Saturday, 17 April 2010

விஷக்கிருமி!

என்றைக்கோ ஒரு நாள் இந்த நபரை டிவியில் பார்த்து விட்டு இவன் ஒரு விஷக் கிருமி என்று சரியாக சொன்னவரை மீண்டும் நினைத்துப் பார்க்கத் தான் வேண்டியிருக்கிறது. பெரிய அளவில் விபரம் தெரிந்த பருவம் இல்லையென்றாலும் இப்படி ஒரு நபரை ஒரு காலத்தில் உயர்வாக நினைத்தோமே என்று ஒரு குற்ற உணர்ச்சி நீண்ட காலமாக உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஒரு செயலுக்காகவே இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து எத்தனை முறை என்னை செருப்பால் அடித்துக் கொண்டாலும் பாவம் மிச்சம் இருக்கத்தான் செய்யும்.


நான் ஒன்றும் தேவலோகத்தில் சஞ்சரிக்கவில்லை. செத்தவரின் உடலை தர லஞ்சம் கேட்கும் கடவுள் பக்தி உள்ள கணவான்கள், அறுபது வயது விதவையை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சார காவலர்கள், ஊர்க்கடைகளின் இங்கிலீஷ் போர்டுக்கு தார் பூசி விட்டு தன் பேரன் பேத்திகளுக்கு வடமொழி பெயரிட்டு தமிழ் வளர்க்கும் டாக்டர்கள் என்று பலரையும் பார்த்து தான் இருக்கிறேன்.

ஆனால், அதனினும் கேவலமான மனிதர்களை சந்திக்கக் கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அப்படி யாரேனும் இருப்பார்கள் என்று நினைக்கவும் இல்லை.

ஆனால், அப்படி ஒரு நபர் இருக்கிறார். எந்த ஒரு சபை நாகரீகமும், மனிதாபிமானம் என்ன, மனிதத் தன்மையே இல்லாத விஷக்கிருமிகள் இருக்கத்தான் செய்கின்றன.

மனைவி, துணைவி என்று மூன்று பெண்களுடன் குடும்பம் நடத்திக் கொண்டே ஒருவனுக்கு ஒருத்தி என்று வாய்க் கூசாது கலாச்சாரம் பேசும் அந்த நபர் அரசியல் மேடையில் வாய் திறந்து நரகலை கக்கியிருக்கிறார்.
"இந்த அம்மையார் யார் யாரையோ பார்த்து `பதி பக்தி இல்லாதவர்' என்று சொன்னார். ஆனால் இவர் காட்டிய பதி பக்தி இதுதான். கணவரை போன்றவருக்கு ஒரு நோய் நொடி என்றதும், அவருக்கு வேலையே வேண்டாம், வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொன்ன உத்தமி"
இது ஒரு மூத்த அரசியல்வாதி, எண்பது அகவையை கடந்தவன் என்று தன்னையே வியந்து கொள்ளும் ஒரு நபர் பேசும் பேச்சா?? கணவரைப் போன்றவர் என்று இந்த நபருக்கு எப்படி தெரியும்?? அப்படி அந்தரங்களில் நுழைந்து பார்த்தால், விபச்சாரியிடம் போய்விட்டு சர்வீஸ் சரியில்லை என்று காசு கொடுக்காது ஓடி வந்த சிலரின் அசிங்கங்க‌ளையும் பேச வேண்டி வருமே??
================

இந்த நபரின் வாய்மொழி தான் இப்படி அழுகிய பிணம் போல நாறுகிறது என்றால் அரசியல் செயல்பாடுகளும் அப்படித் தான் இருக்கிறது. எண்பதை கடந்த நோய்வாய்ப்பட்ட, கணவனையும் மகனையும் இழந்து சிறையில் அடைபட்டிருந்த மூதாட்டிக்கு சென்னையில் இறங்க அனுமதியில்லை. அவர் ஒன்றும் அரசியல் நடத்தி ஒரு மகன் முதல்வர், மற்றொரு மகன் மத்திய மந்திரி, மகள் எம்.பி, பேரனுக்கும் மந்திரி பதவி, நாலாயிரம் கோடி சொத்து, ப்ரைவேட் ஜெட், ப்ரைவேட் தீவு என்று குடும்பத்துக்கு சொத்தும் பதவியும் சேர்க்க வரவில்லை. மருத்துவ சிகிச்சைக்கு தான் வந்தார்.

ஆனால், அவர் விமானம் விட்டு இறங்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது!! இப்படி ஒரு கேவலமான செயலை வேறு எங்கேனும் கேள்விப்பட்டதில்லை. இதை செய்தவர்கள் எப்படிப் பட்ட இழிபிறவிகளாக இருக்க முடியும்??

ஒரு எண்பது வயது நடக்கமுடியாத நோய்வாய்ப்பட்ட மூதாட்டியால் உங்களின் இறையாண்மைக்கும் இன்ன பிற மயிருக்கும் பங்கம் வருமென்றால் என்ன விதமான அரசாங்கம் நாடு அது??

பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு இன்றைக்கு சொம்பு தூக்கும் கூட்டம் இந்த நபரின் காலை மட்டுமல்ல, கழுவாத பின்புறத்தைக் கூட நக்கலாம்.ஆனால் என்றாவது ஒரு நாள் சரித்திரம் சரியாக எழுதப்படும். அன்றைக்கு உன் பெயர் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உமிழப்படும்!

14 comments:

வானம்பாடிகள் said...

நிச்சயம் எதிர்பார்த்தேன். நன்றி முதலில்.

அது சரி said...

முடியல ஸார்...எத்தனை எழுதினாலும் இன்னமும் தீராது தான் இருக்கிறது.

வானம்பாடிகள் said...

/இந்த ஒரு செயலுக்காகவே இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து எத்தனை முறை என்னை செருப்பால் அடித்துக் கொண்டாலும் பாவம் மிச்சம் இருக்கத்தான் செய்யும்.//

சத்தியமான உண்மை.

/எண்பது அகவையை கடந்தவன் என்று தன்னையே வியந்து கொள்ளும் ஒரு நபர் பேசும் பேச்சா?? கணவரைப் போன்றவர் என்று இந்த நபருக்கு எப்படி தெரியும்?? அப்படி அந்தரங்களில் நுழைந்து பார்த்தால், விபச்சாரியிடம் போய்விட்டு சர்வீஸ் சரியில்லை என்று காசு கொடுக்காது ஓடி வந்த சிலரின் அசிங்கங்க‌ளையும் பேச வேண்டி வருமே??/

யார் பேசப்போறாங்கங்கற திமிர்.

/இன்றைக்கு சொம்பு தூக்கும் கூட்டம் இந்த நபரின் காலை மட்டுமல்ல, கழுவாத பின்புறத்தைக் கூட நக்கலாம்./

ஒரு நாயும் வாய் திறக்கவில்லையே.

/அன்றைக்கு உன் பெயர் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உமிழப்படும்!/

எத்தனை உமிழ்ந்தாலும் உரைக்காது. அய்யகோன்னு பிலாக்கணம் பாடும் கிழம்.

இராகவன் நைஜிரியா said...

நெஞ்சு பொறுக்கதில்லையே... நிலை கெட்ட மாந்தரை எண்ணி..

தன் சுகம், தம் மக்கள் சுகம் மட்டுமே முக்கியமாகிடுச்சுங்க

கலகலப்ரியா said...

ம்.. உணர்வுகளின் சுழலில் வார்த்தைகளின் கலவையைப் பிரித்தறிந்து எழுத முடியவில்லை...

மங்களூர் சிவா said...

ம்
:(

முகிலன் said...

//முடியல ஸார்...எத்தனை எழுதினாலும் இன்னமும் தீராது தான் இருக்கிறது///

எல்லோரும் எழுத வேண்டும். திரட்டிகளில் அதிகமாகப் பேசப்படும் பாப்புலர் அந்தஸ்தைப் பெற வேண்டும்..

நம் எதிர்ப்பை இப்படியாவது பதிவோம்..

நீங்கள் சொன்ன மாதிரி சரித்திரம் திருத்தி எழுதப் படும்போது இவை அத்தாட்சிகளாக இருக்கும்..

Anonymous said...

இன்னும் வாயே தொறக்காம இருக்கறதப்பாத்தா எரிச்சலா இருக்குங்க :(

ராஜ நடராஜன் said...

நெற்றிக்கண் என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலும்.

ஆனா இவருக்கு சினிமா மொழியில சொல்ல வேண்டுமென்றால் பேராண்மை படத்துல நடிச்ச Roland Kickinger டெர்மினேட்டர் படத்துக்கு ஜேம்ஸ் கெமரூனால சிபாரிசு செய்யப்பட்டவர்.

அதென்னமோ Arnold Schwarzenegger சுட்டாக்கூட மெர்க்குரியோ,பாதரசமோ மாதிரி உருகி தரையிலிருந்து எழுந்து ஒரு தட்டு தட்டிட்டு போகிற மாதிரி அடுத்த பாராட்டு விழாவுக்கும்,செம்மறி மொழி மாநாட்டுக்கும் போய்கிட்டே இருப்பார்.பார்த்துகிட்டே இருங்க.

Sundar சுந்தர் said...

//என்றாவது ஒரு நாள் சரித்திரம் சரியாக எழுதப்படும். அன்றைக்கு உன் பெயர் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உமிழப்படும்!//

History today is recorded through facts. Wish to see JJ in power just to see these buggers put in place.

தமிழ் பிரியன் said...

அவர்அளித்த பேட்டிக்கு , நீங்கள் எழுதி இருக்கும் எழுத்துக்கள் கிஞ்சித்தும் குறைந்தவை இல்லை... வாழ்த்துக்கள்!

கார்த்திக் said...

இந்தவருசம் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வந்த மாநிலமா சென்னைக்கு மூனாவது இடம் காரணம் சிறந்தமருத்துவம்
ஆனா ஒரு பிரயஜனமும் இல்லை ஒரு வயசானவங்களுக்கு மருத்துவத்துக்கு வக்கில்லாத மாநிலமா நம்ம மாநிலம் மாறிப்போச்சு :-((
இனிமே மனிதாபிமானாத்தப்பத்தி இவங்க பேசமா இருந்தாங்கன்னாளே போதும் :-((

பரிதி நிலவன் said...

//என்றாவது ஒரு நாள் சரித்திரம் சரியாக எழுதப்படும். அன்றைக்கு உன் பெயர் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உமிழப்படும்!//

வழக்கம் போல் இதையெல்லாம் மறைக்கத்தானே செம்மொழி மாநாடு என்று ஜிகினா வேலைகளை ஆரம்பிச்சிட்டாரு.

Anonymous said...

MK Says :: "Enakku katchithaan kudumbam, kudumbam thaan katchi..Ithu kooda ungalukku puriyalaiya?? ayyogo ayyogo.."
Sorry..enakku tamil type panna theriyaathu..

K from London.