Thursday 26 February 2009

ஆஸ்கர் விருதும் அழுகும் தக்காளியும்

இரண்டு செய்திகள்


செய்தி 1:

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.

சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ் தமிழ்


===============

செய்தி 2:

கிணத்துக்கடவு: தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால், கிணத்துக்கடவு மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிணத்துக்கடவு பகுதிகளில் 5,005 மற்றும் ஹைபிரட் ரக தக்காளிகள் நல்ல காய்ப்புக்கு வந்துள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஏக்கரில் 10 கிலோ எடையுள்ள 60 கூடை தக்காளி கிடைத்து வருகிறது. விவசாயிகள் மாட்டு வண்டி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் கொண்டு வந்து ஏலத்தில் விடுகின்றனர். ஏராளமான கூடைகள் குவிந்ததால் கடந்த 13ம் தேதி நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 60 பைசாவுக்கு ஏலம் போனது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஏலத்தில் விடாமல் சுடுகாட்டில் கொட்டிவிட்டு சென்றனர்.

அதன்பின் விவசாயிகள் தக்காளி கூடைகளை மார்க்கெட்டுகு கொண்டு வருவதை குறைத்து வருகின்றனர்.

நன்றி: தினமலர்


==========================

இதுல என்ன உள்குத்துன்னு கேக்குற நண்பர்களுக்கு: உள்குத்து எல்லாம் இல்லீங்ணா ;0) ச்சும்மா ரெண்டு செய்தி...எந்த செய்தி என்ன சொல்லுதுன்னு படிக்கிறவங்களுக்கு புரிஞ்சா சரி...
பிஜெபி ஆட்சில இருந்தப்ப ஒண்ணு சொல்வாங்க...
"இந்தியா ஒளிர்கிறது"
கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு தப்பா வரும்!

11 comments:

குடுகுடுப்பை said...

அய்யா என்னமோ உள்குத்து இருக்கு.
எனக்கு ஒன்னும் புரியல.புரிஞ்சு எனக்கு என்ன ஆஸ்காரா கெடக்க போகுது.

குடுகுடுப்பை said...

அப்படியே கெடச்சாலும் பாராட்டவா போராங்க.

குடுகுடுப்பை said...

அழுகின தக்காளிய எடுத்து அடிப்பாங்க,அதுனால போட்டிலேந்து விலகிக்கொள்கிறேன்

நசரேயன் said...

தலைவருக்கு உடம்பு சரியில்லை, அவரு மனம் கோணம எழுதுதனும்

பழமைபேசி said...

என்னமோ உள்குத்து இருக்கு. எனக்கு ஒன்னும் புரியலன்னு பின்னூட்டம் போட்டுக்கச் சொல்லி குடுகுடுப்பை சொன்னாரு...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அய்யா என்னமோ உள்குத்து இருக்கு.
எனக்கு ஒன்னும் புரியல.புரிஞ்சு எனக்கு என்ன ஆஸ்காரா கெடக்க போகுது.
26 February 2009 22:49
//

உள்குத்து எல்லாம் இல்லீங்ணா ;0) ச்சும்மா ரெண்டு செய்தி...எந்த செய்தி என்ன சொல்லுதுன்னு படிக்கிறவங்களுக்கு புரிஞ்சா சரி...

பிஜெபி ஆட்சில இருந்தப்ப ஒண்ணு சொல்வாங்க...

"இந்தியா ஒளிர்கிறது"

கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு தப்பா வரும்!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அழுகின தக்காளிய எடுத்து அடிப்பாங்க,அதுனால போட்டிலேந்து விலகிக்கொள்கிறேன்

26 February 2009 22:50
//

அழுகின தக்காளிக்கே இப்படி சொன்னா எப்படி வருங்கால முதல்வரா வர்றது?? சில பேரு அழுகின முட்டை அடிச்சாலே தொடைக்காம போறாங்க!

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
தலைவருக்கு உடம்பு சரியில்லை, அவரு மனம் கோணம எழுதுதனும்

26 February 2009 22:51
//

நான் எங்க எழுதினேன்?? அவரு அறிக்கையை படிச்சி அவருக்கே மனம் கோணும்னா, நிதம் அறிக்கையை படிக்கிற நமக்கு எப்படி இருக்கும்?? :0))

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
என்னமோ உள்குத்து இருக்கு. எனக்கு ஒன்னும் புரியலன்னு பின்னூட்டம் போட்டுக்கச் சொல்லி குடுகுடுப்பை சொன்னாரு...

26 February 2009 23:08
//

இதுல என்ன உள்குத்துன்னு எனக்கு புரியலையே :0))

KarthigaVasudevan said...

சுத்தமா புரியலை

மங்களூர் சிவா said...

தலைப்பு சூப்பர்!

(இப்பிடி சொல்லிதான் எஸ்க்கேப்பு ஆவணும்)

சொல்லவந்த விசயம் புரிந்தது.