வணக்கம் அப்பச்சி,
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்னு எங்க அப்பத்தா கெளவி சொல்லும்...உள்ளூர்ல ஒங்களுக்கு செல்வாக்கு இருக்கோ இல்லியோ எல்லா கவுருமெண்டுலயும் நீங்க ஒரு பதவி வாங்கிடுறீங்க...அட நம்ம ஊர்க்காரரு கலக்குறாரு அப்பிடின்னு நானும் சொம்மா தான் இருந்தேன்...
பொய்யில மூணு வகை உண்டு...ஒண்ணு பொய்யி, ரெண்டு பச்சைப் பொய்யி...மூணாவது புள்ளி விவரம்...சொன்னது நானில்ல...நமக்கு ஏது அம்புட்டு வெவரம்...எல்லாம் ஒங்க சேக்காளி கலிஞ்சரு ஒங்களைப் பத்தி சொன்னது தான்...
அந்த மூணாவது மேட்டரு அதேங்...புள்ளி வெவரம்...அதுல நீரு கில்லாடின்னு எல்லாருக்கும் தெரியும்...கேக்குறவன் கேணப்பயலா இருந்தா மன்மோகன்சிங்கு தான் பி.எம்.னு சொல்லுவாங்களாம்...அது மாதிரி, நம்ம கூட்டத்துக்கு வந்துருக்கானுவ பின்ன கேணப்பயல் இல்லாம எப்படின்னு ரொம்ப தெகிரியமா நீரு புள்ளி வெவரத்த அள்ளி உட்ருக்கீரூ...ஆனா பாரும்வே, அதுலயும் செல பயக ஓட்டய கண்டு புடுச்சிட்டானுவ...செதம்பரம் பேச்சு பல குத்து வாங்குன பம்பரம் மாதிரி இருக்குலேன்னு நக்கலடிக்கிறானுவ..
என்னலே ரொம்ப பேயுதன்னு சொல்லுதீரு?? கெரகம்...நான் எங்கவே கேட்டேன்...நம்ம பயக ஊரு, நாடு, தட்ஸ்தமிழ், தமிழ்மணம்னு எல்லா எடத்திலயும் கேக்குறானுவ...இந்தா ஒரு பத்து..
1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??"
2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??"
3. மூணாவது கேள்வி, தட்ஸ் தமிழ்ல யாரோ ஒருத்தர் கேட்டுருந்தது..."இலங்கை பிரச்சினை அறுவது வருஷமா நடக்குதுன்னு சொல்றீங்க...அதே சமயம் பிரபாகரனால தான் பிரச்சினைன்னு சொல்றீங்க...பிரபாகரனுக்கு வயசே அறுவது இருக்காது...கணக்கு ஒதைக்குதே அப்பச்சி...ஒரு வேளை, பொறக்குறதுக்கு முன்னாடியே காந்தி குடும்பத்து வாரிசு தான் தலீவருன்னு என்ன எளவு கமிட்டி அது...ஆங்..காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டி தீர்மானிக்கிற மாதிரி, பொறக்குறதுக்கு முன்னாடியே அவரு புலியா பொறந்துட்டாரோ??"
4. நாலாவது கேள்வி, புலிக ஆயுதத்த கீழ போடணும்...அப்படின்னா தான் சிறீலங்கா பேசும்னு சொல்லியிருக்கிய...என்ன எளவு இது...ஏம்ல, ஒருத்தன் ஒரு பொம்பிளைய கெடுத்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பொம்பிள சத்தம் போடாம சும்மா இருந்தா அவனும் சும்மா இருப்பான்ன்னு சொல்ற மாதிரு இருக்கேவே?
5. அஞ்சாவது கேள்வி..அமிர்த லிங்கம் எங்கன்னு கேக்குறீயளே....அவரைக் கொன்னது யாரு?? அப்பிடியே அமைதி முறையில போராடுறேன்னு உண்ணாவிரதம் இருந்தானே திலீபன் அவன் எங்கவே? அரசியல் வழியில போராடுன தந்தை செல்வா எங்கவே??
6. ஆறாவது கேள்வி...ஒடன்பாடு போட்டோம் ஒடன்பாடு போட்டோம்னு கூப்பாடு போடுறிய...பன்னிக்குட்டி பெரிசானா தண்ணியடிக்காமயே ஆடுமாம்கிற மாதிரி, நீரே உண்மைய ஒளறி கொட்டிருக்கீரு....ராசீவ் காந்தி ஒடன்பாடு போட்டாரு...உம்ம தான்...ஆனா யாரு கூட போட்டாரு....ஜெயவர்தனே கூட...ஜெயவர்தனேவுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை...ஆனா, உடன்பாடு போட்றது ஜெயவர்தனேவும், ராசீவ் காந்தியும்...என்னவே ரொம்ப மொக்கையா இல்ல??
7.ஏழாவது... பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்னு சொல்லியிருக்கீரு...அதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அரை மனதுன்னு சொல்லியிருக்கீரு...சம்மதிக்காட்டி ஒழிச்சிருவோம்னு இந்தியா சொன்னது உண்மையா?
8. எட்டாவது...இந்திய அமைதிப்படை வீரர்கள் பலர் மரணமடைந்தனர்னு சொல்றீங்க...தமிழர்களை கற்பழித்தப் படைன்னு அதை வரவேற்கக் கூட கலைஞர் போகலை...அப்ப அது அமைதிப்படையா, இல்லை அதிரடி கற்பழிப்புப் படையா?? கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்க...ரொம்ப வருத்தமான விஷயம் தான்...அதுனாலும் சண்டைல நடந்தது...ஆனா, அங்க நடந்த கற்பழிப்புக்கு நீங்களோ இந்திய ஜனாதிபதியோ, மண் மோகன் சிங்கோ(எழுத்துப் பிழை அல்ல), இந்தியாவோட சூப்பர் பெரதமர் அன்னை சோனியாவோ மன்னிப்பு கேப்பீங்களா??
9. ஒம்போது...பிரபாகரன் சர்வாதிகாரின்னு சொல்றீங்க...இருக்கட்டும்...ஆனா, இப்ப நடக்கிற பிரச்சினை பிரபாகரன்னு ஒரு தனி மனிதனை பாதிக்கலையே...அகதிகள் இருக்கிற ஆஸ்பத்திரில ஷெல்லடிச்சானுங்கன்னு செஞ்சிலுவை சங்கமே சொல்லுது...அங்க இருந்தது பிரபாகரனா?? இதெல்லாம் உங்க காதில விழுதா இல்லா செவிடாயிட்டீங்களா??
10. பத்து...இன்னொரு நாட்டோட உள்நாட்டு விவகாரத்துல தலையிட முடியாதுன்னு உங்க கூட்டாளிங்கல்லாம் அறிக்கை விடுறாங்க...அப்படின்னா, ஹிட்லர் யூதர்களை படுகொலை செஞ்சது கூட உள்நாட்டு விவகாரம்னு சொல்வீங்களா?? சொன்னாலும் சொல்லுவீரு அப்பச்சி...நீரு தான் உள்நாட்டு மந்திரியாச்சே!
32 comments:
நச்!நச்!நச்!
நல்லா கேட்டீங்க அப்பச்சிக்கு நடு மண்டையில நச்சுன்னு உரைக்கிற மாதிரி.
(ஆமா நான் வேதாளத்த ஒரு பத்து கேள்வி கேக்கலாமா??)
:)
அண்ணே நீங்க உங்க பாணியில் கலக்கிட்டீங்க! நான் இதைத்தான் கேட்டேன். பல பேர் என்ன திட்றாங்கண்ணா!
பாருங்க என் பதிவை>>>>>
http://jakartananban.blogspot.com/2009/02/blog-post_19.html
antha maramandaikku uraikkaathu! pathu enna pathu, oru koadi thadavai sonnaalum antha maramandaikku uraikkaathu! Rajiv ganthi yai poattathu maathiri ethungalaiyum poattu thallulai!
Ethai ellam Vedunga Annachi,
Enoda allunga SRB & Sutta paya ellam solluranga.
1. Mullaithevu - 1.5 lakhs tamil makkal irukkanga.
2. Vaniyil 2.5 Lakhs Tamil makkal Irukkanga.
Evankaloda Pankali paya Sarathponsoga solluran ennum 700 Pulikalthan irukkuranga Entru.
Appuram Solluran 500 Pulikal entha neramum Prabhakaranukku Pathukappukku irukkanga entru.
Last Sun TV interview entha Congress Muttakaluthai SRByim solluran Pulikal makkalai Ketayamaka payanpaduthuranga.
Eppo ennoda question ella congress kaluthaikkum oru 10 kulanthaikal 5-10 vayasu ullatha kuduthu 1 dayvukku avangalai control panna solluvom, mudiyutha entru parpoom.
Appuram eppadi da nayae 4 lakhs makkalai LTTE kedayama payanpadutharan entru unnoda pankali paya (ungaloda appapum avantha enpathu thani kathai) solluraan entru neengalum sollureenga vekkama ellaiyada.
Tamil Mahan
சூப்பர் கேள்விகள்!
//
எம்.எம்.அப்துல்லா said...
நச்!நச்!நச்!
நல்லா கேட்டீங்க அப்பச்சிக்கு நடு மண்டையில நச்சுன்னு உரைக்கிற மாதிரி.
(ஆமா நான் வேதாளத்த ஒரு பத்து கேள்வி கேக்கலாமா??)
:)
//
வாங்க அப்துல்லா...அவரு மண்டைல உரைச்சு எதுனா உருப்படியா செய்வாருங்கறீங்க?? எனக்கு நம்பிக்கை இல்லை...
என்னது வேதாளத்த கேள்வி கேக்கணுமா?? ஆஹா....எல்லாரையும் அது கேள்வி கேக்குது...வித்தியாசமா அதுக்கே கேள்வியா?? சீக்கிரமா கேளுங்கண்ணா ச்சும்மா பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?
//
தமிழ் நாடன் said...
அண்ணே நீங்க உங்க பாணியில் கலக்கிட்டீங்க! நான் இதைத்தான் கேட்டேன். பல பேர் என்ன திட்றாங்கண்ணா!
பாருங்க என் பதிவை>>>>>
http://jakartananban.blogspot.com/2009/02/blog-post_19.html
//
தமிழ்நாடன்,
உங்க பதிவை இப்ப தான் படிச்சேன்...என்னை விட அழுத்தமா ஆதாரத்தோட நேராவே கேட்ருக்கீங்க...உங்க பதிவை முன்னாடியே பார்த்திருந்தா லிங்க் கொடுத்திருப்பேன்...அதுனால என்ன, இப்ப குடுத்துட்டா போச்சு!
// Mouthayen said...
antha maramandaikku uraikkaathu! pathu enna pathu, oru koadi thadavai sonnaalum antha maramandaikku uraikkaathu! Rajiv ganthi yai poattathu maathiri ethungalaiyum poattu thallulai!
//
வாங்க ஐயா...வருகைக்கு நன்றி...ஆனா நீங்க என்னை விட ரொம்ப கோவமா இருக்கீங்க போல....எனக்கு சிதம்பரோத்தோட பேச்சு, செயல்பாடு மீது தான் விமர்சனமே தவிர, தனிப்பட்ட முறையில அவரு கூட எந்த பிரச்சினையும் இல்லை.
நாயமா பாத்தா நம்ம ஊர்காரங்களுக்கு மட்டுமில்லாம எல்லோருக்கும் அப்பச்சி பதில் சொல்லோனும். அவுக மோப்பில இருக்காக .நாம கொல்லைல இருக்கோம்.
நல்லாத்தான் கேட்டிக !
//
Anonymous said...
Ethai ellam Vedunga Annachi,
Enoda allunga SRB & Sutta paya ellam solluranga.
1. Mullaithevu - 1.5 lakhs tamil makkal irukkanga.
2. Vaniyil 2.5 Lakhs Tamil makkal Irukkanga.
Evankaloda Pankali paya Sarathponsoga solluran ennum 700 Pulikalthan irukkuranga Entru.
Appuram Solluran 500 Pulikal entha neramum Prabhakaranukku Pathukappukku irukkanga entru.
Last Sun TV interview entha Congress Muttakaluthai SRByim solluran Pulikal makkalai Ketayamaka payanpaduthuranga.
Eppo ennoda question ella congress kaluthaikkum oru 10 kulanthaikal 5-10 vayasu ullatha kuduthu 1 dayvukku avangalai control panna solluvom, mudiyutha entru parpoom.
Appuram eppadi da nayae 4 lakhs makkalai LTTE kedayama payanpadutharan entru unnoda pankali paya (ungaloda appapum avantha enpathu thani kathai) solluraan entru neengalum sollureenga vekkama ellaiyada.
Tamil Mahan
//
வருகைக்கு நன்றி தமிழ்மகன்...மற்றும் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி...விளக்கமான பின்னூட்டம் இன்னு சிறிது நேரத்தில்...
நச் கேள்விகள் !!!!!
இந்த புள்ளிவிபரப் 'புளி'கிட்ட தமிழ் நாடு கதர் கம்முனாட்டிங்க எத்தனை கோஸ்டியா இருக்காங்கன்னும் கேட்டு இருக்கலாம்... ஏன்னா இது தான் பெரிய புள்ளிவிபரப் 'புளி'யாச்சே !!!
நான் உங்களைப் பார்த்து ஒரேஒரு கேள்வி கேட்கலாமா?
1. சிதம்பரத்திற்கு அல்ல அவருடைய தாயாருக்குகூட மானம் மரியாதை இருந்திருக்குமா?
புள்ளிராஜா
//
எம்.எம்.அப்துல்லா said...
நச்!நச்!நச்!
நல்லா கேட்டீங்க அப்பச்சிக்கு நடு மண்டையில நச்சுன்னு உரைக்கிற மாதிரி.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
:-)
well said
தமிழன் சார்பாய் நீங்கள் கேட்ட
10 கேள்விகளுக்கு மிக்க நன்றி,
தொடரும் உங்கள் கேள்விக்
கணைகளால்தான் சாயம் வெளுக்கும், விடியலும் பிறக்கும்.
//
Anonymous said...
Ethai ellam Vedunga Annachi,
Enoda allunga SRB & Sutta paya ellam solluranga.
1. Mullaithevu - 1.5 lakhs tamil makkal irukkanga.
2. Vaniyil 2.5 Lakhs Tamil makkal Irukkanga.
Evankaloda Pankali paya Sarathponsoga solluran ennum 700 Pulikalthan irukkuranga Entru.
Appuram Solluran 500 Pulikal entha neramum Prabhakaranukku Pathukappukku irukkanga entru.
Last Sun TV interview entha Congress Muttakaluthai SRByim solluran Pulikal makkalai Ketayamaka payanpaduthuranga.
Eppo ennoda question ella congress kaluthaikkum oru 10 kulanthaikal 5-10 vayasu ullatha kuduthu 1 dayvukku avangalai control panna solluvom, mudiyutha entru parpoom.
Appuram eppadi da nayae 4 lakhs makkalai LTTE kedayama payanpadutharan entru unnoda pankali paya (ungaloda appapum avantha enpathu thani kathai) solluraan entru neengalum sollureenga vekkama ellaiyada.
Tamil Mahan
//
தமிழ் மகன்,
நீங்கள் சொல்வது சரி...இனவெறி பிடித்த சிறிலங்கா அரசு, இனப்படுகொலைகளை பின்னிருந்து நடத்தும் இந்திய அரசு கணக்குப்படி சுமார் 700 புலிகள் தான் இருக்கிறார்களாம்...ஆனால் இவர்கள் இரண்டரை லட்சம் மக்களை கேடயமாக சிறை வைத்திருக்கிறார்களாம்....ஐயோ புலிகளிடமிருது இவர்கள் விடுவிக்க வேண்டும் என்று ஓநாய்களும் பன்றிகளும் கூக்குரலிடுகின்றன..
அது எப்படி 700 புலிகள் இரண்டரை லட்சம் மக்களை சிறை வைக்கமுடியும்?? இதற்கு ஓநாய்களிடம் எந்த பதிலும் இல்லை!
//
ஜோதிபாரதி said...
சூப்பர் கேள்விகள்!
//
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி அண்ணா..
//
அசோசியேட் said...
நாயமா பாத்தா நம்ம ஊர்காரங்களுக்கு மட்டுமில்லாம எல்லோருக்கும் அப்பச்சி பதில் சொல்லோனும். அவுக மோப்பில இருக்காக .நாம கொல்லைல இருக்கோம்.
நல்லாத்தான் கேட்டிக !
21 February 2009 12:26
//
வருகைக்கு நன்றி அசோசியேட்...பதில் சொல்கிறார்களோ இல்லையோ ஹிட்லருக்கு இணையாக இனப்படுகொலை நடத்தியவர்கள் என்று காங்கிரஸும் சரித்திரத்தில் இடம் பெறப்போவது உறுதி...தொங்க பாலு, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ராஜ பக்சே, மன்மோகன் சிங், சோனியா காந்தி போன்றவர்கள் எதிர்காலத்தில் இனஒழிப்பு கொலைகளுக்காக உலக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்..
//
பதி said...
நச் கேள்விகள் !!!!!
இந்த புள்ளிவிபரப் 'புளி'கிட்ட தமிழ் நாடு கதர் கம்முனாட்டிங்க எத்தனை கோஸ்டியா இருக்காங்கன்னும் கேட்டு இருக்கலாம்... ஏன்னா இது தான் பெரிய புள்ளிவிபரப் 'புளி'யாச்சே !!!
//
வாங்க பதி... அவரு புள்ளிவிவர "புளி"ங்கிறது உண்மை தான்...அதுக்காக காங்கிரஸு கோஷ்டியை எல்லாம் கணக்கெடுக்கிறது ரொம்ப கஷ்டம்...அந்த கட்சியில இருக்கிறது 10 பேருன்னா கோஷ்டி 15 இருக்கும்....ஒவ்வொருத்தனுக்கும் ரெண்டு கோஷ்டி...
//
Anonymous said...
நான் உங்களைப் பார்த்து ஒரேஒரு கேள்வி கேட்கலாமா?
1. சிதம்பரத்திற்கு அல்ல அவருடைய தாயாருக்குகூட மானம் மரியாதை இருந்திருக்குமா?
புள்ளிராஜா
21 February 2009 14:49
//
என்னங்க இது...இப்படி கேக்குறீங்க...நமக்கு பிரச்சினை யார் கூட? சிதம்பரம் கூட தானே? அது கூட சிதம்பரம்ங்கிற தனிமனிதர் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல..அவர் செயல்பாடு, அறிக்கை மேல தான்...இதுல அவங்க அம்மா எங்க வந்தாங்க?? அவங்க பேரு கூட எனக்கு தெரியாது.. தேவையில்லாதவங்களை தயவு செய்து வம்புக்கு இழுக்க வேண்டாமே??
உங்கள் வருகைக்கு நன்றி!
//
ச்சின்னப் பையன் said...
//
எம்.எம்.அப்துல்லா said...
நச்!நச்!நச்!
நல்லா கேட்டீங்க அப்பச்சிக்கு நடு மண்டையில நச்சுன்னு உரைக்கிற மாதிரி.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
:-)
//
வாங்க ச்சின்னப் பையன்...உலக பதிவு வரலாற்றில் முதன்முறையாக...என் பதிவுக்கு இன்னிக்கு தான் வந்திருக்கீங்க!
//
Anonymous said...
well said
21 February 2009 16:54
//
வருகைக்கு நன்றி அனானிமஸ்.
//
சுதேசன் said...
தமிழன் சார்பாய் நீங்கள் கேட்ட
10 கேள்விகளுக்கு மிக்க நன்றி,
தொடரும் உங்கள் கேள்விக்
கணைகளால்தான் சாயம் வெளுக்கும், விடியலும் பிறக்கும்.
22 February 2009 03:52
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதேசன்... விடியல் பிறக்க வேண்டும் என்பது தான் எல்லார் விருப்பமும்....பிறக்கின்ற விடியல் விரைவில் பிறக்கட்டும்!
நீங்க கேட்டா சரியாத்தான் இருக்கும்.
ஏம்வே... உமக்கு ஒரே ஒரு கேள்வி.. செதம்பரத்தையும் ஒரு ஆளுண்டு மதிச்சு பத்து கேள்வி போட்டிருக்கியளே? அந்தாளு மான ரோசம் அத்துப் போயி வருசமாச்சுது.
ஆனாலும் நச்சுன்னுதே கேட்டுருக்கிய.
ஐ... நான் 25
//
வருங்கால முதல்வர் said...
நீங்க கேட்டா சரியாத்தான் இருக்கும்.
25 February 2009 21:50
//
அது சரி!!!
//
Mahesh said...
ஏம்வே... உமக்கு ஒரே ஒரு கேள்வி.. செதம்பரத்தையும் ஒரு ஆளுண்டு மதிச்சு பத்து கேள்வி போட்டிருக்கியளே? அந்தாளு மான ரோசம் அத்துப் போயி வருசமாச்சுது.
ஆனாலும் நச்சுன்னுதே கேட்டுருக்கிய.
26 February 2009 01:39
//
வாங்க மகேஷ்...நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்!
என்னலே, உள்ளூர்க் கேள்வி ஒன்னு இரண்டு கேட்டிருக்கலாம்ல.
கனரா பாங் லோகோவை மாத்தினீளே, அதாலே எம்புட்டு வருமானாம் கூடிச்சு?
சினேகாவின் காத்திக்கு, எப்பிடீன்னே இந்த லோகோ மாத்தும் ஆடர் கிடைச்சீரிக்கு.
அப்பிடீயே மாத்தாம போனா என்னாயிருக்கும்?
dont you have any other job???
just close the blog and run away !!

வாங்க அனானி...
கனரா பேங்க் லோகோவை மாத்திட்டாங்களா? எனக்கு மேட்டரே தெரியாதே..சரி, இது பத்தி இன்னும் கொஞ்சம் தெளிவா தெரிஞ்சிக்கிட்டு அடுத்த தடவை கேட்ரலாம்
//
Anonymous said...
dont you have any other job???
just close the blog and run away !!
01 March 2009 14:58
//
ஆஹா, வந்துட்டாருய்யா வந்துட்டாருய்யா....ஏகப்பட்ட வேலைகளை வச்சிக்கிட்டு இங்க பின்னூட்டம் போட ஒரு அனானி அய்யா வந்துட்டாருய்யா!
நான் எழுதுவேன்...எழுத மாட்டேன்...உங்களுக்கென்ன பாஸ்? நீங்க உங்க வேலையை பாருங்க!
ஆமா, உங்களுக்கு அப்படி அதி தீவிர சிரைக்கிற வேலை இருந்தா எதுக்கு நீங்க ப்ளாக்கெல்லாம் படிக்கறீங்க??
Post a Comment