Tuesday 6 January 2009

கன்யாகுமரியும், புகையும் சிகரெட்டும், பின்னே ஒரு விருதும்

பேசாம வாய மூடிக்கிட்டு தூங்குடான்னு சொல்லுவாங்க....ஆனா சில பேரு தூங்கும் போதும் வாய மூட மாட்டேங்கிறானுங்க...கரண்ட் இருக்கோ இல்லியோ கொர் கொர்ருன்னு பம்பு செட்டு ஓட்ட ஆரம்பிச்சிடுறானுங்க....அதுவும் அதி காலையில மூணு மணிக்கு இப்பிடி சத்தம் கேட்டா பக்கத்துல இருக்கறவனுக்கு எப்பிடி தூக்கம் வரும்....

ரூம் மேட்டு புண்ணியத்துல அந்த சனிக்கிழமை சீக்கிரமே எந்திருச்சிட்டேன்...கோயம்புத்தூர்ல காலங்காத்தால தெருவுல நடந்தாலும் பிரச்சினை...திடீர்னு வந்து போலீசுகாரங்க தூக்கிட்டு போயிருவாங்க....சரி என்ன பண்றது....குளிர்ல நடுங்கிட்டே குளிச்சிட்டு....அப்படியே வெளிய வந்து அண்ணாச்சி கடைல நாலு வில்ஸு...பத்த வச்சிக்கிட்டே நடந்தா காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்துடுச்சி...அங்க மொபஸல் பஸ் ஸ்டாண்டு உள்ள போயி ஒரு காஃபி சாப்பிட்டுட்டு பேப்பர் வாங்கிட்டு போலாம்...

அண்ணே ஒரு காஃபி..சுகர் ஜாஸ்தியா...அப்பிடியே தினமலர் ஒண்ணு கொடுங்க...விகடன் இன்னும் வர்லீங்களா....

திருப்பி ஒரு தம்மை அடிச்சிக்கிட்டே காஃபிய முடிச்சா...பக்கத்துல ஒரு பஸ்ஸு கெளம்பிட்டு இருந்துச்சி...பஸ் ஸ்டாண்டுல பஸ்சு கெளம்பாம பின்ன துபாய் போற ஃப்ளைட்டா கெளம்பும்..

எந்த ஊருக்கு போறாய்ங்க‌...கன்னியாகுமரி... வக்காளி...கோயம்பத்தூரிலருந்து கன்னியாகுமரி போறதுன்னா....பல்லடம், காங்கேயம்....தாராபுரம்...மதுர...தின்னவேலி...நாகர்கோயிலு...அப்பிடியே கொஞ்சம் எட்டி நடையப்போட்டா குழித்துற...எல கேரளாவுக்கே போயிடலாம்ல...

கண்டக்டரு நான் பஸ் ஏற தான் நிக்கிறேன்னு நெனச்சிட்டாரு போலருக்கு....

தம்பி...சீக்கிரம் ஏறு...பஸ்ஸ எடுக்கப் போறேன்....எங்க போணும்...

திடீர்னு தோணிச்சி....

"கன்னியாகுமரி சார்"

அந்த நிமிடம் வரை பயணம் செல்வதாக எந்த திட்டமும் இல்லை...ஏன் பயணம் செய்ய தோன்றியது என்றும் தெரியாது....கன்யாகுமரி என் சொந்த ஊரும் அல்ல...குறைந்த பட்சம் நண்பர்கள் கூட இல்லை...அங்கு எவரையும் எனக்கு தெரியாது...

=====================

இப்ப இந்த கதையெல்லாம் என்ன மயித்துக்குடே சொல்ற....

இருக்கிறது ஐயா....இருக்கிறது...

நான் என்ன எளவுக்கு பதிவு எழுதுகிறேன்....எழுத்தாளர் ஆக விருப்பமா? இல்லை கருத்து பொர்ச்சி செய்ய போகிறேனா... இல்ல நல்லதா நாலு பதிவு எழுதி பிரபல பதிவர் ஆகணுமா....

ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நான் 
கன்னியாகுமரி செல்ல என்ன காரணமோ அதே காரணம் தான்....கையில் காசு இருந்தது...பக்கத்தில் பஸ்சும் இருந்தது...போய் விட்டேன்...

என் பதிவுகளும் அதே....பேப்பர் கிடைத்தால் கிறுக்கித் தள்ளும் சிறுவனைப் போல...

எப்படி ரூம் மேட்டின் குறட்டை என்னை அதிகாலையில் காந்திபுரத்திற்கு நடக்க வைத்ததோ....ஒரு மிகப்பிரபல வாரப்பத்திரிக்கையின் ஒரு கட்டுரையும் என்னை வெறுப்பேற்றியது பதிவெழுத ஒரு காரணம் என்று சொல்லலாம்...

"லண்டன் ஆகிறது சென்னை....இன்றைக்கு சென்னையை சுற்றிலும் மூன்று டிஸ்கோ கிளப்புகள்..."

என்ன மயிருடா இது.....ஒன்றரை கோடி பேரு இருக்கற சென்னையில மூணு நைட் கிளப் இருக்கறது பெரிய மேட்டரா? ச்சப்ப மேட்டரு...இதுக்கு ஒரு கட்டுரையா...

அது அத்துடன் முடியவில்லை....

"சென்னை இளைஞர்கள் இப்படி சென்று கொண்டிருப்பது சமூக அக்கறை உள்ளவர்களை பெரிதும் கவலைப்பட வைத்திருக்கிறது...."

இன்னும் கொடுமை...அதுக்கு ஆன்லைன் வாசகர் பின்னூட்டம் வேறு...

"நான் அமெரிக்காவுல அஞ்சி வருஷமா இருக்கேன்...ஆனா இதுவரைக்கும் எந்த கிளப்புக்கும் போனதுல்ல...தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்".....இந்த மயிருக்கு அமெரிக்காவுல இருந்து என்ன ஆஃப்கனிஸ்தானில இருந்து என்ன....

அடிங்க....அப்ப நைட் கிளப் போனா இவங்க கலாச்சாரம் கெட்டுருமா??? 

எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க??

இதுல எல்லாம் கெடாத கலாச்சாரம் நைட் கிளப் போனா கெட்டுடுமாம்.....அப்பிடி என்ன வெளக்கெண்ணை கலாச்சாரம்டா அது???

நான் பதிவு எழுத ஆரம்பிச்சதே கடுப்புல தான்...எனக்கு நல்லா எழுத வரும்னு எந்த நம்பிக்கையிலும் இல்ல....நான் எழுதறதே பெரும்பாலும் சாட்டர்டே நைட்டு கிளப்புக்கு போயிட்டு வந்துட்டு தான்...நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா அடுத்த அரை மணி நேரத்துல எழுதி, அத கால் மணி நேரம் ஃபார்மேட் பண்ணி...அப்பிடியே அப்லோட் செய்றது...

தண்ணியடிச்சா தம்மடிக்கிற மாதிரி....சனிக்கிழமை நைட்டு டைம் கெடச்சா பதிவு எழுதறது....நான் தம்மடிக்கிறதுக்கும் பதிவு எழுதறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல....

இதெல்லாம் இப்ப சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு....திடீர்னு நண்பர் மோகன் எனக்கு பட்டர்ஃபிளை விருது குடுக்குறேன்னு சொல்லிட்டாரு....நான் எழுதறது பத்தி யாரு என்ன நெனைக்கிறாங்கன்னு எனக்கு தெரியாது....ஆனா நான் என்ன நெனைக்கிறேன்னு எனக்கு தெரியும்ல???

எழுத்தை நேசிக்கிறேன்...தமிழை சுவாசிக்கிறேன்...எளக்கியம் படைக்க முயற்சிக்கிறேன்னு கதை விட எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல...தண்ணியடிச்சா தம்மு....ஸாட்டர்டே நைட்டு போதையேறாம இருந்தா எழுத்து....நான் அடிக்கிறது ஜல்லி....எழுதறது மொக்கை...

இதுக்கு போய் விருதா??? ரொம்ப ஓவரா இருக்கேன்னு மோகன்கிட்டயே சொல்லிட்டேன்...ஆனா அவருக்கு நாம கிறுக்கறது ரொம்ப பிடிச்சி போச்சி போலருக்கு....அந்த விருது உங்களுக்குத் தான்னு சொல்லிட்டாரு....

விருதுக்கு நன்றின்னு அவரு நல்ல மனசா பாராட்டுனாலும் எனக்கு இன்னும் உறுத்தலா தான் இருக்கு...

இனிமே உருப்படியா எழுதலாமா....

ச்சேச்சே....இது என்ன கெட்ட புத்தி....அதெல்லாம் உருப்படியா விஷயம் தெரிஞ்சவங்க எழுதுவாங்க....

நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்...

30 comments:

பழமைபேசி said...

இஃகிஃகி!

குடுகுடுப்பை said...

சனிக்கிழமை ஆவலியே இன்னும்.
கிழமை தெரியாத அளவுக்கு ஊத்தியாச்சா?

விருது வாங்கிக்கங்க, என்னைப்பாத்தீங்கள்ள யாருமே வாங்காத குகு விருது வாங்கிட்டேன்

குடுகுடுப்பை said...

அப்புரம் நானும் உங்கள மாதிரிதான் வீட்லேந்து காலேஜ் கெளம்பி ஒரு வாரம் கழிச்சு தான் காலேஜுக்கு போவேன். இடைப்பட்ட நாட்கள் எந்த ஊருங்கிறது பஸ்ஸ்டாண்டுகள்ளதான் முடிவு பண்றது.

குடுகுடுப்பை said...

நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //

அப்ப்டின்னா என்னானு நாளைக்கு பழமைபேசி அவர்கள் ஒரு பதிவு போடுவார்

நட்புடன் ஜமால் said...

\\எழுத்தை நேசிக்கிறேன்...தமிழை சுவாசிக்கிறேன்...எளக்கியம் படைக்க முயற்சிக்கிறேன்னு கதை விட எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல.\\

உங்களுடைய இந்த எண்ணத்திற்காகவே விருது கொடுக்கலாம்.

உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

Natty said...

இஃகிஃகி

கயல்விழி said...

அதுசரி

நீங்க இப்படியே இயல்பாவே எழுதுங்க, அது தான் நல்லா இருக்கு. தயவு செய்து இலக்கியம் எல்லாம் படைக்க வேண்டாம், அதற்கு நிறைய பேர்(வேற வேலை இல்லாமல்) இருக்காங்க.

BTW, விருதுக்கு வாழ்த்துக்கள் :)

SPIDEY said...

//இனிமே உருப்படியா எழுதலாமா....

ச்சேச்சே....இது என்ன கெட்ட புத்தி....அதெல்லாம் உருப்படியா விஷயம் தெரிஞ்சவங்க எழுதுவாங்க....

நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //

ஒருவேள திரிந்திட்டீங்களோ அப்படின்னு நினச்சு பயந்து போயிட்டேன்

Bleachingpowder said...

//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க??//

இந்த மாதிரி எடக்கு முடக்கா கேள்வி கேட்டா, இந்த கேவலமான கலாச்சாரத்திற்கு காரணம் பார்பனர்களே ஒரே போடா போட்டுறனும் :)

ரொம்ப எதார்த்தமா எழுதியிருக்கீங்க வாழ்த்துகள்.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
இஃகிஃகி!
06 January 2009 22:47
//

பதிவோட நோக்கத்த புரிஞ்சிக்கிட்டீங்க :0))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
சனிக்கிழமை ஆவலியே இன்னும்.
கிழமை தெரியாத அளவுக்கு ஊத்தியாச்சா?

விருது வாங்கிக்கங்க, என்னைப்பாத்தீங்கள்ள யாருமே வாங்காத குகு விருது வாங்கிட்டேன்
06 January 2009 23:09
//

சனிக்கிழமை மட்டும் தான் ஊத்துவோமா....எங்களுக்கெல்லாம் எல்லா நாளும் திருநாளுதான்....டைம் கெடைக்கிறது தான் பிரச்சினை :0))

ம்ம்ம்ம்ம்...விருது வாங்கினவரு இப்பிடி பார்ட்டி குடுக்க கஞ்சம் பண்ணக்கூடாது....நான் டெக்ஸாஸ் வந்து பேசிக்கிறேன்!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அப்புரம் நானும் உங்கள மாதிரிதான் வீட்லேந்து காலேஜ் கெளம்பி ஒரு வாரம் கழிச்சு தான் காலேஜுக்கு போவேன். இடைப்பட்ட நாட்கள் எந்த ஊருங்கிறது பஸ்ஸ்டாண்டுகள்ளதான் முடிவு பண்றது.
//

உங்களுக்கு என்ன சாமி...கைல தொழில் இருக்கு....எந்த ஊர்ல எறக்கிவிட்டாலும் உடுக்கை அடிச்சி பொழச்சிக்குவீங்க....நம்ம கதை அப்படியா...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //

அப்ப்டின்னா என்னானு நாளைக்கு பழமைபேசி அவர்கள் ஒரு பதிவு போடுவார்
//

போட்டா நல்லது...நானும் அர்த்தம் தெரிஞ்சிக்குவேன் :0))

அது சரி(18185106603874041862) said...

//
நட்புடன் ஜமால் said...
\\எழுத்தை நேசிக்கிறேன்...தமிழை சுவாசிக்கிறேன்...எளக்கியம் படைக்க முயற்சிக்கிறேன்னு கதை விட எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல.\\

உங்களுடைய இந்த எண்ணத்திற்காகவே விருது கொடுக்கலாம்.

உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.
//

வாங்க ஜமால் அண்ணே....வாழ்த்துகளுக்கு நன்றி...

நீங்க வேற திரி கொளுத்தாதீங்க...அப்புறம் நல்லெண்ண விருதுன்னு யார்னா ஆரம்பிச்சிறப் போறாங்க...

அது சரி(18185106603874041862) said...

//
Natty said...
இஃகிஃகி

06 January 2009 23:55
///

நீங்க பழமைபேசி மாதிரியே சிரிக்கிறீங்கண்ணா...

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
அதுசரி

நீங்க இப்படியே இயல்பாவே எழுதுங்க, அது தான் நல்லா இருக்கு. தயவு செய்து இலக்கியம் எல்லாம் படைக்க வேண்டாம், அதற்கு நிறைய பேர்(வேற வேலை இல்லாமல்) இருக்காங்க.

BTW, விருதுக்கு வாழ்த்துக்கள் :)
//

இலக்கியம் படைக்க வேண்டாம்கிறீங்க??? நீங்க வேண்டி விரும்பி கேட்டுக்கிறதுனால...உங்களுக்காக...."எளக்கியம்" படைக்கிறதுங்கிற என்னோட லட்சியத்த காலவரையின்றி ஒத்தி வைக்கிறேன்....

ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல் செய்த பழி உங்களுக்கே :0))....

அதே சமயம் தமிழை காப்பாற்றிய புகழும் உங்களுக்கே :0)))

அது சரி(18185106603874041862) said...

//
SPIDEY said...
//இனிமே உருப்படியா எழுதலாமா....

ச்சேச்சே....இது என்ன கெட்ட புத்தி....அதெல்லாம் உருப்படியா விஷயம் தெரிஞ்சவங்க எழுதுவாங்க....

நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //

ஒருவேள திரிந்திட்டீங்களோ அப்படின்னு நினச்சு பயந்து போயிட்டேன்
//

அப்படியெல்லாம் யாரும் மெரண்டு போயிறக்கூடாதுன்னு தான் நான் அதை போல்ட் லெட்டர்ல போட்ருக்கேன் :0)))

அது சரி(18185106603874041862) said...

//
Bleachingpowder said...

இந்த மாதிரி எடக்கு முடக்கா கேள்வி கேட்டா, இந்த கேவலமான கலாச்சாரத்திற்கு காரணம் பார்பனர்களே ஒரே போடா போட்டுறனும் :)

ரொம்ப எதார்த்தமா எழுதியிருக்கீங்க வாழ்த்துகள்.

//

வாங்க ப்ளீச்சிங் பவுடர்...ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கீங்க...

நீங்க வேற புதுசா ஆரம்பிக்காதீங்கண்ணா....ஏற்கனவே குறுக்கு சந்துல குப்புமாரி கல் தடுக்கி குப்புற விழுந்தா பார்ப்பன‌ சதின்னு அறிக்கை விட்றாங்க...இப்பிடியெல்லாம் ஆரம்பிச்சா சாயந்திரம் ஆனா சூரியன் மறையறது கூட பார்ப்பன‌ சதின்னு சொல்லிருவாங்க...எதுக்கு டரியல கெளப்பறீங்க :0)))

வாழ்த்துக்களுக்கு நன்றி!

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அப்புரம் நானும் உங்கள மாதிரிதான் வீட்லேந்து காலேஜ் கெளம்பி ஒரு வாரம் கழிச்சு தான் காலேஜுக்கு போவேன். இடைப்பட்ட நாட்கள் எந்த ஊருங்கிறது பஸ்ஸ்டாண்டுகள்ளதான் முடிவு பண்றது.
//

உங்களுக்கு என்ன சாமி...கைல தொழில் இருக்கு....எந்த ஊர்ல எறக்கிவிட்டாலும் உடுக்கை அடிச்சி பொழச்சிக்குவீங்க....நம்ம கதை அப்படியா...
//

சாமி உடுக்கைய புடுங்கதான் ஆள் இருக்கு சாமி. அப்புரம் பழமையார் பதிவு போட்டுட்டார்.

கயல்விழி said...

//ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல் செய்த பழி உங்களுக்கே :0))....
//

பழியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் :)

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
//ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல் செய்த பழி உங்களுக்கே :0))....
//

பழியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் :)
07 January 2009 23:07
//

அப்பாடா....நான் ஏன் இலக்கியம் படைக்கலைன்னு இனிமே யாரும் கேள்வி கேட்க முடியாது....வரும் எதிர்காலம் என் மீது பழி சொல்லாது என்பதால் எனக்கும் மகிழ்ச்சியே :0))

துளசி கோபால் said...

ஆராயாம எழுதுங்க.

அதான் முக்கியம்.:-)

Anonymous said...

//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க???//

அட அண்ணே... கொஞ்சம் கால காட்டுனே...!! இத சொன்ன நம்மள பைத்தியம் என்பான்ங்க....!!

Sundar சுந்தர் said...

//ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நான்
கன்னியாகுமரி செல்ல என்ன காரணமோ அதே காரணம் தான்...//

:)

அது சரி(18185106603874041862) said...

//
துளசி கோபால் said...
ஆராயாம எழுதுங்க.

அதான் முக்கியம்.:-)
08 January 2009 00:37
//

இதுவரை அப்படித் தான் டீச்சர்...இனிமேலும் அப்படித் தான்!!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க???//

அட அண்ணே... கொஞ்சம் கால காட்டுனே...!! இத சொன்ன நம்மள பைத்தியம் என்பான்ங்க....!!
08 January 2009 02:47
//

நீங்க சொல்றது கரெக்ட்டு...அம்மண தேசத்தில் கோமணம் கட்டினால் பைத்தியம் என்று தான் சொல்வார்கள்!

அது சரி(18185106603874041862) said...

//
Sundar said...
//ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நான்
கன்னியாகுமரி செல்ல என்ன காரணமோ அதே காரணம் தான்...//

:)
//

வாங்க சுந்தர்...ரொம்ப நாளாச்சி...

குடுகுடுப்பை said...

சார் நல்லா இருக்கீங்களா

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
சார் நல்லா இருக்கீங்களா
08 January 2009 20:49
//

நீங்க சுந்தர் சாரை கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்...நானும் கேக்கணும்னு நெனைச்சது...

கபீஷ் said...

யதார்த்தமா எழுதியிருக்கீங்க, வழக்கம்போல. விருது மேல எனக்கு பெரிய/சிறிய மரியாதை இல்ல. இருந்தாலும் மோகன் உங்க எழுத்து மேல இருக்கற பாசத்தால இதை குடுத்து இருக்கறதால வாழ்த்துக்கள்.இதே மாதிரி நிறைய எழுதுங்க.