டிசம்பர் முப்பத்தொன்னு இரவுக்குள் குறைந்த பட்சம் நூறு பேருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லாவிட்டால் உன் வீட்டில் சன் டிவி தெரியாது என்று எந்த சாமியாராவது கிளப்பி விட்டு விட்டானா என்று தெரியவில்லை....எத்தனை பதுங்கினாலும் விடாது கறுப்பு ரேஞ்சுக்கு கொலை வெறியோடு துரத்தி துரத்தி வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.....டிசம்பர் 31 இரவு என்றால் ஹாப்பி நியூ இயர் சொல்வதை தவிர யாருக்கும் வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ ஃபோனை எடுக்காவிட்டால் திருப்பி சொல்ல டீஸன்ஸி கூட இல்லையா என்ற பேச்சுக்கள் வேறு...
வருடம் முழுவதும் எந்த தொடர்பும் இல்லாமல் திடீரென்று நள்ளிரவில் ஹாப்பி நியூ இயர் என்று மெஸேஜ் அனுப்புபவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது....ஒரு ந(ண்)பர் இன்னும் சில படிகள் மேலே போய் ஈமெயிலில் எனக்கும் குடும்பத்திற்கும் வாழ்த்து அனுப்பி வைத்திருந்தார்.....ஆனால் டூ அட்ரஸில் என் பெயரே இல்லை....அவர் பெயர் மட்டுமே இருக்கிறது...க்ரூப் ஈமெயில்...இவர்களிடம் எல்லாம் எனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லு என்று எவன் கேட்டான் என்று தெரியவில்லை...தேமேயென்று தெருவோடு போய்க் கொண்டிருப்பவனை "ஏய்...இங்க பிச்சை போட்டுக்கிட்டு இருக்கோம்ல...நீ பாட்டுக்கு போய்க்கிட்டுருக்க...இந்தா அஞ்சு காசு...நல்லா இரு" என்று வன்முறையாக பிச்சை போடுவது போல வக்கிரமாக இருக்கிறது....
ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்களே...இனிமேலாவது க்ரூப் ஈமெயில், க்ரூப் மெஸேஜ் அனுப்பி என்னை புதுப் பிச்சைக்காரனக்காதீர்கள்...ப்ளீஸ்...உங்கள் வாழ்த்துக்கள் இல்லாது நான் ஒன்றும் மனம் உடைந்து போய்விட மாட்டேன்...
=======================
முந்திய இரவின் எரிச்சலுடன் மறுநாள் தமிழ்மணத்தை திறந்தால் தமிழ்மண விருதுகளில் முதற்கட்டத்தை கடந்தவர்களின் பட்டியல்....கிட்டத்தட்ட எல்லாப் பிரிவுகளிலும் நான் ஓட்டுப் போட்டவர்களின் பெயர்கள்....ஏய் எங்காளு ஜெயிச்சிட்டாருல்லன்னு பயங்கர சந்தோஷம்...
ஆனாலும், படைப்பிலக்கியம் (கதை, கவிதை போன்றவை) பட்டியலில் எதிர்பார்த்தபடியே நான் ஓட்டுப் போட்ட நபரின் பெயர் இல்லை...இந்தப் பிரிவுக்கு நான் எழுதிய நான் கடவுள்.... அனுப்பி வைத்திருந்தேன்...முட்டை ஓட்டு வாங்கி, "தமிழ்மண சரித்திரத்திலேயே" என்ற வரலாறு படைக்க விருப்பமின்றி எனக்கு நானே ஓட்டுப் போட்டதால் இந்தப் பிரிவில் நான் ஓட்டளித்த நபரின் பெயர் இல்லாதது புரிந்து கொள்ளக் கூடியதே...
ஆனால், அதே பிரிவில் டாக்டர் தேவன் மாயம் எழுதிய தலையணை மந்திரங்கள் 16 என்றொரு இடுகை தேர்வாகியிருக்கிறது.....மூன்று ரவுண்ட் விஸ்கி அடித்து விட்டு ரூம் போட்டு யோசித்தாலும் இந்த இடுகை இலக்கியமா இலக்கியமானால் என்ன விதமான இலக்கியம் என்று இது வரை எனக்கு புரியவில்லை...உண்மை தான்...நான் அதிகம் வாசித்ததில்லை...பதிவர்களில் பலரும் படித்திருக்கும் சுஜாதாவை கூட நான் வாசித்ததில்லை...சில சமயங்களில் அவரின் கற்றதும் பெற்றதும் தவிர...ஒரு வேளை குடிக்கும் நேரத்தில் எதையாவது படித்திருந்தால் தலையணை மந்திரங்கள் எந்த வகையில் இலக்கியமாகிறது என்று புரிந்திருக்குமோ என்னவோ...
தேர்வாகாதவனின் வயிற்றெரிச்சல், காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று சொல்பவர்களோ இல்லை இந்த இடுகைக்கு இலக்கியம் என்று ஓட்டுப் போட்ட பதிவர் பெருந்தகைகளோ இல்லை எழுதிய தேவன் மாயம் அவர்களோ இது எந்த வகையில் இலக்கியமாகிறது என்று அறியத் தந்தால் மிக்க தன்யனாவேன்...
இது இலக்கியமாகும் பட்சத்தில் ஜெயமோகன் சொல்வது போல ராஜேஷ்குமாருக்கு சாகித்ய அக்காடமி விருது தரப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை...அகாடமி மனசு வைக்குமா என்று பார்க்கலாம்...
============================
பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜெயமோகன் குறித்து சாரு நிவேதிதாவின் பேச்சு... ஜெயமோகனை பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும் இலக்கியவாதி என்று அறியப்படாத மதன் பாப்பையும், தமிழ் படிக்கத் தெரியாத ஷாஜியையும் புத்தகத்தை படிக்காவிட்டாலும் எதையாவது வந்து பேசுங்கள் என்று சொல்லியிருப்பதன் மூலம் சாரு தமிழ் இலக்கிய சூழல் பற்றி மிக அழுத்தமாக ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்...சரியான ஸ்டேட்மென்ட் தான்! =============================
இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது என் புருஷனும் சந்தைக்குப் போனான் கதையாக எல்லா போட்டிக்கும் எதையாவது அனுப்பி வைத்து அமைப்பாளர்களை இம்சை செய்வது எனக்கே கஷ்டமாக இருப்பதால் இனி எந்த போட்டிக்கும் எதையும் அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்...நியூ இயர் ரிசல்யூஷன்!
அதை மட்டும் நிறுத்தினா எப்படி...நீயெல்லாம் எழுதுறதையே நிறுத்திட்டா பதிவுலகத்துலருந்து பாதாள லோகம் வரை எல்லாரும் நல்லாருப்பாங்க என்று சொல்கிறது வேதாளம்....அது கொஞ்சம் நம்பியார் டைப் தான் என்றாலும் காது வரை குடித்து விட்டு கண் கொஞ்சம் மங்கலாக தெரியும் போது அது உண்மை மட்டுமே பேசித் தொலையும் என்பதால் அதையும் தீவிரமாக யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்பது பதிவுலக வாசகர்களுக்கான புத்தாண்டு நற்செய்தி!
36 comments:
For comments....
ennoda oops piriyani kku naane ootu pottukala thala appo zero votu vaanginathu naan mattumthaanaa.
ennoda pathivukala enthappirivukalilum sekka mudiyathu , athu oru maathiri puthu elakiyam.
vaalthu thaanee vituththallunga, avanavan iraivan azaikirar , nee purinthu kol avan mattumee kadavul nu imsai panran.
//வருடம் முழுவதும் எந்த தொடர்பும் இல்லாமல் திடீரென்று நள்ளிரவில் ஹாப்பி நியூ இயர் என்று மெஸேஜ் அனுப்புபவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது//
பல நேரங்களில் விடுபட்ட நட்புகளை புதுப்பிக்க முடிகிறது இப்படி சம்பிரதாய ஆரம்பங்களால். இந்த ஒரு நாளில் (எந்த ஒரு நாளாக இருந்தாலும் எனக்கு சரியே)மட்டுமாவது பேச முனைவது ஒரு ஆரம்பமாக இருக்கலாம்.
***
முதல் நாள் மட்டும் தவிர்த்து முதல் வாரத்தில் அல்லது மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து வாழ்த்துச் சொல்லலாம்.
1 அன்றே சொல்லவேண்டும் என்று சாகடிப்பது ஒருவகை நோய்
****
இலக்கிய மொக்கை- வினவு
http://vinavu.wordpress.com/2009/01/07/bof5/
super !!!!!!!!
//ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்களே...இனிமேலாவது க்ரூப் ஈமெயில், க்ரூப் மெஸேஜ் அனுப்பி என்னை புதுப் பிச்சைக்காரனக்காதீர்கள்...ப்ளீஸ்...உங்கள் வாழ்த்துக்கள் இல்லாது நான் ஒன்றும் மனம் உடைந்து போய்விட மாட்டேன்...//
அது சரி டச்....
அதுதான் ஃபேஸ்புக்,ட்விட்டர், ஆர்குட், ப்ளாக்னு சோசியல் ஃபோரம்ஸ் நிறைய இருக்கே அதுல தட்டி விட்டா படிக்கிறவனுங்க எல்லாம் வாழ்த்த வாங்கிக்கிறோம். அப்புறம் எதுக்கு ஈ-மெயில், ஃபோன் கால் எல்லாம்?
//மூன்று ரவுண்ட் விஸ்கி அடித்து விட்டு ரூம் போட்டு யோசித்தாலும் இந்த இடுகை இலக்கியமா இலக்கியமானால் என்ன விதமான இலக்கியம் என்று இது வரை எனக்கு புரியவில்லை.//
எனக்கும் எனக்கும்...
//அதை மட்டும் நிறுத்தினா எப்படி...நீயெல்லாம் எழுதுறதையே நிறுத்திட்டா பதிவுலகத்துலருந்து பாதாள லோகம் வரை எல்லாரும் நல்லாருப்பாங்க என்று சொல்கிறது வேதாளம்....அது கொஞ்சம் நம்பியார் டைப் தான் என்றாலும் காது வரை குடித்து விட்டு கண் கொஞ்சம் மங்கலாக தெரியும் போது அது உண்மை மட்டுமே பேசித் தொலையும் என்பதால் அதையும் தீவிரமாக யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்பது பதிவுலக வாசகர்களுக்கான புத்தாண்டு நற்செய்தி!
//
ஹலோ இப்பிடி சொன்னா எப்புடி? வேதாளத்த நாடு கடத்திடுவோம்.
இந்த புது வருசத்துல உங்கள வச்சு ஒரு தொடர் பதிவுக் கதை ஆரம்பிக்கலாம்னு ஒரு பெரிய திட்டமே இருக்கு.
ஆரம்பமே டரியலா:). நடக்கட்டு. ஆஃபீஸ்ல இந்த வன்முறை இன்னும் அதிகம். வன்முறை வாழ்த்துக்கள் விஷயத்துல நானும் உங்க கட்சிதான்.
புத்தாண்டு வாழ்த்துகள் :))
ம்ம்...நடக்கட்டும் ...நடக்கட்டும். (கச்சேரி களை கட்டினாச்சரி )
:)))
ஓட்டு போடுவதின் பரிசுத்ததை தமிழ் மணத்திலாவது காக்கலாமே என்று மௌனமாய் சிலருக்கு ஓட்டுப் போட்டிருந்தேன்.நான் கடவுள் உள்பட. பூஜ்யம் வாக்குன்னு சொன்னா எப்படி?
=))... ம்ம்... நான் தவறுதலா ஹாப்பி நியூ இயர் சொன்ன அந்த மெயில் வாபஸ்... =))...!!! இரவு பன்ரெண்டு மணிக்கு நான் கொட்ட கொட்ட விழிச்சிண்டிருந்தாலும்... போன் வந்தா விளிக்க வேணாம்னு சொல்லிடுவேன்..!! அவ்ளோ lazy =)..!
அப்புறம் நான் கடவுளுக்கு இன்னொரு ஓட்டு விழுந்திருக்கணுமே..! கம்பனி ரகசியம் எல்லாம் வெளில சொல்லிக்கிட்டு..=))...
ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... =)))))..... ஜூட்...
//ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்களே...இனிமேலாவது க்ரூப் ஈமெயில், க்ரூப் மெஸேஜ் அனுப்பி என்னை புதுப் பிச்சைக்காரனக்காதீர்கள்...ப்ளீஸ்...உங்கள் வாழ்த்துக்கள் இல்லாது நான் ஒன்றும் மனம் உடைந்து போய்விட மாட்டேன்...//
ஓகே பாஸ்.. :)
பதிவு எழுதிவதை நிறுத்தினால், பிரிட்டனுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
nice writing, this post itself a ILAKKIYAM
//
குடுகுடுப்பை said...
ennoda oops piriyani kku naane ootu pottukala thala appo zero votu vaanginathu naan mattumthaanaa.
//
குடுகுடுப்பை,
வரலாறு படைக்கிறதுனால தான் நீங்க குஜமுக தலைவரா இருக்கீங்க...நான் தொண்டனா இருக்கேன்....தொடர்ந்து சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள் :0))))
//
குடுகுடுப்பை said...
ennoda pathivukala enthappirivukalilum sekka mudiyathu , athu oru maathiri puthu elakiyam.
//
அது இலக்கியம் இல்ல....குலக்கியம் :0))))
//
குடுகுடுப்பை said...
vaalthu thaanee vituththallunga, avanavan iraivan azaikirar , nee purinthu kol avan mattumee kadavul nu imsai panran.
//
அந்த இறைவன் அழைக்கிறார் இம்சை பெரிய இம்சை...ஆனா இந்த ஹாப்பி நியூ இயர் வைரஸோட கம்பேர் பண்ணும் போது அந்த இம்சையே பரவால்லைன்னு எனக்கு தோணுது...:0)))
//
கல்வெட்டு said...
//வருடம் முழுவதும் எந்த தொடர்பும் இல்லாமல் திடீரென்று நள்ளிரவில் ஹாப்பி நியூ இயர் என்று மெஸேஜ் அனுப்புபவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது//
பல நேரங்களில் விடுபட்ட நட்புகளை புதுப்பிக்க முடிகிறது இப்படி சம்பிரதாய ஆரம்பங்களால். இந்த ஒரு நாளில் (எந்த ஒரு நாளாக இருந்தாலும் எனக்கு சரியே)மட்டுமாவது பேச முனைவது ஒரு ஆரம்பமாக இருக்கலாம்.
//
அட அப்படி கன்டினியூ செஞ்சா தான் பரவாயில்லையே....இந்த மெஸேஜ்ல பாதி க்ரூப் மெஸேஜ்....யாருக்கெல்லாம் அனுப்புறோம்னு அனுப்புறவங்களுக்கே தெரியாது...சும்மா அனுப்பி வச்சி டார்ச்சர் பண்றது தான் டென்ஷனா இருக்கு...
//
முதல் நாள் மட்டும் தவிர்த்து முதல் வாரத்தில் அல்லது மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து வாழ்த்துச் சொல்லலாம்.
1 அன்றே சொல்லவேண்டும் என்று சாகடிப்பது ஒருவகை நோய்
//
கரெக்டா சொன்னீங்க...ஃபோனை எடுக்காட்டி என்னவெல்லாம் திட்டி வாய்ஸ் மெஸேஜ் விட்றாய்ங்கன்னு கேளுங்க...நானே மண்டை காஞ்சிக்கிட்டு இருக்கேன்...இதுல இப்படி ஃபோன் பண்ணி வேற திட்டினா நான் என்ன பண்றது??
//
இலக்கிய மொக்கை- வினவு
http://vinavu.wordpress.com/2009/01/07/bof5/
//
லின்குக்கு நன்றி...படிச்சிட்டு சொல்றேன்...இலக்கியமே மொக்கை தான்னு வினவுல சொல்லிட்டாங்களா? :0))))
//
செந்தழல் ரவி said...
super !!!!!!!!
//
அட ரவியண்ணே! எங்க பாஸ் போனீங்க, ரொம்ப நாளா எதுவும் எழுதற மாதிரி தெரியலையே....
இந்த இடுகையில "இம்சை"ன்னு வார்த்தை வந்ததும் கரெக்டா எப்பிடி அப்பியர் ஆகுறீங்க? :0))))
//
முகிலன் said...
//மூன்று ரவுண்ட் விஸ்கி அடித்து விட்டு ரூம் போட்டு யோசித்தாலும் இந்த இடுகை இலக்கியமா இலக்கியமானால் என்ன விதமான இலக்கியம் என்று இது வரை எனக்கு புரியவில்லை.//
எனக்கும் எனக்கும்...
//
கம்பெனிக்கு தேங்க்ஸ் பாஸூ....நல்லவேளை....நான் மட்டும் தனியா இல்ல..:0)))
//
முகிலன் said...
இந்த புது வருசத்துல உங்கள வச்சு ஒரு தொடர் பதிவுக் கதை ஆரம்பிக்கலாம்னு ஒரு பெரிய திட்டமே இருக்கு.
//
அடப்பாவிங்களா...என்னை வச்சி காமெடி பண்ணப் போறதை என்கிட்டயே சொல்லிட்டு செய்றீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//
வானம்பாடிகள் said...
ஆரம்பமே டரியலா:). நடக்கட்டு. ஆஃபீஸ்ல இந்த வன்முறை இன்னும் அதிகம். வன்முறை வாழ்த்துக்கள் விஷயத்துல நானும் உங்க கட்சிதான்.
//
ஆஹா...இந்த நியூ இயர் கொலைவெறிய எதிர்த்து கட்சி ஆரம்பிச்சா ஜெயிச்சிடலாம் போல இருக்கே...:0)))
//
எம்.எம்.அப்துல்லா said...
புத்தாண்டு வாழ்த்துகள் :))
//
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே...
ஆமா, எங்களுக்கும் பழி வாங்க தெரியுமாக்கும்...:0)))
//
Mrs.Dev said...
ம்ம்...நடக்கட்டும் ...நடக்கட்டும். (கச்சேரி களை கட்டினாச்சரி )
:)))
//
ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க...வருகைக்கு நன்றி...
//
ராஜ நடராஜன் said...
ஓட்டு போடுவதின் பரிசுத்ததை தமிழ் மணத்திலாவது காக்கலாமே என்று மௌனமாய் சிலருக்கு ஓட்டுப் போட்டிருந்தேன்.நான் கடவுள் உள்பட. பூஜ்யம் வாக்குன்னு சொன்னா எப்படி?
//
அய்யோ அண்ணே...அது என்னை வச்சி யாரும் காமெடி பண்ணிடக்கூடாதுன்னு நானே பண்ணிக்கிட்ட காமெடி...அதுக்காக இப்படி தேர்தல் ரகசியத்தையெல்லாம் வெளிய சொல்லப்படாது....ம்கூம்...நீங்க அரசியலுக்கெல்லாம் தப்பி தவறி போயிடாதீங்க...:0))))
//
கலகலப்ரியா said...
=))... ம்ம்... நான் தவறுதலா ஹாப்பி நியூ இயர் சொன்ன அந்த மெயில் வாபஸ்... =))...!!! இரவு பன்ரெண்டு மணிக்கு நான் கொட்ட கொட்ட விழிச்சிண்டிருந்தாலும்... போன் வந்தா விளிக்க வேணாம்னு சொல்லிடுவேன்..!! அவ்ளோ lazy =)..!
//
நான் அதுக்கூட சொல்ல மாட்டேன்...உங்களை விட lazy...
//
அப்புறம் நான் கடவுளுக்கு இன்னொரு ஓட்டு விழுந்திருக்கணுமே..! கம்பனி ரகசியம் எல்லாம் வெளில சொல்லிக்கிட்டு..=))...
//
அடடா...இப்படி எல்லாரும் யாருக்கு வோட்டு போட்டேன்னு சொன்னா அப்புறம் எலக்ஷன்லாம் என்னாகுறது?? இதெல்லாம் ரகசியமா வச்சிக்கணுமாக்கும்...:0)))
//
ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... =)))))..... ஜூட்...
//
அடப்பாவிகளா...இன்னுமா?? :0))))
//
Saravana Kumar MSK said...
பதிவு எழுதிவதை நிறுத்தினால், பிரிட்டனுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
//
இதை யார் சொல்றது?? சரவணா, நீங்க கடைசி இடுகை எழுதி ரெண்டு மாசம் ஆச்சு...
இனி குறைந்த பட்சம் வாரம் ஒரு இடுகை எழுதாட்டி, உங்க வீட்டுக்கு நான் சொந்த செலவுல லாரி அனுப்புவேன்...
//
குப்பன்.யாஹூ said...
nice writing, this post itself a ILAKKIYAM
//
குப்பன் யாஹூ,
நீங்க என்னை வச்சி காமெடி ஏதும் பண்ணலியே...:0)))
வாழ்த்து சொல்வதை ஒரு மரபாகவே செய்கிறார்கள்!, நான் உனக்கு நண்பன் என ஒரு ஒட்டுதல் அவர்களுக்கு தெரிகிறது, பரஸ்பர மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்ப்படுகிறது!
நமக்கு என்ன தான் எரிச்சல் என்றாலும் அவர்களது சில நிமிட மகிழ்ச்சியை இப்படி விளாசியிருக்க வேண்டாம் என தோன்றுகிறது!
உங்களை போலவே எல்லாரும் மெச்சூர்டா இருந்துட்டா யாரும் ப்ளாக் கூட எழுத மாட்டாங்க! ஏன்னா இதுவே வெட்டி வேலை தான்னு உங்களுக்கே தெரியும்!
//
வால்பையன் said...
வாழ்த்து சொல்வதை ஒரு மரபாகவே செய்கிறார்கள்!, நான் உனக்கு நண்பன் என ஒரு ஒட்டுதல் அவர்களுக்கு தெரிகிறது, பரஸ்பர மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்ப்படுகிறது!
//
நீங்கள் சொல்வதில் ஒரு சின்ன முரண்பாடு இருக்கிறது வால்....பலர் கடமைக்காக வெறும் மரபாகவே செய்கிறார்கள் என்பது தான் உண்மை...எனது முக்கிய எரிச்சல் என் பெயரே இல்லாது எனக்கு க்ரூப் இமெயில் அனுப்பியவர்கள் மீதும், காலை நாலு மணிக்கு எழுப்பி ஹாப்பி நியூ இயர் என்று சொல்பவர்கள் மீதும் தான்....முக்கியமான சந்தர்ப்பத்தில் விடாது ஃபோன் அடித்துக் கொண்டிருந்தால் எத்தனை பிரச்சினையாக இருக்கும் என்பது உங்களுக்கும் தெரியுமே...
//
நமக்கு என்ன தான் எரிச்சல் என்றாலும் அவர்களது சில நிமிட மகிழ்ச்சியை இப்படி விளாசியிருக்க வேண்டாம் என தோன்றுகிறது!
//
ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை...இதை நான் தவிர்த்திருக்கலாம்.... ஆனாலும் பெயரையே குறிப்பிடாது கும்பலோடு கும்பலாக ஒருவருக்கு ஹாப்பி நியூ இயர் என்று மெயில் அனுப்புவதும், எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் இழிவுபடுத்துவதாகத் தான் இருக்கிறது....உண்மையிலேயே அக்கறை உள்ள நண்பர்கள் குறைந்த பட்சம் எஸ்.எம்.எஸ்ஸில் உங்கள் பெயரையாவது குறிப்பிடுவார்கள் இல்லையா??
//
உங்களை போலவே எல்லாரும் மெச்சூர்டா இருந்துட்டா யாரும் ப்ளாக் கூட எழுத மாட்டாங்க!
//
மீண்டும் முரண்பாடு...நான் மெச்சூர்டா இருந்தா இந்த விஷயத்தை சரி விடுன்னு விட்டுட்டு போயிருப்பேன்...எழுதியே இருக்க மாட்டேனே ;0))))
//
ஏன்னா இதுவே வெட்டி வேலை தான்னு உங்களுக்கே தெரியும்!
//
100% கரெக்ட்...அதனால் தான் எழுதுவதைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..:0)))
//100% கரெக்ட்...அதனால் தான் எழுதுவதைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..:0))) //
வேற எதாவது வெட்டிவேலை காத்துகிட்டு இருக்கா!?
அப்படி இல்லைனா இதையே செய்யலாமே!
:)
//
வால்பையன் said...
//100% கரெக்ட்...அதனால் தான் எழுதுவதைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..:0))) //
வேற எதாவது வெட்டிவேலை காத்துகிட்டு இருக்கா!?
அப்படி இல்லைனா இதையே செய்யலாமே!
:)//
வேற வெட்டி வேலை எதுவும் இல்லாட்டியும் கண்டுபிடிச்சி செய்வோம்ல?? ஒரே வெட்டி வேலையை எவ்ளோ நாள் செய்றது?? :0))
நானும் நிறைய பேருக்கு மின்னஞ்சலில் வாழ்த்து சொன்னேன், அதில் பலர், பதிலுக்கு எனக்கு வாழ்த்து திருப்பி அனுப்பினர், இரண்டு பேர் எப்படி இருக்கே என்பது போல நலம் விசாரித்து மறு மின்னஞ்சல் அனுப்பினர். இருவருமே சில வருடம் முன்பு நல்ல நெருக்கத்தில் இருந்தனர் இப்போது இருவருமே வெளியூரில். ஒருவன் தன்னை பற்றி எதுவும் சொல்லாமல் என்னை பற்றி மட்டும் நோண்டினான் நானும் பதிலுக்கு அவனுக்கு மேல் பூச்சு போல் பதிலளித்து விட்டேன் ஆனால் இன்னொரு நண்பன் மிகவும் அக்கறையாக என்னை விசாரித்ததோடு தன்னை பற்றியும் விபரமாக எழுதியிருந்தான். ஆகா மொத்தம் ஒரு நட்பாவது புதுப்பித்ததே!! இப்போது அவன் புது செல் நம்பர் தந்து அடிக்கடி பேசுகிறோம் :)
நல்ல உள்ளங்கள் நிச்சயம் நட்பை புதுப்பிபார்கள்
புத்தாண்டு வாழ்த்துகள் 2010க்கும், அட்வான்ஸா 2011க்கும்.
Post a Comment