Thursday 14 October 2010

கள்ளி

உதடு கிழிந்து குருதி வழிய‌
கடித்து செல்லும் ஒட்டகங்கள்
திசை இல்லாத திசையில் கிளம்பி
மணல் போர்வை மூடும் காற்றின் இரவுகள்
தானும் நிழலும் தவிர தனியே
தினமும் புதிய முள்ளுடன்
வளர்ந்து கொண்டே இருக்கிறது கள்ளி.

8 comments:

குடுகுடுப்பை said...

ottkathukku sappatukkaaga iraivainin arputham ithu.

Radhakrishnan said...

வளரத்தானே செய்யும், கள்ளி!

கலகலப்ரியா said...

நல்லாருக்கு...

கலகலப்ரியா said...

முள்ளும் கள்ளியும்... என்னன்னு யோசனை வருது...

vasu balaji said...

/தானும் நிழலும் தவிர தனியே
தினமும் புதிய முள்ளுடன்
வளர்ந்து கொண்டே இருக்கிறது கள்ளி.//

அருமை

Santhini said...

எங்க ஊர் ஜாடையில இருக்கு கள்ளி !!
வளரட்டும் வளரட்டும் , இன்னும் இன்னும் முட்களுடனும் ,
ஒட்டகங்கள் தின்று விட்டு போக சதைப்பற்றுடனும்.....

சூப்பர் கவிதை!

Anonymous said...

//தானும் நிழலும் தவிர தனியே
தினமும் புதிய முள்ளுடன்
வளர்ந்து கொண்டே இருக்கிறது கள்ளி.//

எதற்கு வருந்த தெரியவில்லை கள்ளிக்கா?

//உதடு கிழிந்து குருதி வழிய‌
கடித்து செல்லும் ஒட்டகங்கள்//

ஒட்டகத்துக்கா?

எறும்பு said...

ம்..