Friday 3 October 2008

கருணானிதி கேள்வி பதிலும்...கயவர்களின் இடைச் செருகலும்..

பத்திரிக்கையாளர்கள் யாரும் தன்னை சந்திக்க விரும்பாத நாட்களில் (மேட்டரு இருந்தாதான வருவாங்க) தி.மு.க தலைவர் " நமக்கு நாமே" ஸ்டைலில் தனக்கு தானே கேள்வி கேட்டு, அதற்கு எக்கு தப்பாக பதிலும் சொல்வது வழக்கம். அதை பதிப்பிக்கச்சொல்லி பத்திரிக்கைகளுக்கு அன்பு(!) வேண்டுகோளும் விடுவது உண்டு..
அப்படி அவர் இன்று அனுப்பிய கேள்வியும் நானே...அடிங்க... பதிலும் நாந்தேன்... அறிக்கையில் யாரோ சில கயவர்கள் புகுந்து இடைச்செருகல்கள் செய்து விட்டனர்.
அந்த கயவர்களின் கயமைத்தனம் உங்கள் பார்வைக்காக...

============

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இனியும் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என இந்திய கம்யூனிலஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருணாநிதி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி- பதில் அ‌றி‌க்கை‌:
கருணானிதி:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?
தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பதுதான் ஆச்சரியத்தைத் தருகிறது. அவருமா இப்படி என்று! கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியிருக்கிறோம்.

கயவர்கள்: அடேங்கப்பா... தீர்மானமே ஏத்திட்டீங்களா?? அது எப்ப ஏத்துனீங்க, அதுக்கப்புறம் என்ன பண்ணாங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும். இலங்கை தமிழர்கள் எல்லாம் அதுக்கப்புறம் நமீதா டான்ஸும், உளியின் ஓசை படமும் பாத்துக்கிட்டு சந்தோஷமா இருக்காங்களோ?

கருணானிதி: இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. இன்னும் சொல்லப்போனால் 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்த போது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக அவர்கள் தூங்கிவிட்டதாக சொல்ல முடியுமா?

கயவர்கள்: அப்பிடிங்களா?? மொதல்ல மின்வெட்டு இல்ல இல்லன்னு ஒரு மந்திரி சொல்லிக்கினு இருந்தாரு.. அப்பாலிக்கா நெதம் மூணு நேரம் மட்டும் தான் மின்வெட்டு இருக்குன்னு சொன்னாரு.. அவரு தூங்க்கினு இருந்தாரா இல்ல நாங்க தான் எலவச டி.வி. பாத்துட்டு தூங்கிட்டோமோ??

க‌ருணானிதி: இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணாநோன்பு அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப் பேசியிருக்கிறாரே?
இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா.மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?
'நாங்கள் அகதிகள் விடயம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது இலங்கையின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பது தான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்க வில்லை...' -இப்படி பேசியவர்தான் இலங்கை பிரச்சினையை நாம் கொச்சைப்படுத்தியதாக கூறுகிறார்.

க‌ய‌வ‌ர்கள்: இதுல‌ கொச்சை ப‌டுத்துற‌ மாதிரி என்ன‌ இருக்கு? அவ‌ரு என்ன‌ சோத்தால‌ அடிச்ச‌ பிண்ட‌ங்க‌ள்னா சொன்னாரு? அதுவுமில்லாம‌ அவ‌ரு எப்ப‌ சொன்ன‌து? எப்ப‌ சொன்னாலும் ஒண்ணு தான்னு நீங்க‌ சொன்னா.... உங்க‌ க‌ட்சி கார‌ங்க‌ கூட‌த்தான் இந்திரா..ணி தாசின்னு சொன்னாங்க‌.... இப்ப‌வும் அது அப்பிடித்தானா?

க‌ருணானிதி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரத மேடையில், இந்திய மீனவர்கள் சிங்கள ராணுவத்தினால் தாக்கப்படும் கொடுமை நின்றபாடில்லை என்பது பற்றியும் பேசப்பட்டுள்ளதே?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விரிவாக செய்திகளை வெளியிட்ட 'ஜனசக்தி' நாளேட்டில் முதல் பக்கத்திலேயே மற்றொரு செய்தியும் வந்துள்ளது. அந்தச் செய்திக்கான தலைப்பு 'மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா, இலங்கை ஒப்புதல்' என்பதாகும்.
அந்தச் செய்தியில், 'இந்திய மீனவர்கள் தொடர்ந்து பா‌கி‌ஸ்தா‌ன் நீரிணைப்பில் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு திட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின் போது இதற்கான தக்கதொரு வழி முறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்' என்று கூறப்பட்டுள்ளது. மற்ற ஏடுகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.
குறிப்பாக இந்து நாளேட்டில் இது பற்றி வெளிவந்த செய்தியில் பாக். ஜலசந்தியில் இலங்கை ராணுவத்தினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறை குறித்து முடிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ரோகிதா போகலோகாமாவை புதன்கிழமை அன்று சந்தித்துப் பேசும் போது, பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசினார்.
அப்போது இந்திய மீனவர் பிரச்சனை பற்றி தத்தம் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லையை தாண்டி வருவதாகக் குற்றஞ்சா‌ற்‌றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குறி வைத்து தாக்குவது குறித்து பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
நாமும் மத்திய அரசிடம் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தொடர்ந்து பல வழிகளில் வலியுறுத்திக் கொண்டுதான் வருகிறோம்.

க‌ய‌வ‌ர்க‌ள்:
இந்தியா இல‌ங்கை தீர்வு காண‌ ஒப்புத‌ல்.... பின்ன அதெல்லாம் இல்ல‌, தீர்வு காண‌ மாட்டோம்னா ஒப்புத‌ல் போடுவாங்க‌?? ரொம்ப‌ மொக்கைத்த‌ன‌மா இருக்காது??
நீங்க‌ சொன்ன‌தை ஒழுங்கா, இன்னொரு த‌ட‌வை எழுத்துக்கூட்டி ப‌டிச்சி பாருங்க‌..
'இந்திய மீனவர்கள் தொடர்ந்து பா‌கி‌ஸ்தா‌ன் நீரிணைப்பில் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு திட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின் போது இதற்கான தக்கதொரு வழி முறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்'


அதாவ‌து, அவ‌ங்க‌ தீர்வும் சொல்ல‌ல‌, தீர்வு காண‌ப்போற‌தாவும் சொல்ல‌ல‌.. எங்க‌ ஆபிசு ஆளுங்க‌க்கிட்ட‌ சொல்றேன்பான்னு சொல்லிருக்காங்க‌... இது ஒரு மேட்ட‌ரா?? வ‌ழ‌க்க‌மா மீன‌வ‌ங்க‌ள்லாம் மீன் பிடிக்க‌ போனா, மீனு தான் மீன் பாடி வ‌ண்டில‌ போகும்.... நீங்க‌ள்லாம் க‌ச்ச‌த்தீவை தாரை வாத்து கொடுத்து ஆட்சியை காப்பாத்திக்கிட்டீங்க‌... இப்ப‌ மீன் பிடிக்க‌ போனா, மீன‌வ‌ருங்க‌ பாடி தான் வ‌ண்டில‌ போகுது..

க‌ருணானிதி:அப்போது இந்திய மீனவர் பிரச்சனை பற்றி தத்தம் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லையை தாண்டி வருவதாகக் குற்றஞ்சா‌ற்‌றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குறி வைத்து தாக்குவது குறித்து பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

க‌ய‌வ‌ர்க‌ள்: ஆமா, அவ‌ரு ஆழ்ந்த‌ க‌வ‌லை தெரிவிச்சிட்டாரு... இனிமே மீனவ‌ருங்க‌ பாடு கொண்டாட்ட‌ம் தான்... இனிமே அவ‌ங்க‌ பொண்டாட்டி புள்ளைங்க‌ நெத‌ம் பொங்க‌ல் கொண்டாடுவாங்க‌ள்லா? எம்புட்டு சாதிச்சிருக்கீங்க‌..

க‌ருணானிதி:மானிய விலையில் பத்து மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
இதுவரை வந்துள்ள செய்திப்படி நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நல்லத் திட்டத்தை உத்தமர் காந்தி அடிகள் பிறந்த அக்டோபர் 2ஆ‌ம் தேதியன்றே தொடங்கப்பட வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக அக்டோபர் மாதத்திற்கு மட்டும் கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர்.

க‌ய‌வ‌ர்க‌ள்: காந்தி மீது தான் ஒங்க‌ளுக்கு எம்புட்டு பாச‌ம்? புல்ல‌ரிக்குது போங்க‌.. இன்னும் ச‌ரியா ஏற்பாடு ப‌ண்ண‌ல‌ன்னு சொல்ற‌துக்கு காந்தி வ‌ரையிலும் கூப்பிட‌ணுமா?? இம்புட்டு தெகிரிய‌ம் த‌மிழ்னாட்டுல‌ எவ‌னுக்கு வ‌ரும்னேன்??

=============
சொல்லத் தேவையில்லை.

இப்படி எக்குத்தப்பாக இடைச்செருகல் செய்யும் கயவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

44 comments:

Anonymous said...

சூப்பர்!

அத்திரி said...

ஹா ஹா ஹாஅ...""""????????? நல்ல நகைச்சுவை. இந்த மாதிரி எல்லோரும் விமர்சித்துதான் கலைஞர் ரொம்ப நல்லவரா மாறிட்டார்????????????

நவநீதன் said...

சூப்பர்
repeat....

சுரேஷ் ஜீவானந்தம் said...

// இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. //

எல்லாரும் கேட்டுக்குங்க, நாங்க தூங்கல, நாங்க தூங்கல, சும்மா கண்ணத்தான் மூடிக்கிட்டு இருந்தோம்.

Anonymous said...

kalaignar ilankai pirachanaila kaditham mattunthan eluthuvaru,antha kadithatha pattha udanae mukarjee udanae mulichuruvaru.ivar pillaikkuna udanae nera poi parparu.makkal ellam kirukkan ninachikittu irukkaru.suprem court judge sonna mathiri andavanae ninaichalum natta kappttha mudiyadhu.

குடுகுடுப்பை said...

பதிவு போடலண்ணா ஆட்டோ வரும்னு அன்பா ஒரு வேண்டுகோள் விடுத்தா இப்படி எனக்கு புரியாத மாதிரி ஒரு பதிவை போட்டிங்களே.

தமிழர்கள் எங்கு சென்றாலும் உதை வாங்கவேண்டும் போல இருக்கிறது. மேலை நாடுகளும் ஆரம்பித்துவிட்டால் போக்கிடம் இல்லாமல் ஜிவ்ஸ் போல பீனிக்ஸ் ஆக முன்னேறுவோமோ என்னவோ

நசரேயன் said...

கலக்கல் பதிவு

Sundar சுந்தர் said...

கலக்கல்!

ரோஜா காதலன் said...

நல்ல அரசியல் சார்ந்த நகைச்சுவை மற்றும் விமர்சனம் !

நீங்க சில இடங்களில் `ந்` எழுத்தை டைப் பண்ணமால் தவிர்த்து `ன்` பயன் படுத்திருக்கீங்க.. ‘ந்` எழுத்தை டைப் செய்ய ‘W’ எழுத்தை உபயோகிக்கலாம்.

http://urupudaathathu.blogspot.com/ said...

சூப்பர்!

கலக்கல்

அது சரி said...

//
வாங்க அனானி.

வாங்க‌ அத்திரி.

உங்கள் முதல் வரவுக்கு நன்றி.
//

அது சரி said...

//
நவநீதன் said...
சூப்பர்
repeat....

//

வாங்க நவனீதன், வருகைக்கு நன்றி.

நீங்க ரிப்பீட் பண்ணுங்க. (அதாவது அடிக்கடி வாங்க!)

அது சரி said...

//
சுரேஷ் ஜீவானந்தம் said...
// இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. //

எல்லாரும் கேட்டுக்குங்க, நாங்க தூங்கல, நாங்க தூங்கல, சும்மா கண்ணத்தான் மூடிக்கிட்டு இருந்தோம்.

//

வாங்க சுரேஷ்..

ஆமா, நாம எல்லாம் குருடனுங்க, செவிடனுங்க, முட்டாக்கூ..ங்கன்னு தான் கருணாநிதி நெனச்சிட்டு இருக்கார்!

அது சரி said...

//
Anonymous said...
kalaignar ilankai pirachanaila kaditham mattunthan eluthuvaru,antha kadithatha pattha udanae mukarjee udanae mulichuruvaru.ivar pillaikkuna udanae nera poi parparu.makkal ellam kirukkan ninachikittu irukkaru.suprem court judge sonna mathiri andavanae ninaichalum natta kappttha mudiyadhu.

//

வாங்க அனானிமஸ்.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
பதிவு போடலண்ணா ஆட்டோ வரும்னு அன்பா ஒரு வேண்டுகோள் விடுத்தா இப்படி எனக்கு புரியாத மாதிரி ஒரு பதிவை போட்டிங்களே.

தமிழர்கள் எங்கு சென்றாலும் உதை வாங்கவேண்டும் போல இருக்கிறது. மேலை நாடுகளும் ஆரம்பித்துவிட்டால் போக்கிடம் இல்லாமல் ஜிவ்ஸ் போல பீனிக்ஸ் ஆக முன்னேறுவோமோ என்னவோ

//

வாங்க குடுகுடுப்பை. எனக்கு புரியலைன்னு நீங்க சொன்னாலும் உங்களுக்கு புரியும்..:0)

அது சரி said...

//
நசரேயன் said...
கலக்கல் பதிவு

04 October 2008 18:06

//

வாங்க நசரேயன்... வருகைக்கு நன்றி

அது சரி said...

//
ரோஜா காதலன் said...
நல்ல அரசியல் சார்ந்த நகைச்சுவை மற்றும் விமர்சனம் !

நீங்க சில இடங்களில் `ந்` எழுத்தை டைப் பண்ணமால் தவிர்த்து `ன்` பயன் படுத்திருக்கீங்க.. ‘ந்` எழுத்தை டைப் செய்ய ‘W’ எழுத்தை உபயோகிக்கலாம்.

//

வாங்க ரோஜா. (உங்க நெஜ பேரு செல்வமணியா இல்ல நேருவா?)

அட ஆமா, "W" அடிச்சா ந் ஆகிருது, இது எனக்கு இவ்ளோ நாள் தெரியாது. உதவிக்கு நன்றி!

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
சூப்பர்!

கலக்கல்

//

வாங்க அணிமா! எப்பிடி இருக்கீங்க?

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

கயல்விழி said...

உங்க ப்ளாகில் so called கயவர்கள் தான் உண்மையை பேசுவார்கள் போல :) :)

Anonymous said...

அது சரி, கலக்கல்.

அப்போ வேதாளத்தை விட்டுட்டு வேற எதையோ புடிச்சிடீங்க போல இருக்கே?

அது சரி said...

//
கயல்விழி said...
உங்க ப்ளாகில் so called கயவர்கள் தான் உண்மையை பேசுவார்கள் போல :) :)

//

வாங்க கயல்விழி.

என்னங்க பண்றது..உண்மைய சொன்னா, உடனடியா கயவர்கள் லிஸ்ட்ல சேத்துர்றாரு... அதான், பாவம் அவருக்கு எதுக்கு வேலை வைக்கணும்னு அவய்ங்கள நானே கயவர்கள் லிஸ்ட்ல சேத்துட்டேன்...

அது சரி said...

//
pathivu said...
அது சரி, கலக்கல்.

அப்போ வேதாளத்தை விட்டுட்டு வேற எதையோ புடிச்சிடீங்க போல இருக்கே?
//

வாங்க மோகன். வருகைக்கு நன்றி.

வேதாளத்தை விட்ருவோமா?? அது விக்கிரமாதித்தனுக்கு திடீர்னு வேலை ஜாஸ்தியாடுத்து போல. அதான் ரெண்டு வாரமா டைம் கிடைக்கலை.

குடுகுடுப்பை said...

இனிமேல் வம்பு இங்கே தொடரும்

Madhu Ramanujam said...

என்னத்தை சொல்ல? தமிழ் நாட்டோட தலை எழுத்து, இந்த மாதிரி தலைவர்கள்(?) கிட்ட எல்லாம் மாட்டி முழிக்கவேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்துல இவருக்கு தமிழ் இனத் தலைவர் காவலன் வெங்காயம் விளக்கெண்ணைனு பட்டம் வேற. பட்டம்னு சொல்லி என்னத்தை குடுத்தாலும் வாங்கிக்கறாரு இவர். இதே இலங்கை பிரச்சினை குறித்த கருணாநிதியின் பேச்சை விமர்சித்து நான் எழுதிய பதிவு இதோ இங்கே...

தமிழ் இனத் தலைவர் - வாய் சொல்லில் வீரர் தானே இவர்!

அது சரி said...

//
Madhusudhanan Ramanujam said...
என்னத்தை சொல்ல? தமிழ் நாட்டோட தலை எழுத்து, இந்த மாதிரி தலைவர்கள்(?) கிட்ட எல்லாம் மாட்டி முழிக்கவேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்துல இவருக்கு தமிழ் இனத் தலைவர் காவலன் வெங்காயம் விளக்கெண்ணைனு பட்டம் வேற. பட்டம்னு சொல்லி என்னத்தை குடுத்தாலும் வாங்கிக்கறாரு இவர். இதே இலங்கை பிரச்சினை குறித்த கருணாநிதியின் பேச்சை விமர்சித்து நான் எழுதிய பதிவு இதோ இங்கே...

//

வாங்க மதுசூதனன்.. வ‌ருகைக்கு ந‌ன்றி...

உங்க‌ள் ப‌திவையும் ப‌டித்து பார்த்தேன். ஆனால் உங்க‌ள் க‌ருத்துக‌ளில் என‌க்கு ஒப்புத‌ல் இல்லை.

உண்மையில் நாம் இருவ‌ரும் 180 டிகிரி வித்தியாச‌த்தில் இருக்கிறோம்..க‌ருணானிதி இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு எதுவும் செய்ய‌வில்லை, வெறும் அர‌சிய‌ல் செய்கிறார் என்ப‌தால் என‌க்கு எரிச்ச‌ல். ஆனால், அவ‌ர் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளை ப‌ற்றி பேசினாலே உங்க‌ளுக்கு எரிச்ச‌ல் என்று தெரிகிற‌து...

ம‌ன்னிக்க‌. நான் உங்க‌ளுட‌ன் உட‌ன்ப‌ட‌வில்லை.

Madhu Ramanujam said...

//உண்மையில் நாம் இருவ‌ரும் 180 டிகிரி வித்தியாச‌த்தில் இருக்கிறோம்..க‌ருணானிதி இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு எதுவும் செய்ய‌வில்லை, வெறும் அர‌சிய‌ல் செய்கிறார் என்ப‌தால் என‌க்கு எரிச்ச‌ல். ஆனால், அவ‌ர் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளை ப‌ற்றி பேசினாலே உங்க‌ளுக்கு எரிச்ச‌ல் என்று தெரிகிற‌து...//

எனக்கு அப்படித் தோன்றவில்லை. கருணாநிதி பேசினாலே எனக்கு எரிச்சல் என்ப்தெல்லாம் ஒன்றுமில்லை. இலங்கைத் தமிழரை விடுங்கள், அவருக்கு ஓட்டு போட்ட தமிழகத் தமிழருக்கே அவர் எதுவும் பெரிதாய் செய்துவிடவில்லை. என் எரிச்சல், அவர் இந்த பிரச்சினையைக் கொண்டு அரசியல் செய்கிறார் என்பது மட்டுமே.

கயல்விழி said...

கருணானிதி மட்டுமா? மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் அதே மாதிரி தான். கருன்ஸ் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?

குடுகுடுப்பை said...

அண்ணே உங்களோட அந்த பி.கு நமது புரிந்துணர்வுக்கு அவசியம் இல்லாதது எனவே அது அங்கே இல்லை.

மங்களூர் சிவா said...

:))

அது சரி said...

//
கயல்விழி said...
கருணானிதி மட்டுமா? மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் அதே மாதிரி தான். கருன்ஸ் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?

//

வாங்க கயல்விழி.

உங்க கேள்வி சரி தான். தெனமும் தனக்குத் தானே கேள்வி கேட்டு அதுக்கு பிட்டு அடிக்காம தானே பதிலும் சொல்றது அவர் வழக்கம் தான். ஆனா, நான் இந்த பதிவை போட மிக முக்கிய காரணம் அவர் அறிக்கையில் இருந்த இந்த வரிகள் தான்..


'இந்திய மீனவர்கள் தொடர்ந்து பா‌கி‌ஸ்தா‌ன் நீரிணைப்பில் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு திட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின் போது இதற்கான தக்கதொரு வழி முறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்.


ப‌டிச்ச‌துமே செம‌க்க‌டுப்பா இருந்திச்சி. அத‌னால‌ தான் இதை எழுத‌வேண்டிய‌தா போச்சி.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அண்ணே உங்களோட அந்த பி.கு நமது புரிந்துணர்வுக்கு அவசியம் இல்லாதது எனவே அது அங்கே இல்லை.

//

நோ பிராப்ளம் தல!

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
:))

//

வாங்க சிவா அண்ணாச்சி. ரொம்ப நாளைக்கி அப்புறம் வந்திருக்கீங்க.. நன்றி மீண்டும் வருக :0)

கயல்விழி said...

அடுத்த விக்ரமாதித்யன் கதை எப்போ எழுதுவீங்க அதுசரி?

விக்ரமுக்கும் வேதாளத்துக்கும் இடையே நடக்கும் கான்வர்சேஷன் ரொம்ப கலக்கலா இருக்கு

அது சரி said...

//
கயல்விழி said...
அடுத்த விக்ரமாதித்யன் கதை எப்போ எழுதுவீங்க அதுசரி?

விக்ரமுக்கும் வேதாளத்துக்கும் இடையே நடக்கும் கான்வர்சேஷன் ரொம்ப கலக்கலா இருக்கு

//

மிக விரைவில்...அப்பிடின்னு நெனைக்கிறேன்..

நெஜமாவே மண்டை காஞ்சி, போன ரெண்டு வீக் எண்டா குடிச்சி கும்மி அடிச்சிட்டு மாதித்தன் மட்டையன் ஆயிட்டதுனால அவன் வேதாளத்த பாக்க போகலைன்னு நெனைக்கிறேன்..இந்த வாரம் என்ன பண்றான்னு பாக்கலாம்..

கயல்விழி said...

நம்ம அதுசரி தான் விக்ரம்மா?

ஓகே ஓகே

கயல்விழி said...

யார் அந்த வேதாளம்? உங்க சிகரெட்டோ?

Anonymous said...

நண்பர் அடலேறு சொல்லி இருப்பது என்னவென்றால்:

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்ச்சி பற்றி:

குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

மேலும் விபரங்களுக்கு:

9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬

உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….

அடலேறு

//உருப்புடாதது_அணிமா,இங்கிலீஷ்காரன்,சுபாஷ்,அது சரி கூகிள் வலைபக்கத்தில் இயங்கும் பதிவுகளில் பின்னுட்டத்தில் அழைப்பு அனுப்பும் வசதி என் நிறுவனத்தில் தடை செய்ய பட்டுள்ளதால் தான் உங்கள் வலை பக்கத்தில் அழைப்பு விடுக்க முடியவில்லை.இதனை அழைப்பக ஏற்று வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//

நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அது சரி said...

//
கயல்விழி said...
நம்ம அதுசரி தான் விக்ரம்மா?

ஓகே ஓகே

//

நான் அவன் இல்லீங்கோ!

அதுசரி ஒரு அப்பாவி. அம்பது பவுண்டு குடுத்தா ஒரு ஹெலிகாப்டர் தராங்களாம்டான்னு யாராவது சொன்னா, அவங்க‌ள்ட்ட அட்ரஸ் வாங்கிட்டு அங்க போயி நிப்பான்..கடைசில ஒரு பொம்மை ஹெலிகாப்டர் போஸ்ட்ல அனுப்புறோம்னு சொல்லுவானுங்க.

ஆனா, மாதித்தன் அப்பிடி இல்ல. மஹா கேடி. அப்பிடி ஒரு ஹெலிகாப்டர் கம்பெனிய நடத்துறதே அவனாதான் இருக்கும் :0)

//
யார் அந்த வேதாளம்? உங்க சிகரெட்டோ?
//

அது எனக்கும் தெரியலீங்க. மாதித்தனை கேட்கலாம். ஆனா சொல்ல மாட்டான்.

எல்லாரும் கும்முறதுனால நான் தம்மடிக்கிறத விட்ரலாம்னு இருக்கேன். இன்னிலேருந்து தூங்கிற நேரத்துல தம்மடிக்கிறதுல்ல..

அது சரி said...

//
pathivu said...
நண்பர் அடலேறு சொல்லி இருப்பது என்னவென்றால்:

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

தமிழ் ஸ்டுடியோ…

//

வாங்க மோகன். அழைப்புக்கு நன்றி. ஆனா, நான் சென்னையில இல்லைங்க. தூரம் அதிகம்ன்றதுனால வருவது கஷ்டம்.. உங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

கயல்விழி said...

//எல்லாரும் கும்முறதுனால நான் தம்மடிக்கிறத விட்ரலாம்னு இருக்கேன். இன்னிலேருந்து தூங்கிற நேரத்துல தம்மடிக்கிறதுல்ல..
//

சிகரெட்டை விட்டுவிட்டவர்களாக ஒரு வாழ்த்து பதிவு போடலாமென்று பார்த்தேன், சான்ஸே இல்லை!

அது சரி said...

//
கயல்விழி said...
//எல்லாரும் கும்முறதுனால நான் தம்மடிக்கிறத விட்ரலாம்னு இருக்கேன். இன்னிலேருந்து தூங்கிற நேரத்துல தம்மடிக்கிறதுல்ல..
//

சிகரெட்டை விட்டுவிட்டவர்களாக ஒரு வாழ்த்து பதிவு போடலாமென்று பார்த்தேன், சான்ஸே இல்லை!

//

அடடா, நீங்க பதிவு போட்றதை நான் கெடுத்துட்டேன் போலருக்கே.. கவலைப்படாதீங்க.. நூறு கோடி பேருல ஒரு ரெண்டு பேராவது திருந்தியிருக்க மாட்டாய்ங்களா? அவய்ங்களுக்கு நீங்க வாழ்த்து சொல்லலாமே :0)

Anonymous said...

ந‌ண்ப‌ர் அதுச‌ரி அவ‌ர்க‌ளுக்கு,

www.senkodi.multiply.com
என்னும் என்னுடைய‌ த‌ள‌த்தில் "விசிரிக‌ளின் நுனிப்புல்லும் முத‌லாளித்துவ‌த்தின் ஆணிவேரும்" என்ற‌ த‌லைப்பில் ஒரு ப‌திவிட்டுள்ளேன். அது உங்க‌ள் கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்கும் என‌ எதிர்பார்க்கிறேன். வ‌ருக‌.

தோழ‌மையுட‌ன்,
செங்கொடி

பின் குறிப்பு: த‌க‌வ‌ல் சொல்ல‌த்தான் உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ந்தேன். உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌டித்துவிட்டு பின்னொரு வாய்ப்பில் அதுகுறித்து பின்னூட்ட‌மிடுகிறேன்.

அது சரி said...

//
செங்கொடி said...
ந‌ண்ப‌ர் அதுச‌ரி அவ‌ர்க‌ளுக்கு,

www.senkodi.multiply.com
என்னும் என்னுடைய‌ த‌ள‌த்தில் "விசிரிக‌ளின் நுனிப்புல்லும் முத‌லாளித்துவ‌த்தின் ஆணிவேரும்" என்ற‌ த‌லைப்பில் ஒரு ப‌திவிட்டுள்ளேன். அது உங்க‌ள் கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்கும் என‌ எதிர்பார்க்கிறேன். வ‌ருக‌.

தோழ‌மையுட‌ன்,
செங்கொடி

//

வாங்க நண்பர் செங்கொடி.

அழைப்புக்கு நன்றி..கண்டிப்பா வந்துர்றேன்..