Friday, 17 April 2009
Monday, 13 April 2009
அகில இந்திய அரசியலை திசை திருப்பிய சரத்குமார்!

இந்தியா ஒளிர்கிறது என்று கும்மி அடித்து கடந்த தேர்தலில் நொண்டி ஆன பா.ஜ.க என்னும் கட்சி அகில உலக சரத்குமார் ரசிகர் மன்ற நிறுவனத் தலைவர் சரத்குமாரின் சமத்துவ மொக்கை ச்சீ சமத்துவ மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணிக்கு முயன்றது எல்லாருக்கும் தெரிந்ததே...
இந்த கூட்டணியை உலகமே எதிர்பார்த்த நிலையில்.....
திருமங்கலம் இடைத் தேர்தலில் 800 ஓட்டுகள் பெற்று சுயேச்சையை விட கொஞ்சமே கொஞ்சம் குறைவான ஓட்டுகள் என்ற சாதனை செய்த சரத்துடன் சேர்ந்து தமிழ்நாடு/பாண்டிச்சேரியின் நாற்பது தொகுதிகளையும் இருட்டுக்கடை அல்வா போல் அள்ளி விடலாம்....ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென்னகமெங்கும் மக்கள் படை கொண்ட சமத்துவ மொக்கை கட்சியின் துணையுடன் தென்னகத்தை தேங்காய் பத்தை போல சுருட்டி விடலாம்... சரத் மொக்கை கட்சி துணையுடன் அடுத்த இந்திய ஆட்சி நமதே என்று மனப்பால் குடித்த பா.ஜ.க வுக்கு தனித்தே போட்டி என்று சரத்குமார் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்...
சரத்தின் இந்த அதிரடி கடப்பாறை புகழ் அத்வானியை இடி போல் தாக்கியது...அதிர்ச்சியில் வாஜ்பேயி நடக்கவே ஆரம்பித்து விட்டார் என்று டெல்லியின் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...
சரத்தின் இந்த அதிரடி முடிவால் இந்திய அரசியலே மாற்றி எழுதப்பட்டு விட்டது...தென்கிழக்கு ஆசியாவில் அரசியல் சூறாவளி வீசக்கூடும் என்று புலம்பினாலும்....சமத்துவ மொக்கை கட்சி போனால் என்ன....நாடாளும் மொக்கை கட்சி தலைவர் கார்த்திக்கை கண்டுபிடித்து கூட்டணி அமைத்தே தீருவோம்....அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு மந்திரி பதவி உறுதி...கடைசி வரை அவரை கண்டு பிடிக்க முடியாவிட்டால் லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட விசய. டி. ராசேந்தரின் லட்சிய தி.மு.க வுடன் கூட்டணி அமைப்போம் என்று அத்வானின் சென்னை தொண்டர் சூளுரைப்பதாக நமது நிருபர் "எழுத்தாணி" எருமை தெரிவிக்கிறார்....
Subscribe to:
Posts (Atom)