முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.
அத்தியாயம் மூன்று - புதை மணல்
இதன் முந்திய பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்.
அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
ஏமப் புணைமன்னும் இல்
திருக்குறள், அதிகாரம் 117, படர்மெலிந் திரங்கல்
"கைக்கிளைன்னா இன்னா?"
வேதாளத்தின் கேள்விக்கு விடை தெரியாமல் விக்கிரமாதித்தன் விழித்தான்..
"கைக்கிளைன்னா...ம்ம்ம்...எதுனா கைக்கு பக்கத்துல இருக்கிற மரக்கிளையா? ஊருல சொல்லுவாங்க..."
"ம்க்கும். உன் மண்டை கிளை. கைக்கிளைன்னா பொருந்தா காதல்..ஒனக்கு புரியற மாதிரி சொல்றதுன்னா பொருந்தா காமம்.. அதெல்லாம் பொற நானூறு, அக நானூறு படிச்சவங்களை கேக்கணும்..நீயே சால்ட்டு கொட்டாயில ஜல்ஸா பண்ற பொறம்போக்கு..உன்ட்ட போயி கேட்டேன் பாரு..எனக்கு அய்யாவோட இதயத்துல கூட எடம் கெடைக்காது போலருக்கு"
"அட சட்டி போட்ட சனியனே..இப்பிடி கைக்கிளு சைக்கிளுன்னு டைம்மை வேஸ்ட் பண்ணாத.. கெளம்பு கெளம்பு..இப்ப கெளம்பினா தான் சாயந்திரத்துக்குள்ள மந்திரவாதிய பாக்க முடியும்..."
"ஆமா அவன் பெரிய நயந்தாரா..அப்பிடியே பாத்துட்டாலும்...ரொம்ப பறக்காத மாதி...நீ என்ன ஆட்சிலயா இருக்க? ஆட்சி போன ஒரு அம்மா தான் ராஜினாமா செய்யி, ராஜினாமா செய்யின்னு பறக்கறாங்கன்னா நீ எதுக்கு பறக்குற?"
"ஆச்சி போனாலும் அறிக்கை விடுவாங்க...அதெல்லாம் ஒனக்கு எதுக்கு..ரொம்ப பேசுன உம் மேல மான நஷ்ட ஈடு வழக்கு தான்...பாத்துக்க..."
"அவங்க மானம் என்ன ஒரு கோடி ரூவா தான...நம்ம வடிவேலு வாங்குற சம்பளத்த விட ச்சீப்பா இருக்கு...குடுத்துட்டா போச்சி..ஆனா மானத்தை எப்பிடி நஷ்டப்படுத்துறதுன்னு தான் எனக்கு பிரியல..அது என்ன புண்ணாக்கு யாவாரமா நஷ்டமாவுறதுக்கு.."
"வேலையில்லாத வெட்டி பையன் வழுக்கையனுக்கு மொட்டை போட்டானாம்..அப்பிடி தான் இருக்கு உன் கத...இப்பிடி ஊர் வம்பு பேசுறதுக்கு பேசாம கெளம்பினா இன்னேரம் பாதி தூரம் போயிருக்கலாம்..."
"போலாம் மாதி...எதுனா சரக்கு வச்சிருக்கியா...நான் காச்சிரதையும் கெடுத்துட்ட..."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல....நீ வா போலாம்.."
"இரு மாதி...இவ்வளவு தூரம் வந்துட்ட...கதையை கேக்காம போனா எப்பிடி.."
"என் நேரம்..சரி என்ன கதை அது...சீக்கிரம் சொல்லித் தொலை.."
"எல்லாம் நம்ம மருத காரய்ங்க கதை தான்..வைகை காஞ்சி போனாலும் வை கையை அப்பிடின்னுட்டு இருக்காய்ங்களே அவய்ங்க ஊரு கத தான்..."
தலையில் மாட்டியிருந்த சட்டியை கையில் எடுத்துக் கொண்ட வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது...
=================================
=================================
வைஜெயந்தி ஓடிக் கொண்டிருந்தாள்....அவளுக்கு மூச்சிரைத்தது...சுற்றிலும் மணல்...இது என்ன இடம்..ஏன் ஓடிக் கொண்டிருக்கிறேன்...எங்கு ஓடுகிறேன்..கால் வலிக்குதே..உக்காரலாமா...தெரியலியே..எவ்வளவு நேரம் ஓடணும்...இது என்ன யாருமே இல்ல இங்க...வெறும் பொட்டல் மணல் காடா இருக்கே...அய்யோ இது என்ன..கால் உள்ள போகுதே...இது என்ன இடம்..புதை மணலா...நான் அவ்வளவு தானா...சுபா..அய்யோ சுபா உன்னை தனியா விட்டுட்டு போறேனே.....
"ஹெல்ப்...ஹெல்ப்..யாராவது காப்பாத்துங்களேன்.."
வைஜெயந்தி அலறினாள்.. திடீரென்று அவளது முகத்தை பிடித்து யாரோ உலுக்கினார்கள்...
"ம்மா..ம்மா..என்னம்மா ஆச்சு...எந்திரிம்மா..."
வைஜெயந்திக்கு சட்டென்று விழிப்பு வந்தது...என்ன ஆயிற்று...
"என்னம்மா ஆச்சி.."
அந்த அரை இருட்டில் குழந்தை சுபா பயத்துடன் விழித்துக் கொண்டிருந்தது..
"ஒண்ணுமில்ல குட்டி...அம்மா ஏதோ படம் பார்த்தனா..அதான் கெட்ட கனா. நீ தூங்கு...காலையில ஸ்கூலுக்கு போகணுமில்ல.."
குழந்தையை படுக்க வைத்து விட்டு வைஜெயந்தி வியர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டாள்..
என்ன ஒரு மோசமான கனவு..புதை மணலில் புதைவது போல்..டைம் என்ன...நான்கு ஆகிறது..அதி காலையில் கண்ட கனவு பலிக்குமோ...கடவுளே..
இனி தூக்கம் வராது..வெறுமனே படுத்திருக்க வேண்டியது தான்..அது இன்னும் கொடுமை...மூடிய கண்களும் விழித்திருக்கும் மனமும்...நரக வேதனை..
ஏன் என் வாழ்க்கை இப்படி போகிறது..தின்று..தூங்கி..உழைத்து..மீண்டும் தூங்கி...தின்று...உழைத்து...இது வாழ்க்கையா..சிறையா...இது தான் புதை மணலா..நான் புதைந்து கொண்டு தான் இருக்கிறேன்...உயிருடன்...
ஆஃபிஸ் ஒன்பது மணிக்கு தான்..பழங்காநத்தத்தில் இருந்து சிம்மக்கல்லில் இருக்கும் ஆஃபிஸ் என்னவோ பக்கம் தான்..ஆனால் ட்ராஃபிக் ஜாமிலும், மதுரையில் அடிக்கும் வெயிலிலும் சென்று திரும்பி வருவதற்குள் வாழ்க்கை கசந்து விடுகிறது...அப்படியே வீடு வந்தால் மட்டும் என்ன..இங்கு என்ன வாழ்கிறது...எந்த ராஜ குமாரன் காத்துக் கொண்டிருக்கிறான்...குழந்தையை தவிர...அவளும் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கையே அர்த்தம் இல்லாது போய்விடும்..
இன்றைக்கு ஆஃபிஸில் என்ன வேலை...தினமும் செய்யும் அதே வேலை தான்..இல்லை இன்று புதிதாய் சில இஞ்சினியர்கள் சேருகிறார்கள்..அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் இருப்பதால் நான் தான் அவர்களுக்கு சம்பள கணக்கு எல்லாம் ஓபன் செய்ய வேண்டி இருக்கும்..சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கும்...சீக்கிரமே திரும்பி வர முடிந்தால் நல்லது...குழந்தை பாவம் காத்துக் கொண்டிருப்பாள்..
வைஜெயந்தி புரண்டு குழந்தையை இறுக அணைத்து கொண்டாள்..அன்றைய தினம் தனது வாழ்க்கையில் சில புதிய கணக்குகள் திறக்கப்பட போவது அவளுக்கு தெரியாது....
=======================
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்கள் எல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...
பத்துக்கு பத்து சைஸில் இருந்த அந்த அறையின் ஒரு மூலையில் அந்த பழைய ஆடியோ ப்ளேயர் அலறிக் கொண்டிருந்தது.
"மாப்ள...குமரா...ஒம் பேரு திருக்குமரன்கிறதுக்காக இப்பிடி திருப்பரங்குன்றத்துல இருந்து கிட்டு குடிக்கும் போது சாமி பாட்டு கேட்கிறது ஓவர் அலப்பரையா இல்ல..."
"மாப்ள அண்டா...அதுக்கு தாண்டா எங்க அப்ஸு அப்பவே தெளிவா திருக்குமரன்னு பேரு வச்சிருக்காரு...ரொம்ப தெளிவுல்ல...எவனும் என்ன மரியாத இல்லாம கூப்பிட முடியாது..."
"வேணாம்...இதோட ஆறு ரவுண்டு ஆயிடுச்சி..மணி வேற நாலு ஆயிடுச்சி...விடியப் போவுது..இதோட நிறுத்திக்கோ..போதும்..."
"ய்யால...நாங்கல்லாம் அறுவது ரவுண்டு அடிச்சாலும் ஸ்டெடியா நிப்போம்டி..விடிய தான் போவுது மாப்ள...வேல கெடைச்சிருச்சில்ல...வாழ்க்கைல மொத வேலைங்கிறது ஒரு தடவை தான் கெடைக்கும்...அப்பவே கொண்டாடிறணும்..."
"நீ பேசுவடா...ஒனக்கெல்லாம் வேலை குடுத்தாய்ங்க பாரு..அவய்ங்கள சொல்லணும்...வேலைக்கு இன்னிக்கி தான ஜாய்ன் பண்ற...மொத நாளே இப்பிடி விடிய விடிய குடிச்சிட்டு போனா வெளங்குமா..."
"அடடா...மாப்ள...அக்கறையில நெஞ்ச நக்கிட்டடா..அப்பிடியே அந்த ஊறுகாய இங்க தள்ளு...அதையும் நக்கிராத...பூண்டு ஊறுகாயும்..பட்டை சரக்கும்...சும்மா கும்முனு தூக்குது..."
"போடாங்...முட்டாக் கூ...ஒனக்கு போயி சொன்னேன் பாரு...என்ன பிஞ்ச செருப்பால தான் அடிக்கணும்..."
"அவசரப்படாத மாப்ள...இந்த ரவுண்டு முடிச்சிட்டு ஓஞ் செருப்ப பிச்சே அடிச்சிருவோம்....அப்பிடியே..காலைல என்னை நீ தான் ஆஃபிஸுல டிராப் பண்ணனும்...என் வண்டிய எங்க அப்ஸு எடுத்துட்டு போறாராம்...வயசானாலும் அவரு அலப்பரை தாங்க முடிலை...இப்பவும் பொட்டிக்கடைக்கு போறதுனாலும் யமஹாவுல தான் போவேங்கிறாரு..."
"சரி சரி..ட்ராப் பண்றேன்..ஆபிசு எங்க இருக்கு..."
"சிம்மக்கல்லுல மாப்ஸ்.."
"சரி...ஆனா ஆபிஸ்ல ஒழுங்கா இரு...எதுனா ஜாரியா பாத்து பின்னாடி போயிராத...வெட்டிபுடுவாய்ங்க..."
"ஆமா...நாங்க ஜாரி பாக்க தான் போறோம் பாரு...அடப் போடா.."
"ரொம்ப நேரம் ஆச்சிடா..இந்தா முருகன் கோவிலுக்கு டூரிஸ்டெல்லாம் வந்துட்டாய்ங்க...இப்ப தூங்கினா தான் காலையில எட்டு மணிக்காவது எந்திரிக்க முடியும்.. நீ அப்பிடியே கட்டைய சாத்து...நான் இப்பிடி சாத்துறேன்..."
"சாத்திட்டா போச்சி..."
குடி போதையில் திருக்குமரன் தூங்கி போன போது அன்றைய தினம் அவனுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றப் போவது அவனுக்கு தெரியாது...
=============================
கதையை சொல்லிக் கொண்டு வந்த வேதாளம் திடீரென நிறுத்திக் கொண்டது...
"என்ன தாளமே நிறுத்திட்ட..."
வேதாளம் இளித்தது...
"ஒனக்கு தெரியாதா மாதி...இதுக்கு மேல சொல்றதுன்னா எனக்கு எதுனா உள்ள போணும்..என்ன சரக்கு வச்சிருக்க..."
"சரக்கா...ஒரு மண்ணும் இல்ல..நீ ஒழுங்கா கதைய சொல்லு..எனக்கு நேரமாவுது.."
"ஹி ஹி ஹி...மாதி...இந்த டுபாக்கூரெல்லாம் என்ட்ட விடாத...ஒன்ன பத்தி எனக்கு தெரியாதா...கார்ல எதுனா சரக்கு இல்லாம நீ வெளிய வர மாட்டியே....என்ன சரக்கு வச்சிருக்க..."
"ம்ம்ம்...எனக்கு மட்டும் கொஞ்சமா டெக்கீலா வச்சிருக்கேன்...அதெல்லாம் ஒனக்கு பிடிக்காது..."
"டெக்கீலாவோ ஷகீலாவோ....எங்களுக்கு எல்லாம் பிடிக்கும் போ போ போயி எடுத்துட்டு வா..."
"ச்சை...ஒரு வேதாளத்துக்கு சரக்கு வாங்கி தர்ற நிலமைக்கு நான் வந்துட்டேனே.."
விக்கிரமாதித்தன் புலம்பிக் கொண்டே காரை நோக்கி நடந்தான்...
============= தொடரும் =============
43 comments:
//விக்கிரமாதித்தன் புலம்பிக் கொண்டே காரை நோக்கி நடந்தான்...
//
கார்ல இருந்ததை யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்ளாம்...
மருதக்கதை சூப்பராதான் இருக்கும்.ஆட்டம் தொடரட்டும். ஆனா ரொம்ப ஆடாதீங்கப்பு.மருதைக்காரங்க மோசமானவங்க
விக்ரமாதித்தனையும்,வேதாளத்தையும் வச்சு இப்படியும் கதை பண்ணலாம்னு வித்யாசமா கலக்கிட்டு இருக்கீங்க!!! சரளமான எழுத்து நடை...படிக்கத் தூண்டற விதம்,...ம்ம்ம் அடுத்த பதிவுக்காக காத்திருக்கணும் போல...!!!
//"ச்சை...ஒரு வேதாளத்துக்கு சரக்கு வாங்கி தர்ற நிலமைக்கு நான் வந்துட்டேனே.."//
அது சரி...அது சரி...!!!???
//"டெக்கீலாவோ ஷகீலாவோ....எங்களுக்கு எல்லாம் பிடிக்கும் //
விவா டெக்கீலா!அது சரி!ஆனா ஷகிலாவும் பிடிக்கும் கூட்டத்த நினைச்சா சிரிப்பாத்தான் வருது.இதுல வேதாளம் வேற:)ஏய்யா தமிழனுக்கும்,சேட்டனுக்கும் இந்த விசயத்தில் ரசனை குறைஞ்சு போனது எப்படி?
//ஆட்சி போன ஒரு அம்மா தான் ராஜினாமா செய்யி, ராஜினாமா செய்யின்னு பறக்கறாங்கன்னா நீ எதுக்கு பறக்குற?" //
அந்த நாற்காலிக்குள்ளாறதான் அப்படி என்னதான் இருக்குதுன்னு கொஞ்சம் வேதாளத்த கேட்டு சொல்றது:)
//
பழமைபேசி said...
//விக்கிரமாதித்தன் புலம்பிக் கொண்டே காரை நோக்கி நடந்தான்...
//
கார்ல இருந்ததை யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்ளாம்...
//
ஆஹா, இப்பிடி தான் அடிக்கடி பாட்டில் காணாப் போவுதா??
//
குடுகுடுப்பை said...
மருதக்கதை சூப்பராதான் இருக்கும்.ஆட்டம் தொடரட்டும். ஆனா ரொம்ப ஆடாதீங்கப்பு.மருதைக்காரங்க மோசமானவங்க
//
அவய்ங்க மோசமானவய்ங்க தான்...ஆனா அவய்ங்க அருவா ஸ்டாண்டுன்னா நாங்க பட்டாசு கடையாக்கும். சத்தம் வச்சிருவோமுல்லா? :0)
//
நான் கார்த்தி said...
விக்ரமாதித்தனையும்,வேதாளத்தையும் வச்சு இப்படியும் கதை பண்ணலாம்னு வித்யாசமா கலக்கிட்டு இருக்கீங்க!!! சரளமான எழுத்து நடை...படிக்கத் தூண்டற விதம்,...ம்ம்ம் அடுத்த பதிவுக்காக காத்திருக்கணும் போல...!!!
//"ச்சை...ஒரு வேதாளத்துக்கு சரக்கு வாங்கி தர்ற நிலமைக்கு நான் வந்துட்டேனே.."//
அது சரி...அது சரி...!!!???
//
வாங்க கார்த்தி..வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி..
அடிக்கடி வாங்க!
//
ராஜ நடராஜன் said...
//"டெக்கீலாவோ ஷகீலாவோ....எங்களுக்கு எல்லாம் பிடிக்கும் //
விவா டெக்கீலா!அது சரி!ஆனா ஷகிலாவும் பிடிக்கும் கூட்டத்த நினைச்சா சிரிப்பாத்தான் வருது.இதுல வேதாளம் வேற:)
//
வாங்க நடராஜன் சார் :0)
எனக்கும் ஷகிலா பிடிக்காதுங்க...ஆனா அது ஒரு கூறு கெட்ட வேதாளம்..அதுக்கு எந்த ரசனையும் கெடையாது :))
//
ஏய்யா தமிழனுக்கும்,சேட்டனுக்கும் இந்த விசயத்தில் ரசனை குறைஞ்சு போனது எப்படி?
//
ஹி ஹி..அது ஒண்ணும் புதுசா கொறஞ்சி போகல..எப்பவும் அப்பிடி தான் இருக்கு!
//
ராஜ நடராஜன் said...
//ஆட்சி போன ஒரு அம்மா தான் ராஜினாமா செய்யி, ராஜினாமா செய்யின்னு பறக்கறாங்கன்னா நீ எதுக்கு பறக்குற?" //
அந்த நாற்காலிக்குள்ளாறதான் அப்படி என்னதான் இருக்குதுன்னு கொஞ்சம் வேதாளத்த கேட்டு சொல்றது:)
//
அதெல்லாம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்...வேதாளமே பாவம் அடுத்த வேளை சரக்குக்கு வழி இல்லாம இருக்குது..அதுக்கு எப்பிடி தெரியும்? :0)
அட எங்க ஊரு கதை.. நல்லா இருக்கு
உங்க கதை படிச்ச தான் தண்ணி ஞாபகம் வருது, மனுஷன் எல்லாம் அந்த பக்கம் போய் வருசகணக்கு ஆச்சு, புதுசு புதுசா சரக்கு பேரை சொல்லி வயத்து எரிச்சலை வேற கிளப்புறீங்க
should i be happy that i read the part3 (atlast) or worry about how long i have to wait to read the next?
Present SIR
டெக்கீலானா எதோ ஒரு விளம்பரத்துலயோ இல்ல villains song பாட்டுலயோ நெருப்போட காக்டைல் பண்றதைக் காட்டுவாங்களே அதானே !!! எனக்குத் தெரியுமே!!!
உங்க அலப்பரை தாங்க முடிலை. ஒரு பாரா கதை சொல்றதுக்குள்ள 3 பாகம் தாண்டி பல வாரம் ஓட்டிடீங்களே!
வேதாளம் வரதுக்கு இவ்ளோ நாள் ஆயிடிச்சா?
//"அவங்க மானம் என்ன ஒரு கோடி ரூவா தான...நம்ம வடிவேலு வாங்குற சம்பளத்த விட ச்சீப்பா இருக்கு...குடுத்துட்டா போச்சி..ஆனா மானத்தை எப்பிடி நஷ்டப்படுத்துறதுன்னு தான் எனக்கு பிரியல..அது என்ன புண்ணாக்கு யாவாரமா நஷ்டமாவுறதுக்கு.."//
"அவங்க மானம் என்ன ஒரு கோடி ரூவா தான...நம்ம வடிவேலு வாங்குற சம்பளத்த விட ச்சீப்பா இருக்கு." அப்படின்னு மானத்த நஷ்டபடுத்திட்டு "ஆனா மானத்தை எப்பிடி நஷ்டப்படுத்துறதுன்னு தான் எனக்கு பிரியல..அது என்ன புண்ணாக்கு யாவாரமா நஷ்டமாவுறதுக்கு.." ஒரு கேள்வி வேற?
//
நசரேயன் said...
அட எங்க ஊரு கதை.. நல்லா இருக்கு
//
நீங்க மதுரையா பாசு?
//
நசரேயன் said...
உங்க கதை படிச்ச தான் தண்ணி ஞாபகம் வருது, மனுஷன் எல்லாம் அந்த பக்கம் போய் வருசகணக்கு ஆச்சு, புதுசு புதுசா சரக்கு பேரை சொல்லி வயத்து எரிச்சலை வேற கிளப்புறீங்க
//
அக்கிரமமா இருக்கே.... சிம்மக்கல்லுன்னு சொல்லிருக்கேன்..திருப்பரங்குன்றம்னு ஒரு பாட்டே போட்ருக்கேன்...நியாயமா உங்களுக்கு மீனாட்சி அம்மனும் முருகன் கோவிலும் ஞாபகம் வந்திருக்கணும்... ஒயின் ஷாப்பும், தங்க ரீகல் தியேட்டரும், முட்டை பரோட்டாவும் ஞாபகம் வந்தா நான் என்ன பண்றது? :))
//
shrek said...
should i be happy that i read the part3 (atlast) or worry about how long i have to wait to read the next?
//
வாங்க ஷ்ரெக்.. ரொம்ப லேட்டானதுக்கு ஸாரி. நிஜமாவே டைம் கிடைக்கல.. அடுத்த பாகம் சீக்கிரம் வரும்!
//
உருப்புடாதது_அணிமா said...
Present SIR
25 November 2008 09:08
//
யேய், யாருப்பா அங்க..நம்ம அணிமா அண்ணாச்சிக்கு ஆஜர் போட்ருங்கப்பா!
//
நான் கார்த்தி said...
டெக்கீலானா எதோ ஒரு விளம்பரத்துலயோ இல்ல villains song பாட்டுலயோ நெருப்போட காக்டைல் பண்றதைக் காட்டுவாங்களே அதானே !!! எனக்குத் தெரியுமே!!!
//
அப்ப நீங்க படத்துல மட்டும் தான் பாத்திருக்கீங்க, அடிச்சதே இல்ல? :0)
//
Sundar said...
உங்க அலப்பரை தாங்க முடிலை. ஒரு பாரா கதை சொல்றதுக்குள்ள 3 பாகம் தாண்டி பல வாரம் ஓட்டிடீங்களே!
//
வாங்க சுந்தர்.
அது ஒண்ணுமில்லீங்க...வேதாளம் கதையையும் சேத்து எழுத வேண்டியிருக்கா, அதனால மெயின் கதைக்கு வர இவ்ளோ நேரமாயிடுச்சி..இனிமே வேதாளத்தை வாயை மூட சொல்லிர வேண்டியது தான் :0)
//
pathivu said...
வேதாளம் வரதுக்கு இவ்ளோ நாள் ஆயிடிச்சா?
"அவங்க மானம் என்ன ஒரு கோடி ரூவா தான...நம்ம வடிவேலு வாங்குற சம்பளத்த விட ச்சீப்பா இருக்கு." அப்படின்னு மானத்த நஷ்டபடுத்திட்டு "ஆனா மானத்தை எப்பிடி நஷ்டப்படுத்துறதுன்னு தான் எனக்கு பிரியல..அது என்ன புண்ணாக்கு யாவாரமா நஷ்டமாவுறதுக்கு.." ஒரு கேள்வி வேற?
//
வாங்க மோகன்..
அடடா, இப்பிடி தான் மானத்தை நஷ்டப்படுத்தறதா? இம்புட்டு நாளா தெரியாம போச்சே :))
//அப்ப நீங்க படத்துல மட்டும் தான் பாத்திருக்கீங்க, அடிச்சதே இல்ல? :0)//
let me try one day!!! just for taste?!
and... then?
தொடங்கீட்டீங்களா.. சூப்பரு. தொடக்கம் நல்லாருக்கு. கத போற போக்கு புரியுறாப்புல இருக்கு. தொடர்ந்து படிச்சிருவோம். :-)
ண்ணா.. என்னங்கணா.. இப்படி பொறுப்பே இல்லாம.. இவ்ளோ நாள் கழிச்சி தொடர்பதிவு போடறீங்க..
ஒவ்வொரு தடவையும் உங்க பதிவுகளை படிக்கும் பொது இப்படி ஒரு சந்தேகம் வருது..
நீங்க ரைட்டரா.. எதாவது பத்திரிக்கைகளுக்கு [நக்கீரன், ரிப்போட்டர்] இதுக்கு முன்னாடி எழுதி இருக்கீங்களா..
ரொம்ப நல்லா எழுதறீங்க.. படிக்கறதுக்கே அவ்ளோ நல்லா இருக்கு.. செம எழுத்து நடை. பின்றீங்க..
ரெண்டு பகுதி விக்கிரமா-வேதாளம் பேசியே போச்சி. இந்த பகுதியிலும் கதை ஆரம்பிச்சி மட்டும்தான் வச்சி இருக்கீங்க.. சீக்கிரம் அடுத்தடுத்த பகுதிகளை எழுதுங்க..
ஏதோ முழுக்க இங்கிலிபிஸ் பதிவு வேற ஒன்னு எழுதி இருந்தீங்க.. இங்கிலிபிஸ் சரியா தெரியாதுங்கறதுனால நான் படிக்கல.. முடிந்தால் அதை தமிழில் மொழிபெயர்த்து போடவும்..
//
நான் கார்த்தி said...
//அப்ப நீங்க படத்துல மட்டும் தான் பாத்திருக்கீங்க, அடிச்சதே இல்ல? :0)//
let me try one day!!! just for taste?!
//
அது என்ன one day? இன்றே இப்பொழுதே ட்ரை பண்ணிப்பாருங்க!
//
மங்களூர் சிவா said...
கலக்கல்!
//
வாங்க சிவா அண்ணாச்சி..
//
Anonymous said...
and... then?
//
அது அடுத்த வாரம்!
//
G.Ragavan said...
தொடங்கீட்டீங்களா.. சூப்பரு. தொடக்கம் நல்லாருக்கு. கத போற போக்கு புரியுறாப்புல இருக்கு. தொடர்ந்து படிச்சிருவோம். :-)
//
வாங்க ஜி.ரா.
தொடங்கி ரொம்ப நாளாச்சிங்கண்ணா...நடுவுல ஒரு மாசம் எழுத முடியலை..
வருகைக்கு நன்றி!
//
Saravana Kumar MSK said...
ண்ணா.. என்னங்கணா.. இப்படி பொறுப்பே இல்லாம.. இவ்ளோ நாள் கழிச்சி தொடர்பதிவு போடறீங்க..
//
வாங்க சரவணா..
கொஞ்ச நாளு ஊர் சுத்திக்கிட்டு இருந்ததுல டைம் பிரச்சினை..அதான்..இப்ப படத்தை ஆரம்பிச்சுட்டோம்ல :0))
//
Saravana Kumar MSK said...
ஒவ்வொரு தடவையும் உங்க பதிவுகளை படிக்கும் பொது இப்படி ஒரு சந்தேகம் வருது..
நீங்க ரைட்டரா.. எதாவது பத்திரிக்கைகளுக்கு [நக்கீரன், ரிப்போட்டர்] இதுக்கு முன்னாடி எழுதி இருக்கீங்களா..
//
I take your words as compliment mate!
ஆனா இப்பிடியெல்லாம் சந்தேகம் வரப்படாது....இங்க பதிவு எழுதும் போதே அடுத்த பாகத்தை எழுத ஒரு மாசம் ஆகுது..இதுல வாரப்பத்திரிக்கை வேறையா? பத்திரிக்கை ஆசிரியரு எம் மேல ஆசிட் அடிச்சிருவாரு :0)
//
Saravana Kumar MSK said...
ரொம்ப நல்லா எழுதறீங்க.. படிக்கறதுக்கே அவ்ளோ நல்லா இருக்கு.. செம எழுத்து நடை. பின்றீங்க..
//
நன்றி..நன்றி..தொடர்ந்து உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி..
//
Saravana Kumar MSK said...
ஏதோ முழுக்க இங்கிலிபிஸ் பதிவு வேற ஒன்னு எழுதி இருந்தீங்க.. இங்கிலிபிஸ் சரியா தெரியாதுங்கறதுனால நான் படிக்கல.. முடிந்தால் அதை தமிழில் மொழிபெயர்த்து போடவும்..
//
உங்களுக்கு இங்கிலிபீசு தெரியாதா? அப்ப நீங்க என்ன மாதிரி தான் :)
ஆனா அந்த கதையை தமிழ்ல மொழிபெயர்க்க முடியாதுங்க..ரொம்ப கெட்ட வார்த்தையா இருக்கு...பாருங்க, Fucking Hell அப்படின்னு ஒரு வார்த்தை வருது...இதை எப்பிடி தமிழ்ல எழுதறது?? அப்புறம் மக்கள் என்னை நரகத்துக்கு அனுப்பிர மாட்டாங்க?
ரொம்ப சுவாரஸ்யமா போகுது அதுசரி. ரொம்ப நாள் படிக்காமல் இப்போ வந்து படிப்பதின் அட்வாண்டேஜ் என்ன தெரியுமா? உங்க அடுத்த பாகத்துக்காக ரொம்ப நாள் காத்திருக்க தேவை இல்லை :)
ரொம்ப சுவாரஸ்யமா போகுது அதுசரி. ரொம்ப நாள் படிக்காமல் இப்போ வந்து படிப்பதின் அட்வாண்டேஜ் என்ன தெரியுமா? உங்க அடுத்த பாகத்துக்காக ரொம்ப நாள் காத்திருக்க தேவை இல்லை :)
//ஆனா அந்த கதையை தமிழ்ல மொழிபெயர்க்க முடியாதுங்க..ரொம்ப கெட்ட வார்த்தையா இருக்கு...பாருங்க, Fucking Hell அப்படின்னு ஒரு வார்த்தை வருது...இதை எப்பிடி தமிழ்ல எழுதறது?? அப்புறம் மக்கள் என்னை நரகத்துக்கு அனுப்பிர மாட்டாங்க?//
ROFTL
Post a Comment