Saturday, 18 October 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்று விடு - பாகம் இரண்டு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.

கைக்கிளை

என்ன ஆச்சின்னு தெரியல, இந்த கதையோட மூன்றாம் பாகம் தமிழ் மணத்துல லிங்க் ஆக மாட்டேங்குது...
அதனால மூன்றாம் பாகத்தை
இங்க போயி படிச்சிக்கங்க..

"பாலு பிரசாத்தோ காலு பிரசாத்தோ எவன் மந்திரி ஆனா எனக்கென்ன..ஒரு ஃபிகரு கூட டின்னரு சாப்ட விடாம தொல்லை பண்றானுங்க...அத விடு, போகச் சொல்றது தான் சொல்றானுங்களே எதுனா ஒரு நைட் கிளப்பு, பாரு கொறஞ்சது ஒரு பப்பு..இப்பிடி எதுனா சொல்றானுங்களா? எப்ப பாத்தாலும் ஒரு காடு இல்ல சுடுகாடு..இவனுங்கெல்லாம் எப்ப தான் திருந்துவானுங்களோ.."

விக்கிரமாதித்தன் கடும் எரிச்சலில் காரோட்டிக் கொண்டிருந்தான்..

"எல்லாம் அந்த சனியன் பிடிச்ச வேதாளத்தால வந்தது...எடின்பரோவுலருந்து சவுத் வேல்ஸ் டிரைவ் பண்றதுன்னா சும்மாவா.. நல்ல வேளை நைட்டுன்றதுனால டிராஃபிக் இல்ல..எல்லாம் குடிச்சிட்டு குப்புற படுத்துட்டானுங்க போல..இந்தா பிரிஸ்டால் வந்துருச்சி. இது தான் இங்லண்டோட பார்டர். க்ராஸ் பண்ணா வேல்ஸ் தான்..இன்னும் கொஞ்ச நேரம் தான்...வேல்ஸுல பொண்ணுங்கள்லாம் சும்மா சூப்பரா இருக்கும்னு சொல்றானுங்க.. எதுனா ஒழுங்கா செட்டாச்சின்னா இங்கயே செட்டிலாயிற வேண்டியது தான்..உஜ்ஜைனிக்கி போயி தான் என்ன பண்றது.. அதுக்கு முன்னாடி இந்த வேதாளத்த ஒழிச்சி கட்டணும்.."

இரண்டு நாட்களாக தண்ணி அடிக்க முடியாத கடுப்புடன் மாதித்தன் பிரக்கன் ரேஞ்சஸை அடைந்த போது சௌத் வேல்ஸுக்கே சொந்தமான "நேரங்கெட்ட நேரத்துல மழை" கொட்ட ஆரம்பித்தது..

============================

"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டுட்டு ஆடுச்சாம்.. நம்மளே தண்ணி அடிக்க முடியாம வறட்சில இருக்கறப்ப வானத்துல இருந்து கொட்டுது...எல்லாம் விதி..ஆமா, இந்த காட்டுல வேதாளத்த எங்க தேடுறது..அந்த மொட்டை சனியன் எங்கனா மரத்துல இல்ல தொங்கி கிட்டு இருக்கும்..எந்த மரம்னு தேடுறது..சரி..இப்பிடியே போவோம்.."

விக்கிரமாதித்தன் வேதாளத்தை தேடி அந்த மழை கொட்டும் நள்ளிரவில் காட்டின் ஊடே நடக்க ஆரம்பித்தான்...

============================

"ஜின்னு என்றால் எனக்கு ரொம்ப பயமே...டாஸ்மாக்கு

ர‌ம்மு என்றால் என‌க்கு தெம்பு வ‌ருமே..

ஜின்னு என்றால் என‌க்கு ரொம்ப‌ ப‌ய‌மே..."

காற்றினிலே வ‌ரும் ஆசிடாக ஒரு கபோதி குர‌ல்....

எவ‌ன்டா அது இப்பிடி கேவ‌லமா பாடுற‌து....அந்த‌ மொட்டை ச‌னிய‌ன் கொர‌ல் மாதிரி இருக்கே... அப்பிடின்னா இங்க‌ தான் எங்க‌யாவ‌து ப‌க்க‌த்துல‌ இருக்கணும்..

இந்த‌ இருட்ல‌ வேற‌ ஒண்ணும் தெரில..இது என்ன காடா இல்ல ஆற்காடு வீராசாமியோடா தமிழ்நாடா.. இவ்ளோ இருட்டா இருக்கே..டார்ச் லைட் வேற இல்ல..சரி..லைட்டரை கொளுத்தி தேட வேண்டியது தான்..

விக்கிர‌மாதித்த‌ன் சுற்றிலும் தேட‌ ஆர‌ம்பித்தான்....

ச‌ற்று தொலைவில் யாரோ ஒரு ம‌ர‌த்த‌டியில் முதுகு காட்டி உட்கார்ந்திருப்ப‌து தெரிந்த‌து..

.. அட‌, யார்றாது..இந்த‌ நைட்ல‌ காட்ல‌ ம‌ர‌த்த‌டில‌ உக்காந்து என்ன‌ ப‌ண்றான்..அது என்ன‌ த‌லைல‌ தொப்பி...இல்ல‌ அது ஏதோ ச‌ட்டி மாதிரி இருக்கே.. த‌லைக்கு மேல‌ அது என்ன‌...ஆ...கொம்பு...அப்ப‌ இது அந்த‌ வேதாள‌ம் தானா? அப்பிடியே பின்னாடி இருந்து ஒரே அமுக்கா அமுக்கிற‌ வேண்டிய‌து தான்..பிர‌ச்சினை இன்னையோட‌ ஒழிஞ்ச‌து..

விக்கிர‌ம‌ன் வேதாள‌த்தின் மீது பாய்ந்தான்..

========================

"..த்த்தா.பாடு..எவ‌ன்டா அது..இந்த‌ நாட்ல ஒரு வேதாள‌த்த‌ கூட‌ க‌ற்போட‌ விட‌மாட்டானுங்க‌ போல‌ருக்கே.."

வேதாள‌ம் விக்கிர‌மாதித்த‌னை உத‌றி எழுந்த‌து...

"அட‌ச்சே..மாதித்தா...நீயா...நீ என்ன‌ செய்ற‌ இங்க‌...நைட்டானா பொண்ணுங்க‌ பின்னாடி சுத்த‌ற‌து தான‌ உன் வேல‌...இப்ப‌ என்ன‌ காட்டுக்குள்ள‌ சுத்துற.."

கேட்ட‌ வேதாள‌ம் த‌ன் த‌லையில் இருந்த‌ அலுமினிய‌ ச‌ட்டியை ச‌ரி செய்து கொண்ட‌து...

"ம்ம்ம்...அதுவா தாள‌மே..உன்ன‌ பாத்து ரொம்ப‌ நாளாயிடுச்சா..என‌க்கு ப‌ச‌லை ப‌ட‌ர்ந்துருச்சி..அதான் உன்ன‌ பாத்து டூய‌ட் பாடிட்டு போலாம்னு வந்தேன்..ஒரு குத்தாட்டம் போடலாம் வ‌ர்றியா ..."

"குத்தாட்ட‌ம் போட‌லாம் தான்...ஆனா நான் ப‌ச‌ங்க‌ கூட‌ல்லாம் ஆட்ற‌தில்ல‌ப்பா..அதுவும் நீ ம‌னுச‌ன்...எதுனா வேதாளி இருந்தா ந‌ல்லாருக்கும்....ம்ம்ம், எங்க‌ ந‌ம்ம‌ள‌ தேடி வ‌ர்ற‌தெல்லாம் உன்ன‌ மாதிரி மொட்ட‌ ப‌ச‌ங்க‌ளா தான் இருக்கானுங்க‌..என்ன‌ ப‌ண்ற‌து..."

வேதாள‌ம் ச‌லித்துக் கொண்ட‌து..

"அடிங்க‌...மொட்டை ச‌னிய‌னே..உன் மூஞ்சிக்கு டூய‌ட் பாட‌ வேதாளி வேற‌ கேக்குதோ? நீயும் உன் ம‌ண்டையும்..அது என்ன‌, த‌லையில‌ ஒரு ச‌ட்டியை க‌வுத்துருக்க‌? ஒன‌க்கு என்ன‌ பெரிய‌ இன்டியானா ஜோன்ஸுன்னு நென‌ப்பா எப்ப‌வும் தொப்பியோட‌ திரிய‌...அதுல உன் கொம்புக்கு ஓட்ட வேற.."

"அது தொப்பி இல்ல‌ மாதி..தொப்பி வாங்க ஏது காசு...இந்த‌ ஊர்ல‌ எப்ப‌வும் ம‌ழ‌ பெய்யுதா ..ம‌ழையில‌ ந‌னைஞ்சா ஜ‌ல்ப்பு புடுச்சிகிடுதுப்பா.. அதான் ஒரு ப‌ழைய‌ ச‌ட்டி கெட‌ச்சிது...ம‌ண்டைல‌ மாட்டிக்கிட்டேன்.."

"நீயும் உன் மண்டையும்..அதுக்கு மேல ஒரு சட்டி வேற..எப்ப‌வும் எதுனா கெளையில‌ தான் தொங்கிக்கிட்டுருப்ப‌..இப்ப‌ என்ன‌...ம‌ர‌த்த‌டில‌ உக்காந்து என்ன‌ ப‌ண்ற‌.."

"ஹிஹீஹீ...."

வேதாள‌ம் ப‌தில் சொல்லாம‌ல் சிரித்த‌து...

"என்ன‌ இளிப்பு...உண்மையைச் சொல்.."

விக்கிர‌ம‌ன் குர‌லை க‌டுமையாக்கிக் கொண்டான்..

"ஒண்ணும் பெரிசா இல்ல மாதி..சுள்ளி பொறுக்கிட்டு இருந்தேன்.."

"என்ன‌து..சுள்ளியா..எதுக்கு..."

"காய்ச்ச‌த் தான்..."

"காய்ச்சிற‌துன்னா.."

"ம்ம்ம்..க‌ஞ்சி காய்ச்ச‌ற‌து..ஒன‌க்கு ஒண்ணுமே தெரியாது பாரு..."

"ச‌னிய‌னே...நீ சொல்ற‌து ஒரு ம‌ண்ணும் புரிய‌ல‌..என்ன‌ காய்ச்ச‌ற‌ நீ"

"மாதி..இந்த‌ ஊர்ல‌ வெல‌வாசியெல்லாம் ஏறிப் போச்சி..ஒண்ணும் க‌ட்டுப்ப‌டியாவ‌ற‌துல்ல‌...ந‌ம்ம‌ வ‌ச‌திக்கு என்ன‌ ஸ்காட்சா வாங்க‌ முடியும்..அதான்..நானே காய்ச்சி அடிக்கிற‌துன்னு முடிவெடுத்துட்டேன்..அதுக்கு தான் அடுப்பெரிக்க சுள்ளி பொறுக்கிட்டு இருந்தேன்..நீ கெடுத்துட்ட..."

"ம்ம்க்க்கும்..உன் த‌லையை தான் எரிக்க‌ணும் தாள‌மே..ச‌ரி, நீ காய்ச்சின‌தெல்லாம் போதும்..உட‌னே கெள‌ம்பு..போய்க்கிட்டே இருக்க‌லாம்.."

வேதாள‌ம் சிரித்த‌து..

"போய்க்கிட்டே இருக்க‌லாம்னா எங்க‌.."

"ம்ம்ம்..உன் மாமியார் வீட்டுக்கு..வேற‌ எங்க‌..எல்லாம் அந்த‌ கெழ‌ட்டு ம‌ந்திர‌வாதி கிட்ட‌ தான்...நான் பாட்டுக்கு ஒரு ய‌வ‌ன‌ ராணியோட‌ டின்ன‌ர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்..அந்த‌ ச‌டைய‌னுக்கு அது பொறுக்க‌லை..வேதாள‌த்த‌ புடிச்சாதான் ஆச்சின்னு அதையும் கெடுத்துட்டான்..."

"என்ன‌து கோழி புடிக்கிற‌ மாதிரி சொல்ற‌..வேதாள‌த்தை புடிக்கிற‌து அம்புட்டு ஈஸியா போயிடுச்சா...எல்லாம் நேர‌ம்..ச‌ரி அதை விடு..அது என்ன‌ ய‌வ‌ன‌ ராணி டின்ன‌ர்.."

"அதெல்லாம் உன‌க்கெத‌ற்கு தாள‌மே..பேசாம‌ல் என்னுட‌ன் கிள‌ம்பு..ம‌ற்ற‌தை நாளைக்கி பேசிக்க‌லாம்.."

வேதாளம் விக்கிரமனின் அவசரத்தை அலட்சியப்படுத்தியது..

"மாதித்தா.. ய‌வ‌ன‌ ராணியுட‌ன் புதுக் காத‌லா? என்ன இருந்தாலும் நீ உஜ்ஜைனி நாட்டவன்..அவளோ யவனப் பெண்..அவளுக்கும் உனக்கும் பொருந்தி வருமா? நீ ஏதோ த‌வ‌று செய்வது போல‌ தெரிகிறதே.. இப்ப‌டி பொருந்தாக் காத‌லில் வீழ்ந்து அவ‌ஸ்தை ப‌ட்ட இருவரின் க‌தையை சொல்கிறேன் கேள்..."

"நீயும் உன் க‌தையும்..அதை நீயே வைத்துக் கொள்.. என‌க்கு நேர‌மாகிற‌து..உட‌னே கிள‌ம்பு..இல்லை உன் கையக்கால ஒட‌ச்சி தூக்கிட்டு போயிருவேன்.."

"எங் கையக்கால ஒடைக்கிற‌து இருக்க‌ட்டும் மாதி...மொத‌ல்ல‌ இதுக்கு ப‌தில் சொல்லு..கைக்கிளைன்னா என்ன‌?"

கைக்கிளைன்னா....

மாதித்த‌ன் விழித்தான்...

====கைக்கிளை...அடுத்த‌ வார‌ம் விரியும்...=====

எலேய்..தொடர ஆரம்பிச்சி ரெண்டு வாரமாச்சி...இன்னும் கதைக்கே வர்ல..என்னடா படம் காட்றீங்க....

கொதிக்கும் மக்களுக்கு...கொஞ்சம் பொறுத்துக்கங்க..அடுத்த வாரம் கதைய ஆரம்பிச்சுருவோம்..அதுவரைக்கும் கொஞ்சம் நியூஸ் ரீல் பாருங்க..
என்ன ஆச்சின்னு தெரியல, இந்த கதையோட மூன்றாம் பாகம் தமிழ் மணத்துல லிங்க் ஆக மாட்டேங்குது...அதனால மூன்றாம் பாகத்தை இங்க போயி படிச்சிக்கங்க..

82 comments:

குடுகுடுப்பை said...

இனிமேதான் படிக்கனும்

குடுகுடுப்பை said...

குயித்தியமா ஒன்னும் இல்ல இந்த வாரம்.ஆனா என்க்கு அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா கெடச்சிருக்கு

குடுகுடுப்பை said...

கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். ... பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை ..

துளசி கோபால் said...

உள்ளேன் ஐயா

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
இனிமேதான் படிக்கனும்
//

நானும் இனிமே தான் மறுமொழி போடணும்...

நசரேயன் said...

உள்ளேன் ஐயா .. ஒ.. இப்பதான் triler முடியுதா?

triler நல்லா இருக்கு

விஜய் ஆனந்த் said...

:-)))...

'கைக்கிளை'-ன்னா ஏழு வகைப்பெண்கள்ல ஒண்ணு இல்ல???

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
குயித்தியமா ஒன்னும் இல்ல இந்த வாரம்.ஆனா என்க்கு அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா கெடச்சிருக்கு

//

அது என்னா குயித்தியமா? எதுனா தமிழ்ல சொல்லுங்க பாஸூ!

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். ... பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை ..

//

தலைவரு..உங்களுக்கு தெரியாமயா?..நீங்க சொன்னா சரிதேன்...:0)

அது சரி said...

//
துளசி கோபால் said...
உள்ளேன் ஐயா

//

வாங்க டீச்சர்...

வழக்கமா பசங்க தான் உள்ளேன் ஐயான்னு சொல்வாங்க..இப்ப டீச்சரே இப்பிடி சொன்னா எப்படி :0)

அது சரி said...

//
நசரேயன் said...
உள்ளேன் ஐயா .. ஒ.. இப்பதான் triler முடியுதா?

triler நல்லா இருக்கு
//

வாங்க நசரேயன்.. மெயின் ஃபில்ம் இனிமே தான் ஆரம்பம்..

அது சரி said...

//
விஜய் ஆனந்த் said...
:-)))...

'கைக்கிளை'-ன்னா ஏழு வகைப்பெண்கள்ல ஒண்ணு இல்ல???

//

இல்ல :0)

தல, உங்க பதிலு மட்டும் தப்புல்ல..கேள்வியும் தப்பு..

மொதல்ல, ஏழு வகை பெண்களே இல்ல.. நாலு வகை தான். அத்தினி, சித்தினி, பத்தினி, மோகினி..

நீங்க கேட்குறது ஏழு வகைப் பருவம்னு நினைக்கிறேன்..

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்...

ஏழு பருவங்கள்..அப்படின்னு நான் சொல்லலை..ஏதோ இலக்கியத்துல சொன்னதா ஞாபகம்..

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
குயித்தியமா ஒன்னும் இல்ல இந்த வாரம்.ஆனா என்க்கு அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா கெடச்சிருக்கு

//

கெடைச்சிதில்ல...கெடைச்சிருச்சி, கெடைச்சிருச்சி சொல்லிக்கினு இருந்தா எங்களுக்கு எப்பிடி தெரியும்? பதிவ ஒடனே போட்றது...

Anonymous said...

//என்ன காடா இல்ல ஆற்காடு வீராசாமியோடா தமிழ்நாடா.. இவ்ளோ இருட்டா இருக்கே..டார்ச் லைட் வேற இல்ல.//

யோவ் என்ன தமிழ்நாடை ஆர்காட்டார்க்கு சொந்தமாக்க முயற்சி பண்ணுறியா?

//நானே காய்ச்சி அடிக்கிற‌துன்னு முடிவெடுத்துட்டேன்.//
இது வேதாளமா இல்லை "அது சரியா"?

//எலேய்..தொடர ஆரம்பிச்சி ரெண்டு வாரமாச்சி...இன்னும் கதைக்கே வர்ல..என்னடா படம் காட்றீங்க....//
மெகா சீரியல் எடுக்க ஒரு சோதனை பதிவு(களா)?

கொஞ்சம் ஸ்பீட் பண்ணுங்கப்பு!

MSK / Saravana said...

//எலேய்..தொடர ஆரம்பிச்சி ரெண்டு வாரமாச்சி...இன்னும் கதைக்கே வர்ல..என்னடா படம் காட்றீங்க....//

Rippeettu.. :))

dheepan said...

hi i've read ur first story.. its wonderful.this one is also very nice. i like vikramathithan stories from my childhood..modernized way is very interesting .. keep up ur good work ... i cant wait 4 the other post

ur fan
dheepan

Sundar சுந்தர் said...

ரெண்டு பாகம் பில்ட் அப் கொஞ்சம் ஓவரா தெரியலியா உங்களுக்கு?

Sundar சுந்தர் said...

//மொதல்ல, ஏழு வகை பெண்களே இல்ல.. நாலு வகை தான். அத்தினி, சித்தினி, பத்தினி, மோகினி..//
நாலு வகை தானா? கொஞ்சம் கதை விட்டுட்டு சுத்தி இருக்கறவங்களை புரிஞ்சிக்க பாருங்க....life is bit more complex buddy!

அது சரி said...

//
Sundar said...
ரெண்டு பாகம் பில்ட் அப் கொஞ்சம் ஓவரா தெரியலியா உங்களுக்கு?

//

வாங்க சுந்தர் சார்..

பில்டப்பெல்லாம் ஒண்ணும் இல்லீங்க...படம் போட்றதுக்கு முன்னாடி கொஞ்சம் வெளம்பர பிட்டு ஓட்ற மாதிரி...:0).. த‌விர‌, த‌டால்னு க‌தையை எப்பிடி ஆர‌ம்பிக்கிற‌துன்னு என‌க்கு அவ்வ‌ளவா தெரில‌..அதான் இந்த‌ பிர‌ச்சினை..

அது சரி said...

//
Sundar said...
//மொதல்ல, ஏழு வகை பெண்களே இல்ல.. நாலு வகை தான். அத்தினி, சித்தினி, பத்தினி, மோகினி..//
நாலு வகை தானா? கொஞ்சம் கதை விட்டுட்டு சுத்தி இருக்கறவங்களை புரிஞ்சிக்க பாருங்க....life is bit more complex buddy!

//

அய்யோ அய்யோ, அநியாயமா இருக்கே...

அது நான் சொல்லல சார்...எங்கியோ எப்பவோ படிச்சது..விஜய் ஆனந்த் அதை தான் கேட்க்றார்னு நெனைச்சிக்கிட்டு சொல்லிட்டேன்..

மத்தபடி, யாரையும் வகைப்படுத்தறதெல்லாம் எனக்கு தெரில.

அது சரி said...

//
pathivu said...

யோவ் என்ன தமிழ்நாடை ஆர்காட்டார்க்கு சொந்தமாக்க முயற்சி பண்ணுறியா?

//

என்ன‌து? அப்ப‌ த‌மிழ் நாடு ஆர்காட்டாருக்கு சொந்த‌ம் இல்லியா? என்கிட்ட‌ பொய் சொல்லிட்டாய்ங்க‌ போல‌ருக்கே.. இருங்க‌, வெசாரிச்சி முடிவெடுக்கிறேன்..

//நானே காய்ச்சி அடிக்கிற‌துன்னு முடிவெடுத்துட்டேன்.//
இது வேதாளமா இல்லை "அது சரியா"?

//

வேதாள‌ம் தாங்க‌...நாமெல்லாம் குடிக்கிற‌தோட‌ ச‌ரி.. காய்ச்சிற‌துன்னா குடுகுடுப்பை கார‌ரு ஒருத்த‌ர் செய்ற‌தா கேள்வி..ஆனா அவ‌ர்ட்ட‌ இருந்து ச‌ர‌க்கு வாங்க‌ முடியாது..காய்ச்சி எல்லாத்தையும் அவ‌ரே அடிச்சிர்றாரு!

//எலேய்..தொடர ஆரம்பிச்சி ரெண்டு வாரமாச்சி...இன்னும் கதைக்கே வர்ல..என்னடா படம் காட்றீங்க....//
மெகா சீரியல் எடுக்க ஒரு சோதனை பதிவு(களா)?

கொஞ்சம் ஸ்பீட் பண்ணுங்கப்பு!

//

நான் மாதித்தன் கிட்ட சொல்றேன்..

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
//எலேய்..தொடர ஆரம்பிச்சி ரெண்டு வாரமாச்சி...இன்னும் கதைக்கே வர்ல..என்னடா படம் காட்றீங்க....//

Rippeettu.. :))

//

ஆஹா, நீங்க ரிப்பீட்டு போட்ற வேகத்தை பார்த்தா தெரைய கிழிச்சிருவீங்க போலருக்கே... இந்தா சீக்கிரமா படத்த ஆரம்பிச்சிருவோம்..அதுக்குள்ள எதுனா கல்லமுட்டாய், முறுக்கு வாங்கி சாப்பிடுங்க :0)

அது சரி said...

//
dheepan said...
hi i've read ur first story.. its wonderful.this one is also very nice. i like vikramathithan stories from my childhood..modernized way is very interesting .. keep up ur good work ... i cant wait 4 the other post

ur fan
dheepan

//

வாங்க தீபன்...வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி...

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுன்னு தெரியுது..அதான் ஈஸியா பாராட்றீங்க..ஃபேன்..ஆஹா, நமக்கும் ஒரு ஃபேனா? கேட்கறதுக்கு நல்லா தான் இருக்கு :0)

குடுகுடுப்பை said...

//
குடுகுடுப்பை said...
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். ... பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை ..

//

தலைவரு..உங்களுக்கு தெரியாமயா?..நீங்க சொன்னா சரிதேன்...:0)

"கைக்கிளை" கூகிள் அடிச்சா வர முத லிங்க அது, நான் என்னத்தியோ கிளிச்ச மாதிரி. என்ன போய் இப்படி தலைவரு அப்ப்டின்னு கிண்டல் பண்ணி அவமானப்படுத்துறீர்:)

அது சரி said...

//
குடுகுடுப்பை said...

"கைக்கிளை" கூகிள் அடிச்சா வர முத லிங்க அது, நான் என்னத்தியோ கிளிச்ச மாதிரி. என்ன போய் இப்படி தலைவரு அப்ப்டின்னு கிண்டல் பண்ணி அவமானப்படுத்துறீர்:)

//

அடடா, நீங்க சொன்ன பதில் சரி..பாராட்டா சொன்னா கிண்டல் பண்றேன்னு சொல்லீட்டீங்களே?

வருங்கால முதல்வரை தலைவரேன்னு கூப்பிட்டாத்தான பொட்டிக்கடை வைக்கவாவது லைசன்ஸ் கெடைக்கும்..அதான் இப்பவே ஆரம்பிச்சிட்டேன் :0)

அமர பாரதி said...

அய்யா,

கைக்கு வந்ததை அடிச்சு விடறதா? நாலு வகை பெண்கள்ள மோகினி இல்ல. தரங்கினி அப்பிடின்னு ஒரு சைட்டுல போட்டிருக்கு. ஆனா அதுவும் எனக்கு சந்தேகமே.

அது சரி said...

//
அமர பாரதி said...
அய்யா,

கைக்கு வந்ததை அடிச்சு விடறதா? நாலு வகை பெண்கள்ள மோகினி இல்ல. தரங்கினி அப்பிடின்னு ஒரு சைட்டுல போட்டிருக்கு. ஆனா அதுவும் எனக்கு சந்தேகமே.

//

அடடா, விட்டா பிரம்போட வந்திருவீங்க போலருக்கே :0) வேண்டாம் சார், நான் ஏற்கனவே தமிழ் வாத்தியாருக்கிட்ட ரொம்ப அடி வாங்கிருக்கேன்..இப்ப‌க்கூட‌ காது வ‌லிக்குது!

அத்தினி, சித்தினி, ப‌த்தினி, மோகினின்னு தான் ப‌டிச்ச‌ ஞாப‌க‌ம்..ஆனா, த‌ர‌ங்கிணி யாருன்னு என‌க்கும் தோணுச்சி.. ஒரு வேளை, மோகினி தான் த‌ர‌ங்கிணியா??

த‌மிழ் ப‌டிச்ச‌வ‌ங்க‌ யாராவ‌து விள‌க்க‌ம் கொடுத்த‌ புண்ணிய‌மா இருக்கும்!

துளசி கோபால் said...

மோகினி கிடையாது.

தெனாலி படத்தில் 'அத்தினி சித்தினி ' பாட்டு இருக்குது பாருங்க.

(எல்லாத்துக்கும் சினிமான்னே ஆகிருச்சு)

அது சரி said...

//
துளசி கோபால் said...
மோகினி கிடையாது.

தெனாலி படத்தில் 'அத்தினி சித்தினி ' பாட்டு இருக்குது பாருங்க.

(எல்லாத்துக்கும் சினிமான்னே ஆகிருச்சு)

//

ஆமா, எனக்கும் அந்த பாட்டு ஞாபகம் வருது.."அத்தினி, சித்தினி, பத்தினி, தரங்கிணி.."

ஆனா, டீச்சர், தரங்கிணி தான் மோகினின்னு எனக்கு ஒரு சந்தேகம். நான் படிச்ச இன்னொரு இடத்துல "அத்தினி, சித்தினி, சங்கினி, பதுமினி"ன்னு எழுதிருந்தாங்க..

இதுல சங்கினின்னா மோகினி தான்..

இதையே பாலகுமாரனும் ஒரு நாவல்ல சொல்லிருப்பாரு..

(எனக்கு தெரிஞ்ச தமிழ்ல பாதி படிச்சது பாலா கிட்ட இருந்து தான்..அவரும் எனக்கு ஒரு வாத்தியார்!)

Mahesh said...

அய்ய்ய்ய்ய்யோ... எப்பிடிங்க இது?... தமிழ்ல பூந்து வெளயாடறீங்க... இப்ப்த்தான் உங்க எல்லா பதிவுகளையும் படிச்சு முடிச்சேன்... அப்பறமா பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.... ஒரு இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் இப்பிடி தமிழ்ல அட்டகாசமா எழுதறத படிக்கறதே ஒரு சொகமா இருக்கு... பட்டய கெளப்பறீங்க... வாழ்த்துக்கள் !!

அப்பறம்...நீங்க சொன்ன பெறகு CDO CDS பத்தியும் எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதிட்டேன்.... நீங்க ஒரு பார்வை பாத்துருங்க... எதாச்சி தப்பு இருந்தா சொல்லுங்க. நன்றி.

வாங்க மகேஷ்!

வாழ்த்துகளுக்கு நன்றி..ஆனா, பட்டையை கெளப்புறதால்லாம் நான் நெனைக்கல.. எனக்கு தமிழில் தெரிந்த விஷயங்கள் மிகக் குறைவே..ஆனா, ஒரு ஆர்வத்தின் காரணமாக, தெரிந்ததை வச்சி ஜல்லி அடிக்கிறேன்னு வேணா சொல்லலாம்..

அந்த CDO, CDஸ் இரண்டாம் பகுதி எழுதிட்டீங்களா? கண்டிப்பா வந்து படிச்சிர்றேன் :0)

கயல்விழி said...

//"..த்த்தா.பாடு..எவ‌ன்டா அது..இந்த‌ நாட்ல ஒரு வேதாள‌த்த‌ கூட‌ க‌ற்போட‌ விட‌மாட்டானுங்க‌ போல‌ருக்கே.."
//

LOL

கயல்விழி said...

நீங்க படத்தில போட்டிருக்க வேதாளத்தின் தலையில் சட்டியைக்காணோமே? :)

கயல்விழி said...

இதுக்கு பேர் தான் Attention to details :)

கயல்விழி said...

கதை எப்போது ஆரம்பிக்கும்? இதெல்லாம் ஓவர் பில்டப்.

கயல்விழி said...

வேதாளமும் குடிகார வேதாளமா இருக்கிறது தான் கொடுமை!

கயல்விழி said...

யவன ராணி = சைனீஸா? சைனீஸ்க்கு இப்படி எல்லாம் ஒரு பெயரா?

அது சரி said...

//
கயல்விழி said...
நீங்க படத்தில போட்டிருக்க வேதாளத்தின் தலையில் சட்டியைக்காணோமே? :)

//

நல்லா கவனிச்சி பாருங்க கயல்.. மாதித்தன் வேதாளத்த தலை கீழா தூக்கிட்டு போறான்... அப்ப தலையில போட்ருந்த சட்டி கீழ விழுந்துருச்சி :0)

அது சரி said...

//
கயல்விழி said...
இதுக்கு பேர் தான் Attention to details :)

//

இதுக்கு பேரு தான் குப்புற விழுந்தாலும் தாடில மண்ணு ஒட்டலங்கிறது :0)

அது சரி said...

//
கயல்விழி said...
கதை எப்போது ஆரம்பிக்கும்? இதெல்லாம் ஓவர் பில்டப்.

//

நீங்களும் சொல்லிட்டீங்களா?? இன்னும் பில்டப்பே ஆரம்பிக்கல.. இதுக்கே இப்பிடி சொல்றீங்களே, அப்ப வேதாளம் பில்டப்ப ஆரம்பிச்சிட்டா? :0)

அது சரி said...

//
கயல்விழி said...
வேதாளமும் குடிகார வேதாளமா இருக்கிறது தான் கொடுமை!

//

அப்ப நீங்க அது நல்ல வேதாளம்னு நெனைச்சிக்கிட்டு இருந்தீங்களா?? அடடா, வேதாளத்துக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படும் :0)

மாதித்தன கெடுத்து குட்டி சுவரா ஆக்கினதே வேதாளம் தான்!

அது சரி said...

//
கயல்விழி said...
யவன ராணி = சைனீஸா? சைனீஸ்க்கு இப்படி எல்லாம் ஒரு பெயரா?

//

இல்லியே! அது அந்த பொண்ணோட பேரில்ல. அந்த பொண்ணு பேரு மிங்ஸீ.. அது உண்மையான பேரு, உண்மையாகவே அப்படி ஒரு பொண்ணு இருக்கு..அது தம்மடிக்கும்..அது தம்மடிச்சா நான் கொஞ்சம் தள்ளி போய் நின்னுக்குவேன்.. (குப்ப லாரி க்ராஸ் பண்ற எஃபெக்டு)..

ஆனா, தமிழ்ல சைனாவை யவன தேசம்னு எழுதறது வழக்கம்..கல்கி, சாண்டில்யன் எல்லாம் சைனாவை பத்தி எழுதும் போது யவன தேசம், யவன வணிகன், யவன ராணின்னு சொல்லியிருப்பாங்க. (கடல் புறா படிச்சிருக்கீங்களா? சாண்டில்யன் பட்டைய கெளப்பிருப்பாரு!)..

பழமைபேசி said...

// அத்தினி, சித்தினி, பத்தினி, மோகினி..//

அத்தினி சங்கினி சித்தினி பதுமினி

"கைக்கிளை"ங்றது ஒரு தலைக் காதல்!

நமது திண்ணைப் பக்கம், அது சரி அவர்கள் வராததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறேன்!

பழமைபேசி said...

தரங்கிணி தான் சங்கினி!

மோகினியும் காமினியும் இந்திரலோகத்துலன்னு படிச்சதா நினைவு!!

மறுபடியும் வெளிநடப்புச் செய்கிறேன்.

கொசுறு: வெளிநடப்புச் செய்யுறதே உள்ள மறுபடியும் வரத்தானே?!

கயல்விழி said...

கடல்புறாவெல்லாம் படிச்சதில்லை அதுசரி. சில வருடங்கள் முன் ஆனந்த விகடனில் தொடராக வந்ததோ? என் அம்மா படித்துக்கொண்டிருக்கும் போது எட்டிப்பார்த்ததில் "கடல் புறா" என்று எழுதி இருந்ததாக ஞாபகம்.

துளசி கோபால் said...

யவனதேசம், க்ரீஸ் ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.
கிரேக்க நாடு.

துளசி கோபால் said...

நீங்க சொல்லும் சீனப்பெண் இளமையா இருந்தால் யௌவனராணி:-))))

நீங்க சொல்றது பாதி சரி :0)

அது தொடரா வந்தது..ஆனா, குமுதத்துல வந்தது, விகடன்ல இல்ல.. நானும் தொடரா வந்தப்ப படிக்கலை..கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன்..ஆனா இன்னும் முடிக்கலை. அந்த புக்கு எங்க...யாரோ கடன் வாங்கி போனாங்க..இன்னும் திரும்ப வரலை :0(

அது சரி said...

//
துளசி கோபால் said...
யவனதேசம், க்ரீஸ் ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.
கிரேக்க நாடு.
//

இல்லைங்க. நான் படிச்ச வரைக்கும் யவன தேசம்னா அந்த காலத்து சைனா..சாவகம்னா ஜாவா ஐலன்ட்ஸ்..இதே மாதிரி, இந்தோனேஷியா, சிங்கப்பூருக்கு கூட வேற பேரு இருக்கு..

அது சரி said...

//
துளசி கோபால் said...
நீங்க சொல்லும் சீனப்பெண் இளமையா இருந்தால் யௌவனராணி:-))))

//

இல்லாமையா பின்ன? மிங்ஸீ நிஜமாவே யெளவன ராணி தான்..இல்லாட்டி மாதித்தன் எப்படி டின்னருக்கு கூட்டிப்போவான்? :0)

அது சரி said...

//
பழமைபேசி said...
// அத்தினி, சித்தினி, பத்தினி, மோகினி..//

அத்தினி சங்கினி சித்தினி பதுமினி

"கைக்கிளை"ங்றது ஒரு தலைக் காதல்!

நமது திண்ணைப் பக்கம், அது சரி அவர்கள் வராததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறேன்!

//

வாங்க பழமை பேசி அண்ணா!

நீங்க சொல்றதை பார்த்தா, நான் சொன்னது சரி மாதிரி தெரியுதே.. எப்பிடியோ, அடி வாங்காம நம்மள காப்பாத்திட்டீங்க.. நன்றி..

( நான் உங்க கடைப்பக்கம் வந்தேன்...காயின்லாம் வச்சி பெருசா சொல்லியிருந்தீங்க.. அதுல சில்லறைப்பயல் நம்ம என்னா சொல்றதுன்னு ஓடியாந்துட்டேன்..)

மன்மதக்குஞ்சு said...

நகைச்சுவையுடன் கூடிய ரொம்ப நல்ல பதிவு.

http://urupudaathathu.blogspot.com/ said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

அதுசரி

அடுத்த பாகம் எப்போ வரும்? ரொம்ப வேலையோ?

ராஜ நடராஜன் said...

வணக்கம்,அது சரி:) ரொம்ப நாளாச்சே விக்கிரமாதித்தனையும் பதிவையும் படிச்சுன்னு வந்தேன். எப்படி இருக்கீங்க?

ராஜ நடராஜன் said...

அய்யே! கைக்கிளை கூட தெரியாம இவங்கெல்லாம் வயசுக்கு வந்து......

Anonymous said...

இன்னாபா, தண்ணியடிச்சிட்டு குப்புற படுத்துட்டயா? இன்னும் ஹேங் ஓவர் இன்னும் இருக்கா?

MSK / Saravana said...

அதுசரி

அடுத்த பாகம் எப்போ வரும்? ரொம்ப வேலையோ?

இன்னாபா, தண்ணியடிச்சிட்டு குப்புற படுத்துட்டயா? இன்னும் ஹேங் ஓவர் இன்னும் இருக்கா?

குடுகுடுப்பை said...

//"அட‌ச்சே..மாதித்தா...நீயா...நீ என்ன‌ செய்ற‌ இங்க‌...நைட்டானா பொண்ணுங்க‌ பின்னாடி சுத்த‌ற‌து தான‌ உன் வேல‌...இப்ப‌ என்ன‌ காட்டுக்குள்ள‌ சுத்துற.."//

எதுனா புச்சா சிக்கிருச்சா உன்க்கு.ஆளக்கானோம்.இல்ல யாருனா ஆட்டோ அனுப்பிச்சிட்டாங்களா

புதுகை.அப்துல்லா said...

go and see here dear :)

http://blogintamil.blogspot.com/2008/11/blog-post_02.html

விலெகா said...

காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.
ஆகிய காரணங்களால் இதை நான் படிக்கவில்லை...

விலெகா said...

ஹி ஹி ஹி ஹி
.ஆகிய காரணங்களால் இதை நான் படிக்கவில்லை...
ஹி ஹி ஹி ஹி

பரணி said...

அட என்னப்பா இது? ஆளாளுக்கு ப்ளாக் ல பொளந்து கட்டறிங்க...ஆனா யவனம்னா ஒருத்தருக்கு கூட சரியா தெரியல,அவங்கவங்க எட்டாங்க்ளாஸ் வாத்தியாரைக் கையில குச்சியோட வர சொல்லணும் உங்க வீடுகளுக்கு (உங்கள் பணிமனைகளுக்கு கூட வரலாம் ஆனால் வர போக பிளைட் சார்ஜ் அவங்கவங்க கொடுத்துடனும் ...இந்தியா குடிமகன்ள்கள் (இது வேற அர்த்தம்) பேருந்துக் கட்டணம் கொடுத்துருங்க ,
அட என் அருமை நண்பர்களே எகிப்துயா எகிப்து ..இப்படியும் ஒரு தேசம் உலகத்துல இருக்கு .
( தெரியாம பூடுச்சே)

Anonymous said...

ana super na ! singapore ku vanthrunga na

அது சரி said...

//
மன்மதன் said...
நகைச்சுவையுடன் கூடிய ரொம்ப நல்ல பதிவு.

//

வாங்க மன்மதன்..வருகைக்கு நன்றி

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

//

வாழ்த்துக்கு நன்றி அணிமா..

லேட்டா சொன்னாலும் நான் எர்லியஸ்டா சொல்லிர்றென்.. தீபாவளி நல்வாழ்த்துக்கள் (அடுத்த தீபாவளிக்கு!)

அது சரி said...

//
கயல்விழி said...
அதுசரி

அடுத்த பாகம் எப்போ வரும்? ரொம்ப வேலையோ?

//

வாங்க கயல்விழி..

ஸாரி, அடுத்த பாகம் சீக்கிரமா வரும்..ரெண்டு வாரம் கொஞ்சம் ட்ராவல் பண்ண வேண்டி இருந்ததால எழுத முடியலை.

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
வணக்கம்,அது சரி:) ரொம்ப நாளாச்சே விக்கிரமாதித்தனையும் பதிவையும் படிச்சுன்னு வந்தேன். எப்படி இருக்கீங்க?

//

வாங்க நடராஜன் சார்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றீங்க...வீடு கட்ற வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா?

நசரேயன் said...

புது படம் வரலையா?

அது சரி said...

//
pathivu said...
இன்னாபா, தண்ணியடிச்சிட்டு குப்புற படுத்துட்டயா? இன்னும் ஹேங் ஓவர் இன்னும் இருக்கா?

//

தண்ணி அடிக்கிறதா? சேச்சே...எனக்கு அந்த பழக்கமே இல்லையே :0)

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
அதுசரி

அடுத்த பாகம் எப்போ வரும்? ரொம்ப வேலையோ?

இன்னாபா, தண்ணியடிச்சிட்டு குப்புற படுத்துட்டயா? இன்னும் ஹேங் ஓவர் இன்னும் இருக்கா?

//

வாங்க சரவணக் குமார்..அடுத்த பாகம் சீக்கிரம் வரும்.

அது சரி said...

//
வருங்கால முதல்வர் said...

எதுனா புச்சா சிக்கிருச்சா உன்க்கு.ஆளக்கானோம்.இல்ல யாருனா ஆட்டோ அனுப்பிச்சிட்டாங்களா
//

ம்ம்க்கும்..இருக்கிறத மெய்ன்டைன் பண்றதே பெரும்பாடா இருக்கு, இதுல புதுசு வேறயா??

அது சரி said...

//
புதுகை.அப்துல்லா said...
go and see here dear :)

http://blogintamil.blogspot.com/2008/11/blog-post_02.html

//

வாங்க அப்துல்லா அண்ணே..ஆக்சுவலா, நான் உங்க பதிவில படிக்க வேண்டியது இன்னும் நெறைய இருக்கு..

அது சரி said...

//
விலெகா said...
காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.
ஆகிய காரணங்களால் இதை நான் படிக்கவில்லை...

//

படிக்காட்டி தப்பு ஒண்ணும் இல்லீங்க..சில பேருக்கு (பல பேருக்கு?) இதெல்லாம் பிடிக்காது..அவங்க எதுக்கு படிச்சி, டென்ஷனாகி எனக்கு ஆட்டோ அனுப்பணும்? அதுக்குத் தான் அந்த டிஸ்கி போட்டதே!

அது சரி said...

//
Barani said...
அட என்னப்பா இது? ஆளாளுக்கு ப்ளாக் ல பொளந்து கட்டறிங்க...ஆனா யவனம்னா ஒருத்தருக்கு கூட சரியா தெரியல,அவங்கவங்க எட்டாங்க்ளாஸ் வாத்தியாரைக் கையில குச்சியோட வர சொல்லணும் உங்க வீடுகளுக்கு (உங்கள் பணிமனைகளுக்கு கூட வரலாம் ஆனால் வர போக பிளைட் சார்ஜ் அவங்கவங்க கொடுத்துடனும் ...இந்தியா குடிமகன்ள்கள் (இது வேற அர்த்தம்) பேருந்துக் கட்டணம் கொடுத்துருங்க ,
அட என் அருமை நண்பர்களே எகிப்துயா எகிப்து ..இப்படியும் ஒரு தேசம் உலகத்துல இருக்கு .
( தெரியாம பூடுச்சே)

//

வாங்க பரணி...

எழுதும்போதே நினைச்சேன்..யாராவது பிரம்போட வரப்போறாங்கன்னு..

யவன தேசம்னா சைனான்னு எனக்கு ஞாபகம்..க்ரீஸ்னு துளசி டீச்சர் சொல்றாங்க.. நீங்க ஈஜிப்ட்னு சொல்றீங்க..

இதைப் பத்தி நான் இன்னும் கொஞ்சம் தேடிப் படிச்சிட்டு சொல்றேன்.

அது சரி said...

//
Anonymous said...
ana super na ! singapore ku vanthrunga na
//

வாங்க அனானி..வருகைக்கு நன்றி..

நீங்க யாரை சிங்கப்பூருக்கு வரச் சொல்றீங்கன்னு தெரியலை..வேதாளத்தையா? :0)

அது சரி said...

//
நசரேயன் said...
புது படம் வரலையா?

//

புது படம் தானா? கொஞ்சம் ஃபைனான்ஸ் பிரச்சினை..அடுத்த வாரம் கண்டிப்பா ரிலீஸ் பண்ணிருவோம். :0)

பரணி said...

எழுதும்போதே நினைச்சேன்..யாராவது பிரம்போட வரப்போறாங்கன்னு..

//யவன தேசம்னா சைனான்னு எனக்கு ஞாபகம்..க்ரீஸ்னு துளசி டீச்சர் சொல்றாங்க.. நீங்க ஈஜிப்ட்னு சொல்றீங்க..

இதைப் பத்தி நான் இன்னும் கொஞ்சம் தேடிப் படிச்சிட்டு சொல்றேன்.//

படிங்க படிங்க ...தேடித் தேடி படிங்க ஆனாலும் யவன தேசம்னா எகிப்து தான் .
கிரீஸ் -கிரேக்கம்
சைனா-சீனா
பெர்சியா-பாரசீகம்
இந்த வரிசைல யவனம்னா எகிப்து தான் ஆனாலும் நானும் தேடிப் பார்க்கிறேன்.யார் ஃபஸ்ட் கண்டுபிடிக்கறோம்னு பார்க்கலாம்.

மங்களூர் சிவா said...

//
"..த்த்தா.பாடு..எவ‌ன்டா அது..இந்த‌ நாட்ல ஒரு வேதாள‌த்த‌ கூட‌ க‌ற்போட‌ விட‌மாட்டானுங்க‌ போல‌ருக்கே.."
//

ROTFL
:)))))))))

மங்களூர் சிவா said...

//
pathivu said...

//என்ன காடா இல்ல ஆற்காடு வீராசாமியோடா தமிழ்நாடா.. இவ்ளோ இருட்டா இருக்கே..டார்ச் லைட் வேற இல்ல.//

யோவ் என்ன தமிழ்நாடை ஆர்காட்டார்க்கு சொந்தமாக்க முயற்சி பண்ணுறியா?
//

rippIttu

அது சரி(18185106603874041862) said...

என்ன ஆச்சின்னு தெரியல, இந்த கதையோட மூன்றாம் பாகம் தமிழ் மணத்துல லிங்க் ஆக மாட்டேங்குது...

அதனால மூன்றாம் பாகத்தை இங்க போயி படிச்சிக்கங்க..

http://muranthodai.blogspot.com/2008/11/blog-post_16.html