ஒரு படத்தில் பார்த்த ஞாபகம்..
கவுண்டமணி ஒரு கிராமத்தில் வைத்தியர். ஒரு நாள் காலையில் வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரிடம் ஒருவர் தலையை சொறிந்து கொண்டு வருகிறார்..
இனி...
"வாடா தீச்சட்டி தலையா என்ன ஆச்சி ஒனக்கு.."
வந்தவர் இளிக்கிறார்..
"நான் நூறு வருஷம் வாழணுங்க..அதுக்கு நீங்க தான் ஒரு மருந்து சொல்லணும்.."
"சொல்லீருவோம்...மொதல்ல இங்க வா. நீ பீடி குடிப்பியா.."
"அந்த பழக்கமே நம்மக்கிட்ட இல்லீங்க.."
"அப்ப பட்டை அடிக்கிறது.."
"தொட்டது கூட இல்லீங்க.."
கவுண்டமணி குசுகுசுப்பாக..
"தொடுப்பு எதுனா வச்சிருக்கியா.."
"அய்யய்யோ..இல்லவே இல்லீங்க.."
கவுண்டமணி கடுப்பாகிறார்...
"அப்ப என்ன மசு**க்குடா நீயெல்லாம் நூறு வருஷம் வாழணும்..மவனே நீ நாளைக்கே செத்து போயிரு..இல்ல நானே மருந்து குடுத்து கொன்னுடுவேன்..காலைலேயே வந்துட்டானுங்கடா டப்பா தலையனுங்க.."
பின் குறிப்பு: இதற்கும் இப்பொழுது தமிழ் மணத்தில் தினம் எட்டுக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் "புகை எனக்கு பகை" பதிவுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு கண்டிப்பாக நான் பொறுப்பல்ல..
ஆனா ஒண்ணு..
இப்பிடி இருந்த நாங்க...
இப்பிடி ஆயிருவோம்னு மட்டும் நினைக்காதீங்க
ஒரு ஆச்சரியக் குறி:
இந்த பதிவுக்கு நெறையப் பேரு வந்த மாதிரி தெரியுது. ஆனா, யாருமே அன்புமணிய பத்தி ஒரு வார்த்தைக் கூட இல்ல, அப்புறம் என்னடா டைட்டில்ல அன்புமணின்னு கேக்கவே இல்லை..
என்ன உள்குத்து எல்லாருக்கும் புரிஞ்சிருச்சா இல்ல கவுண்டரை பத்தி எழுதிருக்காண்டான்னுட்டு போயிட்டாங்களா?? ஒண்ணுமே புரியலை!
35 comments:
நம்பிட்டேன்...
நம்பிட்டேன்
ஹி.. ஹி.. ஹி..
ஹாய் நான் தான் பர்ஸ்டா??
ஆ.........??
திருந்த மாட்டேன் அப்படின்னு கடைசியா வைச்சீங்க பாரு பஞ்ச்??
நீங்க என்ன தான் நினைக்குறீங்க??
குடிக்கலாமா?? வேண்டாமா??
நல்ல பதிவு..
சிரித்தேன் ...
என்ன உங்க எதிரொலி ஒன்னும் எங்கேயும் காணமேன்னு பார்த்தேன். போட்டு தாக்குங்க!
அப்படி இருந்த நான்....
அப்படியேதான் இருக்கேன். பெத்தவங்க சொல்லியே திருந்தலயாம் மத்தவங்க சொல்லியாண்ணே திருந்தப்போறோம்.
:)))))))))))))))))))))))))))
eppadi aavingannu puriavillai.
//
உருப்புடாதது_அணிமா said...
நம்பிட்டேன்...
நம்பிட்டேன்
//
அப்பிடில்லாம் நம்பப்படாது. படாதுன்னா படாது தான். அதுக்கு தான தெளிவா டிஸ்க்கி போட்ருக்கேன் :0)
//
Saravana Kumar MSK said...
ஹி.. ஹி.. ஹி..
//
நீங்க தாங்க பதிவோட நோக்கத்தை தெளிவா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க :0)))
//
உருப்புடாதது_அணிமா said...
ஹாய் நான் தான் பர்ஸ்டா??
ஆ.........??
//
நீங்க தாங்க ஃபாஸ்டு. அதனால ஃபர்ஸ்ட்டு! ஆனா, நீங்க செகண்ட் இல்ல,தேர்டு!
முரண்தொடை தனது வேலையை சரியாகச் செய்தது கண்டு வேதாளம் பெருமை கொண்டது.
//
உருப்புடாதது_அணிமா said...
திருந்த மாட்டேன் அப்படின்னு கடைசியா வைச்சீங்க பாரு பஞ்ச்??
//
அய்யோ, நான் எங்கங்க பஞ்சு வச்சேன்? கவுண்டருக்கு வேற யாரோ பஞ்ச் வச்சிட்டாங்க, அதனால அவரு அப்பிடி நிக்கிறாரு. நான் என்ன பண்றது?
//
புதுகை.அப்துல்லா said...
அப்படி இருந்த நான்....
அப்படியேதான் இருக்கேன். பெத்தவங்க சொல்லியே திருந்தலயாம் மத்தவங்க சொல்லியாண்ணே திருந்தப்போறோம்.
:)))))))))))))))))))))))))))
//
கரெக்டா சொன்னீங்க அப்துல்லா அண்ணே!
அதுவும் அன்புமணியெல்லாம் சொன்னா, திருந்தலாம்னு நெனச்சாக் கூட, அவனவன் பாதிலேயே எந்திருச்சி போயிருவான், தம்மடிக்க!
மண்ணுக்கேத்த பொன்னு!
மண்ணுக்கேத்த பொண்ணு!
பாண்டியன் - இளவரசி
//எட்டுக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் "புகை எனக்கு பகை" //
ஆகா, இடைவேளை மற்றும் பாடல் காட்சிகளை நெனச்சா நான் ஒரு புகைக்கடை போட்டிருந்தா நல்ல வியாபாரம் ஆகுமேன்னு தோனுது.
//
உருப்புடாதது_அணிமா said...
நீங்க என்ன தான் நினைக்குறீங்க??
குடிக்கலாமா?? வேண்டாமா??
//
இப்பிடி ஒரு கேள்வியா? குடிங்க, குடிங்க, குடிச்சிக்கிட்டே இருங்க.. ஒங்களையெல்லாம் நம்பி தான டாஸ்மாக்கே நடத்துறாங்க. ஆறாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு, அறுவதாயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு, கரண்டே இல்லாட்டியும் எலவச டீ.வி., கேரளாவுக்கு கடத்த ஒரு ரூவாய்க்கு அரிசி, 10 மணிக்கு வந்துட்டு, 3 மணிக்கு வேலையை நிறுத்திர்ற அரசு ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வு, தீவாளிக்கு 20%, பொங்கலுக்கு 20% போனசு, குத்தி கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போனாலும் அங்க கோழிக்கறி....
இப்பிடி எம்புட்டு விஷயம் நடக்க வேண்டி இருக்கு...எல்லாம் நீங்க குவாட்டருக்கு குடுக்குற காச வெச்சி தான்.. நீங்க நிறுத்திட்டா ஜெயில்ல எப்பிடி கோழி கறி போடுறது? கொஞ்சமாவது மன சாட்சியோட பேசுங்க!
//
Sundar said...
என்ன உங்க எதிரொலி ஒன்னும் எங்கேயும் காணமேன்னு பார்த்தேன். போட்டு தாக்குங்க!
//
வாங்க சுந்தர்..
என்ன தான் நாம சின்னதா பொட்டிக்கடை நடத்திக்கிட்டு இருந்தாலும், எல்லாரும் போகும் போது ஜோதியை பாக்க நாமளும் போகாட்டி, அப்புறம் பஞ்சாயத்துல வெலக்கி வச்சிட்டாங்கன்னா? நமக்கும் யாவாரம் ஆக வேணாமா?
அதான், இப்பிடி!
//
Raghavan said...
eppadi aavingannu puriavillai.
//
வாங்க ராகவன்..
நான் சொல்றதுக்கு முன்னாடி அப்துல்லா அண்ணாச்சி சொல்லிட்டார்..
அப்பிடி இருந்த நாங்க அப்பிடியே தாங்க இருப்போம் :0)
//
குடுகுடுப்பை said...
முரண்தொடை தனது வேலையை சரியாகச் செய்தது கண்டு வேதாளம் பெருமை கொண்டது.
//
அது! எல்லாரும் கெழக்கால போனாங்கன்னா, மேக்கால போறது தான நம்ம பொழைப்பு!
//
பழமைபேசி said...
மண்ணுக்கேத்த பொண்ணு!
பாண்டியன் - இளவரசி
//
வாங்க பழமைபேசி..
என்னது மண்ணுக்கேத்த பொண்ணு? பாண்டியன் இளவரசி யாரு?
//
குடுகுடுப்பை said...
//எட்டுக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் "புகை எனக்கு பகை" //
ஆகா, இடைவேளை மற்றும் பாடல் காட்சிகளை நெனச்சா நான் ஒரு புகைக்கடை போட்டிருந்தா நல்ல வியாபாரம் ஆகுமேன்னு தோனுது.
//
ஆமாங்க.. "புகை எனக்கு பகை" தான் இந்த வாரம் டாப் டென்ல வருமாட்ருக்கு..
எல்லாம் சேரன், பாரதி ராஜா, மணி ரத்னம் ஸ்டைல்ல நல்ல கருத்தான படமெடுத்து ஓட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லா படமும் நல்லா ஓடுது..
நமக்கு அதெல்லாம் முடியுமா? அதெல்லாம் கருத்து இருக்கவங்க செய்யறது.. நம்ம கடை வரும்படிக்கு அந்த பட்ஜெட்டெல்லாம் கட்டுப்படியாகதுங்க.
அதான், ஆண்டவன் கைவிட்டாலும், கவுண்டர் கைவிட மாட்டாருன்னு ஒரு மினிமம் பட்ஜெட் படம்..
இது வரை டிக்கிட்டு வித்தத பாத்தா.. கவுண்டரு கைவிடலீங்கோ!
//ஒரு படத்தில் பார்த்த ஞாபகம்.. //
என்னுங்க அண்ணா, படத்தை பத்திதான் நான் சொன்னேன்.
புகை எனக்கு பகை படத்தின் எட்டு காட்சி இடைவேளையில் நெஜமாவே சிகரெட் வித்து பொழக்கிறத சொன்னேன் அது சரி. பதிவு மட்டும் போட்டா பின்னூட்டம் வாங்கலாம், கோமணம் எப்படி வாங்கிறது
//
பழமைபேசி said...
//ஒரு படத்தில் பார்த்த ஞாபகம்.. //
என்னுங்க அண்ணா, படத்தை பத்திதான் நான் சொன்னேன்.
//
ஓஹோ..நீங்க அதச் சொல்றீங்களா?
நான் படமே பாக்கலீங்க. யூ ட்யூப்ல காமெடி க்ளிப்பிங்க்ஸ் மட்டும் தான் பாத்தேன்..அதான் படம் பத்தி தெரில.
//
குடுகுடுப்பை said...
புகை எனக்கு பகை படத்தின் எட்டு காட்சி இடைவேளையில் நெஜமாவே சிகரெட் வித்து பொழக்கிறத சொன்னேன் அது சரி. பதிவு மட்டும் போட்டா பின்னூட்டம் வாங்கலாம், கோமணம் எப்படி வாங்கிறது
//
ஓ..நீங்க அந்த யாவரத்தை சொன்னீகளா?
நல்ல ஐடியா தான்..அதுவும் "புகை எனக்கு பகை"ல அன்புமணி ஐயா நடிச்சாருன்னா, மொத்த பயகளும் தம்மு வாங்க தான் நிப்பாய்ங்க..நம்மளும் நல்லா கல்லா கட்டிரலாம்.. கோமணம் என்ன, கோட்டரே அடிக்கலாம்..
மனுசன் நடிக்க மாட்டேங்கிறாரே!
:-))))...
enjoyed your post with a charminar
//
விஜய் ஆனந்த் said...
:-))))...
//
என்னங்க விஜய் ஆனந்த்..
இப்பிடி குசும்பா சிரிச்சிட்டு போனா என்னங்க அர்த்தம்?
//
சரவணகுமரன் said...
:-))
//
நீங்களும் தான் சரவணகுமரன்...
இப்பிடி சிரிச்சிட்டு ஒண்ணுமே சொல்லாம போயிட்டீங்களே?
//
Dr.Rudhran said...
enjoyed your post with a charminar
//
அடேங்கப்பா...
டாக்டர் ருத்ரன் சாரெல்லாம் கூட நம்ம பதிவை படிச்சிட்டாங்களா? ஆச்சரியமா இருக்கே!
அப்புறம் டாக்டர், சார்மினார் தான் உங்க பிராண்டா? அது பெரும்பாலும் எல்லா கடையிலும் கிடைக்கிறது இல்லியே.. நான் இன்டியால இருக்கப்ப வில்ஸ் தான் அடிப்பேன்..
எசமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டுவைப்போம்
எசமான் உங்க சொல்லுக்குதா நாங்க தெனம் கட்டுப்பட்டோம்
உங்களதா நம்புது இந்த பூமி
எங்களுக்கு நல்ல வழி காமி
எப்படி இருந்த நாம அன்புமணி சொன்னக்க இப்படி ஆயிடுவோமா?
//
Anonymous said...
எசமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டுவைப்போம்
எசமான் உங்க சொல்லுக்குதா நாங்க தெனம் கட்டுப்பட்டோம்
உங்களதா நம்புது இந்த பூமி
எங்களுக்கு நல்ல வழி காமி
எப்படி இருந்த நாம அன்புமணி சொன்னக்க இப்படி ஆயிடுவோமா?
//
வாங்க அனானி..
ஒரு நல்ல பாட்டை ஞாபகப்படுத்தி இருக்கீங்க.. அடுத்து எதுனா பதிவுல யூஸ் பண்ணிக்கிறேன்..:0)
Post a Comment