Wednesday, 30 June 2010

ர்ர்ர்ர்ர்ராவணன்!

சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பது போல எத்தனை உழன்றும் அவள் பின்னது மனம் என்று விடாது நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் மண் வேண்டேன் மனை வேண்டேன் என்று புலம்பியவன் கூட பெண் வேண்டேன் என்று சொன்னதாக தெரியவில்லை. ராமாயணம் மகாபாரதம் ஆரம்பித்து ரோமின் க்ளியோபாட்ரா, ஹெலன் ஆஃப் ட்ராய், ஆந்திராவின் சிவ பார்வதி என்று கவிழ்ந்த மன்னர்களும் அழிந்த சாம்ராஜ்யங்களும் நீளம்... பெண்ணின் காலடியில் வைக்கப்பட்ட தலைகளும் வளைந்து போன வாள்களும் அதிகம்...ஒழுக்கம்,சட்டம், மதம்,கலாச்சாரம் இன்ன பிற கருமாந்திரங்கள் என்று மூடி வைத்தாலும் கணப் பொழுதில் கட்டவிழ்த்து பாய இருளில் ஒரு எருமை எப்பொழுதுமே முரண்டு கொண்டு தான் இருக்கிறது.

வெறுப்பின் காரணமாக எதிரியின் மனைவியை கடத்தி, அவள் மேல் காதல் பட்டால்? அங்கு நிற்பது வெறுப்பா இல்லை காதலா? அவளைக் கொல்வதா இல்லை கொஞ்சுவதா?? உருகி உருகி காதலித்தாலும் அதை வெளிச் சொல்ல பிம்பம் அனுமதிக்காவிட்டால்? அப்படியே சொன்னாலும் அவள் அடுத்தவனின் மனைவி..உங்களின் ஒழுக்க கலாச்சார மதிப்புகள் என்னாவது? அதிலும் அத்தகைய ஒழுக்க மதிப்பீடை காக்க வேண்டிய கலாச்சார காவலனே நீங்கள் தான் எனில்? எல்லாவற்றையும் உதறி நீங்கள் சொன்னாலும் அவள் மறுத்தால்? தொட்டு விடும் தூரத்தில் இருந்தாலும் தொட முடியா தொலைவில் இருக்கும் பெண்ணை என்ன செய்வது? உள்ளிருந்து அரிக்கும் கரையான் போல உளுத்துப் போய்க் கொண்டே இருக்கும் மனதை என்ன செய்வது???

இதிகாச ராவணன் ஒரு மிகச்சிக்கலான பாத்திரம்...சிவ பக்தன், வீணை வாசிப்பான், பத்து தலை, மகா வீரன், எதிரில் நிற்பவன் கடவுளே என்றாலும் மயிரே போச்சி என்று பின் வாங்காதவன், அசுரன், அப்படில்லாம் இல்ல அவங்கப்பா ஒரு ரிஷி அதனால அவன் பிராமணன் என்றெல்லாம் அவனது புறவயமான பிம்பமே மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அகவயமான ராவணன் யார்? பெண்ணே காதல் கொள்ளும் அழகு என்று கம்பன் உருகும் சீதையை கடத்திய பின் அவன் மனநிலை என்ன? உண்மையிலேயே அவன் சீதையை விரும்பினானா இல்லை கடைசி வரை வெறுப்பும் பழி வாங்கும் உணர்ச்சியும் தான் இருந்ததா? அப்படி விரும்பியிருந்தால்...சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்....காதலில் அழுந்தும் மனம், காமத்தில் எரியும் உடல், எதிரியின் மனைவியை கொல்ல சொல்லும் புத்தி...மனம், உடல், புத்தி என்று அல்லாடி ஒரே மனிதன் மூன்றாக சிதைவதை....ஒரு மிக தீவிரமான உளவியல் கதையே சொல்லியிருக்கலாம்..

ஆனால், மணிரத்னத்தின் ராவணன்??
============

மணி ரத்னத்திற்கு ஒட்டு மொத்த சரக்கும் ஓவர் நைட்ல தீந்து போச்சா இல்ல‌ சரக்கு குடுக்குறவய்ங்க‌ மொதல்ல பழைய பாக்கியை செட்டில் பண்ணுங்க சார்...இனிமே இல்லன்னு கடைய மூடிட்டாய்ங்களான்னு தெர்ல.....பழைய ராமாயணம் டிவி சீரியலை பார்த்து அதை அப்படியே வில்லுக்கு பதில் கன்னு, அம்புக்கு பதில் புல்லட்டு மட்டும் மாத்தி பசு மாடு வைக்கோல் தின்னுட்டு சாணி போடறா மாதிரி சாணி போட்ருக்கார்... செத்த நாய் மேல எத்தனை லாரி ஏத்துனா என்னடான்னு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்வி ராஜ், ஏ.ஆர். ரெஹ்மான், சந்தோஷ் சிவன், பிரபு, கார்த்திக் எல்லாரையும் ஏத்தி எறக்கிருக்கார்...நாய் பீஸ் பீஸாயிடுச்சி.....

வழக்கமா தியேட்டர்ல குந்தியிருக்கவய்ங்க கண்ணை நோண்ட்றா மாதிரி வெரலை நீட்டி இல்லாட்டி கான்க்ரீட் கலக்குற மிக்சிங் மெஷின் மாதிரி வாயத் தொறந்து டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கத்த வச்சோ ஹீரோவை அறிமுகப்படுத்தறது தமிழர் பண்பாடு....ஆனால், மணியண்ணன் வித்தியாசமா சிந்திப்பவர் (இல்லியா பின்ன, பேன்டிட்ஸ்னு ஒரு திருடங்க படத்தையே சுட்டு திருடா திருடான்னு சொல்லி எடுக்க இன்னா கெத்து வேணும்?? தில்லு தொரைப்பா!)...ஹீரோ அறிமுகக் காட்சியில் விரலை நீட்டலை...ஒட்டு மொத்த பாடியையே நீட்டி குதிக்கிறான் (ஆத்துல தான், என்னோட மண்டைல இல்ல)...அப்படியே குதித்து அடித்துக் கொண்டு போயிருந்தால் ர்ர்ர்ர்ர்ராவணனும் இல்ல, கோவணமும் இல்லங்கிறதுனால போகலை...(ராவணனோட கோவணம் என்னாச்சின்னு கேட்டு தொலைக்காதீங்கய்யா...நான் பாக்கலை)..வந்துடறான்....வந்து???..கோவணத்தை காய வச்சி கட்டிக்கிட்டு பழங்காநத்த்ம் பஸ் ஸ்டாண்டு போயி பொரோட்டாவா போட முடியும்?..போட்ல போய் சீதையை கடத்துறான்...ஆனா ஐஸ்வரியா என்ன சாதாரண சீதையா? கடத்தும் போது அவங்க பயப்படறதெல்லாம் இல்லை...அதைப் பத்தி கவலைப்படறதும் இல்ல..என்னவோ கவிதை சொல்றாங்க...பதிலுக்கு ராவணனும் கவிதை சொல்றாரு...விட்டா அங்கின ஆத்துலயே மேடை போட்டு மைக் செட்டு வச்சி பாட்டுக்கு பாட்டு எடுக்கவான்னு சூப்பர் ஸிங்கர் போட்டியே நடத்துவாய்ங்க போல..எந்த கிட்நாப்பிங்ல இப்பிடி கடத்துறவனும், ஹாஸ்டேஜும் அந்தாதி போட்டி நடத்துனாங்கன்னு எனக்கு தான் ஒரு எழவும் தெரியலை...

ராவணனுக்கு பத்து தலை...இதை பத்து டைப்பான கேரக்டர்னு சொல்லலாம்...நம்ம மணி, இந்த சொல்லலாம்கிறதை கெட்டியா பிடிச்சிக்கிட்டு ஒரு பத்து பேரை வச்சி அவன் இப்படி, அவன் அப்படின்னு சொல்ல வச்சிட்டாரு...அடங்கொய்யால‌..இந்த வெண்ணைக்கு எதுக்குய்யா டைரக்டரு?? ராவணன் விக்ரம் அடிக்கடி பக் பக் பக் பக்னு சவுண்ட் விடறார்....நான் பேசும் போது அடிக்கடி ஃபக் ஃபக்னு சொல்வேன்....சென்சார்ல கட் பண்ணிடுவாங்கன்னு அதை பக் பக் ஆக்கிட்டாங்களா இல்லை ஆஸ்கர் வாங்குறதுக்காக ஆலிவுட்டு தரமான்னு தெரியல........

அப்புறம் ராமாயணம்னா அதுல முக்கியமா அனுமன் வந்தாகணும்..(வராட்டி ராமனுக்கு அல்லக்கை வேலை பாக்க‌ ஆள் லேதன்டி..)...அதனால கார்த்திக் வர்றாரு..இங்க தான் மணி சாரோட க்ரியேட்டிவிட்டி டாப் கியர்ல பிக்கப் ஆவுது..எப்பிடி வர்றாருன்னா இருட்ல கொரங்கு மாதிரி படுத்துருக்கார்...அப்புறம் மரத்துக்கு மரம் ஜம்பிங் பண்றார்...ஒரு சீன்ல ஐஸ்வர்யா ராயோட புருஷனா வர்ற ப்ரிதிவிராஜூக்கும் ராவணனுக்கும் நடுவுல தூது போறார்...(அந்த சீன்ல கார்த்திக்குக்கு வால் இல்லைங்கிறதுனால கால்ல தீ வைப்பாங்கன்னு நான் ரொம்ப எதிர்ப்பார்த்தேன்...நல்ல வேளை இல்ல!)

ஐஸ்வர்யா ராயை புக் பண்ணும் போது நீங்க இந்த படத்துக்கு சும்மா வெளம்பரம் தான், ஒண்ணும் நடிக்க வேணாம்னு சொல்லியே புக் பண்ணிருப்பாங்க போலருக்கு....ஒரே ஒரு சீனை தவிர வேற எங்கயும் நடிக்கலை....தலைவரு கூட ஃபோட்டோ எடுக்கும் போது நம்ம அல்லக்கையும் வந்து தலையை நீட்டறா மாதிரி நானும் இருக்கேன் ஃப்ரேம்லன்னு வந்து கூட கூட நிக்கிறாங்க....பெட்ரூம்ல பரதநாட்டியம் ஆடறாங்க....திடிர்னு புருஷன் பேரை சொல்லி நீங்க எங்க இருக்கீங்கன்னு கத்துறாங்க....அம்மணி மலையேறுனாலும் , ஆத்துல நனனஞ்சாலும் , வெயில்ல காஞ்சாலும் ....கடல்ல போற கப்பலுக்கு அடிச்ச பெயிண்ட் மாதிரி அவங்க மேக்கப்பு...ம்ம்ம்...ரொம்ப கெட்டி..என்னா ஆனாலும் சரி...ஒரு இஞ்ச்சு கூட கலையறதில்லை....அவங்களை சொல்லியும் தப்பில்லை...வெளம்பரம்னா பொண்ணுங்களை அழகா காமிக்கணும்னு ஒலக விதி...அதைப் பார்க்கணும்னு என்னோட விதி..ஒங்க விதி..தலைவிதி...என்ன ஒண்ணு, அம்மணிக்கு இப்பிடி செலவு பண்ணி சும்மா வர வைக்கிறதுக்கு பதிலா அந்த கேரக்டரை க்ராபிக்ஸ் செஞ்சிருக்கலாம்...செலவும் மிச்சம்..இன்னும் கொஞ்சம் நல்லாவும் நடிச்சிருக்கும்..

"ரெண்டு பழம் வாங்கச் சொன்னேன்..ஒண்ணு இங்கருக்கு...இன்னொன்னு எங்கடா....அதான்னே இது" வாழைப்பழக் காமெடி போல மண்ணைத் தோண்டி தின்பாயா படத்தில் இல்லாத இசையை காட்டி ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹ்மான், இந்த படத்திற்கு "உசுரே போகுதே உசுரே போகுதே" ரேஞ்சில் இசை போட்டால் தில்லு தொரை மணியோ மசுரே போகுதே மசுரே போகுதே ரேஞ்சில் மட்டமாக படம் பிடித்து ஓட்டை சாக்கடையை அடைக்கும் அழுக்கு துணியைப் போல அந்த பாட்டை சொருகி வெச்சிருக்காரு......சிச்சுவேஷன் தெரியாம சாங்கை திணிக்கிறது என்ன டைரக்ஷனோ...தெரிஞ்சவங்க சொல்லுங்கய்யா.....

தில்லு தொரை தான் இப்படி செத்த நாயை ரவுண்டு கட்டி அடிக்கிறாருன்னா அவரு சம்சாரம் சுகாசினி சும்மா சொள்ட்டி சொள்ட்டி அடிக்கிறாங்க.....ராவணன் மாதிரி ஒரு கேரக்டருக்கு கருணாநிதியால கூட இவ்ளோ மொன்னையா வசனம் எழுத முடியாது...அவ்ளோ மொன்னையா இருக்கு...வர்ற கேரக்டரெல்லாம் லே, வே, டேன்னு தின்னவேலி தமிழ் பேசறாங்க.....திடீர்னு தஞ்சாவூர் திருச்சி தமிழுக்கு மாறி "நீங்க வந்துட்டீங்க..நான் சஞ்சலப்பட்டேன்" அப்படின்னு தட்டையா சுத்த தமிழ்ல சுத்தி விடறாங்க...

சரி நாய் தான் செத்துப் போச்சி...நம்ம தில்லு தொரை ராமனை வில்லனா காமிச்சாட்டாரு, ராவணன் மேல சீதைக்கு லவ்வு வர்றா மாதிரி காமிச்சாட்டாருன்னு ராமாயணத்துல வண்ணார் சொன்னா மாதிரி ஊருக்குள்ள அரசல் பொரசலா ஒரு பேச்சு...ஆஹா...நம்ம மணியண்ணன் மணியா ஒரு விஷயம் சொல்லிட்டாரு போலன்னு நானும் கிளைமாக்ஸ் வரையிலும் பார்த்தேன்...அது இன்னான்னா, ராமன் ஒரு சந்தேக பேர்வழி சைக்கோன்னு ஒரு புகார் இருக்கு...அப்படில்லாம் இல்ல, ராவணனை பிடிக்க சந்தேகப் பேர்வழி மாதிரி நடிக்கிறான், மத்தபடி அவனுக்கு சந்தேகமெல்லாம் இல்ல‌ அப்படிங்கிறா மாதிரி தான் வருது... அதே மாதிரி கடைசி வரைக்கும் சீதைக்கு ராவணன் மேல லவ் வர்றா மாதிரில்லாம் எதுவும் இல்ல...நம்ம புருஷன்கிட்ட என்ன சொன்னான்னு அவங்களுக்கு டவுட்டு...அதைக் க்ளியர் பண்ண தான் போறாங்க...லவ்வு இருந்தா அங்க போயி எதுக்கு புருஷன் சொன்னதை பத்தியே பேசணும்?? என்னங்கய்யா உங்க லாஜிக்கு??

இப்ப பார்க்கலாமா வேண்டாமான்னு கேக்குறவங்களுக்கு....கண்டிப்பா ஒரு தடவை பார்க்கலாம்...விக்ரம் பின்னிருக்கார்...படத்துல அவரை பார்க்கும் போது எனக்கு க்ளாடியேட்டர் ரஸ்ஸல் க்ரோ, ஜாக் நிக்கல்ஸன், ராபர்ட் டி நீரோன்னு ஞாபகம் வந்தது...பிரபு, ப்ரியா மணி, ப்ரித்வி ராஜ், வையாபுரி, ரெண்டே சீனுக்கு ஒரு ஓரத்தில வந்தாலும் ரஞ்சிதா அப்படின்னு நடிச்சவங்க எல்லாம் சிக்சர் அடிக்கிறாங்க...ரஹ்மான் ம்யூசிக், சந்தோஷ் சிவன் , மணிகண்டனின் கேமரான்னு எல்லா விஷயமும் பாசிட்டிவ்வா இருக்கு..

பெரிய நெகட்டிவ் மணி ரத்னம், சுகாசினி அப்புறம் ஐஸ்வர்யா ராய்.

இதிகாச ராவணனுக்கு பத்து தலை....

மணிரத்னத்தின் ராவணன்....முண்டம்!

==============================

23 comments:

அது சரி said...

ஸ்டார்ட் மீஜிக்...

கலகலப்ரியா said...

||சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பது போல எத்தனை உழன்றும் அவள் பின்னது மனம் என்று விடாது நகர்ந்து கொண்டே ||

ஆரம்பமே சுத்துதே...

கலகலப்ரியா said...

இங்கயும்... மணிரத்னம் ராவணன் வரைக்கும் சூப்பரப்பு.. ஆனா.. மணிரத்னம் ராவணன முண்டம்ன்னு சொல்றது டூ மச்.. அதில்லாம ஐஸ் நடிக்கவே இல்ல வெளம்பரம்ன்னு சொல்றது த்ரீ மச்... ச்ச்செரி மேக் அப்-தான்.. அதுக்காக நடிக்கலைன்னு எப்ப்ப்ப்டிச் சொல்லலாம்.. ஊஹூம்..

அப்புறம் க்ளைமாக்ஸ்ல... ராமரு ஏன் சீதைய அப்டி சொல்றாரு.. சீதை காதல்வயப்பட்டு போகலைன்னு.. அந்த ஃபீலிங்க் வேணும்ன்னே நம்ம சீதா.. (அல்லது கண்ணகி)ங்களயும்.. அப்றம் ராமன்களயும் திருப்திப் படுத்தறதுக்காகப் பண்ணி இருப்பார் போலருக்கு.. செரியாத்தான் சொல்லி இருக்கீரு... ம்ம்.. இதில ராவணன் இதயத்த பெருசாக் காண்பிக்கறதால... தலை இல்லாத மாஆஆஆதிரித் தோணுதோ.. :o)

மொத்தத்ல.. உம்ம பாணில கலக்கி இருக்கீரய்யா... :))

Nanum enn Kadavulum... said...

சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி சாரே !!! கலக்கிட்டீங்க எப்பவும்போல !!!

வானம்பாடிகள் said...

அது சரி said...

/ஸ்டார்ட் மீஜிக்../

ம்க்கும். அதான் ஆரம்பத்துல இருந்து முண்டம் வரைக்கும் டண்டண்டண்டண்டனக்கா டண்ணுன்னு உங்க மீஜிக் காத கிழிக்குதே. அப்புறமென்ன மீஜிக்கரது. சுப்புடு உம்மை வச்சிட்டுதான் செத்து போய்ட்டாரோ:o))

அது சரி said...

//
கலகலப்ரியா said...
||சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பது போல எத்தனை உழன்றும் அவள் பின்னது மனம் என்று விடாது நகர்ந்து கொண்டே ||

ஆரம்பமே சுத்துதே...

//

ஆமா...படத்தோட கடைசி வரைக்கும் எனக்கும் அப்படித் தான்..செம தலை சுத்தல்...

அது சரி said...

//
கலகலப்ரியா said...
இங்கயும்... மணிரத்னம் ராவணன் வரைக்கும் சூப்பரப்பு.. ஆனா.. மணிரத்னம் ராவணன முண்டம்ன்னு சொல்றது டூ மச்.. அதில்லாம ஐஸ் நடிக்கவே இல்ல வெளம்பரம்ன்னு சொல்றது த்ரீ மச்... ச்ச்செரி மேக் அப்-தான்.. அதுக்காக நடிக்கலைன்னு எப்ப்ப்ப்டிச் சொல்லலாம்.. ஊஹூம்..

அப்புறம் க்ளைமாக்ஸ்ல... ராமரு ஏன் சீதைய அப்டி சொல்றாரு.. சீதை காதல்வயப்பட்டு போகலைன்னு.. அந்த ஃபீலிங்க் வேணும்ன்னே நம்ம சீதா.. (அல்லது கண்ணகி)ங்களயும்.. அப்றம் ராமன்களயும் திருப்திப் படுத்தறதுக்காகப் பண்ணி இருப்பார் போலருக்கு.. செரியாத்தான் சொல்லி இருக்கீரு... ம்ம்.. இதில ராவணன் இதயத்த பெருசாக் காண்பிக்கறதால... தலை இல்லாத மாஆஆஆதிரித் தோணுதோ.. :o)

மொத்தத்ல.. உம்ம பாணில கலக்கி இருக்கீரய்யா... :))

//

நான் என்ன வேணும்னா சொல்றேன்? இல்லைன்னா இல்லைன்னு தான் சொல்ல முடியும் :)))

ராவணன் இதயத்தை பெருசா காண்பிக்கிறாங்களா? நான் பாக்கவே இல்லியே...

வானம்பாடிகள் said...

முதல் பாகம் அப்படியே புரட்டி புரட்டி அடிக்குது. அதிலும் இதிகாச ராவணனின் அலசல் மூளைக்கு நிறைய வேலை தருது.

ஹி ஹி. நீங்களும் இந்த மேட்டுக்குடி, கார்ப்போரேட் ரப்பர்ஸ்டேம்ப் இல்லாம இந்த விமரிசனம் எழுதினதுக்கு ரொம்ப நன்றி.

படத்தில இல்லாத காமெடி உங்கள் விமரிசனம் நிறைவு செஞ்சிடுத்து. அட படமே காமெடி பீசுன்னு நீங்க சொல்றது கேக்குது=)) யப்பா சாமி முடியல.

அது சரி said...

//

Nanum enn Kadavulum... said...
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி சாரே !!! கலக்கிட்டீங்க எப்பவும்போல !!!

//

விக்ரம் கூட அப்படித் தான் ஆரம்பத்துல ஆனந்த கண்ணீர் விட்டாராம்...அப்புறம் படம் பார்த்துட்டு வேற மாதிரி கண்ணீர் விட்டதா கேள்வி :)))

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
அது சரி said...

/ஸ்டார்ட் மீஜிக்../

ம்க்கும். அதான் ஆரம்பத்துல இருந்து முண்டம் வரைக்கும் டண்டண்டண்டண்டனக்கா டண்ணுன்னு உங்க மீஜிக் காத கிழிக்குதே. அப்புறமென்ன மீஜிக்கரது. சுப்புடு உம்மை வச்சிட்டுதான் செத்து போய்ட்டாரோ:o))

//

ஆஹா...விட்டா சுப்புடு செத்ததுக்கும் நான் தான் காரணம்னு சொல்லிடுவாங்க போலருக்கே....

கலகலப்ரியா said...

||செத்த நாய் மேல எத்தனை லாரி ஏத்துனா என்னடான்னு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்வி ராஜ், ஏ.ஆர். ரெஹ்மான், சந்தோஷ் சிவன், பிரபு, கார்த்திக் எல்லாரையும் ஏத்தி ||

எப்பூடி இப்பூடி எல்லாம்.. :o)))

வானம்பாடிகள் said...

//சிச்சுவேஷன் தெரியாம சாங்கை திணிக்கிறது என்ன டைரக்ஷனோ...தெரிஞ்சவங்க சொல்லுங்கய்யா.....//

ஹி ஹி. நிஜத்துல சிச்சுவேஷன் சாங்னா சங்கு ஊதரப்பதான். இதுல எங்க திணிச்சா என்ன?:)).

ஆக மண்ணைத் தோண்டி தின்பாயா மாதிரி இதில ட்ரெயினருக்கு டேமேஜ் இல்ல. அந்த மட்டுக்கு படம் பெட்டர்னு புரியுது:o))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||செத்த நாய் மேல எத்தனை லாரி ஏத்துனா என்னடான்னு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்வி ராஜ், ஏ.ஆர். ரெஹ்மான், சந்தோஷ் சிவன், பிரபு, கார்த்திக் எல்லாரையும் ஏத்தி ||

எப்பூடி இப்பூடி எல்லாம்.. :o)))//


அடங்கொன்னியா. நானும் இதே டைப் பண்ணிட்டு நல்லகாலம் ப்ரவுசர் அடம் புடிச்சது. காபி பண்ணிட்டு ரிஃப்ரெஷ் பண்ணா நீ போட்டுட்ட.=)). அதனால ரிப்பீட்டேய்.

வானம்பாடிகள் said...

அப்புறம் பாஸ், இந்த டெம்ப்ளேட்ல நிறைய மூட்டப்பூச்சி. நான் ட்ரை பண்ணிட்டு மாத்திட்டேன்.வேற மாத்துங்க பாஸ். சைட் பார் பாருங்க ஓம்க்குச்சி நரசிம்மன் மாதிரி இருக்கு=)). அப்புறம் பல சமயம் லோட் ஆகாது.

Nanum enn Kadavulum... said...

////ராவணன் மாதிரி ஒரு கேரக்டருக்கு கருணாநிதியால கூட இவ்ளோ மொன்னையா வசனம் எழுத முடியாது///
செம்மொழி மாநாடு நடத்தி, குடும்பத்தையே தமிழுக்கு தியாகம் செய்த தலைவரை ....இவ்வாறு மொண்ணை வசனம் அப்படி இப்படி என்று பழிப்பதை வன்மையாக எச்சரிக்கிறேன்

அது சரி said...

//

கலகலப்ரியா said...
||செத்த நாய் மேல எத்தனை லாரி ஏத்துனா என்னடான்னு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்வி ராஜ், ஏ.ஆர். ரெஹ்மான், சந்தோஷ் சிவன், பிரபு, கார்த்திக் எல்லாரையும் ஏத்தி ||

எப்பூடி இப்பூடி எல்லாம்.. :o)))

//

ஆஹா...அந்த வசனம் ஏதோ ஒரு தமிழ்படத்துல வரும்...எந்தப் படம்னு தெரியலை...

(எனக்கு தூக்கம் வருது...மீதி மீஜிக் நாளைக்கா...)

முகிலன் said...

My personal Thanks to ManiRatnam...

Leavela pona aaLai oru pathivu ezutha vachirukkaarunna summaavaaa?

Mahesh said...

//செத்தநாய் மேல எத்தனை லாரி//

ஜூப்பர்.....

இந்தப் படத்தை ஆளாளுக்கு நார் நாரா கிழிச்சும் போய் கட்சி வரைக்கும் பாத்துட்டு "ர்ர்ர்ர்ர்ர்ராவணன்" னு எழுதறியே.... நீதாம்பா தில்லுதொர!

KarthigaVasudevan said...

இன்னும் படம் பார்க்கலை ,ஒரு வேலை தப்பிச்சிட்டேனோ ,ஆனாலும் மணி படம் ஒரு தடவை பார்க்கலாம் டி.வி.டி வந்தப்புறம் பார்க்கனும்ப்பா.

செத்த நாய் மேல் லாரி ஏத்தற மேட்டர் செம கலக்கல்.என்னமா யோசிக்கிறாய்ங்க ஊர் நாட்ல மக்க மனுசங்க ! :)))

விமர்சனம் நல்லா பண்ணிருக்கிங்க அதுசரி

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

”சதை பிண்டத்தை நம்பிய முண்டம்”னு முடித்திருக்கலாம் தல!

நான் இன்னும் படம் பார்க்கல, அது நால இது ஒரு கருத்து மட்டுமே என கொள்க!

Anonymous said...

Ungal vimarsanam nalla irunthathu. Ennudaiya vimarsanathil ulla vishayangalum ingaludaiyanavum kitta thatta ore mathiri thaan ullana. Ennudaiya review padichu paarthu comment pannungalen: http://ramyamani.wordpress.com/2010/07/03/raavanan-review/
thanks, Ramya

ILLUMINATI said...

கலக்கல் எழுத்து நடை நண்பா உமக்கு. :)