Monday, 8 February 2010

மரங்கொத்தி...! - 2


மரங்கொத்தி...! - 2

முந்திய பாகங்கள்: பாகம் 1
வழக்கமாக நான் குவாட்டருக்கு மேல் குடிப்பதில்லை...ஆனால்....வழக்கமாக நான் சென்னைக்கு ட்ரைனிலும் போவதில்லை...இன்றைக்கு அதிகமாகவே கிட்டத்தட்ட ஒரு ஹாஃப் என்று சொல்லும் அளவுக்கு குடித்திருந்தேன்....போதை பிடிக்கும் என்பதை விட, எனக்கு ரயில் பயணங்கள் பிடிப்பதில்லை...நான் தூங்க வேண்டும்...

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பீ...இந்த சீட் தான்...."

அவனுக்கு முப்பத்தி ஐந்து வயதிருக்கலாம்...நெடுநெடுவென்று நல்ல உயரம்...அதற்கேற்ற சரியான உடல்வாகு...கோதுமை நிறம் என்று சொல்லும் கறுப்புக்கும் சுண்ணாம்பு வெண்மைக்கும் இடைப்பட்ட நிறம்...குனியும் போது முன் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டான்...மீசை இல்லா முகத்தில் லேசான தாடி...அதிக சதையின்றி டைட்டான கன்னங்கள்...கூர்மையாய் மூக்கு....உதடுகள் மட்டும் கொஞ்சம் கறுப்பாக...சிகரெட்டாயிருக்கலாம்...கைகளில் நான் ரொம்ப காஸ்ட்லியாக்கும் என்று சொல்லும் வாட்ச்....

ஏன் எதற்கு என்ற விளக்கம் அபத்தம் என்றாலும்...எதிரில் வந்து உட்கார்ந்த அவனை எனக்கு பார்த்த நிமிடம் பிடித்துப் போனது...

"ஸாரிங்க...மொதல்ல தப்பான பெட்டியில ஏறிட்டேன்...அதான்...டபுள் செக் பண்ணிக்கிட்டேன்...எழுப்பிட்டேன் போல...தூங்கிட்டு இருந்தீங்களா...."

தியேட்டர்ல பாக்கறவனை "என்ன பாஸ், சினிமாவுக்கா" என்று கேட்பது...கல்யாணத்தில் பார்ப்பவனை "என்னங்க கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க போல" என்பது....தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி "தூங்கிகிட்டு இருக்கீங்களா..."இவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது...எனக்கு சிரிப்பாக இருந்தது...

"இல்ல பாஸ்...பரவால்ல...நானும் இப்பத் தான் ஏறினேன்....."

"நல்லவேளை....நான் கூட தூங்கறவரை எழுப்பிட்டோம்னு நினைச்சிட்டேன்...நீங்க மதுரையா..."

"ஆமா...அண்ணா நகர்...நீங்க..."

"நான்...ம்ம்ம்...வைசாக்...விசாகப்பட்னம்...பொறந்தது திருச்சி பக்கம்...ஆனா அம்மா அப்பா ரொம்ப நாளாவே ஆந்திராவுல செட்டிலாயிட்டாங்க..."

பொதுவாக எனக்கு பேசப் பிடிப்பதில்லை...எங்கேனும் பயணம் செய்தால் எந்த இலக்குமில்லாது சிந்தனையை அலைய விட்டு வெளியே படர்ந்திருக்கும் இருட்டை வெறிப்பது பிடிக்கும்....எல்லாவற்றையும் மறைக்கும் இருள் தான் எத்தனை அழகு....

ஆனால் அவனைப் பார்த்தால் அப்பாவி போல இருந்தான்...கேட்காமலேயே அம்மா அப்பா பூர்வீகம் எல்லாம் வருகிறது...இன்னும் கேட்டால் இவன் கொள்ளுத் தாத்தாவின் சின்ன வீடு எங்கே இருந்தது என்று அட்ரஸ் சொன்னாலும் சொல்வான்...

எனக்கு கொஞ்சமாய் ஆர்வம் ஏற்பட்டது....

"அப்ப உங்களுக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லுங்க...பாக உன்னாரா??"

அவன் பெரிதாய் சிரித்தான்....

"ஹஹ்ஹாஹ்ஹா....உன்னாரு உன்னாரு....எனக்கு மதர் டங் தெலுங்கு தாங்க...ரெட்டியாரு.......ஆனா திருச்சி பக்கம் தான் பூர்வீகம்...உங்களுக்கும் தெலுங்கு தெரியும் போலருக்கே..."

"ச்சேச்சே....அப்படியெல்லாம் இல்ல பாஸ்...சும்மா ஒரு ரெண்டு மூணு தடவை ஆந்திரா போயிருக்கேன்....அதனால கொஞ்சம் வார்த்தை தெரியும்..."

"சும்மா ஆந்திரான்னா எப்படி...எங்க போனீங்க....புட்டபர்த்தி...திருப்பதி...இல்ல பெத்தபுரா...."
அவன் கண்ணடித்தான்...

பெத்தபுரா...அட...ஆளு நம்ம டைப் போலருக்கே...

"ச்சேச்சே...பெத்தபுரால்லாம் இல்ல பாஸ்...கடப்பா...ராஜமுந்திரி...அப்புறம் அனந்தப்பூர்....நான் க்ரானைட் தேடி போனேன்..."

"க்ரானைட்டா....எதுக்கு....நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்களா இல்ல சும்மா வீடு கட்டவா..."

"பிஸினஸ் தான்...ஒரு பார்ட்டி க்ரானைட் கேட்டது....சரி, குவாரிலயே வாங்குனா கொஞ்சம் மார்ஜின் நிக்குமேன்னு நான் ஆந்திரா பக்கம் போனேன்....எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்..."

அவன் முகம் பிரகாசமானது....

"எனக்கும் பிஸினஸ் தான்...ஃபேமிலி பிஸினஸ்....டயர் ஃபேக்டரி வச்சிருக்கோம்...வைசாக்ல மூணு ஃபேக்டரி இருக்கு....வைசாக் ரப்பர்ஸ்னு பேரு....இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கோம்...பேரு சொல்லலை பாருங்க...எம் பேரு மதிவாணன்...மதிவாணன்.கே"

எனக்கு ஆச்சரியாக இருந்தது...மதிவாணன்...சுத்தமான தமிழ் பேராச்சே...ஆளு தெலுங்குன்னு சொன்னான்....

எனது கார்டை எடுத்து நீட்டினேன்...

"நான் செந்தில் வேல்...இந்தாங்க என்னோட கார்டு...நீங்க தெலுங்குன்னு சொன்னீங்க...ஆனா பேரு சுத்தமான தமிழ்பேரா இருக்கே...."

சிரித்தான்...எனக்கு ஏனோ மாதவன் ஞாபகம் வந்தது....

"அது ஒண்ணுமில்ல...எங்க தாத்தா அந்த காலத்துல தஞ்சாவூர் பக்கம் எம்.எல்.ஏவா இருந்தாரு...ஒங்களுக்குத் தான் தெரியுமே...நைன்டீன் சிக்ஸ்டீஸ்ல தமிழ்ல பேரு வச்சா அரசியலுக்கு யூஸ் ஆகும்னு....அதான்...சுத்தமான தமிழ்ப்பேரு..."

அரசியல் பேச ஆரம்‍பித்தால் பிரச்சினை என்று நினைத்தானோ என்னவோ...

"ஆமா...இப்ப எங்க போறீங்க...மெட்ராஸ்ல என்ன பிஸினஸ்காரியமா..."

"இல்ல பாஸ்...எனக்கு ரெண்டு வாரத்தில கல்யாணம்...அதான் ஃப்ரண்ட்ஸை பார்த்துட்டு இன்விடேஷன் வைக்க போறேன்..."

"அட....வெரிகுட்....ஹாப்பி மேரீட் லைஃப் செந்தில்...எனக்கெல்லாம் இன்விடேஷன் வைக்க மாட்டீங்களா..."

எனக்கு கூச்சமாக இருந்தது....பார்த்து அரைமணி நேரத்தில் எப்படி இவனால் இவ்வளவு நெருக்கமாக முடிகிறது...

"ச்சே...உங்களுக்கு இல்லாமையா...இந்தாங்க...ஆனா கண்டிப்பா வரணும்..."

"வராம? என்னைப் பத்தி ஒங்களுக்கு தெரியாது செந்தில்...ஓசி சாப்பாடுன்னா ஃப்ளைட் பிடிச்சாவது வந்துடுவேன்...."

"ஹிஹி...பறந்தாவது வந்தா சரி....ஆமா உங்க வொய்ஃப் எங்க...வைசாக்ல இருக்காங்களா?"

"ஆமா...ஆனா இப்ப திருச்சில எங்க ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா...எனக்கு மீனாட்சி கோயில் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை...என்ன இருந்தாலும் எங்காளுங்க கட்டின கோயிலாச்சே....அவளுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை...அதனால மதுரைக்கு அவ வரலை..."

"அப்ப நீங்க மட்டும் தான் மெட்ராஸ் போறீங்களா..."

"இல்ல...அவளும் எம் பொண்ணும் திருச்சில ஜாயின் பண்ணிப்பாங்க...அவங்களுக்குத் தான் இந்த இன்னொரு சீட்...அப்படியே மெட்ராஸ் போய் அங்கருந்து வைசாக் போறதா ப்ளான்...எம் பொண்ணை நீங்க பார்க்கணுமே...நாலு வயசு தான் ஆகுது...செம க்யூட்...செம வாலு...அப்படியே அவங்க அம்மா டைப்...அம்மாவும் பொண்ணும் சேந்துட்டா சமாளிக்க பத்துப் பேர் வேணும்...."

சொல்லும் போதே அவன் கண்களில் சந்தோஷம் தெரிந்தது...ம்ம்ம்...எனக்கும் இப்படி ஒரு க்யூட்டான குட்டிப் பெண்ணும் வாலான மனைவியும் இருந்தா நல்லாத் தான் இருக்கும்.....பார்ப்போம்...

இப்படியே பேசிக் கொண்டு அவன் வாங்கி வந்திருந்த இட்லியை இரண்டு பேரும் ஒரே இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ரயில் மணப்பாறை விராலிமலையை கடந்து திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது....

"இன்னும் கொஞ்ச நேரத்தில திருச்சி வந்துரும் செந்தில்...எப்படா அவங்களைப் பார்ப்போம்னு இருக்கு..."

ந‌ல்ல மனைவி குழந்தை போல நல்ல நட்பும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து தான் வருகிறது...அப்பாவுக்கு கிளியன் அண்ணாச்சி...இன்றிரவு எனக்கு....

நான் அவனை விலக்கி ஜன்னல் வழியாக கண்களை உயர்த்தினேன்...

இருட்டான ஐப்பசி மாத இரவில் பிரம்மாண்டமான நட்சத்திரம் போல விரிந்த திருச்சி நகரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வெகுநாளாய் பிரிந்திருந்த காதலன் போல வேகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.....

எனக்கு திடீரென்று மர‌ங்கொத்தி ஞாபகம் வந்தது...இருள் தான் பனைமரம்...ரயில் தான் மரங்கொத்தி...ரயிலின் எஞ்சின் இந்த இருட்டில் என் முகம் போல இருக்குமா....

========== பறக்கும்...=============

பி.கு. I know, this is another long post, and the story has not moved forward that much...But there is a reason for this particular episode. As this has already become a long post, next one will be published tomorrow....

14 comments:

கலகலப்ரியா said...

ding..

கலகலப்ரியா said...

=)) first comment.. lemme read..

அது சரி said...

For comments...

அது சரி said...

//
கலகலப்ரியா said...
=)) first comment.. lemme read..
//

அட...நானே இப்பத் தான் பின்னூட்ட கயமைத் தனம் செஞ்சேன்...அதுக்குள்ள நீங்க கமெண்ட் போட்டுட்டீங்க...தேங்க் யூ!

நேசமித்ரன் said...

:)

நசரேயன் said...

ரெண்டு பாகமும் படிச்சேன்

கலகலப்ரியா said...

ஐயையோ... இப்டி சஸ்பென்ஸ்ல வச்சா நாம என்னாவறது...?! சீக்கிரம் பறக்க வைங்கையா.. செம த்ரில்லிங்கா இருக்கு...

குடுகுடுப்பை said...

ஷோக்கா கீது. மதிவாணன்ங்கிற பேரு எங்கள் குடும்பத்திலேயும் கீது, தி.க கார தாத்தா வெச்சது, ஆனாங்காட்டியும் அரசியல்ல பெர்சா வரமுடிலமா

கபீஷ் said...

post ரொம்ப நீளமில்லை.:-) சுவாரஸ்யம்

பழமைபேசி said...

great buddy!

முகிலன் said...

இது நீளமா? போன வேகமே தெரியலை..

சீக்கிரம் அடுத்த பாகம்.. ப்ளீஸ்..

முகிலன் said...

// குடுகுடுப்பை said...
ஷோக்கா கீது. மதிவாணன்ங்கிற பேரு எங்கள் குடும்பத்திலேயும் கீது, தி.க கார தாத்தா வெச்சது, ஆனாங்காட்டியும் அரசியல்ல பெர்சா வரமுடிலமா
//

பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல நிறைய தி.க காரங்க உண்டாமே? நான் ஒரு தி.க கல்யாணத்துக்கு - வீரமணி தலைமையில - வந்திருக்கேன்..

KarthigaVasudevan said...

கதை...நல்ல ப்ளோ ,வேதாளம் இந்தக் கதைல என்னத்த கட்டுடைக்கப் போகுதுன்னு பார்க்கத்தான போறோம்.

யாருங்க கண்டுபிடிச்சா இந்த கட்டுடைப்புங்கற வார்த்தைய! நல்லா இருக்கு. :)))

வானம்பாடிகள் said...

பறக்குது கதை:)