.jpg)
Friday, 26 December 2008
ஜெயமோகனின் மத்தகம்: நட்பு,துரோகம்,காமம், காதல், சோரம்... வாள்வீச்சு
.jpg)
Saturday, 20 December 2008
நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஐந்து

Sunday, 14 December 2008
பொன்னியின் செல்வன்: சில கேள்விகளும் ஒரு தற்குறியின் (மேலும்) சில பதில்களும்

எனக்கு இருப்பதை போன்றே பலருக்கும் கேள்விகள் இருப்பது பெரிய மகிழ்ச்சி..பின்ன, ஒண்ணியும் பிரியலயேன்னு பொலம்புனது எனக்கு மட்டும் தான தெரியும்..இப்ப கம்பெனிக்கு இவ்ளோ பேரு இருக்காங்களா..அதான் ஒரே குஜாலாக்கீது....
டாக்டர் ப்ரூனோ, ஒரிஜினலாக கேள்விகளை எழுப்பிய சந்திரசேகரன் கிருஷ்ணன், மற்றும் பலர் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..
1) ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம். (சுரேஷ்..)
ஆதித்ய கரிகாலர் இறந்து தான் போனார் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளை ஆதாரம் காட்டி கல்கி வாதிக்கிறார்...மேலும் சரித்திரத்திலும் இது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது..
ஆனால் டாக்டர் ப்ரூனோ சொல்லியிருப்பது போல் அவர் எப்படி இறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை...அவர் கொல்லப்பட்டாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா?
கல்கியின் கதைப்படி, கரிகாலர் நெஞ்சில் வீரபாண்டியன் வாள் பாய்ந்திருக்கிறது...(பலரும் நினைப்பது போல் இடும்பன் காரியின் சுருள் கத்தி அல்ல...).. அந்த வாளை கடைசியாக கையில் வைத்திருப்பது கரிகாலர் தான்...அதுவுமில்லாமல் நிகழ்ச்சி பல நாட்களுக்கு முன்னரே ஆதித்த கரிகாலரின் மன நிலை நிலையற்று இருந்ததாக வருகிறது..(பார்க்க பார்த்திபேந்திரன் உடனான அவர் உரையாடல்கள், மற்றும் இளமையில் இறப்பது குறித்து அவர் சிந்தனைகள்).
கல்கியின் கதைப்படி, நந்தினியுடன் வாதித்து கொண்டிருக்கும் ஆதித்தரின் கடைசி வாக்கியம் "நல்லது! நம் இருவருடைய வாழ்க்கைக்கும் பரிகாரம் ஒன்று தான்! விமோசனம் ஒன்று தான்..இதோ, நந்தினி! என் பிராயச்சித்தம்!.."
இந்த வசனம் வரும்போது தான் வந்தியத்தேவனுடைய கழுத்தை நெறித்து விட்டு காளமுக வேடத்துடன் பெரிய பழுவேட்டரையர் வருகிறார்..ஆனால் அதே சமயம் தன் முன்னே பார்க்கும் நந்தினி கரிகாலன் தரையில் கிடப்பதையும் அவன் மார்பில் வீரபாண்டியன் வாள் பாய்ந்திருப்பதையும் பார்க்கிறாள்..
இனி கல்கியின் வரிகளிலேயே...
"(நந்தினி) கண்களை துடைத்துக் கொண்டு எதிரே பார்த்தாள்.கரிகாலன் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தாள்.அவன் உடலில் வீரபாண்டியன் வாள் பாய்ந்திருப்பதையும் பார்த்தாள்"
இதற்கு பின்னரே ரவி தாஸன் சீனில் வருகிறான்..எனவே ரவி தாஸன் கொன்றிருக்க முடியாது..பழுவேட்டரையர் அப்பொழுது தான் பிரவேசிக்கிறார்..கரிகாலன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவர் கரிகாலனை கொல்ல காரணங்கள் இல்லை..வந்தியதேவனோ தூரமாக ஒளிந்திருக்கிறான்..மணிமேகலை சீனிலேயே இல்லை..இருந்தாலும் கரிகாலனை கொல்ல அவளுக்கு காரணங்கள் இல்லை..
எஞ்சியிருப்பது நந்தினி, கரிகாலன் மட்டும் தான்..ஒன்று நந்தினி கொன்றிருக்க வேண்டும்..இல்லை கரிகாலன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்..
இதற்கு பின்னர் பாட்ஷா ரேஞ்சில் நான் தான் கொன்னேன் என்று பழுவேட்டரையர், மணி மேகலை என்று பலர் சாட்சி சொல்வது நம்பும்படி இல்லை..
2) அட நந்தினியின் குழந்தையின் அப்பா யார் ? some confussions are there! (ராஜி)
அது யாரென்று கதையில் இல்லை..ஆனால், அது நந்தினியின் குழந்தை இல்லை என்பது உறுதி... கரிகாலனுக்காக காத்திருக்கும் கடைசி காட்சியில் "அன்று பள்ளிப்படை காட்டில் யாரோ ஒரு சிறுவனை உன் மகன் என்று கொண்டு வந்தார்கள்" என்று அவள் புலம்புவதாக வருகிறது.. எனவே அந்த குழந்தை நந்தினியின் மகன் அல்ல என்பது உறுதி.
3) வீரபாண்டியனுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு? மகளா இல்லை காதலியா இல்லை இரண்டுமேவா? (என்னை அடிக்க வராதீர்கள்..கதையில் வரும் பெரும் குழப்பம் இது).. கதையில் இரண்டு வீரபாண்டியர்களா இல்லை ஒரே வீர பாண்டியனா?
முதலில், கதையில் இரண்டு வீரபாண்டியர்கள் இல்லை.. வீரபாண்டிய மன்னர் போரில் தோற்று இலங்கை ஓடுகிறார்..அங்கு பிச்சியாக சுற்றிக் கொண்டிருக்கும் மந்தாகினியுடன் உறவு ஏற்படுகிறது..அதில் பிறந்த குழந்தைகள் தான் நந்தினியும், மதுராந்தக சோழனாக வளர்ந்து வரும் உத்தம சோழனும்... ஆக மகள் என்பது உறுதி.. இதையே நந்தினியும் கடைசி காட்சியில் சொல்கிறாள்..
இதே வீரபாண்டியன் இலங்கை அரசனின் உதவியுடன் படை திரட்டி மீண்டும் போர் வருகிறது..இந்த போரில் தான் ஆதித்த கரிகாலனால் தலை வெட்டப்பட்டு இறக்கிறார். இந்த இடத்தில் நந்தினி ஆதித்தனிடம் கெஞ்சுவது "இவர் என்னை மணந்து கொள்ளப் போகிறவர்...எனக்காக விட்டுவிடுங்கள்..."
குழப்பம் இப்பொழுது தான் வருகிறது...நந்தினிக்கு வீர பாண்டியன் தன் தந்தை என்று தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..ஆனால் வீரபாண்டியனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்...அதனாலேயே அவன் நந்தினியை அரசியாக்குவேன் என்று சொல்லியிருக்க வேண்டும்..ஏனெனில் அவள் தான் வாரிசு! ஆனால் நந்தினி அதை தப்பாக நினைத்துக் கொண்டிருக்க இடம் இருக்கிறது..ஏனெனில் அவளுக்கு தன் பிறப்பு பற்றி உண்மை தெரியாது...
ஆனால் கடைசி காட்சியில் நந்தினி வீரபாண்டியன் தலையை அன்பே என்று விளிப்பதன் அர்த்தம் என்ன? தன் தந்தை என்று தெரிந்த பின்னும் "அன்று என் காதலை கொன்றீர்கள், பின் என்னை காதலித்தவரை கொன்றீர்கள்" என்று கரிகாலனிடம் சொல்வதன் அர்த்தம் என்ன?? என்னை காதலித்தவரை என் மேல் அன்பு செலுத்தியவர் என்றும் அர்த்தம் சொல்லலாம்..(வாதத்திற்காக!)
இதில் கவனிக்க வேண்டியது கடைசி வரை தான் வீரபாண்டியனை காதலித்ததாக நந்தினி எங்கும் சொல்லவில்லை..யாரிடமும் சொல்லவில்லை..(இல்ல நான் எங்கனா மிஸ் பண்ணிட்டேனா?)
"என் நெஞ்சை கிழித்து பாருங்கள், நீங்கள் தான் இருப்பீர்கள்" என்று கரிகாலன் சாகும் முன் அவனிடம் சொல்கிறாள்..."அடுத்த முறை பிறந்தால் உங்களையே கணவனாக அடைவேன்" என்று பெரிய பழுவேட்டரையரிடம் சொல்கிறாள்..
ஆக, வீரபாண்டியன் மேல் அவளுக்கு காதல் இருந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை..ஆனால் வீரபாண்டியன் தன்னை காதலித்ததாக அவள் எண்ணியிருக்க வாய்ப்புண்டு..
எனக்கு என்னவோ அவள் உண்மையில் காதலித்தது கரிகாலனை மட்டுமே என்று தோன்றுகிறது...அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற எண்ணத்திலே அவனை பழிவாங்க விழைகிறாள்..
அண்ணன் தங்கை என்று ஆகிவிட்ட பின் எந்த காலத்திலும் மணக்க முடியாது என்பதாலும் அந்த உறவின் மோசமான நிலையும் எண்ணியே கரிகாலன் உயிர் துறக்கிறான்..
டாக்டர் ப்ரூனோ சொல்லும் எடிபஸ் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த கதையில் இருப்பதாக தெரியவில்லை..
4) கதையின் தீவிரமான காதல் எது?
எனக்கு தெரிந்த வரை, மணிமேகலையின் காதல்.. காதலனுக்காக கொலைப் பழியை சுமக்க தானே முன்வந்தவள்...காதலனுக்கு அபாயம் செய்தால் தன் சகோதரனையே கொல்வேன் என்றவள்...பின் காதலன் இறந்து விட்டான் என்றவுடன் அவனை எண்ணி பைத்தியம் ஆனவள்..
இதைப் போன்றே தீவிரமான இன்னொரு காதல் மந்தாகினியின் காதல்.
சரி...ஏதோ என்னால் முடிந்த விளக்கங்கள்...
இனி யாரும் கேட்காத, ஆனால் என்னை படித்த நாளிலிருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி..
பொன்னியின் செல்வன் என்று தலைப்பு இருந்தாலும் இந்த கதையின் முக்கிய பாத்திரங்கள் வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான் மற்றும் நந்தினி..
இதில் வந்தியத் தேவன் மட்டுமே உண்மை, மற்றவை கற்பனைப் பாத்திரங்கள்.. நந்தினி என்று ஒருவர் இருந்ததாக சோழ வம்சம் தொடர்புடைய எதிலும் ஆதாரம் இல்லை.
இப்படி இருக்கையில் ஒரு கற்பனை பாத்திரத்தை படைத்து அதில் உறவுச் சிக்கலை கல்கி உருவாக்க காரணம் என்ன? அவரின் நோக்கம் வரலாற்று புதினமா இல்லை உறவுச்சிக்கலை சரித்திரப் பிண்ணனியில் சொல்லும் முயற்சியா? அது ரசிகர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு திசை திரும்பி விட்டதா?
டாக்டர் ப்ருனோ சொல்வது போல் இது எடிபஸ் காம்ப்ளெக்ஸ்/எலக்ட்ரா காம்ப்ளேக்ஸ் அடிப்படையான கதையா? இந்த கதையின் இன்ஸ்பைரேஷன் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டா?
சிறிய வயதில் ஒரே ஒரு பாகம் மட்டும் படித்திருந்தாலும், பொன்னியின் செல்வனை நான் சென்ற வருடம் தான் படித்தேன்.. எனக்கென்னவோ இது உறவுச்சிக்கலை சொல்லும் கதையாக தான் படுகிறது!
யாரேனும் விளக்கினால் நலம்!
(எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)
Saturday, 13 December 2008
பொன்னியின் செல்வன் சில கேள்விகளும் ஒரு தற்குறியின் பதில்களும்

இப்ப சமீபத்துல (இது டோண்டு சாரோட சமீபம் இல்ல..சமீபம்னா நேத்தி நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில்!) கிரிஷ் சந்துரு பொன்னியின் செல்வன் பத்தி அழகா எழுதியிருந்ததை படிச்சிட்டேன்.. அவரு எழுதினதை இங்க போடுறது காப்பி அடிக்கிற மாதிரி அநாகரீகம்கிறதுனால, தயவு செஞ்சி அவரு பிளாக்ல போய் படிச்சிக்கங்க...
கேள்வியெல்லாம் கிரிஷ் சந்துருவோடது...பதில் மட்டும் தான் நம்மது!
இதற்கு நான் இட்ட பின்னூட்டம்:உண்மையில் அருள்மொழியின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சரித்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை.. அவன் கொல்லப்பட்டானா இல்லை தற்கொலை செய்து கொண்டானா? நந்தினி வீரபாண்டியனின் மகளா இல்லை காதலியா? அப்படியானால் நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் என்ன உறவு?
பொன்னியின் செல்வன் கதையின் மிக முக்கிய முடிச்சு இந்த உறவு சிக்கலே..
நந்தினியின் தாய் மந்தாகினி. தப்பியோடிய வீரபாண்டியனுக்கும் மந்தாகினிக்கும் உறவு (மந்தாகினியின் விருப்பம் இல்லாமல்) ஏற்பட்டதாக சிறையில் இருக்கும் பைத்தியக்காரன் மூலம் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.. மந்தாகினியை சில காலம் காதலித்து கைவிட்டவன் சுந்தர சோழன். மந்தாகினி, வீரபாண்டியனுக்கு பிறந்த பிள்ளைகள் தான் நந்தினியும், சோழ குடும்பத்தில் வளர்ந்து வரும் உத்தம சோழனும்!
அப்படியானால் நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் என்ன உறவு முறை? ஒரு விதத்தில் அண்ணன் தங்கை.
ஆதித்த கரிகாலன் சிறு வயதிலேயே நந்தினியை காதலித்ததாகவும், இது தவறு என்று தெரிந்த செம்பியன் மாதேவியார் அவர்களை பிரித்ததாகவும் வருகிறது.
இந்த அண்ணன் தங்கை உறவு முறை தெரிய வருவதாலேயே ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறான்..
வீரபாண்டியன், நந்தினி உறவில் எந்த குழப்பமும் இல்லை. நந்தினி மந்தாகினி போல் இருப்பதாக கதையில் வருகிறது.
இந்த கதை 1950களில் எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது..2008லும் (எந்த காலத்திலும்) சொல்ல முடியாத ஒரு உறவு பிரச்சினையை கல்கி 1950களில் வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதாலேயே இந்த உறவு சிக்கல் மூடி மறைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது....கேட்க செவியுள்ளவன் கேட்க கடவன்!
ஆதித்த கரிகாலனை கொல்ல சூழ்ச்சி செய்ததாக ரவிதாஸனும், உடந்தையாக இருந்ததாக பல கேரளத்து குறு நில மன்னர்களும் பிற்காலத்தில் ராஜராஜ சோழனால் தண்டிக்கப்பட்டனர். ராஜராஜன் இதற்காக கேரளத்து மீது படையெடுத்து சென்று சதியாலோசனையின் முக்கிய கேந்திரமாயிருந்த (அல்லது அவ்வாறு நம்பப்பட்ட) காந்தாளூர் சாலையை அழித்தது வரலாறு. (காந்தாளூர் சாலை கலமறுத்தருளிய!).
ஆனால், நந்தினி எந்த காலத்திலும் தண்டிக்கப்படவில்லை. அதற்கு காரணம் அவளுக்கு பழி வாங்கும் வெறி இருந்தது, அதற்கு காரணமும் இருந்தது மட்டுமல்ல, அவள் ராஜ ராஜன், குந்தவையின் சகோதரி என்பதும் ஒரு காரணமாயிருக்கக் கூடும்.
எனக்கு புரிந்த வரை, இந்த கதை எழுத ஆரம்பிக்கும் போது கல்கியின் முக்கிய நோக்கமே இந்த உறவு சிக்கலை விளக்குவதாக இருந்திருக்க்கூடும்..ஆனால், அதன் அபாயங்களை மனதில் கொண்டு தாண்டி சென்று விட்டதாக தெரிகிறது...
2) நந்தினியும் போலி மதுராந்தகனும் மந்தாகினியின் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில், அவை பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவை என்ற பட்சத்தில் - மந்தாகினி ஏன் சுந்தர சோழரை காப்பாற்ற வேண்டும். ஒரே காரணம் அவர்களது முதல் காதல் தான். காதலிப்பது ஒருவனை கைப்பிடிப்பது மற்றொருவனை என்ற கலாசாரம் அந்த காலத்தில் கிடையாதே. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம். வீரபாண்டியன் மூலம் குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொண்டாலும், பாண்டிய வம்சத்தைக் காப்பாற்றாமல் அதன் பகை வம்சமாகிய சோழ வம்சத்தை காப்பாற்றுவது ஏன் ?
ம்ந்தாகினி சோழ நாட்டுப் பெண்..(அவளது அண்ணன் முறையான திருவிடங்கர் கோடியக்கரையில் இருக்கிறார்...அவளது தங்கையான ஊமைப்பெண் செம்பியன் மாதேவியிடம் வேலைப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஊமைப்பெண் தான் சேந்தன் அமுதனின் தாய்.) மந்தாகினியின் குடும்பமே சோழ நாட்டு குடும்பமாக தான் தெரிகிறது..
3) வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமிடையிலான காதலை மிகவும் மேலோட்டமாக காட்டியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு தீரணான வந்தியத்தேவனும் புத்திகூர்மையான அரசிளங்குமரியும் இவ்வளவு மேலோட்டமாகவா மோகிப்பார்கள் ? எனக்குத் தெரிந்தவரை intensity அதிகம் இருக்கும் personlityகள் காதலில் மிகவும் தீவிரமாகவே இருப்பார்கள். ஒருவேளை கல்கி இளவரசி தனது நிலையிலிருந்து இறங்கி சொல்லுதலாகாது என்று நினைத்து அந்த காதலை அதிதீவிரமாக எழுதவில்லை போலும். வானதி ராஜராஜன் மீதும், மணிமேகலை வந்தியத்தேவன் மீதும் கொண்ட காதலின் அளவு கூட இல்லாமல குந்தவையும் வந்தியத்தேவனும் கொண்ட காதலின் தீவிரத்தை மேலோட்டமாக கல்கி ஏன் எழுதினார் ?
இதற்கு காரணம் குந்தவையின் அன்றைய நிலவரம். ராஜ்யத்தில் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை..அடுத்து மன்னன் ஆக வேண்டிய ஆதித்த கரிகாலன் வடபுலத்தில் ஒதுங்கி இருக்கிறான்...பழையாறைக்கோ, தஞ்சைக்கோ அவன் தந்தையை பார்க்கக் கூட வருவதில்லை.. மற்றொரு தம்பி கடல் கடந்து இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருக்கிறான்...இதில் ராஜ்யபாரம் முழுவதும் குந்தவையின் மீது விழுகிறது..கரிகாலனுக்கு எதிராக சதி நடக்கக்கூடும் என்று அவளும் எண்ணுகிறாள்...இத்தகைய சூழ்நிலையில் காதலிப்பது எப்படி?
வந்தியத் தேவனின் நிலையும் அப்படியே..
ஆனால் வானதி, மணிமேகலையின் நிலை அப்படி அல்ல. வானதிக்கு இப்படி ராஜ்ய கவலைகள் ஏதுமில்லை..மணிமேகலைக்கும் சோழ ராஜ்யத்தின் பிரச்சினைகள் பற்றி தெரியவில்லை...அரசு, அரசியாதல் குறித்து அவளுக்கு விருப்பமும் இல்லை.. அதனாலேயே அவள் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனையே மணம் செய்ய மறுக்கிறாள்...
வேற யாருக்காவது எதுனா கேள்வி இருக்கா? இப்பவே கேட்டுக்கங்க..அப்புறம் பரிட்சைல தெரியாம முழிக்கப்படாது...சொல்லிட்டேன் :))
Monday, 8 December 2008
நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் நான்கு
முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.

பாகம் நான்கு - இழந்துவிட்ட இதயம்
இதன் முந்திய பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்.
பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று
காருக்கு போன பயல இன்னும் காணமே...அப்பிடியே அடிச்சிட்டு மட்டையாகிட்டானா இல்ல நம்ம கதைய கேட்டு ஓடிட்டானா..ஓடுகாலிப்பய..இவனையெல்லாம் நம்ப முடியாது....இன்னிக்கி நைட்டுக்கு சரக்குக்கு என்ன பண்றது...
வேதாளம் தனது சிந்தனைத் தொட்டியை கலக்கிக் கொண்டிருந்த போது இருட்டில் விக்கிரமன் வருவது தெரிந்தது....
"மாதி...சீக்கிரம் வாப்பு...இப்பிடி கெழவன் மாதிரி நடந்தா எப்பிடி..நீ போன நேரத்துக்கு ஊறல் போட்ருந்தா இன்னேரம் சூடா சரக்கு ரெடியாயிருக்கும்...இம்புட்டு நேரமா.."
"அடிக்கிறது ஓசி சரக்கு அதுல சூடா வேற வேணுமா...ஒனக்கு சீக்கிரமா சங்கு ஊதறேன் பாரு..."
"சங்கெல்லாம் அப்புறம் ஊதலாம்..இப்ப பங்கு போடு...என்ன சரக்கு எடுத்தாந்த?"
"செவிட்டு முண்டமே..அதான் போம்போதே சொன்னேனே...டெக்கீலா.."
"சைடுக்கு? ஊறுகா..லெக் பீசு எதுவும் இல்லியா..."
மாதித்தன் தலையில் அடித்துக் கொண்டான்..
"அட சனியனே.. டெக்கீலாவுக்கு சைட் டிஷ்ஷெல்லாம் கெடயாது...வெரல்ல உப்ப தடவி நக்கிக்க வேண்டியது தான்..."
"அப்ப உப்பாவது குடு..."
"இந்த காட்டுல உப்பெடுக்க தண்டி யாத்திரை தான் போணும்... அதெல்லாம் தெனம் குளிக்கிறவங்களுக்கு..நீ ஒன் வெரல சும்மாவே நக்கிக்கலாம்...நீதான் குளிக்கிறதே இல்லியே..."
"தன்னைப் போல் பிறரையும் நினை..நீ ஒன்ன மாதிரி எல்லாரையும் நெனச்சிட்ட போலிருக்கு"
கும்மிருட்டிலும் விக்கிரமனை முறைத்த வேதாளம் டெக்கிலா பாட்டிலை திறந்து அப்படியே ஊற்றிக் கொண்டு.....அலறியது..
"அம்மே...என்ட அம்மே..என்ட அம்மே..ஒன்ட மோன சவட்டி களஞ்சிட்டானே...அய்யோ...காது எரியுதே....அடேய் மாதி...ஆசிட்ட குடுத்திட்டியாடா..."
"அடச்சீ....வாய மூடு...சொரங்க்ப்பாதை தொறக்கிற மாதிரி...டெக்கீலாவெல்லாம் கொஞ்சமா அடிக்கணும்...இப்பிடி மொத்தமா கொட்டிக்கிட்டா....அலறாத..."
இரண்டு காதுகளுக்குள்ளும் விரலை விட்டு வேகமாய் குடைந்த வேதாளம் தலையை உலுக்கிக் கொண்டு விக்கிரமனின் கையை பிடித்து நக்க ஆரம்பித்தது...
"அய்ய.. கருமம்.... என்ன பண்ற நீ....கையை விடு மொட்ட கொரங்கே..."
"நீதான சொன்ன...உப்ப நக்கணும்னு...அதான்... பரவால்ல..ஒங்கையி ரொம்ப உப்பா தான் இருக்கு...குளிச்சி ஒரு மூணு மாசம் இருக்குமா..."
"ஆமா...நான் முழுகாம இருக்கேன்...அதான் குளிச்சி மூணு மாசமாச்சி...இன்னும் ஏழு மாசம் இப்பிடித்தான்...அடச்சீ...இப்ப வாய மூடிக்கிட்டு கதைய சொல்றியா இல்லியா...."
"வாய மூடிக்கிட்டு எப்பிடி கத சொல்றது..."
இளித்த வேதாளம் காதுகளை குடைந்து கொண்டே கதையை சொல்ல ஆரம்பித்தது...
==============================
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்க சிந்தையில் வந்து அருவி நாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்ன காணாட்டா
இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்துஎன்ன புண்ணியம் சொல்லடி நீயாத்தா.....
எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் கேட்டு முந்திய இரவில் அண்டா மாப்ள என்றழைக்கப்பட்ட முருகேசன் திடுமென்று விழித்துக் கொண்டான்..
"ச்சே..இந்த திருப்பரங்குன்றத்தில இது ஒரு தொல்ல. மனுசன நிம்மதியா தூங்க விடமாட்டாய்ங்க...காலங்காத்தால...."
இரவில் வெகு நேரம் கழித்து தூங்கப்போனது திடீரென அவனுக்கு நினைவு வந்தது..டைம் என்ன...வக்காளி...ஒம்போதாச்சா....இன்னைக்கும் ஆஃபிஸ் லேட்டு தானா....எல்லாம் அந்த குமரன் பயலால வந்தது...எங்க அந்த நாயி...
திருக்குமரன் ஒரு மூலையில் சுருண்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்தான்...
"டேய்...ய்யால...எந்திரிடா...டைம் ஒம்போதாச்சி..." குமரனின் பின்புறத்தில் உதைத்தான்...
குமரன் மேலும் சுருண்டு கொண்டு முனகினான்...
"...தூங்க விடுங்கடா..."
"டேய் பன்னி...ஒனக்கு தான் இன்னிக்கு முக்கியம்...வேலையில போய் ஜாய்ன் பண்ணனும்...மணி ஒம்போதுடா...இப்பவே ரொம்ப லேட்டு...இனிமே குளிச்சி நீ எப்ப போயி சேர்றது..."
"என்னது ஒம்போதாச்சா....கபோதி...சீக்கிரமா எழுப்ப வேண்டியது தான..." பாதி அவிழ்ந்திருந்த லுங்கியை சுருட்டிக் கொண்டு குமரன் வேகமாக எழுந்தான்...
"ஆமா நைட்டெல்லாம் குடி...இப்ப என்ன கொற சொல்லு...சீக்கிரமா குளிச்சிட்டு கெளம்புடா...இனிமே ஒங்க வீட்டுக்கு போயி டிரஸ் மாத்தெல்லாம் முடியாது...என் டிரஸை போட்டுக்கிட்டு கெளம்பு...ஒன்னோட ஃபைல் என்னோட ரூம்ல தான இருக்கு?"
"நீ சொன்னாலும் எங்க வீட்டுக்கு போக முடியாது...எங்க அப்சு செருப்போட நிப்பாரு..."
அவசரமாக அவர்கள் குளித்து விட்டு கிளம்பிய போது மணி பத்தை நெருங்கியிருந்தது...
"மாப்ள அண்டா...ரொம்ப லேட்டாயிடுச்சிடா...மொத நாள் ஜாய்ன் பண்றதுக்கே இப்பிடி லேட்டா போனா வேலையே தரமாட்டாய்ங்க...என்ன பண்றது....ஒண்ணு பண்ணு... பேசாம வண்டிய நம்ம மணியண்ண மெடிக்கல் கடைக்கு விடு..."
"அங்க எதுக்குடா...வழியில ஒரு குவாட்டர் போடவா..."
"அடச்சீ...அதுக்கில்ல...அவரு கடையில கொஞ்சம் பிளாஸ்திரி..மருந்தெல்லாம் வாங்கி கட்டுப் போட்டுக்க போறேன்...ஆஃபிஸ்ல போயி வழியில ஆக்சிடெண்ட் ஆயிடுச்சின்னு படம் காட்ட வேண்டியது தான்..."
"ங்கொய்யால...பொறக்கும் போதே மொள்ளமாரின்னா அது நீதாண்டா..."
"நாங்கென்ன வேணும்னா பண்றோம்...எல்லாம் சூழ்நில...லெஃப்ட் ஹாண்டு ஒடஞ்ச மாதிரி சீன் போடணும்...அதனால சட்டைய கொஞ்சம் கிளிச்சிக்கிறேன்..."
"டேய்..அது என் சட்டைடா...."
"அதனால தான கிளிக்கிறேன்.."
மெடிக்கல் ஷாப்பில் பிளாஸ்திரி, மருந்து வாங்கி போலியாய் கட்டுப் போட்டுக் கொண்டு திருக்குமரன் அலுவலகத்தை அடைந்த போது மணி பதினொன்றாகியிருந்தது...
========================
"என்ன சார் மொத நாள் ஜாய்ன் பண்றதுக்கே இவ்வளவு லேட்டா வர்றீங்க..நீங்க மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்ல தான ஜாய்ன் பண்றீங்க..கொஞ்சம் இங்க வெய்ட் பண்ணுங்க..நான் உங்க ஹெட் ஆஃபிஸர்ட்ட பேசிட்டு சொல்றேன்..."
"இல்ல மேடம்...அது வழியில கொஞ்சம் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி...அதான் லேட்டு..."
"அதெல்லாம் என்கிட்ட சொல்லாதீங்க...உங்க ஹெட் கேப்பாரு...அவர்ட்ட சொல்லுங்க..."
"சரிங்க மேடம்.."
ம்ம்ம்...பொண்ணு சூப்பராருக்கு....ரிஷப்சனிஸ்டின் அழகை திருக்குமரன் ரசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவன் பக்கம் திரும்பினாள்..
"உங்கள அனுப்பச் சொல்றாரு...மேல தேர்ட் ஃப்ளோர்ல அவரு ஆஃபிஸ்..குருமூர்த்தின்னு நேம் ப்ளேட் இருக்கும்....சீக்கிரம் போங்க..."
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்..."
ம்ம்ம்...நம்ம மனசு நம்மக்கிட்ட இல்ல...திருக்குமரன் லிஃப்டை நோக்கி நடந்தான்..
.=========================
தேர்ட் ஃப்ளோர்....
S. Guru Murthy M.Tech, MBA
Sr.MANAGER, MARKETING
இது தான் நம்ம பாஸு ஆஃபிசா...உள்ள ஏதாவது ஒரு சொட்டை உக்காந்திருக்கப் போறான்..மொத நாளே கடி தான்...
டக் டக் டக்....
கதவை தட்டினான்..
"மே ஐ கமின் ஸார்..."
"கமின்..."
உள்ளே நுழைந்த திருக்குமரனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது...குருமூர்த்திக்கு சொட்டையும் இல்லை..கிழவனாகவும் இல்லை...ஒரு நாப்பத்தஞ்சி வயசு இருக்குமா...ஆனா அரவிந்த் சாமி மாதிரி ஸ்டைலா இருக்கான்...இதுக்குன்னே மார்க்கெட்டிங் குடுத்துருப்பாய்ங்க...இவன் வாங்கிக்கன்னு சொன்னா யாரு வேணான்னு சொல்லுவா...
"I'm Gurumurthy....Responsible for Marketing...I assume you are Mr.Thirukkumaran...Please take your seat.."
"Thank you Sir..."
"Sorry for being a bit hasty...but I dont have much time...Let me be straight to the point...This is your very first day...and you're late...infact very late..."
"Sorry Sir...but I had an accident...that's why...."
"I see. I can see that...you still managed to make it...I appreciate it...but hereafter I expect you to be on time...No excuses please...We dont have much time to waste....we have to achieve our target...that's why we recruited more people...."
"I will do my best Sir..."
"That's good....The other engineers joined today are on a factory trip...to see our manufacturing facilities....shop floor...'cos you're late you can't join them... do one thing... you first complete the necessary formalities...After three'o clock I will arrange for a shop floor visit..."
"Thank you Sir..."
இவய்ங்கெல்லாம் தமிழ்லயே பேசமாட்டாய்ங்களா....திருக்குமரன் நினைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று அவன் மனதை படித்ததை போல் குருமூர்த்தி தமிழில் பேச ஆரம்பித்தார்...
"ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட்ல முடிச்சிட்டீங்ளா"
"இல்ல சார்"
"அக்கவுண்ட்ஸ்?"
"அதுவும் இல்ல சார்..."
"ஒக்கே...மொதல்ல அது ரெண்டையும் முடிச்சிருங்க...இப்ப இங்க ஒருத்தங்க வருவாங்க...அவங்க உங்களை கைட் பண்ணுவாங்க.."
"ஒக்கே சார்"
"உங்க ஏஜ் என்ன...ட்வென்டி ஒன்னா...அப்ப இது தான் ஃபர்ஸ்ட் ஜாப்பா"
"ஆமா சார்..."
"காலேஜ் இந்த இயர் தான் முடிச்சீங்களா.."
"ஆமா சார்"
"விஷ் யூ ஆல் த பெஸ்ட் வித் யுவர் ஃபர்ஸ்ட் ஜாப்"
"தேங்க் யூ சார்"
பேசிக் கொண்டே குருமூர்த்தி டயல் செய்ய ஆரம்பித்தார்...
"குருமூர்த்தி ஹியர்...வைஜெயந்திய என்னோட ஆஃபிஸுக்கு அனுப்புங்க..."
என்னடா இது...கைல இவ்ளோ பெரிய கட்டு போட்ருக்கேன்...ஒருத்தன் கூட என்ன ஆச்சின்னு கேக்க மாட்டேங்குறான்...பெரிய இதுன்னு நெனப்பு இவய்ங்களுக்கு.... நினைவில் மூழ்கியிருந்த திருக்குமரன் வைஜெயந்தி நுழைந்ததையும் அவள் தனக்கு பின்னால் நிற்பதையும் கவனிக்கவில்லை....
"ம்ம்ம்..மிஸ்டர் திருக்குமரன்...இவங்க வைஜெயந்தி...அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்...இவங்க கூட போங்க...எல்லாம் முடிச்சிட்டு திருப்பி இந்த ஆஃபிஸ் வாங்க..."
"ஒக்கே சார்...தேங்க் யூ சார்".
ஆமா..இது பெரிய தாஜ்மஹாலு...இங்க திருப்பி வராங்க...அசுவராசியமாய் பின்னால் திரும்பிய திருக்குமரனின் இதயம் துடிக்க மறந்தது...
யார் இது... பெண்ணா இல்லை போன ஜென்மத்தில் நான் இழந்துவிட்ட இதயமா?
========= மோக வலை இனி விரியும்===================