காலம் காலமாக சுட்டு கொள்ளப்படும் மீனவர் பிரச்சினை இப்பொழுது த்தான் கருணாநிதியின் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. உடனடியாக இதை திஇர்க்க முடிவெடுத்தார். எப்படி? ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம். இனி, இலங்கை இராணுவம் தமிழ் மீனவர்களை கொன்று குவிக்காது. இந்திய அரசு உடனடியாக இதற்கு ஒரு முற்று புள்ளி வைத்து விடும். எல்லாம் ஏமாந்த தமிழின் கனவில்!
குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வேண்டும் என்றால், உடனடியாக டெல்லி பறக்கும் கருணா, இதற்கு கடிதம் எழுதுகிறார். வேண்டுகோள் வைக்கிறார். நான்காவது முறையாக முதல்வர் ஆக இருக்கும் கருணாநிதி இதற்கு முன் செய்தது என்ன? 1970களில கச்ச தீவு இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டது. சரி! அதற்கு பின் பல முறை முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கும்(!) கருணாநிதியும், ஜெயாவும் செய்தது தான் என்ன? மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதும், அதற்கு இவர்கள் ஏதோ பிச்சை காசை நிவாரணம் என்று விட்டேரிவதும் தான்!
இதற்கு நிரந்தர தீர்வாக கச்ச தீவை மீட்க கருணா முயற்சி எடுப்பாரா? மாட்டார். ஏனெனில், அது மத்திய மந்திரி பதவிகளுக்கு ஆபத்தாக முடியும். அவருக்கு பதவி தான் முக்குயமே ஒழிய, எவன் எப்படி செத்தால் என்ன? எவன் குடும்பம் சொத்துக்கு வழியில்லாமல் நாசமாய் போனால் என்ன? தன் குடும்பத்தில் எல்லாரும் மந்திரி பதவியுடன் இருந்தால் போதும்.
இருக்கட்டும். ஆனால், இப்படி அடிக்கடி நாடகம் நடத்தி தமிழ்ர்களை முட்டாள் ஆக்க முயற்சிக்க வேண்டுமா?
இதுவும் கூட விஜயகாந்த் போராடிய பின், மீனவர்கள் போராட்டம் அறிவித்த பின்!
நடத்துங்கள் உங்கள் நாடகங்களை. தமிழ் மக்களை முட்டாளாக நினைக்கும் உங்களையும் உங்கள் கோஷ்டி, குடும்பத்தையும் தமிழ்ர்கள் முட்டாளாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
1 comment:
இந்தப் பதிவுக்கு தாமதமாக பின்னூட்டமிடுவதில் கூட அர்த்தம் இருக்கும் போல் இருக்கிறது:)
Post a Comment