Wednesday, 3 June 2009

பசி........

"எந்த சக்களத்தி முண்ட‌ எனக்கு பொண்ணு தரேங்குறா சொல்லு..."

என்னது அசிங்கமா..எடுத்த உடனேயே சக்களத்தி..முண்டைன்னு...முகம் சுளிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மாணிக்கத்தை தெரியாது என்று அர்த்தம்....

மாணிக்கம் இப்படித் தான் வர்ஜா வர்ஜமில்லாமல்...உங்களுக்கும் எனக்கும் தெரிந்த நாகரீகம் தெரியாமல் பேசுவான்...இடுப்பில் ஒரு அழுக்கு பச்சை லுங்கியும் தோளில் ஒரு துண்டும்...சட்டையில்லாமல் கறுப்பு உடம்புடன் திரிவான்..என் மாமனின் நட்பு என்பதால் எனக்கும்...முதலில் சகித்துக் கொண்டு இப்பொழுது எனக்கு பழகி விட்டது...மாணிக்கத்துக்கு தொழில் மாடு வளர்ப்பது, வீடு வீடாக சென்று பால் ஊற்றுவது...நாலு பசு மாடு, மூணு எருமை...அவற்றின் கன்றுகள்...பத்து பதினைந்து கோழிகள்..அவற்றின் குஞ்சுகள்...இறைந்து கிடக்கும் வைக்கோல்..ஒரு ஓரமாய் அவிழ்ந்து கிடக்கும் புண்ணாக்கு மூட்டை...அவனது வீட்டை வீடு என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்...சீக்கிரம் நாலு ஆடு வாங்குனா நல்ல காசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்...அனேகமாய் அடுத்த வாரம் இங்கு சில ஆடுகளும்...

நான் போன போது கோழிகளை பிடித்து கூண்டில் அடைத்துக் கொண்டிருந்தான்...

"ஏண்ணே...வயசு முப்பத்தஞ்சாச்சி...ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான" என்று கேட்டதற்கு தான் இந்த "சக்களத்தி முண்டை" பதில்...

"ஆமா...இப்பிடியே சொல்லிக்கிட்டு இரு...ஒரு நாளு யாரும் இல்லாம தான் சாவப் போற..."

"ஆட்டிக்கிட்டு வந்துட்டியா சாபம் குடுக்க....வர்றவ எல்லாம் ஒரு ச்சின்ன வேலையா இருந்தாலும் பரவால்ல...ஆனா மாடு வளக்குறவனுக்கு எப்பிடி பொண்ணு குடுக்கிறதுங்கிறாளுவ...ஒன்ன மாதிரி வெள்ளையும் சொள்ளையுமா மினுக்கிக்கிட்டு இருந்தா தான் பிடிக்கிது...இவளுங்களுக்காவ மாட்ட வித்துட்டு நான் என்ன செய்றது...பிச்ச எடுக்க தான் போவணும்...இதுல செவ்வாய் தோஷம் வேற...அப்புறம் எங்க இருந்து கல்யாணம்...பெருசா பேசுறான் கூமுட்ட....."

கல்யாணம் என்று யார் சொன்னாலும் அவனுக்கு கோபம் வருவதில் நியாயம் இருந்தது...இதற்கு மேல் பேசினால் என் டவுசர் கிழியும் அபாயம் இருப்பதால்...

"சரிண்ணே...டென்ஷன் ஆவாத...இன்னும் சாப்பிடல இல்ல...சரி சரி வா...பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போயி முட்ட பரோட்டா சாப்டலாம்..."

"முட்ட பரோட்டாவா.... கொஞ்ச இரு, இந்தா வந்துர்றேன்...."

"சாப்பிட மட்டும் ஒடனே கெளம்பிருவியே..."

"காலைலருந்து காஞ்சி போயி கெடக்கேன்...எம் பசி எனக்கு தான்டா தெரியும்..." ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

------------------------------------------------------------------------

கொஞ்ச நாளிலேய மாணிக்கம் வாயெல்லாம் பல்லாக எங்கள் வீட்டுக்கு வந்தான்...

"டேய் ரொம்ப படிச்சவனே...நீ சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்க போறேன்டா...பொண்ணெல்லாம் பார்த்தாச்சி...கரூர் பக்கத்துல..."

நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது...அதுக்காக வம்பிழுக்கிற சான்ஸை விட முடியுமா...

"இதப் பார்ரா...பெரிய நியூஸ் தான்...ஆமா, பொண்ணுக்கிட்ட ஒன் வீட்ல‌ பத்து பசுவும் எட்டு எருமையும் இருக்கறத சொல்லிட்டியா..இல்ல ஏமாத்திட்டியா..."

"ஒம் புத்தி ஒன்னை விட்டு எங்க போகும்...எல்லாம் சொல்லியாச்சி...."

ஆனால் அவன் என்னிடம் சொல்லாதது...அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரத்தான விஷயம்...

கல்யாணமும் நடந்தது...தெருவில் எல்லாருக்கும் பத்திரிக்கை வைத்து...சோறு போட்டு...மாணிக்கம் இள மஞ்சள் நிற பட்டு வேட்டியும் இள மஞ்சள் நிற பட்டு சட்டையும் உடுத்தி...மாரியம்மன் கோவிலில் இரவு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மைக் செட்டு வைத்து...குத்தாட்டம் நடத்தி...

கல்யாணம் ஆகி மூன்று நாட்களுக்கு மாணிக்கத்தை ஆளையே பார்க்க முடியவில்லை... ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

----------------------------------------------------------------------------

நாலு நாள் கழித்து அன்று சாயந்தரம் வீட்டுக்கு பால் கொண்டு வந்திருந்தான்...முகத்தில் உற்சாகம் இல்லை...

"எண்ணன்ணே...ஒன்ன பார்த்தா கல்யாண களையே இல்லியெ...பொண்ணுக் கூட எதுனா பிரச்சினையா..."

"ஒண்ணுமில்லடா...ஒரு சின்ன பிரச்சினை...அவ கோவிச்சிக்கிட்டு அவங்க ஊருக்கு போயிட்டா..."

கல்யாணம் ஆன புதிதில் பெண்கள் தாய் வீட்டுக்கு போக துடிப்பது சகஜம் தான்...ஆனால் மூன்றே நாளில்??

"ஏன்ணே...நீ எதுனா சண்டை போட்டியா..."

"எல்லாம் அதே கருமம் தான்டா...அவளுக்கு வீட்ல மாடு இருக்கது பிடிக்கலை...என் மேல சாணி நாத்தம் வருதாம்...எல்லா மாட்டையும் வித்துரு....இல்லாட்டி ஒன்னைய சாணின்னு தான் கூப்பிடுவேன்னா...ரெண்டு நாளா அப்பிடி தான் கூப்பிட்டா...நேத்தி எனக்கு கோவம் வந்திடுச்சி...திட்டிட்டேன்...கோவிச்சிக்கிட்டு ஊருக்கு போயிட்டா..."

"ஒனக்கு அறிவே இல்ல...சரி வுடு...காலையில மாமா, நானெல்லாம் கருரூக்கு போய் பேசி கூட்டி வந்துருவோம்..."

எத்தனை கோர்த்தாலும் அந்த கல்யாணம் ஒரு வருடத்திற்கு மேல் ஒட்டவில்லை...அவன் மனைவி தாய் வீட்டுக்கு போனவள் அங்கே தங்கிவிட மாணிக்கம் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, திருப்பரங்குன்றம் என்று போக ஆரம்பித்தான்...திடீரென்று கடவுளே இல்லை என்பான்...கொஞ்ச நாள் கழித்து மீண்டும் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, திருப்பரங்குன்றம்... ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

-----------------------------------------------------------------------

இந்த முறை லீவில் வீட்டுக்கு போன போது மாணிக்கத்தை பார்க்க முடியவில்லை. வேறு யாரோ பால் கொண்டு வந்தார்கள்...

"எங்க மாமா...மாணிக்கம் அண்ணனை காணோம்...மாட்டெல்லாம் வித்துட்டாரா...."

மாமா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்...

"மாணிக்கத்தை ஹாஸ்பிடல்ல சேத்துருக்கு...அதனால வர மாட்டான்..."

"ஏன் என்னாச்சி...ஒடம்பு எதுவும் சரியில்லையா..."

"ஆமா...அவனுக்கு..ம்ம்ம்ம்...அதெல்லாம் ஒனக்கெதுக்கு...விடு..."

"சொல்லுங்க...என்னாச்சி..."

"அவனுக்கு எய்ட்ஸ்டா...எங்கயோ போயி நோய வாங்கிட்டு வந்துட்டான்...இப்ப ஹாஸ்பிடல்ல வச்சி பாத்துக்கிட்டு இருக்காங்க...."

============

இந்த கதை,உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

========================================================

41 comments:

பழமைபேசி said...

பின்னுரை... கதைய சாப்ட்ருச்சே?

இதுக்குத்தான் அல்லயில சப்பைகளக் கூட்டியாற பக்குவம் அண்ணாச்சிக்குத் தெரியாதோ?

அது சரி said...

//
பழமைபேசி said...
பின்னுரை... கதைய சாப்ட்ருச்சே?

இதுக்குத்தான் அல்லயில சப்பைகளக் கூட்டியாற பக்குவம் அண்ணாச்சிக்குத் தெரியாதோ?

04 June 2009 01:01
//

நன்றி அண்ணாச்சி...

பின்னூட்டம் போட்டே பழக்கமாயிடுச்சா..அதனால அப்படி வந்துருச்சி...இப்ப எடுத்துட்டேன்...

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

அப்பாவி தமிழன் said...

விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நம்மக்கு KNOWLEDGE இல்ல , ஆனா எனக்கு பிடிச்சிருக்கு

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தலைப்பின் மூலம் கதையின் சொல்லாத பாகங்களை சொல்லும் முயற்சி.........

மொத்ததில் கதை சிறப்பு

பதி said...

நல்லா இருக்கு !!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

கதை நல்லா இருக்குங்க..வெற்றி பெற வாழ்த்துக்கள்..

கலையரசன் said...

//பெருசா பேசுறான் கூமுட்ட கூ...!//

இத கொஞ்சம் வெட்டியிருக்கலாம்...
மத்தபடி சூப்பர்!

பழமைபேசி said...

//பின்னூட்டம் போட்டே பழக்கமாயிடுச்சா..அதனால அப்படி வந்துருச்சி...//

சரியா சொன்னீங்க.... உங்க பின்னூட்டங்கள்தானே எங்க இடுகைய வாழ வைக்குது? முகக்துதிக்காக சொல்லலைங்க அண்ணாச்சி, நெசமாலுமேதான்!

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

அதிஷா said...

வாழ்த்துக்கள் நண்பா!

மங்களூர் சிவா said...

கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம் அவன்

கதை சூப்பர்!

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Saravana Kumar MSK said...

வாங்கண்ணே.. எதிர்வினை எழுதி இருப்பீங்களோன்னு நெனச்சி வந்தேன்.. :)
போட்டிக்கான கதையா...

Saravana Kumar MSK said...

கதை பயங்கரமா இருக்கு.. :)

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

அது சரி said...

//
அப்பாவி தமிழன் said...
விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நம்மக்கு KNOWLEDGE இல்ல , ஆனா எனக்கு பிடிச்சிருக்கு
04 June 2009 01:59
//

வாங்க அப்பாவி தமிழன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

விமர்சனம் எல்லாம் சும்மா கவலைப்படாம பண்ணுங்க...

அது சரி said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
தலைப்பின் மூலம் கதையின் சொல்லாத பாகங்களை சொல்லும் முயற்சி.........

மொத்ததில் கதை சிறப்பு
04 June 2009 02:03
//

வாங்க சுரேஷ்...உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி!

அது சரி said...

//
பதி said...
நல்லா இருக்கு !!!!!
04 June 2009 10:23
//

வாங்க பதி..நன்றிங்க..

அது சரி said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
கதை நல்லா இருக்குங்க..வெற்றி பெற வாழ்த்துக்கள்..
04 June 2009 11:13
//

வாழ்த்துக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்...

அது சரி said...

//
கலையரசன் said...
//பெருசா பேசுறான் கூமுட்ட கூ...!//

இத கொஞ்சம் வெட்டியிருக்கலாம்...
மத்தபடி சூப்பர்!
04 June 2009 12:05
//

வாங்க கலையரசன்...நீங்கள் சொல்வது உண்மை...அந்த வார்த்தைகளை வெட்டியிருக்கலாம்...

எழுதும் போது இது தோன்றவில்லை...எழுதி வாசிக்கும் போது மாற்றிவிடலாமா என்று தோன்றியது...ஆனால் அது அந்த பாத்திரத்தின் மீது என்னை திணிப்பதாக இருக்கும்...ஆகவே அப்படியே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அது சரி said...

//
பழமைபேசி said...
//பின்னூட்டம் போட்டே பழக்கமாயிடுச்சா..அதனால அப்படி வந்துருச்சி...//

சரியா சொன்னீங்க.... உங்க பின்னூட்டங்கள்தானே எங்க இடுகைய வாழ வைக்குது? முகக்துதிக்காக சொல்லலைங்க அண்ணாச்சி, நெசமாலுமேதான்!
04 June 2009 12:13
//

உண்மைங்க...படிப்பவர்கள் செய்யும் பின்னூட்டம் தான் எழுத உற்சாகப்படுத்துகிறது...

அது சரி said...

//
நசரேயன் said...
வாழ்த்துக்கள்
04 June 2009 17:46
//

நன்றி நசரேயன்...

அது சரி said...

//
அதிஷா said...
வாழ்த்துக்கள் நண்பா!
04 June 2009 18:07
//

அட...அதிஷா கூட நம்ம பதிவு பக்கம் வர்றாரா??

நன்றி நண்பா!

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம் அவன்

கதை சூப்பர்!

வெற்றிபெற வாழ்த்துக்கள்.
04 June 2009 19:49
//

உண்மை சிவா அண்ணா...வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
வாங்கண்ணே.. எதிர்வினை எழுதி இருப்பீங்களோன்னு நெனச்சி வந்தேன்.. :)
போட்டிக்கான கதையா...
04 June 2009 19:56
//

எதிர்வினை தான?? அடுத்து எழுதிட்டா போச்சி...நிறைய எழுத வேண்டியிருக்கு :0))

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
கதை பயங்கரமா இருக்கு.. :)

வெற்றி பெற வாழ்த்துக்கள்..
04 June 2009 19:57
//

பயங்கரமா இருக்குன்னா என்ன அர்த்தம்? :0))

நன்றி சரவணா!

அது சரி said...

எதிர்பார்த்ததை விட நிறைய பேர் வந்திருக்கிறார்கள்...ஓட்டு போட்டிருக்கிறார்கள்...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி!

T.V.Radhakrishnan said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கும்க்கி said...

நண்பரே நிச்சயம் அந்த வார்த்தையை வெட்டியே ஆகவேண்டும்.இனைய நட்புக்கள் பலரும் படிக்கும் பதிவுகளில் இப்படியான வார்த்தைகள் அந்த கேரக்டரை பற்றி உணர்த்துவதை விடவும் படிப்பவர்களின் முகம் சுளிக்க வைக்க மட்டுமே உதவும்.
சிறு கதையின் போக்கையே இந்த மாதிரியான வார்த்தைகள் மாற்றவும் கூடும்.மேலும் நீங்கள் எழுதியிருப்பது போட்டிக்கான சிறுகதை என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை.

குடுகுடுப்பை said...

என்னது அசிங்கமா..எடுத்த உடனேயே சக்களத்தி..முண்டைன்னு...முகம் சுழிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மாணிக்கத்தை தெரியாது என்று அர்த்தம்....//

சுழிக்கவில்லை யென்றால் அது சரி யை தெரியும் என்றும் அர்த்தம்.

குடுகுடுப்பை said...

//
கலையரசன் said...
//பெருசா பேசுறான் கூமுட்ட கூ...!//

இத கொஞ்சம் வெட்டியிருக்கலாம்...
மத்தபடி சூப்பர்!
04 June 2009 12:05
//

வாங்க கலையரசன்...நீங்கள் சொல்வது உண்மை...அந்த வார்த்தைகளை வெட்டியிருக்கலாம்...

எழுதும் போது இது தோன்றவில்லை...எழுதி வாசிக்கும் போது மாற்றிவிடலாமா என்று தோன்றியது...ஆனால் அது அந்த பாத்திரத்தின் மீது என்னை திணிப்பதாக இருக்கும்...ஆகவே அப்படியே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

04 June 2009 21:41
Blogger அது சரி said...

//
பழமைபேசி said...
//பின்னூட்டம் போட்டே பழக்கமாயிடுச்சா..அதனால அப்படி வந்துருச்சி...//

சரியா சொன்னீங்க.... உங்க பின்னூட்டங்கள்தானே எங்க இடுகைய வாழ வைக்குது? முகக்துதிக்காக சொல்லலைங்க அண்ணாச்சி, நெசமாலுமேதான்!
04 June 2009 12:13
//

உண்மைங்க...படிப்பவர்கள் செய்யும் பின்னூட்டம் தான் எழுத உற்சாகப்படுத்துகிறது...//

படிப்பவர்கள்.

குடுகுடுப்பை said...

கதை அருமை. (படித்தேன்)

கோபிநாத் said...

எதிர்பார்க்காத முடிவு..தலைப்புக்கு 100%பொருத்தமாக இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்ததுக்கள் ;)

அது சரி said...

//
T.V.Radhakrishnan said...
வெற்றிபெற வாழ்த்துக்கள்.

04 June 2009 23:14
//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

அது சரி said...

//
கும்க்கி said...
நண்பரே நிச்சயம் அந்த வார்த்தையை வெட்டியே ஆகவேண்டும்.இனைய நட்புக்கள் பலரும் படிக்கும் பதிவுகளில் இப்படியான வார்த்தைகள் அந்த கேரக்டரை பற்றி உணர்த்துவதை விடவும் படிப்பவர்களின் முகம் சுளிக்க வைக்க மட்டுமே உதவும்.
சிறு கதையின் போக்கையே இந்த மாதிரியான வார்த்தைகள் மாற்றவும் கூடும்.மேலும் நீங்கள் எழுதியிருப்பது போட்டிக்கான சிறுகதை என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை.

05 June 2009 03:41
//

கும்க்கி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அந்த குறிப்பிட்ட வார்த்தை படிப்பவர்களை முகம் சுளிக்க வைக்கக்கூடும் என்பது என்பதை ஒப்புக் கொள்கிறேன்....ஆனால், பாத்திரங்களுக்கு தான் கதையே தவிர படிப்பவர்களுக்கு எழுதுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை...

இப்படி ஒரு பாத்திரம் இருந்திருந்தால், இப்படி ஒரு வார்த்தை பேசுமா என்றால் ஆம் என்றே என்னால் சொல்ல முடியும்...இல்லை என்றால் நீங்கள் வாழும் உலகம் வேறு...எனக்கு தெரிந்த உலகம் வேறு...

உண்மையில் உங்கள் பின்னூட்டம் என்னை புன்னகைக்க வைக்கிறது...இந்த கதையின் அடிப்படையே அடுத்தவர்களின் முகம் சுளிப்பால் நாசமாய் போன ஒரு வாழ்க்கை தான்!

(ஆனாலும் அந்த ஒரு வார்த்தைக்காக விவாதம் வளர்க்க எனக்கு விருப்பம் இல்லாததால் என் விருப்பம் துளியும் இன்றி அந்த வார்த்தை எடுக்கப்பட்டுவிட்டது...)

அது சரி said...

//
குடுகுடுப்பை said...


சுழிக்கவில்லை யென்றால் அது சரி யை தெரியும் என்றும் அர்த்தம்.

05 June 2009 04:31

//

சரியாப் போச்சி...முத்திரையே குத்தியாச்சா??

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
கதை அருமை. (படித்தேன்)

05 June 2009 04:37

//

நன்றி தல..

நானே ரவுடியாகிட்டேன்...நீங்களும் சீக்கிரம் ஜீப்புல ஏறுங்க...

அது சரி said...

//
கோபிநாத் said...
எதிர்பார்க்காத முடிவு..தலைப்புக்கு 100%பொருத்தமாக இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்ததுக்கள் ;)

07 June 2009 14:53
//

நன்றி கோபிநாத்...

ராஜ நடராஜன் said...

உங்களை கேள்வி பதிலுக்கு பதில் சொல்லக் கூப்பிட்டா இங்க வந்து கதை அடிச்சிகிட்டு இருக்கீங்க:)

ராஜ நடராஜன் said...

இம்புட்டு திறமைகளை எப்படித்தான் ஒளிச்சி வைப்பீங்களோ?கதை என்பதை விட ஒரு மனிதனின் நிஜம் என்பதே உண்மை.

Anonymous said...

mandaya pota michael !!
endra thalipil en neenga oru blog elutha kudathu??

:)

Anonymous said...

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் 'மம்மா மியா' நடன நிகழ்ச்சி, சென்னையில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சரத்குமார், ராதிகா மற்றும் ராம்கி ஆகியோர் கலந்துகொண்டு நடனம் ஆடினார்கள்.

அமெரிக்க கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட 'மம்மா மியா' என்ற நடனத்தை முறைப்படி கற்று தேர்ந்தவர் வரலட்சுமி.

ஒரு மகள் தன் தந்தையைத் தேடுவது போன்ற ஒரு நாடகத்தை நாட்டியமாக நேற்று அரங்கேற்றினார் வரலட்சுமி.

இந்த நடன குழுவில், வரலட்சுமி உள்பட 50 பேர் நடனமாடினர்.

நடன நாட்டியத்தின் முதல் நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகடமியில் 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்தபடி வரலட்சுமி ஆடியபோது, அரங்கம் அதிர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டார். ராதிகாவின் தங்கை நிரோஷா, கணவர் ராம்கியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நடன நிகழ்ச்சியின் முடிவில் சரத்குமார், ராதிகா, ராம்கி ஆகியோரும் மேடையில் நடனம் ஆடினர்.

இந்த நடன நாட்டியத்தை தொடர்ந்து நடத்த உள்ளார் வரலட்சுமி.
mamma mia, தமிழ், சினிமா, நடனம், நாட்டியம், மம்மா மியா, சரத்குமார்.

வல்லிசிம்ஹன் said...

இதுதான் சும்மக் கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்னு சொல்றதோ. பாவாம் அந்தப் ஐய்ன்.

நல்ல சாரமானகதை. வெற்றி பெற வாழ்த்துகள்.