Wednesday, 15 October 2008

குடிமகனே..பெருங்குடிமகனே.. சினிமா சில நினைவுகள்..தொடர் பதிவு

இங்க பிரிட்டன்ல பெரியாளுங்கள அடிக்கடி நியூஸ்ல காட்டுவாங்க. அப்பிடி ஒரு பெருந்தலைய சமீபத்துல பேட்டி எடுக்குறப்ப கேமராக்காரரு தப்பா ஃபோகஸ் பண்ணி பிபிசில நம்ம முகமும் தெரிஞ்சிருச்சி..எனக்கே அதிர்ச்சி தான்.. என்ன பண்றது, கேமராவ புடுங்கி ஃபில்ம உருவிரலாம்னு பார்த்தா அது டிஜிட்டல் வீடியோ கேமராவாம்.. லைவ் டெலிகாஸ்டிங்.. (அப்புற‌மா அவ‌ருக்கு த‌னியா டிரிங்க்ஸ் வாங்கி ட்ரீட் குடுத்து, அப்ப‌ப்ப‌ இப்பிடி காமிங்க‌ன்னு சொன்ன‌து தொழில் ர‌க‌சிய‌ம் :0)

அது மாதிரி, "சினிமா சில நினைவுகள்" அப்பிடின்னு யாரோ பெரியாளுங்க ஆரம்பிச்ச தொடர் பதிவுல குடுகுடுப்பைக்காரரு அவுட் ஆஃப் ஃபோகஸ்ல நிக்கிற நம்மளையும் கோத்து விட்டுட்டாரு...http://kudukuduppai.blogspot.com/2008/10/blog-post_14.html

"நான் பேட்டில்லாம் குடுக்குறது இல்லீங்களே"ன்னு சொல்லலாம்..ஆனா அதெல்லாம் பெரியாளுங்க சொல்றது.. நாமெல்லாம் மைக் கெடைச்சிட்டா ஒட்டன் சத்திரம் முக்கு சந்துல நின்னு பில் கிளிண்டனையே ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்றவய்ங்க.. இந்தா ஆரம்பிச்சிட்டோம்ல?

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயசுன்னெல்லாம் ஞாபகம் இல்ல. "இவனை தனியா விட்டுட்டா எங்கேயாவது ஓடிப்போயிருவான்"னுட்டு, படத்துக்கு போகும் போதெல்லாம் எங்க அம்மா என்னையும் சினிமாவுக்கு கூட்டிப்போயிருவாங்க.. அதனால ரொம்ப படம் சிவாஜி படமா பாத்திருக்கேன்..

மொதப்படம்னு ஞாபகம் இருக்கிறது நான் ஆறாவது படிக்கிறப்ப, எங்க அம்மா கூட்டிப் போன "வசந்த மாளிகை". அது பக்கத்து தியேட்டர்ல அப்ப ரீ ரிலீஸ் ஆயிருந்துச்சி..

படம் பாத்துட்டு வந்து "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்..ஏன் ஏன் ஏன்" அப்பிடின்னு எங்க அப்பா முன்னாடி காஃபி கப்போட ஆடி, கன்ன‌த்துல அறை வாங்கின ஞாபகம் இருக்கு..

அப்புறம் அதே படத்துல வர்ற "குடி மகனே..பெருங்குடிமகனே" பாட்டுக்கு ஸ்கூல்ல கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு எட்டாங்கிளாஸ் பொண்ணோட டான்ஸ் ஆடி ஃப்ர்ஸ்ட் பிரைஸ் வாங்கினதும் ஞாபகம் இருக்கு..

உணர்ந்தது?? அந்த‌ வ‌ய‌சுல‌ என்ன‌த்த‌ உண‌ர்ற‌து? ஒண்ணுமில்ல‌!

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

த‌மிழ் நாட்டுல‌ க‌டைசியா பார்த்த‌ ப‌ட‌ம், ....
"என் வ‌ழி த‌னீ வ‌ழி... த‌டுக்காத‌"..

த‌லைவ‌ரோட‌ ப‌டைய‌ப்பா..

படம் ரிலீசான ரெண்டாவது நாளே சேலத்துல பார்த்தேன். ஈவ்னிங் ஷோ.

"சுத்தி சுத்தி வந்தீக.." பாட்டுக்கு நான் தம்மடிக்க தியேட்டரை சுத்தி சுத்தி வந்ததும், கேட்டுக்கு வெளில அடுத்த ஷோவுக்கா நின்ன ரசிக பெருமக்கள் "டேய் போடா உள்ள"ன்னு கொலை வெறியோட கத்துனதும் ஞாபகம் இருக்கு..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ச‌.ரோ.ஜா... பல பேரு நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதிருந்தாங்க.. பல தமிழ்மண பதிவர்களும் அடக்கம்..சரி, நல்லாருக்கும் போல அப்பிடின்னு பார்த்தா...பத்து நிமிஷத்துக்கு மேல பாக்க முடியலை.. கொலை வெறி வந்துருச்சி..படம் எடுத்த டைரடக்கர், விமர்சனம் எழுதுன எல்லாரையும் என்ன பண்றது?? இந்த படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்பு வேற..

சரோஜா...ச்சப்பை!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்குற‌துன்னா? கொடுமையா இருக்கிற‌தா?? அப்பிடி பார்த்தா, ஒரு ஒண்ணு ரெண்டு ப‌ட‌த்தை த‌விர‌ எல்லாம் கொடுமையா தான் இருக்கு.அதெல்லாம் இங்க லிஸ்டு போட எடம் பத்தாது...ரொம்ப‌ கொடுமைன்னா... அர‌விந்த் சாமி, க‌ஜோல், பிர‌பு தேவா ந‌டிச்ச‌(?) மின்சார‌க் க‌ன‌வு ப‌ட‌த்தை சொல்ல‌லாம்..

ம‌த்த‌ப‌டி அதிர‌ வ‌ச்ச‌ ப‌ட‌ம்னா, க‌ம‌ல் ந‌டிச்ச‌ தெனாலி..எடின்பரோவுல பார்த்தேன்."எல்லாம் சிவ‌ ம‌ய‌ம் அப்பிடின்டு சொல்லுவாங்கோ..என‌க்கு எல்லாம் ப‌ய‌ ம‌ய‌ம்" அப்பிடின்னு க‌ல‌க்க‌லா ஆர‌ம்பிச்சாலும், ப‌ட‌ம் ந‌டுவுல‌ த‌ன‌க்கு ஏன் எல்லாம் ப‌ய‌மா போச்சின்னு க‌ம‌ல் சொல்வாரு.."எங்க‌ட‌ அம்மா ந‌ல்ல வ‌டிவான‌வ‌ங்க‌ தான்..குண்டு போடுறாங்கோ..குண்டு போடுறாங்கோ. நான் ஒளிஞ்சி கிண்டேன்..எங்க‌ட‌ அம்மா.."

இதைக் கேட்ட‌தும் நெஞ்சில் ஏதோ கிழிந்த‌து போன்ற‌ உண‌ர்வு..ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் ஒரு இன‌மே கொன்று குவிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து..கொல்ப‌வ‌ன் ம‌ட்டும‌ல்ல‌, அதை பார்த்து கொண்டு சும்மா இருப்ப‌வ‌னும் குற்ற‌வாளி தான். என் கையெல்லாம் ர‌த்த‌ம் ப‌டிந்திருப்ப‌து போன்ற‌ உண‌ர்வு.. அது இன்ன‌மும் இருக்கிற‌து.. அதை எப்ப‌டி, என்று க‌ழுவ‌ப் போகிறேன் என்று தெரிய‌வில்லை. க‌ழுவ‌ முடியுமா என்றும் தெரிய‌வில்லை..

இந்த சீனுக்கு பின் என்னால் படம் பார்க்க முடியவில்லை. வெளியே வந்து விட்டேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எதுவுமில்லை..எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும். அதீத பணம் புழங்கும் சினிமாவில் அரசியல் இல்லாவிட்டால் எப்படி? அதனால் எதுவும் என்னை தாக்குவதில்லை.

ஆனால் "ஒண்டிக்கு ஒண்டி வர்றியா" என்று நடிகர் செந்தில் தி.மு.க தலைவரை அசிங்கமாக இழுத்தது எரிச்சலை ஏற்படுத்தியது உண்மை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அப்பிடி எதுவும் நடந்தா மாதிரி தெரியலையே.. ஆனா, எங்க தலைவரு நடிச்ச தளபதில, ராக்கம்மா கையத் தட்டு பாட்டுக்கு சந்தோஷ் சிவன் பட்டைய கெளப்பிருப்பாரு.. இப்பவும் அதை அடிக்கடி பாக்குறது உண்டு..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை. நானே எழுத்துக் கூட்டி படிச்சிட்டு இருக்கேன். இதுல சினிமாவை வேற எப்பிடி படிக்கிறது?

7.தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பாலும் எரிச்சல்! இளைய ராஜாவின் இசை மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டலும் மரியாதை இருந்தது.. அவருடைய திருவாசகம் கேட்டதும் அதுவும் குறைந்து விட்டது..

ஆனாலும் அடிக்கடி சில பாடல்கள் கேட்பது உண்டு..

"அலை பாயுதே" படத்தில் வரும்

"அலை பாயுதே கண்ணா என் மனம் அலை பாயுதே...
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ.."
பாட‌லும்,

வ‌சூல் ராஜாவில் வ‌ரும் "சிரிச்சி சிரிச்சி வ‌ந்தான் சீனா தானா டோய்" பாட‌லும் இப்போதைய‌ ஃபேவ‌ரைட். இந்த‌ பாட‌ல் கிட்ட‌த‌ட்ட‌ ரிக்கி மார்ட்டினின் Livin La Vida Loca போல் இருக்கிற‌து..செம‌ பீட்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஒலக மொளி படம் பாக்குறதுக்கெல்லாம் ஒரு அறிவு வேணும்.. நாமெல்லாம் மொத ரோ கோஸ்டி..எப்பிடி பாக்க முடியும்?? ஏதோ கொஞ்சம் ஆலிவுட்ட்டு படம் பாத்துருக்கேன்..Casino, Good Fellas, Lord Of War, Bourne Ultimatuம்.. சமீபத்துல The Departed.... இதெல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்..
மத்த படி தாக்கிய படம்னா ரெண்டு ஹிந்தி படம்..

ஒண்ணு, ஹம் ஆப்கே ஹெய்ன் கோ(வ்)ன்.. இது வரை நான் பார்த்த படத்திலேயே கடும் கொலை வெறியை ஏற்படுத்தின படம்..கிட்டத்தட்ட சீரியல் கொலைகாரன் ஆயிடுவோனோன்னு எனக்கே பயமாயிடுச்சி.. இவனை பாத்து அவள் சிரிச்சா ஒரு பாட்டு, அவளை பாத்து இவன் இளிச்சா ஒரு பாட்டு, அண்ணி மல்லாக்க படுத்துட்டா ஒரு பாட்டு, அண்ணி குப்புற படுத்துட்டா ஒரு பாட்டு..அண்ணி செத்துட்டா?..வக்காலி, அதுக்கும் ஒரு பாட்டு...வந்த எரிச்சல்ல ஒட்டு மொத்த தியேட்டரையும் கொளுத்தணும் போல இருந்திச்சி..வெளிய போயி ஒரு தம்மை(!) மட்டும் தான் கொளுத்த முடிஞ்சிது..

கிட்டத்தட்ட இதே மாதிரி தாக்கிய இன்னொரு படம்.. ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா நடிச்ச மொஹாபத்தேன்....

அன்னிலருந்து ஹிந்தி படம் பாக்கிறத விட்டுட்டேன்! அத‌னால் இது ந‌ல்ல‌ தாக்க‌மே!

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லாம‌ பின்ன‌? ந‌ம்ம‌ பேக்கிர‌வுண்டு தெரியாம‌ இப்பிடி ஒரு கேள்வியா? ஏவிஎம் ச‌ர‌வ‌ண‌ன் எங்க‌ மாமாங்க‌! சொன்னா ந‌ம்ப‌ணும், இப்பிடில்லாம் ந‌க்க‌லா சிரிக்க‌ப்ப‌டாது!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ம்க்கும்! நாளைக்கி மார்க்கெட் தொற‌ந்தா என்னோட‌ எதிர்கால‌மே என்ன‌ன்னு தெரிய‌லை! இதுல‌ த‌மிழ் சினிமாவோட‌ எதிர்கால‌மா? நான் என்ன‌ கிளி ஜோசிய‌மா பாக்கிறேன்? இருக்குற‌ நெல‌மைல‌, க‌டைசில‌ நான் அந்த‌ தொழிலுக்கு வ‌ந்துருவேன் போல‌!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒண்ணுமில்ல. நான் இங்கிலீபிசு படம் பாப்பேன். ஓ, டம்ளர்கள் என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா?? இதெல்லாம் சப்பை மேட்டரு.. லியோனிய வச்சி பழைய படமா புது படமான்னு பட்டி மன்றம் நடத்துவாங்க. அதுவும் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டா, பழைய பட டி.வி.டி யெல்லாம் ப்ளாக் மார்க்கெட்ல விப்பாங்க.. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? ச்சும்மா ஜுஜூபி...ஊதிட்டு போய்ட்டே இருப்பாங்க!

அடுத்து கொக்கி படலம்...

யாரைனா கூப்டே ஆகணுமா? பயமாருக்கே..எனக்கு கொஞ்சம் பேரை தெரியும்(?)னாலும் அவங்களுக்கு என்னை தெரியாது...

சரி விடுங்க.. இந்த குப்பத்துல எல்லாம் பாத்தீங்கன்னா, எந்த வூட்ல கண்ணாலம் நடந்தாலும் அந்த ஊரு கவுன்சிலருக்கோ இல்ல எம்.எல்.ஏவுக்கோ "கண்டிப்பா வந்துருங்க தலைவரே" அப்பிடின்னுடு ஒரு பத்திரிக்கை வச்சிருவாங்க..பாக்க முடியாட்டி அவரு பி.ஏ.க்கிட்டயாவது கொடுத்துருவாங்க. அவ‌ரு வ‌ர‌ மாட்டாரு, அது வேற‌ விஷ‌ய‌ம்!

அது மேறி, நானும் ஒரு நாலு பேரை அன்புட‌ன் அழைக்கிறேன்..

1. நான் ப‌திவு எழுத‌ ஆர‌ம்பிச்ச‌ கால‌த்தில‌ருந்து தொட‌ர்ந்து பின்னூட்ட‌மிட்டு வ‌ரும் டீச்ச‌ர் துள‌சி கோபால் அவ‌ர்க‌ள்.

2. "த‌ம்ம‌ விட்டா பூச்செண்டு, த‌ம்ம‌டிச்சா அணுகுண்டு" என்று த‌மிழ்ப‌திவுல‌கை மிர‌ட்டி வ‌ந்தாலும், நான் எழுதிய‌ மொக்கை க‌தைக‌ளைக் கூட‌ பெரிய‌ ம‌ன‌துட‌ன் பாராட்டும் க‌ய‌ல்விழி அவ‌ர்க‌ள்.

3. "மாச‌த்துக்கு ஒண்ணு" என்று கோட்டா ஸிஸ்ட‌த்தில் எழுதினாலும், ந‌ச்சென்று எழுதும், "கும்போண‌ம் கோபால்" செல்வ‌ க‌ருப்பையா அவ‌ர்க‌ள்.

பின் குறிப்பு: இவ‌ங்கெல்லாம் ந‌ம்ம‌ ப‌திவை எப்ப‌ ப‌டிப்பாங்க‌, இல்ல‌ ப‌டிக்கிறாங்க‌ளான்னு என‌க்கு தெரிலை. அத‌னால‌ அவ‌ங்க‌ எழுதாட்டி, யாரும் என் வூட்டாண்ட‌ ஆட்டோ அனுப்பாதீங்க‌!





=======

46 comments:

குடுகுடுப்பை said...

//ம்க்கும்! நாளைக்கி மார்க்கெட் தொற‌ந்தா என்னோட‌ எதிர்கால‌மே என்ன‌ன்னு தெரிய‌லை! இதுல‌ த‌மிழ் சினிமாவோட‌ எதிர்கால‌மா? நான் என்ன‌ கிளி ஜோசிய‌மா பாக்கிறேன்? இருக்குற‌ நெல‌மைல‌, க‌டைசில‌ நான் அந்த‌ தொழிலுக்கு வ‌ந்துருவேன் போல‌!//

அண்ணே எனக்கு போட்டியா தொழில் வேண்டாம்னே. ஒதுங்கிங்க, உங்கள மிரட்ட ஆட்டோ அனுப்ப கூட வழியில்லாம இருக்கேன் தயவு செய்து என் தொழில விட்டிருங்க

குடுகுடுப்பை said...

மத்தபடி கலக்கல்.

மொக்கைச்சாமி said...

நாலு பேரை அன்புட‌ன் அழைக்கிறேன்னுட்டு 3 பேரை தான் கூப்பிடிருக்கீங்க... ஹிஹிஹி... கோவிச்சிக்காதீங்க சும்மா உல்லல்லாயிக்கு...

தெனாலியில் அந்த காட்சி ரொம்ப கனமான காட்சி. அதை பார்க்கும் போது ஆழ்மனதில் ஒரு சோகம் குடிஏறுவது உண்மை.

-- McChamy

துளசி கோபால் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

நமக்கு வேற வூட்டுலே இருந்து கண்ணாலப் பத்திரிக்கை ஒரு நாலைஞ்சு நாளுக்கு முன்னேயே வந்துருச்சுப்பா. அங்கே போய் விருந்துச்சாப்பாடை துன்னுட்டுவந்துட்டேன்.. ரெண்டு வயிறா இருக்கு?

அ(த்)தையே இதுக்கும் வச்சுக்கலாமா? :-))))

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்துடோம்ல...

http://urupudaathathu.blogspot.com/ said...

வருவோம்ல ///..

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்தா பிரிச்சி மேயுவோம்ல/....

http://urupudaathathu.blogspot.com/ said...

கொஞ்சம் சரக்கு ரொம்ப ஏறி போச்சு.. ஒன்னிமே தெரில..

http://urupudaathathu.blogspot.com/ said...

மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..

( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
i am வெரி வெரி சாரி )

http://urupudaathathu.blogspot.com/ said...

ரெம்ப நல்லா இருக்குது..

http://urupudaathathu.blogspot.com/ said...

இங்க பிரிட்டன்ல பெரியாளுங்கள அடிக்கடி நியூஸ்ல காட்டுவாங்க. ///

என்னை காட்டுறத நீங்க இவ்ளோ பெருசு பண்ணி சொல்லக்கூடாது ..

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்பிடி ஒரு பெருந்தலைய சமீபத்துல பேட்டி எடுக்குறப்ப ///

ஹி ஹி எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது, யு know ??

http://urupudaathathu.blogspot.com/ said...

யாருமே இங்க இல்லியா..

அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்..
நாளை மீட் பண்றேன்.. வரட்டா.

பழமைபேசி said...

// இவனை பாத்து அவள் சிரிச்சா ஒரு பாட்டு, அவளை பாத்து இவன் இளிச்சா ஒரு பாட்டு, அண்ணி மல்லாக்க படுத்துட்டா ஒரு பாட்டு, அண்ணி குப்புற படுத்துட்டா ஒரு பாட்டு..அண்ணி செத்துட்டா?..வக்காலி, அதுக்கும் ஒரு பாட்டு...வந்த எரிச்சல்ல ஒட்டு மொத்த தியேட்டரையும் கொளுத்தணும் போல இருந்திச்சி..வெளிய போயி ஒரு தம்மை(!) மட்டும் தான் கொளுத்த முடிஞ்சிது..
//


இசையமைப்பாளர்களே, அது சரி அண்ணன் ஒரு நகைச் சுவைக்குத்தான் இதைச் சொல்லி இருக்கிறார்.

வக்காலி, சும்மா இருக்குற தேர, ஏண்டா தெருவில இழுத்து விடுற?

நசரேயன் said...

வழக்கம் போல கலக்கல்

நசரேயன் said...

வழக்கம் போல கலக்கல்

விஜய் ஆனந்த் said...

சூப்பரு!!!

உங்க ஸ்டைல்ல கும்முன்னு எழுதியிருக்கீங்க...

மாமாவ விசாரிச்சதா சொல்லவும்...

Departed எனக்கு ரொம்ப பிடிச்ச படம்...

http://urupudaathathu.blogspot.com/ said...

Bourne Ulitmate //

என்னோட பேவரைட் கூட..

சேம் சேம்

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//ம்க்கும்! நாளைக்கி மார்க்கெட் தொற‌ந்தா என்னோட‌ எதிர்கால‌மே என்ன‌ன்னு தெரிய‌லை! இதுல‌ த‌மிழ் சினிமாவோட‌ எதிர்கால‌மா? நான் என்ன‌ கிளி ஜோசிய‌மா பாக்கிறேன்? இருக்குற‌ நெல‌மைல‌, க‌டைசில‌ நான் அந்த‌ தொழிலுக்கு வ‌ந்துருவேன் போல‌!//

அண்ணே எனக்கு போட்டியா தொழில் வேண்டாம்னே. ஒதுங்கிங்க, உங்கள மிரட்ட ஆட்டோ அனுப்ப கூட வழியில்லாம இருக்கேன் தயவு செய்து என் தொழில விட்டிருங்க

//

என்ன அக்கிரமமா இருக்கு... உங்களுக்கு தான் குடுகுடுப்பை அடிக்கிறது, சுண்ட கஞ்சி காச்சறது, வருங்கால மொதல்வரா இருக்கிறதுன்னு ஏகப்பட்ட தொழில் இருக்குல்ல, அப்புறம் என்ன?

இப்பிடி மொதல்வரா இருக்கிறதுலருந்ந்து முக்குல கடை போட்ற வரை எல்லாத்தையும் நீங்களே நடத்துனா, பொது ஜனங்க பொழைப்புக்கு என்ன பண்றதுன்னேன் :0)

அது சரி said...

//
மொக்கைச்சாமி said...
நாலு பேரை அன்புட‌ன் அழைக்கிறேன்னுட்டு 3 பேரை தான் கூப்பிடிருக்கீங்க... ஹிஹிஹி... கோவிச்சிக்காதீங்க சும்மா உல்லல்லாயிக்கு...

//

வாங்க ஷாமீய். குந்துங்க ஷாமீய்...

அது நமக்கு ஒண்ணு ரெண்டு சரியா எண்ண வர்லீங்கண்ணா.. அதான்.

நமக்கு கோவமில்லாம் வராது. எப்பிடி வேணும்னாலும் கும்மி அடிங்க. :0)

அது சரி said...

//
துளசி கோபால் said...
நல்லா எழுதி இருக்கீங்க.

நமக்கு வேற வூட்டுலே இருந்து கண்ணாலப் பத்திரிக்கை ஒரு நாலைஞ்சு நாளுக்கு முன்னேயே வந்துருச்சுப்பா. அங்கே போய் விருந்துச்சாப்பாடை துன்னுட்டுவந்துட்டேன்.. ரெண்டு வயிறா இருக்கு?

அ(த்)தையே இதுக்கும் வச்சுக்கலாமா? :-))))

//

வாங்க டீச்சர்!

அதையே இதுக்கும் வெச்சிக்கலாம்..எம்.எல்.ஏ யாரு கூப்பிட்டு வந்தா என்ன, கண்ணாலத்துக்கு வந்ததே போதும் :0)

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
வந்துடோம்ல...

//

ஆஹா, பொயலு வந்துட்டாருய்யா... வந்துட்டாருய்ய்ய்ய்ய்ய்யா...

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
வருவோம்ல ///..

//

அதான் வந்துட்டீரு, அப்புறம் என்ன வருவோம்லன்னு ஒரு பில்டப்பு? அதெல்லாம் வர்றதுக்கு முன்னாடி குடுத்திருக்கணும்.. இது ரொம்ப லேட்டு!

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
கொஞ்சம் சரக்கு ரொம்ப ஏறி போச்சு.. ஒன்னிமே தெரில..

//

இது என்ன நைஜீரியாவில குடிசைத் தொழிலா காய்ச்சின நாட்டு சரக்கா? ச்சும்மா நச்சுன்னு தான் இருக்கும் போல!

குடுகுடுப்பை said...

//என்ன அக்கிரமமா இருக்கு... உங்களுக்கு தான் குடுகுடுப்பை அடிக்கிறது, சுண்ட கஞ்சி காச்சறது, வருங்கால மொதல்வரா இருக்கிறதுன்னு ஏகப்பட்ட தொழில் இருக்குல்ல, அப்புறம் என்ன?

இப்பிடி மொதல்வரா இருக்கிறதுலருந்ந்து முக்குல கடை போட்ற வரை எல்லாத்தையும் நீங்களே நடத்துனா, பொது ஜனங்க பொழைப்புக்கு என்ன பண்றதுன்னேன் :0)//

என்னோட மேற்கண்ட தொழில்ல நஷ்டம் இல்ல ஏன்னா வருமானமும் இல்ல.கிளி சோசியம் பாத்தா எதாவது கெடக்கும்னுதான்,கெடக்காட்டி கடைசியல கிளிய சூப்பு வெச்சு குடிக்கலாம். அதான் ஒரு நப்பாசை. அப்படியே மெயில் அனுப்புங்க மொக்கைப்பதிவு குழுவா வாமுவை ஆக்கிருவோம்(WAMU இல்லங்கோ)

http://urupudaathathu.blogspot.com/ said...

சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//என்ன அக்கிரமமா இருக்கு... உங்களுக்கு தான் குடுகுடுப்பை அடிக்கிறது, சுண்ட கஞ்சி காச்சறது, வருங்கால மொதல்வரா இருக்கிறதுன்னு ஏகப்பட்ட தொழில் இருக்குல்ல, அப்புறம் என்ன?

இப்பிடி மொதல்வரா இருக்கிறதுலருந்ந்து முக்குல கடை போட்ற வரை எல்லாத்தையும் நீங்களே நடத்துனா, பொது ஜனங்க பொழைப்புக்கு என்ன பண்றதுன்னேன் :0)//

என்னோட மேற்கண்ட தொழில்ல நஷ்டம் இல்ல ஏன்னா வருமானமும் இல்ல.கிளி சோசியம் பாத்தா எதாவது கெடக்கும்னுதான்,கெடக்காட்டி கடைசியல கிளிய சூப்பு வெச்சு குடிக்கலாம். அதான் ஒரு நப்பாசை. அப்படியே மெயில் அனுப்புங்க மொக்கைப்பதிவு குழுவா வாமுவை ஆக்கிருவோம்(WAMU இல்லங்கோ)

//

கிளியை வச்சி சூப்பா? அடப்பாவிங்களா! குடுகுடுப்பையை அடகு வச்சி குவாட்டர் வாங்கி, சைட் டிஷ்ஷா கிளி வறுவல் பண்ணிருவீங்க போலருக்கே! திருந்துங்க தல, கிளி பாவம் பொல்லாதது.

வ.மு.வை விடுங்க, WaMu வை நீங்க தான் ரொம்ப சீப்பா வாங்கிட்டதா சொல்றாய்ங்க,, உம்மயா?

அது சரி said...

//
பழமைபேசி said...
இசையமைப்பாளர்களே, அது சரி அண்ணன் ஒரு நகைச் சுவைக்குத்தான் இதைச் சொல்லி இருக்கிறார்.

வக்காலி, சும்மா இருக்குற தேர, ஏண்டா தெருவில இழுத்து விடுற?

//

வாங்க பழமைபேசி..

அது நகைச்சுவையெல்லாம் இல்லீங்ணா.. நிஜமாவே கொலைவெறி தான்..கருமமான படம், அதெல்லாம் எப்பிடி தான் ஓடுச்சோ!

அது சரி said...

//
நசரேயன் said...
வழக்கம் போல கலக்கல்

//

வாங்க நசரேயன்.. உங்க பதிவெல்லாம் படிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டு இருக்கேன்.. முடிஞ்சா இந்த வாரம்.

அது சரி said...

//
விஜய் ஆனந்த் said...
சூப்பரு!!!

உங்க ஸ்டைல்ல கும்முன்னு எழுதியிருக்கீங்க...

மாமாவ விசாரிச்சதா சொல்லவும்...

Departed எனக்கு ரொம்ப பிடிச்ச படம்...

//

அடுத்த தடவை எங்க மாமாவை பாக்கும் போது கண்டிப்பா சொல்லீர்றென் தல!

கயல்விழி said...

அதுசரி

ரொம்ப தேங்க்ஸ்

ஒரு அநியாயம் கேளுங்க, எங்க கம்பனியில என்னை வேலை எல்லாம் செய்ய சொல்றாங்க, அதெப்படி சொல்லலாம்? அக்கிரமமா இருக்கு.

நாளைக்கு ப்ராஜெக்ட் சப்மிஷன், சப்மிட் பண்ணிட்டு உடனே எழுதறேன்.

என்னை அழைத்ததுக்கு மீண்டும் சிறப்பு நன்றி :)

பழமைபேசி said...

//
வாங்க பழமைபேசி..

அது நகைச்சுவையெல்லாம் இல்லீங்ணா.. நிஜமாவே கொலைவெறி தான்..
//
ச்சும்மா...ஒரு கலாய்ப்புக்குதான் சொன்னேன்...நீங்க கோவிக்காதீங்க....

கயல்விழி said...

ஐயோ மிரட்டல் எல்லாம் இல்லீங்க, ஒரு அன்பான வேண்டுகோள், அவ்வளவு தான் :)

அது சரி said...

//
கயல்விழி said...
அதுசரி

ரொம்ப தேங்க்ஸ்

ஒரு அநியாயம் கேளுங்க, எங்க கம்பனியில என்னை வேலை எல்லாம் செய்ய சொல்றாங்க, அதெப்படி சொல்லலாம்? அக்கிரமமா இருக்கு.

நாளைக்கு ப்ராஜெக்ட் சப்மிஷன், சப்மிட் பண்ணிட்டு உடனே எழுதறேன்.

என்னை அழைத்ததுக்கு மீண்டும் சிறப்பு நன்றி :)

//

வாங்க கயல்விழி!

ஆமா, ரொம்ப அநியாயமா தான் இருக்கு :0)

இங்கயும் இப்பல்லாம் ஆஃபிஸ் வரச்சொல்லி ரொம்ப தொந்தரவு பண்றாங்க. சரி, ஆசைப்பட்டு கூப்பிட்றாங்களேன்னு போனா எதுனா வேலை செய்ய சொல்லிர்றாங்க.. என்ன பண்றது, காலம் ரொம்ப கெட்டு போச்சு!

நீங்க ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிட்டு அப்புறமா எழுதுங்க..(என்ன பிராஜெக்ட், மெக்கெய்னை எப்பிடி பிரசிடண்ட் ஆக்கிறதுன்னு பிராஜெக்டா :0)

அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி!

அது சரி said...

//
பழமைபேசி said...
//
ச்சும்மா...ஒரு கலாய்ப்புக்குதான் சொன்னேன்...நீங்க கோவிக்காதீங்க....

//

அடடா, கோவமெல்லாம் ஒண்ணும் இல்லீங்ணா.. கலாய்க்கிறதுக்கு தான் நானே பதிவு எழுதறேன்..அப்புறம் என்ன கோவம்? அதெல்லாம் நமக்கு வராது..நீங்க கவலைப்படாம கலாய்க்கலாம்..

அது சரி said...

//
கயல்விழி said...
ஐயோ மிரட்டல் எல்லாம் இல்லீங்க, ஒரு அன்பான வேண்டுகோள், அவ்வளவு தான் :)

//

நானும் ச்சும்மா ஜாலிக்கு தான் ஜல்லி அடிச்சேன் கயல்விழி..சீரியசா இல்ல. மிரட்டலோ வேண்டுகோளோ இது வரை ரெண்டு மக்கள் விட்டுட்டதா தெரியுது..அதுவே ரொம்ப நல்ல விஷயம்!

குடுகுடுப்பை said...

//வ.மு.வை விடுங்க, WaMu வை நீங்க தான் ரொம்ப சீப்பா வாங்கிட்டதா சொல்றாய்ங்க,, உம்மயா?//

நான் 2006 ஜனவரில லாங் டெம் இன்வெஸ்டர் ஆனேன். வாங்கினெதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி இப்போ அதெல்லாம் சீப்ப விட கீழே கீழே மேலும் கீழே, நெஜமாவே டாக்டர் ருத்ரனை பாக்கனும் போல இருக்கு

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//வ.மு.வை விடுங்க, WaMu வை நீங்க தான் ரொம்ப சீப்பா வாங்கிட்டதா சொல்றாய்ங்க,, உம்மயா?//

நான் 2006 ஜனவரில லாங் டெம் இன்வெஸ்டர் ஆனேன். வாங்கினெதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி இப்போ அதெல்லாம் சீப்ப விட கீழே கீழே மேலும் கீழே, நெஜமாவே டாக்டர் ருத்ரனை பாக்கனும் போல இருக்கு

//

வாழ்க்கையே ஒரு சூதாட்டம் தான தல? மேல போயிருந்தா சந்தோஷப்பட்ருப்பீங்கிளா இல்லையா?? கீழே போனா என்ன பண்றது? சரியா வரும்னு யோசிச்சி தான் பண்றோம், ஆனா தப்பா போயிருது..ஒண்ணு கவனிங்க, நீங்க மட்டும் தப்பு பண்ணல.. ரொம்ப பெரிய ஆளுங்கெல்லாம் தப்பு பண்ணிருக்காங்க.. மேல வரும்னு எத்தனை ஃபண்ட் மேனேஜர் இன்வெஸ்ட் பண்ணலை? அவங்கெல்லாம் தப்பு பண்ணலையா?

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் நஷ்டமானா கஷ்டம் தான்.. ஆனா, எல்லாரும் ஷேர் மார்க்கட்ல இன்வெஸ்ட் பண்றதுல்ல. கொஞ்சம் பேரு தான்..எல்லாரும் பயந்துக்கிட்டு பின்னாடி நிக்கிறப்ப, முன்னாடி போற உங்க துணிச்சலை நினைச்சி சந்தோஷப்படுங்க.

முன் செல்பவர்களால் தான் போர்கள் வெல்லப்படுகின்றன, அவரை பின் தொடர்பவர்களால் அல்ல.. தேடி சோறு நிதம் தின்ன பலர் இருக்கிறார்கள்..நாமும் அதில் இருக்க வேண்டாமே?

உண்மையில் எனக்கும் பலத்த நஷ்டமே, அதுவும் ஒரே இரவில். ஆனால், அது என் தவறு அல்ல என்பதால் எனக்கு அந்த அளவு மன உளைச்சல் இல்லை.

(அட்வைச அள்ளி விடுறதா நினைச்சிக்காதீங்க..எனக்கு மனசுல தோன்றத சொன்னேன்!)

குடுகுடுப்பை said...

நான் மனம் தளரவில்லை. நஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்குது.ஏனென்றால் முதலாளித்துவத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை உள்ளது ஊழல்கள் இருந்தாலும்.

Anonymous said...

//படம் பாத்துட்டு வந்து "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்..ஏன் ஏன் ஏன்" அப்பிடின்னு எங்க அப்பா முன்னாடி காஃபி கப்போட ஆடி, கன்ன‌த்துல அறை வாங்கின ஞாபகம் இருக்கு..//
அப்போ இருந்தே ஒரு பொறுப்பான குடிமகனா இருந்து இருக்கீங்க!

//ஒட்டன் சத்திரம் முக்கு சந்துல நின்னு பில் கிளிண்டனையே ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்றவய்ங்க.. //

ஒபாமாவை விட்டுடிங்களே?

//உணர்ந்தது?? அந்த‌ வ‌ய‌சுல‌ என்ன‌த்த‌ உண‌ர்ற‌து? ஒண்ணுமில்ல‌!//
சேம் ஹியர்!

//"சுத்தி சுத்தி வந்தீக.." பாட்டுக்கு நான் தம்மடிக்க தியேட்டரை சுத்தி சுத்தி வந்ததும்,//
ஏன் இப்படி?

//சரோஜா...ச்சப்பை!//
சன் டிவிக்கு அப்பளை பண்ண போறீங்களோ?

அது சரி said...

//
pathivu said...
//படம் பாத்துட்டு வந்து "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்..ஏன் ஏன் ஏன்" அப்பிடின்னு எங்க அப்பா முன்னாடி காஃபி கப்போட ஆடி, கன்ன‌த்துல அறை வாங்கின ஞாபகம் இருக்கு..//

அப்போ இருந்தே ஒரு பொறுப்பான குடிமகனா இருந்து இருக்கீக!

//
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொறுப்பு இருக்குங்க..எனக்கு பொறுப்புணர்வு கொஞ்சம் ஜாஸ்தி :0)

//ஒட்டன் சத்திரம் முக்கு சந்துல நின்னு பில் கிளிண்டனையே ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்றவய்ங்க.. //

ஒபாமாவை விட்டுடிங்களே?

//

அவரு இன்டியாவுல ரொம்ப ஃபேமஸ் ஆன மாதிரி தெரிலையே..நாங்கெலாம் எங்களுக்கு சமமா இருக்கற பெரியாளுங்களுக்கு தான் சவால் விட்றது..



//"சுத்தி சுத்தி வந்தீக.." பாட்டுக்கு நான் தம்மடிக்க தியேட்டரை சுத்தி சுத்தி வந்ததும்,//

ஏன் இப்ப‌டி?

//
ஏன் இப்படின்னா? தம்மடிக்கிற எடம் எங்க இருக்குன்னு தெரில..வேற என்ன பண்றது??


//சரோஜா...ச்சப்பை!//
சன் டிவிக்கு அப்பளை பண்ண போறீங்களோ?

//

அவங்க வேண்டி விரும்பி நம்மள தொடர்ந்து கூப்பிட்டா வேற என்ன பண்றது? :0)

Unknown said...

NAT very goood

:)

கயல்விழி said...

//..(என்ன பிராஜெக்ட், மெக்கெய்னை எப்பிடி பிரசிடண்ட் ஆக்கிறதுன்னு பிராஜெக்டா :0)//

அந்த மாதிரி நல்ல ப்ராஜெக்ட் எல்லாம் எனக்கு கிடைக்குமா என்ன?
:( என்னுடைய ப்ராஜெக்ட் ரொம்ப போர்!

அது சரி said...

//
கயல்விழி said...
//..(என்ன பிராஜெக்ட், மெக்கெய்னை எப்பிடி பிரசிடண்ட் ஆக்கிறதுன்னு பிராஜெக்டா :0)//

அந்த மாதிரி நல்ல ப்ராஜெக்ட் எல்லாம் எனக்கு கிடைக்குமா என்ன?
:( என்னுடைய ப்ராஜெக்ட் ரொம்ப போர்!

//

நீங்க ஹிலரி க்ளிண்டனை பிரசிடென்ட் ஆக்கிற பிராஜக்ட்ல இருக்கீங்களா? :0)

இல்லாட்டி எதுனா ஐ.டி. பிராஜக்டா??

(யாரும் தப்பா நெனைக்காதீங்க..ஆனா, ஐ.டி. பயங்கர போர்!)

Unknown said...

है वैरी वैरी गुड

kani!

Sundar சுந்தர் said...

//உண்மையில் எனக்கும் பலத்த நஷ்டமே, அதுவும் ஒரே இரவில். ஆனால், அது என் தவறு அல்ல என்பதால் எனக்கு அந்த அளவு மன உளைச்சல் இல்லை.//
அட நம்ம கும்மி கோஷ்டில இவ்ளோ கம்பெனி இருக்கறது தெரியாம, நான் தனி ஒப்பாரி இல்ல வச்சிக்கிட்டு இருந்தேன்!
btw, சூப்பரா எழுதி இருக்கீங்க!