Monday, 28 December 2009

மதம்...திறக்கக் கூடாத கதவு??

எச்சரிக்கை 1: இது மதம் சார்ந்த பதிவல்ல, மனம் சார்ந்த பதிவு, நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று முகத்திரை இடுவதில் எனக்கு விருப்பமில்லை. உண்மையில் மதங்களையும் கடவுளையும் மறுப்பவன் என்ற முறையில் எனக்கு எந்த மதத்தின் மீதும் மதிப்பில்லை...என் பெற்றோரின் மதமான இந்து மதமும் இதில் அடக்கம்...மனம் சார்ந்த பதிவு என்பதை விட இது முழுக்க முழுக்க மதம் குறித்த பதிவு...எழுத்து மிக நேரிடையாக இருக்கக் கூடும்....If you can't call shit as shit, please LEAVE NOW!.

எச்சரிக்கை 2: கன்னமிடும் கயவருக்கு அன்னமிடும் பெண்டீரை தாமாக தாரை வார்க்கும் கூட்டம்....திறந்து வைத்த பண்டங்கள் என்று பெண்களை ஏதோ தின்பண்டம் போல எழுதும் பதிவரை கண்டிக்க வக்கில்லாத போலி முற்போக்கு பதிவர்கள், என்னை இந்து வெறியன் என்றோ, கொண்டை என்றோ, பூணூலை உள்ள போடு என்றோ சொல்லக் கூடும்....முத்திரைகள், பாரம்பரியம், கலாச்சாரம், போலி முற்போக்குவாதிகள், குறிப்பாக மதநூல்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்பதால் கெட்ட வார்த்தைகளும் இருக்கலாம்... YOU HAVE BEEN WARNED! AND YOU HAVE THE CHOICE TO CLOSE THIS BROWSER WINDOW AT ANY TIME. NOW ITS UP TO YOU TO PROCEED!!!
எச்சரிக்கை 3: முன்கதை தெரியாமல் இடுகையை தொடர்ந்தால் முடியை பிய்த்துக் கொள்ள நேரிடலாம் என்பதால் தயவு செய்து இந்த இடுகைகளை படித்து விட்டு தொடரவும்...
http://sumazla.blogspot.com/2009/12/blog-post_27.html
http://sumazla.blogspot.com/2009/12/blog-post_25.html
http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_25.html
http://ojasviviji.blogspot.com/2009/12/blog-post_5312.html

================

யார் பர்தா அணிந்தால் எனக்கென்ன? அணியாவிட்டால் எனக்கென்ன? பர்தா அணிந்தால் நற்குடி...இல்லாவிட்டால்? ம்ம்ம்...சரி, நற்குடி இல்லை நாறக்குடி என்றே இருந்தாலும் எனக்கென்ன போச்சு? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? பல பிரபல பதிவர்களும், முற்போக்கு பதிவர்களும் செய்தது/செய்வது போல வெறுமனே மெளனம் சாதித்து கொண்டு இருக்கலாம் தான்...எந்த எதிர்வினையும் புரியாது மெளனமாய் இருந்தால் பின்னாளில் முற்போக்கு பதிவர் என்ற முத்திரையாவது மிஞ்சும்....என்னை யாரும் நற்குடி இல்லை என்றோ தேவடியா மவன் என்றோ நேரடியாக சொல்லவில்லை...உண்மையில் இது என் பிரச்சினை இல்லை என்று கூட சொல்லிவிட முடியும் தான்....அவரவர் உடை அவரவர் விருப்பம்...இதில் கேள்வி கேட்க எனக்கு என்ன உரிமை? ம்ம்ம்...அப்படியும் சொல்லிவிட முடியாது...என்றைக்கு நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு வேலைக்கு போன என் தோழி அடையாளம் சொல்ல ஒரு உடல் பாகம் கூட இல்லாது கருகி எரிந்து போனாளோ அன்றைக்கே மதமும், மத அடையாளங்களும், மதத்தால் சொல்லப்படும், செய்யப்படும் விஷயங்களும் என் பிரச்சினை ஆகிவிட்டது...

பர்தா பற்றி பேசும் போது இங்கு பிரிட்டனில் கண்கள் மட்டுமே தெரியும் படி பர்தா அணிந்து வேலைக்கு போனதால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு டீச்சர் பற்றிய கதை ஞாபகம் வருகிறது....வீட்டில் இருக்கும் போது பர்தா அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை...ஆனால் பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போது கண்கள் மட்டும் தெரியும் படி உடை உடுத்துவது அவர்களின் கல்வியை பாதிக்கிறது...முறையான கல்வி குழந்தைகளின் மனித உரிமை என்று கோர்ட் டீச்சரின் கேஸை தள்ளுபடி செய்துவிட்டது...(இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அந்த பள்ளி சர்ச் ஆஃப் இங்கிலண்டினால் நடத்தப்படுவது...இவர் வேலைக்கான இன்டர்வியூவுக்கு போன போது பர்தா அணியவில்லை!)...இவர் வெளியிட்ட அறிக்கையில் பர்தா அணிவது தனது மத உரிமை என்று சொல்லியிருக்கிறார்... அதே சமயம், அதே இஸ்லாமை பின்பற்றுவதாக சொல்லும், பல கொடூர கொலைகளை செய்த தலிபான் பன்றிகள் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முகத்தில் இருந்து பர்தாவை விலக்கி விட்டு ஆசிட் ஊற்றும் கொடூரத்தை எப்படி புரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை...நாளை எனக்கு ஒரு பெண் பிறந்து அவள் எல்.கே.ஜி போகும் போது அவள் முகத்திலும் ஆசிட் ஊற்றப்படுமோ என்று கவலை ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை...

பர்தா அணிபவர்கள் நற்குடி என்றால், அணியாதவர்கள் என்ன என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்கே விட்டு விட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும், அதன் அடிப்படையையும் பற்றியே யோசிக்கிறேன்... உண்மைதான்....என்ன உடை அணிய வேண்டும் என்பது மிக நிச்சயமாக தனி மனித உரிமை...ஆனால் அந்த உடை மத ரீதியான உடை என்றால் கேள்விகள் எழுவதை நிச்சயமாக தவிர்க்க முடியாது....குறிப்பாக முகத்தை மூடும் உடைகள்.... பலர் கூடும் பொதுவான இடத்தில் முகம் மறைக்கும் இவர்கள் சொல்ல வருவது என்ன? உங்களுடன் கலக்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை, எங்களை தனித்து விடுங்கள் என்பதா?? அப்படி தான் எனில், மற்ற சமுதாய மக்கள் இவர்களை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து ஒதுக்குவதை தடுக்க முடியாது....பின்னாளில், நாங்கள் ஒதுக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம் என்று குறை சொல்ல எந்த இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை....You will reap what you sow!

=====================

சில மாதங்களுக்கு(??) முன் உன்னைப் போல் ஒருவனில் வரும் , பேக்கரியில் எரித்துக் கொல்லப்பட்ட் ஒரு முஸ்லிம் பெண்ணை பற்றி வரும் ஒரு மோசமான வசனத்தை பதிவர்கள் பலரும் கண்டித்து எழுதியிருந்தார்கள்....அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விமர்சனமே....ஆனால் அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியே பெற்றது....

படத்தை கிழித்த பதிவர்கள், படத்தின் வெற்றியை குறித்து எதுவும் ஆராய்ந்ததாக தெரியவில்லை... படத்தை விட, படத்தின் வெற்றியே எனக்கு முக்கியமாக தெரிகிறது....தமிழ் சினிமாவுக்கே உரிய குத்து பாட்டு, நாயகனின் குத்து டயலாக், வடிவேலு/விவேக் காமெடி, ஹிட்டான பாடல்கள் என்று எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத இந்த படம் வெற்றி பெற என்ன காரணம்?? உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், இந்த வெற்றி தரும் செய்தி மிக கவலைக்குரியது... மத ரீதியாக பிளவுபட்டிருக்கும், தீவிரவாதி என்றால் முஸ்லீம் என்று நினைக்கும் ஒரு மனநிலையை தான் இது காட்டுகிறதா? இந்த மன நிலை சரியா தவறா என்றால்....மிக நிச்சயமாக தவறு தான் ஏனெனில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லா சமுதாயத்து மக்களும் வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

ஆனால், மும்பை குண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு, பெங்களூர் குண்டு வெடிப்பு, பார்லிமென்ட் தாக்குதல், லண்டனில் ட்யூப் ரயில் குண்டு வெடிப்பு, நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல், மீண்டும் மும்பையில் பொது மக்கள் மீது கொடூரமான கொலை வெறி துப்பாக்கிச் சூடு என்று தொடர்ந்து வரும் விஷ்யங்களால் மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!

======================
இந்த சூழ்நிலையில் பர்தா அணிந்தால் நற்குடி என்றும், திறந்து வைத்த பண்டங்கள் என்று எழுதுவது மிக கசப்பான உணர்வையே தருகிறது....என்னதான் இது மதம் சார்ந்த பதிவல்ல, மனம் சார்ந்த பதிவு என்று அறிவித்தாலும் திறந்து வைத்த பண்டங்கள் என்ற எழுத்துக்களில் தெறிப்பது மிகத் தீவிரமான மத உணர்வே என்றே புரிந்து கொள்ள முடிகிறது...இவர் சொல்லும் க்றிஸ்த்மஸ் வாழ்த்துக் கூட....ஸாரி....தவறாகவே புரிந்து கொள்ளப்படலாம்!

==========================
பி.கு. 1: முற்போக்கு பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் நமக்கென்ன வந்தது என்று சும்மா இருக்கும் போது நற்குடி என்ற சொல்லாடலின் விபரீதத்தை சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்ட/இடுகையிட்ட பதிவர்கள் கோவி.கண்ணன், துளசி டீச்சர், சஞ்சய் காந்தி, கலகலப்ரியா, "மயில்" விஜி ராம், உண்மைத் தமிழன், குடுகுடுப்பை, பிரபாகர், செல்வேந்திரன், இன்னும் பலருக்கும் நன்றி...உங்களில் எல்லோருடனும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், துணிச்சலாக பேசும் உங்கள் போன்றாரால் தான் கருத்து விவாதம் என்பதே சாத்தியமாகிறது...

பி.கு. 2: இது போன்ற சென்சிட்டிவான இடுகைகள் இப்போதைக்கு வேண்டாம் என்று எனக்கு மிகவும் பிடித்த‌ பதிவர் வடகரை வேலன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்....அவர்களின் நல்ல மனதையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டாலும் சில விஷயங்களை என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை...

பி.கு. 3: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்றாலும் தியாக ராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத், பெரியார், பார்ப்பனர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று எந்த விஷயத்தை பேசினாலும் யாருக்காவது மனம் புண்படத் தான் செய்யும் என்பது எழுதப்படாத உண்மை...இதைப் படிப்பவர்களில் யார் மனமேனும் புண்படுமாகில், I am Sorry, but I have no other way!

பி.கு. 4: இடுகையில் எழுதப்பட்டிருப்பவை என் எண்ணங்கள் மட்டுமே...இதைப் படிப்பவர்கள் வெட்டியோ/ஒட்டியோ தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் எனது புரிதலுக்கு உதவி செய்யும்...நன்றி!

படம் உதவி: BBC மற்றும் The New York Times

101 comments:

அது சரி(18185106603874041862) said...

just for comments...

vasu balaji said...

I was watching the drama the whole day. நான் அங்கு கருத்துச் சொல்வதைத் தவிர்த்ததன் காரணம் கயமைத் தனமாக ஒரு dead end link கொடுத்து என் இடுகையிலிருந்து தன் பேச்சை மட்டும் கடத்தி வெளியிட்டு ஓர் இடுகையிட்டிருந்தார். நான் சும்மா இருந்ததற்குக் காரணம் என் இயலாமையல்ல. ஒரு நல்ல நிகழ்வில் controversy வேண்டாம் என்பதே. அதன் பின்னரே இந்தக் கூத்து.

இன்று காலை http://amsyed.blogspot.com/2009/12/blog-post_27.html இங்கு இந்தப் பதிவர் அந்தம்மணி இடுகையில் வெளிட்ட கருத்துக்கு மாறாக எழுதியிருந்ததைச் சுட்டி பின்னூட்டமிட்டேன். Obviously ignored.

vasu balaji said...

/அதே சமயம், அதே இஸ்லாமை பின்பற்றுவதாக சொல்லும், பல கொடூர கொலைகளை செய்த தலிபான் பன்றிகள் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முகத்தில் இருந்து பர்தாவை விலக்கி விட்டு ஆசிட் ஊற்றும் கொடூரத்தை எப்படி புரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை..//

//மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!//

முற்றிலும் சரி.

vasu balaji said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

அதிலும் நற்குடியைச்சேர்ந்த அவர்,

இந்துக்களை (பசுஞ்சாணம் தலையில் ஏற்றி)எல்லாம், கூட்டிக்கொடுப்பவர்,தேவடியாள் என்று எழுதி உள்ளார். மத எதிர்ப்பு பதிவுகள் கூட அதன் கருத்துக்களைத்தான் கடுமையாக விமர்சித்து பார்த்திருக்கின்றேன். இவர் கூட்டிக்கொடுப்பவர்/தேவடியாள் என்றும் எழுத்தை ஆதரித்து ஓட்டுக்களும் /கருத்தும் சொல்லியிருப்பவர்களின் மனநிலையை என்ன சொல்வது.

இந்தப்பதிவின் எதிர் கருத்தாக வைத்ததே யாரையும் உடைகளை வைத்து குறை சொல்லாதீர்கள் என்பதுதான், கலகலப்பிரியாவின் பதிவில் காரம் இருந்தது அசிங்கம் இல்லை , அதற்கு ஆதரவும் இல்லை.

இப்படி அசிங்கமாக எழுதவும் அதனை ஆதரிக்கவும் இவர்களின் நாகரீகம்/மனிதம் புல்லரிக்க வைக்கிறது.

எனக்கு இந்த விவாதத்தில் இருந்து வடைகரை வேலன் போலவே ஒதுங்கியிருக்க ஆசை ஏனோ இங்கே பின்னூட்டமிட்டுவிட்டேன். இது போன்ற நற்குடியில் என்னை பிறக்கவைக்காத எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

vasu balaji said...

sorry. i have failed to attach the link.
Please see this http://cablesankar.blogspot.com/2009/12/281209-special.html. அந்தம்மணி தன் பெயரில் கமெண்ட் செய்துவிட்டு அழித்து வேறே பெயரில் அதே கமெண்டை பதிந்ததை யுவக்ருஷ்ணன் சுட்டியிருக்கிறார். அதே பெயரில் தன் இடுகையில் மட்டறுக்கப் பட்ட கமெண்டில் சாதகமான ஒரு பின்னூட்டம். ஏன் இந்தக் கள்ளம்?

அப்படியே இப்போது சொல்லும் காரணமான இஸ்லாமியருக்கான இடுகை அது என்பதை ஏற்க முடியவில்லை. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? மதம் சார்ந்தவர்களுக்கு இந்த் அடிப்படை தெரியாமல் இருக்கிறதா.

கலகலப்ரியா said...

//எச்சரிக்கை 1: ....If you can't call shit as shit, please LEAVE NOW!.//

i call it crap...:(.. & can't leave now..O)

//எச்சரிக்கை 2: .. YOU HAVE BEEN WARNED! AND YOU HAVE THE CHOICE TO CLOSE THIS BROWSER WINDOW AT ANY TIME. NOW ITS UP TO YOU TO PROCEED!!!//

proceedin...

கலகலப்ரியா said...

//http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_25.html

================//

who is this kalakalapriya.. damned idiot... ! +"*ç%&?=)(/&%*ç&....

கலகலப்ரியா said...

/யார் பர்தா அணிந்தால் எனக்கென்ன? அணியாவிட்டால் எனக்கென்ன? பர்தா அணிந்தால் நற்குடி...இல்லாவிட்டால்? ம்ம்ம்...சரி, நற்குடி இல்லை நாறக்குடி என்றே இருந்தாலும் எனக்கென்ன போச்சு? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? பல பிரபல பதிவர்களும், முற்போக்கு பதிவர்களும் செய்தது/செய்வது போல வெறுமனே மெளனம் சாதித்து கொண்டு இருக்கலாம் தான்...எந்த எதிர்வினையும் புரியாது மெளனமாய் இருந்தால் பின்னாளில் முற்போக்கு பதிவர் என்ற முத்திரையாவது மிஞ்சும்....//

அது சரி...

கலகலப்ரியா said...

//உண்மையில் இது என் பிரச்சினை இல்லை என்று கூட சொல்லிவிட முடியும் தான்...//

இது தனிமனிதத் தாக்குதல்... கடுமையாகக் கண்டிக்கிறேன்... (நான் அப்டி சொன்னது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் மாட்டேன்..)

//.அவரவர் உடை அவரவர் விருப்பம்...இதில் கேள்வி கேட்க எனக்கு என்ன உரிமை? ம்ம்ம்...அப்படியும் சொல்லிவிட முடியாது...என்றைக்கு நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு வேலைக்கு போன என் தோழி அடையாளம் சொல்ல ஒரு உடல் பாகம் கூட இல்லாது கருகி எரிந்து போனாளோ அன்றைக்கே மதமும், மத அடையாளங்களும், மதத்தால் சொல்லப்படும், செய்யப்படும் விஷயங்களும் என் பிரச்சினை ஆகிவிட்டது...//

கோபம் மிக நியாயமானதுதான்..! விகிதங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்..! ஆனா நிரபராதி ஒருவன் தண்டிக்கப் படக் கூடாது... என்ற வகையிலாவது உலகமயமாக்கல் இங்கு தவிர்க்கப் பட வேண்டும்..! :( நிற்க..! பிகினி, கோவணம், ஜீன்ஸ், வேஷ்டி, சேலை, துப்பட்டா, கைக்குட்டை, போர்வை, சால்வை எல்லாம் அவரவர் சமூக சூழலில் சாதாரணம் என்று கொண்டால், அவர்களே அதைப் பிரதானப் படுத்தத் தேவையில்லை. பேன்.. மன்னிக்கவும்.. பெண் எடுப்பார்கள்.. பெண் எடுப்பார்கள்.. பெண் எடுப்பார்கள்... என்று கேட்டதிலேயே... போதும் போதும் என்றாகி விட்டது.. (vomiting sensation..)..! ஆனால் என்னுடைய இடுகையில் சந்தனா சொன்னது போல்... அங்கேயே ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளுக்கு, இந்தப் பார்வை புரிய சந்தர்ப்பம் இல்லவே இல்லை. ( நம் ஊரில் மாதுளையைச் சுற்றி பாலித்தீன் சுற்றி வைப்பார்கள்..!)

கலகலப்ரியா said...

//ஆனால், மும்பை குண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு, பெங்களூர் குண்டு வெடிப்பு, பார்லிமென்ட் தாக்குதல், லண்டனில் ட்யூப் ரயில் குண்டு வெடிப்பு, நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல், மீண்டும் மும்பையில் பொது மக்கள் மீது கொடூரமான கொலை வெறி துப்பாக்கிச் சூடு என்று தொடர்ந்து வரும் விஷ்யங்களால் மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!//

ம்ம்... இதெல்லாம் படிக்கிறப்போ... தேவையே இல்லாம அவர்கள் ஒரு விளக்கம் அளித்ததே... ஏதாவது உள்நோக்கத்திலா என்ற நடுக்கம் ஏற்படுகிறது. உள்ளூர் நண்பர்களை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது..! (இந்த எளவு சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமியை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது, நாட்டியம் மட்டும் புடிக்கும்..)

கலகலப்ரியா said...

//இந்த சூழ்நிலையில் பர்தா அணிந்தால் நற்குடி என்றும், திறந்து வைத்த பண்டங்கள் //

மூடி வச்சா நாறாதோ..?! பண்டங்கள்தான்..!

கலகலப்ரியா said...

//துணிச்சலாக பேசும் உங்கள் போன்றாரால் தான் கருத்து விவாதம் என்பதே சாத்தியமாகிறது...//

இதுக்கு மக்கள் தமிழ்மணம் மூலமா மகுடம் கொடுத்துட்டாங்கப்பு..! நீங்க வேற பீதிய கிளப்பாதீங்க.. :((.... அவ்வ்வ்வ்...

//....அவர்களின் நல்ல மனதையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டாலும் சில விஷயங்களை என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை...//

என்னாலும்... முடியல...

//பி.கு. 3: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்றாலும் தியாக ராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத், பெரியார், பார்ப்பனர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று எந்த விஷயத்தை பேசினாலும் யாருக்காவது மனம் புண்படத் தான் செய்யும் என்பது எழுதப்படாத உண்மை...இதைப் படிப்பவர்களில் யார் மனமேனும் புண்படுமாகில், I am Sorry, but I have no other way!//

அதெல்லாம் மனசிருக்கிறவங்களுக்கு...! (மூளையும் இருக்கணுமோ..?)... நமக்கில்லைப்பா..!

//பி.கு. 4: இடுகையில் எழுதப்பட்டிருப்பவை என் எண்ணங்கள் மட்டுமே...இதைப் படிப்பவர்கள் வெட்டியோ/ஒட்டியோ தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் எனது புரிதலுக்கு உதவி செய்யும்...நன்றி!//

வெட்டியாச்சு... ஒட்டியாச்சு... புரிதல் பாக்கி..! வரேன் சாமி..! (ஆனாலும் இவ்ளோ தில்லு நமக்கு வர ரொம்ப நாளாகும் சாமியோ...)

K.MURALI said...

கருத்துக்களை தொடர்வதுக்காக

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
Anonymous said...

அவங்க திருந்தமாட்டாங்கன்னு நல்லாவே தெரிஞ்சுபோச்சு.

குடுகுடுப்பை said...

komentsu.

Unknown said...

// (ஆனாலும் இவ்ளோ தில்லு நமக்கு வர ரொம்ப நாளாகும் சாமியோ...)
//

ரிப்பீட்டேய்...

அந்த அன்பரின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் காணாமல் போயாச்சு.

பர்தா அணியச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்களாம். ஆனால் பர்தா அணியும் பெண்ணை திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்களாம். இது மறைமுகக் கட்டாயம் இல்லையா?

Unknown said...

//பர்தா அணியச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்களாம். ஆனால் பர்தா அணியும் பெண்ணை திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்களாம். இது மறைமுகக் கட்டாயம் இல்லையா?
//

பர்தா அணியாத என்றிருக்க வேண்டும்,

க.பாலாசி said...

நல்ல இடுகை... வெட்டிவொட்ட தேவையில்லை.

Sanjai Gandhi said...

அட போங்க பாஸ்.. பர்தா அணியாத முஸ்லிம்கள் கெட்டக் குடியான்னு கேட்டதுக்கே நான் இந்து வெறியனாகிவிட்டேன். இப்போ நீங்களும். வெல்கம் டூ அவர் இந்துவெறி க்ளப்.

உண்மைத்தமிழன் said...

சஞ்சய்க்கு அடுத்து நானும் ஒரு இந்து வெறியனாகிவிட்டேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!

புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று அடம் புடிப்பவர்களை என்ன செய்வது..?

நற்குடி என்கிற ஒரு வார்த்தையினால் வலையுலகில் மதக்கலவரம் வருமளவுக்கு நிலைமை வந்திருப்பது கவலைக்குரிய விஷயம்..!

கபிலன் said...

உண்மைத் தமிழனுக்கு அடுத்து என்னையும் இந்து வெறியன் க்ளப்ல சேர்த்துக்கோங்க சஞ்சய் காந்தி !

Anna said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்துக்களை முற்று முழுதாக ஆமோதிக்கிறேன்.

கலகலப்ரியா said...

congratulations..! ya got 3 minuses sofar..!

er.. but.. no minus (athaan negative) comments.. except mine.. avvv.. ;))

கலகலப்ரியா said...

sanjay..

i think.. am already thr..?! otherwise send me da application procedure pls..! er..tell me, are thr any fees imposed?

shall be very very proud of being a mhc! or rather CM!

துளசி கோபால் said...

நானும் ஒரு ஹிந்து வெறிச்சியாக்கப்பட்டேன்!!!!

கலகலப்ரியா said...

//துளசி கோபால் said...

நானும் ஒரு ஹிந்து வெறிச்சியாக்கப்பட்டேன்!!!!//

மயிலிறால வருடற மாதிரி நீங்க பேசுறது நற்... சாரி... நன்மக்களை உடனே சென்றடையும்... சில இடத்ல வேலைக்கு ஆகாது டீச்சர்...:)..

கலகலப்ரியா said...

*மயிலிறகால*..

Anonymous said...

அந்தம்மா படிக்கப் போவுதே அங்கேயாச்சும் ஹால் டிக்கெட் வாங்கச்சே மூஞ்சி காட்டுமா இல்லை மூடி வச்சி நாறடிக்குமா?

Anonymous said...

During our Washington DC visit, went to White house on sightseeing. While hanging in the backside of the building, there was a Moslem couple (seem to be of middle-east descent), the lady was totally covered in Burka. The husband asked us to take a picture in their Camera with Whitehouse as the backdrop. Before I clicked, the lady lifted her veil over her head exposing her face and posed momentarily for the picture in company of her husband. The moment picture was taken, the veil is back over her face. I've been wondering of this hypocracy all through that day.

Anonymous said...

நிஜமாவே நான் ஒரு இந்து வெறியைதான் எப்போதும்...

ஒருவர் அவர் ஆணோ பெண்ணோ மற்றவை பற்றி மோசமாக எழுதும்போது அதை சுட்டி காட்ட எந்த தைரியமும் தேவையில்லை. ஒரு சின்ன எழுத்தில் மற்ற எல்லோரையும் புறந்தள்ளும் அளவு அகந்தையுடன் இருக்கும் போது நான் பதில் தருவதில் எந்த தவறும் இல்லை,

நல்ல மனிதர்கள் சிலர் இருந்தாலும் பொதுவாகவே இவர்களை போன்றோரும் இவர்களுக்கு என்ன பதில் தருகிறோம் என்று புரியாத சுகுணா திவாகர் (யார் இவர்.. இவ்வளவு குழம்பி போய் இருக்கார்? வேப்பிலை தான் அடிக்கணும்) போன்றவர்களும் இருக்கையில் இது போன்ற தரக்குறைவான நடவடிக்கைகள் தொடரும். நாமெல்லாம் யாரு? காந்தி (சஞ்சய் இல்லைங்க நிஜ காந்தி) பிறந்த நாடு காரங்க. அஹிம்சைய விடகுடாது. அவங்க என்ன இம்சை பண்ணினாலும்..

//எல்லா சமுதாயத்து மக்களும் வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...//
அது தெரிஞ்சிருந்தா இந்த உளறல் இல்லாமல் இருந்திருக்கும் இல்லையா?

Anonymous said...

//திறந்து வைத்த பண்டங்கள்//

உண்மையில் இந்த வரிகள் இன்னும் என் கோவத்தை குறைக்கவில்லை...i

ராஜ நடராஜன் said...

வாசகர் பரிந்துரையில் இடுகை கண்டு புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமுன்னு வந்தா இன்றைக்கு எனது அலுவல்கள் அத்தனையும் தள்ளி வைப்பு மாதிரி விவாதக்களம்.

மதம் ஆணிவேர்களாகிப் போன காரணத்தால் உலுக்கி நகர்த்த இன்னும் காலம் பிடிக்கும்.

இன்னும் அதிகமாக பெண்கள் பதிவுலகில் பவனி வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.முடியாத விவாதங்களில் இவர்கள் முடங்கிப் போவதில் எனக்கு உடன்பாடில்லை.

சொல்ல வந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் கதவை சாத்தும் போது நினைவுக்கு வந்தது.

ராஜ நடராஜன் said...

குவைத்தில் இப்போது பெண்களும் பாராளுமன்றத்துக்கு வந்து விட்டார்கள்.அதில் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணியவில்லை என்று இரு MPகள் மீது மதசார்பு MPகள் அரசியல் சட்டப்படி ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சுமத்தினார்கள்.

பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்கள் சொந்த விருப்பம் என்று பாராளுமன்ற வாக்கெடுப்பிலும் ஹிஜாப் அணியாமல் இருப்பது பெண்களின் உரிமையென்றும் நீதிமன்ற தீர்ப்பு.

ஹிஜாப்புக்கு சொந்தக்காரர்களே சட்டப்படி மனதாலும் மதத்தாலும் முன்னேறுகிறார்கள்.நாம்?

அமர பாரதி said...

அது சரி,

கடந்த மூன்று நாட்களாய் இது சம்பந்தப்பட்ட அனைத்து இடுகைகளையும் படித்து மனதில் கோபம் கணன்றாலும் எங்கும் பின்னூட்டமிடவில்லை. அவர் செய்த தவறு அவருக்கு தாமதமாகவாவது புரியும் என்ற ஒரு சிறிய எதிர்பார்ப்பு மனதில் இருந்ததே காரணம்.

முதலில் அவர் எழுத்தின் விபரீதம் புரியாமல் எழுதினார் என்றே நினைத்தேன். ஆனால் அவருடைய இன்றைய இடுகையைப் படித்த பிறகுதான் ஆணவவும் தாந்தோன்றித்தனமும் கொண்ட விஷம் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் தெரிந்தே எழுதினார். அதில் சந்தேகமேயில்லை. திருநீறை கேவலமாக தெரிந்தே எழுதி விட்டு //ஆனாலும் புனித நூலைப் பழித்து சொன்னதையெல்லாம்(அது எந்த மதத்தினுடையதாக இருந்தாலும் சரி) என் மனம் ஏற்கவில்லை// இப்போது இப்படி வேறு முகம் காட்டுகிறார்.

எதையும் யாரையும் எப்படி வேண்டுமானாலும் எள்ளி நகையாடும் உரிமை அவருக்கில்லை.

Anonymous said...

முதல் புகைப்படத்தில் இருப்பவர்தான் சுமஜ்லாவா? இப்படி இன்னொரு பதிவரின் புகைப்படத்தை அவர் அனுமதியின்றி தங்கள் பதிவில் போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.(இப்போது முஸ்லிம்களுக்கு பல விஷயம் புரியும்)

உங்களுக்கும் மற்றும் ஏனையோர்க்கும்:

இஸ்லாம் கூறும் 'பர்தா' என்பது முதல் படத்தில் உள்ளது அல்லவே அல்ல. 'முகம், முன்கை,பாதம் தவிர மற்றவை கனபரிமான்கள் தெரியா வண்ணம் மறைக்கப்படல்' = இஸ்லாமிய பெண்களுக்கான பர்தா.(தாங்கள் நினைப்பதுபோல உடை அல்ல)

அல்கைதா/தலிபான்கள் எல்லாம் நீங்கள் நம்புவதுபோல முஸ்லிம்களின் அத்தாரிட்டி அல்ல. ஏனென்றால் மோடியும் அத்வானியும், சங் பரிவார ஆர்.எஸ்.எஸ்.உம் ஹிந்துக்களின் அத்தாரிட்டி அல்ல அல்லவா?

முஸ்லிம்களின் மீது குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பைமட்டும் குறிப்பிட்டுக்கூருவது நடுநிலையும் அல்ல. நியாமும் அல்ல.

யாரும் எவ்வருவாயுமின்றி நிர்வாணமாக திரிய விரும்புவதில்லை. எவ்வளவு மறைக்க வேண்டும் என்பதிலேதான் பிரச்சினை. அதிகமாய் மறைப்பவர் குறைவாய் மறைப்ப்வரை 'நற்குடியில்லை' என்று சொன்னால், குறைவாய் மறைப்பவர் அதிகமாய் மறைப்பவரை 'நற்குடி இல்லை-நாறகுடி' என்று சொல்ல என்ன தயக்கம்?

வால்பையன் said...

உங்கள் மனநிலையுடன் ஒத்து போகிறேன்!

ஏற்கனவே பேர் டேமேஜ் ஆகியிருந்ததால் கொஞ்சம் தள்ளி போடலாம் என்று நினைத்திருந்தேன்!

Anonymous said...

இதுகலுக்கேல்லாம்
மேடையமைத்துக்கொடுத்த
ஈரோட்டு சுய விளம்பர
அரைவேக்காட்டுகளும்
ஸ்பான்சரு செய்ததுகளும்
மூச்சு விட்டமாதிரி
தெரியல
சுமல்ஸ கிட்ட இருக்கும்
3 ஓட்டுபோயிடுமுனு பயமா
ஈரோட்டு பதிவர்களுக்கு.

ஸ்பான்சரு செய்த
தமிழ் மணம்
தமிழச்சிக்கு தடை போட்டதே
இதற்கு என்ன செய்யப்போகிறது .
பகுத்தறிவு பேசுவேறுக்கு ஒரு சட்டம்
மதவாதிகளுக்கு ஆதரவா ஒரு சட்டமா ...
அப்போ
தமிழ் மணம்
எதனை ஆதரிக்கின்றது .

இந்தியாவின் நலன்
இதனால்
பாதிக்கப்படுவதாகவே உணர்கின்றேன் .
இந்திய ஒற்றுமைக்கு
பங்கம் விளைவிக்கும் செயலை
நிறுத்துக்கொள்ளுமாறு
தமிழ் மணத்தையும்
இதன் சார்புடையவர்களையும்
எச்சரிக்கின்றேன் .

கிரி said...

//யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்றாலும் தியாக ராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத், பெரியார், பார்ப்பனர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று எந்த விஷயத்தை பேசினாலும் யாருக்காவது மனம் புண்படத் தான் செய்யும் என்பது எழுதப்படாத உண்மை..//

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைவரையும் திருப்தி செய்வது என்பது இயலாத ஒன்று.

அமுதா கிருஷ்ணா said...

நல்ல டீச்சருக்கு முதல் தகுதியாக் ஜாதி,மத பேதம் இருக்க கூடாது என்று நான் நினைக்கிறேன்...

Good citizen said...

அந்த அம்மணியின் பதிவுக்கு எதிர்ப்பதிவு யாருமே போடமாட்டார்களோ என்று ஒரு ஏக்கம் இருந்தது நானும் பிறப்பால் கிருத்துவன்
அதனால் சிறிய வயதில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டப் படிதான் நான் வாழ்வேனென்றால் அது எவ்வளவு
முட்டல்தனமான இழிவான செயல் இதிலிருந்து ஒன்று தெளிவாக புரிகிறது
பதிவர்கள் அனைவரும் சிந்தனாவாதிகள் கிடையாது.
என்னதான் பதிவை கெளரவமாக எழுதினாலும் அவர்கள் பிற்போக்குவாதிகள் என்பதை அவர்களின் எழுதுக்களே காட்டிக் கொடுத்துவிடுகின்றன பாருங்கள்
சொல்ல வழ்த கருத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சொன்னதற்கு
நான் தலை வணங்குகிறேன் எந்த
மயிரான் உங்களை இந்து வெறியன் என்று சொன்னாலும் கவலை கொள்ளாதீர்கள் இத்தனை இதயங்கள்
உங்களின் சொல் வலிமையை புரிந்துக்கொண்டிருக்கும்போது

Good citizen said...

சொல்ல மறந்த்துவிட்டன் உஙளின் இந்துவெறி கிளப்பில் இன்றிலிருந்து நானும் ஒரு மெம்பராகிறென் தயவு செய்து என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
I was watching the drama the whole day. நான் அங்கு கருத்துச் சொல்வதைத் தவிர்த்ததன் காரணம் கயமைத் தனமாக ஒரு dead end link கொடுத்து என் இடுகையிலிருந்து தன் பேச்சை மட்டும் கடத்தி வெளியிட்டு ஓர் இடுகையிட்டிருந்தார். நான் சும்மா இருந்ததற்குக் காரணம் என் இயலாமையல்ல. ஒரு நல்ல நிகழ்வில் controversy வேண்டாம் என்பதே. அதன் பின்னரே இந்தக் கூத்து.

இன்று காலை http://amsyed.blogspot.com/2009/12/blog-post_27.html இங்கு இந்தப் பதிவர் அந்தம்மணி இடுகையில் வெளிட்ட கருத்துக்கு மாறாக எழுதியிருந்ததைச் சுட்டி பின்னூட்டமிட்டேன். Obviously ignored.
//

ஓ...எனக்கு அந்த கதை தெரியாதுங்க...எல்லாப் பதிவுகளிலும் எல்லாப் பின்னூட்டங்களும் பல்வேறு காரணங்களுக்காக வெளியிடப்படுவதில்லை...சரின்னு விட்ற வேண்டியது தான்...வேறு என்ன செய்ய?

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
/அதே சமயம், அதே இஸ்லாமை பின்பற்றுவதாக சொல்லும், பல கொடூர கொலைகளை செய்த தலிபான் பன்றிகள் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முகத்தில் இருந்து பர்தாவை விலக்கி விட்டு ஆசிட் ஊற்றும் கொடூரத்தை எப்படி புரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை..//

//மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!//

முற்றிலும் சரி.

//

நான் சொல்ல வந்தது முழுக்க முழுக்க இது தான்...புரிதலுக்கு நன்றி.

priyamudanprabu said...

சரியா சொன்னீங்க

அவிகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது
தூங்கியவர்களை எழுப்பலாம் தூங்குவதாய் நடிப்பவர்களி/கற்பனையில் இருப்பவர்களை??!??!?!?!
ம்கும்

விடுங்க

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அதிலும் நற்குடியைச்சேர்ந்த அவர்,

இந்துக்களை (பசுஞ்சாணம் தலையில் ஏற்றி)எல்லாம், கூட்டிக்கொடுப்பவர்,தேவடியாள் என்று எழுதி உள்ளார். மத எதிர்ப்பு பதிவுகள் கூட அதன் கருத்துக்களைத்தான் கடுமையாக விமர்சித்து பார்த்திருக்கின்றேன். இவர் கூட்டிக்கொடுப்பவர்/தேவடியாள் என்றும் எழுத்தை ஆதரித்து ஓட்டுக்களும் /கருத்தும் சொல்லியிருப்பவர்களின் மனநிலையை என்ன சொல்வது.
//

உண்மை தான்...மதங்களை கடுமையாக விமர்சித்து கேள்வி கேட்கும் தமிழ் ஓவியா, தோழர் செங்கொடி, வால்பையன், கோவி.கண்ணன் ஆகியோர் பதிவுகளில் கூட "திறந்து வைத்த பண்டங்கள்" போன்ற வார்த்தைகளை படித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை...மற்ற பெண்களை பார்த்து திறந்து வைத்த பண்டம் என்று சொல்லும் இடுகையை ஆதரிப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல? இந்தியாவில் எனக்கு தெரிந்து சுமார் 90% பெண்கள் பர்தா அணிவதில்லை....அவர்கள் எல்லாம் தேவடியாள் என்று இவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ??

//
இந்தப்பதிவின் எதிர் கருத்தாக வைத்ததே யாரையும் உடைகளை வைத்து குறை சொல்லாதீர்கள் என்பதுதான், கலகலப்பிரியாவின் பதிவில் காரம் இருந்தது அசிங்கம் இல்லை , அதற்கு ஆதரவும் இல்லை.

இப்படி அசிங்கமாக எழுதவும் அதனை ஆதரிக்கவும் இவர்களின் நாகரீகம்/மனிதம் புல்லரிக்க வைக்கிறது.
//

அதே....அந்த நாகரீகத்தின் பின் விளைவுகளை சுட்டுக் காட்டுவதே என் நோக்கம்...

//
எனக்கு இந்த விவாதத்தில் இருந்து வடைகரை வேலன் போலவே ஒதுங்கியிருக்க ஆசை ஏனோ இங்கே பின்னூட்டமிட்டுவிட்டேன். இது போன்ற நற்குடியில் என்னை பிறக்கவைக்காத எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
//

எனக்கும் கூட இதை எழுத விருப்பமில்லை...ஜெயமோகன் சொல்வது போல, கருத்து சொல்ல ஆரம்பித்தால் அதன் தர்கத்துக்கே நேரம் போய்விடுகிறது...ஆனாலும் சில நேரங்களில் விபரீதங்கள் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
sorry. i have failed to attach the link.
Please see this http://cablesankar.blogspot.com/2009/12/281209-special.html. அந்தம்மணி தன் பெயரில் கமெண்ட் செய்துவிட்டு அழித்து வேறே பெயரில் அதே கமெண்டை பதிந்ததை யுவக்ருஷ்ணன் சுட்டியிருக்கிறார். அதே பெயரில் தன் இடுகையில் மட்டறுக்கப் பட்ட கமெண்டில் சாதகமான ஒரு பின்னூட்டம். ஏன் இந்தக் கள்ளம்?
//

உங்கள் லின்க்குக்கு நன்றி...நானும் பார்த்தேன்...தானே ஒரு இடுகை எழுதி, அதற்கு சாதகமாக தானே பின்னூட்டம் இட்டுக் கொள்வது எந்த விதத்தில் ஒருவரின் புரிதலுக்கு உதவும் என்று எனக்கு புரியவில்லை...ம்ம்ம்ம்....

//
அப்படியே இப்போது சொல்லும் காரணமான இஸ்லாமியருக்கான இடுகை அது என்பதை ஏற்க முடியவில்லை. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? மதம் சார்ந்தவர்களுக்கு இந்த் அடிப்படை தெரியாமல் இருக்கிறதா.
//

அது இஸ்லாமியருக்கான இடுகை என்றே ஒப்புக் கொண்டாலும், பர்தா அணிந்தால் நற்குடி, பர்தா அணியாது ஜீன்ஸ் போட்டால், சேலை கட்டினால் திறந்து வைத்த பண்டம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது....இஸ்லாமிய பெண்களுக்காகவே சொல்லப்பட்டது என்றாலும் அது மிக பிற்போக்குத்தனமான கருத்து என்பதே என் வாதம்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//எச்சரிக்கை 1: ....If you can't call shit as shit, please LEAVE NOW!.//

i call it crap...:(.. & can't leave now..O)
//

Your choice...it mean the same thing :0)))

//எச்சரிக்கை 2: .. YOU HAVE BEEN WARNED! AND YOU HAVE THE CHOICE TO CLOSE THIS BROWSER WINDOW AT ANY TIME. NOW ITS UP TO YOU TO PROCEED!!!//

proceedin...
//

Thank you!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//உண்மையில் இது என் பிரச்சினை இல்லை என்று கூட சொல்லிவிட முடியும் தான்...//

இது தனிமனிதத் தாக்குதல்... கடுமையாகக் கண்டிக்கிறேன்... (நான் அப்டி சொன்னது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் மாட்டேன்..)
//

இதில் தனிமனித தாக்குதல் எங்கே வந்தது என்று எனக்கு புரியவில்லையே...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//.அவரவர் உடை அவரவர் விருப்பம்...இதில் கேள்வி கேட்க எனக்கு என்ன உரிமை? ம்ம்ம்...அப்படியும் சொல்லிவிட முடியாது...என்றைக்கு நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு வேலைக்கு போன என் தோழி அடையாளம் சொல்ல ஒரு உடல் பாகம் கூட இல்லாது கருகி எரிந்து போனாளோ அன்றைக்கே மதமும், மத அடையாளங்களும், மதத்தால் சொல்லப்படும், செய்யப்படும் விஷயங்களும் என் பிரச்சினை ஆகிவிட்டது...//

கோபம் மிக நியாயமானதுதான்..! விகிதங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்..! ஆனா நிரபராதி ஒருவன் தண்டிக்கப் படக் கூடாது... என்ற வகையிலாவது உலகமயமாக்கல் இங்கு தவிர்க்கப் பட வேண்டும்..! :(
//

மதங்களால் உருவாகும் பிரச்சினை தமிழ்நாட்டிலோ இல்லை இந்தியாவிலோ மட்டுமே இல்லை...பாபர் மசூதி இடிப்புக்கும், மும்பை குண்டு வெடிப்புக்கும், இரட்டை கோபுர தகர்ப்புக்கும், பாலி தீவு குண்டு வெடிப்புகளுக்கும், லண்டன் குண்டு வெடிப்புகளுக்கும் அடிப்படை காரணம் மதம் எனும் போது அதை உலகளாவிய பிரச்சினையாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

நிற்க..! பிகினி, கோவணம், ஜீன்ஸ், வேஷ்டி, சேலை, துப்பட்டா, கைக்குட்டை, போர்வை, சால்வை எல்லாம் அவரவர் சமூக சூழலில் சாதாரணம் என்று கொண்டால், அவர்களே அதைப் பிரதானப் படுத்தத் தேவையில்லை. பேன்.. மன்னிக்கவும்.. பெண் எடுப்பார்கள்.. பெண் எடுப்பார்கள்.. பெண் எடுப்பார்கள்... என்று கேட்டதிலேயே... போதும் போதும் என்றாகி விட்டது.. (vomiting sensation..)..!
//
அதை நானும் படித்தேன்...ஆனால், இத்தகையோரால் திருமணம் செய்து கொள்ளப்படாத அந்த பெண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

//
ஆனால் என்னுடைய இடுகையில் சந்தனா சொன்னது போல்... அங்கேயே ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளுக்கு, இந்தப் பார்வை புரிய சந்தர்ப்பம் இல்லவே இல்லை. ( நம் ஊரில் மாதுளையைச் சுற்றி பாலித்தீன் சுற்றி வைப்பார்கள்..!)
//

வாழ்க்கையில் உடுத்தும் உடை, இருக்க இடம், உண்ணும் உணவு, எழுதும் கம்ப்யூட்டர், இணைக்கும் இன்டர்நெட் என்று எல்லாமும் மனித உழைப்பாலும், தலைமுறை தலைமுறைகளாக கண்ணுக்கு தெரியாத யாரோ சிலர் தூக்கம் தொலைத்து, வாழ்வை துறந்து செய்த ஆராய்ச்சியின் பலன் என்றாலும் சிலருக்கு பல நூறு வருடங்களுக்கு முன் எழுதிய மதநூல்களே முக்கியமாக தெரிகிறது...

உலகில் இருக்கும் எல்லோரும் மதநூல்களை படிப்பதையும், அதை மற்றவர்களுக்கு பரப்புவதையுமே வாழ்க்கையாக கொண்டால் இந்த உலகமே இல்லை....இது சிலருக்கு புரியாவிட்டால் என்ன செய்ய??

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//ஆனால், மும்பை குண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு, பெங்களூர் குண்டு வெடிப்பு, பார்லிமென்ட் தாக்குதல், லண்டனில் ட்யூப் ரயில் குண்டு வெடிப்பு, நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல், மீண்டும் மும்பையில் பொது மக்கள் மீது கொடூரமான கொலை வெறி துப்பாக்கிச் சூடு என்று தொடர்ந்து வரும் விஷ்யங்களால் மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!//

ம்ம்... இதெல்லாம் படிக்கிறப்போ... தேவையே இல்லாம அவர்கள் ஒரு விளக்கம் அளித்ததே... ஏதாவது உள்நோக்கத்திலா என்ற நடுக்கம் ஏற்படுகிறது. உள்ளூர் நண்பர்களை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது..! (இந்த எளவு சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமியை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது, நாட்டியம் மட்டும் புடிக்கும்..)
//

என்ன விளக்கம் என்று எனக்கு தெரியவில்லை...

சிவகாமியின் சபதம்?? கல்கியின் சிவகாமியின் சபதத்தையா சொல்கிறீர்கள்?? எனக்கு அதில் வரும் நீலகேசி பாத்திரம் ரொம்ப பிடிக்கும்....காதலுக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே உடைத்த ஆளாயிற்றே :0))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//இந்த சூழ்நிலையில் பர்தா அணிந்தால் நற்குடி என்றும், திறந்து வைத்த பண்டங்கள் //

மூடி வச்சா நாறாதோ..?! பண்டங்கள்தான்..!
//

தெரியவில்லை! ஆனால் எனக்கு தெரிந்து மூடி வைத்தாலும் மூடி வைக்காவிட்டாலும் கெட்டுப் போவது பண்டத்தை பொறுத்தது...உதாரணம், பால்...எத்தனை மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது கெட்டுப் போகிறது....ஆனால் மூடாது திறந்தே வைத்தாலும் (சமையல்) புளி கெட்டுப் போவது இல்லை...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

//பி.கு. 4: இடுகையில் எழுதப்பட்டிருப்பவை என் எண்ணங்கள் மட்டுமே...இதைப் படிப்பவர்கள் வெட்டியோ/ஒட்டியோ தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் எனது புரிதலுக்கு உதவி செய்யும்...நன்றி!//

வெட்டியாச்சு... ஒட்டியாச்சு... புரிதல் பாக்கி..! வரேன் சாமி..! (ஆனாலும் இவ்ளோ தில்லு நமக்கு வர ரொம்ப நாளாகும் சாமியோ...)

//

கருத்துக்களுக்கு நன்றி ப்ரியா...

தில் எல்லாம் ஒன்றும் இல்லை...எத்தனை தவிர்த்தாலும் சில நேரங்களில் நினைப்பதை எழுதித் தான் தீர வேண்டியிருக்கிறது!

அது சரி(18185106603874041862) said...

//
K.MURALI said...
கருத்துக்களை தொடர்வதுக்காக

//

கடைசில உங்க கருத்தென்னன்னு சொல்லாதே போயிட்டீங்க முரளி..:0)))

அது சரி(18185106603874041862) said...

//
சின்ன அம்மிணி said...
அவங்க திருந்தமாட்டாங்கன்னு நல்லாவே தெரிஞ்சுபோச்சு.

//

தவறு என்று நினைத்தால் மாற்றிக் கொள்வார்கள்...தான் செய்ததே சரி என்று நினைத்தால் அப்படியே தான் இருப்பார்கள்...

ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் அந்த நிலைப்பாடின் விபரீதங்களை சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியது...அவ்வளவு தான்.....

இனி மாற்றிக் கொள்வதும் மாறாததும் அவர்கள் விருப்பம்...

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
// (ஆனாலும் இவ்ளோ தில்லு நமக்கு வர ரொம்ப நாளாகும் சாமியோ...)
//

பர்தா அணியச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்களாம். ஆனால் பர்தா அணியும் பெண்ணை திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்களாம். இது மறைமுகக் கட்டாயம் இல்லையா?

//

உடைகளை வைத்தே ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ தீர்மானிப்பதே தவறு...இன்றைய சூழ்நிலையில் பொதுவாக யாரும் அப்படி தீர்மானிப்பது இல்லை....உதாரணமாக ரஜினிகாந்த் சில நேரங்களில் மிக எளிமையாக உடை அணிவார்....அதற்காக அவர் பிச்சைக்காரர் என்று தீர்மானம் செய்து விடுவார்களா??

அது சரி(18185106603874041862) said...

//
க.பாலாசி said...
நல்ல இடுகை... வெட்டிவொட்ட தேவையில்லை.

//

புரிதலுக்கு நன்றி பாலாசி...

அது சரி(18185106603874041862) said...

//
SanjaiGandhi™ said...
அட போங்க பாஸ்.. பர்தா அணியாத முஸ்லிம்கள் கெட்டக் குடியான்னு கேட்டதுக்கே நான் இந்து வெறியனாகிவிட்டேன். இப்போ நீங்களும். வெல்கம் டூ அவர் இந்துவெறி க்ளப்.

//

உங்கள் பின்னூட்டங்களை அந்த இடுகையில் பார்த்தேன் சஞ்சய்...

நீங்கள் இந்து வெறியன் இல்லை என்று எனக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கு தெரியும்...நீங்களே அந்த க்ளப்பில் சேர்க்கப்பட்டு விட்டீர்கள் என்றால் நானெல்லாம்?? :0))

அது சரி(18185106603874041862) said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சஞ்சய்க்கு அடுத்து நானும் ஒரு இந்து வெறியனாகிவிட்டேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!

புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று அடம் புடிப்பவர்களை என்ன செய்வது..?

நற்குடி என்கிற ஒரு வார்த்தையினால் வலையுலகில் மதக்கலவரம் வருமளவுக்கு நிலைமை வந்திருப்பது கவலைக்குரிய விஷயம்..!

//

உண்மைத் தமிழன் அண்ணா,

எந்தக் க்ளப்பில் சேர்த்தாலும் நாம் சொல்ல நினைப்பதை சொல்லிக் கொண்டு தான் இருப்போம் இல்லையா? மற்றவர்கள் புரிந்து கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நானோ நீங்களோ சொல்வதை நிறுத்தப் போவதில்லை...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கபிலன் said...
உண்மைத் தமிழனுக்கு அடுத்து என்னையும் இந்து வெறியன் க்ளப்ல சேர்த்துக்கோங்க சஞ்சய் காந்தி !

//

அடடா...என்னங்க இது....இந்து வெறியன் க்ளப்ல ஒரே வாரத்துல மெம்பர்ஷிப் எகிறிடும் போலருக்கே...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
The Analyst said...
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்துக்களை முற்று முழுதாக ஆமோதிக்கிறேன்.

//

புரிதலுக்கு மிக்க நன்றி தி அனலிஸ்ட்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
sanjay..

i think.. am already thr..?! otherwise send me da application procedure pls..! er..tell me, are thr any fees imposed?

shall be very very proud of being a mhc! or rather CM!

//

Priya,

I dont think you need to fill any application. I think you are on top of that list of members :0)))

அது சரி(18185106603874041862) said...

//
துளசி கோபால் said...
நானும் ஒரு ஹிந்து வெறிச்சியாக்கப்பட்டேன்!!!!

//

நீங்களுமா?? சரி விடுங்க டீச்சர்...உண்மையை சொன்னா சில நேரத்துல இப்படி நடக்கிறது உண்டு தான்...

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
அந்தம்மா படிக்கப் போவுதே அங்கேயாச்சும் ஹால் டிக்கெட் வாங்கச்சே மூஞ்சி காட்டுமா
//

தெரியலீங்க அனானிமஸ்...எனக்கு தெரிந்து எல்லா ஹால் டிக்கட்டிலும் முகம் தெரியும் படிதான் படம் இருக்கும்...

//
இல்லை மூடி வச்சி நாறடிக்குமா?
//

இதை நீங்கள் தவிர்த்திருக்கலாம்...ஏனென்று உங்களுக்கே தெரியும்...

கபீஷ் said...

நல்ல இடுகை.

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
During our Washington DC visit, went to White house on sightseeing. While hanging in the backside of the building, there was a Moslem couple (seem to be of middle-east descent), the lady was totally covered in Burka. The husband asked us to take a picture in their Camera with Whitehouse as the backdrop. Before I clicked, the lady lifted her veil over her head exposing her face and posed momentarily for the picture in company of her husband. The moment picture was taken, the veil is back over her face. I've been wondering of this hypocracy all through that day.
//

I would take this incident as a total insult. If the lady dont want anybody else to see her face and why on the hell they ask you to help?? Am I their slave or what?

குடுகுடுப்பை said...

அது சரி said...
//
SanjaiGandhi™ said...
அட போங்க பாஸ்.. பர்தா அணியாத முஸ்லிம்கள் கெட்டக் குடியான்னு கேட்டதுக்கே நான் இந்து வெறியனாகிவிட்டேன். இப்போ நீங்களும். வெல்கம் டூ அவர் இந்துவெறி க்ளப்.

//

உங்கள் பின்னூட்டங்களை அந்த இடுகையில் பார்த்தேன் சஞ்சய்...

நீங்கள் இந்து வெறியன் இல்லை என்று எனக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கு தெரியும்...நீங்களே அந்த க்ளப்பில் சேர்க்கப்பட்டு விட்டீர்கள் என்றால் நானெல்லாம்?? :0))
//

சஞ்சய் ‘காந்தி’ வெறியன் என்பது தெரியும்.

அது சரி(18185106603874041862) said...

//
மயில் said...
நிஜமாவே நான் ஒரு இந்து வெறியைதான் எப்போதும்...
//

மயில்,

இந்து வெறி என்றில்லை எந்த மத வெறியையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை...

//
ஒருவர் அவர் ஆணோ பெண்ணோ மற்றவை பற்றி மோசமாக எழுதும்போது அதை சுட்டி காட்ட எந்த தைரியமும் தேவையில்லை. ஒரு சின்ன எழுத்தில் மற்ற எல்லோரையும் புறந்தள்ளும் அளவு அகந்தையுடன் இருக்கும் போது நான் பதில் தருவதில் எந்த தவறும் இல்லை,
//

முற்றிலுமாக ஒப்புக் கொள்கிறேன்....மோசமானவற்றை சுட்டிகாட்ட எந்த தைரியமும் தேவையில்லை...எழுதுவதற்கு கொஞ்ச நேரம் இருந்தால் போதும்...

//
நல்ல மனிதர்கள் சிலர் இருந்தாலும் பொதுவாகவே இவர்களை போன்றோரும் இவர்களுக்கு என்ன பதில் தருகிறோம் என்று புரியாத சுகுணா திவாகர் (யார் இவர்.. இவ்வளவு குழம்பி போய் இருக்கார்? வேப்பிலை தான் அடிக்கணும்) போன்றவர்களும் இருக்கையில் இது போன்ற தரக்குறைவான நடவடிக்கைகள் தொடரும். நாமெல்லாம் யாரு? காந்தி (சஞ்சய் இல்லைங்க நிஜ காந்தி) பிறந்த நாடு காரங்க. அஹிம்சைய விடகுடாது. அவங்க என்ன இம்சை பண்ணினாலும்..
//

சுகுணா திவாகர் யார் என்று எனக்கும் தெரியாது....ஆனால் பதிவுலகில் அவர் முற்போக்கு பதிவர் என்றும், பிரபல பதிவர் என்றும் அறியப்படுவதாக தெரிகிறது....உன்னைப் போல் ஒருவனை கிழி கிழி என்று கிழித்திருந்த அவர், குறிப்பிட்ட இடுகை பற்றி இட்ட பின்னூட்டங்களை நானும் படித்தேன்...இந்த இடுகை எழுதும் போது அந்த பின்னூட்டங்கள் நினைவில் இருந்ததாலேயே இடுகையின் ஆரம்பத்தில் வரும் எச்சரிக்கைகள்...

//
//எல்லா சமுதாயத்து மக்களும் வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...//
அது தெரிஞ்சிருந்தா இந்த உளறல் இல்லாமல் இருந்திருக்கும் இல்லையா?
//

உண்மை தான்...

வாழ்க்கையில் முன்னேற போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மதமும் மத நூல்களும் இரண்டாம் பட்சம்!

அது சரி(18185106603874041862) said...

//
மயில் said...
//திறந்து வைத்த பண்டங்கள்//

உண்மையில் இந்த வரிகள் இன்னும் என் கோவத்தை குறைக்கவில்லை...i

//

என்னுடைய கோபத்தையும்...இன்னமும் கூட!

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
வாசகர் பரிந்துரையில் இடுகை கண்டு புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமுன்னு வந்தா இன்றைக்கு எனது அலுவல்கள் அத்தனையும் தள்ளி வைப்பு மாதிரி விவாதக்களம்.
//

மதமும் மதம் சார்ந்த உணர்வுகளும் தனிப்பட்ட விஷயங்கள், திறக்கக் கூடாத கதவு என்றிருந்தாலும் என்றைக்கு தனிப்பட்ட ஒருவரின் மத உணர்வுகள் பொதுவுக்கு வருகிறதோ, பொது பிரச்சினைகளை உருவாக்குகிறதோ அன்றைக்கே அந்த கதவு உடைந்து நொறுங்கி விட்டது...

பிரச்சினையின் ஆணி வேரை விட்டு விட்டு, கிளைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது....

//
மதம் ஆணிவேர்களாகிப் போன காரணத்தால் உலுக்கி நகர்த்த இன்னும் காலம் பிடிக்கும்.
//

உண்மை...ஆணிவேர்கள் எப்பொழுதுமே ஆழமானவை...என்றாவது ஒரு நாள் யாரேனும் என்னிலும் பெரியவர்கள், ஒரு பெரியார் போல‌ ஆணிவேரை உலுக்குவார்கள்/உலுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்....!

//
இன்னும் அதிகமாக பெண்கள் பதிவுலகில் பவனி வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.முடியாத விவாதங்களில் இவர்கள் முடங்கிப் போவதில் எனக்கு உடன்பாடில்லை.
//

எனக்கும் அதே கருத்து தான்...என்னை பொறுத்த வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...உருவ அமைப்பை தவிர....ஒரு பெண் நாடாளும் போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் போது, நிலாவில் இறங்கும் போது, பெப்ஸி போன்ற உலகளாவிய நிறுவனத்தை நடத்தும் போது, இன்னும் நிறைய பெண்கள் எழுதலாம்...எழுத வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு...

//
சொல்ல வந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் கதவை சாத்தும் போது நினைவுக்கு வந்தது.
//

நன்றி நடராஜன்...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...Have a great 2010!

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
குவைத்தில் இப்போது பெண்களும் பாராளுமன்றத்துக்கு வந்து விட்டார்கள்.அதில் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணியவில்லை என்று இரு MPகள் மீது மதசார்பு MPகள் அரசியல் சட்டப்படி ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சுமத்தினார்கள்.

பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்கள் சொந்த விருப்பம் என்று பாராளுமன்ற வாக்கெடுப்பிலும் ஹிஜாப் அணியாமல் இருப்பது பெண்களின் உரிமையென்றும் நீதிமன்ற தீர்ப்பு.

ஹிஜாப்புக்கு சொந்தக்காரர்களே சட்டப்படி மனதாலும் மதத்தாலும் முன்னேறுகிறார்கள்.நாம்?

//

தகவலுக்கு நன்றி நடராஜன்....உலகம் இப்படி இருக்கும் போது, பர்தா அணிந்தால் தான் நற்குடி என்று எழுதுபவர்களும், ஜீன்ஸ் பேன்ட் போட்ட பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என்று எழுதுபவர்களும் இருப்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது!

அது சரி(18185106603874041862) said...

//
அமர பாரதி said...
அது சரி,

கடந்த மூன்று நாட்களாய் இது சம்பந்தப்பட்ட அனைத்து இடுகைகளையும் படித்து மனதில் கோபம் கணன்றாலும் எங்கும் பின்னூட்டமிடவில்லை. அவர் செய்த தவறு அவருக்கு தாமதமாகவாவது புரியும் என்ற ஒரு சிறிய எதிர்பார்ப்பு மனதில் இருந்ததே காரணம்.
//

அமர பாரதி,

நிறைய பேருக்கு அந்த எதிர்பார்ப்பு இருந்தது...தவறு என்று கூட இல்லை, தன் எழுத்தை நியாயப்படுத்த முடியுமா என்று...ஆனால் அவரது தொடர் இடுகைகள் எந்த விதமாக இருந்தன என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை...

//
முதலில் அவர் எழுத்தின் விபரீதம் புரியாமல் எழுதினார் என்றே நினைத்தேன். ஆனால் அவருடைய இன்றைய இடுகையைப் படித்த பிறகுதான் ஆணவவும் தாந்தோன்றித்தனமும் கொண்ட விஷம் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் தெரிந்தே எழுதினார். அதில் சந்தேகமேயில்லை. திருநீறை கேவலமாக தெரிந்தே எழுதி விட்டு //ஆனாலும் புனித நூலைப் பழித்து சொன்னதையெல்லாம்(அது எந்த மதத்தினுடையதாக இருந்தாலும் சரி) என் மனம் ஏற்கவில்லை// இப்போது இப்படி வேறு முகம் காட்டுகிறார்.

எதையும் யாரையும் எப்படி வேண்டுமானாலும் எள்ளி நகையாடும் உரிமை அவருக்கில்லை.

//

அவர் தெரிந்தே எழுதினார் என்றே நானும் நினைக்கிறேன்...மதங்களை விமர்சிப்பது வேறு, ஆனால் தன் மதப்படி உடை உடுத்தவில்லை என்பதற்காக மற்றவர்களை விமர்சிப்பது வேறு... அது உரிமையில்லை என்பது மட்டுமல்ல, மிகத் தவறானது என்பதே என் கருத்து....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
முதல் புகைப்படத்தில் இருப்பவர்தான் சுமஜ்லாவா? இப்படி இன்னொரு பதிவரின் புகைப்படத்தை அவர் அனுமதியின்றி தங்கள் பதிவில் போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.(இப்போது முஸ்லிம்களுக்கு பல விஷயம் புரியும்)
//

ப்ப்பச்....அனானிமஸ்!

முதல் படத்தில் இருப்பவர் பதிவர் சுமஜ்லா அவர்கள் அல்ல...அது இங்கு முகம் முழுதும் மூடிக் கொண்டு தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பேன் என்று சொன்ன ஒரு டீச்சரின் படம்...அதுவும் கூட அவரின் பெர்சனல் ஆல்பத்தில் இருந்து நான் திருடி எடுத்துப் போட்ட படம் அல்ல...(படத்திலேயே Getty Images.என்று இருக்கிறது)...இந்த படம் BBச் செய்தியில் இருக்கிறது..இந்த படம் பிபிசியில் மட்டுமல்ல இங்கே பலமுறை டி.வியிலும் வந்திருக்கிறது...அந்த கதைக்கான முழு இணைய முகவரியையும் கொடுத்திருக்கிறேன்...தேவையானால் உங்களுக்காக மீண்டும் அந்த லின்க்...http://news.bbc.co.uk/1/hi/england/bradford/6066726.stm
அதனால் நீங்கள் என்னை வன்மையாக கண்டிக்க அவசியமில்லை....

//
உங்களுக்கும் மற்றும் ஏனையோர்க்கும்:

இஸ்லாம் கூறும் 'பர்தா' என்பது முதல் படத்தில் உள்ளது அல்லவே அல்ல. 'முகம், முன்கை,பாதம் தவிர மற்றவை கனபரிமான்கள் தெரியா வண்ணம் மறைக்கப்படல்' = இஸ்லாமிய பெண்களுக்கான பர்தா.(தாங்கள் நினைப்பதுபோல உடை அல்ல)
//

நான் தெளிவாக எழுதவில்லையோ என்னவோ...பர்தா எது என்பதை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை...அது எனக்கு தேவையில்லாத விஷயம் கூட....ஆனால் பொது இடத்திலும் முகம் மூடி தான் உடை அணிவேன், பர்தா அணிந்தவர்கள் நற்குடி என்று சொல்பவர்களை பற்றியும், அதன் அடிப்படை மற்றும் பிரச்சினைகள் பற்றியே நான் பேச வருவது....

//
அல்கைதா/தலிபான்கள் எல்லாம் நீங்கள் நம்புவதுபோல முஸ்லிம்களின் அத்தாரிட்டி அல்ல. ஏனென்றால் மோடியும் அத்வானியும், சங் பரிவார ஆர்.எஸ்.எஸ்.உம் ஹிந்துக்களின் அத்தாரிட்டி அல்ல அல்லவா?
//

மிக நிச்சயமாக, தலிபான் தறுதலைகளும், அல்கைதா பொறுக்கிகளும் முஸ்லிம்களின் அத்தாரிட்டி அல்ல...ஆனால், தான் நினைப்பதை மற்றவர்களின் மீது திணிப்பததை அவர்கள் மதத்தின் அடிப்படையில் தான் செய்து வருகிறார்கள்....அதனால் மதத்தை பற்றி விவாதிப்பது அவசியமாகிறது! அது இஸ்லாமிய பெண்களின் பிரச்சினை, மற்ற கன்வான்களுக்கு அதைப் பற்றி பேச உரிமையில்லை என்று ஒருவர் சொன்னதாலும், மதத்தின் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளை சொல்லவுமே அந்த உதாரணங்கள்....இதுவே இந்து மதத்தை மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருக்குமானால், மோடி கொலைவெறியும், ப்ரம்மோத் முத்தலிக்கும் உதாரணம் ஆகியிருப்பார்கள்...

//
முஸ்லிம்களின் மீது குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பைமட்டும் குறிப்பிட்டுக்கூருவது நடுநிலையும் அல்ல. நியாமும் அல்ல.
//

உண்மையில், இது என் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது...அதனால் இது நடுநிலைப் பதிவு என்று நானே சொல்ல மாட்டேன்...

நியாயமாக கூட இல்லாது இருக்கலாம்....ஆனால் அப்படி குண்டு வைப்பவர்களின் அடிப்படை காரணம் என்ன? மும்பை குண்டு வெடிப்புக்கும், பெங்களூர் குண்டு வெடிப்புக்கும், அமெரிக்கா மீதான தாக்குதல்களுக்கும், பாகிஸ்தானில் தினம் வெடிக்கும் ஷியா/சன்னி மீதான கொலை வெறி தாக்குதல்களுக்கும் அடிப்படை காரணம் மதம் என்றே நான் நினைக்கிறேன்...வேறு காரணங்கள் உங்களுக்கு தோன்றினால் தாராளமாக சொல்லலாம்....

//
யாரும் எவ்வருவாயுமின்றி நிர்வாணமாக திரிய விரும்புவதில்லை. எவ்வளவு மறைக்க வேண்டும் என்பதிலேதான் பிரச்சினை. அதிகமாய் மறைப்பவர் குறைவாய் மறைப்ப்வரை 'நற்குடியில்லை' என்று சொன்னால், குறைவாய் மறைப்பவர் அதிகமாய் மறைப்பவரை 'நற்குடி இல்லை-நாறகுடி' என்று சொல்ல என்ன தயக்கம்?
//

ப்ப்பச்ச்....என்ன பாஸ் பேசறீங்க நீங்க?? அதிகமாய் மறைப்பவரோ குறைவாய் மறைப்பவரோ அவர்கள் உடையை வைத்து நற்குடியோ நாறக் குடியோ ஆகிவிட முடியுமா?? எல்லாவித உடையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.....அது தான் நான் மட்டுமல்ல, இன்னும் பலரும் சொல்ல வருவது...

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
உங்கள் மனநிலையுடன் ஒத்து போகிறேன்!

ஏற்கனவே பேர் டேமேஜ் ஆகியிருந்ததால் கொஞ்சம் தள்ளி போடலாம் என்று நினைத்திருந்தேன்!

//

நன்றி வால்...

பேர் டேமேஜெல்லாம் பத்தி கவலைப்பட முடியுமா?? எனக்கெல்லாம் பேருன்னு ஒண்ணு இருக்கிறதே டேமேஜ் ஆக்கத் தான்...பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்ணே...நீங்க வழக்கம் போல வாலா வாங்க :0)))

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
இதுகலுக்கேல்லாம்
மேடையமைத்துக்கொடுத்த
ஈரோட்டு சுய விளம்பர
அரைவேக்காட்டுகளும்
ஸ்பான்சரு செய்ததுகளும்
மூச்சு விட்டமாதிரி
தெரியல
சுமல்ஸ கிட்ட இருக்கும்
3 ஓட்டுபோயிடுமுனு பயமா
ஈரோட்டு பதிவர்களுக்கு.
//

அய்யோ சாமி....ஈரோடு நிகழ்ச்சி ஒரு நல்ல அறிமுகத்துக்காக நடத்தப்பட்டது....அவங்களை போய் அரை வேக்காடுன்னு சொல்றது உங்களுக்கே தப்புன்னு தெரியலை? உங்களுக்கு கோபம் இருக்கலாம்...ஆனா, அதை தப்பான இடத்துல காண்பிக்கிறீங்க...

//
ஸ்பான்சரு செய்த
தமிழ் மணம்
தமிழச்சிக்கு தடை போட்டதே
இதற்கு என்ன செய்யப்போகிறது .
பகுத்தறிவு பேசுவேறுக்கு ஒரு சட்டம்
மதவாதிகளுக்கு ஆதரவா ஒரு சட்டமா ...
அப்போ
தமிழ் மணம்
எதனை ஆதரிக்கின்றது .
//

தமிழச்சிக்கு தடை போட்டது எல்லாம் எனக்கு தெரியாதுங்க (எதுக்கு தடை போட்டாங்க?)....ஆனா, தமிழ்மணம் ஒரு தனிப்பட்ட நிறுவனம்...அவங்க மதவாதத்தை ஆதரிக்கிறாங்கன்னு நான் நினைக்கலை...

//
இந்தியாவின் நலன்
இதனால்
பாதிக்கப்படுவதாகவே உணர்கின்றேன் .
இந்திய ஒற்றுமைக்கு
பங்கம் விளைவிக்கும் செயலை
நிறுத்துக்கொள்ளுமாறு
தமிழ் மணத்தையும்
இதன் சார்புடையவர்களையும்
எச்சரிக்கின்றேன் .
//

திருப்பியும் நீங்க தப்பான இடத்துல பாயறீங்க...எழுதிய பதிவருக்கும் தமிழ்மணத்துக்கும் என்னங்க சம்பந்தம்??

உங்க கோவம் எனக்கு புரியுது....ஆனா, பதிவர் எழுதினதுக்கு தமிழ்மணமோ இல்லை ஈரோட்டு பதிவர்களோ என்னங்க செய்வாங்க??

அது சரி(18185106603874041862) said...

//
கிரி said...
//யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்றாலும் தியாக ராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத், பெரியார், பார்ப்பனர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று எந்த விஷயத்தை பேசினாலும் யாருக்காவது மனம் புண்படத் தான் செய்யும் என்பது எழுதப்படாத உண்மை..//

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைவரையும் திருப்தி செய்வது என்பது இயலாத ஒன்று.

//

நன்றி கிரி...இந்த பிரச்சினை எல்லாருக்கும் இருக்கிறது என்றே நினைக்கிறேன்...

அது சரி(18185106603874041862) said...

//
அமுதா கிருஷ்ணா said...
நல்ல டீச்சருக்கு முதல் தகுதியாக் ஜாதி,மத பேதம் இருக்க கூடாது என்று நான் நினைக்கிறேன்...

//

மிக உண்மையான கருத்து அமுதா கிருஷ்ணா...

எனக்கு படிப்பித்த ஆசிரியர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவர்கள்....சிலர் முஸ்லீம்கள்...சிலர் இந்துக்கள்....அவர்கள் யாரும் ஜாதி, மதம் பார்க்கவில்லை....அதனால் கூட எனக்கு சில பதிவர்கள் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது...

அது சரி(18185106603874041862) said...

//
moulefrite said...
அந்த அம்மணியின் பதிவுக்கு எதிர்ப்பதிவு யாருமே போடமாட்டார்களோ என்று ஒரு ஏக்கம் இருந்தது நானும் பிறப்பால் கிருத்துவன்
அதனால் சிறிய வயதில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டப் படிதான் நான் வாழ்வேனென்றால் அது எவ்வளவு
முட்டல்தனமான இழிவான செயல்
//

இதையே நானும் நினைக்கிறேன் moulefrite....சிறிய வயதில் வெறும் அரை ட்ரவுசரோடு அலைந்து கொண்டிருந்தோம் என்பதால் இந்த வயதிலும் அரை ட்ரவுசரோடு அலைய வேண்டுமா என்றே நான் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

//
இதிலிருந்து ஒன்று தெளிவாக புரிகிறது
பதிவர்கள் அனைவரும் சிந்தனாவாதிகள் கிடையாது.
//

உண்மை....எழுதுபவர்கள் எல்லாரும் சிந்தனாவாதிகளும் இல்லை...எழுதாததவர்கள் மடையர்களும் இல்லை...:0)))

//
சொல்ல வழ்த கருத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சொன்னதற்கு
நான் தலை வணங்குகிறேன் எந்த
மயிரான் உங்களை இந்து வெறியன் என்று சொன்னாலும் கவலை கொள்ளாதீர்கள் இத்தனை இதயங்கள்
உங்களின் சொல் வலிமையை புரிந்துக்கொண்டிருக்கும்போது
//

இதுக்கெல்லாம் தலை வணங்குகிறேன் என்று சொல்ல வேண்டாம் பாஸ்....நான் நினைப்பதை என்னால் இயன்றவரை சொல்லியிருக்கிறேன். அவ்வளவே...ஆனால், புரிதலுக்கு மிக்க நன்றி...

அது சரி(18185106603874041862) said...

//
moulefrite said...
சொல்ல மறந்த்துவிட்டன் உஙளின் இந்துவெறி கிளப்பில் இன்றிலிருந்து நானும் ஒரு மெம்பராகிறென் தயவு செய்து என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

//

இதுக்கெல்லாம் தயவு செய்துன்னு சொல்ல வேண்டாம்....ஏற்கனவே உங்களை இந்து வெறி க்ளப்பில் சேத்துருப்பாங்க....இல்லாட்டி...ஏய்...யாருப்பா அங்க....moulfrite சாருக்கு ஒரு சீட் எடுத்துப் போடு....:0))))

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
நல்ல இடுகை.

//

நன்றி கபீஷ்...

(நீங்கள் முந்திய இடுகையில் தந்த லின்குக்கும் நன்றி)

அது சரி(18185106603874041862) said...

//
பிரியமுடன் பிரபு said...
சரியா சொன்னீங்க

அவிகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது
தூங்கியவர்களை எழுப்பலாம் தூங்குவதாய் நடிப்பவர்களி/கற்பனையில் இருப்பவர்களை??!??!?!?!
ம்கும்

விடுங்க

//

நீங்க சொல்றதும் சரி தான்...ஏதோ சொல்லணும்னு தோணிச்சி...சொல்லிட்டேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அது சரி said...
//
SanjaiGandhi™ said...
அட போங்க பாஸ்.. பர்தா அணியாத முஸ்லிம்கள் கெட்டக் குடியான்னு கேட்டதுக்கே நான் இந்து வெறியனாகிவிட்டேன். இப்போ நீங்களும். வெல்கம் டூ அவர் இந்துவெறி க்ளப்.

//

உங்கள் பின்னூட்டங்களை அந்த இடுகையில் பார்த்தேன் சஞ்சய்...

நீங்கள் இந்து வெறியன் இல்லை என்று எனக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கு தெரியும்...நீங்களே அந்த க்ளப்பில் சேர்க்கப்பட்டு விட்டீர்கள் என்றால் நானெல்லாம்?? :0))
//

சஞ்சய் ‘காந்தி’ வெறியன் என்பது தெரியும்.

//

அது எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரு தான?? :0)))

புலவன் புலிகேசி said...

இந்த பிரச்சினையை நானும் கவனித்துகொண்டுதான் இருக்கிறேன். மனிதன் என்று கடவுளை மதங்களிலும், கல்லிலும் தேடுவதை விடுத்து மனித மனங்களில் தேடத் தொடங்குகிறானோ அன்றுதான் இத்தகைய பிரச்சினைகள் தீரும்...

Anonymous said...

//நற்குடி//

இச்சொல் கடித்துவிட்டது உங்களையெல்லாரும். இல்லையா?

ஒரு பார்ப்பனர், தன் வேதமோதும் வாழ்க்கையும் பூணுலும் தன்னை மற்றவரைக்காட்டிலும் நல்லவனாக்குகிறது என்றும், அப்படிப்பட்ட முன்னோர்களுக்குத் தான் பிறந்தவன் என்றும் சொல்லலாம்.

ஆர்.வி என்ற பார்ப்பனர் போட்ட பூணுல் பதிவையும், ‘இல்லாத பிராமணனைத் தேடும் பார்ப்பனர்கள்’ என்று கோவி கண்ணன் போட்ட பதிவுகளையும் பார்த்தால், பார்ப்பனர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை உயர்ந்தது எனக்கருதுகிறார்கள் எனத்தெரிய வரும்.

அவர்களைப் பற்றி ஏதாவது எவரேனும் சொன்னதுண்டா? ஒரு பார்ப்பனப்பட்டாளமே அவர்கள் பின் அல்லவா நிற்கிறது!

அப்படியிருக்க, ஒரு முசுலீம் பெண் தன் பர்தா தன்னை நற்குடியில் பிறந்தவள் என கருத வைக்கிறது என்றால், ஏன் அலறுகிறீர்கள்?

‘நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிப்பவன் அல்லன்’ என தன் விளம்பரம் எவருக்கும் தேவையில்லை. அவரவர் எழுத்துக்கள் அவரவரைக் காட்டிக்கொடுக்கும்.

நீங்கள் யார் என்பதை எழுத்துகளிலேயே திறந்தயு்ண்மையாக இருக்க ஏன் இந்த ஏமாற்றுவேலை?

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ............ said...

நான் எதையும் சொல்லி இவற்றின் அமைதியை கெடுக்க விரும்பவில்லை . இங்கு என் மவுனம் மட்டுமே சிறந்த பதில் . பகிர்வுக்கு நன்றி !!!

கலகலப்ரியா said...

//இதில் தனிமனித தாக்குதல் எங்கே வந்தது என்று எனக்கு புரியவில்லையே...//

என்னைச் சொன்னேன் என்னை சொன்னேன்... இது நான் சார்ந்த பிரச்சன இல்லைன்னு நான் சொன்னேனே... அவ்வ்வ்வ்..

//உலகளாவிய பிரச்சினையாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது!//

உலகளாவிய பிரச்சனை எல்லாம் ஓகே... இப்போ "அது சரி" அப்டிங்கிற ஒரு ஆள் அதிரடிங்கிறதுக்காக... எல்லா "அது சரி" யும் அப்டியா... =))...

//திருமணம் செய்து கொள்ளப்படாத அந்த பெண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே நினைக்கத் தோன்றுகிறது!//

திருமணம் செய்து கொள்ளாத/கொள்ளப்படாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும்தான் அதிர்ஷ்டசாலிகள்... அவ்வ்வ்வ்.. =))

//புரியாவிட்டால் என்ன செய்ய??//

இனிமேலுமா... *shrugs* + *whistles* + *going ahead* ;)) (ஞான் ஆற்றிய தொண்டு கொஞ்சநஞ்சமில்ல மக்கா...௦))

//மூடாது திறந்தே வைத்தாலும் (சமையல்) புளி கெட்டுப் போவது இல்லை//

மிளகாப்பொடி கூட...

//I dont think you need to fill any application. I think you are on top of that list of members :0)))//

just wanna confirm dat...! confirmed..! ty ty..! wot a feel man..!

btw... i've forgotten sth... "hats off to ya.."

waiting for da next post.. :P

shrek said...

why in the hell do these people
believe in whatever crap they are told/from holybooks
(holycraps!)/..etc?? don't they have sense, urge to analyse it & differentiate whats OK and whats NOT.

some 'cunning poofters' who wrote those holybooks(whatever they are) hundreds of years ago, made those naive/stupid people lived back then, believe them.

But i thought we, people in this era, are much smarter than they were. but some(??) people out there, for crying out loud, proclaiming they are not any lesser in eating the holycrap.

all i can say to them is
'go to town man, go to town'
(les grossman from tropic thunder)

எம்.எம்.அப்துல்லா said...

//நற்குடி என்ற சொல்லாடலின் விபரீதத்தை சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்ட/இடுகையிட்ட பதிவர்கள் கோவி.கண்ணன், துளசி டீச்சர், சஞ்சய் காந்தி, கலகலப்ரியா, "மயில்" விஜி ராம், உண்மைத் தமிழன், குடுகுடுப்பை, பிரபாகர், செல்வேந்திரன் //

why did u avoid my name in this list?? hope u have not purposely done.

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

அண்ணா என்னையும் சேத்துகோங்க...
நானும் அதை "நற்குடி"கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...இது பற்றி ப்ரியா அவர்களின் தளத்தில் எனது கருத்தை பதிந்துள்ளேன்..அது தங்கள் பார்வைக்கும் ஒருமுறை....

ஃபர்தா பற்றி சகொதரி சுமஜ்லாவும் அறியப்பெற வேண்டியுள்ளது என தெரிவித்து இருந்தேன்.
ஃபர்தாவை வைத்து,நற்குடி,என பகுப்பது அர்த்தமற்றது,முற்றிலும் அறிவுக்கு பொருந்தாத கருத்து.
அந்த கருத்தை அவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
ஃபர்தா.இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பெண்,தனது இறைவனின் கட்டளை ஏற்று,அதை அணிகிறார்கள்.அவ்வளவே.
அதுவல்லாது..அடிப்படையில் ஆண்களை விட பெண்களின் உடலமைப்பு அதிகம் கவர்ச்சி உடையது.அதுபோல மறைக்கப் பட வேண்டிய பகுதிகளும் அதிகம்.
இது அனைவரும் அறிந்ததே.என்ன...,எவ்வளவு மறைப்பது என்பதே ஒருவருக்கொருவர் கொண்டுள்ள கருத்து வேறுபாடு.அது இருக்கவே செய்யும்.அது ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை பொருத்து அமைகிறது.
அமேரிக்காவில்,குட்டைபாவாடை குறுகலான மேல்சட்டை அணிவது மாடஸ்ட்.அது இந்தியாவில்
இம்மாடஸ்ட்.நம் நாட்டில் சேலை அணிவது மாடஸ்ட்.அது அரேபியாவில் உள்ளவர்களுக்கு இம்மாடஸ்ட்.இதில் என்ன வேடிக்கை என்றால்,அமேரிக்கர்கள்,இந்தியாவின் சேலையை பற்றி சொல்லும் போது,இந்தியர்கள் உடல்முழுதும் மறைத்து,இடுப்பை மட்டும் கவர்ச்சிக்காக வெளிப்படுத்துகிறார்கள் என கூறுகிறார்கள்,ஆனால் அது நமக்கு பெரிதாக படுவதில்லை.
அதுவல்லாது பர்தா என்பது,தனி ஆடைஅல்ல.தங்களது ஆடை முகத்தையும் மணிக்கட்டுவரை கைகளையும் தவிர முழு உடலையும் மறைக்ககூடியதாக இருந்தால்,தாங்களும் பர்தா அணிந்தவரே.அது கறுப்பு அங்கியாக இருக்கவேண்டும் என்று எங்உம் சொல்லப்படவே இல்லை.தேவையற்ற உடல் அங்கங்களை எந்த கண்ணியமான பெண்ணும் காட்ட மறுக்கவே செய்வார்.தனது அழகு தனது கணவர் ஒருவருக்கே,என்பதில் மாற்றுகருத்து யாருக்கும் இருக்க முடியாது.ஒரு அரேபிய தொழில் அதிப பெண்மணியிடம் ஒரு இந்தியப்பெண்,ஃபர்தா ஏன் அணிகிறீகள் என கேட்கப்பட்ட கேள்விக்கு,அவர் அளித்த பதில் என்னை மிகவும் கவர்ந்தது.அவர் சொன்னது"நீங்கள் தங்களது சேலையின் பகுதி எதிலாவது சிக்கி பொது இடத்தில் தங்களது கால்கள் வெளிப்படுவதை எவ்வாறு விரும்ப மாட்டீகளோ,அது போல,நாங்கள் எங்களது உடலை அன்னிய ஆண்கள் பார்ப்பதை விரும்புவதில்லை" என்றார்.இது இஸ்லாமிய சட்டத்திற்கு அப்பாற்பட்டு,ஏற்று கொள்ளகூடிய வாதமாகவே தோன்றுகிறது.அது பொது இடங்களில் இருக்கும் காலிகளிடம் இருந்து,அவ்ர்க்ளின் சீண்டலில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது.அவர்களுக்கு கவர்ச்சியாக தெரிந்து அவர்களை ஈர்த்துவிட்டு,பின்னர அவ்ர்களால் வந்த ப்ரச்சனைகளுக்கு,நிவாரணம் தேடுவதைவிட,இது சிறந்ததே..இது பர்தாவிற்கு மட்டும் நான் சொல்லவில்லை..கண்ணியம் காக்கும் எந்த ஆடைக்கும் இது பொருந்தும்.
உடலை முறையாக மறைக்க வேண்டும் எனபதே நோக்கம்.அது பர்தா எனும் கருப்பு அங்கியை கொண்டு எனபது இல்லை.முழு உடலையும் மறைப்பது,ஒரு பெண்ணுக்கு,மிகச்சிறந்த கண்ணியத்தை வழங்குகிறது.அதை நாம் ஹிலாரி க்ளிண்டன்,போன்ற அமேரிக்கர்கள் முதல்,ப்ரதீபா பாட்டீல்,சுஸ்மா சுவராஜ்,மாயாவதி,நவநாகரீக கவர்ச்சி ஆடை பயன்படுத்தி பழகிய ஜெயலலிதா,போன்ற இந்தியர்களிடமும் காணமுடியும்.அவர்களுக்கு எந்த ஆடை கட்டுப்பாடும் யாரும் விதிக்க முடியாதே.அவர்கள் நாடுவது,அந்த உயர்பதவியில் இருக்கும் தங்களுக்கு அது போன்ற ஒரு ஆடையே சிறந்தது,கண்ணியமானது எனபதே.இஸ்லாம் இந்த கண்ணியத்தை,அனைத்து பெண்களும் பெற விழைகிறது,அவ்வளவே....

நன்றி

நட்புடன்
ரஜின்.
http://sunmarkam.blogspot.com/

தங்கள் தளத்தை முதல்முறை பார்வையிடுகிறேன்...நல்லா இருக்கு...உரிமையுடன் பின் தொடருவேன்..

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

அடிப்படையில் நான் முஸ்லிமாக இருந்தாலும்,தாலிபானிஸத்தையும்,சில முல்லாக்களின் ஃபத்வாக்களையுமே,முழு உலகமும் இஸ்லாமாக பார்க்கிறது..ஊடகங்களும் அதை தான் இஸ்லாம் சொல்கிறது என முன்னிருத்துகிறது.அதை நான் முற்றிலும் வெருக்கிறேன்.கண்டிக்கிறேன்.இக்கருத்தில் தங்களுடன் ஒன்றி நிற்கிறேன்.

நன்றி

நட்புடன்
ரஜின்
http://sunmarkam.blogspot.com/

அது சரி(18185106603874041862) said...

//
புலவன் புலிகேசி said...
இந்த பிரச்சினையை நானும் கவனித்துகொண்டுதான் இருக்கிறேன். மனிதன் என்று கடவுளை மதங்களிலும், கல்லிலும் தேடுவதை விடுத்து மனித மனங்களில் தேடத் தொடங்குகிறானோ அன்றுதான் இத்தகைய பிரச்சினைகள் தீரும்...
30 December 2009 01:47
//

கரெக்டா சொன்னீங்க புலிகேசி....மனம் தான் கடவுள்...மனிதன் தான் கடவுள்... அஹம் பிரம்மாஸ்மி!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
//நற்குடி//

இச்சொல் கடித்துவிட்டது உங்களையெல்லாரும். இல்லையா?

ஒரு பார்ப்பனர், தன் வேதமோதும் வாழ்க்கையும் பூணுலும் தன்னை மற்றவரைக்காட்டிலும் நல்லவனாக்குகிறது என்றும், அப்படிப்பட்ட முன்னோர்களுக்குத் தான் பிறந்தவன் என்றும் சொல்லலாம்.

ஆர்.வி என்ற பார்ப்பனர் போட்ட பூணுல் பதிவையும், ‘இல்லாத பிராமணனைத் தேடும் பார்ப்பனர்கள்’ என்று கோவி கண்ணன் போட்ட பதிவுகளையும் பார்த்தால், பார்ப்பனர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை உயர்ந்தது எனக்கருதுகிறார்கள் எனத்தெரிய வரும்.

அவர்களைப் பற்றி ஏதாவது எவரேனும் சொன்னதுண்டா? ஒரு பார்ப்பனப்பட்டாளமே அவர்கள் பின் அல்லவா நிற்கிறது!

அப்படியிருக்க, ஒரு முசுலீம் பெண் தன் பர்தா தன்னை நற்குடியில் பிறந்தவள் என கருத வைக்கிறது என்றால், ஏன் அலறுகிறீர்கள்?
//

இந்த அனானிமஸ் யாராக இருந்தாலும்....

சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ தன்னை உயர்ந்தவன் என்று யார் நினைத்தாலும் தவறு தான்...இதில் எந்த விதிவிலக்கும் இல்லை...இந்த மதத்தில் பிறப்பதோ, இந்த ஜாதியில் பிறப்பதோ நீங்கள் தீர்மானிப்பதல்ல...அப்புறம் என்ன பெருமையும் சிறுமையும்??

//
‘நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிப்பவன் அல்லன்’ என தன் விளம்பரம் எவருக்கும் தேவையில்லை. அவரவர் எழுத்துக்கள் அவரவரைக் காட்டிக்கொடுக்கும்.

நீங்கள் யார் என்பதை எழுத்துகளிலேயே திறந்தயு்ண்மையாக இருக்க ஏன் இந்த ஏமாற்றுவேலை?

//

நான் ஏமாற்றுகிறேன் என்று உங்களுக்கு புரிதலானால் அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை...அப்படியே இருக்கட்டும்!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//இதில் தனிமனித தாக்குதல் எங்கே வந்தது என்று எனக்கு புரியவில்லையே...//

என்னைச் சொன்னேன் என்னை சொன்னேன்... இது நான் சார்ந்த பிரச்சன இல்லைன்னு நான் சொன்னேனே... அவ்வ்வ்வ்..
//

அடடா...நான் உங்களை சொல்லலீங்க...நான் எனக்கு தோன்றியதை சொன்னேன்...

அது சரி(18185106603874041862) said...

//
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ............ said...
நான் எதையும் சொல்லி இவற்றின் அமைதியை கெடுக்க விரும்பவில்லை . இங்கு என் மவுனம் மட்டுமே சிறந்த பதில் . பகிர்வுக்கு நன்றி !!!

//

வருகைக்கு நன்றி சங்கர்...மீண்டும் வருக...

அது சரி(18185106603874041862) said...

//
shrek said...
why in the hell do these people
believe in whatever crap they are told/from holybooks
(holycraps!)/..etc?? don't they have sense, urge to analyse it & differentiate whats OK and whats NOT.

some 'cunning poofters' who wrote those holybooks(whatever they are) hundreds of years ago, made those naive/stupid people lived back then, believe them.

But i thought we, people in this era, are much smarter than they were. but some(??) people out there, for crying out loud, proclaiming they are not any lesser in eating the holycrap.

all i can say to them is
'go to town man, go to town'
(les grossman from tropic thunder)

//

Mr.Shrek,

I think you are of my type... I totally agree with your views and comments!

If you have not already started your own blog, it would be really good to start one now :0)))

அது சரி(18185106603874041862) said...

//
எம்.எம்.அப்துல்லா said...
//நற்குடி என்ற சொல்லாடலின் விபரீதத்தை சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்ட/இடுகையிட்ட பதிவர்கள் கோவி.கண்ணன், துளசி டீச்சர், சஞ்சய் காந்தி, கலகலப்ரியா, "மயில்" விஜி ராம், உண்மைத் தமிழன், குடுகுடுப்பை, பிரபாகர், செல்வேந்திரன் //

why did u avoid my name in this list?? hope u have not purposely done.
//

அப்துல்லாண்ணே,

அவாய்டெல்லாம் பெரிய வார்த்தைங்கண்ணே...அதுவும் இந்த கான்டெக்ஸ்ட்ல தப்பா புரிஞ்சிக்க வாய்ப்பிருக்கு...இந்த இடுகையை எழுதும் போது நான் உங்க இடுகையை படிக்கல....படிச்சிருந்தா சேத்திருப்பேன்....

அது சரி(18185106603874041862) said...

//
H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...
அண்ணா என்னையும் சேத்துகோங்க...
நானும் அதை "நற்குடி"கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...இது பற்றி ப்ரியா அவர்களின் தளத்தில் எனது கருத்தை பதிந்துள்ளேன்..அது தங்கள் பார்வைக்கும் ஒருமுறை....
//

கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரஜின்....

உடைகள் என்பது தனி மனிதர்களின் விருப்பம்...ஆனால் அதை வைத்து மற்றவர்களை மதிப்பிடும் போது தான் பிரச்சினை வருகிறது...

அது சரி(18185106603874041862) said...

//
H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

தங்கள் தளத்தை முதல்முறை பார்வையிடுகிறேன்...நல்லா இருக்கு...உரிமையுடன் பின் தொடருவேன்..

//

You are most welcome to follow and share your views and opinions...After all, that's what life is all about...:0)))

KARTHIK said...

// இந்த வெற்றி தரும் செய்தி மிக கவலைக்குரியது... மத ரீதியாக பிளவுபட்டிருக்கும், தீவிரவாதி என்றால் முஸ்லீம் என்று நினைக்கும் ஒரு மனநிலையை தான் இது காட்டுகிறதா?/

பதிவ படிச்சிட்டு வரவங்களுக்குத்தாங்க அப்படித்தெயுது.என்னோடா படம் பாத்த மத்த பசங்களுக்கு அப்படி எதுவும் தெரியலங்க
கடசில படம் முடியும் போது காமன்மேன் போலீஸ்ல மாட்டிக்ககூடாதுங்குறதுதான் அவிங்க கவலையா இருந்துதுங்க :-))