Monday 31 May 2010

நாரச புனைவுகளும் மாவோயிஸ்ட் பொர்ச்சியும்....

புனைவுகள் எழுதுவதில் ஒரு மிகப்பெரிய வசதி இருக்கிறது. யாரைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எவ்வளவு கேவலமாகவும் எழுதலாம்....தரம் தாழ்ந்து தரை தட்டி, அதற்கு கீழே பாதாள சாக்கடை லெவலுக்கு கீழே இறங்கி கூட எழுதலாம்.

நாம் எவ்வளவு கேவலமாக எழுதியிருக்கிறோம் என்று யாராவது புரிந்து கொண்டால், எலேய் அது வெறும் புனைவுடே...சும்மால்லா எழுதினேன்..நீ கோட்டிக்காரத் தனமா என்ன எளவுல புரிஞ்சிக்கிட்ட..நான் என்ன பண்ணுவேன் என்று எளிதாக விளக்கெண்ணையில் வழுக்கி செல்லும் வெண்ணைக் கட்டி போல நழுவி விடலாம்.

ஆனால், எழுதியவர்களுக்கு தெரியுமே?? உங்களின் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நர்சிம், நீங்கள் எழுதியது வெறும் புனைவு தானா?? ஆம் என்றே நீங்கள் சாதித்தாலும் நீக்கப்பட்ட அந்த இடுகை யாரை குறிக்கிறது என்று உங்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் தெரிந்தே இருக்கிறது.

நம்ப்ப்பி வாசிப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறீர்கள் (நம்ப்ப்பி என்ற அழுத்தம் எழுத்துப்பிழையா இல்லை மதுரை ஸ்டைல் நக்கலா என்ற கேள்வி வேறு எழுகிறது).

நானும் உங்களை நம்ப்பி வாசித்தவன் தான். (இறந்த காலம்). அதன் காரணம் உங்களின் அய்யனார் கம்மா போன்ற வலிமையான எழுத்துக்கள் மட்டுமல்ல, டாக்டர் ஷாலினி, பதிவர் விதூஷ் போன்றவர்களின் பிரச்சினைகளில் நீங்கள் முதல் ஆளாக குரல் கொடுத்ததும், "பெண்பதிவர்கள் என்று பிரித்துப்பார்ப்பது தேவையற்றது என்று நினைக்கிறேன். இங்கே கருத்துகளும், படைப்புகளும் மட்டுமே முக்கியம்", என்று பேட்டியளித்ததும் தான். நீங்களே சொல்வது போல உங்களுக்கு ஒரு மிக நல்ல இமேஜ் இருந்தது என்பது உண்மை. ஆனால், அதை ஒரே நாளில் அடித்து நொறுக்கி கீழே போய்விட்டீர்கள்.

உங்களுக்கும் சம்பந்தப்பட்ட பதிவர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததா என்று எனக்கு தெரியாது. ஆனால், "பகடி, நகைச்சுவை என்ற பெயரில் என் ஆதர்சங்களையும் நான் மதிப்பவர்களையும் கொச்சைப் படுத்தி, என் எழுத்தெல்லாம் திருட்டு என்றெல்லாம் எழுதி, அதை வேறு பெயரில் பதிவிட்டு, பின்னூட்டங்களில் நேரடியாகவே என்னைத் தாக்கிய பொழுது" என்று காரணம் சொல்கிறீர்கள்.

என்ன தான் காரணம் சொன்னாலும் புனைவு என்ற பெயரில் நீங்கள் செய்திருப்பது நியாயப்படுத்தவே முடியவில்லை. ஆனால், நீங்கள் சொல்லியிருப்பது தான் காரணம் என்றால் நீங்கள் இன்னமும் கீழே போகிறீர்கள்!!

பொது வெளியில் வைக்கப்படும் எதுவும் விமர்சிக்கப்படும், கேலி செய்யப்படும்...கம்பனும் பாரதியும் பாலகுமாரனும் சுஜாதாவும் சாரு நிவேதிதாவும் சந்திக்காத விமரசனங்களா? உண்மையோ இல்லையோ, எந்த எழுத்தாளர் மீது திருட்டுக் குற்றச்சாடு இல்லை நர்சிம்?? எல்லாக் கதைகளையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து ஏதோ ஒன்றின் நகல் என்று யாரேனும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள்...அதற்காக அப்படி விமர்சனம் செய்பவர்கள் அவுசாரி என்று சொல்வீர்களா??

ஆகப் பெரிய சாரு நிவேதிதா, ஜெயமோகனையே தமிழ்நாட்டில் பல கோடி பேருக்கு தெரியாது. அப்படியெனில் உங்களை எத்தனை பேருக்கு தெரியும்?? இந்த பிரபலத்தன்மைக்கே யாரும் விமர்சித்தால் அவுசாரி என்று "புனைவு" செய்வீர்களானால், உங்களுடன் ஒப்பிடும் போது கருணாநிதியும், ஜெயலலிதாவும் மற்ற அரசியல்வாதிகளும் கடவுளாக தெரிகிறார்கள். எத்தனை குற்றச்சாட்டு வந்தாலும் அவர்கள் யாரும் உங்கள் அளவுக்கு கீழே போய் அவுசாரி என்று பேட்டிக் கொடுப்பதுமில்ல, புனைவு செய்வதுமில்லை!

இது தான் சமயம் என்று வன்மத்துடன் போட்டுத் தாக்குகிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நர்சிம், உங்கள் மீது வன்மம் கொள்ள பலருக்கும் எந்த காரணமுமில்லை. நிச்சயமாக எனக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் கடவுளிலிருந்து கருணாநிதி வரை விமர்சிக்கும் நான் , விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருவரை அவுசாரி என்று அழைப்பதை பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டிருந்தால் சேற்றில் புரளும் எருமைக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைக் கண்டிக்காவிட்டால் வேறு எதையும் கண்டிக்க எனக்கு தார்மீக உரிமையும் இல்லை.

ஸாரி நர்சிம். ஆனால் நீங்கள் எல்லை கடந்து மிகக் கீழே போய்விட்டீர்கள்!

====================

கெடப்பது கெடக்கட்டும் கெழவனைத் தூக்கி மனையில் வை என்ற கதையாக வினவு இதற்கெல்லாம் காரணம் நர்சிம்மின் ஜாதியே என்று அவர்களின் பார்ப்பனீய‌ பிஸினஸை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எவன் எக்கேடு கெட்டால் என்ன, யார் குடி நாசமானால் என்ன என்று செக்ஸ் டார்ச்சருக்கு ஆளானவர்கள் என்று எந்த பொறுப்பும் இன்றி சில பெண் பதிவர்களின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். நர்சிம்மின் புனைவு வன்புணர்ச்சி என்று சொல்லிக் கொண்டே இவர்கள் அதை விட கேவலமாக இறங்கிப் போகிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களின் பெயரை வெளியிட இவர்கள் யார்? இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் வினவு பொறுப்பேற்குமா?

நர்சிம் ஒரு பார்ப்பனராம், அவர் தன் குரு என்று சொல்லும் சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோரும் பார்ப்பனர்களாம்! அப்படியா? நர்சிம்மும், சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் தாங்கள் பார்ப்பனர்கள் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை, அப்படி ஜாதி புத்தி காட்டி எங்கும் நடந்தும் கொண்டதில்லை. அப்படியிருக்க தோண்டித் துருவி அவர்களின் ஜாதியை கண்டுபிடித்து பார்ப்பன சாயம் பூசும் வேலை வினவுக்கு ஏன்? (நானும் கூட ஜ்யோவ்ராம் சுந்தரை குருவாகத் தான் நினைக்கிறேன். ஆனால் அவர் பார்ப்பனர் என்பதே எனக்கு வினவு படித்துத் தான் தெரிகிறது!)

அடுத்து நர்சிம்மின் பார்ப்பனீயத்தை பாதுகாக்கத் தான் இந்து பதிவர்கள் மவுனம் காக்கிறார்களாம். வினவு நக்கீரன் பாணி ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு...அடச்சே...அது கம்யூனிஸ்ட் இல்லியே...சைனாவுக்கு அனுப்பி வையுங்கள்...மாவோ விருது கிடைக்கலாம்.

எல்லாரும் எல்லா விஷயத்திலும் கருத்து சொல்லிக் கொண்டே குந்தியிருக்க எங்களுக்கு கட்சியும் இல்லை, இயக்கமும் இல்லை. மாவோ பேரை சொன்னால் சோறு போட எங்களுக்கு ஆள் இல்லை. நாங்களே வேலை பார்த்து தான் எரிக்க வேண்டும் (இல்லை, ட்ரையினை இல்லை, அடுப்பை சொன்னேன்).இடைப்பட்ட நேரத்தில் ஒரு ஆர்வத்தின் பேரில் தான் இந்த எழுத்து வேலை.

நர்சிம்மின் பார்ப்பன புத்தி தான் பெண் பதிவர்களை கேவலமாக எழுத வைக்கிறது என்று சொல்லிக் கொண்டே இந்துப் பதிவர் கலகலப்ரியா என்ற வீராங்கனை என்ற அடைமொழி வேறு. நர்சிம்மின் புனைவு கேவலம் என்றால், தங்களின் கருத்துக்கு மாற்றான கருத்து கொண்டவர் என்று குறிவைத்து தாக்குவதற்கு என்ன பெயர்?? வர்க்க விரோதி?? அழித்தொழிப்பு?? இருக்கலாம்...அது தானே பொர்ச்சி! வாழ்க பொர்ச்சி...இன்னும் சில ட்ரையின்களை கவிழ்ப்போம்...மக்களை கொன்று விட்டு பின்னர் அவர்களுக்காகவே போராடுவதாக கோஷம் போடுவோம்...மாவோவும் ஸ்டாலினும் அப்படித் தானே செய்தார்கள்...அவர்கள் வழியில் நடப்போம்...கவிழட்டும் ரயில்கள்...விழட்டும் பிணங்கள்...பிணங்களின் வாயில் குத்தி நிறுத்துவோம் செங்கொடியை....ஸார் மன்னரின் குழந்தைகள் உட்பட கொன்றழித்த லெனின் வழி நடப்போம்....இருபதாயிரம் போலிஷ் படை வீரர்களை கொன்றழித்த மனித நேய மாவீரன் ஸ்டாலின் வழி நடப்போம்...நாற்பதாயிரம் அறிவுஜீவிகளை கொன்றொழித்து மக்களுக்காக போராடிய மாவோ வழி நடப்போம்...வாழ்க லெனின்....வாழ்க மாவோ...வாழ்க ஸ்டாலின்...வாழ்க பொர்ச்சி! வாழ்க பொர்ச்சி!

32 comments:

அது சரி(18185106603874041862) said...

எந்த பின்னூட்டமும் மட்டுப்படுத்தப்படாது...ஆனால், பின்னூட்டமிடுபவர்கள் தயவுசெய்து எல்லை தனிமனித தாக்குதல்களை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

பழமைபேசி said...

வணக்கம்; தங்கள் மனநிலையை ஒட்டி கருத்துச் சொல்லாதவர்களைச் சாடும் வினவு தோழர்களின் போக்கினால் நானும் முன்னர் பாதிக்கப்பட்டவன் ஆனேன். மன உளைச்சலுக்கு ஆளானவன். அவ்வகையில், சகபதிவர், சகோதரி கலகலப்பிரியாவைக் குறிப்பிட்டு இருந்தார்களேயானால், எனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------

அடுத்து, நர்சிம் அவர்களது எழுத்து பற்றி:

அவர் ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, அவ்வட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார் என நினைக்கிறேன். ஒட்டு மொத்த பதிவுலகமும், ரோசா வசந்த் என்பவரைக் கும்மு கும்மு என்று கும்மிய போது யாதார்த்தமாக வினா எழுப்பியவன் நான். அப்போதே, நர்சிம் அவர்களை மறைமுகமாகச் சாடி, shame on you Mr.Clean எனச் சொல்லி இருந்தேன். இப்போது அந்த Mr.Clean என்பதே Clean ஆகிவிட்டது.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
வணக்கம்; தங்கள் மனநிலையை ஒட்டி கருத்துச் சொல்லாதவர்களைச் சாடும் வினவு தோழர்களின் போக்கினால் நானும் முன்னர் பாதிக்கப்பட்டவன் ஆனேன். மன உளைச்சலுக்கு ஆளானவன். அவ்வகையில், சகபதிவர், சகோதரி கலகலப்பிரியாவைக் குறிப்பிட்டு இருந்தார்களேயானால், எனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
//

வாங்கண்ணே..

நீங்கள் குறிப்பிடும் இடுகை எனக்கும் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது. பழமைபேசி சொல்ல வருவது வேறு என்ற வகையில் அங்கு பின்னூட்டம் இட்டதும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், எந்த இடுகை என்று தான் நினைவில் இல்லை.

அந்த இடுகையிலும் கலகலப்ரியாவை இழுத்திருந்ததாக ஞாபகம். அழித்தொழிப்பு கொள்கையின் டிஜிட்டல் வடிவமாகவே வினவு இணைய தளத்தை எடுத்துக் கொள்ள முடிகிறது.

கலகலப்ரியா said...

நடுநிலையிலிருந்து எழுதி இருக்கிறீர்கள் அதுசரி... இந்தப் பக்குவம் ஏன் மற்றவர்களுக்கு வருவதில்லை... ப்ச்ச்...


பழமைபேசி அவர்களின் ஆதரவிற்கு என் நன்றியும்...

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
அடுத்து, நர்சிம் அவர்களது எழுத்து பற்றி:

அவர் ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, அவ்வட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார் என நினைக்கிறேன். ஒட்டு மொத்த பதிவுலகமும், ரோசா வசந்த் என்பவரைக் கும்மு கும்மு என்று கும்மிய போது யாதார்த்தமாக வினா எழுப்பியவன் நான். அப்போதே, நர்சிம் அவர்களை மறைமுகமாகச் சாடி, shame on you Mr.Clean எனச் சொல்லி இருந்தேன். இப்போது அந்த Mr.Clean என்பதே Clean ஆகிவிட்டது.

//

ஆஹா...நீங்கள் இட்ட அந்த இடுகையில் உங்களுடன் முரண்பட்டதும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் இந்த Mr.Clean விஷயம் ஞாபகம் இல்லை.

ஆனால், அந்த குறிப்பிட்ட சம்பவத்தை பொறுத்த மட்டில், நான் இன்னமும் உங்களுடன் முரண்படுகிறேன் :))

பழமைபேசி said...

//அந்த குறிப்பிட்ட சம்பவத்தை பொறுத்த மட்டில், நான் இன்னமும் உங்களுடன் முரண்படுகிறேன் :))//

பணிவு வேறு; குனிவு வேறு!!
முரண் வேறு; முறைச்சல் வேறு!!

பணிவுடன்,
பழமைபேசி.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//அந்த குறிப்பிட்ட சம்பவத்தை பொறுத்த மட்டில், நான் இன்னமும் உங்களுடன் முரண்படுகிறேன் :))//

பணிவு வேறு; குனிவு வேறு!!
முரண் வேறு; முறைச்சல் வேறு!!

பணிவுடன்,
பழமைபேசி.

//

அடடா... நாலு வரி சொன்னாலும் நச்சுன்னு சொன்னீங்க போங்க...

அதே...நாம் இருவரும் பல விஷயங்களில் முரண்படுகிறோம் என்றே நினைக்கிறேன்...ஆனால் கண்டிப்பாக முறைப்பது இல்லை :)) அதே போல, நாம் யாருக்கும் குனிவதும் இல்லை!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
நடுநிலையிலிருந்து எழுதி இருக்கிறீர்கள் அதுசரி... இந்தப் பக்குவம் ஏன் மற்றவர்களுக்கு வருவதில்லை... ப்ச்ச்...


பழமைபேசி அவர்களின் ஆதரவிற்கு என் நன்றியும்...

//

நன்றி ப்ரியா...

பழமைபேசிக்கு நானும் நன்றி சொல்கிறேன். ஏனெனில் எத்தனை முரண்பட்டாலும் அவர் தரம் தாழ்ந்து தாக்குதல் செய்பவர் அல்ல. அவரளவு பக்குவம் வர நான் இன்னமும் முயல வேண்டியிருக்கிறது.

அர டிக்கெட்டு! said...

பழைய பஞ்ஞாங்கம் என்று பதிவில் வினவும்'பழமைவாயன்' என்று பின்னூட்டத்திலும் நான் சொன்னதும் ... தேவடியா என்று நர்சிம் சொன்னதும் குழுந்தையை கொல்ல கார்க்கி மிரட்டல் விடுத்ததும் ஒன்று...
சந்தனமுல்லையும் பாதிக்கப்பட்டவர், பழமைபேசியும் பாதிக்கப்பட்டவர் அடடே என்னா நடுவு நிலைமை...

ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாசக்கணக்காக நியாபகத்தில் வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம்பும் உங்களிடம இருப்பது பணிவா ? வெறுப்பா??

வினவை திட்டுவது போல தினமும் உங்களை ஒருவன் திட்டினால் உங்கள் எதிர்வினை நர்சிமை விட கொடுமையாயிருக்கும் போலிருக்கிறதே .. பதிவுலகம் ஜாக்கிரதை

பழமைபேசி said...

//அர டிக்கெட்டு! said...
பழைய பஞ்ஞாங்கம் என்று பதிவில் வினவும்'பழமைவாயன்' என்று பின்னூட்டத்திலும் நான் சொன்னதும் ... தேவடியா என்று நர்சிம் சொன்னதும் குழுந்தையை கொல்ல கார்க்கி மிரட்டல் விடுத்ததும் ஒன்று...
சந்தனமுல்லையும் பாதிக்கப்பட்டவர், பழமைபேசியும் பாதிக்கப்பட்டவர் அடடே என்னா நடுவு நிலைமை...
//

தோழருக்கு வணக்கம். நான் எவ்வகையிலும், நர்சிம் செய்ததை நியாயப்படுத்தவில்லை.

மேலும், உங்கள் மனநிலைக்கொப்ப இடுகை இடாதவர்களைச் சாடுவதைத்தான் குறை கூறுகிறேன்.

மேலும் நீங்கள், அச்சொற்களை மீண்டு பாவித்து மனதை ஆற்றிக் கொண்டிருக்கிறீர்களே? என்னால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டானால் சரி. நன்றி!!

அர டிக்கெட்டு said...

பழமை பேசி, அப்பிடயே அடுத்த 2 பாராவுக்கும் பதில் சொல்லுகண்ணோவ்
அப்புறமா உங்களுக்கு நான் பதில் சொல்றேனுங்

@@@ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாசக்கணக்காக நியாபகத்தில் வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம்பும் உங்களிடம இருப்பது பணிவா ? வெறுப்பா??

வினவை திட்டுவது போல தினமும் உங்களை ஒருவன் திட்டினால் உங்கள் எதிர்வினை நர்சிமை விட கொடுமையாயிருக்கும் போலிருக்கிறதே .. பதிவுலகம் ஜாக்கிரதை@@@

Sabarinathan Arthanari said...

//என்ன தான் காரணம் சொன்னாலும் புனைவு என்ற பெயரில் நீங்கள் செய்திருப்பது நியாயப்படுத்தவே முடியவில்லை.//

//மாவோ பேரை சொன்னால் சோறு போட எங்களுக்கு ஆள் இல்லை. நாங்களே வேலை பார்த்து தான் எரிக்க வேண்டும்//

//இந்துப் பதிவர் கலகலப்ரியா என்ற வீராங்கனை என்ற அடைமொழி வேறு. நர்சிம்மின் புனைவு கேவலம் என்றால், தங்களின் கருத்துக்கு மாற்றான கருத்து கொண்டவர் என்று குறிவைத்து தாக்குவதற்கு என்ன பெயர்?? வர்க்க விரோதி?? அழித்தொழிப்பு?? இருக்கலாம்...அது தானே பொர்ச்சி!//

அதே வழிமொழிகிறேன்

பழமைபேசி said...

//ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாசக்கணக்காக நியாபகத்தில் வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம்பும் உங்களிடம இருப்பது பணிவா ? வெறுப்பா??
//

ஏங்க, நான் தினமுமா சொல்றேன் இதை? அவங்களைப்பத்தில் சொல்லும் போது, என்னோட பாதிப்பு நினைவுக்கு வராதுங்களா? வெறுப்பா?? சொல்லுங்க, நான் வெறுப்பா உங்களை என்ன சொல்லி இருக்கேன்?? தயவு செய்து சொல்லுங்க!!


//வினவை திட்டுவது போல தினமும் உங்களை ஒருவன் திட்டினால் உங்கள் எதிர்வினை நர்சிமை விட கொடுமையாயிருக்கும் போலிருக்கிறதே .. பதிவுலகம் ஜாக்கிரதை
//

அனாவசிய ஒருத்தர் அடுத்தவரை எதுக்குங்க திட்டணும்??

அர டிக்கெட்டு! said...

@@ஏங்க, நான் தினமுமா சொல்றேன் இதை? அவங்களைப்பத்தில் சொல்லும் போது, என்னோட பாதிப்பு நினைவுக்கு வராதுங்களா? வெறுப்பா?? சொல்லுங்க, நான் வெறுப்பா உங்களை என்ன சொல்லி இருக்கேன்?? தயவு செய்து சொல்லுங்க!!@@


அய்யா பழமைபேசி, பழைய பஞ்சாங்கம் என்ற ஒரு வார்த்தை உங்களுக்கு மாதக்கணக்கில் மன உளைச்சலை கொடுக்கும் போது. ''வாய்ப்பு'' கிடைக்கும் போதெல்லாம் அதை நீங்கள் நினைவுகூறும் ''பாதிக்க்கப்பட்ட'' நீங்கள்

ஒரு சக பதிவுலக பெண்ணை, தேவடியா என்று தறக்குறைவாக ஒரு ஆள் எழுதுகிறான் என்றால் அந்த பெண்ணுக்கு அது வாழ்க்கை முழுவதும் மாறாத ரணமாகிப்போகாதா??? ... ஒரு ''பாதிக்கப்பட்ட'' உங்களுக்கு அது புரியவேண்டாமா???

அதற்கு எதிர்வினை புரியவேண்டிய நேரத்தில் ஒரு மொக்கை பதிவு போடும் அநியாயம் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த அநீதியை வினவு தட்டிக்கேட்டால் அதற்கு ''ஏற்கனவே பாதிக்கபட்டவர்'' என்ற முறையில் உங்கள் ஆதரவு எங்கே???

ரவுத்திரம் பழகும் பயங்கரவாதி என தன்னை அழைத்துக்கொள்ளும் பெண்ணை வீராங்கனை என்று சொல்வது ''மன உளைச்சலை'' கொடுக்கும் விசயமாக பாவித்து அங்கே ஆதரவு கரம் நீட்டும் நீங்கள் சந்தனமுல்லையின் மன உளைச்சலுக்காக எழுதிய வினவுக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை??? மாறாக '' தங்கள் மனநிலையை ஒட்டி கருத்துச் சொல்லாதவர்களைச் சாடும்'' என வினவை விமரிசிக்கிறீர்கள் .. அதே நேரத்தில் வக்கிரபுத்தி கொண்ட நர்சிமை @@@@ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, அவ்வட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார் என நினைக்கிறேன்.@@ என வருடிக்கொடுக்கிறீர்கள்

அதாவது பழைய பஞ்சாங்கம் என்று சொன்னவன் மன உளைச்சல் கொடுப்பவன், தேவடியா முன்டை என்று சொன்னவன் வட்டத்துக்குள் சிந்திப்பவாக இருப்பவன்...

உங்கள் மனம் இயங்கும் இந்த போக்கை நினைக்கயில் குமட்டிக்கொண்டு வருகிறது ஐயா.

அர டிக்கொட்டு! said...

இங்கே சாதியையே வினவுதான் கண்டுபிடித்ததாக அளக்கும் அது சரி அவர்களே!!!

நர்சிம் எழுதிய ‘பூக்காரி’யில் //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.// என்று வருகிறது.
இது உங்களுக்கு சாதிய திமிராக தெரியவில்லையா???

குடுகுடுப்பை said...

நர்சிம்மிற்கு எனது கண்டனங்கள்.பதிவோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.

அர டிக்கெட்டு ! said...

பழமை பேசி எழுதியிருக்கும் பதிவில் நர்சிமை விமர்சித்திருக்கும் காமராஜையும் வினவையும் விமர்சித்திருக்கிறாறே தவிர மருத்துக்கு கூட நர்சிமை விமர்சிக்கவில்லை.. என்னா தோழமை!

பழமைபேசி said...

//அர டிக்கெட்டு ! said...
பழமை பேசி எழுதியிருக்கும் பதிவில் நர்சிமை விமர்சித்திருக்கும் காமராஜையும் வினவையும் விமர்சித்திருக்கிறாறே தவிர மருத்துக்கு கூட நர்சிமை விமர்சிக்கவில்லை.. என்னா தோழமை!
//

முடியலை.... ஏங்க, வருத்தத்தின் மூல காரணமே அவர்தானே? கடுவா, முடுவான்னு சொல்லிச் சொன்னாத்தான் விமர்சன்ம்னு ஏத்துகுவீங்களா?

அப்புறம் இனியொன்னு, நாம எல்லாருமே தோழர்கள்தான்! ஏன், பிரிச்சிப் பாக்குறீங்க??

அர டிக்கெட்டு ! said...

வினவும் காமராஜூம் தேவையில்லாமல் சாதி பற்றி பேசுவதாக் எழுதும் பழமைபேசி @@@பூக்காரியில் ---
அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார்
இது உங்கள் கண்களுக்கு படவேயில்லையா??? என்ன கொடுமை இது???

வருத்தத்துக்கு காரணம் அவர் என்பதை திட்டி எழுதவேண்டாம், வினவையும் காமராஜையும் விமரசனமாக பேர்சொல்லி குறிப்பிட்டது போல எழுதியிருக்கலாமே???

vasu balaji said...

1. பகடியல்ல பிரச்சினை. அதை வெளியிட நர்சிம்மிடம் விஜி பேசியதாக சொல்லியிருந்தார்.
2.பின்னூட்டங்கள்தான் பிரச்சினை.எழுத்து விமரிசனம் மட்டுமேயிருந்திருந்தால் இந்த பின் விளைவு இருந்திருக்காது.
3. நர்சிம் தண்ணி வாங்கிக் கொடுத்து, காசு செலவு பண்ணி பின்னூட்டமும் பிரபலமும் ஆவதாக, ரூம் போட்டு அழுது எதிர் இடுகை போடவேண்டாம என்று நக்கலாக தனிமனித தாக்குதலை தொடுத்தவர் அவர்.
4. நர்சிம் பணம் கொடுத்து பாராட்டு பெற்றதாகச் சொன்னால் குற்றம் சுமற்றப்படுபவர் அவர் மட்டுமல்ல, படித்த நாமும்.
5. நான் தவறாமல் ஓட்டு போடுவேன் நர்சிம்முக்கு. பல நேரம் பின்னூட்டத்தில் பாராட்டியிருக்கிறேன். பாவி மனுசன் ஒத்தரூபா காசு தரலையே. கணக்கு பார்த்து செட்டில் பண்ண சொல்லுவாங்களா சந்தனமுல்லை.
6. அந்த இழவு குறைந்தபட்சம் எதிர்வினை என்ற நேர்மை இருந்தாலாவாது சட்டப்படி தண்டனைக்கு உட்பட்டதானாலும் இமோஷனல் அவுட்பர்ஸ்ட் என்றாவது ஒதுங்கிப் போகலாம். புனைவு என்ற முக்காடு போர்த்துவேன் என்றால் அந்தக் கேவலங்கெட்ட இடுகை எழுதும் அளவுக்கு நர்சிமின் வக்கிரம் வெளிப்பட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. யாரைக்குறித்து என்பதில் சந்தேகமில்லாத போது புனைவு என்பது கேவலமான வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.
-----------------------------------
வினவு மற்றும் சந்தனமுல்லைக்கு ஆதரவான பதிவுகளுக்கு

1.அவரின் மன உளைச்சல் தானாகத் தேடிக்கொண்டது. ஒரு திட்டமிடலுடன், நரித்தனத்துடன், நர்சிம்மைச் சீண்டவேண்டும் என்ற நோக்குடன், வெள்ளியிரவே பலரின் வேண்டுகோளைப் புறக்கணித்து கும்மியபோது இதற்குத் தயாராகவே இருந்திருக்கவேண்டும்.
2.சின்ன அம்மணி போன்ற பதிவர்களை பலிகடா ஆக்கியது சதி.
3.சகட்டுமேனிக்கு நர்சிம்மின் வாசகர்களைக் கொச்சைப்படுத்தியது ப்ரொவோகேஷன்.
4.இது எனக்குப் புரிகிறபோது இவருக்கு ஆதரவாக குரல்கொடுக்காமல் இருப்பது தவறா?
5.வினவு சம்பந்தமில்லாமல் சந்தனமுல்லைக்கு நிகழ்ந்த அநீதி என்று இதர பதிவர்களை வம்புக்கிழுப்பது அவர்கள் கூறும் காரணப்படியே எந்த விதத்திலும் சரியில்லை.
வினையை விடு. விளைவைக் கிழி என்பது என்ன நியாயம்?

கலகலப்ரியா said...

//வினையை விடு. விளைவைக் கிழி என்பது என்ன நியாயம்?//

அடச்சீ... இவங்க கிட்ட என்ன சார் நியாயம் பேசிக்கிட்டு... புள்ள எவ்ளோ அர்ர்ர்ர்ர்ர்ர்றிவாப் பேசிக்கிட்டிருக்குது... உங்களுக்கு இந்த அர்ர்ர்ர்ரி..றிவுக்கு பதில் சொல்ல முடியும்ன்னு நினைக்கிறீங்க... நாம எல்லாம் மொக்கைங்க சார்... அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கட்டுப்படியாவது.. அதுக்கெல்லாம் வேற தகுதிச் சான்றிதழ்.. அவங்க கிட்டயே வாங்கணும்...

Joe said...
This comment has been removed by the author.
அர டிக்கெட்டு ! said...

@@நானறிந்த வரையில் சிவராமன், சுந்தர் ஆகியோர் சாதி வெறியற்றவர்கள். (ஒரு முறை சந்தித்திருக்கிறேன், இனிமையாக, கனிவாக நடந்து கொள்ளும் மனிதர்கள் அவர்கள்)

அவர்கள் இந்த சாதிக்காரர்கள், அதனால் இவருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று வினவு எழுதுவது அவசியமில்லாதது.@@

ஜோ வினவு அப்படி எழுதவில்லை, சிவராமன் மற்றும் ஜ்யோவ்ரோம் ஆகிரோயை சாதி பார்ப்பவரில்லை என்னதான் எழுதியிருகிகறார்

Joe said...
This comment has been removed by the author.
அர டிக்கெட்டு ! said...

@@@அவர்கள் நல்லவர்கள் தான் எனினும், நரசிம் எழுதிய புனைவுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாதது அவர் பார்ப்பனர்கள் என்பதால் தான் என்று எழுதியிருந்தது.ஏன் எல்லாவற்றிற்கும் சாதிய வர்ணமடிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.

இத்தனைக்கும் சிவராமன் அந்தப் புனைவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.@@@

மீண்டும் சொல்கிறேன் அப்படி எழுதப்படவில்லை. தயவு செய்து பதிவை மற்றொருமுறை பார்க்கவும்

நாடோடி இலக்கியன் said...

ந‌ர்சிம் அந்த‌ கேவ‌லமான‌ இடுகையை எழுதியிருக்க‌க் கூடாது.அதே போன்று அவ‌ரை அப்ப‌டி ஒரு கேவ‌ல‌த்தைச் செய்ய‌ தூண்டிய‌ ச‌ந்த‌ன‌முல்லைக்கு ஆத‌ர‌வாக‌ வ‌ரும் ப‌திவுக‌ள் சாதி ரீதியாக‌ பிர‌ச்ச‌னையின் போக்கை இழுத்துச் செல்வ‌தும் க‌ண்ட‌ன‌த்திற்குரிய‌து.

ராஜ நடராஜன் said...

இருவர் நேராக கோபப்பட்டுக்கொள்வதற்கும் பதிவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மூளை வாய்க்கும்,கரத்துக்கும் நேராக கட்டளையிடுவதும் மூளை சொல்வதை பில்டர் செய்து சரி,தவறுகளை உணற தட்டச்சு செய்து பொதுவில் வைக்கும் வரையிலான கால அவகாசம்.

தலைப்பு சரியாகவே இருக்கிறது.

Joe said...

அவரைத் தொடர்ந்து சீண்டியதால் தான் அப்படி எழுதினார் என்று சொன்னாலும், நரசிம் அந்தளவுக்கு ஆபாசமாக எழுதியிருக்க வேண்டாம். தேவையில்லாமல் அவர் மீதிருந்த நல்ல மரியாதையைக் கெடுத்துக் கொண்டார்.

சண்டைகள் முடிந்து விரைவில் சமாதானம் உண்டாகும் என்று நம்புவோம்!

Unknown said...

நரசிம் எழுத்து மிகவும் துரதிஷ்டமானது.....அவர் தவிர்த்திருக்கலாம்... :(((((((((((((((((((((((
கனத்த மனதோடு என் கண்டனம் :(:(:(
தப்பு இரண்டு பக்கமும் இருக்கும் போல :(:(:(...முடிந்தால் இரண்டு தரப்பும் பேசி சரி செய்து கொள்ளலாம்.....
கூடிய விரைவில் அனைத்தும் சுபமாக முடிந்தால் நல்லது...இல்லையேல் நஷ்டம் வாசகர்களாகிய நமக்கு தான்...
இதில் கூட தோண்டி துருவி ஜாதியை கண்டுபிடித்து அரசியல் செய்யும் வினவு குழுமத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...:(:(:(:(
அவர்கள் சில பதிவர்களின் பெயர்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கும், அவர்களை இழிவுபடுத்தியதற்கும் என் கண்டனங்கள்...

Santhini said...

//// சேற்றில் புரளும் எருமைக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லை////
சென்ற பதிவில்தான் தாங்கள் எருமையாகிவிட்டதை கவிதையில் உலகுக்கு அறிவித்த நினைவு. (just kidding :)
உங்களின் இந்த பதிவை படித்துவிட்டு, தலையும் புரியாமல் வாழும் புரியாமல் அரைநாளை வீணடித்தோ அல்லது மிக உபயோகமான விதத்திலோ...பிரச்சினைகளின் மூலங்களை படித்து கிழித்துவிட்டு......மீண்டும் வந்து இந்த பின்னூட்டம்.
பதிவுலகு என்பது ...... Just a digital form of the usual human mind. It could be a good warning for me ........for not to be fooled by the fancy writings.
மேலும் தங்கள் நடுநிலை பாராட்டுதலுக்குரியது. Good Job.

அது சரி(18185106603874041862) said...

பின்னுட்டம் இட்டு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. கஞ்சிக்கு வழி செய்ய வேண்டியிருப்பதால், விரிவான பதில்கள் நாளை சொல்கிறேன்.

ஜோ, உங்களுக்கு மட்டும் ஒரு அவரச பதில். சிவராமனும் ஜ்யோவ்ராம் சுந்தரும் நர்சிம்மை ஆதரிப்பதாக வினவில் சொல்லவில்லை. அவ்வாறு பொருள் வரும்படி எழுதியிருந்தால் அது என் எழுத்தின் பிழை. ஆனால், நர்சிம் அவர்களை குருவாக மதிப்பதற்கு காரணமே (நான் உட்பட) பலருக்கு தெரியாத அவர்களின் ஜாதியே காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Joe said...

நன்றி அது சரி. அதனால் தான் எனது பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.

எனினும் வினவின் எதிர்வினையில் கூறப்பட்ட பல விஷயங்கள் அபத்தமானவை. அதற்கு எனது கண்டனங்கள்.
எந்த பதிவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று நான் (நாம்?) அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.