Tuesday, 23 November 2010

பூனைகளின் கதை

மனைவியிடம் சண்டையிட்டு
தனித்தே புரண்டு படுத்த ஒரு பின்னிரவில்
என் பிணங்கள் மூடி தூர்ந்து போன என் கல்லறையின்
மண் விலக்கி வெளி வந்த அவன்
என் முகம் தொட்டு கதை சொல்ல ஆரம்பித்தான்.

கடவுள் கதை நிறைய உண்டு
காதல் கதை உனக்கே தெரியும்.
பாட்டி சொன்ன கதையல்ல
பார்க்கப் போகும் கதையும் அல்ல.

கடுவன் பூனை தாய்ப் பூனை
குட்டிப் பூனை
காமத்தில் கால்பரவாது செல்லும் பூனை
பல‌ திருட்டுப் பூனைகள்
திருடுவது பூனை குணம்

கருமமே கண்ணாய் சில பூனைகள்
கனவிலே சில பூனைகள்
எந்நேரமும் மீசை முறுக்கி சில பூனைகள்

வெள்ளை கறுப்பு பழுப்பு என்று பல நிறம்
எல்லாப் பூனையும் தினம் வரும்
தினம் போகும்.
வருமிடம் போகுமிடம் எனக்குத் தெரியாது
வந்து கொண்டே தான் இருக்கின்றன பூனைகள்

இப்படியே போனது சில நாட்கள்
அன்றைக்கு
அத்தனை பூனைகளையும்
தின்று செரித்து
வெறுமனே சோம்பிக் கிடந்தது அந்தப் பூனை.

எல்லாவற்றையும் தின்றேன்
இனி நீதான் மிச்சம்.
எழுந்து வந்தது என்னைக் கண்டு.

நீளமாய் கால்கள்
இரவால் செய்தது போல ஒரு நிறம்
பற்களும் கூட.
முன்பொரு முறை பார்த்திருக்கிறேன் எங்கோ
அதற்கு கண்ணே இல்லை.

வியர்த்திருந்த முகம் துடைத்து எழுந்தேன்
கதை சொன்னவன் காணவில்லை.
கையெட்டும் தூரத்தில்
மெல்லியதாய் கேட்டது
ஒரு பூனைக் குரல்.

14 comments:

கலகலப்ரியா said...

ஏதோ புரியற மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு...

நல்லாருக்கு...

ராஜ நடராஜன் said...

நானே நானா?

ராஜ நடராஜன் said...

க்கும்!கதவை மூடி வச்சிருவீங்களே?

ராஜ நடராஜன் said...

அதெப்படி பதிவர்கள் பலபேருக்கு இப்படி காளமேகப்புலவர் படியளக்கிறார்?

எனக்கெல்லாம் காத்தும் வரல!வாத்தும் வரல:)

குடுகுடுப்பை said...

ஒரு பூனைய வெச்சு மனுசன இப்படியெல்லாம் குழப்பமுடியுமா?

சில்வியா said...

ஆனந்தவிகடனில் வேலை கம்மி போல இருக்கிறது.

vasu balaji said...

ஆனானப்பட்டதே ஆடிக்காத்துல பறக்குதாம். இலவம்பஞ்சு பவுசு கேக்கணுமா..கலகலாவை ரிப்பீட்டிக்கிறேன்.:)my

கோலா பூரி. said...

ஐயோ, பாவம் பூனைகள்.!!!!!!!!!!!

எம்.எம்.அப்துல்லா said...

அதுசரி :)

Unknown said...

rightu

அக்னிபாசுதன் said...

ண்ணா... முழிச்சப்புறம் Mr/Mrs பூனை இன்னாதான் பண்ணிச்சுங்ண்ணா????

க.பாலாசி said...

மனைவிகிட்ட சண்டப்போட்டா இப்டித்தான் கெட்டகெட்ட கனவா வரும்.

VELU.G said...

நல்ல கோர்வையா வந்திட்டுருந்துச்சு

புரிஞ்சுடுச்சோன்னு நினைக்கையில
//
வியர்த்திருந்த முகம் துடைத்து எழுந்தேன்
கதை சொன்னவன் காணவில்லை.
கையெட்டும் தூரத்தில்
மெல்லியதாய் கேட்டது
ஒரு பூனைக் குரல்.
//

Santhini said...

Neeyum un poonaigalum ...sugamthaane?
---ippoludhum--