Monday 13 October 2008

...மரங்கள் பூப்பதில்லை

நீண்ட நாட்களாய் அப்படியே..

ஊர்காக்கும் எல்லைச் சாமி போல்

நின்ற‌ இட‌ம் ந‌க‌ராம‌ல்..

க‌டும்ப‌னியில் எல்லாம் க‌ருகிவிட‌

அந்த‌ ம‌ர‌மும் மொட்டையாய்

இலையுதிர் காலத்தில் எல்லாம் சருகாய்

இதைச் சுற்றி நூறு ம‌ர‌ங்க‌ள்

எல்லாம் அப்படித் தான் இது மட்டும் விதி வில‌க்கா

வ‌ந்த‌து கோடை அப்ப‌டி ஒன்றும் சுட‌வில்லை
ஆனாலும் அதில் துளிரில்லை
கோடையில் பூப்ப‌தில்லை போலும்

ம‌ழை பெய்து எங்கும் ஈர‌ம் அந்த‌ ம‌ர‌த்திலும் கூட
ஆனாலும் எதுவுமில்லை அட்டையை த‌விர‌

போக‌ட்டும்...
வ‌ச‌ந்த‌ கால‌த்தில் பூக்காத‌ ம‌ர‌மில்லை..

அதுவும் வ‌ந்த‌து
காடெங்கும் ம‌ல‌ர்க‌ள்

அதில் மட்டும்
இலையில்லை பெய‌ருக்கும்..

வீழ‌க் காத்திருக்கும் விருட்ச‌ங்க‌ள்....

கால‌த்தை க‌வ‌னிப்ப‌தில்லை

க‌டைசி வ‌ரை அவ‌னுக்கு தெரிய‌வில்லை

ம‌ரித்த‌ ம‌ர‌ங்க‌ள் பூப்ப‌தில்லை.

34 comments:

கயல்விழி said...

Me the first??

கயல்விழி said...

இதென்ன டிப்ரெஸ்ட் வகை கவிதையா? நல்லா இருக்கு :)

கயல்விழி said...

ஏன் பொதுவாக கவிதைகள் சோகமாகவே எழுதப்படுகின்றன?

குடுகுடுப்பை said...

//ஏன் பொதுவாக கவிதைகள் சோகமாகவே எழுதப்படுகின்றன?//

ஏன்? நல்லா கவிதை எழுதுனா என்ன கொடுமைன்னு கேட்டா இப்படிதான்.

பட்ட மரங்கள் பூப்பதில்லை, பட்டை மரங்கள் ?

அது சரி said...

//
கயல்விழி said...
Me the first??
//

நீங்களே தான்!

நானே மொத பின்னூட்டம் போட்டு, பின்னூட்ட கயமைத் தனம் பண்ணாம என்னை காப்பாத்துனதுக்கு நன்றி :0)

அது சரி said...

//
கயல்விழி said...
இதென்ன டிப்ரெஸ்ட் வகை கவிதையா? நல்லா இருக்கு :)

//

இது டிப்ரெஸ்ட் வகை கவிதையெல்லாம் இல்ல. வேணும்னா டிஸ்ஸப்பாய்ண்டட் வகை கவிதைன்னு வச்சிக்கலாம்..

அது ஒரு ஆப்பிள் மரம்ங்க. பக்கத்து வீட்ல நிக்குது..அது என்னிக்கினா காய்ச்சிதுன்னா ஒரு காய் அடிச்சிர்றாலம்னு பாக்கறேன்..அது என்னடான்னா மூணு வருஷமா சும்மாவே நிக்குது..

அதான் இன்னிக்கு அது வாழ்க்கைல எனக்கு வெறுப்பு வந்துருச்சி!

அது சரி said...

//
கயல்விழி said...
ஏன் பொதுவாக கவிதைகள் சோகமாகவே எழுதப்படுகின்றன?

//

வ‌ருத்த‌ப்ப‌டாத‌ வாலிப‌ர் ச‌ங்க‌த்து உத‌வி துணைப் பொதுசெய‌லாள‌ர், ம‌ற்றும் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாளார் (பொறுப்பு) கிட்ட‌ கேக்குற‌ கேள்வியா இதெல்லாம்?

என‌க்கு எப்பிடிங்க‌ தெரியும்? நானே ப‌க்க‌த்து வீட்டு ம‌ர‌ம் ஏமாத்திடுச்சேன்னு துக்க‌த்தில‌ இருக்கேன்..

யார்னா க‌விதை எழுத‌ற‌வ‌ங்க‌ கிட்ட‌ கேட்டு சொல்றேன் :0)

அது சரி said...

//
குடுகுடுப்பை said...

பட்ட மரங்கள் பூப்பதில்லை, பட்டை மரங்கள் ?

//

பட்டை மரங்களா? இன்னா தல, சப்ப மேட்டரு இது கூட தெர்ல?

பட்டை மரங்கள் பாட்டிலுக்கு போயிரும் தல!

குடுகுடுப்பை said...

அப்புறம் நீங்க என்னோட பதிவுல ஒரு பதிவை படிக்கல. வந்து பாருங்க

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அப்புறம் நீங்க என்னோட பதிவுல ஒரு பதிவை படிக்கல. வந்து பாருங்க

//

இது என்னது..."வைதாரையும் வ‌ர‌வேற்கும் வைகுண்ட‌ம், வ‌ந்து பாருங்க‌ள்"னு த‌சாவ‌தார‌த்துல‌ க‌ம‌ல் சொல்ற‌ மாதிரி இருக்கு...வைகுண்ட‌ம் என்ன‌ முக்குக் க‌டையா, போயி பாத்துட்டு வ‌ர்ற‌துக்கு?

ப‌ய‌மா இருக்கே?

(சொல்லீட்டிங்க‌ள்ல‌, வ‌ந்துருவோம்..)

குடுகுடுப்பை said...

அப்புறம் பட்ட மரம்னு நீங்க சொல்றது என்னோட சில ஸ்டாக் இல்லயே.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அப்புறம் பட்ட மரம்னு நீங்க சொல்றது என்னோட சில ஸ்டாக் இல்லயே.

//

அது எனக்கு தெரிலையே..நீங்க லீமன் பிரதர்ஸும், பியர் ஸ்டெர்ன்சும் வாங்கலையே?

நான் வாங்கின ஸ்டாக்குல ரெண்டு பட்ட மரம் கூட இல்ல, பூட்ட மரமாயிடுச்சி :0(

பழமைபேசி said...

நல்லா இருக்கு....

கொசுறு: ஆனா, நீங்க அது பட்டுப் போன மரம்னு ஏன் முன்னாடியே சொல்லலை? படிக்க வெச்சி, இப்படி ஏமாத்திட்டீங்ளே?

புதுகை.அப்துல்லா said...

யார்னா க‌விதை எழுத‌ற‌வ‌ங்க‌ கிட்ட‌ கேட்டு சொல்றேன் :0)
//

கரெக்ட்...வாங்கண்ணே ரெண்டுபேருமாவே போய் யாரயாவது கேட்டு வருவோம் :))))))

http://urupudaathathu.blogspot.com/ said...

கவுஜை நல்லா இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

நீண்ட நாட்களாய் அப்படியே..///

நானும் தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

எல்லாம் அப்படித் தான் இது மட்டும் விதி வில‌க்கா////

அது தானே??

வரிகள் அருமை

http://urupudaathathu.blogspot.com/ said...

க‌டைசி வ‌ரை அவ‌னுக்கு தெரிய‌வில்லை
///

எனக்கும் தான் தெரியில...

http://urupudaathathu.blogspot.com/ said...

கவிதைக்கு பாராட்டுக்கள் ..( ஆமா எத்தன ரவுண்டு அடிச்சீங்க இந்த கவுஜக்கு ??)

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

ஆப்பிரிக்கத் தளபதி அண்ணன் அணிமா வாழ்க!
பின்னூட்டச் சிங்கம் அண்ணன் அணிமா வாழ்க!!
மாசறு மறுமொழியர் மலைக்கோட்டையார் வாழ்க!!!

--அல்லக்கை அய்யாசாமி

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
நீண்ட நாட்களாய் அப்படியே..///

நானும் தான்
//

பின்ன நாங்க மட்டும்? :0)

அதனால தான், "அப்பிடி இருந்த நாங்க, அப்பிடியே தான் இருப்போம்"னு ஒரு பதிவே போட்டுட்டேன் :0)

அது சரி said...

//
பழமைபேசி said...
நல்லா இருக்கு....

கொசுறு: ஆனா, நீங்க அது பட்டுப் போன மரம்னு ஏன் முன்னாடியே சொல்லலை? படிக்க வெச்சி, இப்படி ஏமாத்திட்டீங்ளே?

//

வாங்க பழமை பேசி..

எனக்கு மட்டும் அது பட்ட மரம்னு தெரியுமா? தெரிஞ்சா நான் ஏன் அதை பாத்துக்கிட்டு இருக்கப் போறேன்? :0)

அது சரி said...

//
புதுகை.அப்துல்லா said...
யார்னா க‌விதை எழுத‌ற‌வ‌ங்க‌ கிட்ட‌ கேட்டு சொல்றேன் :0)
//

கரெக்ட்...வாங்கண்ணே ரெண்டுபேருமாவே போய் யாரயாவது கேட்டு வருவோம் :))))))

//

வாங்க அப்துல்லா அண்ணே..எப்பிடி இருக்கீக?

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
க‌டைசி வ‌ரை அவ‌னுக்கு தெரிய‌வில்லை
///

எனக்கும் தான் தெரியில...

//

எனக்கும் கூட!

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
எல்லாம் அப்படித் தான் இது மட்டும் விதி வில‌க்கா////

அது தானே??

வரிகள் அருமை

//
அணில் ப்ராண்டு சேமியா மாதிரி இது என்ன அணிமா பிராண்டு நக்கலா? ;0)

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
கவிதைக்கு பாராட்டுக்கள் ..( ஆமா எத்தன ரவுண்டு அடிச்சீங்க இந்த கவுஜக்கு ??)

//

நன்றி தல!

ரவுண்டா? ரெண்டு க்ளாஸ் Black Currant,.......வாட்டர் மிக்ஸிங்ல!

அது சரி said...

//
பழமைபேசி said...
ஆப்பிரிக்கத் தளபதி அண்ணன் அணிமா வாழ்க!
பின்னூட்டச் சிங்கம் அண்ணன் அணிமா வாழ்க!!
மாசறு மறுமொழியர் மலைக்கோட்டையார் வாழ்க!!!

--அல்லக்கை அய்யாசாமி

//

கும்பல்ல நானும் சேந்திக்கிறேன்...

பின்னூட்ட பொரச்சி தளபதி, அண்ணல் அணிமா வாழ்க!

MSK / Saravana said...

//வீழ‌க் காத்திருக்கும் விருட்ச‌ங்க‌ள்....
கால‌த்தை க‌வ‌னிப்ப‌தில்லை
க‌டைசி வ‌ரை அவ‌னுக்கு தெரிய‌வில்லை
ம‌ரித்த‌ ம‌ர‌ங்க‌ள் பூப்ப‌தில்லை.//

அட..

நல்லா எழுதி இருக்கீங்க அதுசரி.. :)

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமா உங்க கீழே கீழே இன்னும் கீழே பதிவு என்ன ஆச்சு ??

http://urupudaathathu.blogspot.com/ said...

அந்த கீழே கீழே பதிவு வரும் வரை நான் மேலே போக மாட்டேன் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஏன் அந்த பதிவ போடல??? சொல்லணும்.. சொல்லியே ஆகணும் ..

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
//வீழ‌க் காத்திருக்கும் விருட்ச‌ங்க‌ள்....
கால‌த்தை க‌வ‌னிப்ப‌தில்லை
க‌டைசி வ‌ரை அவ‌னுக்கு தெரிய‌வில்லை
ம‌ரித்த‌ ம‌ர‌ங்க‌ள் பூப்ப‌தில்லை.//

அட..

நல்லா எழுதி இருக்கீங்க அதுசரி.. :)

//

வாங்க சரவணா..

நல்லா இருக்குன்னு உங்களுக்கே தோணுதா? அப்ப நிஜமாவே நல்லா இருக்கு போல :0)

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஆமா உங்க கீழே கீழே இன்னும் கீழே பதிவு என்ன ஆச்சு ??

//

அது சீக்கிரம் மேல வரும் அணிமா அண்ணாச்சி. யாரையும் விட்றதா இல்ல, கவலைப்படாதீங்க!