Wednesday 18 May 2011

குட்பை மிஸ்டர் கருணாநிதி!

எவருடைய நேரத்தையும் வீணாக்க எனக்கு விருப்பமில்லை.ஷா ஜஹான் தாரா ஷிகோ ஒளரங்கசேப் என்றால் உங்களுக்கு தாஜ்மஹாலும் மும்தாஜும் நினைவில் வந்தால் தயவு செய்து இந்த இடுகையை மூடிவிட்டு மானாட மயிலாட பார்க்க போங்கள். அது உங்களுக்கு நல்லது.  எனக்கும் நல்லது. 

யாருக்கும் தெரியாத ரகசிய வரலாறு இல்லை என்றாலும் மொகலாய பேரரசை பற்றி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பாபரில் ஆரம்பித்து ஒளரங்கசேபில் முடிந்த மொகலாய பேரரசு வரலாறுகளின் வரலாறாக நிற்கிறது. திராவிடர் கழகத்தின் அண்ணா துரையில் இருந்து தோன்றி திருக்குவளை மு கருணாநிதி வரை நீண்ட திமுக போல.

மறுக்க முடியாத உண்மை. திமுகவுக்கு தோல்விகள் புதிதல்ல. திமுகவின் ஆரம்பமே வெற்றியில் ஆரம்பிக்கவில்லை. அன்றைய காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியில் தான் ஆரம்பித்தது. அடுத்த தேர்தலில் கட்சி தலைவர் அண்ணாதுரையே தோற்றார். அண்ணாதுரைக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆகி சில வருடங்களிலேயே எம்.ஜி.ஆரிடம் தோல்வி. எம்.ஜி.ஆர் மறையும் வரை  பதிமூன்று வருடங்கள் தோல்வி. வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத தொடர் தோல்வி. 

ஒரே தோல்வியில் சிதறிப் போகும் கட்சிகள் மத்தியில் தொடர் தோல்விகளாலும் திமுக துவண்டு விடவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுகவுக்கு ஒரே மாற்று சக்தி என்ற நிலையில் தொடர்ந்து கோட்டை போல இயங்கிக் கொண்டே தான் இருந்தது. அதற்கு பின் வெற்றிகளும் தோல்விகளும். 1991ல் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் ஏற்பட்ட படுதோல்வி. கருணாநிதி மட்டுமே தப்பி பிழைத்த தேர்தல் அது. வேறு எந்த கட்சியும் சிதறுண்டு போய் இருக்கும். ஆனால் திமுக பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து எழுந்து அடுத்த தேர்தலில் மீண்டும் ஆளுங்கட்சி.

ஆனால்....

பீனிக்ஸ் பறவை இப்பொழுது உரிக்கப்பட்ட கோழியாக நிற்கிறது.  எண்களை மட்டும் பார்த்தால் மற்ற தோல்விகளுடன் ஒப்பிடும் போது இது மாபெரும் தோல்வி இல்லை தான்.  ஆனால், மற்ற தோல்விகளுக்கும் இதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் மற்ற தேர்தல்களில் திமுக கிட்டத்தட்ட தனியாக நின்றது. இந்த தேர்தலிலோ காங்கிரஸ், பாமக என்ற பலமான கூட்டணி கட்சிகள், சன் டிவி கலைஞர் டிவி தினகரன் என்று ஊடக பலம். பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பிரச்சாரம் வீட்டுக்கு வீடு இலவசம் பண வினியோகம்.

இத்தனை இருந்தும் குறைந்த பட்சம் எதிர்கட்சியாக கூட வர முடியாத அளவுக்கு கருணாநிதியின் கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் கட்சி தான். அண்ணாதுரை ஆரம்பித்த திமுகவுக்கும் கருணாநிதி அழகிரி ஸ்டாலின் தயாநிதி கனிமொழி குடும்பம் நடத்தும் கட்சிக்கும் அதிகம் தொடர்பில்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல.

ஐந்தே வருடம் மத்திய மந்திரியாக இருந்த ஒருவர் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தது சமூக சேவை. அவர் மேல் வழக்கு போட்டால் அது பார்ப்பன சதி. ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி. பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்து மூன்று பேரை எரித்துக் கொன்ற பின்னர் கண்கள் பனித்தது இதயம் இனித்தது. கடன் வாங்கி பிஎஸ்ஸியும் பொறியியலும் படித்தவன் சென்னை மேன்ஷனில் தங்கி ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியின் பேரன்கள் நூறு கோடிக்கு படம் எடுப்பார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ், சன் பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் வைத்து தமிழ் வளர்த்தது தனிக்கதை. எந்த நேரம் மின்சாரம் வரும் எந்த நேரம் மின்சாரம் போகும் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது  கருணாநிதி ஏதேனும் பாராட்டு விழாவில் மூழ்கி இருப்பார். உன் உமிழ்நீர் அது தமிழ்நீர் என்று ஏதேனும் அல்லக்கை தமிழின் முகத்தில் மலத்தை கரைத்து ஊற்றிக் கொண்டிருக்கும்.

என்ன சொன்னாலும் காலை டிஃபன் முடித்து விட்டு மதிய உணவு நேரத்துக்குள் உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை புரிந்தவர் கருணாநிதி ஒருவர் தான். ஆணும் பெண்ணும் குழந்தைகளும் துரத்தி துரத்தி கொல்லப்படுவதைப் பற்றி கேட்டால் மழை விட்டாலும் தூவானம் விடாது என்று திமிரான பதில் வரும். கொத்து கொத்தாக கொல்லப்படுவது அவருக்கு தூவானம். கருணாநிதியின் தூவானத்திற்கு பின்னரே இரண்டு இனவெறி கொலைவெறி பேயரசுகளால் நாற்பதாயிரம் மக்கள் குடும்பம் குழந்தைகளுடன் ஒரே இரவில் கொன்று புதைக்கப்பட்டனர். இதையும் சில கொடூர மனம் கொண்ட அல்லக்கைகள் மறுக்க கூடும் என்பது வேறு கதை.

இந்த கருணாநிதி தான் இன்று மண்ணை கவ்வி இருக்கிறார்.  தன் மகனுக்கு இந்த இலாகா வேண்டும் மகளுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று டெல்லிக்கு ஓடி விட்டு தமிழ்நாட்டு மீனவன் சிங்கள இனவெறி அரசால் சுட்டு கொல்லப்பட்டு சடலம் கூட கிடைக்காவிட்டாலும் கடிதம் மட்டுமே எழுதும் கருணாநிதி தான் மண்ணை கவ்வி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரை உண்ணாவிரதம் அறிக்கை என்று நாடகம் ஆடிவிட்டு குடும்பத்திற்கு மந்திரி பதவி வாங்கிய கருணாநிதி தான் மண்ணை கவ்வியிருக்கிறார். 

தன் மகளின் பெயரை சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்த்ததும் இலங்கை பிரச்சினையை தீர்மானம் போட்ட கருணாநிதியின் முகத்தில் தான் மண் அடிக்கப்பட்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டவர்களை கூட தன் ஊழல் குடும்ப அரசியலுக்கு கேடயமாக பயன்படுத்திய கருணாநிதியின் முடிவுரை தான் எழுதப்பட்டிருக்கிறது.

முடிவுரை தான்.  பண பலம் கூட்டணி பலம் ஊடக பலம்  மத்திய அரசு மாநில அரசு என்று அதிகார பலம் அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த ஆதரவு என்று எல்லாம் இருந்தும் எதிர்கட்சி என்ற நிலையை கூட பெற முடியாத கேவலமான தோல்வி. போன தேர்தலில் கொசு என்று இவரின் கூட்டணிக் கட்சிகளால் வர்ணிக்கப்பட்ட அதே விஜயகாந்தின் கட்சியை விட கீழான நிலை. மக்களுக்கு இந்த நபரின் மீதான நம்பிக்கை முற்றிலும் அழிந்து போய்விட்டது. இரண்டாவது இடத்தை கூட இவருக்கும் இவரது மகன்கள், மகள்கள், பேரன்களுக்கு தர மக்களுக்கு விருப்பமில்லை. 

மிக நிச்சயமாக இது திமுகவின் முடிவு அல்ல. முடிவின் ஆரம்பம். நீதிக்கட்சி போல சோனியாவின் காங்கிரஸ் போல திமுக மெல்ல தேய்ந்து அழியும்.   மொகலாய பேரரசின் அழிவுக்கு அடிக்கல் நாட்டிய ஒளரங்கசேப் போல திமுகவின் அழிவுக்கு அடிக்கல் நாட்டிய பெருமகன் என்றே கருணாநிதியின் வரலாறு எழுதப்படும். 

பூம்புகார் வசனம் எழுதிய கருணாநிதிக்கு கண்டிப்பாக சிலப்பதிகாரம் தெரிந்திருக்கும். அப்படியே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கருதுகோளும். பகுத்தறிவின் போலி பகலவன்கள் மறுத்தாலும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அறம் கூற்றாகும். ஆகட்டும்!

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொன்ன அரசியல் சாணக்கியரே, உங்களுக்கான தூவானம் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அறம் கூற்றாகும் எனில் மிக நிச்சயம் ஆரம்பித்து பெருமழையாக உம்மை மூழ்கடிக்கும். ஆகவே இப்பொழுதே சொல்லிக் கொள்கிறேன்.

குட்பை மிஸ்டர் கருணாநிதி!

==========================================================

43 comments:

அது சரி(18185106603874041862) said...

படம் உதவி: ஜுனியர் விகடன்.

vasu balaji said...

பேடு பாய் கருணாவுக்கு குட்(டு) பை:)

Anonymous said...

//டெல்லிக்கு ஓடி விட்டு தமிழ்நாட்டு மீனவன் சிங்கள இனவெறி அரசால் சுட்டு கொல்லப்பட்டு சடலம் கூட கிடைக்காவிட்டாலும் கடிதம் மட்டுமே எழுதும் கருணாநிதி//

இதைவிட அருமையாக யாராலும் கருணாநிதியை வர்ணிக்க முடியாது. கையை காட்டுமையா. தொட்டு கும்பிட்டு நடையை கட்டுறேன்.

கலகலப்ரியா said...

நன்னாயிட்டுண்டு மோனே... தமிழ்மணம் ஏன் எனக்கு கவனம் வரணும்... :-l

கலகலப்ரியா said...

குட்(ப்)பையா தூக்கி கடாசிட்டியளே...

பனித்துளி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி . முடிந்ததைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை

துளசி கோபால் said...

நச்!!!!!!!!!!!!!!!

Katz said...

unmai...

ராஜ நடராஜன் said...

மனுசனை அடிச்சு துவைச்சு காயப்போட்ட பின் தமிழ் பட போலிசு மாதிரி வந்து கும்மாங்குத்து குத்துறீங்களே!

மன்னிக்காமல் மறப்போம்!

ILLUMINATI said...

மானாட மயிலாட தந்த 'எழுச்சித் தலைவர' இப்படி சாய்ச்சுபுட்டீங்களேய்யா. ;)

ILLUMINATI said...

மக்களுக்கு எவ்வளவோ கொடுத்தோமே..
அரிசி, டிவி, காப்பீடுன்னு கேக்காமலேயே கூட்டிக் கூட்டி(!!) கொடுத்தமே.இப்படி தோற்கடிசுட்டாங்களே...- திமுக சொம்புகள் கதறல். :)

நசரேயன் said...

தகவலுக்கு நன்றி

Mahesh said...

மிகச் சரி.....

'தமிழினத் தலைவன்' என்று சொல்லிக் கொள்ளு(ல்லு)ம்போது கொஞ்சம் கூட நா கூசவில்லையே.....

Mahi_Granny said...

காரண காரியங்களை சரியாகத் தொகுத்ததில் மானாவது மயிலாவது. கட்டி போட்டு விட்டீர்கள்

அது சரி(18185106603874041862) said...

|| வானம்பாடிகள் said...
பேடு பாய் கருணாவுக்கு குட்(டு) பை:)||

ஆமா. அது அவருக்குமே தெரிஞ்சிருக்கும். அதான் ஓய்வு கொடுத்துட்டாஙக்ன்னு சொல்றாரு

அது சரி(18185106603874041862) said...

|| அனாமிகா துவாரகன் said...
//டெல்லிக்கு ஓடி விட்டு தமிழ்நாட்டு மீனவன் சிங்கள இனவெறி அரசால் சுட்டு கொல்லப்பட்டு சடலம் கூட கிடைக்காவிட்டாலும் கடிதம் மட்டுமே எழுதும் கருணாநிதி//

இதைவிட அருமையாக யாராலும் கருணாநிதியை வர்ணிக்க முடியாது. கையை காட்டுமையா. தொட்டு கும்பிட்டு நடையை கட்டுறேன்.||

அனாமிகா நன்றி. அவருக்கு சிறப்பான வர்ணனைகள் அவரே சொல்லிக் கொள்வது தான்.

அது சரி(18185106603874041862) said...

|| கலகலப்ரியா said...
நன்னாயிட்டுண்டு மோனே... தமிழ்மணம் ஏன் எனக்கு கவனம் வரணும்... :-l

18 May 2011 09:43||

நன்றி ப்ரியா.

(அது கடைசில தமிழ்மணம் பட்டன் இருக்கே, அதனால ஞாபகம் வந்துருக்குமோ?)

அது சரி(18185106603874041862) said...

|| கலகலப்ரியா said...
குட்(ப்)பையா தூக்கி கடாசிட்டியளே...||

ம்ஹும். நான் செய்யலை. மக்கள் செஞ்சிட்டாங்க.

அது சரி(18185106603874041862) said...

|| ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
பகிர்ந்தமைக்கு நன்றி . முடிந்ததைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை
||

நன்றி சங்கர்.

அது சரி(18185106603874041862) said...

|| துளசி கோபால் said...
நச்!!!!!!!!!!!!!!!||

நன்றி டீச்சர்.

அது சரி(18185106603874041862) said...

|| Katz said...
unmai...
||

நன்றி காட்ஸ்.

அது சரி(18185106603874041862) said...

|| ILLUMINATI said...
மானாட மயிலாட தந்த 'எழுச்சித் தலைவர' இப்படி சாய்ச்சுபுட்டீங்களேய்யா. ;)||

எல்லாம் அவரே வச்சிக்கிட்ட சொந்த செலவு சூனியம்.

அது சரி(18185106603874041862) said...

|| ILLUMINATI said...
மக்களுக்கு எவ்வளவோ கொடுத்தோமே..
அரிசி, டிவி, காப்பீடுன்னு கேக்காமலேயே கூட்டிக் கூட்டி(!!) கொடுத்தமே.இப்படி தோற்கடிசுட்டாங்களே...- திமுக சொம்புகள் கதறல். :)||

ஆமா, என்னவோ இவங்க சொந்த காசுல கொடுத்த மாதிரி.

அது சரி(18185106603874041862) said...

|| நசரேயன் said...
தகவலுக்கு நன்றி
||

யூ ஆர் வெல்கம்.....:))

அது சரி(18185106603874041862) said...

|| ராஜ நடராஜன் said...
மனுசனை அடிச்சு துவைச்சு காயப்போட்ட பின் தமிழ் பட போலிசு மாதிரி வந்து கும்மாங்குத்து குத்துறீங்களே!

மன்னிக்காமல் மறப்போம்!||

மறத்தலும் மன்னித்தலும் நாம் செய்ய முடியுமா ராஜ நடராஜன்? பாதிக்கப்பட்டவர்கள் அல்லவா அதை தீர்மானிக்க முடியும்?

அது சரி(18185106603874041862) said...

|| Mahesh said...
மிகச் சரி.....

'தமிழினத் தலைவன்' என்று சொல்லிக் கொள்ளு(ல்லு)ம்போது கொஞ்சம் கூட நா கூசவில்லையே.....||

அவருக்கு வழக்கமான ஒன்று தானே அது.

அது சரி(18185106603874041862) said...

|| Mahi_Granny said...
காரண காரியங்களை சரியாகத் தொகுத்ததில் மானாவது மயிலாவது. கட்டி போட்டு விட்டீர்கள்

18 May 2011 19:46||

நன்றி மஹி க்ரேனி.

கபீஷ் said...

ஹே குட் பை நண்பா பாட்டு போட்டு கேட்டுட்டிருந்தீங்களாம் 4 நாளா, பக்கத்து வீட்டு அம்மிணி சொன்னாங்க.

bandhu said...

நல்ல தொகுப்பு. கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டார்கள். இது முடிவின் ஆரம்பம் எனவே நானும் நினைக்கிறேன்!

அது சரி(18185106603874041862) said...

|| கபீஷ் said...
ஹே குட் பை நண்பா பாட்டு போட்டு கேட்டுட்டிருந்தீங்களாம் 4 நாளா, பக்கத்து வீட்டு அம்மிணி சொன்னாங்க.||

எனக்கென்ன அவரை மாதிரி நீண்ட ஓய்வா கிடைச்சிருக்கு? கஞ்சிக்கு வழி பண்ணவே காலம் சரியா இருக்கு. இதுல எங்கருந்து எழுதறது?

அது சரி(18185106603874041862) said...

|| bandhu said...
நல்ல தொகுப்பு. கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டார்கள். இது முடிவின் ஆரம்பம் எனவே நானும் நினைக்கிறேன்!||

நன்றி பந்து.

உண்மை தான். திருமங்கலம் ஃபார்முலாவை நம்பி அதீதமாய் ஆடி விட்டதன் விளைவே இந்த நீண்ட ஓய்வு.....இனி இதுவே தொடரும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

கபீஷ் said...

//இது முடிவின் ஆரம்பம் எனவே நானும் நினைக்கிறேன்!
//
உறுதியா சொல்ல முடியல. ஆனா அப்படி இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்

அது சரி(18185106603874041862) said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

அது சரி(18185106603874041862) said...

|| கபீஷ் said...
//இது முடிவின் ஆரம்பம் எனவே நானும் நினைக்கிறேன்!
//
உறுதியா சொல்ல முடியல. ஆனா அப்படி இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்||

நீண்ட நாட்களாகும். ஆனால் காங்கிரஸ் போல மூன்றாம் நான்காம் இடத்தில் இருக்கும்.

குடுகுடுப்பை said...

Mahesh said...
மிகச் சரி.....

'தமிழினத் தலைவன்' என்று சொல்லிக் கொள்ளு(ல்லு)ம்போது கொஞ்சம் கூட நா கூசவில்லையே.....///

அதே..இவர் நினைத்திருந்தால் ஒரு எழுச்சியை உருவாக்கியிருக்கமுடியும் தன் குடும்பம் கட்டிய வியாபார சாம்ராஜயத்தை காக்க அனைத்தையும் துறந்தவர் கருணாநிதி.

குடுகுடுப்பை said...

காங்கிரஸ் அதிமுக கூட சேர்ந்து உயிர் பிச்சை எடுக்கும் போல இருக்கே.

KARTHIK said...

//இது முடிவின் ஆரம்பம் //

அவர் கண்முன்னே இதுநடக்கனும் :-))

க.பாலாசி said...

செமத்தியான அடி... என்னமோ என் மனசில இருந்த கோபமெல்லாம் இந்த வழியா கொட்டிவச்சமாரி இருக்கு... க்ளாஸ்..

Anonymous said...

பீனிக்ஸ் பறவை இப்பொழுது உரிக்கப்பட்ட கோழியாக நிற்கிறது. //
போட்டு தாக்குங்க!

Anonymous said...

தமிழ்நாட்டு மீனவன் சிங்கள இனவெறி அரசால் சுட்டு கொல்லப்பட்டு சடலம் கூட கிடைக்காவிட்டாலும் கடிதம் மட்டுமே எழுதும் கருணாநிதி//
அதுதான் அண்ணாரின் தமிழ் தொண்டு!

Jayadev Das said...

\\ஒரே தோல்வியில் சிதறிப் போகும் கட்சிகள் மத்தியில் தொடர் தோல்விகளாலும் திமுக துவண்டு விடவில்லை.\\ ஐயா இந்த சிங்கம், புலி, மான் போன்றவற்றை பாதுக்காப்போடு வளர்த்தால் தான் காப்பாற்ற முடியும், அவ்வளவு எளிதல்ல. இருந்த போதும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இந்த தெரு நாய்கள் இருக்கு பாருங்க, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கார்ப்பரே ஷன்காரன் வந்து வண்டி வண்டியா புடிச்சுகிட்டு போறான், ஆனாலும் வீதியெங்கும் திரும்பவும் நாயிங்களா மேயும். கருணாநிதியின் யோக்கியதையை இவ்வளவு புட்டு புட்டு வைத்துள்ளீர்கள், ஆனாலும் இந்த மாதிரி ஒரு ஈனப் பிறவிக்கு துதி பாடி மானங்கெட்ட பிழைப்பு நடத்தி வரும் வாலி, வைரமுத்துவை என்ன சொல்ல? அவனுங்க வயித்துக்கு என்ன சாப்பிடராங்கன்னே தெரியலை. கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டார்களா? அறிவில்லாதவர்களா? இல்லை ஒன்னும் தெரியாத சிறுவர்களா? ஒருத்தருக்கு கருணாநிதி வயசே இருக்குமே, அறிவு இருக்காதா? இந்த ஈனப் பிழைப்பு இவர்களுக்குத் தேவையா?

Anonymous said...

poathum sir overa paysathinga. amma vai pattri konjam solluga.kalyanam, government staff thunpatuthinathu yellamay solluga pa

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நேர்த்தியாக எழுதப்பட்ட அருமையான பதிவு...

நன்றி.