சித்தனும் பித்தனும்
அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
தம்மை ஊதி முடித்த வேதாளம், ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கவே விக்கிரமனே பேச ஆரம்பித்தான்.
"என்ன தாளமே, ஓலைப்பாயில் ஒண்ணுக்கு போவது போல பேசிக்கொண்டிருப்பாய். இப்ப என்ன, ஆட்சி போன அம்மா மாதிரி அமைதியாகி விட்டாய்?"
"விக்கிரமா, அடக்கி வாசி. ஆட்சி போனாலும் ஆட்டோக்கள் பல அவர்கள் வசம் இருப்பதாக சொல்கிறார்கள்"
"கோட்டையில் இருந்தாலும், கொட நாட்டுக்கு போனாலும் சிலருக்கு குடை சரிவதில்லை. இருக்கட்டும் வேதாளமே. நீ சீக்கிரம் கதையை ஆரம்பி. குசேலன் முதல் காட்சி பார்த்த ரசிகன் போல உனக்கு என்ன துக்கம்??"
"அவனவனுக்கு ஆயிரம் துக்கம் விக்கிரமா. அதெல்லாம் உனக்கு எதற்கு?"
எரிச்சலுடன் பேசிய வேதாளம், கதையை மீண்டும் ஆரம்பித்தது.
============================
"மாதித்தா, கட்டறுப்பவர்கள் பலரும் கட்டறுக்க வேண்டும் என்று தீர்மானித்து செய்வதில்லை. காதலில் விழுந்தாளே தவிர, விஜிக்கு அதை கணவனிடமோ இல்லை பெற்றவர்களிடமோ சொல்ல தெரியவில்லை. அதே சமயம் யாரிடமும் சொல்லாமல் ஆன்டர்சனுடம் வாழவும் அவளுக்கு விருப்பமில்லை. ஓடிப்போனவள் என்று பெயரெடுக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்கும்?"
"விக்கிரமா, நீ புரிந்து கொள்ள வேண்டும். விஜயலட்சுமி புதுமைப்பெண்ணோ, புரட்சிப் பெண்ணோ இல்லை. படிப்பது பிடித்திருந்தது. படித்தாள். காதல் வந்தது. காதலித்தாள். காதலுக்கு எதிர்ப்பு வந்தது. காதலன் கைவிட்டான். பெற்றவர்கள் ஏற்பாடு செய்த ஒருவனை கல்யாணமும் செய்து கொண்டாள். வேறு வழியில்லை என்பதால் வேலைக்கு போனாள். ஏன் அவளுக்கு என்று சுய உணர்வு இல்லையா என்று நீ கேட்கலாம். காவிரி, இல்லை அரசலாற்றின் கரையில் ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த பெண், என்ன செய்வாள் என்று நீ எதிர்பார்க்கிறாய்? தமிழ் நாட்டில் நீ சந்திக்கும் பல கோடி பெண்களில் அவளும் ஒருத்தி, அவ்வளவே!"
"பொறுக்கியாகவும், பொறுப்பற்றவனாகவும் இருந்த கோவலனுக்காக நீதி கேட்ட கண்ணகி தான் இன்றும் தமிழ் நாட்டின் கற்பு தெய்வம். காதலியாக இருந்த மாதவி, தனக்காக நீதி கேட்ட காரணத்தினால் விலைமாதுவாக மாறிப்போனாள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விசித்திர நியாயங்களை ...."
வேதாளம் பேசிக்கொண்டே போக விக்கிரமாதித்தன் அவசமாக குறுக்கிட்டான்.
"நிறுத்து, நிறுத்து. நீ உயிருக்கு உலை வைத்து விடுவாய் போலிருக்கிறது. கொஞ்சம் தானே அடித்தாய், அதற்குள் உனக்கு போதை ஏறிவிட்டதா? நீ கதையை மட்டும் சொல். கலாச்சாரத்தில் கை வைக்காதே".
"கை என்ன, காலும் வைப்பேன்"
முறைத்த வேதாளம், விஜியின் கதையை மீண்டும் ஆரம்பித்தது.
======================================
சென்னையிலிருந்து புறப்பட்ட கார் அதிகாலையில் ஒரு வழியாக கும்பகோணத்தை அடைந்தது. வழியெல்லாம் விஜியின் மாமியார் தனது கெட்ட வார்த்தைகள் மூலமே தமிழின் நீள, ஆழ, அகலங்களை காட்டினாள்.
அந்த இருள் பிரியாத வேளையில் காரில் இருந்து இறங்கிய விஜியை பார்த்த அவள் தாய்க்கு வயிற்றுக்குள் துக்கம் சுருண்டது.
நான்கு ஆண் மக்களுக்கு பின், தவமாய் இருந்து போராடி பெற்ற பெண். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் செல்லமாய், பார்த்து பார்த்து வளர்த்த என் குழந்தை. இன்று கலைந்த தலையும், கலங்கிய கண்களும், கன்றிய கன்னங்களும்....
எப்படி வளர்த்தேன்...ஒரு நாளும் உன்னை திட்டியது கூட இல்லையே. இன்று எவனோ ஒருவனிடம் அடி வாங்கவா உன்னை பெற்றேன்.. அவளால் தாங்க முடியவில்லை. வயிறு எரிந்தது.
"அய்யோ, என்னால முடியலையே. என்னடி இது இப்படி இருக்க.."
விஜியின் மாமியார் முந்திக் கொண்டாள்.
"நூலப்போல சேல, தாயப் போல புள்ள. ஒம்மவ ஒன்ன மாதிரி தான இருப்பா... வந்துட்டா என்னமோ..."
விஜியின் தாயார் திகைத்தாள்.
"பெரியவங்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க சம்மந்தி. அவ சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பண்ணிட்டா..."
"ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுகிட்டாளாம் தாப்பா.....ஓடுகாலிய எங்க தலையில கட்டிட்டு சின்ன புள்ளையாமில்ல சின்ன புள்ள..."
விஜியின் தாய்க்கு பொறுக்கவில்லை.
"ரொம்ப பேசாதீங்க சம்மந்தி. ஒங்க புள்ள குடிக்காம ஒழுங்கா இருந்தா ஏன் இப்படியெல்லாம் நடக்க போவுது..."
"எம்புள்ளய பத்தி பேசாத. அவன் ஆம்பிள. பொட்டச்சிய ஒளுங்கா வளக்க துப்பில்ல. பேச வந்துட்டா பெருசா.... "
"பெரிய ஆம்பிள. ஒத்த பைசா சம்பாதிக்க துப்பில்லாதவனெல்லாம் ஊருல ஆம்பிளன்னு சொல்லிக்கிட்டு அலையுறான்..."
"யாரடி சொன்ன....ஓடுகாலிய பெத்துட்டு ஒனக்கு பேச்சு வேற கேக்குதோ..."
விக்கிரமா, தமிழ் நாட்டின் மிகச்சிறந்த பொழுதுபோக்குகளில் வேடிக்கை பார்ப்பதும் ஒன்று. அந்த அதிகாலையில் நடந்த இந்த எதிர்பாரா நிகழ்ச்சியை கண்டு களிக்க கல்தோன்றி, மண் தோன்றா காலத்து மூத்த குடிகள் ஆர்வமுடன் கூடினர்.
கூட்டம் சேர்வதை பார்த்த விஜியின் தந்தை தனது மானம் குறித்து பெரும் கவலை அடைந்தார்.
"என்னது, பொம்பளைங்களா பேசிக்கிட்டு... நடுத்தெருவில ஏன் அசிங்கம் பண்றீங்க..... நாலு பெரிய மனுசங்கள வச்சி பேசி தீத்துகிடுவோம்..."
கணவனின் குரலுக்கு விஜியின் தாய் அடங்கினாலும், மாமியார் அடங்குவதாக தெரியவில்லை.
"என்னத்த பேசுறது.... ஒரேடியா தீத்துற வேண்டியது தான்..."
விக்கிரமா, இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பேரனுக்கு பேரன் ,அதுவும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் தீர்ப்பை கேட்கமுடியும் என்பதால், பல கிராமங்களில் பெரிய மனிதர்கள் தீர்ப்பளிப்பது உண்டு.
பெரிய மனிதர்கள் என்றால், தமிழ் சினிமாவில் வரும் மரத்தடி பஞ்சாயத்து என்று நினைத்து விடாதே விக்கிரமா. இது ஊரெல்லாம் கூடுவது இல்லை. நாலு மனிதர்கள் ஓரிடத்தில் கூடி, அவர்களுக்குள் பேசி முடிவெடுப்பது.
விஜியின் வாழ்க்கைக்கு தீர்ப்பு சொல்ல கிராம பெரிய மனிதர்கள் என்று தங்களை தாங்களேவோ அல்லது கைத்தடிகளாலோ அழைக்கப்படுபவர்கள் அன்று மாலையே கூடுவதாக முடிவானது.
கடும் களைப்பில் இருந்த விஜி, இது எதுவும் அறியாமல் சுருண்டிருந்தாள்...
======================
பார்க் ஷெராட்டனில் அதிகாலையில் எழுந்த ஆன்டர்சனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காதலியை காணாவிட்டால் தேடலாம். ஆனால் அவள் மற்றவனின் மனைவியாகவும் இருந்தால் என்ன செய்வது?
விஜியின் வீட்டுக்கு ஃபோன் செய்யலாமா? வேண்டாமா?
அவன் முடிவெடுத்து ஃபோன் செய்த நேரத்தில் சந்திரன் தன் தினக்கடமையாக மதுக்கடைக்கு போயிருந்தான். ஃபோனை எடுப்பவர் யாருமில்லை.
ஆன்டர்சனுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று புரியவில்லை. விஜிக்கு என்ன ஆயிற்று? வீட்டில் சொல்லிவிட்டாளா? ஏதேனும் ஆகியிருக்குமா?
பல பெண்களை மிக அலட்சியமாக உதறிய அவனுக்கு முதல் முறையாக ஒரு பெண் காரணமாக வியர்த்தது. விஜியை பார்த்தே ஆக வேண்டும். ஆனால் எப்படி? மெட்ராஸ் ஒன்றும் லண்டன் இல்லையே....
அவனுக்கு திடீரென அந்த யோசனை உதித்தது..
உடனடியாக விஜியின் இந்திய வங்கி முக்கிய அதிகாரிக்கு ஃபோன் செய்தான்.
"Hi...Morning. This is Brian Anderson from ---- Bank. Could I speak to Mr. Saxeeena please...."
மும்பையில் ஸக்சேனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. லண்டனில் முக்கிய அதிகாரி, சென்னையிலிருந்து எப்படி... என்ன பிரச்சினை..
"Very good morning Mr.Anderson.... This is Saxena speaking..... How are you sir?"
"I am very fine Mr.Saxeeena...Thank you...I'm....just wondering... could you please do me a favour?"
"Sure Mr.Anderson... Is there any problem?... Are you calling from Madras...Sorry, I was not aware that you are visiting India...."
"No. no problem...Mr.Saxeena....I...I want to speak to one of your employees.....She is from your Madras office. She was on training in London....Is it possible..ah..can I get her contact details...."
ஸக்சேனாவுக்கு வியர்த்தது. லண்டனிலிருந்து ஒரு முக்கிய அதிகாரி மெட்ராசுக்கு நேரில் வந்து விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யார் இந்த பெண்?? அவள் என்ன செய்துவிட்டாள்....
"Is there any problem Sir.... I apologise if anything had gone wrong.."
"No, no. Mr.Saxeena. nothing wrong. She is a friend...I'm holidaying here...so, I just....just.. wanted to see her...I tried the number she gave me....but...no response..."
ஸக்சேனாவுக்கு நிம்மதியாக இருந்தது. இந்த வெள்ளைக்காரர்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. பிஸினஸ் மீட்டிங்கில் எதற்கும் விட்டு கொடுக்காமல் குடைவார்கள். இப்படி பத்தாயிரம் மைல் தாண்டி ஒரு பெண்ணை தேடியும் திரிவார்கள்...
"Oh...thats very nice of you Brian. Leave it to me....What's her name.."
"VeeJee...."
"VeeJeeee??...very unusual name....you got her full name?..."
"mmh...yeah...its VeeJee....VeeJee...Supp...Supraaamaaniyaane.."
ஸக்சேனா சிரித்தார்.
"Oh Brian....I think you are trying to say Viji Subramaniyan..."
"Yeah... that's the one..."
"Give me half an hour Brian...I'll get back to you..."
"Thank you Mr.Saxeeena... Much appreciated..."
"No problem Brian...Always a pleasure...."
=========================
ஸக்சேனா உடனடியாக சென்னை அலுவலகத்தை தொடர்பு கொண்டார். விஜி லண்டனில் டிரைனிங்கில் இரு ந்ததும், அவள் வீடு உண்மையில் கும்பகோணம் என்றும் சொல்லப்பட்டது.
=========================
"Good morning Mr.Anderson.... This is Saxena from Mumbai..."
"Hi... Mr.Saxena.....You got the details....."
"Sure I have....But she is not in Madras....She's gone to Kumbakonam..."
"Kumb...kumbanam?....what's it?..."
"Kumbakonam...It's her native town. about 300km south of Madras...are you still going to see her?"
ஆன்டர்சனுக்கு தனது தவிப்பை வெளிக்காட்ட விருப்பமில்லை.
"ah....I'm not sure Mr.Saxeena.... but I travel around...If I visit anywhere nearby i'll give it a try.....give me the details anyway..."
ஸக்சேனா ஒவ்வொரு எழுத்தாக சொல்ல சொல்ல பிரையன் எழுதிக்கொண்டான்.
"Thank you very much Mr.Saxeena.....Much appreciated....Sorry for all the troubles...."
"No problem Brian... You are most welcome.."
=============================
"மாதித்தா, கடவுளைக் கண்டவனும், காதல் கொண்டவனும் ஒன்றே. காரணங்களை அவர்கள் அலசுவதில்லை. காரியங்களின் கடினத்தை யோசிப்பதும் இல்லை. முன்னவன் சித்தன் ஆகிறான், பின்னவன் பித்தன் ஆகிறான்."
"அந்த காலை நேரத்தில் ஆன்டர்சன் பித்த நிலையில் தான் இருந்தான். எங்கோ லண்டனில் பிறந்து வளர்ந்த பிரையன் ஆன்டர்சன், இதற்கு முன் கேள்விப்பட்டிராத, எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாத ஒரு தமிழ்நாட்டு நகரத்திற்கு பயணப்பட வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அவனால் அந்த ஊரின் பெயரைக்கூட உச்சரிக்க முடியவில்லை என்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை..."
விஜியை பார்த்தே தீருவது என்று முடிவெடுத்த ஆன்டர்சன் பார்க் ஷெராட்டனின் ரிசப்ஷனை அணுகினான்.
=========================
"Good Morning Sir....What can I do for you.."
"ah, Good Morning. I would like to make a little travel...Can you arrange a taxi for me please..."
"Sure Sir..We have beautiful cars for our guests....Where do you want to travel...."
"mmh, Kumb..kumbaanam....Here..., this is the address.."
"Oh, Kumbakonam....No problem Sir....give me five minutes...The car will be ready for you.."
"Thank you.."
ஆன்டர்சனின் கார் கும்பகோணத்தை நோக்கி கிளம்பிய போது காலை பத்தரை மணி ஆகியிருந்தது. தமிழ் நாட்டு சூரியன் தகிக்க ஆரம்பித்தான்...
=====================================================
சொல்லிக் கொண்டே வந்த வேதாளம், வழக்கம் போல் கதையை திடீரென நிறுத்தியது.
விக்கிரமாதித்தனுக்கு எரிச்சலாக இருந்தது.
"என்ன தாளமே, திடீரென நிறுத்தி விட்டாய். உனக்கு இதே பொழப்பா போச்சி. பெரிய சஸ்பென்ஸ் வக்கிறதா நெனப்பா?"
"ச்சேச்சே அப்படியில்லை மாதித்தா. மூணு மணி நேரம் விடாமல் பேச நான் என்ன வைகோவா? தொண்டை வறண்டு விட்டது. ஏதாவது சோடா கீடா ஏற்பாடு செய்யேன்.."
"சோடாவா? சோடா பாட்டில் இருந்தால் அதை அப்பவே உன் மண்டைல ஒடச்சிருப்பேனே? நான் என்ன பெட்டிக்கடை நடத்துரேன்னு நெனச்சியா?"
"ம்ம்ம். நாயர்ட்ட சோடா கேட்டது என் தப்பு தான். நாயர்ட்ட ச்சாயா தான கெடைக்கும்"
நக்கலடித்த வேதாளம், மீதி இரு ந்த விஸ்கியில் கொஞ்சம் வாயில் ஊற்றிக்கொண்டது.
"விக்கிரமா, ஏத்துனது எல்லாம் எறங்கிருச்சி. திருப்பி ஏற கொஞ்சம் நேரம் ஆகும். நீ பிஸ்ஸடிக்கிறதுன்னா போயிட்டு வா"
வேதாளத்தை முறைத்த விக்கிரமாதித்தன் அந்த காட்டு பகுதியில் நடக்க ஆரம்பித்தான்.
===================== தொடரும்===================
33 comments:
ஒரு பதிவுக்கும் மற்றொரு பதிவுக்கும்
இடைவெளி நிறைய இருக்கு.
பழைய பதிவுக்கு லிங்க் கொடுத்து
பதிவிட்டால் வசதியா இருக்குமே....
//
siva gnanamji(#18100882083107547329) said...
ஒரு பதிவுக்கும் மற்றொரு பதிவுக்கும்
இடைவெளி நிறைய இருக்கு.
பழைய பதிவுக்கு லிங்க் கொடுத்து
பதிவிட்டால் வசதியா இருக்குமே....
//
வாங்க சிவஞானம்ஜி.
நீங்க சொல்றது உண்மை தான். வீக் என்டுல மட்டும் தான் டைம் கிடைக்கிறதுனால, பதிவுக்கு பதிவு இடைவெளி வருகிறது.
ஆனா, "இதுவரை கிழித்தது"ன்னு வலப்பக்கம் Archiவெ இருக்கே?
யோவ்.. எம்மாம்பெரிசா எழுதுறீங்க.. லீவு போட்டுல்லா படிக்கணும் போலருக்கு, அப்பாலிக்கா வர்றேன். நிஜமாத்தான்..
முரண் தொடையாரே,
வேதாளத்தின் மூலம் நீங்கள் செய்யும் சமூக/ அரசியல் எள்ளல்கள் மிக அருமை.தஞ்சாவூர் குசும்பு அப்படியே இருக்கு.
I have become a fan of you..Pl. continue this story..
epdinga ipdiyellaam??!! :-)
//
தாமிரா said...
யோவ்.. எம்மாம்பெரிசா எழுதுறீங்க.. லீவு போட்டுல்லா படிக்கணும் போலருக்கு, அப்பாலிக்கா வர்றேன். நிஜமாத்தான்..
//
ஹி ஹி.. அது எழுதும்போது தெரில. எழுதி முடிச்சி, publish பண்ணிட்டு அப்புறமா பாத்தாதான் அடடா ரொம்ப எழுதிட்டோமோன்னு தெரிஞ்சிது...ம்ம்ம்..தண்ணி அடிச்சிட்டு எழுதினா இப்படித்தான்...
//
குடுகுடுப்பை said...
முரண் தொடையாரே,
வேதாளத்தின் மூலம் நீங்கள் செய்யும் சமூக/ அரசியல் எள்ளல்கள் மிக அருமை.தஞ்சாவூர் குசும்பு அப்படியே இருக்கு.
//
வாங்க குடுகுடுப்பை. வருகைக்கு நன்றி...
தஞ்சாவூரா?? ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க. ஆனா, நான் தஞ்சாவூர் இல்லியே.. ஒரு வேளை பக்கத்து ஊர் காத்து அடிச்சதுனாலேயோ என்னமோ :0)
//
Ilavennila said...
I have become a fan of you..Pl. continue this story..
epdinga ipdiyellaam??!! :-)
//
வாங்க இள வெண்ணிலா.
எழுதிட்டா போச்சி... இ ந்த வீக் என்டுல ஒரு ரவுண்டு ஏத்துனா முடிஞ்சிது :0)
எப்டிங்க இப்பிடியெல்லாம் மொக்கையா எழுதிரீங்க்ன்னு கேக்குறீங்களா?? அதுக்கு நாம தனியா முயற்சிக்கறது இல்லீங்க. தானா வருது :0)
//தஞ்சாவூரா?? ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க. ஆனா, நான் தஞ்சாவூர் இல்லியே.. ஒரு வேளை பக்கத்து ஊர் காத்து அடிச்சதுனாலேயோ என்னமோ :0)//
கும்பகோணம் குசும்பு அப்படின்னு வெச்சுக்க்லாம் :)
இந்தக் கதையத் தொடர்ந்து படிச்சிட்டு வர்ரேன். பின்னூட்டம் போட்டதில்லை. ஆனா இன்னைக்குப் போட்டாச்சு.
கதையும் நடையும் ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து சொல்லுங்க. :)
//
கும்பகோணம் குசும்பு அப்படின்னு வெச்சுக்க்லாம் :)
//
நல்ல வேளை, என்ன கும்மோணத்து குசும்பன்னு சொல்லலியே :0)
கும்மோணத்து காரங்கள்லாம் குசும்பா இருக்கறதுக்கு காரணம் வெத்தலையோன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு!
//
G.Ragavan said...
இந்தக் கதையத் தொடர்ந்து படிச்சிட்டு வர்ரேன். பின்னூட்டம் போட்டதில்லை. ஆனா இன்னைக்குப் போட்டாச்சு.
கதையும் நடையும் ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து சொல்லுங்க. :)
//
வாங்க ராகவன். வருகைக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. உங்க பின்னூட்டம் தாங்க நமக்கு டாஸ்மாக்கே :0) அடிக்கடி வாங்க.
ஆஹா, இப்பிடி தெனந்தோறும் ஒரு புது கஸ்டமரு வந்தா நல்லாருக்கும். :0)
////////எப்டிங்க இப்பிடியெல்லாம் மொக்கையா எழுதிரீங்க்ன்னு கேக்குறீங்களா?? அதுக்கு நாம தனியா முயற்சிக்கறது இல்லீங்க. தானா வருது :0)///////
வரும் வரும்.....
உன்மைய இப்படி எல்லாம் பொதுவா சொல்ல கூடாது நண்பரே
அருமையான நடை...
தொடர்ந்து படித்து வருகிறேன்..
//////"சோடாவா? சோடா பாட்டில் இருந்தால் அதை அப்பவே உன் மண்டைல ஒடச்சிருப்பேனே? //////
ஹி ஹி ...
நானும் தான் ..
(கோபிக்க கூடாது .. சும்மா டம்மாசுக்கு ))
//////"ம்ம்ம். நாயர்ட்ட சோடா கேட்டது என் தப்பு தான். நாயர்ட்ட ச்சாயா தான கெடைக்கும்"//////
எப்படிங்க இப்படி எல்லாம்????
அதுவா வருதா??
////"விக்கிரமா, அடக்கி வாசி. ஆட்சி போனாலும் ஆட்டோக்கள் பல அவர்கள் வசம் இருப்பதாக சொல்கிறார்கள்"///////
பார்த்து எழுதுங்கள் நண்பரே...
உங்கள் முகவரிக்கும் வந்தால் வரலாம்...
/////"என்ன தாளமே, ஓலைப்பாயில் ஒண்ணுக்கு போவது போல பேசிக்கொண்டிருப்பாய். இப்ப என்ன, ஆட்சி போன அம்மா மாதிரி அமைதியாகி விட்டாய்?"//////
நல்ல ...
அருமையான
உவமானம்
//////"விக்கிரமா, நீ புரிந்து கொள்ள வேண்டும். விஜயலட்சுமி புதுமைப்பெண்ணோ, புரட்சிப் பெண்ணோ இல்லை. படிப்பது பிடித்திருந்தது. படித்தாள். காதல் வந்தது. காதலித்தாள். காதலுக்கு எதிர்ப்பு வந்தது. காதலன் கைவிட்டான். பெற்றவர்கள் ஏற்பாடு செய்த ஒருவனை கல்யாணமும் செய்து கொண்டாள். வேறு வழியில்லை என்பதால் வேலைக்கு போனாள். ஏன் அவளுக்கு என்று சுய உணர்வு இல்லையா என்று நீ கேட்கலாம். காவிரி, இல்லை அரசலாற்றின் கரையில் ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த பெண், என்ன செய்வாள் என்று நீ எதிர்பார்க்கிறாய்? தமிழ் நாட்டில் நீ சந்திக்கும் பல கோடி பெண்களில் அவளும் ஒருத்தி, அவ்வளவே!"///////
முன் கதை சுருக்கம்....????
///////"விக்கிரமா, ஏத்துனது எல்லாம் எறங்கிருச்சி. திருப்பி ஏற கொஞ்சம் நேரம் ஆகும். நீ பிஸ்ஸடிக்கிறதுன்னா போயிட்டு வா"
வேதாளத்தை முறைத்த விக்கிரமாதித்தன் அந்த காட்டு பகுதியில் நடக்க ஆரம்பித்தான்.////////
எதுக்கு ??
பிஸ்ஸ் அடிக்கவா???
///"ச்சேச்சே அப்படியில்லை மாதித்தா. மூணு மணி நேரம் விடாமல் பேச நான் என்ன வைகோவா?////
ஆட்டோ வருவது நிச்சயம்.....
உஸாரா இருந்துகோங்க
////குசேலன் முதல் காட்சி பார்த்த ரசிகன் போல உனக்கு என்ன துக்கம்??"/////
எதுக்கு இந்த கொல வெறி....????
ஆனாலும் ரசித்தேன்
//
உருப்புடாதது_அணிமா said...
////////எப்டிங்க இப்பிடியெல்லாம் மொக்கையா எழுதிரீங்க்ன்னு கேக்குறீங்களா?? அதுக்கு நாம தனியா முயற்சிக்கறது இல்லீங்க. தானா வருது :0)///////
வரும் வரும்.....
உன்மைய இப்படி எல்லாம் பொதுவா சொல்ல கூடாது நண்பரே
//
எப்பனா உண்மைய பேசிட்றதே நமக்கு வழக்கமா போச்சி. இனிமே இ ந்த கெட்ட பழக்கத்தை ஒழிக்கணும். சீக்கிரம் திருந்திடுறேன் அணிமா அண்ணாச்சி :0)
//
உருப்புடாதது_அணிமா said...
//////"சோடாவா? சோடா பாட்டில் இருந்தால் அதை அப்பவே உன் மண்டைல ஒடச்சிருப்பேனே? //////
ஹி ஹி ...
நானும் தான் ..
(கோபிக்க கூடாது .. சும்மா டம்மாசுக்கு ))
//
தெரியும்ல. நாங்கள்லாம் உஸாரு பார்டிங்க மாமேய். இப்பல்லாம் நடக்கிறப்பக்கூட ஹெல்மெட்டோட தான் நடக்குறது. யாரு நாங்க?
//
உருப்புடாதது_அணிமா said...
அருமையான நடை...
தொடர்ந்து படித்து வருகிறேன்..
//
அது சரி! உங்க பிளாக்குக்கு வந்து பாத்தேன். நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டதுனால இல்ல, அதுக்கு முந்தியே, ம திரட்டி வழியா வந்து பாத்தேன். செம காமெடி. பின்றீங்க போங்க!
ஆசிஃப் அண்ணாச்சி, தாமிரா வரிசையில உங்களையும் "நான் படிச்சது" லிஸ்ட்ல மார்க் பண்ணிட்டேன். இனிமே அடிக்கடி வ ந்து கும்மி தான்!
வந்ததுக்கு நன்றி தல. வ ந்து ஒரே நாள்ல ஆறு பின்னூட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி :0)
"மூணு மணி நேரம் விடாமல் பேச நான் என்ன வைகோவா?"
இப்ப எல்லாம் அவர் பேசுறதை காமெடி இல் சேர்த்துட்டாங்க
கதையை விட எனக்கு பிடித்தது ,விக்ரம் & வேதாளம் dialogues தான்
//
பாபு said...
"மூணு மணி நேரம் விடாமல் பேச நான் என்ன வைகோவா?"
இப்ப எல்லாம் அவர் பேசுறதை காமெடி இல் சேர்த்துட்டாங்க
//
வாங்க பாபு சார். என்னங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம்? என்னோட முந்தின ஒரு பதிவை படிச்சிட்டு கோவிச்சிகிட்டீங்களோன்னு நெனச்சேன். வருகைக்கு நன்றி :0)
காமெடியெல்லாம் இல்லைங்க. எனக்கு பிடிச்ச தலைவர்கள்ல வைகோவும் ஒருத்தரு. இது ச்சும்மா ஜாலிக்கு கும்முறது ;))
//
பாபு said...
கதையை விட எனக்கு பிடித்தது ,விக்ரம் & வேதாளம் dialogues தான்
//
ஹி ஹி. அதுக்காகவாவது சகிச்சிக்கிட்டு கதைய படிக்கிறீங்களே. வேதாளம் தாங்க்ஸுபான்னு சொல்லுது ;0)
//காதலியாக இருந்த மாதவி, தனக்காக நீதி கேட்ட காரணத்தினால் விலைமாதுவாக மாறிப்போனாள்//
அருமை!
AYO AYO AYO Shall I have to wait another week ?
"ஓலைப்பாயில் ஒண்ணுக்கு போவது போல" --:) Ah! super sound naina adhu. ( But I did not on ஓலைப்பாயில்; Panamattayil ( palm leaf ) hehehheheh.
-Mappla.
ஹா ஹா
வழக்கம் போலவே செம கலக்கல் உரையாடல் வேதாளத்திற்கும், விக்கிரமாதித்தனுக்கும்!!
கதையும் விருவிருப்படைகிறது. அடுத்த பாகத்துக்கு செல்கிறேன்.
Post a Comment