காலும் கலாச்சாரமும்
அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
"விக்கிரமா, கணவன் இருக்கும் போதே விஜி இன்னொரு ஆண்மகன் மீது காதல் கொண்டது சரியா?"
வேதாளத்தின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் விக்கிரமன் தலையை தடவிக்கொண்டான்.
====================
"என்ன மாதித்தா... பேச்சையே காணோம்? ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி டக்கு டக்குன்னு பதில் சொல்லுவ? இப்ப என்ன? மாப்பு, ஒனக்கு வச்சிட்டேனா ஆப்பு..."
"ஆப்பும் இல்லை, இலவச அடுப்பும் இல்லை. என்னை தமிழ் கலாச்சார காவலர்களிடம் மாட்டி விட நீ சதி செய்வது போல தெரிகிறது. அதனால் யோசிக்கிறேன்..."
"என்ன மாதி.. எத்தினி பேரு வந்தாலும் அடங்காது வாள் வீசும் ஒனக்கே இவ்ளோ பயமா??"
"வாள் வீசினால் பயமில்லை வேதாளமே.. ஆனால் ஆசிட் வீசினால்? துப்பாக்கிகளுக்கு பயமில்லை. ஆனால் துடைப்பத்துடன் வந்தால்..ஆயிரம் பேர் வரட்டும்.. ஆனால், கலாச்சார காவலர்கள் ஆட்டோ அனுப்புவார்களே.. "
"என்ன மாதித்தா.... ஷகீலா படம் பார்க்க போகும் பத்தாங்கிளாஸ் பையன் மாதிரி பயப்படுறா... என்னதான் ஆச்சி ஒனக்கு..."
"முட்டாள் தாளமே... ஆயிரம் வருடங்களாக தொங்கி கொண்டிருந்தும் உனக்கு அறிவு வளரவில்லை. தமிழ் கலாச்சாரத்தை கேள்வி கேட்பதும் ஒன்று..தற்கொலைக்கு தயாராவதும் ஒன்று... அது ஒளக நாயகனின் குணா படம் பார்ப்பது போல்... தற்கொலைக்கு அஞ்சாதவர்கள் மட்டுமே செய்ய முடியும்..."
வேதாளம் வெறுப்பானது..
"மாதித்தா.... ஒளக நாயகன், ஒலக்கை நாயகன் என்று நீ ஏன் யார் யாரையோ இழுக்கிறாய்?? நான் என்ன யாருக்கும் புரியாத மாதிரியா பேசுகிறேன்.. பதில் தெரிந்தால் சொல். இல்லையேல் பின்புறம் தெரிய இங்கிருந்து ஓடிப்போ..எனக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கிறது.."
"ஆமா, நீதான் ஒலக ஷேர் மார்க்கெட்ட காப்பாத்த போற.. ஒன்னோட பெரிய எளவா போச்சி வேதாளமே... எவனாவது என் மூஞ்சில் ஆசிட் ஊத்தப்போறது உறுதி...அப்புறம் எந்த பொண்ணும் கெடைக்காம நான் "என்ன மாதிரி ராமன் உண்டான்" னு வஜனம் பேசப்போறதும் உறுதி.... சனியன்..கேட்டுட்ட.. சொல்லி தொலைக்கிறேன்..."
ஜாக்கெட்டை தடவி தம்மை பற்ற வைத்து கொண்ட விக்கிரமாதித்தன் பேச ஆரம்பித்தான்...
===========================
"அறிவு கெட்ட வேதாளமே..ஆள் வளர அறிவும் வளர வேண்டும் என்று சொல்வார்கள். ஆயிரம் ஆண்டுகளாக நீ ஆளும் வளரவில்லை..உனக்கு அறிவும் வளரவில்லை..
விஜி செய்ததில் என்ன தவறு? கல்லானாலும் கணவன், புல்லானலும் புருசன் என்று அவள் தன் வாழ்க்கையை மண்ணாக்கி கொள்ள வேண்டுமா என்ன? வாழ்க்கை என்பது ஒரு முறை தான். தன் வாழ்க்கையை குடிகார கணவனுக்காகவும், பேராசை பிடித்த மாமியாருக்காகவும் விஜி நாசமாக்கி கொள்ள வேண்டியதில்லை.புல்லாகவும், கல்லாகவும் இருக்கும் புருசன்களை மண்ணாக்குவதில் எந்த தவறும் இல்லை.
பிடிக்காத கணவனுடன் வாழ்ந்து, பிள்ளை பெற்றுக்கொள்வது ஒரு வித நோய்த்தனமே.அப்படியே வாழ்ந்தாலும் அவளுக்கு பலன் என்ன கலாச்சார காவலி என்று பட்டம் கொடுக்கப்போகிறார்களா சிலை வைக்கப்போகிறார்களா? கண்ணகிக்கு சிலை வைத்ததால் கண்ணகிக்கு என்ன லாபம்? கழக கண்மணிக்களுக்கு தான் லாபமே தவிர, கண்ணகிக்கு ஒரு பைசா லாபமும் இல்லை.
கலாச்சாரத்தின் சவக்குழியை தோண்டுவதாக குறை சொல்கிறாய். அது கலாச்சாரம் என்பதின் அர்த்தமே தெரியாத மூடர்கள் சொல்வது.
கலாச்சாரம் என்பது என்ன... வாழ்க்கையிலிருந்து வந்தது தான் கலாச்சாரமே தவிர, கலாச்சாரத்திலிருந்து வாழ்க்கை வரவில்லை. வாழ்க்கை மாற, கலாச்சாரமும் மாறித்தான் ஆகவேண்டும். மாறாத எந்த விஷயமும் அழியும். If something doesn't move then it's possibly dead.
அதற்கு கலாச்சாரமும் விதி விலக்கல்ல. தமிழ் நாட்டில் கலாச்சாரம் கள்ளச்சாராயம் போல் ஆகிவிட்டது. காய்ச்சுபவன் தருவது தான் சரக்கு..
கணவன் இருக்கும் போது இன்னொரு ஆண்மகன் மீது காதலா??
என்ன தவறு? தன் கணவனை தேர்ந்தெடுக்க விஜிக்கு எந்த வாய்ப்பும் தரப்படவில்லை. அவள் காதலித்தாள். காதலிப்பது ஒருத்தியை, காசுக்காக மணப்பது இன்னொருத்தியை என்றிருக்கும் கலாச்சாரத்தால் அவன் விஜியை கைவிட்டான். காதல் என்றாலே விபச்சாரம் என்று நினைக்கும் தமிழ் கலாச்சாரத்தால், விஜியால் தனது காதலுக்காக போரட முடியவில்லை. அது அவள் தவறல்ல.
டேபிளுக்கு அடியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு கலாச்சாரம் பேசுபவர்களுக்காகவும், இரண்டு ரூபாய்க்கு ஊசிப்போட்டுக் கொண்டு கோடீஸ்வரர்களாக கட்சி நடத்தும் சில டாக்டர்களுக்காகவும் அவள் தனது வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
இப்படி கழுத்தை நெறிக்கும் கலாச்சாரத்தை விஜி தூக்கி எறிந்ததில் எந்த தவறும் இல்லை. காலுக்குத்தான் செருப்பே தவிர, கலாச்சார செருப்புக்காக காலை வெட்டிக்கொள்ள முடியாது. காலைக் கடிக்கும் கலாச்சார செருப்பை கழற்றி வீசிய விஜியை எப்படி குறை சொல்ல முடியும்?"
==================================
விக்கிரமனின் பதிலை கேட்ட வேதாளம் குடு குடுவென்று ஓடிப்போய் அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டது..
"மாதித்தா.. உன் பதில் சரியே..கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதற்காக விஜி தனது வாழ்க்கை அழித்து கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை"
"ஆனால், நீ ஒரு தவறு செய்து விட்டாய். நீ அமைதி காத்திருக்க வேண்டும். ஆனால், உன் பதிலால், கடந்த ஒன்றரை நிமிடங்களாக நீ காத்து வந்த மவுனம் கலைந்துவிட்டதால் இனி நீ என்னை பிடிக்க முடியாது..."
விக்கிரமன் கடுப்பானான்.
"இது பெரிய போங்கா இருக்கே..."
"போங்கோ, பேங்கோ, அது எனக்கு தெரியாது மாதித்தா. நீ இன்று தோற்றுவிட்டாய்...அடுத்த வாரம் வா.. முடிந்தால் என்னை பிடித்து செல்.."
விக்கிரமன் தனது ஒமேகா வாட்ச்சை பார்த்துக்கொண்டான். நள்ளிரவு ஆயிற்று... ஏதாவது கிளப் பக்கம் போனால் ஒரு நாலு ரவுண்டாவது அடிக்கலாம்...ஆனால் அந்த ஸ்பானிஷ் சிட்டு போனது போனது தான்....
அடுத்த வாரம் இந்த வேதாளத்தை பிடிக்காமல் விடுவதில்லை..
கறுவிக்கொண்டே விக்கிரமன் தனது காரை நோக்கி அந்த இருட்டில் நடக்க ஆரம்பித்தான்.
=========விஜியின் கதை முற்றியது ===========
இவ்ளோ படிச்சிட்டீங்க... அப்பிடியே இதையும் படிச்சிடுங்க...
பதிவரின் பின் குறிப்பு
இந்த கதையை எழுத ஆரம்பித்த பின், நான் எதிர்பாராத சில அதிர்ச்சிகள்..
முதல் அதிர்ச்சி, இதை எட்டு பாகங்களாக எழுத நேரிடும் என்பது. ஒண்ணாங்கிளாசில் இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் எழுதுவது. முக்கிய காரணம் சோம்பேறித்தனம். ஏதோ ஒரு போதையில் (அதாவது, குடி போதையில்), எழுத ஆரம்பித்த விஷய்ம் இப்படி எட்டு பாகங்களாக போகும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எண்ணித்துணிக கருமம்..... கருமம், எனக்கு ஒரு நாளும் நினைவிருப்பதில்லை. தொடரை ஆரம்பிக்கும் முன் வரை மொத்தமாக எழுதியது நான்கு மொக்கைகள் (சரி, சரி, அதி மொக்கை பதிவுகள்). நம்புங்கள், நிஜமாகவே தொடர் எழுதி யாரையும் கொடுமைபடுத்த நான் கனவிலும் நினைக்கவில்லை.
இரண்டாவது அதிர்ச்சி,இதை படித்த சில நண்பர்கள் கேட்ட (கேட்கும்) கேள்வி...
நண்பர் செல்வ கருப்பையா, நீங்கள் தான் விஜியின் கும்பகோணத்து காதலனா என்று கேட்டிருந்தார். மற்றும் பல நண்பர்கள் (எனது யுனிவர்சிட்டி நண்பர்கள் மற்றும் பலர்), கேட்டது... நீ தான் கதையில் வரும் ஆன்டர்சனா?...
இல்லை சாமி... பக்த ஹரி தாஸ் படம் பார்த்தவர்களுக்கும், தசாவதாரம் விமர்சனம் எழுதியவர்களுக்கும், சமீபத்தில் பத்து பத்து விமர்சனம் எழுதிய அண்ணன் லக்கி லுக், 21 படத்திற்கு விமர்சனம் எழுதிய கயல்விழி அவர்களுக்கும் (மன்னிச்சுக்குங்க கயல்விழி, லக்கி லுக், நான் தப்பிக்கிறதுக்கு உங்கள யூஸ் பண்றேன்), படத்துக்கும் என்ன சம்பந்தமோ அதே அளவு சம்மந்தமே எனக்கும் இந்த கதைக்கும்.
வேதாளம் விக்கிரமனுக்கு சொல்லிய கதையை ஒட்டுக்கேட்டு எழுதியது தவிர பெரிய தொடர்பில்லை.
விஜி எனக்கு தோழியே தவிர, காதலி அல்ல. Friend க்கும் Girl Friend க்கும் வித்தியாசம் தெரியும்.
இந்த குழப்பத்திற்கும் காரணம் நானே. முக்கிய பிரச்சினை, இந்த கதை நடந்த காலத்தை நான் சொல்லவில்லை. இது 1996ல் நடந்த கதை. ( கதையில் எந்த இடத்திலும் செல் ஃபோன் வரவில்லை. காரணம் அந்த கால் கட்டத்த்தில் இன்டியாவில் செல் ஃபோன் அதிகம் இல்லை, கண்டிப்பாக விஜியின் ஊரில் இல்லை). 1996ல் நான் ரொம்ப ச்சின்ன பையன் என்பதால், நான் ஆட்டத்திலேயே இல்லை.
இதை சொல்லாததற்கு காரணம் எனது எழுத்தின் பிழையே. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்று நான் திட்டமிடவில்லை. தவிர எனக்கு விஜியும், ஆன்டர்சனும் மிகவும் நெருங்கியவர்கள் என்பதால் அவர்களது Character, Background பற்றி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. So, thats missing too. இதுவும் எனது தவறே!
முற்றுப்புள்ளி வைக்க, " நீ கொஞ்சம் லூசு.... ஏன்டா அழகா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இப்பிடி தெருப்பொறுக்கி மாதிரி கெட்ட வார்த்தையா பேசுற" என்று அவ்வப்பொழுது, மிக முக்கியமான (அதாவது, யார்ட்டனா நாம மூச்சை போட்ற சமயத்தில) சமயங்களில் என் காலை வாரினாலும் விஜி ஒரு நெருங்கிய தோழி அவ்வளவே. நான் விஜியின் காதலனோ, கணவனோ அல்ல!
இது வரை இதை பொறுமையாக படித்த நல்லவர்களுக்கும், பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...
நமக்கு அரை லோடு செங்கல்லு என்று ஆர்டர் செய்த அதிரடி மக்களுக்கு....
அண்ணேய்ங், என்ன உட்ருங்கண்ணே... எல்லாம் அந்த மொட்டை வேதாளம் பண்ணது...
வேதாளம் அடுத்த வாரம் ஒரு கதை சொல்லும் என்று தெரிகிறது. முடிந்தால் நான் அதை உங்களுக்கு சொல்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
டாஷ் டாஷ் டாஷ்
67 comments:
செருப்பாகக் காலை வெட்ட முடியாதுன்னு சொன்னீங்க பாருங்க...அது சூப்பர்.
மொத்தத்தில் அருமை. ரசிச்சேன்.
//கலாச்சாரம் என்பது என்ன... வாழ்க்கையிலிருந்து வந்தது தான் கலாச்சாரமே தவிர, கலாச்சாரத்திலிருந்து வாழ்க்கை வரவில்லை. வாழ்க்கை மாற, கலாச்சாரமும் மாறித்தான் ஆகவேண்டும். மாறாத எந்த விஷயமும் அழியும். If something doesn't move then it's possibly dead.//
இது தான் உண்மை இது அனைவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்,ஆனால் மாறினால் நாம் அழிக்கப்படுவோமோ என்ற பயமே மாற்றத்தை தடுக்கிறது.ஆனாலும் மாற்றம் நடக்கும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் "வரம்" என்னும் சீரியல்).
புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்றெல்லாம் கேட்டார்கள். வராமல் இருக்க புள்ளி ராஜா ஆணுறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறை கூறினார்கள். ஆனால் எய்ட்ஸ் வந்துவிட்டால் புள்ளிராஜாவின் மனைவியின் கதி என்ன என்பதைக் கூறினார்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லலம் இப்போது கூற முடியுமா? கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் மனைவி அவனிடம் விவாகரத்து பெற இது ஒரு காரணமாக அமையுமா? தெரியவில்லை. வழக்கறிஞர்கள் யாராவது கருத்து கூறலாம்.
ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
மேலே எழுதிய எல்லாமே எனது ஆண் பெண் கற்புநிலை பற்றி இட்ட பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. பார்க்க:
http://dondu.blogspot.com/search/label/ஆண்%20பெண்%20கற்புநிலை
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நண்பரே..
பிறகு வந்து விரிவாக சொல்கிறேன்..
நச் என்ற முடிவு...
தொடர்ந்து எழுதுங்கள்...
இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் ...
//நண்பர் செல்வ கருப்பையா, நீங்கள் தான் விஜியின் கும்பகோணத்து காதலனா என்று கேட்டிருந்தார்.//
பொது புத்தியிலும் சும்மாத் தமாஷாகக் கேட்கிறேன் பேர்வழி என்றும் கேட்டது அது. வருத்தப் பட வைத்திருந்தால் மன்னிக்கவும்.
நிறைவான நடை - திரும்பத் திரும்பச் சொல்லத் தேவை இல்லை. உங்களை வேதாளத்தை ஒட்டுக் கேட்குமாறுப் பணிக்கிறோம்.
great answers. eagerly waiting for the next story from vedhal.
சூப்பருங்க கதை. போதைல எழுதுனாலும் கீதை எழுதீருக்கீங்க. ஆகையால பாராட்டித்தான் ஆகனும். சூப்பரு. :)
அந்த ரெண்டு ரூவா ஊசிக் குத்தல்...உண்மையிலேயே குத்தலுதான். :)
//வாழ்க்கை மாற, கலாச்சாரமும் மாறித்தான் ஆகவேண்டும். மாறாத எந்த விஷயமும் அழியும்.//
ஒவ்வொரு வரியிலேயும் ரொம்ப அருமையான கருத்துக்களை, ரொம்ப 1G4T யான theme ல எழுதி இருக்கீங்க. கலாச்சாரம் மாறிகிட்டே தான் இருக்கு ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு தான் பெரும்பாலோனோர் தயங்கறாங்க.
//வாழ்க்கை என்பது ஒரு முறை தான். தன் வாழ்க்கையை குடிகார கணவனுக்காகவும், பேராசை பிடித்த மாமியாருக்காகவும் விஜி நாசமாக்கி கொள்ள வேண்டியதில்லை.புல்லாகவும், கல்லாகவும் இருக்கும் புருசன்களை மண்ணாக்குவதில் எந்த தவறும் இல்லை.பிடிக்காத கணவனுடன் வாழ்ந்து, பிள்ளை பெற்றுக்கொள்வது ஒரு வித நோய்த்தனமே.//
எல்லா உறவுகளுக்குமே இது பொருந்தும். கலாச்சாரம் என்ற பேரில் taking for granted mentality நிறைய பேருக்கு இருக்கு.
//
துளசி கோபால் said...
செருப்பாகக் காலை வெட்ட முடியாதுன்னு சொன்னீங்க பாருங்க...அது சூப்பர்.
மொத்தத்தில் அருமை. ரசிச்சேன்.
//
வாங்க துளசி கோபால். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருவதற்கு நன்றி!
'outsourced' படம் பார்த்துட்டீங்களா? அதுல கலாச்சாரத்தை பத்தி உள்குத்து நிறையவே இருக்கு. நல்ல படம்; யாராவது விமர்சனம் எழுதுனா நிறைய கும்மி அடிக்கலாம்!
//
குடுகுடுப்பை said...
இது தான் உண்மை இது அனைவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்,ஆனால் மாறினால் நாம் அழிக்கப்படுவோமோ என்ற பயமே மாற்றத்தை தடுக்கிறது.ஆனாலும் மாற்றம் நடக்கும்.
//
வாங்க குடுகுடுப்பையாரே...
மாற்றம் நடக்குமா இல்லையான்னு எனக்கு தெரியல தல. மாற்றம் நடக்கணும்னும் நான் இத எழுதல. இப்பிடி ஒரு கதை நடந்திச்சி, அத மக்கள்ட்ட சொல்லிப்புட்டேன். அவ்வளவு தான் :0)
//
dondu(#11168674346665545885) said...
ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் "வரம்" என்னும் சீரியல்).
புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்றெல்லாம் கேட்டார்கள். வராமல் இருக்க புள்ளி ராஜா ஆணுறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறை கூறினார்கள். ஆனால் எய்ட்ஸ் வந்துவிட்டால் புள்ளிராஜாவின் மனைவியின் கதி என்ன என்பதைக் கூறினார்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லலம் இப்போது கூற முடியுமா? கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் மனைவி அவனிடம் விவாகரத்து பெற இது ஒரு காரணமாக அமையுமா? தெரியவில்லை. வழக்கறிஞர்கள் யாராவது கருத்து கூறலாம்.
ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
மேலே எழுதிய எல்லாமே எனது ஆண் பெண் கற்புநிலை பற்றி இட்ட பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. பார்க்க:
http://dondu.blogspot.com/search/label/ஆண்%20பெண்%20கற்புநிலை
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அடடா, வாங்க டோண்டு சார்...
உங்களை மாதிரி மூத்த பதிவர்கள் நாம எழுதறது எல்லாம் படிக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு :0)
நீங்க எழுதியிருக்கிறது இப்ப தான் படிச்சேன். கிட்டத்த்ட்ட என் கருத்தும் அது தான். என்னவோ ஆண்கள் எல்லாம் ஊர் மேயலாம், ஆனா பெண்கள் பக்கத்து வீட்டு பையன்ட்ட பேசுனா கூட அவளோட கற்பு போயிடுச்சி என்று கூவும் கலாச்சார காவலர்கள் மேல் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.
உங்கள் கருத்தும் என் கருத்தும் பெரும்பாலான இடங்களில் ஒத்து போகிறது. எனக்கும் சோ ராமசாமியை பிடிக்கும் (அதற்காக தான் உங்கள் பிளாக்கை படிக்க ஆரம்பித்தேன்). தவிர உங்கள் இஸ்ரேல், அமெரிக்க ஆதரவு... நானும் அப்படியே, ஒரு சில நேரங்களை தவிர்த்து...
வருகைக்கு நன்றி சார். அடிக்கடி வாங்க :0)
//
உருப்புடாதது_அணிமா said...
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நண்பரே..
பிறகு வந்து விரிவாக சொல்கிறேன்..
நச் என்ற முடிவு...
தொடர்ந்து எழுதுங்கள்...
இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் ...
//
வாங்க அணிமா. வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி, மீண்டும் வருக.
(ஆமா, நீங்க என்ன ஒண்ணும் எழுத மாட்டேங்கிறீங்க, எழுதுங்க பாசு)
//
செல்வ கருப்பையா said...
பொது புத்தியிலும் சும்மாத் தமாஷாகக் கேட்கிறேன் பேர்வழி என்றும் கேட்டது அது. வருத்தப் பட வைத்திருந்தால் மன்னிக்கவும்.
//
அடடா, வருத்தமெல்லாம் ஓண்ணும் இல்லீங்க. ஆனா, இப்பிடி ஒரு கேள்வி வரும்னு நான் யோசிக்கவே இல்லியா, அதனால கொஞ்சம் ஆச்சரியமாவும் ரொம்ப அதிர்ச்சியாவும் ஆயிடுச்சி. இதுல இப்பிடி ஒரு ஆங்கிள் இருக்குன்றதே எனக்கு ஏன் தோணலை?
நீங்க மட்டுமில்ல, சில ஃபிரண்ட்ஸும் இதையே கேட்டாங்க. அதான் எல்லாருக்கும் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டியதா போச்சி!
//
நிறைவான நடை - திரும்பத் திரும்பச் சொல்லத் தேவை இல்லை. உங்களை வேதாளத்தை ஒட்டுக் கேட்குமாறுப் பணிக்கிறோம்.
//
நன்றி தல. ஒட்டுக்கேட்கிறது தான? பண்ணிருவோம் :0)
//
shrek said...
great answers. eagerly waiting for the next story from vedhal.
//
வாங்க Shreக். வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. அடுத்த ஸ்டோரி, வேதாளம் ஆரம்பிச்சதும் நானும் ஆரம்பிச்சிடுறேன் :0)
//
G.Ragavan said...
சூப்பருங்க கதை. போதைல எழுதுனாலும் கீதை எழுதீருக்கீங்க. ஆகையால பாராட்டித்தான் ஆகனும். சூப்பரு. :)
அந்த ரெண்டு ரூவா ஊசிக் குத்தல்...உண்மையிலேயே குத்தலுதான். :)
//
வாங்க ஜிரா. பதிவுலக பரந்தாமன்னு உங்களுக்கு ஒரு பேரு இருக்கு போலிருக்கு.. உங்களுக்கு தெரியாத கீதையா? ;0)
டாக்டருக்கு தெரிஞ்சா குத்திருவாரு. ஊசியால இல்ல... கடப்பாரையால!
//
Sundar said...
ஒவ்வொரு வரியிலேயும் ரொம்ப அருமையான கருத்துக்களை, ரொம்ப 1G4T யான theme ல எழுதி இருக்கீங்க. கலாச்சாரம் மாறிகிட்டே தான் இருக்கு ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு தான் பெரும்பாலோனோர் தயங்கறாங்க.
எல்லா உறவுகளுக்குமே இது பொருந்தும். கலாச்சாரம் என்ற பேரில் taking for granted mentality நிறைய பேருக்கு இருக்கு.
//
வாங்க சு ந்தர் சார். வருகைக்கு நன்றி.
அது என்ன 1G4T?
//
Sundar said...
'outsourced' படம் பார்த்துட்டீங்களா? அதுல கலாச்சாரத்தை பத்தி உள்குத்து நிறையவே இருக்கு. நல்ல படம்; யாராவது விமர்சனம் எழுதுனா நிறைய கும்மி அடிக்கலாம்!
//
இல்லீங்க. நீங்க பாத்துட்டீங்களா? எழுதினிங்கனா அதை படிச்சிட்டு அப்புறம் பாக்கிறேன். நாங்கெல்லாம் ரொம்ப சேஃபா இருப்போம்ல :0)
//இல்லீங்க. நீங்க பாத்துட்டீங்களா? எழுதினிங்கனா அதை படிச்சிட்டு அப்புறம் பாக்கிறேன். நாங்கெல்லாம் ரொம்ப சேஃபா இருப்போம்ல :0)//
கயல் அக்கா பாத்துட்டு எழுதுவாங்க அப்புறம் பாக்கலாம்.
//அது என்ன 1G4T?
actually I meant original; 1g4t means Ori..G..Naali T - originality ;)
// குடுகுடுப்பை said...
//இல்லீங்க. நீங்க பாத்துட்டீங்களா? எழுதினிங்கனா அதை படிச்சிட்டு அப்புறம் பாக்கிறேன். நாங்கெல்லாம் ரொம்ப சேஃபா இருப்போம்ல :0)//
கயல் அக்கா பாத்துட்டு எழுதுவாங்க அப்புறம் பாக்கலாம்.
//
அதான் சரி! இடுகை போடறதோட கும்மி அடிக்கறது ஈஸீ. கயல்/வருண் எழுதட்டும் - என்னோட சில்லரையையும் சேர்த்திடறேன்.
//நீங்க பாத்துட்டீங்களா? எழுதினிங்கனா அதை படிச்சிட்டு அப்புறம் பாக்கிறேன். நாங்கெல்லாம் ரொம்ப சேஃபா இருப்போம்ல :0)//
இப்ப தான் கவனிச்சேன். இது கொஞ்சம் பழைய படம் - சமீபத்துல flightla பார்த்ததால புது படம்ன்னு நினச்சுட்டேன். இங்க கொஞ்சம் intro .. http://movies.nytimes.com/2007/09/28/movies/28outs.html
//
Sundar said...
இப்ப தான் கவனிச்சேன். இது கொஞ்சம் பழைய படம் - சமீபத்துல flightla பார்த்ததால புது படம்ன்னு நினச்சுட்டேன். இங்க கொஞ்சம் intro ..
//
சுந்தர் சார்,
நீங்க பாத்துட்டா எழுதுங்களேன். நீங்களும் எழுதி ரொம்ப நாள் ஆச்சி!
இந்தக் கதையப் படிச்சுட்டு எமினெம் துப்பாக்கியோட சுத்திக்கிட்டு இருக்காரு போல?
//
செல்வ கருப்பையா said...
இந்தக் கதையப் படிச்சுட்டு எமினெம் துப்பாக்கியோட சுத்திக்கிட்டு இருக்காரு போல?
//
அவரு இல்லீங்க. அது நான் தான்.
கதைய படிச்சிட்டு இல்ல, வேற காரணத்துனால நான் தான் இப்ப மூணு நாளா நிஜமான கொலைவெறியோட சுத்திக்கிட்டு இருக்கேன் :0(
கதைய படிச்சிட்டு இல்ல, வேற காரணத்துனால நான் தான் இப்ப மூணு நாளா நிஜமான கொலைவெறியோட சுத்திக்கிட்டு இருக்கேன் :0(
//
கொஞ்சம் சரக்க போட்டு கூல் ஆவுங்க
//
வேறொரு பதிவிற்கான பின்னூட்டத்தில் நீங்கள்,
"கருணானிதி என்பது தானே அவர் பெயர்? (அதுவும் அவரே தேர்ந்தெடுத்த பெயர்! அவரது இயற்பெயர் அதுவல்ல!)"
என்று குறிப்பிட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது.
இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது! இது சரியான தகவல் தானா? அவரது இயற்பெயர் என்ன; எப்போது, என்ன காரணங்களுக்காக, இப்பெயரை அவர் தேர்ந்தெடுத்தார் என்று கூற இயலுமா? ஏதாவது சுட்டிகள் தந்தாலும் நன்றே!
-அரசியல் மாணாக்கன்.
அது சரி, அசத்திட்டீங்க. இதே போல இன்னும் அசத்த வாழ்த்துகள். உங்க பதிவுகளை படித்து சிரி சிரி என்று சிரித்துவிட்டு அப்புறமாக சிந்தித்தேன். ஒருவரையும் விட்டு வைக்காமல் வாரி இருக்கிறீர்கள்.
மோகன்
வெறும் அதுசரின்னு சொல்லாம அது மிகச்சரி என்ற அளவில் இருந்தது எட்டு பாகமும். தொடரட்டும் இந்த அசத்தல்
:)
"கருணானிதி என்பது தானே அவர் பெயர்? (அதுவும் அவரே தேர்ந்தெடுத்த பெயர்! அவரது இயற்பெயர் அதுவல்ல!)"
//
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தட்சினாமூர்த்தி. பள்ளியில் படித்த காலத்தில் அன்றைய திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்றி வைத்துக் கொண்டனர். அந்த சமயத்தில் தன் பெயரை கருணாநிதி என மாற்றிக் கொண்டார். அன்பழகன்,நெடுஞ்செழியன்,மதியழகன் போன்றோரும் தங்கள் இயற்பெயரை மாற்றிக் கொண்டவர்களே.
//
குடுகுடுப்பை said...
கொஞ்சம் சரக்க போட்டு கூல் ஆவுங்க
//
நீங்க சொல்லி மறுக்க முடியுமா? இப்ப தான் வீட்டுக்கு வந்தேன், இ ந்தா ஆரம்பிச்சிட்டேன் :0)
//
Anonymous said...
வேறொரு பதிவிற்கான பின்னூட்டத்தில் நீங்கள்,
"கருணானிதி என்பது தானே அவர் பெயர்? (அதுவும் அவரே தேர்ந்தெடுத்த பெயர்! அவரது இயற்பெயர் அதுவல்ல!)"
என்று குறிப்பிட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது.
இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது! இது சரியான தகவல் தானா? அவரது இயற்பெயர் என்ன; எப்போது, என்ன காரணங்களுக்காக, இப்பெயரை அவர் தேர்ந்தெடுத்தார் என்று கூற இயலுமா? ஏதாவது சுட்டிகள் தந்தாலும் நன்றே!
-அரசியல் மாணாக்கன்.
//
வாங்க அனானி!
கருணானிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தட்சிணா என்பதோ, மூர்த்தி என்பதோ தமிழ் பெயர் அல்ல.
தட்சிணா மூர்த்தி என்பதற்கு முருகன் என்று இ ந்து மதத்தில் அர்த்தம். தட்சின் என்பது தக்ஷின் என்ற வடமொழிச்சொல்லின் தமிழாக்கம் (தெற்கு என்று அர்த்தம்)
மூர்த்தி என்பதுவும் மூர்த் என்ற சம்ஸ்கிருதத்தின் திரிபே.
1960களில் இ ந்தி எதிர்ப்பு, திராவிட இயக்கம், தனித்தமிழ் நாடு இயக்கம் காரணாமாக கருணானிதி தனது தட்சிணாமூர்த்தி என்ற பெயரை மாற்றிக்கொண்டார்.
பேராசிரியர் அன்பழகனின் இயற்பெயர் ராமையா. மற்ற திராவிட இயக்க தலைவர்களான நெடுஞ்செழியன், மதியழகனின் உண்மை பெயர் எனக்கு தெரியவில்லை.
இது எல்லாம் நான் 11 வயதில், தி.மு.க வுக்காக ஓட்டுக்கேட்ட போது படித்தது!
//
pathivu said...
அது சரி, அசத்திட்டீங்க. இதே போல இன்னும் அசத்த வாழ்த்துகள். உங்க பதிவுகளை படித்து சிரி சிரி என்று சிரித்துவிட்டு அப்புறமாக சிந்தித்தேன். ஒருவரையும் விட்டு வைக்காமல் வாரி இருக்கிறீர்கள்.
//
வாங்க மோகன். வருக்கைக்கு நன்றி.
நம்மள பல பேரு வார்றாங்கள்ள, அதுக்கு பழிக்கு பழி இது :0)
அடிக்கடி வாங்க!
//
புதுகை.அப்துல்லா said...
வெறும் அதுசரின்னு சொல்லாம அது மிகச்சரி என்ற அளவில் இருந்தது எட்டு பாகமும். தொடரட்டும் இந்த அசத்தல்
:)
//
வாங்க அப்துல்லா. வாழ்த்துக்கு நன்றி.
(எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகணும். புதுகை.எம்.எம்.அப்துல்லாவும் நீங்களும் ஒண்ணா?)
//
புதுகை.அப்துல்லா said...
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தட்சினாமூர்த்தி. பள்ளியில் படித்த காலத்தில் அன்றைய திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்றி வைத்துக் கொண்டனர். அந்த சமயத்தில் தன் பெயரை கருணாநிதி என மாற்றிக் கொண்டார். அன்பழகன்,நெடுஞ்செழியன்,மதியழகன் போன்றோரும் தங்கள் இயற்பெயரை மாற்றிக் கொண்டவர்களே.
//
உங்களுக்கு நெடுஞ்செழியன், மதியழகன் இயற்பெயர் தெரிஞ்சா சொல்லுங்களேன்!
தல,
மிகவும் இரசித்து படித்தேன்.... கலாச்சார முகமூடி எவ்வளவு போலி என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்....
வேதாளத்தை விரைவில் சந்திக்க எதிர்பார்க்கிறோம்...
உங்களுக்கு நெடுஞ்செழியன், மதியழகன் இயற்பெயர் தெரிஞ்சா சொல்லுங்களேன்!
நாவலர் நாரயணசாமி, மதியழகன் பேரு தெரியல
//கருணானிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தட்சிணா என்பதோ, மூர்த்தி என்பதோ தமிழ் பெயர் அல்ல.//
அட! நல்ல தகவல்! நன்றி. :)
ஆனால், இன்னமும் ஒன்று விளங்கவில்லை. அப்படிப் பார்த்தால் 'கருணாநிதி' என்பது கூடத் தமிழ் அல்லவே! ('கருணைச்செல்வம்' என்றிருந்தால் தானே முற்றும் தமிழென்று கருதலாம்.)
(குடுகுடுப்பை சொல்வது போல், 'நாராயணசாமி' தான் பின்பு 'நெடுஞ்செழியன்' ஆனார் என்று எங்கோ படித்தது நினைவிருக்கிறது.)
நன்றி.
-அரசியல் மாணாக்கன்.
எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகணும். புதுகை.எம்.எம்.அப்துல்லாவும் நீங்களும் ஒண்ணா?)
//
அண்ணே ரெண்டு நாந்தாண்ணே. மதிரட்டியில் பெயரின் நீளம் சற்று அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் வராமல் போய்விடுகிறது. எனவே சற்று சுறுக்கிக் கொண்டேன்.
அப்புறம் எனக்கும் மதியழகனின் இயற்பெயர் தெரியவில்லை. கலைஞர் 1960 களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெயர் மாற்றியதாக நீங்கள் குறிப்பிட்டதில் சிறு தவறு உள்ளது 1930 களின் கடைசியில் நடந்த இந்தி எதிர்ப்பின் போதுதான் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். :)
//நம்மள பல பேரு வார்றாங்கள்ள, அதுக்கு பழிக்கு பழி இது :0)//
சபாஷ் சரியான போட்டி. நடத்துங்க.
//அடிக்கடி வாங்க!//
அது சரி, வந்துட்டா போச்சி. அப்படியே என் வீட்டு பக்கமும் வந்துட்டு போறது!?
ஹலோ அது சரி! பட்டையை கெளப்புறீங்க. இப்பதான் உங்களோட கதைகள் எல்லாத்தையும் சேர்த்துப் படிச்சேன் - ரகளையா இருக்கு! என்ன ஒரு நடை!
அதுவும் சைடு கேப்பில நம்மூரு விஷயங்களையும், அரசியலையும் கலாய்ச்சி தள்ளிட்டீங்க.. ஆட்டோ கண்டிப்பா வரும்..
இந்த மாதிரியான பதிவு எழுதினா.. நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க, ஆட்டோ கூட அனுப்புவாங்க.. அதை எல்லாம் பார்த்தா முடியுமா.. நீங்க கண்டினியு..
மீண்டும் கதையை தொடருங்க..
//
pathivu said...
அது சரி, வந்துட்டா போச்சி. அப்படியே என் வீட்டு பக்கமும் வந்துட்டு போறது!?
//
வாங்க மோகன். வரக்கூடாதுன்னு இல்லீங்க. எனக்கு வழி தெரில!. இப்ப தெரிஞ்சி போச்சி.
உங்க அட்ரஸ நம்ம லிங்க்குல போட்டுட்டேன். இனிமே கரீக்டா வந்துருவோமில்ல :0)
//
Saravana Kumar MSK said...
ஹலோ அது சரி! பட்டையை கெளப்புறீங்க. இப்பதான் உங்களோட கதைகள் எல்லாத்தையும் சேர்த்துப் படிச்சேன் - ரகளையா இருக்கு! என்ன ஒரு நடை!
அதுவும் சைடு கேப்பில நம்மூரு விஷயங்களையும், அரசியலையும் கலாய்ச்சி தள்ளிட்டீங்க.. ஆட்டோ கண்டிப்பா வரும்..
இந்த மாதிரியான பதிவு எழுதினா.. நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க, ஆட்டோ கூட அனுப்புவாங்க.. அதை எல்லாம் பார்த்தா முடியுமா.. நீங்க கண்டினியு..
மீண்டும் கதையை தொடருங்க..
//
வாங்க சரவணா! வருகைக்கு நன்றி!
உங்க கடை பக்கம் வந்து பாத்தேன். கவிதையெல்லாம் சும்மா மெரட்றீங்க! உங்க கடைக்கு முன்னாடி நம்ப கடையெல்லாம் ச்சும்மா ரோட்டோர கடைங்க!
அட! இங்கேதான் வீட்டுக்கு வந்துபோகும் அழைப்பு தரணுமா?
அடடா.... தெரியாமப் போச்சே....
நம்ம வீட்டுப்பக்கமும் வந்துட்டுப்போங்க.
//
துளசி கோபால் said...
அட! இங்கேதான் வீட்டுக்கு வந்துபோகும் அழைப்பு தரணுமா?
அடடா.... தெரியாமப் போச்சே....
நம்ம வீட்டுப்பக்கமும் வந்துட்டுப்போங்க.
//
அடடா, அழைப்பு தரணும்னுல்லாம் இல்லீங்க. அட்ரஸ் தெரியாததுனால தான் பல பேரு வீட்டுக்கு நான் போறதுல்ல. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா அட்ரஸ் கலெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
நான் ஆன்லைன்ல வர்ற நேரம் தான் அனேகமா நீங்களும் ஆன்லைன்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன்.
நீங்க ஆக்லண்டா, க்ரைஸ்ட் சர்ச்சா??
உங்க வீட்டுக்கு நான் அடிக்கடி வந்துருக்கேனே! ஆனா, உங்க வீட்ல ரொம்ப பெரிய மனுசங்கள்லாம் இருக்கிறத பாத்துட்டு, பொடியன் நம்ம என்ன பேசுறதுன்ட்டு அப்பிடியே பேக்கடிச்சிர்றது.
சொல்லீட்டிங்கள்ல? இனிமே பாருங்க :0)
கிறைஸ்ட்சர்ச் லே இருக்கேன்.
உங்களுக்கும் எங்களுக்கும் 180 டிகிரி நடுவிலே இருக்கு:-))
அடுத்த பதிவு விரைவில் வரவில்லையெனில் ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Though I hardly commented, I've been reading this series.
Excellent narration!!!!
Though you claim that you have not attempted writing earlier, I strongly suspect that.
Keep going.
//உங்க கடை பக்கம் வந்து பாத்தேன். கவிதையெல்லாம் சும்மா மெரட்றீங்க! உங்க கடைக்கு முன்னாடி நம்ப கடையெல்லாம் ச்சும்மா ரோட்டோர கடைங்க!//
அட.. அப்படியெல்லாம் இல்லீங்க்ணா.. அக்கரைக்கு இக்கரை பச்சை.. :)))
சரி.. சரி.. அடுத்த பாகத்தை போடுங்க..
நம்ம கடைப்பக்கம் வந்துட்டு ஒரு பின்னூட்டம் கூட போடாம போயிருக்கீங்க..
//அடுத்த பதிவு விரைவில் வரவில்லையெனில் ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//
ரெண்டு நாள் டைம் தரேன். இல்லாட்டி ஆட்டோல 1ம் நம்பர் பஸ்ல கண்ணாடி ஒடச்ச ஒரு ஆள் வேற வருவார்.
//
Indian said...
Though I hardly commented, I've been reading this series.
Excellent narration!!!!
Though you claim that you have not attempted writing earlier, I strongly suspect that.
Keep going.
//
வாங்க இன்டியன். வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.
//
Though you claim that you have not attempted writing earlier, I strongly suspect that.
//
I take this as a compliment mate!
மத்தபடி, இதுக்கு முன்ன நான் எழுதுனதுன்னா நாலஞ்சி மொக்கை பதிவுகள் தான்.
//
Saravana Kumar MSK said...
நம்ம கடைப்பக்கம் வந்துட்டு ஒரு பின்னூட்டம் கூட போடாம போயிருக்கீங்க..
//
அதுங்ணா, நமக்கு சீரியசா ஒரு பிரச்சினை இருக்கு. எந்த பதிவுக்கும் உருப்படியா பின்னூட்டம் போட தெரியல. எல்லாம் கும்மி தான்.(வேணும்னே பண்றதுல்ல, எனக்கு தெரிஞ்சது அது தான்).
நீங்க ரொம்ப அழகா, சீரியசா கவிதையெல்லாம் எழுதி இருக்கீங்களா, எனக்கு கும்மி அடிக்க மனசு வர்ல. அதான்!
//
குடுகுடுப்பை said...
//அடுத்த பதிவு விரைவில் வரவில்லையெனில் ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//
ரெண்டு நாள் டைம் தரேன். இல்லாட்டி ஆட்டோல 1ம் நம்பர் பஸ்ல கண்ணாடி ஒடச்ச ஒரு ஆள் வேற வருவார்.
//
அந்த ஒண்ணாம் நம்பர் பஸ் பார்ட்டி யாருன்னு எனக்கும் தெரியும். அவரு ஏற்கனவே கொலை வெறில்ல இருக்காரு. நீங்க வேற இந்த நேரத்துல என்னை மாட்டி விடுறீங்களே! இது நியாயமா?
அடுத்த பதிவு, சீக்கிரமா, அமெரிக்கவோட ஃபினான்ஸ் மார்க்கெட் பிரச்சினையெல்லாம் முடிஞ்சதும் எழுதிருவோம் :0)
//அந்த ஒண்ணாம் நம்பர் பஸ் பார்ட்டி யாருன்னு எனக்கும் தெரியும். அவரு ஏற்கனவே கொலை வெறில்ல இருக்காரு. நீங்க வேற இந்த நேரத்துல என்னை மாட்டி விடுறீங்களே! இது நியாயமா?//
சோ, அது சரிதான் என் கிட்ட மாட்டிக்கபோற ஆளா?
//அடுத்த பதிவு, சீக்கிரமா, அமெரிக்கவோட ஃபினான்ஸ் மார்க்கெட் பிரச்சினையெல்லாம் முடிஞ்சதும் எழுதிருவோம் :0)//
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்னும் இரண்டு வருடங்கள் வரை உங்க பதிவைப் படிக்காமல் இருக்க முடியாது. வேதாளத்திடம் ஒட்டுக் கேட்க பணித்ததை மறந்து விட்டீரோ. ம்... டரியல் தொடங்கட்டும்!
Btw, நான் இந்த வாரக் கடைசியில் விடுமுறையில் இந்தியா செல்ல இருக்கிறேன் (விடுமுறையா அல்லது விடுதலையா என்பது financial crisis பொறுத்து மாறும்). கொஞ்சம் தாமதமாக react அல்லது proact செய்வேன் (இப்ப மட்டும் ரொம்ப வாழுதாம் என்பதையெல்லாம் பின்னூட்டத்தில் தெரிவிக்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்).

ஆஹா, கிரேட் எஸ்கேப்..."அது சரி"க்கு அதிர்ஷ்டம் எப்பவும் ஜாஸ்தி..ச்சும்ம்மா கும்முன்னு எஸ்கேப் ஆயிட்டோமுல்ல?
போயிட்டு வாங்க தல. நல்லா எஞ்சாய் பண்ணுங்க. கும்போனத்துல அடிதடி, பஸ் உடைப்புன்னு நியூஸ் வரும், நான் அப்ப படிச்சிக்கிறேன் :0)
என்ன இருந்தாலும்... யாரையாவது அடிக்கணுங்கிறதுக்காக, ஃபிளைட்ல போறது எல்லாம் கொஞ்சம் ஓவரு!
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, எதை quote பண்ணுவதென்பதும் தெரியவில்லை. அத்தனை அசத்தலான கருத்துக்கள்,இப்படி எழுத நிச்சயம் தைரியம் வேண்டும்.
ஒவ்வொரு வரியையும் ரொம்ப மீனிங்ஃபுல்லாக இருந்தது!
//
கயல்விழி said...
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, எதை quote பண்ணுவதென்பதும் தெரியவில்லை. அத்தனை அசத்தலான கருத்துக்கள்,இப்படி எழுத நிச்சயம் தைரியம் வேண்டும்.
ஒவ்வொரு வரியையும் ரொம்ப மீனிங்ஃபுல்லாக இருந்தது!
//
வாங்க கயல்விழி.. வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி..
தைரியமெல்லாம் ஒண்ணியிமில்லீங்கோ... கலாச்சார காவலர்களெல்லாம் எப்பிடியும் பிரிட்டன் வரைக்கும் ஆட்டோ அனுப்ப மாட்டாங்கன்னு ஒரு தன்னம்பிக்கை தான் :0)
//தைரியமெல்லாம் ஒண்ணியிமில்லீங்கோ... கலாச்சார காவலர்களெல்லாம் எப்பிடியும் பிரிட்டன் வரைக்கும் ஆட்டோ அனுப்ப மாட்டாங்கன்னு ஒரு தன்னம்பிக்கை தான் :0)
//
சரியாக சொன்னீர்கள், எனக்கும் அதே (அசட்டு) தைரியம் தான். இவங்க கலாட்டாவெல்லாம் இந்தியாவோட சரி.
நாங்க அப்படி இல்லீங்க ஊருக்கு திரும்பி போகனும். புரியுதா அது சரி
//
குடுகுடுப்பை said...
நாங்க அப்படி இல்லீங்க ஊருக்கு திரும்பி போகனும். புரியுதா அது சரி
//
நாங்க போக வேண்டாமில்ல! எல்லாம் அந்த தெகிரியம் தான் :0)
அருமையான தொடரை கொடுத்தீங்க! வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
//
மங்களூர் சிவா said...
அருமையான தொடரை கொடுத்தீங்க! வாழ்த்துக்கள்.
//
//
தொடர்ந்து எழுதுங்கள்...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
//
வாங்க சிவா அண்ணாச்சி. ஒரே நாள்ல எல்லாத்தையும் படிச்சி, பின்னூட்டமும் இட்டதற்கு மிக்க நன்றி...
வாழ்த்துகளுக்கு சிறப்பு நன்றி!
நல்லதொரு தொடரைக் கொடுத்தீர்கள்.
பாராட்டுக்கள்.
குறிப்பாக வேதாளம் மற்றும் மாதித்தனின் உரையாடல்களில் நிறைய சிரிப்பை வரவழைத்தன.
நன்றி
very nice story. keep it up.
Post a Comment