Wednesday 25 May 2011

தட்டுங்கள் திறக்கப்படும்....

தட்டுங்கள் திறக்கப்படும்
தவறாக புரிந்து கொண்டு யாரேனும் 
தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.


அவர்கள் மீது பிழையில்லை
தட்டச் சொன்னவன் நான் தான்.
ஆனால்

கவனியுங்கள்
என் கதவுகள் வெளிப்புறமாக பூட்டி இருக்கின்றன.

அந்த கதவுகளின் சாவி 
தொலைந்து போய் வெகுநாட்களாகி விட்டது.
இன்னேரம் எங்கோ இருக்க கூடும்
இல்லையேல் துருப்பிடித்தும் போயிருக்கலாம்.

இவ்விடத்தில் ரகஸியமாய் ஒன்று
அதை தூக்கி எறிந்தது நான் தான் என்று
எனக்கு தனியே ஒரு சந்தேகம் உண்டு.
ஒரு வேளை
அந்த சாவி என் முகத்தின் முன்னரே இருக்க கூடும்.
அறையின் கண்ணாடிகள் உடைந்து போனதில் 
எனக்கு என் முகம் மறந்து விட்டது.
அப்படியே சாவியும்.

வறண்ட குளத்தில் மூழ்கும் 
காற்றில்லா பந்தை பார்த்து 
காலில்லா ஒற்றைத் தவளை கத்திக் கொண்டே இருக்கிறது.
அதற்குத் தெரியும்
மெளனத்தின் பேரிரைச்சல் அதன் 
சத்தங்களை மென்று விழுங்கும் என்று.

தட்டுங்கள் திறக்கப்படும்.
ஆனால் 
கவனியுங்கள்.
என் கதவுகள் வெளிப்புறமாக பூட்டி இருக்கின்றன.

இருங்கள் வருகிறேன்.
இன்றைக்கும் யாரோ தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

6 comments:

ராஜ நடராஜன் said...

ஹலோ!யாருங்க வீட்டுல!

கலகலப்ரியா said...

ம்ம்... ஐ லைக் இட்...

கிறுக்கல்கள், மொக்கைனு எல்லாம் போட்டே ஆவணுமா.... இந்தக் கவுஜர்ஸ் தன்னடக்கம் தாங்க முடிலடா சாமி...

Anonymous said...

புரியுற மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. எனக்கு கவிதைன்னாலே அலர்ஜி. பொண்ணுன்னா கவிதை ரசிக்கத் தெரியனும் என்று கிண்டலடிப்பார்கள். என்ன சொல்ல வாருகிறீர்கள் என்று புரிகிற மாதிரி இருந்தப்போ மொக்கை லேபிளைப் பார்த்த உடன் குழப்பம் வேறு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

(வரிகள் பிரமாதம். வித்தியாசமான வரிகள்)

vasu balaji said...

ம்ம். நன்னாயிட்டுண்டு. இ.மா.கோ. என்னு கொள்ளாம்.:)

Mahesh said...

தொடர் முரண் ::)

மிக ரசித்தேன் ...

vasu balaji said...

முதல்ல போட்ட கமெண்டக் காணோம்னு சி.பி.ஐ.க்கு கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம்னு பார்க்கறேன். அதுனா கண்டு பிடிப்பாங்களா எங்க போச்சுன்னு. இன்னோருக்கா சொல்லிக்கறேன். நன்னாயிட்டுண்டு. இ.மா. கோ.க்கு கொள்ளாம்.