//
ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....": இந்தப்பதிவுக்கு பின்னூட்டமோ, உங்களுக்கு பதில் சொல்வதிலோ எனக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லை. இருப்பினும் நான் மிக மதிக்கும் பதிவர்கள் சிலரின் மதிப்பை நீங்கள் பெற்றிருப்பது இங்கிருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிகிறது. மகிழ்ச்சி. அவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் என் கருத்தை தெரியப்படுத்த விரும்பி இந்தப் பின்னூட்டம். 'அழுக்கின் அழகு' சிறுகதை ஒரு ஃபார்மெட்டுக்குள் எழுதப்பட்ட கதை. மேலும் அந்தக்கதையின் முடிவில் பின்குறிப்பாக.. //அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன்.// என்ற என் கருத்தையும் தந்துள்ளேன். எல்லா படைப்புகளுமே படைப்பாளியின் முழு தத்துவார்த்தத்துடன் மலர்ந்துவிடுவதில்லைதான். எழுத்துக்களும் பல சமயங்களில் அரசியல் சாயம் பூசிக்கொண்டுதான் எழுதப்படுகின்றன. அதையும் மீறி அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தக்கதையை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடும்தான். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ள பத்தியில் எவற்றின் தொடர்ச்சியாக என்னை கலாச்சார காவலன் என்று சித்தரித்திருக்கிறீர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. //பெரும்பாலான பதிவுகள் கலாச்சார காவலர்களின் மறு பிரதியாகவே இருக்கின்றன....காந்தி புனிதமானவர், யாமறிந்த மொழிகளில் தமிழ் தான் இனிமை, குடிப்பழக்கம் சமுதாயத்தின் மிகப் பெரிய தீமை, தாய்மை வணங்கப்பட வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்படி நிறைய....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழகு..// இது உங்கள் கூற்று. இதன் ஒரு வரியை உங்களுக்கு எதிராக திருப்பினால் எவ்வளவு அநாகரீகமாக மாறிவிடும்.? எவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்ற பொறுப்பில்லாத உங்களை என்ன சொல்வது நான்? அதையும் தவிர்த்து பெண்கள் உடைகளை திருத்தமாக அணிவது என்ற கருத்தை நான் சொல்லவந்ததாகவும், அது கலாச்சார காவலர்த்தனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட மேற்கூறிய பிற குற்றச்சாட்டுகளுக்கு என் பதிவுகளிலிருந்து எடுத்துக்காட்டு தரமுடியுமா? அல்லது பெண்கள் விஷயம் மட்டும்தான் என்னுடையது, பிற பிறரைப்பற்றியது எனில் அவற்றின் இணைப்புகளையும் தரவேண்டியதுதானே? மாற்றுக்கருத்தும், பிடிக்காதவற்றைச் சொல்வதும் இயல்பானது என்றே நான் எண்ணுகிறேன். அதற்கு அனைவருக்கும் உரிமையிருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும். சரியான வாதம் இருக்கவேண்டும். சாட்டப்பட்டவர் வெட்கி ஒத்துக்கொள்வதாக இருக்கவேண்டும். மாறாக என் குறித்தும், நண்பர் பரிசல் குறித்தும் நீங்கள் சொல்வதைப்போல இருக்கலாகாது என நான் நினைக்கிறேன். பரிசல்காரன் மிகக்குறுகிய காலத்தில் 500க்கும் அதிகமான ஃபாலோயர்களையும், 3 லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் பெற்ற புகழ்மிக்கவர். இது அவரது எழுத்தால் எத்தனை பேரை கவர்ந்திருக்கிறார் என்பதைக்குறிக்கிறது. அத்தனை பேரைக்கவர்ந்த எழுத்து உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அதை இப்படித்தான் பதிவு செய்வதா.? நீங்கள் எழுதிய வரிகளில் கண்ணியமோ, குறைந்த பட்ச நியாயமோ இருப்பதாகப் படுகிறதா உங்களுக்கு.? இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம். வாழ்த்துகள்.! (இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.)
//
ஆதி,
நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து நானும் அதை எழுதவில்லை...நீங்கள் மிக மதிக்கும் சில பதிவர்களுக்கென்று சொல்லிவிட்டதால் எனக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல விருப்பமில்லை...ஆனால் என் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக சில விஷயங்களை தெளிவுபடுத்த இந்த பதில்...
முதலாவதாக விகடனுக்கோ இல்லை இன்ன பிற பிரபல இதழ்களுக்கோ எப்படி கதைகள் எழுதப்படுகின்றன என்று எனக்கு தெரியாது...அவர்களே ஃபார்மட், தீம் எல்லாம் கொடுப்பார்களா என்பதும் எனக்கு தெரியாது...ஆனாலும் அதன் ஃபார்மட் குறித்து எனக்கு எந்த எண்ணமும் இல்லை...அது அவர்கள் பிரச்சினை...எழுதுபவர்கள் பிரச்சினை...வாசிப்பவனுக்கு தேவையில்லாத ஒன்று...
அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அழுக்கின் அழகை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதும் எனக்கு தெரியாது...என்னால் மிக சாதாரண விஷயங்களையே புரிந்து கொள்ள முடிவதில்லை...ஆனால், அந்த குறிப்பிட்ட கதையில் சாஃப்ட்வேர் பெண்களை (மட்டும்) நீங்கள் குறிப்பதாக நான் எண்ணவில்லை....சாஃப்ட்வேர் பெண்கள், சித்தாள்கள் என்ற உருவகங்களை நீக்கி விட்டு அழுக்கின் அழகு என்ற தலைப்போடு புரிந்து கொண்டால்???
இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு ஒன்று அழகு என்றால் மறு நிகழ்வு என்னவென்று அர்த்தமாகிறது??? அசிங்கம் என்றல்லவா?? சரி....அந்த பெண்கள் கவர்ச்சியான உடை அணிகிறார்கள்....ஆண்களை கவர விரும்புகிறார்கள்....அப்படி எடுத்துக் கொண்டாலும் அது எப்படி அசிங்கம் என்றாகும் என்பது எனக்கு புரியவில்லை....இனக்கவர்ச்சி என்பது எல்லா உயிருக்கும் இருக்கும் மிக மிக சாதாரண அடிப்படையான உணர்வு... ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....ஆனால் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்...இல்லாவிட்டால் அசிங்கம் என்ற ரீதியில் பேசும் தவறான கலாச்சார கருத்தே எனக்கு அர்த்தமாகிறது.... இப்படித் தான் இருக்க வேணும் பொம்பள???????
உண்மை தான்....நீங்கள் என்ன பொருளில் எழுதினீர்கள் என்று யாருக்கும் தெரியாது....அது உங்களுக்கும் பதிப்பித்த விகடனுக்கும் தான் வெளிச்சம்.....இது போன்ற கதைகள் 1940/50களில் வந்த பழைய விகடன்களில் பார்த்திருக்கிறேன்...விகடன் இன்னமும் அதே காலகட்டத்தில் இருப்பதை புரிந்து கொள்ளாதது என் பிழையே...
உங்களை கலாச்சார காவலராக சித்தரிக்கும் நோக்கமில்லை...ஆனால் என் புரிதலில் எது போன்ற எழுத்துக்கள் அநீதியான செத்துப் போக வேண்டிய கலாச்சாரத்தை சித்தரிக்கின்றன என்பதன் உதாரணமாகவே அந்த சுட்டி கொடுக்கப்பட்டது....மற்றவர்களின் சுட்டியும் கொடுத்திருக்கலாம்...ஆனால் உங்கள் பதிவுக்கு அடிக்கடி வந்து போவதால் முகவரி நினைவில் இருந்தது...மற்றவை இல்லை...
என் எழுத்தில் கண்ணியமில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்...பொறுப்பில்லாத எழுத்து என்றும்...உங்கள் விமர்சனத்திற்கு நன்றி....கட்டமைப்புகளின் அளவுகோல் படி நான் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று...என்ன செய்வது....என்னால் முடிந்தது இவ்வளவு தான்...ஆதலால் என்னை கண்ணியத்துடன் மன்னிக்க... ஆனால் யாரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்பதோ அவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும் என்பதே கொஞ்சம் கூட என் நோக்கமல்ல...அது எனக்கு தேவையில்லாத வேலை....பரிசல்காரன் மிக பிரபலமானவர் என்பதும் அவரது எழுத்து நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது, அவருக்கு நிறைய வாசகர்கள் உள்ளார்கள் என்பதும் மிக உண்மை...அதை யாரும் மறுக்க முடியாது....மறுப்பது என் நோக்கமும் இல்லை...ஆனால் அவர் எழுத்து எனக்கு பிடிக்கவில்லை என்பது மட்டுமே நான் எழுதியது....
// இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம். வாழ்த்துகள்.! //
யாரேனும் பாராட்டுவார்கள் என்பதற்காக நான் எதுவும் எழுதுவதில்லை.. அப்படி எழுதுவது தன்னை விற்பனை செய்வது என்பது தனிப்பட்ட முறையில் என் எண்ணம்....நான் நினைப்பதை எழுதுகிறேன்...படிப்பவர்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டுகிறார்கள்...இல்லையேல் இல்லை...
// (இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.) //
தொடரின் நோக்கம் சிதறிவிட்டதாக வருத்தப்படுகிறீர்களா?? ஸாரி, இது கொஞ்சம் காமெடியாக இருக்கிறது....உண்மையில் இன்டர்நெட் என்பதே கூட இன்ட்ரானெட்டாக வேறு ஒரு நோக்கத்திற்கு கண்டுபிடிக்கப்பட்டு இன்டர்நெட்டாக உருமாறி இருக்கிறது....நாம் உபயோகிக்கும் பல விஷயங்கள் வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையே...உருமாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம்....அதனால் யார் இந்த தொடரை உருமாற்றி இருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும்....இல்லை நான் தான் மாற்றி விட்டேன் என்றால் அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே...
பெயர்ப் பட்டியல்களை இடுவது மேதாவிலாசமா??? ஏன் ஒரே ஒருவரை தான் பிடிக்க வேண்டும்/பிடிக்க கூடாதா?? சரி..உங்கள் வழிக்கே வந்தாலும் பிடித்தவர்/பிடிக்காதவர் பட்டியலில் இருப்பவர்களோ இல்லை வாசிப்பவர்களோ யோசிக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...வெறுமனே என் விருப்பத்தை சொல்லும் முயற்சி...பலர் கருணாநிதியை பிடிக்காது, ரஜினிகாந்த்தை பிடிக்காது, விஜயை பிடிக்காது என்று கூட சொல்லியிருக்கிறார்கள்....இதைப் படிப்பவர்களோ இல்லை ரஜினிகாந்த்தோ ரூம் போட்டு ஏன் என்று யோசிக்கப் போகிறார்களா??? மன்னிக்க...எனக்கு நம்பிக்கையில்லை....
=============================
அடுத்து பதிவர் ராமலஷ்மி அவர்களுக்கான பதில்...
//
ராமலக்ஷ்மி has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....":
அன்புள்ள அதுசரி,
எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுத முடியாதுதான். இங்கே நீங்கள் கூறியிருப்பது ஏற்கனவே என் சுதந்திரதினப் பதிவில் நீங்கள் முன் வைத்த் கருத்துதான். அதை பிரசுரிக்கவும் செய்துள்ளேன். என்னை பெரிய கவிஞர் என நான் சொல்லிக் கொள்ளவில்லை. எனது பதிவொன்றிலேயே ‘நான் எழுதுபவையும் கவிதைகள்தானா’ எனத் திகைத்து நின்ற போது ‘அப்படியெல்லாம் யோசித்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவே முடியாது’ என நண்பர்கள் தந்த ஊக்கத்தில்தான் தொடர்ந்து எழுதினேன் என்றே குறிப்பிட்டிருப்பேன். உங்கள் போன்ற சிலருக்கு என் படைப்புகள் அத்தனை கஷடத்தைக் கொடுத்திருப்பதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதையெண்ணி என் எழுத்துக்கு எந்த வேகத் தடையும் விதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
பிரபலங்களோடு சேர்த்து பேசியிருப்பதாகப் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு பேச்சுக்கு சொல்ல வேண்டுமெனில் நானும் ஒரு பிரபலத்தை உதாரணப் படுத்துகிறேன். எனிட் ப்ளைட்டனை ஆரம்ப காலத்தில் பிபிசி குழந்தைகளுக்கு எழுதும் இவரைப் பேட்டி காண்பதா என ஒதுக்கியதைப் பற்றி ஒரு செய்தியை சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படித்தேன். அதற்காக அவர் எழுதுவதை நிறுத்தி விடாமல் தன் பாணியிலேயே தொடர்ந்து, வெற்றியும் கண்டார். வலைப்பூவின் கட்டற்ற சுதந்திரம் எப்படி விரும்பியதைப் பதிய வழிவகுத்திருக்கிறதோ அதே போல விரும்புவதைச் சுட்டி வாசிக்கவும் சவுகரியம் தந்துள்ளது. விருப்பமற்ற பின் உங்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாமென அக்கறையின்பால் கேட்டுக் கொள்கிறேன்.
விமர்சனங்கள் என்றைக்கும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் இது போன்ற விமர்சனங்களா என்று என்வரையில் எனக்குத் தெரியவில்லை. எனது சில கவிதைகளை [அப்படி நான் கூறிக் கொள்பவற்றை] ‘இணையத்திலிருந்து’ என்ற குறிப்புடன் செய்தித்தாள்கள் சிலவற்றின் வாரமலர்களில் அவர்களாகவே எடுத்து வெளியிடுகிறார்கள். இணைய இதழ்களும், பத்திரிகைகளும் என் படைப்புகளை அங்கீகரித்தே வருகின்றன. (இதை அச்சீவ்மெண்ட் என்றும் சொல்ல வரவில்லை). எளிமைக்காகவே என் எழுத்துக்களை விரும்புபவரும் உள்ளார்கள். உங்களுக்குப் பிடிக்காததால் எல்லோருக்கும் பிடிககாதென அர்த்தமில்லை என நீங்களே சொன்னபடி, பிடித்த அந்த வெகு வெகு சிலருக்காக மட்டும் தொடர்கிறேன். என்றைக்கேனும் என் படைப்புகளில் சில பள்ளிப்பாடத் திட்டத்தில் வருமேயானால் அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையுமே கொள்வேன்:)!
மிக்க நன்றி.
அன்புடன்
ராமலக்ஷ்மி
//
அன்புள்ள ராமலஷ்மி, உங்கள் எழுத்துக்கு வேக தடை போடுவது என் நோக்கமல்ல...நீங்கள் கஷ்டப்படுத்துவதாகவும் நான் சொல்ல வரவில்லை...உங்கள் இடுகைகளை வாசித்தது என் சுயவிருப்பத்தின் பேரில் நிகழ்ந்தது...அதை நீங்கள் கஷ்டப்படுத்துவதாக எப்படி சொல்ல முடியும்???
கவிதைகளா என்று கேள்வி எழுப்பியது மீண்டும் என் தனிப்பட்ட விருப்பின் பேரில் தானே தவிர, நான் கேள்வி எழுப்பியதாலேயே அவை கவிதைகள் இல்லை என்று ஆகிவிட முடியாது.....இது தான் கவிதை, இது தான் இலக்கியம் என்று எந்த வரைமுறையும் இல்லை...யாரும் செய்யவும் முடியாது....ஆனால், தனிப்பட்ட முறையில் கவிதையோ இல்லை வேறு எந்த இலக்கியமோ சம கால வாழ்க்கையின் ஏதாவது ஒரு பக்கத்தையாவது பதிவு செய்ய வேண்டும்...இலக்கியத்தில் நிகழ்வுகள் மட்டுமே இருக்கும்...நீதி போதனைகளும் அறிவுரைகளும் ஏன் குறைந்த பட்சம் ஒரு மெஸேஜூம் கூட இருக்காது....அவை நிகழ்வுகளின் அடிப்படையில் வாசிப்பவனால் உணரப்பட வேண்டும் என்பது என் எண்ணம். போதனைகளையும் நன்னெறி நூல்களையும் இலக்கியம் என்பது சுய முன்னேற்ற புத்தகங்களை இலக்கியம் என்று சொல்வது போல இருக்கிறது....(மீண்டும்...இவை எனது சொந்த கருத்துக்களே தவிர, நான் எதையும் வரையறை செய்ய முற்படவில்லை)
மற்றபடி, நீங்கள் விரும்பிய படியே உங்கள் படைப்புகள் பள்ளி பாடத்திட்டத்தில் வர வாழ்த்துக்கள்...என்னைக் கேட்டால் அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே சொல்வேன்...:0)))
மிக்க நன்றி...
அன்புடன்,
அது சரி
26 comments:
just for comments....
/இனக்கவர்ச்சி என்பது எல்லா உயிருக்கும் இருக்கும் மிக மிக சாதாரண அடிப்படையான உணர்வு... ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....ஆனால் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்...இல்லாவிட்டால் அசிங்கம் என்ற ரீதியில் பேசும் தவறான கலாச்சார கருத்தே எனக்கு அர்த்தமாகிறது..../
சரியான கருத்து ஸார்.
/சரியான கருத்து ஸார்./
உங்கள் கருத்து சரி என்றேன்.
//
இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு ஒன்று அழகு என்றால் மறு நிகழ்வு என்னவென்று அர்த்தமாகிறது??? அசிங்கம் என்றல்லவா??//
அது எப்டி..? இதில் நான் முரண்-படுகிறேன்...!
மற்றபடி.... தலையை மேலும் கீழும் ஆட்ட வேண்டி இருக்கே என்று... என் தலைவிதிய நொந்துக்கிட்டே... கிளம்பறேன்..! ))..
சரியாச் சொன்னீங்க! இதே கதையை ஜீன்ஸ் டி-ஷர்ட் போடும் ஆணையும் கிழிந்த பனியன் லுங்கி கட்டும் கொத்தனாரையும் வைத்து எழுதினால் பிரசுரிப்பார்களா விகடன்? அதற்கு அழுக்கின் அழகு என்று பெயர் வைப்பார்களா?
கற்பென்பதைப் பொதுவில் வைப்போம்.
தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி அதுசரி, கடைசியாக வந்த வாழ்த்துக்கும்! பலித்தால் சொன்னமாதிரி எனக்கு மகிழ்ச்சியேதான்:)! இலக்கியம் பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன. சம கால நிகழ்வுகள் சிலபலவற்றை எனக்குத் 'தெரிந்த வகையில்' பதிவு செய்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். இங்கே 'நான் இலக்கியவாதி இல்லை' என்று சொல்லி விட்டு போய்விட முடியும்தான். அப்படியின்றி, என் வழியில் வேகத்தடையின்றி முன் போலவே தொடர்ந்தாலும், நீங்கள் சொல்கிற மாதிரியாகவும் ஒருபக்கம் முயற்சிகள் செய்து பார்க்க இருக்கிறேன் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். மீண்டும் நன்றிகள்.
குறிப்பிடப்பட்ட பின்னூட்டத்தை இட்டு எனது நேரத்தையும், உங்கள் நேரத்தையும் வீணடித்ததற்காக வருந்தி வெளியேறுகிறேன்.
நன்றி.
உங்க கருத்துல எனக்கு உடன்பாடு இருக்கா இல்லையாங்கறது வேறு விஷயம்.... பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு...:)
//
வானம்பாடிகள் said...
/சரியான கருத்து ஸார்./
உங்கள் கருத்து சரி என்றேன்.
//
நன்றி வானம்பாடிகள்...
(ஆனால், தயவு செய்து ஸார் எல்லாம் வேண்டாமே...அந்த வார்த்தை கொஞ்சம் uncomfortable ஆக இருக்கிறது... வெறுமனே "அது சரி" என்று அழைத்தால் போதும்...)
//
கலகலப்ரியா said...
//
இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு ஒன்று அழகு என்றால் மறு நிகழ்வு என்னவென்று அர்த்தமாகிறது??? அசிங்கம் என்றல்லவா??//
அது எப்டி..? இதில் நான் முரண்-படுகிறேன்...!
//
முரண்பட வாய்ப்புண்டு...ஆனால், கான்டெக்ஸ்ட்டை பொருத்தி பார்த்தால் ஒரு வேளை முரண் இல்லாது இருக்கலாம்...
//
மற்றபடி.... தலையை மேலும் கீழும் ஆட்ட வேண்டி இருக்கே என்று... என் தலைவிதிய நொந்துக்கிட்டே... கிளம்பறேன்..! ))..
//
இது எதுக்குன்னு புரியலியே...நீங்க ஏன் தலைவிதியை நொந்துக்கனும்?? டெய்லி ஆஃபிஸ் போக வேண்டி இருக்கேன்னா? :0)))
//
முகிலன் said...
சரியாச் சொன்னீங்க! இதே கதையை ஜீன்ஸ் டி-ஷர்ட் போடும் ஆணையும் கிழிந்த பனியன் லுங்கி கட்டும் கொத்தனாரையும் வைத்து எழுதினால் பிரசுரிப்பார்களா விகடன்? அதற்கு அழுக்கின் அழகு என்று பெயர் வைப்பார்களா?
கற்பென்பதைப் பொதுவில் வைப்போம்.
//
நன்றி முகிலன்...
நீங்கள் சொல்வது போன்ற கதையை விகடன் பிரசுரிக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை....எல்லாரும் செய்றது தான...என்ன பெரிசா சொல்ல வந்துட்ட என்று உதறி விடுவார்கள் :0))0
//
ராமலக்ஷ்மி said...
தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி அதுசரி, கடைசியாக வந்த வாழ்த்துக்கும்! பலித்தால் சொன்னமாதிரி எனக்கு மகிழ்ச்சியேதான்:)!
//
நன்றி ராமலஷ்மி... அந்த வாழ்த்து உண்மையானது...பலிக்குமா என்று பார்ப்போம்...பலித்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமே...:0))))
//
சம கால நிகழ்வுகள் சிலபலவற்றை எனக்குத் 'தெரிந்த வகையில்' பதிவு செய்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். இங்கே 'நான் இலக்கியவாதி இல்லை' என்று சொல்லி விட்டு போய்விட முடியும்தான். அப்படியின்றி, என் வழியில் வேகத்தடையின்றி முன் போலவே தொடர்ந்தாலும், நீங்கள் சொல்கிற மாதிரியாகவும் ஒருபக்கம் முயற்சிகள் செய்து பார்க்க இருக்கிறேன் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். மீண்டும் நன்றிகள்.
//
புதிய கோணத்தில் உங்கள் கருத்துகள் வெளிப்பட்டால் வித்தியாசமாக நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்...மீண்டும் வாழ்த்துக்கள்...
//
ஆதிமூலகிருஷ்ணன் said...
குறிப்பிடப்பட்ட பின்னூட்டத்தை இட்டு எனது நேரத்தையும், உங்கள் நேரத்தையும் வீணடித்ததற்காக வருந்தி வெளியேறுகிறேன்.
நன்றி.
//
உங்கள் கருத்து...உங்கள் முடிவு ஆதிமூலகிருஷ்ணன்...இதில் நான் சொல்ல எதுவுமில்லை...
நன்றி...
//
Mahesh said...
உங்க கருத்துல எனக்கு உடன்பாடு இருக்கா இல்லையாங்கறது வேறு விஷயம்.... பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு...:)
//
நன்றி மகேஷ்...உடன்பாடு இல்லாவிட்டாலும் அது பெரிய விஷயமில்லை...ஒரு கருத்தில் எல்லாரும் உடன்பட்டு விட்டால் பின்னர் உலகத்தில் இயக்கமே இருக்காது :0))))
Dear Annachi,
I liked your followup post regardless of both comments and response.
You know one thing? I enjoyed so many movies those were utter failure in the market... similarly, many were success that I couldn't enjoy..... perception is the cause I think....
.... perception could vary for different reasons and we got to move on... lets all keep moving further....
//
பழமைபேசி said...
Dear Annachi,
I liked your followup post regardless of both comments and response.
//
Thank you mate...
//
You know one thing? I enjoyed so many movies those were utter failure in the market... similarly, many were success that I couldn't enjoy..... perception is the cause I think....
//
Exactly....I too enjoyed some movies, that were not blockbusters...Like Iruvar...I enjoyed that movie immensely, but many people didn't...So, yes, perception is the cause...One can look only with his eyes I guess...May be, just may be, it could become possible to look things from others point of view...but it would take a long practice....I hope to be there one day :0))
//
.... perception could vary for different reasons and we got to move on... lets all keep moving further....
//
Yep....Lets move on...:0)))))
அழுக்கின் அழகு என்னுடைய புரிதலின் படி போத்திக்கொள்பவள் நல்லவள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்று கட்டமைக்கப்பட்டதாகவே எனக்குப்புரிந்தது. அது எந்தக்களத்தில் சொல்லப்பட்டாலும் இதுதான் அதன் உள்கருத்து.
ராமலட்சுமி அவர்கள் உங்களை ஒரு நல்ல விமர்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதி விரைவில் ஏற்றுக்கொள்வார் என எண்ணுகிறேன்.
//இது எதுக்குன்னு புரியலியே...நீங்க ஏன் தலைவிதியை நொந்துக்கனும்?? டெய்லி ஆஃபிஸ் போக வேண்டி இருக்கேன்னா? :0)))//
நீங்க நினைக்கிறதெல்லாம் நம்ம கிட்ட சொல்லப்டாது...! ஆபீஸ் சொர்க்கம்...(இது ஓவர்ன்னு எனக்கே தெரியுது... ஆனாலும் நிஜம் உண்டு..)
//முரண்பட வாய்ப்புண்டு..
முரண் இல்லாது இருக்கலாம்...//
நான் சொல்ல ஒண்ணுமில்லப்பா...!
'mr. thatz right'- kaanavillai..! (auto anuppittaangalaa yaaraavathu..)
//
குடுகுடுப்பை said...
அழுக்கின் அழகு என்னுடைய புரிதலின் படி போத்திக்கொள்பவள் நல்லவள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்று கட்டமைக்கப்பட்டதாகவே எனக்குப்புரிந்தது. அது எந்தக்களத்தில் சொல்லப்பட்டாலும் இதுதான் அதன் உள்கருத்து.
//
எனக்கு அப்படித் தான் புரிஞ்சது பாஸ்...அதனால் தான் என்னால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை....
//
குடுகுடுப்பை said...
ராமலட்சுமி அவர்கள் உங்களை ஒரு நல்ல விமர்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதி விரைவில் ஏற்றுக்கொள்வார் என எண்ணுகிறேன்.
//
அடடா...விமர்சனம் பண்ற அளவுக்கு எனக்கு விஷயம் போறாதுங்க...இது சும்மா (பிடித்தது) பிடிக்காதது மட்டும் தான்...
//
கலகலப்ரியா said...
//இது எதுக்குன்னு புரியலியே...நீங்க ஏன் தலைவிதியை நொந்துக்கனும்?? டெய்லி ஆஃபிஸ் போக வேண்டி இருக்கேன்னா? :0)))//
நீங்க நினைக்கிறதெல்லாம் நம்ம கிட்ட சொல்லப்டாது...! ஆபீஸ் சொர்க்கம்...(இது ஓவர்ன்னு எனக்கே தெரியுது... ஆனாலும் நிஜம் உண்டு..)
//
ம்ம்ம்...எங்க ஆஃபிஸூம் கூட சொர்க்கம் தான்...என்ன ஒண்ணு, அப்பப்ப வேலை பார்க்க வச்சிடறாங்க...:0)))
//
//முரண்பட வாய்ப்புண்டு..
முரண் இல்லாது இருக்கலாம்...//
நான் சொல்ல ஒண்ணுமில்லப்பா...!
//
எனக்கு தலை சுத்துது...
//
கலகலப்ரியா said...
'mr. thatz right'- kaanavillai..! (auto anuppittaangalaa yaaraavathu..)
//
No, no autos yet :0)))
It's just I was busy again...no, not in the bar, genuinely busy at work...:0))))
//அது சரி said...
//
கலகலப்ரியா said...
'mr. thatz right'- kaanavillai..! (auto anuppittaangalaa yaaraavathu..)
//
No, no autos yet :0)))
It's just I was busy again...no, not in the bar, genuinely busy at work...:0))))//
nambeettam..! weekend - bar - 'no bar'
neway ty for da reply..=)).. my worry meter was in da red zone.. just coz of that god damned "Auto".. =)).. tc..
http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_01.html
see.. "mr.thatz right" kavithai eluthi irukkaanga... (kaathukkulla cotton vachchirukken... np... thaaraalamaa thittalaam..)
Post a Comment