Wednesday, 29 December 2010

கடுங்குண பெருவழுதியும் தாருவின் காகமும்

பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே கேட்பது வழக்கம். வெளியில் போய் படம் போஸ்டர் பார்க்கலாம். கொலையும் செய்வாள் பத்தினி என்று ஒரு பட கேப்ஷன். என்ன படம் ஞாபகமில்லை.

ஞாபகம் தான் பெரிய பிரச்சினை. இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுவது யார் என்று எனக்கு தெரியவில்லை. ஹிஸ்டரி க்ளாஸ் கட் பண்ணியதன் விளைவு. நரசிம்மவர்ம பல்லவன் மகேந்திரன் இரண்டாம் புலிகேசியா மூன்றாம் புலிகேசியா. தொலையட்டும். ஏதோ ஒரு நம்பர்.  கடுங்குண பெருவழுதிக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு என்று வசனம் சொல்லாதீர்கள். இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டால் எல்லாருக்குமே பீதியில் பேதியாகும். எதிரே சூரிய வெளிச்சத்தில் கம்பம் பளபளத்தது. போர்க்காலத்தில் நெய்க்கு பஞ்சம். ஆமணக்கு எண்ணெய் தடவி இருப்பார்கள் போலிருக்கிறது. கேஸ்டர் ஆயில். பெருவழுதியை யானை மீது ஏற்றி கம்பத்தின் நுனியில் உக்கார வைத்தால் படைவீரர்களுக்கு அன்றைய வேலை முடியும். அரசு வேலை என்றாலும் டென் ட்டூ ஃபோர் இல்லை.கருணாநிதி ஆட்சிக்கு வர இன்னமும் காலம் இருக்கிறது. .அவர்களும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பார்கள். மீதியை நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை பார்த்துக் கொள்ளும். இது கொஞ்சம் காமெடி. நியூட்டன் வரும் முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்தது.

என் முகத்தில் பல்லி ஒன்று விழுந்து ஓடியது. பத்து மணிக்கு மேல் படுத்திருந்தால் பல்லி விழுமோ. என்ன எழவோ. காலையில் பல்லி முகத்தில் விழித்தால் என்ன பலன். சித்தியானந்தாவை கேட்கலாம். அவர் தான் இப்பொழுது பாப்புலர் சாமி. ஆனால் அவர் கதவை மூடிக் கொண்டு எப்பொழுதும் பிஸி.டோரை திற ஏரு வரட்டும் என்று ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாராம். தமிழ் இலக்கியம் வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

புரண்டு படுத்தால் ஃபோன் அடிக்க ஆரம்பித்து விட்டது. தாரு. தாருவை உங்களுக்கு தெரியாது என்றால் நீங்கள் அவரை தினமும் படிக்காத கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவர். பிரபல எழுத்தாளர். தமிழில் தான் எழுதுகிறார். பூடான், ம‌ணிப்புரி, சிக்கிம், மேகாலயா. பொங்கல் லாட்டரி இல்லை. இங்கெல்லாம் அவருக்கு கட் அவுட் இல்லாத இடமே இல்லை. மேகாலயாவில் காடுகளை அழித்து இவரது கட் அவுட் செய்து கொண்டிருக்கிறார்கள். பூடானுக்கு இங்கு இருந்து தான் ஏற்றுமதி. பூடான் இந்தியாவில் இருக்கிறது என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு இட்லி தின்றால் இப்படி தான் மூளை செத்துப் போகும்.


பெருவழுதியை யானை மீது ஏற்றி இருந்தார்கள். பெருவழுதி என்றால் வயதான கிழவன் என்று நினைக்காதீர்கள். குடும்ப பெயர். வயதென்னவோ இருபது சொச்சம் தான். ஆனாலும் அவன் கறுத்த‌ முகம் வெளுத்து போய் இருந்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் எல்லாம் இல்லை. மரண பயம்.இனி தப்பிக்க வழி இல்லை. இப்படி கழுவில் ஏற வேண்டும்  என்பது விதி. குல சாபம். தமிழ் குலம்.


தாருவின் குரல் சங்கீதம் போல் இருக்கும். அவருக்கு மட்டும். இன்னைக்கு ஈவ்னிங். ரிலீஸ் பண்றேன். தாரு இப்படி அடிக்கடி ரிலீஸ் பண்ணுவது வழக்கம் தான். மம்மி ரிடர்ன்ஸ். நோ வொண்டர். கண்டிப்பா வந்துடு. என் புக் ரிலிசூக்கு தமிழ்நாடே திரண்டு வரும்னு டைம்ஸ் ஆஃப் பூடான்ல போட்ருக்காங்க. என்னைத் தவிர எழுத யார் இருக்கா. மூணு லட்சம் பேரு வரணும். அண்ணா சாலைல நிக்க இடம் இருக்கக்கூடாது. இருந்தா தமிழ் இலக்கியம் செத்துடுச்சு.மன்சூர் அலிகானுக்கு இப்பொழுதெல்லாம் வாய்ப்பே கிடைப்பதில்லை.


யானை மீது இருந்த கடுங்குண பெருவழுதியை பாகன் அங்குசத்தால் குத்தினான். பெருவழுதிக்கு முறைக்கவும் தெம்பு இருக்கவில்லை. பரிதாபம். பாகனின் முகத்தில் வெள்ளையாய் பற்கள். இப்பொழுதெல்லாம் யானை பயப்படுவதே இல்லை. அங்குசத்தை கூர் தேய்க்க வேண்டும். சொல்லிக் கொண்டே பெருவழுதியின் இடுப்புத் துணி விலக்கி தொடையில் மெல்ல மெல்ல குத்தினான். அங்குசம் ஒரு அரை இஞ்ச் போயிருக்கும். பெருவழுதி கால்கள் வழியே சிவப்பு நிறம் வழிந்தது.

நான் போன போது அரங்குக்கு பின்னால் நாலு பேர் எதையோ கலக்கிக் கொண்டிருந்தார்கள். டாஸ்மாக் வாசம். தாருவுக்கு டாஸ்மாக் பிடிக்காது. எல்லாம் ஃபாரீன் சரக்கு தான். அஜீத் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணாங்களாம். பீர் எல்லாம் மனுஷன் குடிப்பானா. அதான். ஒரு லிட்டர் சரக்கு. ஒரு வாளி தண்ணி. மிக்ஸ் பண்ணி கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணப் போறோம். அட்வான்ஸ்ட் பின் நவீனத்துவம். அடுத்த வருடம் டிவி விளம்பரம். மஞ்சள் பையில் சிக்கன் பிரியாணி, ஓல்டு மங்க் ரம், ஊறுகாய்.இனி தமிழ் இலக்கிய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.  மூணு லட்சம் பேரு. எப்படியும் ஒரு லட்சம் பேர் வந்துடுவாங்க. கரூரில் கொங்கு முன்னேற்ற கழக மாநாடு. முப்பது லட்சம் பேர் வருகிறார்களாம். மணல் ஓடும் அமரவாதி ப்ரிட்ஜ். கழக கண்மணிகள் கட்டியது. தாங்குமா என்று தெரியவில்லை.

கந்தவேலா டைரக்டர் காகத்தை ரிலீஸ் செய்தார். அப்படியே போய் இருக்கலாம். இந்த நாவல் ஒரு தேவிகா புத்தகம். இதை வீட்டில் வெளியில் கம்மாக் கரையில் என்று எங்குமே படிக்க முடியாது. அவர் வேறு எங்கு வைத்து படித்தார் என்று தெரியவில்லை. ரூம் போட்டு படித்திருப்பார் போல.  தாரு பெய்லீசும் ஷிவாஸ் ரீகலும் அடிக்காமலயே உற்சாகம்.தானாக‌ வந்து ஆடு மாட்டுகிறது.

பாகன் கடுங்குண பெருவழுதியை கழுவில் தூக்கி வைத்தான்.

வெளியில் வந்து இருட்டான இடத்தில் மறைந்து நின்று கொண்டேன். கொஞ்சமாய் வெளிச்சம். யாரும் என்னை பார்க்க முடியாது. காகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே...............

========================

19 comments:

கலகலப்ரியா said...

தலை சுத்துது... வெய்ய்ட்...

vasu balaji said...

ஏ ஐய்யா எஞ்சாமி!எண்ணெய் தடவாமலே கழுமரத்துல ஏத்திட்டீரு. கடுக்குது:))))))

வால்பையன் said...

//அட்வான்ஸ்ட் பின் நவீனத்துவம்//


இந்த போஸ்டும் அப்படி தான் இருக்குது!

Unknown said...

அய்யாங் டொய்ங்

செல்வ கருப்பையா said...

பின் நவீனத்துவம் வெளங்கிடுச்சுப் போல? :))))

நசரேயன் said...

// அதி மொக்கை, மொக்கை//

இது மட்டும் தானா ?

கபீஷ் said...

இந்த ப்ளாக்க யாராவது ஹாக் பண்ணலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

சூப்பர் ஃப்ளோ நண்பா.. சமீபத்துல “தேகம்” படிச்சீங்களா? பட்டாசு கிளப்பி இருக்கீங்க..

Santhini said...

கடுன்குண பெருவழுதி க்கு ----ஏன் இந்த கழு ?
சும்மாயிருக்காமல் தானே இழுத்துப் போட்டுக் கொண்டால் இப்படிதானோ ?

அது சரி(18185106603874041862) said...

//

கலகலப்ரியா said...
தலை சுத்துது... வெய்ய்ட்...

29 December 2010 13:49
//

இது ட்ரைலர். இதுக்கே இப்படி சொன்னா.....:)))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
ஏ ஐய்யா எஞ்சாமி!எண்ணெய் தடவாமலே கழுமரத்துல ஏத்திட்டீரு. கடுக்குது:))))))

29 December 2010 14:52
//

காகத்துக்கே இப்படின்னா தேகத்துக்கு என்னாகும்?

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
//அட்வான்ஸ்ட் பின் நவீனத்துவம்//


இந்த போஸ்டும் அப்படி தான் இருக்குது!

29 December 2010 15:55
//

அதான்ணே இது :))

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
அய்யாங் டொய்ங்

29 December 2010 16:27
//

ம்ஹூம். இது அய்யய்ய்ய்ய்ய்ய்ய்யோ டொய்ங்.

அது சரி(18185106603874041862) said...

//
செல்வ கருப்பையா said...
பின் நவீனத்துவம் வெளங்கிடுச்சுப் போல? :))))

29 December 2010 16:56
//

வெளங்கினதால ஏற்பட்ட பீதி தான் இது. :))

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
// அதி மொக்கை, மொக்கை//

இது மட்டும் தானா ?

29 December 2010 17:33
//

மீதில்லாம் மேல இருக்கு. படிக்கலியா? :))

அது சரி(18185106603874041862) said...

//

கபீஷ் said...
இந்த ப்ளாக்க யாராவது ஹாக் பண்ணலாம்

29 December 2010 17:39
//

என்னா ஒரு நல்ல உள்ளம். இவங்களுக்கு தேகம் ஒரு பார்சல்........

அது சரி(18185106603874041862) said...

//

கார்த்திகைப் பாண்டியன் said...
சூப்பர் ஃப்ளோ நண்பா.. சமீபத்துல “தேகம்” படிச்சீங்களா? பட்டாசு கிளப்பி இருக்கீங்க..

29 December 2010 17:59
//

படிக்கலை கா.பா. ஆனா, படிச்சிடுவனோன்னு ரொம்ப பயமா இருந்துச்சி....அதான் இது :)))

அது சரி(18185106603874041862) said...

//

Nanum enn Kadavulum... said...
கடுன்குண பெருவழுதி க்கு ----ஏன் இந்த கழு ?
சும்மாயிருக்காமல் தானே இழுத்துப் போட்டுக் கொண்டால் இப்படிதானோ ?

29 December 2010 20:53
//

அது என்னவோ உண்மை. காகம் எப்படி போனா என்னன்னு சும்மா இருந்திருக்கலாம். :)))

Anonymous said...

தாரு யார் எனத் தெரியும் பெருவழுதி யாருங்க .... சொன்னா ஜெனரல் நாலோஜ்ஜை வளர்த்துக்குவேன் ...