்
ஆயிர‌ம் ஓட்டை!
//
//
கவிதை வாரமான்னு தெரியலை நசரேயன்..

ஆனா, என்னைப் பொறுத்த வரை கழுதை வாரம்....என்னா ஒதை உதைக்குது? :0(
//

பின்னூட்டங்களுக்கு போட்ட பதில்களும் சூப்பர்!

டவுசர் கிழிந்து போய் ரொம்ப நாளாய் மரத்து போக ஆரம்பித்து விட்டது.

many smarties are in this together. so got to hope to survive to make the end different.

அது சரி said...

//
Sundar said...

பின்னூட்டங்களுக்கு போட்ட பதில்களும் சூப்பர்!

டவுசர் கிழிந்து போய் ரொம்ப நாளாய் மரத்து போக ஆரம்பித்து விட்டது.

many smarties are in this together. so got to hope to survive to make the end different.

//

வருகைக்கு நன்றி சுந்தர் சார்..

மரத்து போச்சின்னு அப்பிடியே விட்டுர முடியுமா? புதுசா டவுசர் வாங்குவோமில்ல :0)