Monday, 1 September 2008

இவ‌ய்ங்கெல்லாம் திருந்த‌வே மாட்டாய்ங்க‌ளா??

ஆஹா, அடுத்த தொடர ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யான்னுட்டு யாரும் தெறிச்சி ஓட வேண்டாம், சீக்கிரமா முடிச்சிர்றேன்.

நேத்து தினமலரை புறட்னப்ப, இந்த ஃபோட்டோ பாத்து திகைச்சி போயிட்டேன்.

ஏதோ, புள்ளியாரு விழாவாம், எங்க, பாரீசுல!.

புள்ளையாரு தான் தொந்தியும் தொப்பையுமா இருக்காருன்னா, இவனுங்க அதுக்கு சவால் விடறானுங்க!

பானை வயித்த வச்சிகிட்டு ஒவ்வொருத்தனும் ப்பப்பரபேன்னு போஸ் குடுக்குறத பாரு!

இதுல பொம்பிளிய வேற கயிரு கட்டி தேர‌ இளுத்தாங்களாம். இந்த கருமத்துக்கு, கார இளுத்தாலாவது பெட்ரோல் செலவு கொறையும்.

எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்.

பாரீசு போனாலும், பாங்காக் போனாலும்

இவ‌ய்ங்கெல்லாம் திருந்த‌வே மாட்டாய்ங்க‌ளா??



(ப‌ட‌ம் உத‌வி: தின‌ம‌ல‌ர்)

உங்களுக்கு எதுனா தோணுதா??

18 comments:

அது சரி said...

இன்னாபா இது, ஒர்த்தருக்கும் ஒரு கர்த்தும் இல்லியா? தமிள்னாட்டுல கர்த்து கந்த்சாமிங்க நெறியன்னு சொல்றானுவ. டுபாக்கூர் உட்டுட்டுட்டானுங்களா?

Syam said...

//இவ‌ய்ங்கெல்லாம் திருந்த‌வே மாட்டாய்ங்க‌ளா??[//

chandra mandalathukku ponaalum thirundha maataainga...

அது சரி said...

//
Syam said...
//இவ‌ய்ங்கெல்லாம் திருந்த‌வே மாட்டாய்ங்க‌ளா??[//

chandra mandalathukku ponaalum thirundha maataainga...

//
வாங்க ஸ்யாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

Every one must be proud of their cultural identity. If these people think that performing vinayaka chathurdhi to preserve and show their cultural identity, i fail to see what is wrong with this. I applaud these people and would be happy to take part in this any time!

Ravi

அது சரி said...

வாங்க ரவி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//
Every one must be proud of their cultural identity
//

க‌லாச்சார‌ம் தான் த‌ன்னோட‌ அடையாள‌ம்னு நென‌ச்சா, அது மிக‌ கீழான‌ நிலை என்ப‌து என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து. ஒவ்வொரு ம‌னித‌னுக்கும் அடையாள‌ம் அவ‌னே. அவ‌ன‌து மொழியோ, நாடோ, க‌லாச்சார‌மோ இல்லை.
You are your own identity. I dont want to borrow identity from something I have nothing to do with! #What is there to be proud in the culture?? It's not something you created.

//
If these people think that performing vinayaka chathurdhi to preserve and show their cultural identity, i fail to see what is wrong with this. I applaud these people and would be happy to take part in this any time!
//

Preserve and show their cultural identity?? Show to whom? For what purpose? To preserve?? Culture doesn't buy you food, neither it pays off your mortgage.

If you like it, there is nothing wrong, you can take part. It's just that I don't like these kind of things, very particularly the ones associated with religion (any religion!).

என‌க்கு பிடிக்க‌வில்லை, அத‌னால் தான் இந்த‌ ப‌திவு. உங்க‌ளுக்கு பிடித்திருந்தால் நீங்க‌ள் தாராளாமாக‌ செய்யுங்க‌ள்.

க‌டைசியா ஒண்ணு. இந்த‌ தேர் பாத்தீங்க‌ன்னா, அது பாட்டுக்கு செவ‌னேன்னு மூலையில‌ நிக்கும். அதை எதுக்கு ரோட்டுக்கு கொண்டு வ‌ர‌ணும், அப்புற‌ம் திருப்பி இழுத்துகிட்டு போணும்?? ஒண்ணுமே புரிய‌லையே!

மங்களூர் சிவா said...

/
இதுல பொம்பிளிய வேற கயிரு கட்டி தேர‌ இளுத்தாங்களாம். இந்த கருமத்துக்கு, கார இளுத்தாலாவது பெட்ரோல் செலவு கொறையும்.
/

:)))))))))))
ROTFL

Anonymous said...

i see your point. but i do not agree with that.

well. it was a good discussion

thanks

Ravi

Anand said...

பிரதர் நீங்க தேர புரிஞ்சுக்கறீங்களோ இல்லயோ..ரவி சிறினிவாச புரிஞ்சுக்கனும்னா இதப்படிங்க

http://vinavu.wordpress.com
இதுல நாங்கள்-அவர்கள்-நீங்கள் கட்டுரை

பாபு said...

இதுல உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா???

அது சரி said...

//
i see your point. but i do not agree with that.

well. it was a good discussion

thanks

Ravi

//
தப்பே இல்லை ரவி. உங்களுக்கு பிடிச்சதை நீங்க செய்ங்க. எனக்கு பிடிக்காததை நான் சொல்றேன். அவ்வளவு தான்.

அது சரி said...

//
Anand said...
பிரதர் நீங்க தேர புரிஞ்சுக்கறீங்களோ இல்லயோ..ரவி சிறினிவாச புரிஞ்சுக்கனும்னா இதப்படிங்க

http://vinavu.wordpress.com
இதுல நாங்கள்-அவர்கள்-நீங்கள் கட்டுரை

//

வாங்க ஆனந்த். யாரு ரவி ஸ்ரீனிவாசன்?

அது சரி said...

//
பாபு said...
இதுல உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா???

//

வாங்க பாபு. மிகச்சரியான கேள்வி. எனக்கு என்ன?
ஆனால், காஷ்மீரில் தீவிரவாதம் என்றால் நான் கவலைப்படுவது ஏன்? பெங்களூரில் பிரச்சினை என்றால், எங்கோ இருக்கும் எனக்கு என்ன?

நான் கவலைப்படுவதால் ஏதாவது ஆகப்போகிறதா?? இல்லை, எனக்கும் அது தெரியும்.

பாரீசில் தேரிழுக்க என்ன காரணம்? பாரீசில் பல பெண்கள் பாதி உடை அணிகிறார்கள். ஏனெனில், அது அவர்கள் கலாச்சாரம். அது போல, சுமார் ஒரு லட்சம் பாரீசுகாரர்கள் சென்னைக்கு வந்து, அரை நிர்வாணமாக ஊர்வலம் போனால் நீங்கள் சும்மா இருப்பீர்களா??

பிரான்ஸில் இருந்தால், பிரெஞ்சாக இருங்கள். ஃபிரான்ஸில் எதற்கு பிள்ளையார்?? இவர்களுக்கு பிள்ளையார் முக்கியமெனில் எதற்கு பிரான்ஸ்??

மத ரீதியான ஊர்வலங்களை பொது இடத்தில் நடத்துவது மிக அசிங்கமான கலாச்சாரம் என்பது என் கருத்து. அதுவும், எந்த சம்பந்தமும் இல்லாத ஃபிரான்ஸில் நடத்துவது ஒரு வகையான தீவிரவாதமே!

எனக்கு நேரிடையான பாதிப்பில்லை. ஆனால், மத தீவிரவாதங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அவ்வளவே!

உங்களுக்கு எதிர்கருத்துக்கள் இருக்கலாம். தவறே இல்லை. நீங்கள் இது குறித்து எழுத விரும்பினால், வாழ்த்துக்கள்.

ஆனால் ஒன்று. வினாயகர் சதுர்த்தி முடிந்ததும், அந்த வினாயகரின் கதி என்ன ஆகிறது என்று கவனித்தீர்களா?? முகத்தில் ஏறி மிதிப்பார்கள். கைகளை, கால்களை உடைத்து நொறுக்குவார்கள். தன்னையே காத்து கொள்ள முடியாத அவரா அடுத்தவர்களை காக்க போகிறார்??

எனக்கு நம்பிக்கையில்லை நண்பரே!

Thamira said...

அரசியல் பதிவு என்பதால் கூட்டம் கம்மியாத்தான் இருக்கும், அதுபற்றி கவலைப்பட வேண்டாம். நானும் எந்த கருத்தும் சொல்லாமலே வெளியேறுகிறேன். போகும் முன் ஒரு வார்த்தை..

பாபு கேட்ட கேள்வி தவறு..
அதற்கு நீங்கள் சொன்ன பதிலும் மிகச்சரியானதல்ல.!

Kanchana Radhakrishnan said...

:-)))))

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
:)))))))))))
ROTFL

//
வாங்க சிவா அண்ணாச்சி!!

அது சரி said...

//
தாமிரா said...
அரசியல் பதிவு என்பதால் கூட்டம் கம்மியாத்தான் இருக்கும், அதுபற்றி கவலைப்பட வேண்டாம். நானும் எந்த கருத்தும் சொல்லாமலே வெளியேறுகிறேன். போகும் முன் ஒரு வார்த்தை..

பாபு கேட்ட கேள்வி தவறு..
அதற்கு நீங்கள் சொன்ன பதிலும் மிகச்சரியானதல்ல.!

//

வாங்க தல! என்னடா, தாம்ரவருணிகாரரு நம்ம கடை பக்கமே வர மாட்டேங்குறாருன்னு நெனச்சேன். குசேலன் பதிவு படிச்சி, தலை சுத்தல் இன்னும் நிக்கலியா? :0)

அவரு கேட்ட கேள்வி தப்பு, நீ சொன்ன பதிலு அத விட தப்புன்னு சொல்லிட்டு நீ ஒன்னுமே சொல்லாம எஸ்ஸாயிட்டியே தல :(

அது சரி said...

//
kanchana Radhakrishnan said...
:-)))))

//

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன். வருகைக்கு நன்றி!

Anonymous said...

:)))))))