Sunday 16 May 2010

எருமை.

முன்னாள் காதலியின் ஈமெயில்கள்
இன்னாள் மனைவியின் டிவோர்ஸ் நோட்டீஸ்கள்
நேற்றிரவு க்ளப்பில் புதிதாய் பார்த்த பெண்ணின் குறுஞ்செய்திகள்
பெரியாரின் பழைய தொண்டர் கருணாநிதி
புதிதாய் வந்த தொண்டர் குஷ்பு
குழாய் உடைந்து மெக்ஸிகோ வளைகுடாவில் கொட்டும் பெட்ரோல்
பதவி இழந்த ப்ரவுன் பதவி பிடித்த கேமரான்
ஏழாம் தேதி வரை டைம் கொடுக்கும் டாக்ஸ் பில்கள்
என்றைக்கு வேலை முடியும்
எத்தனை சொன்னாலும் புரியாத க்ளையண்ட்

இன்ஷா அல்லா எங்க ப்ராண்ட் பாஸ்மதி அரிசி
அஞ்சு கிலோ வாங்கினா ரெண்டு கிலோ ப்ரீ
எங்க க்ளப்புக்கு ஆறு மணிக்கு முன்னாடி வந்தா
ரெண்டு ஷாட் டக்கீலா ஃப்ரீ
திணிக்கப்பட்ட நோட்டீஸ்கள்
புகையும் சிகரெட் தீர்ந்து போன விஸ்கி
திறந்து வைத்து குடிக்காத பியர்

குளம்பு நனைத்து கால் தாண்டி
தொடை ஏறி அடிவயிறு பரவி முதுகு படர்ந்து
காதுள் நுழைந்து தலை ஏறும்
சேற்றில் மூழ்கி
பெருமழையில் நனைகிறது எருமை.

படம் உதவி: Google.com

29 comments:

அது சரி(18185106603874041862) said...

போங்கய்யா...போயி புள்ளைங்க படிக்கிறதை நிறுத்துங்க...

கபீஷ் said...

ஹி ஹி கவித!!!! என்னமோ சொல்ல வரீங்க.

அ.முத்து பிரகாஷ் said...

மிக அருமை தோழரே ...

பாரதியின் வரிகள் மனதில் கேட்கின்றன ...

உலர்ந்த தமிழன் மருந்துக்கு கூட ....

என்னுள் இருக்கும் எருமையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறேன் ....

காலை பொழுதில் நல்ல கவிதையை படிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...

have a nice day bro ...

Unknown said...

நீங்க இப்ப சொல்றது கூட பாருங்க இந்த எருமைத் தோலுக்கு உரைக்க மாட்டேங்குது..

ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டதுக்கு நன்றி

குடுகுடுப்பை said...

குளம்பு நனைத்து கால் தாண்டி
தொடை ஏறி அடிவயிறு பரவி முதுகு படர்ந்து
காதுள் நுழைந்து தலை ஏறும்
சேற்றில் மூழ்கி
பெருமழையில் நனைகிறது எருமை//

சேரும் மழையும் இருந்தாலே எருமைக்கு போதும், மேலே உள்ள உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளெல்லாம் போட்டா அதுக்கு பேரு கவுதயா

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

காபி பேஸ்ட்ல எடிட்டர்ஸ் டெவில். அதான் டெலிட் பண்ணேன்:)))

vasu balaji said...

/முன்னாள் காதலியின் ஈமெயில்கள்இன்னாள் மனைவியின் டிவோர்ஸ் நோட்டீஸ்கள்//

வலி சொல்லும் வரிகள்.

/பெரியாரின் பழைய தொண்டர் கருணாநிதிபுதிதாய் வந்த தொண்டர் குஷ்பு/

சிந்தனையைத் தூண்டும் வரிகள்

/குழாய் உடைந்து மெக்ஸிகோ வளைகுடாவில் கொட்டும் பெட்ரோல்பதவி இழந்த ப்ரவுன் பதவி பிடித்த கேமரான்ஏழாம் தேதி வரை டைம் கொடுக்கும் டாக்ஸ் பில்கள்என்றைக்கு வேலை முடியும் எத்தனை சொன்னாலும் புரியாத க்ளையண்ட்/

அறச்சீற்றம்.

/இன்ஷா அல்லா எங்க ப்ராண்ட் பாஸ்மதி அரிசிஅஞ்சு கிலோ வாங்கினா ரெண்டு கிலோ ப்ரீஎங்க க்ளப்புக்கு ஆறு மணிக்கு முன்னாடி வந்தா ரெண்டு ஷாட் டக்கீலா ஃப்ரீதிணிக்கப்பட்ட நோட்டீஸ்கள்/

இலவசத் திணிப்புக்கெதிரான குரல்.

/குளம்பு நனைத்து கால் தாண்டிதொடை ஏறி அடிவயிறு பரவி முதுகு படர்ந்துகாதுள் நுழைந்து தலை ஏறும்சேற்றில் மூழ்கிபெருமழையில் நனைகிறது எருமை./

கண்முன் காட்சி விரிகிறது. படிமக் கவிதை. எருமைக்கடா முதுகில் பெய்த மழை என்ற சொலவடையை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்:0))).

எப்புடி அடிச்சாலும் பின்னூட்டம் போடுவமில்ல. ஹி ஹி.

Jokes apart (யோவ் கலகலா! காப்பி கேட்னு கத்த வேணாம்:))

/குளம்பு நனைத்து கால் தாண்டிதொடை ஏறி அடிவயிறு பரவி முதுகு படர்ந்துகாதுள் நுழைந்து தலை ஏறும்சேற்றில் மூழ்கிபெருமழையில் நனைகிறது எருமை./

ரொம்ப ரசித்தேன். சுரணை கெட்ட எருமை கூட சேறு அடிவயிற்றில் பட கண்மூடி ஒரு யோக நிலை போசில் ஆனந்தமாக இருக்கும். மனுசப்பயலும் இத்தன அடி வாங்கியும் அதுக்குள்ள சுகம் தேடுறது ரொம்ப பொருத்தம்.

ராஜ நடராஜன் said...

வந்துட்டீங்களா?

கலகலப்ரியா said...

தலைப்பில அப்டியே உறைஞ்சு போயிட்டேன்.. எனக்கென்னமோ என்னைய திட்டுற மாதிரியே இருக்கு... படம் மிரட்டல்.. கவிதை பயங்கரம்.. :0))..

இன்ஷா அல்லா... இந்தப் புள்ளையப் பார்த்தாவது.. புள்ளைங்க படிக்கிறத நிறுத்தி ரொம்ப நல்லாருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்..

ராஜ நடராஜன் said...

குளம்பு நனைத்து
கால் தாண்டி
தொடை ஏறி
அடிவயிறு பரவி
முதுகு படர்ந்து
காதுள் நுழைந்து
தலை ஏறும்
சேற்றில் மூழ்கி
பெருமழையில் நனைகிறது எருமை

முழுசா மூழ்கியும்
மூச்சடக்கி வித்தைகளில்
மூச்சுத்திணறல்
இன்னும் வரவேயில்லை...

KarthigaVasudevan said...

தடித்தோல் காட்டெருமைகள்
என்ன தான் மழை பெய்தாலும்
சேற்றில் அசையாமல் புரளும்
பொறுமை பேருருக்கள்."

சுரணை வரும்னெல்லாம் எதிர்பார்த்திடக் கூடாது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலை வரை வ ந் துடுச்சா.. அய்யோ..

பழமைபேசி said...

எ(அ)ருமை!

Sundar சுந்தர் said...

அருமை.
நீங்கள் விவரித்த வகையில், எருமை மேல் ஒரு மதிப்பு வருகிறது.

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
ஹி ஹி கவித!!!! என்னமோ சொல்ல வரீங்க.

16 May 2010 01:16
//

வாங்க கபீஷ்.

கடைசிப் பத்தியில சொல்லிட்டேன்னு தான் நினைக்கிறேன். :)))

அது சரி(18185106603874041862) said...

//
நியோ said...
மிக அருமை தோழரே ...

பாரதியின் வரிகள் மனதில் கேட்கின்றன ...

உலர்ந்த தமிழன் மருந்துக்கு கூட ....

என்னுள் இருக்கும் எருமையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறேன் ....

காலை பொழுதில் நல்ல கவிதையை படிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...

have a nice day bro ...

//

நன்றி நியோ...உள்ளுறை எருமையை வெளித்தள்ளும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்து....ஆனால், எருமை எனக்கு உள்ளே இல்லை, நானே எருமையாக மாறிவிட்டேன் போல தோன்றியது, அதற்காகவே இந்த எழுத்து...

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
நீங்க இப்ப சொல்றது கூட பாருங்க இந்த எருமைத் தோலுக்கு உரைக்க மாட்டேங்குது..

//

நான் எதுவும் சொல்லலியே :))

//
ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டதுக்கு நன்றி
//

அது என்ன ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டதுக்கு நன்றி??? அடிக்கடி இடுகை போடாம இருக்கதுக்கு நன்றின்னு ஒரு அர்த்தம் வருதே? :))

அது சரி(18185106603874041862) said...

//
சொரூபா பிந்தினி said...
குளம்பு நனைத்து கால் தாண்டி
தொடை ஏறி அடிவயிறு பரவி முதுகு படர்ந்து
காதுள் நுழைந்து தலை ஏறும்
சேற்றில் மூழ்கி
பெருமழையில் நனைகிறது எருமை//

சேரும் மழையும் இருந்தாலே எருமைக்கு போதும், மேலே உள்ள உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளெல்லாம் போட்டா அதுக்கு பேரு கவுதயா

16 May 2010 05:04
//

அய்ய...ரொம்ப லேட்டு...இது கவிதை தான்னு நான் தீர்ப்பு சொல்லி ரொம்ப நேரமாச்சி...இப்ப வந்து மாத்துன்னா எப்படி??

அது என்ன சொரூபா பிந்தினி? எதுக்கு பேர் மாத்தினீங்க??

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...

ரொம்ப ரசித்தேன். சுரணை கெட்ட எருமை கூட சேறு அடிவயிற்றில் பட கண்மூடி ஒரு யோக நிலை போசில் ஆனந்தமாக இருக்கும். மனுசப்பயலும் இத்தன அடி வாங்கியும் அதுக்குள்ள சுகம் தேடுறது ரொம்ப பொருத்தம்.

//

முழுக்க மூழ்கிய பின் முக்காடு எதுக்கு என்ற மனோநிலையாகவும் இருக்கலாம் சார்.... When you are sinking why do you care about rain???

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
வந்துட்டீங்களா?

16 May 2010 08:12
//

நான் எங்கயும் போகல அண்ணா...இங்க தான் இருக்கேன் :)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
தலைப்பில அப்டியே உறைஞ்சு போயிட்டேன்.. எனக்கென்னமோ என்னைய திட்டுற மாதிரியே இருக்கு... படம் மிரட்டல்.. கவிதை பயங்கரம்.. :0))..
//

நான் வேற யாரையும் சொல்லலீங்க...என்னைச் சொன்னேன்...

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
குளம்பு நனைத்து
கால் தாண்டி
தொடை ஏறி
அடிவயிறு பரவி
முதுகு படர்ந்து
காதுள் நுழைந்து
தலை ஏறும்
சேற்றில் மூழ்கி
பெருமழையில் நனைகிறது எருமை

முழுசா மூழ்கியும்
மூச்சடக்கி வித்தைகளில்
மூச்சுத்திணறல்
இன்னும் வரவேயில்லை.
///

கரெக்ட்...இன்னமும் சில கணங்கள் இருக்கும் ஆசையில் சில நேரங்களில் மூச்சடக்கி தான் மூழ்க வேண்டியிருக்கிறது....

அது சரி(18185106603874041862) said...

//
KarthigaVasudevan said...
தடித்தோல் காட்டெருமைகள்
என்ன தான் மழை பெய்தாலும்
சேற்றில் அசையாமல் புரளும்
பொறுமை பேருருக்கள்."

சுரணை வரும்னெல்லாம் எதிர்பார்த்திடக் கூடாது.

//

வேறு வழியில்லாதும் இருக்கலாம் இல்லையா?

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
எ(அ)ருமை!

16 May 2010 18:39
//

ரொம்ப நன்றிங்ணா...

Santhini said...

எருமையாய் மாறியது சந்தோசமா? துக்கமா?
நானும் கூட சமீப காலமாய் அப்படித்தான் மாறிவிட்டதாக எண்ணம்.
கண்ணாடி மட்டும்தான் தான் ஏதோ குரங்கை காட்டுகிறது !!
( மண்டைக்குள் இருக்கிற மசாலா, சும்மா இருக்காமல் ஏதேனும் அறிந்தே ஆகவேண்டும் என்றுதான் சொல்லும்.
அதனால் படிக்கிற பிள்ளைகள் எந்த குப்பையோ படித்துவிட்டு போகட்டும். படிப்பதெல்லாம் குப்பை என்று ஒருநாள்
தெரிந்து கொள்ளத்தானே போகிறார்கள்.)

--

அது சரி(18185106603874041862) said...

//
Sundar சுந்தர் said...
அருமை.
நீங்கள் விவரித்த வகையில், எருமை மேல் ஒரு மதிப்பு வருகிறது.

17 May 2010 04:16

//

நன்றி சுந்தர்.

உண்மையில் எருமைகள் மிக அப்பாவியான உயிரினங்கள்...கவனிச்சி பாருங்க, சில சமயம் பசு மாடு கூட முட்ட வரும்...குறிப்பா யாராவது கன்னுக்குட்டிய தொட்டா பசு மாடு கொம்பை ஆட்டிக்கிட்டு வரும்...ஆனா எருமை மாடு அப்பாவியா பார்த்துக்கிட்டு நிக்கும். புல்லு, வைக்கோல், காஞ்சி போன கரும்பு தோகைன்னு எது கொடுத்தாலும் கம்ப்ளைன்ட் பண்ணாது அடம் பிடிக்காது அது பாட்டு சாப்பிடும்...பால் கொடுக்கறது மட்டுமில்ல, உழவு ஓட்டறது, வண்டி இழுக்கறதுன்னு எல்லா வேலையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ செய்யும்.....பரமாரிக்கிறதும் ஈஸி...வீட்ல இருக்க மூணாங்கிளாஸ் பொண்ணு கூட எருமை மாட்டை கவனிச்சிக்கலாம்...யாரு கயிரை பிடிச்சாலும் அது பாட்டு அவங்க பின்னாடி தேமேன்னு போகும்...ரொம்ப அப்பாவித் தனமா...

ஆனா, இவ்ளோ செஞ்சும் என்ன புண்ணியம்? நம்ம மக்கள் எருமை மாடு எதிர்ல வந்தா அமங்கலமா தான் நினைக்கிறாங்க...

Mahesh said...

எருமை!!!

அருமை... அருமை... அருமை !!!