Tuesday, 9 March 2010

ஷூத்தலை சாத்தானாரும் விண்ணைத் தாண்டி வருவாயாவும்...

பன்னி கடித்தவனிடம் எப்படி கடித்தது எங்கே கடித்தது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான்...அது மாதிரி எனக்கும் எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை..

சரி, கருமத்தை எங்கே ஆரம்பித்தால் என்ன?? எங்கிருந்து ஆரம்பித்தாலும் சாக்கடை சாக்கடை தான்...ஆனால் இந்த படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்று ஒரு த்ராபையான க்ராபிக்ஸ் உடன் ஆரம்பிக்கிறது....அவ்தார் போன்ற படங்கள் க்ராஃபிக்ஸில் கலக்கும் போது இப்படி கேவலமாகவும் க்ராஃபிக்ஸ் செய்யலாம் என்று நிரூபிக்கிறார்கள்....அடுத்து ஷகிலா போஸ்டர் தின்ற கழுதை தானே ஷகிலா என்று நினைத்துக் கொண்டு வளைந்து நெளிந்து போஸ் கொடுப்பது போல "யங் சூப்பர் ஸ்டார்" சிலம்பரசன் என்று டைட்டில் கார்டு....லிட்டில் சூப்பர் ஸ்டாரிலிருந்து ப்ரமோஷன்...இன்னும் கொஞ்ச நாள் கழித்து "கெழட்டு டூப்பர் ஸ்டார்" என்று டைட்டில் போடுவார்கள்...

சரி கதை?? அப்படி ஒன்றும் யாருக்கும் தெரியாத கதை இல்லை...ஊரில் எந்த வேலைக்கும் போகாது, எதையும் ஒழுங்காக செய்யாது அப்பன் ஆத்தா காசில் தின்று கொண்டு, என் கஷ்டத்தை எவனுமே புரிஞ்சிக்க மாட்டேங்குறான் என்று தாடி வளர்த்துக் கொண்டு திரியும் பல்லாயிரம் தறுதலைகளை ஒரு குவாட்டர் வாங்கிக் கொடுத்து "ஏண்டா, இப்படி திரியறே" என்று ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கிரையென பின்மாயும் காலம் வரை அவன் அவளை எப்படியெல்லாம் காதலித்தான் என்று கதை சொல்லிக் கொண்டே இருப்பான்...

அவ அன்னிக்கி அப்படி லைட்டா திரும்பி பார்த்தா பாரு....சான்ஸே இல்ல...எனக்கு ரெண்டு வாரம் தூக்கமே இல்லடா...லவ்வுன்னா சும்மா அப்படியே தூக்கணும் மச்சான்...அப்படியே பொரட்டி போடணும்...அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் மச்சான்...இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பான்....கடைசியாக வாந்தியும் எடுப்பான்...

கவுதம் மேனனின் வாந்தி தான் கதை....உங்களுக்கு இருக்கும் ஒரே வேலை சன் டிவி சீரியல் பார்ப்பது தான் என்றால் இந்த கதைக்காக மாதம் ஒரு மானாட மயிலாட, வாரம் ஒரு பாராட்டு விழா என்று பொது வாழ்வில் உருகும் கருணாநிதி போல மெழுகாக உருகலாம்...என்ன கருமம்...எனக்கு வேறு வேலைகள் இருந்து தொலைப்பதால் என்னால் முடியவில்லை...ஒரு முழம் ஏறினால் பத்தடி சறுக்குகிறது....காலையில் சரியாக இருக்கும் மார்க்கெட் மதியம் "பொரட்டி போடுகிறது"...இல்லாவிட்டால் அப்படியே எதிர்பக்கமாக "தூக்குகிறது"
..டவுசர் கிழிந்து தொங்குகிறது....நாளைக்கு மார்க்கெட் திறந்தால் அந்த கிழிந்த டவுசரும் இருக்குமா இல்லை கோமணம் தான் மிஞ்சுமா என்று தெரியவில்லை...இதில் கவுதம் மேனனின் "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" வாந்தியை எப்படி துடைக்க?

சரி, கதை தான் அப்படி தீராக்குடிகாரனின் வாந்தி போல இருக்கிறது என்றால்...."வெரலு வித்த" காட்டப்படாது என்று சொல்லி விட்டார்கள் போல...சிம்பு என்ற சூப்பர் இஸ்டாரு ரொம்பவே நடிக்க ட்ரை பண்ணுகிறார்...இந்தா நடிக்கப் போறேன்...இந்த நடிக்கப் போறேன் என்று....கடைசி வரை! த்ரிஷா இப்படியே நடித்தால்(!) இன்னும் இரண்டு படத்தில் அன்னை தெரசா வேடத்தில் புக் செய்ய க்யூவில் நிற்பார்கள்...பிடித்து வைத்த இரண்டு ப்ளாஸ்டிக் பொம்மை போல வந்து போவதற்கு பெயர் ஒலகத் தரமான நடிப்போ என்னவோ?? எனக்கு ஒலகப்படம், ஒலக எளக்கியம் என்று ஒரு எளவும் தெரியாததால் தெரிந்தவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு இந்த படத்தை பார்க்க டிக்கட் வாங்கி தருகிறேன்...

கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி.......ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்...படம் முழுக்க வருவது இது தான்......எண்ணிப் பார்த்தால் மூன்று மணி நேர படத்தில் ஐம்பது லட்சம் கார்த்திக்கும், நாற்பது லட்சம் ஜெஸ்ஸியும் இருக்கலாம்...கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல...மீண்டும் மீண்டும் அதே தான்....எழுத்து இயக்கம் கவுதம் வாசுதேவ் மேனன்!

ஊர் பக்கம் ஏதோ சொல்வார்கள்...பன்றியோட சேந்த கன்றும் ‍‍‍______(Fill up the blanks) தின்னுச்சாம்....கதை தான் இப்படி குடிகாரனின் பொலம்பலாக இருக்கிறது என்றால் எசைப் பொயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை...எசையெல்லாம் மறந்து விட்டதா இல்லை இந்த வாந்திக்கெல்லாம் எசைக்க வேண்டியிருக்கிறதே என்று பக்கத்து வீட்டு எருமையை கீபோர்டில் ஓட விட்டு விட்டு அவர் ஓடி விட்டாரா என்று தெரியவில்லை...(ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஓனர் செம்மொழி கண்டு செந்தமிழ் வளர்க்கும் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்!)...படத்தில் கன்னா பின்னாவென்று சத்தம் ச்சே...இசை...வருகிறது...கோமணப் பெண்ணே கோமணப் பெண்ணே என்று ஒரு பாடல்...என்னடா எழவு இது...இப்பிடில்லாமா பாட்டு எழுதுவாய்ங்க என்று கவனித்து கேட்டால் அது கோமணப் பெண்ணே இல்லை...ஓமனப் பெண்ணே!....

கதை...நடிப்பு...இசை...சரி இதெல்லாம் தான் நித்யானந்தானோட ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா....படத்துல சென்னை பசங்களோட லைஃப் ஸ்டைல காட்டியிருக்காங்கன்னு ஏதோ ஒர் பதிவில படிச்ச ஞாபகம்....எனக்கும் (கூட) சென்னை பத்தி கொஞ்சம் தெரியும்கிறதுனால சரி, அப்படி எதுனா காட்டினா நல்லாத் தான் இருக்கும்னு நானு வெய்ட் பண்ணேண்...அப்படி என்னத் தான் காட்றாய்ங்கன்னா...கே.எஃப்.சி...அப்புறம் ஒரு ஃபிகர் கூட ஒக்காந்து பேசுறான் பேசுறான் பேசுறான் பேசுறான்...பேசிக்கிட்டே இருக்கான்....ங்கொய்யால...இது தான் சென்னை பசங்க லைஃப் ஸ்டைல்னா, அந்த கருமாந்திர சென்னைல பொறந்து வளராததுக்கு பழனி முருகனுக்கு நான் பத்து ஜென்மத்துக்கு காவடி தூக்கணும்!

படத்தில எல்லாமே நெகடிவ்வா...ஒண்ணு கூட பாசிட்டிவ் இல்லியான்னு கேட்டா....இருக்கு...கதாநாயகனோட (ம்ம்ம்க்கும்...பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய கதாநாயகன்!) ஃப்ரண்டா ஒரு கேமரா மேன் வராரு...அவரு பேசுறது சென்னைத் தமிழ் மாதிரி இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.....ஆனா எலிஃபன்டுக்கு கர்சீப்ல கோமணம் கட்ன மாதிரி....மூணு மணி நேர படத்துல ரொம்ப கொஞ்ச நேரம்....

என்ன எழவுடா இது...ஒன் பொலம்பல படிக்கிறதுக்கு அந்த கருமம் பிடிச்ச படத்தையே பார்த்துடலாம் போல இருக்கே...இப்ப நீ என்ன தான் சொல்றன்னு கேக்குறீங்களா?? சரி, நீங்க கேக்குறதுன்னால சொல்றேன்...

படம் குப்பை...பின்பக்கம் துடைக்க கூட உதவாத ப்ளாஸ்டிக் குப்பை....

ஆனா, உங்களுக்கு ஒலகத்துல வேற எந்த கவலையும் இல்ல...வேற எந்த பிரச்சினையும் இல்ல...நீங்க உலகத் தமிழர்...ஆனந்த விகடன் தான் உங்க இதயத் துடிப்புன்னா ஒங்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்....கலையோட உச்சம்.....காதலோட மிச்சம்...(இன்ன பிற கருமாந்திரங்களை நீங்களே ஃபில்லப் செஞ்சுக்கங்க...ஒங்களுக்குத் தான் வேற வேலை இல்லியே!)

மீதிப் பேருக்கு...இந்த படத்தை பார்க்கிறதை விட, தண்ணி லாரில அடிபட்டு செத்துப் போகலாம்! விண்ணைத் தாண்டி வருவாயா...சனியனை மண்ணைத் தோண்டி புதை! அவ்ளோ தான்....

========================
கடைசியாக ஒரு முக்கிய குறிப்பு:

எனக்கு உண்மையில் என் நண்பர்களை குறித்து பயமாயிருக்கிறது...என் மீது என்ன கடுப்போ தெரியவில்லை, பயங்கர கொலைவெறியில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது....இல்லாவிட்டால் இந்த த்ராபையான படத்தை "நல்லாருக்கு" என்று பார்க்க சொல்வார்களா??

இந்த கலைக்காவியத்தை பார்த்து விட்டு ரஞ்சிதா படம் பார்த்த நித்யானந்தன் போல டென்ஷனாகி "இனிமே செய்வியா...இனிமே செய்வியா" என்று என் ட்ரைனரால் அடித்துக் கொண்டதில் ஷூவின் பாட்டம் பிய்ந்து தொங்குகிறது...என் தலை ஷூ ஷேப்புக்கு மாறிவிட்டது...தலை போனா பரவால்லை...பட்...டியர் ஃப்ரண்ட்ஸ்...ஷூ வாங்க ஒரு £273.55 அனுப்பி வைங்க!

(ஆமா, சாரு மட்டும் தான் ரெண்டாயிரத்துக்கு ஜட்டி போடுவாரா? நான் போட்ற ஷூவே இருபதாயிரம்...பட்...நான் ஒரு ஏழை பிச்சைக்கார பதிவன்னு சொன்னா நீங்க நம்பித் தான் ஆகணும்)
========================

66 comments:

அது சரி said...

குத்துங்க எசமான் குத்துங்க.....படம் பார்த்து நீங்களும் நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தா ஓட்டு குத்துங்க...படம் ரொம்ப பிடிச்சிருந்தா கண்ணாடிய பாத்து கரெக்டா ஒங்க மூக்குல குத்துங்க...

பழமைபேசி said...

//.நான் ஒரு ஏழை பிச்சைக்கார பதிவன்னு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும்)//

நம்பிட்டோம்....

அதே வசனம் திரும்பத் திரும்ப வந்த போது சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.....

அண்ணாச்சி,

இதான் நான் சொன்ன வசனம் படப் பார்த்து முடிச்சதும்....

சேலையில கதாநாயகியப் பாக்குற வாய்ப்பே கிடைக்குறது. ஆனா, இதுல நிறைய காட்சிகள்... அதுக்கும், நாங்குடுத்த $8க்கும் சரியாப் போச்சி.... இஃகிஃகி!!

பிரியமுடன்...வசந்த் said...

நிதின் ஒரு சீன் கூடவாய்யா பிடிக்கல?

இதுக்கெதுக்கு துப்பாக்கீ எல்லாம் தூக்கி போஸ் கொடுக்குறீரு...

இந்த இலக்கியவாதிகளோட விமர்சன்ம் எல்லாம் இப்டித்தான் இருக்கு ஏன்?

சீ ஷூவானதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்...

பழமைபேசி said...

//படம் பார்த்து நீங்களும் நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தா ஓட்டு குத்துங்க...படம் ரொம்ப பிடிச்சிருந்தா கண்ணாடிய பாத்து கரெக்டா ஒங்க மூக்குல குத்துங்க.//

இங்கதான் நீங்களும் தப்பு செய்யுறீங்க....

இடுகையின் உள்ளீடுக்கும் ஓட்டுப் போடலாம்....

இடுகையின் படைப்பாற்றல் திறத்துக்கும் ஓட்டுப் போடலாம்.

”படம் பார்த்துப் பிடிச்சிருந்தது; நீங்க எழுதியிருக்குற விதமும் பிடிச்சிருந்தது!”ன்னு நினைச்சும் ஓட்டுப் போடுவாங்க மக்கள்! அப்ப என்னா செய்வீங்க?

நாஞ் சொன்னது சரின்னு, அதிக சொடுக்கு கிடைச்ச பதிவராட்டமும், அதிக தொடருவார் கிடைச்ச பதிவராட்டமும் கீழ மேல குதிப்பீங்களா?? இஃகிஃகி!!

அப்படிக் குதிச்சீங்கன்னா, நீங்களும்.... இஃகிஃகி!!

கோவி.கண்ணன் said...

சூப்பர் விமர்சனம்.

மக்கள் ஏஆர் ரஹ்மான் மீது இருந்த அபிமானத்தில் இந்தப் படத்தை ஓவராக புகழ்ந்து விமர்சனம் எழுதிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என்னிக்காவது ஒரு நாள் மேனன் தமிழ் சினிமாவுக்கு நான் தான் காதலை சொல்லிக் கொடுத்தேன் என்று வழக்கமான மலையாளி வசனம் பேசினாலும் பேசுவார்.

நசரேயன் said...

யோவ் என்ன கிழிச்சி தொங்க வுட்டிடுயரு..உங்க விமர்சனம் ரெம்ப தாமதா வந்ததால தான் படம் ஹிட் ன்னு நினைக்கிறேன்.

நசரேயன் said...

//இடுகையின் படைப்பாற்றல் திறத்துக்கும் ஓட்டுப் போடலாம்.//

இந்த வகை நான்

Nanum enn Kadavulum... said...

திட்டுவதற்கு தனியாய் எங்கேனும் பயிற்சி எடுத்தீர்களா, அதுசரி அவர்களே?
காது கிழிந்து விடும் போலிருக்கிறது. எங்களூரில் படத்தை ஒழுங்காய் நேரத்துக்கு போடுவதிலேயே பித்தலாட்டம் என்பதால் ,
நாங்கள் பெரும்பாலும் தமிழ்ப்பட புறக்கணிப்பு செய்ய வேண்டிய நிலை. ஆதலால் படம் பார்த்துவிட்டு, உங்கள் கருத்தோடு ஒத்து ஊத முயற்சிக்கிறோம்

//
பழமைபேசி said...
//.நான் ஒரு ஏழை பிச்சைக்கார பதிவன்னு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும்)//

நம்பிட்டோம்....
//

அண்ணே,

சிம்பு நடிச்சிருக்காருன்னு சொன்னதையே நான் (எல்லாம் விதி) நம்பிட்டேன்...அப்புறம் இதை நீங்க நம்பறதில தப்பே இல்ல...

//
அதே வசனம் திரும்பத் திரும்ப வந்த போது சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.....
//

நீங்க நெம்ப டீசன்ட்டானவரு...பட் எனக்கு வண்டை வண்டையா வந்துச்சி...இன்னும் வந்துக்கிட்டே இருக்கு...:0(((

//
அண்ணாச்சி,

இதான் நான் சொன்ன வசனம் படப் பார்த்து முடிச்சதும்....

சேலையில கதாநாயகியப் பாக்குற வாய்ப்பே கிடைக்குறது. ஆனா, இதுல நிறைய காட்சிகள்... அதுக்கும், நாங்குடுத்த $8க்கும் சரியாப் போச்சி.... இஃகிஃகி!!
//

எலி மருந்து எட்டு டாலர்ல கெடைச்சா என்ன எறநூறு பவுண்ட் ஆனா என்ன?? பாய்ஸன் பாய்ஸன் தான்!

அது சரி said...

//
பிரியமுடன்...வசந்த் said...
நிதின் ஒரு சீன் கூடவாய்யா பிடிக்கல?
//

வசந்த் அண்ணே...நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்?? பிடிச்ச சீனு அந்த கேமரா காரரு வர்றது தான்...ஆனா சோலோவா அவருக்கு சீன் இல்ல...

//
இதுக்கெதுக்கு துப்பாக்கீ எல்லாம் தூக்கி போஸ் கொடுக்குறீரு...
//

அது பழைய துப்பாக்கிங்ணா...சும்மா தீவாளிக்கு வாங்கினது...

//
இந்த இலக்கியவாதிகளோட விமர்சன்ம் எல்லாம் இப்டித்தான் இருக்கு ஏன்?
//

என்னது இலக்கியவாதியா?? யாரைச் சொல்றீங்க?? எனக்குன்னாலும் என்னோட ஷூ போச்சேன்னு கோவம்...ஒங்களுக்கு என் மேல என்ன கொலை வெறி?? விட்ருங்ணே...நான் இப்பிடியே ஓடிப் போயிடறேன்...

//
சீ ஷூவானதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்...

//

என்ன பண்றது....எறநூத்தி எழுவத்தி மூணு பவுண்டாச்சே...

அது சரி said...

//
பழமைபேசி said...

”படம் பார்த்துப் பிடிச்சிருந்தது; நீங்க எழுதியிருக்குற விதமும் பிடிச்சிருந்தது!”ன்னு நினைச்சும் ஓட்டுப் போடுவாங்க மக்கள்! அப்ப என்னா செய்வீங்க?
//

படம் பார்த்து பிடிச்சிருந்தா...ம்ம்ம்ம்...என்னத்தை சொல்ல...:0))) அப்படி ஒரு வேளை படமும் பிடிச்சிருந்து நான் எழுதுனதும் பிடிச்சிருந்தா அவங்க ஒண்ணு படத்தை பார்க்கலை இல்லை நான் எழுதினதை படிக்கலைன்னு அர்த்தம்...ரெண்டுல எது கரெக்டு?? :0)))

//

நாஞ் சொன்னது சரின்னு, அதிக சொடுக்கு கிடைச்ச பதிவராட்டமும், அதிக தொடருவார் கிடைச்ச பதிவராட்டமும் கீழ மேல குதிப்பீங்களா?? இஃகிஃகி!!

அப்படிக் குதிச்சீங்கன்னா, நீங்களும்.... இஃகிஃகி!!
//

அய்யோ..சாமி...ஆளை விடுங்க...ஏற்கனவே டவுசர் உருவிக்கிட்டு போயிரும் போலருக்கு...இதுல குதிச்சா வெளங்கும்!

அது சரி said...

//
கோவி.கண்ணன் said...
சூப்பர் விமர்சனம்.

மக்கள் ஏஆர் ரஹ்மான் மீது இருந்த அபிமானத்தில் இந்தப் படத்தை ஓவராக புகழ்ந்து விமர்சனம் எழுதிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
//

நன்றி கோவி...அப்படித் தான் இருக்குமோன்னு நினைக்கிறேன்...ஏன்னா பாட்டு ஒண்ணும் சொல்லிகிற மாதிரி இல்ல...

//
என்னிக்காவது ஒரு நாள் மேனன் தமிழ் சினிமாவுக்கு நான் தான் காதலை சொல்லிக் கொடுத்தேன் என்று வழக்கமான மலையாளி வசனம் பேசினாலும் பேசுவார்.
//

அதுக்கென்ன...சொன்னாலும் சொல்லுவார்...என்னை விட்டா தமிழ்ல டைரக்டர்ஸும் இல்ல...நடிகர்களும் இல்லன்னு கூட சொல்லுவார்...

அது சரி said...

//
நசரேயன் said...
யோவ் என்ன கிழிச்சி தொங்க வுட்டிடுயரு..உங்க விமர்சனம் ரெம்ப தாமதா வந்ததால தான் படம் ஹிட் ன்னு நினைக்கிறேன்.

//

நம்ப முடியலை...நிஜமாவே இந்த படம் ஹிட்டா??

அது சரி said...

//
நசரேயன் said...
//இடுகையின் படைப்பாற்றல் திறத்துக்கும் ஓட்டுப் போடலாம்.//

இந்த வகை நான்

//

நெம்ப டேங்ஸூ :0))))

அது சரி said...

//
Nanum enn Kadavulum... said...
திட்டுவதற்கு தனியாய் எங்கேனும் பயிற்சி எடுத்தீர்களா, அதுசரி அவர்களே?
காது கிழிந்து விடும் போலிருக்கிறது.
//

இதுக்கு பயிற்சி வேற எடுக்கணுமா?? படத்தை பார்த்தா தானா வரும் :0)))

//
எங்களூரில் படத்தை ஒழுங்காய் நேரத்துக்கு போடுவதிலேயே பித்தலாட்டம் என்பதால் ,
நாங்கள் பெரும்பாலும் தமிழ்ப்பட புறக்கணிப்பு செய்ய வேண்டிய நிலை. ஆதலால் படம் பார்த்துவிட்டு, உங்கள் கருத்தோடு ஒத்து ஊத முயற்சிக்கிறோம்
//

அய்யோ...உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி?? ஒத்துக்காட்டியும் பரவால்ல, இந்த படத்தை பார்க்காதீங்க...அவ்ளோ தான் நான் சொல்லுவேன்...

பித்தனின் வாக்கு said...

அண்ணே, நான் தமிழ்ப்படங்கள் பொதுவாக படங்கள் பார்ப்பதே இல்லை. இரண்டு மணி நேரம் ஒரு இடத்தில் குத்த வைச்சு உக்கார பொறுமை, எருமை எல்லாம் எனக்குக் கிடையாது. ஆதலால் எனக்கு படம் பற்றி ஒன்னும் தெரியாது. ஆனா உங்க விமர்சனம் சூப்பரு. நாங்க நீங்க ஒரு பிச்சைகார பதிவர்ன்னு, ஒத்துக்கிறேம்.
நெக்ஸ்ட் மீட் பண்ணுவேம். வரட்டா!!!!!

subra said...

இந்த படத்தை பார்க்கிறதை விட, தண்ணி லாரில அடிபட்டு செத்துப் போகலாம்! விண்ணைத் தாண்டி வருவாயா...சனியனை மண்ணைத் தோண்டி புதை! அவ்ளோ தான்....

sooparo suuuuuuuuuuuper

முகிலன் said...

இந்த 275.55 பவுண்ட் எங்க அனுப்பனும்??

உம்ம டவுசர் கிழிஞ்சதோ இல்லையோ, இங்க கவுதம், சிம்பு டவுசர் கிழிஞ்சி கந்தல் கந்தலாத் தொங்குது.. :))

அசால்ட் ஆறுமுகம் said...

அது ஷூத்தலை சாத்தானார் இல்லை சீழ் தலை சாத்தனார்...... அவருக்கு அப்படி பேர் வர காரணம் என்னவென்றால் தான் எழுதும்போது தமிழ் பிழை எதாவது விட்டால் எழுத்தாணி கொண்டு தலையில் குத்திவிடுவார். அதனாலே தலையில் சீழ் வந்துவிட்டது பெயரும் வந்துவிட்டது.........

எம்.எம்.அப்துல்லா said...

//அசால்ட் ஆறுமுகம் said...
அது ஷூத்தலை சாத்தானார் இல்லை சீழ் தலை சாத்தனார்...... அவருக்கு அப்படி பேர் வர காரணம் என்னவென்றால் தான் எழுதும்போது தமிழ் பிழை எதாவது விட்டால் எழுத்தாணி கொண்டு தலையில் குத்திவிடுவார். அதனாலே தலையில் சீழ் வந்துவிட்டது பெயரும் வந்துவிட்டது.........

//

இப்படி ஒரு அப்பாவி மனுஷனா?!??!?! இல்லை அசால்ட்டா தலைப்பை மட்டும் பார்த்துட்டு பின்னூட்டம் போட்டுட்டீங்களா??

வானம்பாடிகள் said...

/டவுசர் கிழிந்து தொங்குகிறது/
/நாளைக்கு மார்க்கெட் திறந்தால் அந்த கிழிந்த டவுசரும்/
/ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா./
/ஷூவின் பாட்டம் பிய்ந்து தொங்குகிறது.../

/ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்.../

கிழிஞ்சது போ!

வானம்பாடிகள் said...

/சாரு மட்டும் தான் ரெண்டாயிரத்துக்கு ஜட்டி போடுவாரா? /

இது குசும்பா போட்டதா? இல்ல உள்குத்தா:o))). நித்தி டவுசரு 1200 ரூ ல ஆரம்பிச்சது நீங்க 2000னா ஒரு வேளை ஏலத்துக்கு வந்துடுச்சோ?

வானம்பாடிகள் said...

என்னிய மாதிரி படமும் பார்க்காம, நொந்தும் போகாம இருக்கிறவங்க என்ன பண்றது பாஸ். அதனால ஓட்டு போட்டு பின்னூட்டமும் போட்டுட்டேன்:o)))

வானம்பாடிகள் said...

ஏஞ்சாமி. உங்கள மாதிரி ஆளுக்குத்தான அந்த மன்னிப்பாயான்னு சாங் போட்டிருக்காங்க? அப்புடியுமா இந்தக் கொலைவெறி=))))

வானம்பாடிகள் said...

அப்புறம் பாஸ் இந்த இடுகைல விண்டோஸ திட்டலையே. விண்டோஸ் 7 நல்லாருக்கா.

வானம்பாடிகள் said...

/ஷகிலா போஸ்டர் தின்ற கழுதை தானே ஷகிலா என்று நினைத்துக் கொண்டு வளைந்து நெளிந்து போஸ் கொடுப்பது போல/

இது ரோட் ரோலர் டக்குன்னு லெஃப்ட்ல திரும்பிட்டான்னு சொல்றா மாதிரி இல்லை? என்னாச்சு நிதின்?

கலகலப்ரியா said...

அடடா... அருமையான விமர்சனம்...
நல்ல வேளை நான் இன்னும் படம் பார்க்கலை... (என்னோட பஸ் மெஸேஜ் யாராவது படிச்சா அழிச்சிடுங்கப்பா... அது நான் இல்லை..) ஷூ நான் வாங்கி அனுப்பறேன்... இங்க 29.90$-க்கு trainer கிடைக்கும்...

சிம்பு புடிக்காது... த்ரிஷா புடிக்காது... மேனன் புடிக்காது... இப்டி ஜெபம் பண்ணிக்கிட்டே படம் பார்க்கப் போனா இப்டித்தான் ஆவுமோ... எனக்கென்னமோ... பரவால்லாமதான் "பன்னி" இருக்காங்.... இல்ல... இருப்பாங்கன்னு தோணுது...

அப்ப ஞான் வரட்டே மோனே...

வானம்பாடிகள் said...

//கலகலப்ரியா said...

சிம்பு புடிக்காது... த்ரிஷா புடிக்காது... மேனன் புடிக்காது... இப்டி ஜெபம் பண்ணிக்கிட்டே படம் பார்க்கப் போனா இப்டித்தான் ஆவுமோ...//

கூடவே ரெட்ஜயண்ட், கருணாநிதி, நித்தியானந்தம் டவுசரு, இன்ன பிற இருக்கே:))

ராஜ நடராஜன் said...

தலைப்புக்கு சம்பந்தமில்லாமிலே படம் ஓடுதேன்னு பார்த்தேன்.படம்ன்னா க்ளைமாக்ஸ் இருக்குமுன்னு எப்படியோ தலைப்பை ஒட்ட வச்சிட்டீங்க.

பின் குறிப்பு:உங்களுக்குப் பின்னி பெடல் சுத்தறதுக்கு ஹர்ட் லாக்கர் ஆஸ்கரெல்லாம் இருக்கறப்போ இதுதான் மாட்டுச்சா?அடப் பாவமே!

கபீஷ் said...

275.55 பவுண்ட் விலைல ட்ரெயினரா, அவ்ளோ பெரிய பி.கா பதிவரா நீங்க? வசூலை அப்டேட் செய்யவும். முகிலன் அனுப்பியிருப்பார்னு நினைக்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

"ஏண்டா, இப்படி திரியறே" என்று ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கிரையென பின்மாயும் காலம் வரை அவன் அவளை எப்படியெல்லாம் காதலித்தான் என்று கதை சொல்லிக் கொண்டே இருப்பான்...

:)))))) ரசித்தேன்

சென்ஷி said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

தமிழ்ச்செல்வன் said...

அருமையான விமர்சனம்.

அப்படியே போயி வினவு.காமிலும் ஒரு விமர்சனம் உள்ளது அதைப்படிக்கவும்.

நன்றி

Senthil Kumar said...

//உங்களுக்கு இருக்கும் ஒரே வேலை சன் டிவி சீரியல் பார்ப்பது தான் என்றால் இந்த கதைக்காக மாதம் ஒரு மானாட மயிலாட, வாரம் ஒரு பாராட்டு விழா என்று பொது வாழ்வில் உருகும் கருணாநிதி போல மெழுகாக உருகலாம்//

நல்லா இருக்கு

தியாவின் பேனா said...

என்னங்க நீங்க படம் பார்க்கலாம்தானே

குடுகுடுப்பை said...

பன்னி கடித்தவனிடம் எப்படி கடித்தது எங்கே கடித்தது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான்..//

இதுக்கு பன்னி கடிபட்டவன் யாரையாவது பாத்திருக்கீங்களா? அவன் திரு திரு வென்று முழிப்பானா? ஒரு டவுட்டுதான்.

அது சரி said...

//
பித்தனின் வாக்கு said...
அண்ணே, நான் தமிழ்ப்படங்கள் பொதுவாக படங்கள் பார்ப்பதே இல்லை. இரண்டு மணி நேரம் ஒரு இடத்தில் குத்த வைச்சு உக்கார பொறுமை, எருமை எல்லாம் எனக்குக் கிடையாது. ஆதலால் எனக்கு படம் பற்றி ஒன்னும் தெரியாது. ஆனா உங்க விமர்சனம் சூப்பரு. நாங்க நீங்க ஒரு பிச்சைகார பதிவர்ன்னு, ஒத்துக்கிறேம்.
நெக்ஸ்ட் மீட் பண்ணுவேம். வரட்டா!!!!!

//

பித்தன் அண்ணே,

நானும் ஒங்கள மாதிரி தான் செவனேன்னு படம் கொடம்னு எதுவும் பாக்காம இருந்தேன்...சில ஃப்ரண்ட்ஸ் ரூம் போட்டு ப்ளான் பண்ணி இந்த படத்தை பார்க்க வச்சிட்டாங்க......நானும் எவ்ளோ நேரம் வலிக்காத மாதிரி அடி வாங்குறது?? அதான் அழுதுட்டேன்....

அது சரி said...

//
subra said...
இந்த படத்தை பார்க்கிறதை விட, தண்ணி லாரில அடிபட்டு செத்துப் போகலாம்! விண்ணைத் தாண்டி வருவாயா...சனியனை மண்ணைத் தோண்டி புதை! அவ்ளோ தான்....

sooparo suuuuuuuuuuuper

//

நன்றி சுப்ரா...

என்ன ஒண்ணு, எனக்கு இது முன்னாடியே தெரியாம போச்சி...இல்லாட்டி பேசாம ஒரு குப்ப லாரி முன்னாடி குப்புற படுத்துருப்பேன்...

அது சரி said...

//
முகிலன் said...
இந்த 275.55 பவுண்ட் எங்க அனுப்பனும்??
//

Account Number: 0000001
Sort Code: 20-31-49
Account Name: டவுசர் கிழிஞ்சோர் பெனிஃபிட் ஃபண்ட்

எமது வங்கி: பார்க்லேஸ் வங்கி...

சீக்கிரம் அனுப்புங்க முகிலன்...ஜிம்முக்கு போயி ரெண்டு நாளாச்சி...என் கிட்ட இருந்ததே ஒரு ட்ரைனர்...அதுவும் பிஞ்சி போச்சி...

அது சரி said...

//
அசால்ட் ஆறுமுகம் said...
அது ஷூத்தலை சாத்தானார் இல்லை சீழ் தலை சாத்தனார்...... அவருக்கு அப்படி பேர் வர காரணம் என்னவென்றால் தான் எழுதும்போது தமிழ் பிழை எதாவது விட்டால் எழுத்தாணி கொண்டு தலையில் குத்திவிடுவார். அதனாலே தலையில் சீழ் வந்துவிட்டது பெயரும் வந்துவிட்டது.........

//

அசால்ட் அண்ணே,

என்னைப் பார்த்தா ஒங்களுக்கே பாவமா இல்ல?? நானே இந்த படத்தை பார்த்துட்டு நொந்து போயிருக்கேன்...நீங்க வேற டரியல கெளப்பாதீங்க...

நான் சீத்தலை சாத்தனாரை சொல்லலீங்ணா...அவரு தமிழுக்காக தலையை புண்ணாக்கிக்கிட்டவரு...

நான் என்னைச் சொன்னேன்...

அது சரி said...

//
எம்.எம்.அப்துல்லா said...

இப்படி ஒரு அப்பாவி மனுஷனா?!??!?! இல்லை அசால்ட்டா தலைப்பை மட்டும் பார்த்துட்டு பின்னூட்டம் போட்டுட்டீங்களா??

//

எனக்கும் அதே டவுட்டு தாங்ணா...

சீத்தலை சாத்தனாரை அவமானப்படுத்திய பொறுக்கி பன்னாடை பதிவன்னு யார்னா எனக்கு எதிரா கெளம்பாம இருந்தா சரி...

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
/டவுசர் கிழிந்து தொங்குகிறது/
/நாளைக்கு மார்க்கெட் திறந்தால் அந்த கிழிந்த டவுசரும்/
/ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா./
/ஷூவின் பாட்டம் பிய்ந்து தொங்குகிறது.../

/ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்.../

கிழிஞ்சது போ!

//

அப்பாடா....ஒருத்தராவது அதை கரெக்டா கேட்டீங்ளே...

படம் பார்க்கலைங்கிற தெம்புல பேசிக்கிட்டு இருக்கீங்க...படம் பாருங்க.....அப்புறம் தெரியும்...இதெல்லாம் எதுக்கு ரிப்பீட் ஆவுதுன்னு...

பழமைபேசி said...

அது சரி அண்ணாச்சி, வலையில! இஃகிஃகி!!

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
/சாரு மட்டும் தான் ரெண்டாயிரத்துக்கு ஜட்டி போடுவாரா? /

இது குசும்பா போட்டதா? இல்ல உள்குத்தா:o))). நித்தி டவுசரு 1200 ரூ ல ஆரம்பிச்சது நீங்க 2000னா ஒரு வேளை ஏலத்துக்கு வந்துடுச்சோ?

//

அய்யோ சாமி...

நான் எங்க நித்தி டவுசரை பாத்தேன்...பாத்தவங்களே அது சேவைன்னு பேட்டி குடுக்கிறாங்க...என்னைப் போயி கேக்குறீங்களே...

நான் சொன்னது சாருவோட ஜட்டிங்க...நித்தியோட டவுசர் இல்ல..

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
என்னிய மாதிரி படமும் பார்க்காம, நொந்தும் போகாம இருக்கிறவங்க என்ன பண்றது பாஸ். அதனால ஓட்டு போட்டு பின்னூட்டமும் போட்டுட்டேன்:o)))

//

ம்ஹூம்ம்ம்ம்ம்....என்னால பெருமூச்சு தான் விட முடியுது சார்...படம் பார்க்காம நீங்க ஜாலியா இருக்கீங்க...எனக்கு அந்த கொடுப்பினை இல்லியெ...

(இருக்கட்டும் இருக்கட்டும்...எப்பனா மெட்ராஸ் வந்தா கத்திய காண்பிச்சாவது ஒங்களை இந்த படத்தை பத்து தடவை பார்க்க வைக்கலை எம் பேரு அதுசரி இல்ல...)

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
ஏஞ்சாமி. உங்கள மாதிரி ஆளுக்குத்தான அந்த மன்னிப்பாயான்னு சாங் போட்டிருக்காங்க? அப்புடியுமா இந்தக் கொலைவெறி=))))

//

கொரவளைய கடிச்சிப்புட்டு மன்னிப்பாயான்னு கேட்டா என்னத்த சொல்றது எப்படி சொல்றது??

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
அப்புறம் பாஸ் இந்த இடுகைல விண்டோஸ திட்டலையே. விண்டோஸ் 7 நல்லாருக்கா.

//

கரெக்ட்...வின்டோஸ் 7 நல்லாருக்குன்னு யாரோ சொன்னாங்க...அது யாருன்னு மறந்து போச்சி....வந்தப்புறம் வச்சிக்கறேன்...

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
/ஷகிலா போஸ்டர் தின்ற கழுதை தானே ஷகிலா என்று நினைத்துக் கொண்டு வளைந்து நெளிந்து போஸ் கொடுப்பது போல/

இது ரோட் ரோலர் டக்குன்னு லெஃப்ட்ல திரும்பிட்டான்னு சொல்றா மாதிரி இல்லை?

//

திரும்பிடிச்சின்னு ரோடு ரோலர் தான் நினைச்சிக்குது...அங்கியே தான் நிக்குதுன்னு நமக்கு தான தெரியும்??

அது சரி said...

//
கலகலப்ரியா said...
அடடா... அருமையான விமர்சனம்...
நல்ல வேளை நான் இன்னும் படம் பார்க்கலை... (என்னோட பஸ் மெஸேஜ் யாராவது படிச்சா அழிச்சிடுங்கப்பா... அது நான் இல்லை..)
//

என்னது...இன்னும் பார்க்கலியா... அப்ப நான் தான் சோதனை பெருச்சாளியா ஆகிட்டேனா??? எங்க அம்மா அப்பவே சொன்னாங்க...எந்த படம் பார்த்தாலும் சிம்பு படம் பாக்காதன்னு...கேக்காம இப்படி நாசமா போயிட்டேன்...

//
ஷூ நான் வாங்கி அனுப்பறேன்... இங்க 29.90$-க்கு trainer கிடைக்கும்...
//

வெந்த புண்ணுல வெங்காயத்த தேய்க்காதீங்க.....நானே ஷூ போச்சேன்னு கவலைல இருக்கேன்...இந்த படம் கடிச்ச கடி பத்தாதுன்னு நீங்க ஷூ கடி வேற வாங்க சொல்றீங்க...அதுக்கு நான் பனிக்கடி வாங்கியே செத்துப் போறேன்...

//
சிம்பு புடிக்காது... த்ரிஷா புடிக்காது... மேனன் புடிக்காது... இப்டி ஜெபம் பண்ணிக்கிட்டே படம் பார்க்கப் போனா இப்டித்தான் ஆவுமோ...
//

நான் எங்கங்க ஜெபம் பண்ணேன்?? அவய்ங்க தான் கார்த்திக் ஜெஸ்ஸி கார்த்திக் ஜெஸ்ஸி கார்த்திக் ஜெஸ்ஸின்னு ஜெபம் பண்றாய்ங்க..."அவ பேரு ஜெஸ்ஸி ஜெஸ்ஸி"ன்னு கூட ஒரு வசனம் வருது...

இவய்ங்க என்ன ஜெபம் பண்ணாலும், பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இவர்களை மன்னியாதீர்...இந்த படம் நல்லாருக்கு என்று சொன்னவர்களையும் மன்னியாதீர்...

//
எனக்கென்னமோ... பரவால்லாமதான் "பன்னி" இருக்காங்.... இல்ல... இருப்பாங்கன்னு தோணுது...

//

இதுக்கு பேசாம‌ நீங்க என்னை பன்னிய வச்சி கடிக்க விட்டு கொன்னுருக்கலாம்...

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
//கலகலப்ரியா said...

சிம்பு புடிக்காது... த்ரிஷா புடிக்காது... மேனன் புடிக்காது... இப்டி ஜெபம் பண்ணிக்கிட்டே படம் பார்க்கப் போனா இப்டித்தான் ஆவுமோ...//

கூடவே ரெட்ஜயண்ட், கருணாநிதி, நித்தியானந்தம் டவுசரு, இன்ன பிற இருக்கே:))

//

நித்தியானந்தன் டவுசரு அவருக்கே பிடிக்கலை...

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
தலைப்புக்கு சம்பந்தமில்லாமிலே படம் ஓடுதேன்னு பார்த்தேன்.படம்ன்னா க்ளைமாக்ஸ் இருக்குமுன்னு எப்படியோ தலைப்பை ஒட்ட வச்சிட்டீங்க.
//

என்னத்தை ஒட்ட வச்சி என்னண்ணே புண்ணியம்?? கிழிஞ்சது கிழிஞ்சது தான?? நான் என்னோட ஷூவை சொன்னேன்...

//
பின் குறிப்பு:உங்களுக்குப் பின்னி பெடல் சுத்தறதுக்கு ஹர்ட் லாக்கர் ஆஸ்கரெல்லாம் இருக்கறப்போ இதுதான் மாட்டுச்சா?அடப் பாவமே!
//

அய்யோ சாமி...ஆளை விடுங்கண்ணே...நான் இனிமே சத்தியமா எந்த படமும் பார்க்க மாட்டேன்...

அது சரி said...

//
கபீஷ் said...
275.55 பவுண்ட் விலைல ட்ரெயினரா, அவ்ளோ பெரிய பி.கா பதிவரா நீங்க?
//

நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய பி.கா. இல்லீங்க கபீஷ்...அது என்னோட தீவிர வாசகர் ஒருத்தர் வாங்கிக் கொடுத்தது...(சொன்னா நம்புங்கப்பா...)

//
வசூலை அப்டேட் செய்யவும். முகிலன் அனுப்பியிருப்பார்னு நினைக்கிறேன்
//

முகிலன் அனுப்புறதா?? கேக்குறது தான் பெரிசா இருக்கே தவிர இன்னும் ஒரு பைசா வரலை....

அது சரி said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
"ஏண்டா, இப்படி திரியறே" என்று ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கிரையென பின்மாயும் காலம் வரை அவன் அவளை எப்படியெல்லாம் காதலித்தான் என்று கதை சொல்லிக் கொண்டே இருப்பான்...

:)))))) ரசித்தேன்

//

வருகைக்கு நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...

படத்தை பார்த்துட்டு சொல்லுங்க.....ச்சே...வேணாம் வேணாம்...அப்புறம் நீங்க எனக்கு ஆட்டோ அனுப்புவீங்க...

அது சரி said...

//
சென்ஷி said...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

//

நன்றி சென்ஷி...

நீங்களும் படம் பார்த்துட்டு நொந்து போயிட்டீங்களா??

அது சரி said...

//
தமிழ்ச்செல்வன் said...
அருமையான விமர்சனம்.

அப்படியே போயி வினவு.காமிலும் ஒரு விமர்சனம் உள்ளது அதைப்படிக்கவும்.

நன்றி

//

நன்றி தமிழ்ச் செல்வன்...

வினவு படிச்ச ஞாபகம் இருக்கு...ஆனா இல்லை..மறுக்கா போய் படிச்சி பார்க்கிறேன்...

அது சரி said...

//
Senthil Kumar said...
//உங்களுக்கு இருக்கும் ஒரே வேலை சன் டிவி சீரியல் பார்ப்பது தான் என்றால் இந்த கதைக்காக மாதம் ஒரு மானாட மயிலாட, வாரம் ஒரு பாராட்டு விழா என்று பொது வாழ்வில் உருகும் கருணாநிதி போல மெழுகாக உருகலாம்//

நல்லா இருக்கு

//

நன்றி செந்தில் குமார்...

அது சரி said...

//
தியாவின் பேனா said...
என்னங்க நீங்க படம் பார்க்கலாம்தானே

//

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்டுங்க தியா...உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலாம்...

(ஆனாக் கூட பார்க்கலாம்னு சொல்ல எனக்கு மனசு வர மாட்டேங்குது...என்ன செய்ய??)

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
பன்னி கடித்தவனிடம் எப்படி கடித்தது எங்கே கடித்தது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான்..//

இதுக்கு பன்னி கடிபட்டவன் யாரையாவது பாத்திருக்கீங்களா? அவன் திரு திரு வென்று முழிப்பானா? ஒரு டவுட்டுதான்.

//

கேள்வி கரெக்டு...அப்படித் தான் முழிப்பான்...போய் கேட்டுப்பாருங்களேன்...:0))))

பழமைபேசி said...

சட்டாம்புள்ளையானதுக்கு வாழ்த்துகள் அண்ணாச்சி; வங்கி வேலை இல்லையா இனிமே?? இஃகிஃகி!

ராஜ நடராஜன் said...

புது வடை ஏதாவது சூடா கிடைக்குமுன்னு மறுபடியும் வந்தேன்.சரக்கு மாஸ்டர் இப்பதான் தயாராகுதுன்னு சொல்லிட்டார்.அதனால பக்கத்துல கடை ஏதாவது தேடுறேன்.ஆங்க்!குடுகுடுப்பை கொண்டியாரக்கள்ளி விட்டுப் போச்சு.அங்கே.

குடுகுடுப்பை said...

மீண்டும் ஒருமுறை படித்து வயிறு வலிக்க சிரிச்சேன்.

நேத்து 99செண்டுக்கு ஒரிஜினல் டிவிடி வாங்கி பாத்தேன், நல்ல வேலை கண்ணு வலி இருந்ததால பாதி தூங்கிட்டே பாத்தேன்.

Sabarinathan Arthanari said...

same bloodnga

mudiyala

ஜெகநாதன் said...

படத்தோட ஒரே அட்வான்டேஜ்: படத்தை மலையாளத்தில் அப்டியே ரிலீஸ் பண்ணலாம்.
இந்த அட்வான்டேஜ்ஜால நம்ம உசுருக்குத்தான் ஏகப்பட்ட... ​டேமேஜு!

மங்களூர் சிவா said...

ஹா ஹா
:)))

மங்களூர் சிவா said...

/

சீத்தலை சாத்தனாரை அவமானப்படுத்திய பொறுக்கி பன்னாடை பதிவன்னு யார்னா எனக்கு எதிரா கெளம்பாம இருந்தா சரி...
/

இம்புட்டு சிம்ப்பிளாவா திட்டுவோம்???