கரை உடைந்த காவிரி
அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
சிறப்பு அறிவிப்பு: மின் வெட்டுக்கும், மின் தடைக்கும் வித்தியாசம் உண்டு. அது போல, பதிவரே கெட்ட வார்த்தை எழுதுவதற்கும், கதையின் பாத்திரங்கள் கெட்ட வார்த்தையில் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு. இந்த பாகத்தில் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு நான் காரணம் இல்லாவிட்டாலும், மின்வெட்டுத்துறை மந்திரி போல் இல்லாமல், நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
இருட்டில் நடந்து போன விக்கிரமாதித்தனை நெடு நேரம் காணாமல் போகவே, வேதாளம் பெருங்குரலிட ஆரம்பித்தது.
"மாதித்தா...மாதித்தா....எங்கே போய் தொலைந்தாய்.."
"அடச்சே, நாட்டுல மனுசன நிம்மதியா ஒதுங்க கூட விடமாட்டாய்ங்க.."
புலம்பி கொண்டே வந்தான் விக்கிரமாதித்தன்.
"ஏய் மொட்டையே.. ஏன் இப்படி கூவுகிறாய்"
"ஒண்ணுமில்ல மாதித்தா. போயி ரொம்ப நேரமாச்சா, அதான் ஆளவந்தான் பாத்த ரசிகன் மாதிரி அப்பிடியே இன்டர்வெல்ல ஓடிட்டியான்னு நெனச்சேன்.."
"ஓடி ஒளிய நான் என்ன இந்தியாவின் மத்திய மந்திரியா? விட்டால் எனக்கு ஓடுகாலி பட்டமே குடுத்துறுவ போல இருக்கு"
"கவலைப்படாதே மாதித்தா. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். கண்டவனுக்கும் கொடுக்க இது என்ன டாக்டர் பட்டமா..."
"அதையெல்லாம் குடையாதே தாளமே. அப்புறம் உலுக்கி பாத்தேன், கலக்கி பாத்தேன்.. மரத்தில் தொங்குற வேதாளம், அதுக்கு காட்டுவேன் பாதாளம்னு யாராவது கலம்பகம் பாடி விடுவார்கள்"
"அதை விடு மாதித்தா... ஒதுங்கிறதுக்கு இவ்ளோ நேரமா.."
"ஆமா, இதுக்கெல்லாம் டைம் டேபிளா போட முடியும்.. நீ வெட்டிப்பேச்சு பேசாமல் கதைக்கு வா..."
"யார் நானா? வெட்றதுக்குன்னே தமிழ் நாட்டுல ஒரு மந்திரி இருக்கார்..அவரு பேரு கூட ஏதோ ஒரு காடு தான்..."
இளித்த வேதாளம் கதையை மீண்டும் தொடர்ந்தது...
================================================
விக்கிரமா, உன் விதி உன் கையில் என்பது உனக்கே புரியாவிட்டால், உன் விதியை மற்றவர்கள் எழுதிவிடுவார்கள். விஜிக்கும் அது தான் நடந்து கொண்டிருந்தது.
கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கென்றே ஊருக்கு நாலு பேர் இருப்பார்கள். தமிழ் நாட்டில் இது கொஞ்சம் அதிகம். ஊரில் நாலு பேரை தவிர மற்ற எல்லாரும் கலாச்சார காவலர்களாக இருப்பது அந்த நாட்டில் தான்.
மேஜைக்கு அடியில் கை நீட்டி காசு வாங்கிக்கொண்டே என்ன இருந்தாலும் நம்ம கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கில்ல சார் என்று சொல்லும் ஒழுக்க சீலர்களை நீ இங்கு தான் தரிசிக்க முடியும்.
அப்படிப்பட்ட சில ஒழுக்க சீலர்கள் அன்று இரவே விஜியின் விதியை எழுத தீர்மானித்தார்கள்.
நிலாக்காலம் என்றாலும் மேகங்கள் சூழ் ந்ததால், வானம் விஜியின் வாழ்க்கை போலவே இருண்டிருந்தது.
தோப்பு முத்துராம லிங்கம் முதலில் ஆரம்பித்தார். ஊரில் பெரிய தோப்பு இவருடையது என்பதால் அந்த பெயர். அந்த தோப்பு உண்மையில் கொப்பரங்கொண்ட மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதோ, தமிழ்நாட்டு கலாச்சாரப்படி இவர் அதை வளைத்துவிட்டார் என்பதோ நமக்கு தேவையில்லாதது. கலாச்சார துரோகிகள் என்று நமக்கு பேர் வருவானேன்?
"நடக்கக்கூடாததெல்லாம் நடந்து போச்சி சுப்பிரமணி... நம்ம வூட்டு பொண்ணு இப்பிடி வெள்ளக்காரங்கூட ஓடிப்போயிட்டான்னு தெரிஞ்சா நம்மள எவன் மதிப்பான்? காறி துப்பமாட்டான்? மொத்த ஊருக்குமில்ல அசிங்கமா போச்சி"
கடை கணேசன் இடை மறித்தார்.
"நீங்க என்னங்க பேசிக்கிட்டு. இதெல்லாம் போயி வெளிய சொல்லுவாங்களா? கமுக்கமா முடிச்சிடுவோம். இதுல பாதிக்கப்பட்டது யாரு... நம்ம சந்திரனும் அவன் குடும்பமும் தான். இந்தா அவன் அம்மா வந்திருக்காங்க..பெரீம்மா சொல்லட்டும், என்ன பண்றதுன்னு. மொத்தமா அத்து விட்ரலாமா இல்ல சந்திரனுக்கு சுப்பிரமணி பொண்ண சேத்துகிற இஷ்டமா.. சொல்லுங்க பெரீம்மா.. பெரியவங்க நீங்க தான் சொல்லணும்... "
விஜி அங்கேயே இருந்தாலும், அவளை ஒரு பொருட்டாகவே இவர்கள் மதிக்கவில்லை.
கடும் கோபத்தில் இருந்தாலும் விஜியின் மாமியாருக்கு விஜியை விட்டுவிட மனம் வரவில்லை.
தாய் மனம் என்று நினைத்துவிடாதே விக்கிரமா. பேய்களுக்கு கூட தனது அடுத்த வேளை உணவு பற்றி கவலை உண்டு. வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆளான விஜியை விட்டுவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பது மாமியாரின் கவலை.
"என்னத்த செய்யிறது. இப்பிடி குடிகேடியா வந்து சேந்திருக்காளே. வெளிய சொன்னா மானம் போவுது. பண்றதெல்லாம் பண்ணிட்டு குத்துகல்லாட்டாம் உக்காந்து இருக்கா பாரு"
"சரிங்க பெரிம்மா. பொண்ணு பண்ணது தப்பு தான். அதான் தப்பு நடக்கிறதுக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டம்ல...பொண்ணு தனியா இருக்கவும் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திருச்சி போல. ஆம்பிளையா இருந்தா வயசுல எல்லாரும் இப்பிடி தான்னு விட்ரலாம். பொம்பிளைய அப்பிடி விட முடியுமா? முள்ளுல சேல உளுந்தாலும், சேல மேல முள்ளு உளுந்தாலும், சேதாரமாவுறது சேல தான? கிளிஞ்சிறாம நாம தான் பக்குவமா பாத்துக்கணும். இப்ப என்ன சொல்றீங்க..."
"சொல்லு சொல்லுன்னா என்னத்த சொல்ல சொல்றீங்க? அத்துவிட தான் எனக்கும் ஆச. ஆனா, குடும்ப மானம் சந்தி சிரிக்குமே.. அதனால, வேற வழி இல்ல. இவ இருக்கட்டும். ஆனா இனிமே தனியா இருக்க கூடாது"
"சொல்றத தெளிவா சொல்லுங்கம்மா"
"என்னத்த தெளிவா சொல்றது... இனிம இவ லண்டனுக்கோ இல்ல மெட்ராசுக்கோ தனியா போவக்கூடாது. எம் மவனையும் கூட்டி கிட்டு போவனும். அவன் சொல்றபடி கேக்கணும். ஆம்பள சொகத்துக்கு தான அலையுறா, கட்டுனவன் கூட இருந்தா படி தாண்ட வேண்டாமில்ல..."
"பெரியவங்க பெரியவங்க தான். என்ன தான் கோவத்துல இருந்தாலும், பிரிக்க மனசு வரல பாத்தீங்களா... பெரிம்மா, நீங்க சொல்றது சரியாப்படுது. அப்பிடியே செஞ்சிருவோம்..."
" இந்தாம்மா விஜி...கேட்டீல்ல. இனிமயாவது பெரியவங்க சொல்றது கேளு. குடும்ப மானத்த காத்துல பறக்க விடாத. சுப்பிரமணி, ஒம் பொண்ணுக்கு நல்லதா நாலு சொல்லி அனுப்பு... என்னம்மா... போம்போது உம் புருசனையும் கூட்டிகிட்டு போ... இனிமயாவது ஒழுக்கமா நடந்துக்க...."
மண்ணை கூட பூமாதேவி என்று சொல்வது இந்திய கலாச்சாரம். ஆஹா, மண்ணுக்கு எத்தனை மரியாதை என்று மகிழ்ந்து விடாதே விக்கிரமா. எத்தனை மிதித்தாலும் மண் எதிர்த்து பேசுவதில்லை. பெண்ணும் மண்ணும் ஒன்று என்பது தான் இதன் உள்ளர்த்தம். அகழ்வாரை தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரையும் பெண்ணும் தாங்க வேண்டும் என்பது சொல்லாமல் சொன்ன மொழி.
விஜிக்கு உள்ளே எரிந்தது. எனக்கு ஒழுக்கம் போதிக்க இவன் யார்... இவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?
==============================
விக்கிரமா.. மிக நல்லவர்களுக்கும் மிக கொடியவர்களுக்கும் வித்தியாசம் ஒரு நூலிழையே. இவர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். திடீரென்று திருந்தி திருடன் வால்மீகி ராமாயணம் எழுதுவான். கடும் சோதனைகளால் மிக நல்லவர்கள் நிலை மாறி, கொடியவர்களையும் அஞ்ச வைப்பார்கள். நீரில் மூழ்க வைத்தால், ஒரு நாளும் நீந்தாதவன் கூட உயிரை காப்பாற்ற நீந்த முயற்சிப்பான்...
கலாச்சாரத்தால் கழுத்து நெறிக்கப்பட்ட விஜி மூழ்கிக்கொண்டிருப்பவனின் கடைசி முயற்சி போல மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"எனக்கு இஷ்டமில்ல..."
=============================================
சென்னையிலிருந்து காலையில் கிளம்பிய ஆன்டர்சனின் கார் ஒரு வழியாக கும்பகோணத்தை அடைந்திருந்தது.
காதலியின் கரம் மட்டுமல்ல, அவள் கால் பட்ட மண்ணும் கூட சந்தோஷமே. விஜி பிறந்த ஊர்.... இந்த தெருவில் நடந்து போயிருப்பாள். இந்த கோவிலில் கும்பிட்டுருப்பாள்.... இந்த ஆற்றில் மீன் பிடித்திருப்பாளோ.. இந்த மனிதர் விஜிக்கு தெரி ந்தவரா.... விஜிக்கு இவரை தெரியுமா....லவ் யூ விஜி....
ஆன்டர்சனுக்கு விஜியை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷமும், எப்படி இருக்கிறாளோ என்ற கவலையும் அவஸ்தையை ஏற்படுத்தியது...
"'ave you found the address mate..."
டிரைவருக்கு ஆன்டர்சனின் ஆங்கிலம் புரியவில்லை. ஆனால், அட்ரஸ் என்பது தெளிவாக புரிந்தது.
"டிரை பண்ணிட்ருக்கேன் சார்.... இங்கன தான் இருக்கனும்... நாம கும்மோனம் அவ்ளவா வந்ததில்லையா... அதான்... சின்ன ஊரு சார். மெட்ராசுன்னுனா கரீக்டா போயிருவேன்..."
ஆன்டர்சனுக்கு அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. ஆனால், try....Correct ஒருவாறாக புரிந்தது.
This taaamil must be a difficult language. Such a long answer for a simple question.....ah well....I like Taaamil...I like VeeJee....
ஒரு வழியாக விஜியின் வீட்டை கண்டுபிடித்தார்கள்...
ஆன்டர்சனுக்கு தயக்கமாக இருந்தது. விஜி இருப்பாளா இல்லையா?
இல்லாவிட்டால் என்ன சொல்வது... இருந்தாலும்... அவளை கேக்காமல் வந்து விட்டோமே..
I 'ave come this far... no point in being reluctant...let's see....
ஆன்டர்சன் விஜியின் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்தான்....
======================================
"எனக்கு இஷ்டமில்ல...."
விஜியின் மாமியார் கொதித்தாள்.
"என்னடி இஷ்டமில்ல.."
"நான் எதுக்கு உங்க புள்ளைய லண்டனுக்கு கூட்டிகிட்டு போகணும்? கூட்டிப்போக முடியாது. என்ன பண்ணுவீங்க"
"என்னடி...புருசனை கழட்டி விட்டுட்டா ஊரு மேயலாம்னு பாக்கிறியா..தெரியும்டி உன்ன பத்தி... நாலு பிச்ச காசு சம்பாதிக்குறோம்னு திமிரு...இப்பிடி தேவிடியாத்தனம் பண்ண வக்கிது..."
அதிகமாக அழுத்தினால் காற்றும் வெடிக்கும். விஜிக்கு பிறந்த நாள் முதல் அதுவரை அடக்கி வைத்திருந்த எல்லா துக்கமும் ஒட்டு மொத்தமாக வெடித்தது...
"யார தேவிடியான்னு சொல்றீங்க.. நான் ஆம்பிள அப்பிடி தான் இருப்பேன்னுட்டு ஒத்த பைசா சம்பாதிக்காம, பொண்டாட்டி காசுல குடிச்சிட்டு சுத்துறானே உங்க மகன், அவன கேளுங்க... அது பொட்டைத்தனம். விருப்பமில்லாம படுத்துக்கிட்டா அது புருசனா இரு ந்தாலும், அது தேவிடியாத்தனம்...இப்பிடி, காசு காசுன்னு அலையறீங்களே, அது அது தான் தேவிடியாத்தனம்"
"இப்பிடி பொறுக்கியாவும், உருப்படாதாவனாவும் இருக்கிற உங்க மகனை துக்கி வச்சிக்கிட்டு ஆடறீங்களே அது தேவிடியாத்தனம்...அவன எதுக்கு நான் லண்டனுக்கு கூட்டிக்கிட்டு போகனும்? எனக்கென்ன தலைவிதியா இவன நான் வச்சி காப்பாத்தனும்னு..."
விஜியின் மாமியார் அதிர்ச்சியில் நின்றாள். எது சொன்னாலும் சரிங்க அத்த என்று சொல்லும் விஜியா இது.... புதிதாக படம் காட்டுகிறாள்..
பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் காலத்திலிருந்து தமிழ் நாட்டில் வழக்கமாக உபயோகிக்கும் ஆயுதம் தாலி சென்டிமென்ட். விஜியின் மாமியாரும் அதையே பிரயோகித்தாள்.
"யாரடி தேவிடியான்ற... நாற முண்ட...ரொம்ப ஆடாத... மயிலே மயிலேன்னா எறகு போடாது...ரொம்ப ஆடினா மொத்தமா அத்து விட்ருவேன் பாத்துக்க.."
"அத்து விடுங்க...எனக்கு பிடிக்கலை.காசு காசுன்னு அலையுற உங்களையும் பிடிக்கலை. குருடா போனாலும் குடிக்கிறத விடமாட்டேன்னு அலையுற உங்க மகனையும் பிடிக்கலை. இப்பிடி நாயா வாழ்றதுக்கு நான் தனியா வாழ்ந்துக்கிறேன். அத்து விடுங்க..."
"தெரியும்டி. நீ எந்த தைரியத்துல பேசுறன்னு. புருசன அத்து விட்டுட்டு அந்த வெள்ளக்காரன் கூட கூத்தடிக்க தான இப்பிடி பேசுற..."
"அப்பிடியே வச்சுக்கங்க. எனக்கு அவர பிடிச்சிருக்கு. மனசுல ஒருத்தனை வச்சிகிட்டு, இன்னொருத்தன் கூட வாழ எனக்கு இஷ்டம் இல்ல..."
"அட நாசமா போறவளே... அந்த அளவுக்கு போச்சா...உன்ன விடக்கூடாதுடி.."
மாமியார் விஜியின் மேல் பாயவும், ஆன்டர்சன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.....
====================================
யாரும் கதவை திறக்காததால், தானே திறந்து கொண்டு திடீரென்று உள்ளே நுழைந்த ஆன்டர்சனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அவனுக்கு முதலில் விஜியும், கலைந்திருந்த அவள் தலை முடியும் தான் கண்ணில் பட்டது.
What happened...Who are these people....
எதிர்பாராமல் நுழைந்த அவனை கண்டதும் விஜிக்கும் ஆச்சரியமாக, அதே சமயம் சந்தோஷமாக இருந்தது.
ப்ரையன்.. வந்துவிட்டாயா..என்னை, என்னைத்தேடியா வந்தாய்..ஒரு நாள் தானே ஆயிற்று. அதற்குள் எனக்காக வந்துவிட்டாயா..
ஆனால், மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விஜி ஒரு வெள்ளைக்காரனை காதலிப்பது தான் அவர்களுக்கு தெரியுமே தவிர, அவன் லண்டனில் இருப்பதாக தான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அவன் கும்பகோணத்திற்கே தேடி வருவான் என்பது அவர்கள் நினைத்திராத ஒன்று....
விஜி முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள்.
"Brian...What are you doing here... how come..you are..."
"ah..VeeJee.. I was a bit worried...so..is everything alright..What's going on here...."
விஜியின் மாமியாருக்கு பொங்கியது... இந்த வெள்ளைக்காரன் இங்கயே வந்து விட்டானே..
"என்னடா அவள்ட்ட பேச்சு. எங்கிட்ட பேசுடா..."
"VeeJee... who's this... your mom?.. Whats she saying.."
"My mother in law. She is angry and..."
"Oh...Is there anything I can do"
"No Brian...you can't.."
விஜி புதிய பலத்துடன் பேச ஆரம்பித்தாள்.
"இத பாருங்க..எனக்கு உங்க பையன் கூட வாழ இஷ்டம் இல்ல. நான் போறேன். அவ்வளவு தான்..."
"கட்டின புருசன தூக்கி எறிஞ்சிட்டு போறேங்கிறியேடி.. நீ நாசமா தான் போவ, நல்லாருக்க மாட்ட.."
தோப்பு முத்துராமலிங்கத்துக்கும் புரியவில்லை.. சுதாரித்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
"என்னம்மா பொண்ணு நீ...புருஷன விட்டுட்டு ஓடிப்போறது நல்லா இருக்கா..ஊர்ல என்ன பேசுவானுங்க.. ஓடுகாலின்னு சொல்லுவானுங்க. நம்ம குடும்பத்துக்கு இது தேவையா.. நம்ப ஊருக்காரனுங்கள இனிமே எவனாவது மதிப்பானா? அட அவனுங்கள விடு... நம்ம கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கில்ல? அதைக்கூட தூக்கி எறிஞ்சிட்டு போறது கொஞ்சங்கூட நல்லால்ல..."
விஜிக்கு அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பொங்கியது.
"இவ்வளவு பேசுறீங்களே, ஆனா குடிச்சிட்டு பொறுப்பில்லாம சுத்திக்கிட்டு இருந்த என் புருசன ஏதாவது கேட்ருப்பீங்களா? கல்யாணத்துக்கு வரதட்சனைல இருந்து சீர் செனத்தின்னு காசு, காசுன்னு பறந்த எம்மாமியார என்னைக்காவது கேள்வி கேட்ருக்கீங்களா? அப்ப எங்க போச்சி உங்க கலாச்சாரம்? ஊர்க்காரனுங்க மதிக்கணும்கிறதுக்காக இன்னும் எத்தனை நாள் வாழ்றது? இப்பிடியே அவன் மதிக்கணும், இவன் மதிக்கணும்னு பிடிக்காத புருஷன் கூட இருந்தா என்ன நானே மதிக்க முடியாது..பைத்தியம் தான் பிடிக்கும். நான் போறேன்..முடிஞ்சா என்ன தடுத்து பாருங்க.. "
விக்கிரமா, காவிரி கரையோரம் என்றாவது பயணம் செய்திருக்கிறாயா? நெல்வயல்கள், வாழைத்தோப்புகள், கரும்பு வயல்கள்..வெற்றிலை தோட்டங்கள்..அமைதியாக செல்லும் காவிரி.... இந்த காவிரியும் கரை உடைப்பாளா...
உடைப்பாள்... கடும் மழை வரும்போதோ ஆக்கிரமிப்பு கட்டுக்கடங்காமல் போனாலோ உடைப்பாள்...
அவள் கரை உடைத்தால் அது ஒரு வெறியாட்டம்..... கரும்பு வயல்களை காணாது அடிப்பாள்...செழித்த திமிருடன் நின்ற வாழைகள் அடியோடு அழுகிப்போகும்... நெல்வயல்கள் வெறும் சேறாகும்.. வெற்றிலை தோட்டங்கள் வெறும் மணல் காடாகும்... கரை உடைத்த காவிரியை தடுப்பவர் எவருமில்லை....
பிள்ளைப்பூச்சி என்று விஜியை கிள்ளி எறிய வந்த கலாச்சார காவலர்கள் கரை உடைத்த காவிரியை பார்த்து திகிலுடன் நின்றார்கள்.
விஜி அதுவரை பேசாமல் நின்ற தன் பெற்றவர்களிடம் திரும்பினாள்.
"என்னப்பா ஒண்ணும் பேச மாட்டேங்கிறீங்க.. உங்களுக்கு பிடிக்கலையா? எனக்கு வேற வழி தெரில. இதுவரைல எனக்கு பிடிச்ச எதையும் நான் செய்யல. உங்களுக்கு பிடிச்சத தான் செஞ்சிருக்கேன்... இந்த ஒரு தடவை நான் எனக்கு பிடிச்சத செஞ்சிக்கிறேன்.... நான் வர்றேம்பா...வர்றேம்மா.. உங்கள விட்டுட்டு போகலை. திரும்பி வருவேன்..எனக்காக, கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க..."
"Brian....did you come for me..."
"I don't understand VeeJee.. What sort of question is this.."
"I'll explain it later... Shall we go now?"
நடந்தது எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருந்த ஆன்டர்சனுக்கு முகம் மலர்ந்தது.
"Yes VeeJee.."
விஜியும், ஆன்டர்சனும் காரில் ஏறிக்கொண்டனர்...
கலாச்சார காவலர்களும், விஜியின் பெற்றோரும் வாயடைத்து நிற்க, அந்த நள்ளிரவில் கார் சென்னையை நோக்கி பறந்தது.
======================================
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான காவிரி கலாச்சார கரைகளை உடைத்ததை சொல்லி வேதாளம் கதையை முடித்தது.
"கேட்டாயா விக்கிரமா கதையை...திருமணம் என்பதே இருவருக்கான உடன்படிக்கை தான். உனக்கு முடியாவிட்டால் நான் காப்பாற்றுவேன், எனக்கு முடியாவிட்டால் நீ தான் துணை. அதனால் தான் என் மனைவியே, உனக்கு வாழ்க்கை துணை என்று பெயர்.."
"விக்கிரமா, திருமணத்தின் தத்துவமே இது தான். ஒருவருக்கு ஒருவர் துணை என்பது தான் இணை என்பதன் முழு தத்துவமே.. ஒரு கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தின் பால் இயங்குவது.. ஒழுக்க விதிகளே ஒரு கலாச்சாரத்தை தீர்மானிக்கிறது...கலாச்சார விதிகளை உடைப்பது அந்த கலாச்சாரத்தின் சவக்கிடங்கை தோண்டுவதற்கு சமம்".
"விஜியின் கணவன் குடிகாரனே...ஆனால், அவன் விஜியின் காதல் தெரிவதற்கு முன் அவன் விஜியை கொடுமைப்படுத்தவில்லை. மாமியார் காசு ஆசை பிடித்தவள் தான், ஆனால் அவள் ஒன்றும் வித்தியாசமாக செய்யவில்லை. எல்லா மாமியாரும் செய்வதை தான் அவளும் செய்தாள். எல்லா மனிதருக்கும் இருக்கும் பண ஆசையே அவளுக்கும் இருந்தது. விஜி என்ற தனிப்பட்ட பெண்ணிற்கும் அவளுக்கும் விரோதமில்லை."
"இப்படி இருக்கையில், சரியாக கண் தெரியாத கணவனுக்கு துணையாக விஜி இருந்திருக்க வேண்டாமா?? வயதான பெண்ணான மாமியாரை கொஞ்சம் அனுசரித்து அன்பினால் திருத்த முயற்சி செய்திருக்க வேண்டாமா?? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற தமிழ் கலாச்சாரத்தில் பிறந்த விஜி, வேசி வீட்டுக்கு போனாலும் அவனுக்கு நீதி கேட்பேன் என்ற கற்பின் இலக்கணமான கண்ணகி வழி வந்த விஜி, இப்படி புதிதாக வாய்ப்பு கிடைத்தது என்று கண் தெரியாத கணவனை தூக்கி எறியலாமா? கலாச்சாரத்தின் சாவுக்குழியை தோண்டலாமா?? கணவன் இருக்கும் போதே, இன்னொரு ஆண்மகன் மேல் காதல் கொள்ளலாமா??"
"விக்கிரமா... இந்த கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்..."
வேதாளத்தின் சாபத்தை கேட்ட விக்கிரமன், தன் தலையை தடவிக்கொண்டு பதில் சொல்ல தயாரானான்.....
=====விக்கிரமனின் பதில்?....அடுத்த பதிவில்...==============
31 comments:
அரசியலையும், சமூக அவலங்களையும் கிழித்து விட்டீர்கள்.
விஜியோட முன்னாள் கும்பகோணத்துக் காதலனுக்கு என்ன ஆச்சு? ஒரு வேலை அவர்தான் இந்த கதையை எழுதறாரோ?
வழக்கம் போல இந்த பாகமும் சூப்பரா வந்து இருக்கு.
//
குடுகுடுப்பை said...
அரசியலையும், சமூக அவலங்களையும் கிழித்து விட்டீர்கள்.
//
ஏதோ நம்மால முடிஞ்சது :0)
வருகைக்கு நன்றி குடுகுடுப்பைக்காரரே!
//
செல்வ கருப்பையா said...
விஜியோட முன்னாள் கும்பகோணத்துக் காதலனுக்கு என்ன ஆச்சு? ஒரு வேலை அவர்தான் இந்த கதையை எழுதறாரோ?
//
இது தான் கும்மோனத்து குசும்பா ஓய்? நல்ல வேளை, நான் கொலை, க்ரைம் கதை எதுவும் எழுதல. விட்டா நீ தான் கொலைக்காரனான்னு கேட்ருவீர் போல இருக்கு.
ஏப் இப்பிடி நமக்கு ஆப்பு வைக்கிறதுலயே குறியா இருக்கீர்?
//இது தான் கும்மோனத்து குசும்பா ஓய்? நல்ல வேளை, நான் கொலை, க்ரைம் கதை எதுவும் எழுதல. விட்டா நீ தான் கொலைக்காரனான்னு கேட்ருவீர் போல இருக்கு.
ஏப் இப்பிடி நமக்கு ஆப்பு வைக்கிறதுலயே குறியா இருக்கீர்?//
So, மறுக்கல!!!???
//
செல்வ கருப்பையா said...
//இது தான் கும்மோனத்து குசும்பா ஓய்? நல்ல வேளை, நான் கொலை, க்ரைம் கதை எதுவும் எழுதல. விட்டா நீ தான் கொலைக்காரனான்னு கேட்ருவீர் போல இருக்கு.
ஏப் இப்பிடி நமக்கு ஆப்பு வைக்கிறதுலயே குறியா இருக்கீர்?//
So, மறுக்கல!!!???
//
கிழிஞ்சது போங்க... நம்ப மேல ஏன் இந்த கொல வெறி? உட்ருங்க சாமி!
good one.
very nice.
//
கிழிஞ்சது போங்க... நம்ப மேல ஏன் இந்த கொல வெறி? உட்ருங்க சாமி!//
நம்பிட்டோம்!
wow, great. its a long time coming. this is what i expected from viji.it better late than never. hats of to viji. ditch all those stupid c+#%s & fly away like free bird.
your views on tamil culture protectors is exactly like mine (or should it be the other way around :))
//கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கென்றே ஊருக்கு நாலு பேர் இருப்பார்கள். தமிழ் நாட்டில் இது கொஞ்சம் அதிகம்.//
:))
//ஊரில் நாலு பேரை தவிர மற்ற எல்லாரும் கலாச்சார காவலர்களாக இருப்பது அந்த நாட்டில் தான்//
:)))
//மேஜைக்கு அடியில் கை நீட்டி காசு வாங்கிக்கொண்டே என்ன இருந்தாலும் நம்ம கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கில்ல சார் என்று சொல்லும் ஒழுக்க சீலர்களை நீ இங்கு தான் தரிசிக்க முடியும்.//
:)))))
you like to screw TCP's in every possible way it seems (ye, i tried to translate "kedaikkira gap-la ellaam aappu" in english :))
special anouncement is great. great timing too.
kalakkiteenga..totally
//வாங்க Shrek. நீங்க நெசமா சொல்றீங்களா இல்ல நம்பள வச்சி எதுனா காமெடி கீமெடி பண்றீங்களான்னு தெரியல. ஆனா, கொஞ்சம் டைம் பிரச்சினை. சீக்கிரமா அடுத்த பாகத்த எழுதிருவேன். அனேகமா, இந்த வீக் என்ட்.
//
ah man.. may be i was bit over excited i guess, thats 'coz of your damn good story(telling method too) man. now you are telling me that i'm kidding you.
you better believe it "you are a pro"
//
துளசி கோபால் said...
good one.
very nice.
//
வாங்க துளசி கோபால். வார்த்தைகளுக்கு நன்றி
//
செல்வ கருப்பையா said...
//
கிழிஞ்சது போங்க... நம்ப மேல ஏன் இந்த கொல வெறி? உட்ருங்க சாமி!//
நம்பிட்டோம்!
//
வாங்க செல்வா.
உங்க கேள்விக்கெல்லாம் விடை, அடுத்த வாரம் :0)
//
Shrek said...
wow, great. its a long time coming. this is what i expected from viji.it better late than never. hats of to viji. ditch all those stupid c+#%s & fly away like free bird.
your views on tamil culture protectors is exactly like mine (or should it be the other way around :))
//
வாங்க Shrek. பாராட்டுகளுக்கு நன்றி. கலாச்சார காவலர்கள் என்று திரிபவர்களை உங்களைப் போலவே எனக்கும் பிடிக்காது :0)
//
shrek said...
ah man.. may be i was bit over excited i guess, thats 'coz of your damn good story(telling method too) man. now you are telling me that i'm kidding you.
you better believe it "you are a pro"
//
Pro ல்லாம் ஒண்ணியும் இல்லீங்கண்ணா. இது ச்சும்மா. ஆனா, நீங்கள் உட்பட பலர் தொடர்ந்து படிப்பது சந்தோஷமா தான் இருக்கு :0)))
அருமை!
//
Sundar said...
அருமை!
//
வாங்க சுந்தர். வருகைக்கு நன்றி. ரொம்ப நாளா ஆளையே காணோம், பிஸியா?
ஓன்னு மட்டும் நிச்சயம்....
வேதாளத்தவிட நீங்க குசும்பான ஆளு
:)))
ஓன்னு மட்டும் நிச்சயம்....
வேதாளத்தவிட நீங்க குசும்பான ஆளு
:)))
அது சரி அடுத்த பாகத்தை எறக்குங்க.
//
புதுகை.அப்துல்லா said...
ஓன்னு மட்டும் நிச்சயம்....
வேதாளத்தவிட நீங்க குசும்பான ஆளு
:)))
//
வாங்க அப்துல்லா சார். குசும்பெல்லாம் ஒன்னும் இல்லீங்ணா. நாம ரொம்ப நல்ல பையன். யாருனா நக்கல் பண்ணா கூட, அவய்ங்க நக்கல் பண்றதே நமக்கு தெரியாது. அப்பிராணி நானு!
திடீர்னு வந்து பின்னூட்டமிட்டு தமிழ்மணம் முகப்புல வர வச்சதுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் பாஸு :0)
அது சரி! உங்க bank எப்படி இருக்கு? வேதாளத்துக் கிட்ட கேட்டுப் பாத்துட வேண்டியது தானே? திரும்பி வந்தா விஜிக்கு வேலை இருக்குமா? Anderson-க்கு எதுனா mortgage இருக்கா?
//
செல்வ கருப்பையா said...
அது சரி! உங்க bank எப்படி இருக்கு? வேதாளத்துக் கிட்ட கேட்டுப் பாத்துட வேண்டியது தானே? திரும்பி வந்தா விஜிக்கு வேலை இருக்குமா? Anderson-க்கு எதுனா mortgage இருக்கா?
//
என் பேங்கா?? நம்ம கிட்ட அம்புட்டு துட்டெல்லாம் இல்ல தல. இருக்கிற சில்லறைய வச்சி பேங்க்கு வாசல்ல நின்னு ஒரு தம்மடிக்கலாம். அவ்வளவு தான் முடியும். நடத்திட்டாலும்.... இப்ப அடிக்கிற சுனாமில HBOS மாதிரி பிக் பாஸே காணாப்போறப்ப நம்ம பேங்க்கெல்லாம் என்ன ஆறது??
விஜிக்கு என்ன சாமி, எந்த கவலையும் இல்ல. ஆன்டர்சனுக்கு மார்ட்கேஜெல்லாம் இல்லீங்க. அந்த ஆளு நெஜமாவே துட்டு பார்ட்டி.
எனக்கும் மார்ட்கேஜ் இல்ல. ஏன்னா எவனும் தரமாட்டேனுட்டானுவ :0(
//
குடுகுடுப்பை said...
அது சரி அடுத்த பாகத்தை எறக்குங்க.
18 September 2008 20:40
//
குடுகுடுப்பைக்காரரே,
அடுத்த பாகத்தை எறக்குறதுக்கு ஒரு பாட்டிலை எறக்கணுமய்யா. இந்த வீக் என்ட்ல எவனாவது/எவளாவது கருணை காட்டுவாய்ங்க. அது
மு(கு)டிச்சிட்டு நைட்டு வந்து எழுத வேண்டியது தான்!
உங்களது கதையை படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை. இந்திய சமூக முரண்பாடுகளை குற்றவாளி கூண்டுக்குள் நிறுத்தி இருக்கிறீர்கள், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்(சும்மா ஒரு ரீஇன்ஃபோர்ஸ்மெண்ட்டுக்காக மூன்று முறை)
(ஒரு சின்ன கோரிக்கை, ஆண்டர்சனையும் டிவிஸ்ட் என்ற பெயரில் கெட்டனவாக்கி விடாதீர்கள், பாவம் விஜி)
வாங்க கயல்விழி!
என்னங்க ரொம்ப நாளா ஒண்ணும் எழுத மாட்டேங்கிறீங்க? பிஸியா?
பாராட்டுக்கள்னு நீங்க சொன்னது அட்லாண்டிக் தாண்டி இந்த கரையில ரொம்ப தெளிவா கேக்குதுங்க :0) நன்றி!
//என்னங்க ரொம்ப நாளா ஒண்ணும் எழுத மாட்டேங்கிறீங்க? பிஸியா?//
கொஞ்சம் பிஸி தான், ஆனால் இப்போது முக்கியமான ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் முடிந்து கொஞ்சம் டைம் இருக்கு, இனிமேல் தொடர்ந்து வருவேன். விசாரிப்புக்கு ரொம்ப நன்றி :)
அப்பாடி இப்பத்தான் நிம்மதியாச்சு. நல்லவேளை. பிடிச்சவன் கூட சேந்துக்கிட்டாளே.
குருட்டுக் கணவனை நல்லபடி வெச்சுப் பாத்துக்கலாம். ஆனா... அவன் கணவனா நடந்துக்கிறனுமே. பய காவாலியால்ல இருந்திருக்கிறான். அவனைப் போட்டுத்தள்ளாம விட்டாளேன்னு சந்தோசப்படனும்.
//வாங்க சுந்தர். வருகைக்கு நன்றி. ரொம்ப நாளா ஆளையே காணோம், பிஸியா?//
ஆமாம்! ஒரு இந்தியா விசிட் அப்புறம் கொஞ்சம் uk la vacation இப்ப பெங்களூருக்கு பெட்டி கட்டி குடி மாற்றம்.
'வால்க களாச்ஷாரம்'
வேற என்னத்த சொல்ல?
பதிவு அருமை!
அடுத்த பாகத்திற்கு செல்கிறேன்.
Post a Comment