விடாது பெய்யும் மழை...வருவதாக சொல்லிவிட்டு ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதால் கேன்ஸல் செய்த நட்பு....
பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்று எல்லாரும் எழுதி விட்டார்கள்...ரொம்ப நல்லவன் வடிவேலு போல பிடித்ததை மட்டும் எழுதிய நல்லவர்கள்...இன்றைய தமிழ் சினிமா பிடிக்கவில்லை, அரசியல் பிடிக்கவில்லை, எனக்கு பிடித்தவர்கள் எல்லாம் செத்து போய்விட்டார்கள் என்று எழுதிய பொத்தாம் பொதுவான தயிர்வடைகள்...(நன்றி: சாரு நிவேதிதா)...அம்மா சுட்ட தோசை பிடிக்கும்.....பாட்டி சுட்ட வடை பிடிக்கும்...முதல் முதல் போட்ட அரைக்கால் டவுசர் பிடிக்கும்...இறந்த காலத்தின் பிரதிநிதிகள்....
நான் எழுதி பெரிதாக எதுவும் கிழிக்கப் போவதில்லை என்றாலும் இருத்தலியத்தின் அவசியம் பொருட்டும் போரடிக்கும் போது புகைக்கும் வழக்கத்தை நிறுத்தும் முயற்சியின் பொருட்டும்....வெறுப்பாக இருக்கும் போது அடுத்தவர்களையும் வெறுப்பேற்றும் என் வழக்கத்தின் காரணமாகவும்...
பிடிக்காததை சொல்வதே நோக்கம்...தலைவாழை இலை போட்டு லட்டும் பக்கத்தில் கொஞ்சம் உப்பும் வைப்பது போல...பிடித்ததும்....
அரசியல்வாதி:
பிடிக்காதது: தலிபான்களின் தமிழக பிரிவு செயலாளர் ராமதாஸ், நாடக மேதை கருணாநிதி, மதச்சார்பற்ற அணி என்று சொல்லிக் கொண்டே மதக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள், சோனியா காந்தி, போலி ஏழைப் பங்காளன் ராகுல் காந்தி, மாயாவதி
பிடித்தது: கம்யூனிஸ்டாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மனிதர் என்பதால் நல்லக்கண்ணு, வைகோ, கருணாநிதியின் போலி அரசியலை பின்பற்றாது கொஞ்சமாவது முன்னேற்ற அரசியலை செய்யும் ஸ்டாலின்.
டைரக்டர்:
பிடிக்காதது: பாரதி ராஜா (வேதம் புதிது தவிர்த்து), விக்ரமன், பேரரசு, ஷங்கர், கெளதம் மேனன்
பிடித்தது: கே.எஸ். ரவிக்குமார், மணி ரத்னம், பாலா
இசை:
பிடிக்காதது: இளையராஜா.
பிடித்தது: எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரஹ்மான், தேவா.
நடிகர்:
பிடிக்காதது: எதையுமே சாதிக்காமல் வாய் கிழிய பேச மட்டுமே செய்யும் சிம்பு... ஒரிஜினல் பில்லாவை ரீமேக் செய்து குட்டிசுவராக்கியதால் அஜீத்...காரணமின்றி சூர்யா
பிடித்தது: நிறைய பேர்...குறிப்பாய் நாகேஷ், பிரகாஷ் ராஜ், நாஸர், கமல்ஹாசன், விக்ரம், ரஜினி காந்த்.
நடிகை:
டிக்காதது: ஸ்ரேயா,த்ரிஷா...இப்பொழுது புதிதாய் தமன்னா.
பிடித்தது: அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கும்....தற்போதைக்கு நாடோடிகள் அனன்யா.
பாடலாசிரியர்:
பிடிக்காதது: கந்தசாமி படத்துக்கு பாடல் எழுதிய நபர்(விவேகா??)....சமீப காலத்தில் இவ்வளவு கேவலமான பாடல்களை கேட்டதாய் ஞாபகம் இல்லை...
பிடித்தது: கண்ணதாசன்... பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்....வைரமுத்து...வாலி...முக்கியமாய் தாமரை
எழுத்தாளர்:
படித்தது மிக மிகக் குறைவு என்பதால் பெரிதாய் எதுவும் இல்லை...படித்தவரை..
பிடிக்காதது: ரமணிச் சந்திரன். இவரது நாவல் ஒன்றை புதிதாய் வாங்கி மூன்று அத்தியாயங்கள் படித்து விட்டு கிழித்து எறிந்தது ஞாபகம் இருக்கிறது...சாரு நிவேதிதா இவரது எழுத்தை மலம் என்று சொல்லியிருந்தார்...உண்மை தான்...
பிடித்தது: எழுத்து நடைக்காக ஜெய மோகன்...பளீரென்று அறையும் உண்மைக்காக சாரு நிவேதிதா. (நெருங்கிய நண்பர் ஒருவர் எஸ்.ராவின் யாமம் குறித்து பெரிதாய் பேசுவதால் படிக்கலாம் என்றிருக்கிறேன்...எனக்கு பிடிக்காவிட்டால் நண்பரிடமிருந்து காசை திருப்பி வசூலிக்கும் உத்தேசம் இருக்கிறது...காசை ரெடி பண்ணிக்கங்க ஃப்ரண்ட்...)
விளையாட்டு:
பிடிக்காத விளையாட்டு: ஃபுட் பால்...செம போரிங்...
பிடித்த விளையாட்டு: ரக்பி....செம காமெடி :0)))
மனிதர்கள்:
பிடிக்காதது: ஜாதி, மத அபிமானம் உடையவர்கள், கலாச்சார காவலர்கள். வெறியர்கள் என்றில்லை அதன் பிடிப்பு உடையவர்களுடன் கூட என்னால் ஒத்துப் போக முடியவில்லை.... மாட்டுக்கறி/பன்றிக் கறி டேஸ்ட் பிடிக்கவில்லை அதனால் நான் சாப்பிட மாட்டேன் என்பவர்களுடன் என்னால் நெருக்கமாக முடிகிறது...அல்கஹாலின் ஸ்மெல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் குடிக்க மாட்டேன் என்பவர்களை புரிந்து கொள்ள முடிகிறது....ஆனால், நான் இந்து அதனால் மாட்டுக் கறி சாப்பிட மாட்டேன், நான் முஸ்லீம் அதனால் நான் அல்கஹாலை தொட மாட்டேன் என்பவர்களுடன் எனக்கு எந்த ஒட்டுதலும் இல்லை...அவர்களிடமிருந்து விலகவே முயற்சிக்கிறேன்....அதைப் போல சாதியும்....
பிடித்தது:தாய்மையிலிருந்து தமிழ் வரை கேள்வி எழுப்புபவர்கள்...கருத்துக்களில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் வெளிப்படையானவர்கள்....கலாச்சாரம்...பாரம்பரியம் என்று சொல்லப்படுவதையும்(!)... மரபையும் உடைப்பவர்கள்.
பதிவர்கள்:
பிடித்தவர்கள்: நிறையப் பேர்...பெயர்கள் என் ப்ளாக் லிஸ்டில் இருக்கிறது...இதில் விடுபட்ட சில பெயர்கள் உண்டு...விரைவில் சேர்க்க வேண்டும்...குறிப்பாக அய்யனார், நர்சிம்,செல்வேந்திரன்.....
பிடிக்காதவர்கள்: இது பிடித்ததை விட மிக மிக அதிகம்....பிறந்த நாள் வாழ்த்து பதிவர்கள், ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் என்று எழுதுபவர்கள், வெங்கட்ராமன் கிருஷ்ணன் நோபல் வாங்கியதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்கிறான் என்று க்ரெடிட் திருடுபவர்கள்.... என்ன கருமம்டா சாமி!
பெரும்பாலான பதிவுகள் கலாச்சார காவலர்களின் மறு பிரதியாகவே இருக்கின்றன....காந்தி புனிதமானவர், யாமறிந்த மொழிகளில் தமிழ் தான் இனிமை, குடிப்பழக்கம் சமுதாயத்தின் மிகப் பெரிய தீமை, தாய்மை வணங்கப்பட வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்படி நிறைய....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழகு...
இதை தவிர குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பதிவர் பரிசல்காரன்....என்னவோ தெரியவில்லை....இவரது இடுகைகள் நன்றாக கழுவிய எவர்சில்வர் தட்டை நக்கியது போல இருக்கிறது...எந்த உணர்வும் தோன்றுவதில்லை.... அடுத்து பதிவர் ராமலஷ்மி....இவரது கவிதைகள்(?) எட்டாம் வகுப்பு பாடம் போல இருக்கிறது...ஸாரி...லேட்டஸ்ட் கவிதை ஆறாம் வகுப்பு பாடம்....Inane!....அப்புறம் பதிவர் அவிங்க ராசா...இவரது எழுத்தும் கருத்தும் நன்றாக இருந்தாலும் இடுகையில் அடிக்கும் அபாரமான மெகா சீரியல் நாடகத்தனம்....ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா.... நீண்டு கொண்டே போவதால்....இத்துடன்.
(பி.கு. புடுங்கி மாதிரி பேசாத... நீ எழுதுறது என்ன பெரிய மயிரா என்று யாரும் கேட்க தேவையில்லை...அவர்கள் எழுதுவது நன்றாக இல்லை என்று சொன்னால் என் எழுத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தமாகாது...)
50 comments:
For comments....
நீங்க நல்லவரா கெட்டவரா ?
//
நசரேயன் said...
நீங்க நல்லவரா கெட்டவரா ?
//
இரண்டும் நசரேயன்...நாம் எல்லோருமே அப்படித் தானே???
நிறைய ஒத்துப்போகிறேன். பலவற்றில் வேறுபடுகிறேன்.
இப்பவெல்லாம் டெய்லி ஒயின் மட்டும் குடிக்கறேன்.
எது எப்படியோ நீங்க ஃபேமஸ் ஆயிட்டீங்க. இல்லன்னா 1/2 தமிழ் மணத்தில சான்ஸே இல்லை. இந்த விருதை என்னிடமிருந்து தட்டிப் பறித்ததற்கு பாரட்டுகள்.
அதெப்படி சாரு பிடித்தது பிடிக்காதது ரெண்டிலயும் வரார்?
பிடித்தவர் லிஸ்ட்டில் என் பேர் இருக்கு. நன்றி.=))
// குடுகுடுப்பை said...
நிறைய ஒத்துப்போகிறேன். பலவற்றில் வேறுபடுகிறேன்.
//
ரிப்பீட்டேய்..
அப்புறம் பிடிச்ச பதிவர்கள்ல என்னையும் சேத்ததுக்கு நன்றி..
neat... luv it..!
//ஜாதி, மத அபிமானம் உடையவர்கள், கலாச்சார காவலர்கள். வெறியர்கள் என்றில்லை அதன் பிடிப்பு உடையவர்களுடன் கூட என்னால் ஒத்துப் போக முடியவில்லை.... மாட்டுக்கறி/பன்றிக் கறி டேஸ்ட் பிடிக்கவில்லை அதனால் நான் சாப்பிட மாட்டேன் என்பவர்களுடன் என்னால் நெருக்கமாக முடிகிறது...அல்கஹாலின் ஸ்மெல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் குடிக்க மாட்டேன் என்பவர்களை புரிந்து கொள்ள முடிகிறது....ஆனால், நான் இந்து அதனால் மாட்டுக் கறி சாப்பிட மாட்டேன், நான் முஸ்லீம் அதனால் நான் அல்கஹாலை தொட மாட்டேன் என்பவர்களுடன் எனக்கு எந்த ஒட்டுதலும் இல்லை...அவர்களிடமிருந்து விலகவே முயற்சிக்கிறேன்....அதைப் போல சாதியும்....
//
வரிக்கு வரி ரிப்பீட்டு :)
உங்களுக்குப் பிடித்தவர்கள் லிஸ்டில் நான் இருக்கேனோ இல்லையோ...
பிடிக்காதவங்க லிஸ்டில் இல்லை :)
உங்களிடம் எனக்குப் பிடித்தது இந்த வெளிப்படைதான்.
பிடித்தது ரக்பி விளையாட்டு!!!!
ஆஹா...... காலரைத் தூக்கி விட்டுக்கணுமுன்னே காலர் வச்ச ப்ளவுஸ் தச்சுக்கப்போறேன்.:-))))
உங்கள் எழுத்து ஏன் எனக்கு பிடிக்குமென்றால், எழுத்து நடையும், இந்த வெளிப்படையும் தைரியமும் தான்..
கலக்கல்ங்னா.. :)
ஆனா இன்னொரு விஷயம், ஈலி ஈலி மாதிரியான, நான் கடவுள் மாதிரியான, மாதி-வேதாளம் மாதிரியான பதிவுகளை ரொம்ப எழுதுங்க.
சிறுகதைகள் புனைவுகள் கவிதைகள் எல்லாம் நீங்க சிறப்பா எழுதலாம்..
பிடிக்காத மனிதர்களுக்கு - ஒரு பெரிய ரிப்பீட்டு.. :)
ஆனால் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் பதிவு முழுதும் இருக்கு.
குறிப்பாக பாரதி ராஜா பிடிக்கும், இளையராஜா கொஞ்சம் பிடிக்கும், விக்ரம் பிடிக்காது, பரிசல் பிடிக்கும் என சில மாற்றுக்கருத்துக்கள்.
பரிசல் பற்றிய உங்கள் கருத்து கொஞ்சம் காட்டம் அதிகம்..
நேரம் போகலியாக்கும்:)காலையில பல்லு விளக்குனவுடன் ரெண்டு ரவுண்டு,மட்டன் புரியாணி துன்னுன்னா வயிறு மாட்டேன் போ ன்னு சொல்லும்.அதையே மதிய சாப்பாட்டுக்கு இன்னும் கொஞ்சம் கேட்கும் வயிறு.பிடிப்பது பிடிக்காதது என்று எதுவுமில்லை.மனநிலைகள்,சூழல்களைப் பொறுத்தது எல்லாம் என நினைக்கிறேன்.
(முந்தா நாள் வரைக்கும் கருணாநிதியக் கூடத்தான் புடிச்சது!இப்ப...)
இந்தப் பதிவில் சில மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், உங்க கிட்ட பிடிச்சதே அது தாங்கிறதுனால, ஒரு +1 !!!
:)
மற்றபடி, அடித்து ஆடியுள்ளீர்கள் !!!!!!
ஆமா !இவ்வளவும் சொல்லுகிறீரே நீர் யார் ?
மாற்றுக் கருத்துகளுடன் ஆரோக்கிய விவாதம் செய்யும் உங்கள் பாங்கு, தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்....
மேலும் தங்களுடைய வெளிப்படையான போக்கு, எப்போதும் போல் மிளிர்கிறது!
இது ஏதோ, முதுகு சொறிதல் என நினைத்தாலும் அடியேனுக்கு மகிழ்ச்சியே!
நண்பர்கள் கவனத்திற்கு
HOME | Tamil | SEO Submit
Video Search | Top Blogs | Trends | Blog | Video | Images | India News
வெளிபடையான பதிவு!
பிடிக்காத பதிவர்களை தவிர்த்திருக்கலாம்!
இந்த 10 விளையாட்டுல இது வரையில் வந்ததுல இது பெட்டர்.
//மாற்றுக் கருத்துகளுடன் ஆரோக்கிய விவாதம் செய்யும் உங்கள் பாங்கு, தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்....
மேலும் தங்களுடைய வெளிப்படையான போக்கு, எப்போதும் போல் மிளிர்கிறது!//
ரிப்பீட்டு !!!
Periya ithu madiri ilayaraja music pidikathunnu solreye.. ithuvarai oru paattu koodava unaku raja music pidikala...
appadinna nee nijamave waste da..
//
குடுகுடுப்பை said...
நிறைய ஒத்துப்போகிறேன். பலவற்றில் வேறுபடுகிறேன்.
//
அதையெல்லாம் அப்படியே எழுதினால் நல்லாருக்கும் :0)))
//
இப்பவெல்லாம் டெய்லி ஒயின் மட்டும் குடிக்கறேன்.
//
கு.ஜ.மு.க தலைவருக்கே க்ரெடிட் க்ரஞ்சாக்கும்??
//
வானம்பாடிகள் said...
எது எப்படியோ நீங்க ஃபேமஸ் ஆயிட்டீங்க. இல்லன்னா 1/2 தமிழ் மணத்தில சான்ஸே இல்லை. இந்த விருதை என்னிடமிருந்து தட்டிப் பறித்ததற்கு பாரட்டுகள்.
//
எதிர் ஓட்டு விழுந்தா ஃபேமஸ் ஆகிட்டதா அர்த்தமா?? ஆஹா....இது ரொம்ப நல்லாருக்கே :0)))
//
அதெப்படி சாரு பிடித்தது பிடிக்காதது ரெண்டிலயும் வரார்?
//
இல்லியே...பிடிக்காத லிஸ்டில் வர்றது ரமணிச் சந்திரன்...சாரு இல்ல..
//
முகிலன் said...
// குடுகுடுப்பை said...
நிறைய ஒத்துப்போகிறேன். பலவற்றில் வேறுபடுகிறேன்.
//
ரிப்பீட்டேய்..
//
நன்றி முகிலன்...
//
கலகலப்ரியா said...
neat... luv it..!
//
Thank you Priya....
//
எம்.எம்.அப்துல்லா said...
உங்களுக்குப் பிடித்தவர்கள் லிஸ்டில் நான் இருக்கேனோ இல்லையோ...
பிடிக்காதவங்க லிஸ்டில் இல்லை :)
//
ச்சேச்சே...உங்களைப் போய் எப்படி பிடிக்காதவங்க லிஸ்ட்ல சேர்க்க முடியும்?? ப்ளாக் லிஸ்ட்ல இருக்கது கொஞ்சம் தான்...அதுக்காக அதுல இல்லாத ப்ளாக் எல்லாம் பிடிக்காத ப்ளாக் இல்ல :0)))
//
துளசி கோபால் said...
பிடித்தது ரக்பி விளையாட்டு!!!!
ஆஹா...... காலரைத் தூக்கி விட்டுக்கணுமுன்னே காலர் வச்ச ப்ளவுஸ் தச்சுக்கப்போறேன்.:-))))
//
அட....உங்களுக்கும் ரக்பி பிடிக்குமா டீச்சர்???
//
Saravana Kumar MSK said...
உங்கள் எழுத்து ஏன் எனக்கு பிடிக்குமென்றால், எழுத்து நடையும், இந்த வெளிப்படையும் தைரியமும் தான்..
கலக்கல்ங்னா.. :)
//
சரவணா,
குருதிப்புனல்ல கமல் ஒரு வசனம் சொல்வாரு..."தைரியசாலின்னா பயத்தை வெளிய காமிக்காம இருக்கவன்" அப்படின்னு...அது மாதிரி, வெளிப்படை எல்லாம் இல்லை...ஆனால் இருக்க முயற்சிக்கிறேன்...தைரியமும் கூட இல்லை...என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை எழுதி வைக்கிறேன்...அவ்வளவே...:0)))
//
ஆனா இன்னொரு விஷயம், ஈலி ஈலி மாதிரியான, நான் கடவுள் மாதிரியான, மாதி-வேதாளம் மாதிரியான பதிவுகளை ரொம்ப எழுதுங்க.
சிறுகதைகள் புனைவுகள் கவிதைகள் எல்லாம் நீங்க சிறப்பா எழுதலாம்..
//
என்கரேஜ்மென்ட்டுக்கு நன்றி...எதுனா தோணிச்சினா எழுதிடலாம்...:0)))
//
Saravana Kumar MSK said...
ஆனால் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் பதிவு முழுதும் இருக்கு.
குறிப்பாக பாரதி ராஜா பிடிக்கும், இளையராஜா கொஞ்சம் பிடிக்கும், விக்ரம் பிடிக்காது, பரிசல் பிடிக்கும் என சில மாற்றுக்கருத்துக்கள்.
//
மாற்றுக் கருத்துக்கள் இருப்பது மிக நல்ல விஷயம்...ஒருவர் சொல்வதை அப்படியே ஒப்புக் கொண்டால் அங்கு ஒருவர் மட்டுமே சிந்திக்கிறார் என்று அர்த்தம்....உங்கள் மாற்றுக் கருத்துக்கள் வரவேற்புக்குரியது...
//
பரிசல் பற்றிய உங்கள் கருத்து கொஞ்சம் காட்டம் அதிகம்..
//
அப்படியா...கருத்தில் மாற்றமில்லை...ஆனால் காட்டமாக சொல்ல வேண்டும் என்று எண்ணமில்லை...அப்படி தோன்றும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...
//
ராஜ நடராஜன் said...
நேரம் போகலியாக்கும்:)காலையில பல்லு விளக்குனவுடன் ரெண்டு ரவுண்டு,மட்டன் புரியாணி துன்னுன்னா வயிறு மாட்டேன் போ ன்னு சொல்லும்.அதையே மதிய சாப்பாட்டுக்கு இன்னும் கொஞ்சம் கேட்கும் வயிறு.பிடிப்பது பிடிக்காதது என்று எதுவுமில்லை.மனநிலைகள்,சூழல்களைப் பொறுத்தது எல்லாம் என நினைக்கிறேன்.
//
ம்ம்ம்க்கும்...காலையில எந்திரிச்சி காஃபி குடிக்க கூட டைம் இல்ல...பாதி காஃபியை வச்சிட்டு ஓட வேண்டியதாயிருக்கு...இதுல எங்க இருந்து மட்டன் பிரியாணி?? அதுவும் ரெண்டு ரவுண்டு??? வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க பாஸ்...:0)))
ஆனா, நீங்க சொல்றது உண்மை தான்...மாறிக் கொண்டிருப்பதே மனித மனம்...சந்தர்ப்பம் சூழல் கூட தேவையில்லை...நாளையே கூட எனக்கு சிம்புவை பிடித்து போகலாம்...:0)))
//
பதி said...
இந்தப் பதிவில் சில மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், உங்க கிட்ட பிடிச்சதே அது தாங்கிறதுனால, ஒரு +1 !!!
:)
//
நன்றி பதி...மாற்று கருத்துக்கள் தான் நம் ஒவ்வொருவரின் அடையாளமே இல்லியா :0)))
//
malar said...
ஆமா !இவ்வளவும் சொல்லுகிறீரே நீர் யார் ?
//
வாங்க மலர்...
உங்கள் கேள்வி கொஞ்சம் புரியவில்லை...தனக்கு பிடித்தது/பிடிக்காதது பற்றி சொல்ல யாராக இருக்க வேண்டும் எதிர்பார்க்கிறீர்கள்?? இல்லை யாரெல்லாம் இதைப் பற்றி சொல்லலாம் என்று ஏதேனும் விதிமுறை இருக்கிறதா??
உங்களுக்கு பதில் சொல்வதென்றால்...நான் யாருமில்லை.....இந்த பூமியில் பிறந்தவர்கள் சில நூறு கோடி...மண்ணாகி போனவர்கள் சில நூறு கோடி....எந்த அடையாளமும் இல்லாத அவர்களில் நானும் ஒருவன்....அவ்வளவே....
//
பழமைபேசி said...
மாற்றுக் கருத்துகளுடன் ஆரோக்கிய விவாதம் செய்யும் உங்கள் பாங்கு, தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்....
மேலும் தங்களுடைய வெளிப்படையான போக்கு, எப்போதும் போல் மிளிர்கிறது!
//
நன்றி தல...மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்...தொடர்ந்து முயற்சிக்கிறேன்....
//
இது ஏதோ, முதுகு சொறிதல் என நினைத்தாலும் அடியேனுக்கு மகிழ்ச்சியே!
//
முதுகு சொறிதல்?? யார் நீங்களா?? உங்கள் பதிவை படித்து வருபவர்களுக்கு நீங்கள் யாருக்கும் முதுகு சொறிவதில்லை என்பது தெரியும்...
ஒரு சிறிய உதாரணம்....http://maniyinpakkam.blogspot.com/2009/10/blog-post_12.html
//
வால்பையன் said...
வெளிபடையான பதிவு!
//
நன்றி வால்...
//
பிடிக்காத பதிவர்களை தவிர்த்திருக்கலாம்!
//
உண்மை தான் பாஸ்....ஆனால், கடவுளிலிருந்து கருணாநிதி வரை, இடி அமீனிலிருந்து இளையராஜா வரை நாம் எல்லாரும் விமர்சித்துக் கொண்டு தான் இருக்கிறோம்...பதிவர்களை தனிப்பட்ட முறையில் இல்லாது அவர்களின் எழுத்தை ஏன் விமர்சிக்க கூடாது ...பாலிஷாக போகும் நாகரீகமா இல்லை இளையராஜாவோ இடி அமீனோ பதில் இடுகை இடமாட்டார்கள்...ஆனால் பதிவர்கள் பதில் இடுகை இடுவார்கள்...தேவையில்லாத பிரச்சினை என்ற எண்ணமா....மற்ற எல்லா இடங்களையும் விட, எழுத்து/கலை என்று வரும்போது விமர்சனங்கள் அதிகம்...அதனால் எனக்கு தோன்றியதை சொல்லி விட்டேன்...
தவிர கவனிக்க வேண்டியது...இளையராஜாவை பிடிக்கவில்லை, த்ரிஷாவை பிடிக்கவில்லை என்பது என் பிரச்சினையே தவிர அவர்களின் பிரச்சினை இல்லை...எனக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களுக்கு திறமையில்லை என்றோ அவர்களை யாருக்கும் பிடிக்காது என்றோ அர்த்தமில்லை...எனக்கு பிடிக்கவில்லை...அவ்வளவு தான்...
இதே அளவுகோல் பரிசலுக்கும், ராமலஷ்மிக்கும், அவிங்க ராசாவுக்கும் பொருந்தும்...
in fact இவர்களை இளையராஜா/பாரதிராஜா ரேஞ்சுக்கு கொண்டு போயிருக்கிறேன் என்பதையும் கவனிக்கலாம் :0)))
//
Mahesh said...
இந்த 10 விளையாட்டுல இது வரையில் வந்ததுல இது பெட்டர்.
//மாற்றுக் கருத்துகளுடன் ஆரோக்கிய விவாதம் செய்யும் உங்கள் பாங்கு, தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்....
மேலும் தங்களுடைய வெளிப்படையான போக்கு, எப்போதும் போல் மிளிர்கிறது!//
ரிப்பீட்டு !!!
//
நன்றி மகேஷ்....
//
Anonymous said...
Periya ithu madiri ilayaraja music pidikathunnu solreye.. ithuvarai oru paattu koodava unaku raja music pidikala...
appadinna nee nijamave waste da..
//
அனானி,
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் எந்த காரியமும் பிடிக்கவில்லை என்ற அர்த்தமில்லை...சில பிடிக்கலாம், பல பிடிக்கவில்லை என்பது தான் அர்த்தம்...
அது இருக்கட்டும்....இளையராஜாவின் எந்த இசையுமே பிடிக்காததால் ஒருவர் வேஸ்ட் ஆகிவிட முடியாது...
(உங்களுக்கு எதிர்கருத்துக்கள் இருக்கலாம்....நான் எழுதியது எதுவுமே பிடிக்காது இருக்கலாம்...தப்பே இல்லை...ஆனால் போடா வாடா என்பது உங்களின் தரம் எங்கே இருக்கிறது என்று உங்களைத் தான் கீழே இழுக்கிறது...என்னையல்ல!)
எங்க 'நாட்டு' நேஷனல் கேம் 'ரக்பி'.
சுருக்கமாச் சொன்னா இந்தியாவில் க்ரிக்கெட் போல!
என்ன ஒன்னு......இந்த ப்ளேயர்ஸ் எல்லாருக்கும் ஹீரோ வொர்ஷிப், தலையிலே தூக்கிட்டு ஆடுறது, அவுங்களும் தன்னை ஒரு 'சாமி' லெவலுக்கு நினைக்கிறது இப்படி பந்தா இல்லாம எளிமையா இருப்பாங்க.
முக்கியமா ஒன்னரை மணி நேரத்துலே ஆட்டம் க்ளோஸ்:-)
i have the same opinion on Nadigar, manidhargal, arasiyalvathi & padalaasiriyar.
but differ in other sections :)
what is it that you don't like in Ilayaraja? His music or Him as a person?
//Anonymous said...
Periya ithu madiri ilayaraja music pidikathunnu solreye.. ithuvarai oru paattu koodava unaku raja music pidikala...
appadinna nee nijamave waste da..
//
சொந்தப் பெயரில் விமர்சனம் செய்யும் மனிதனின் பதிவில் அனானி பின்னூட்டம். என்ன கொடுமை சரவணன் இது :(
அட ஆமாம். சாரு நிவேதிதா இவரது எழுத்தை மலம் என்று சொல்லி இருந்தார்னு படிச்சிட்டு அப்படி போட்டு விட்டேன்.
இந்தப்பதிவுக்கு பின்னூட்டமோ, உங்களுக்கு பதில் சொல்வதிலோ எனக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லை. இருப்பினும் நான் மிக மதிக்கும் பதிவர்கள் சிலரின் மதிப்பை நீங்கள் பெற்றிருப்பது இங்கிருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிகிறது. மகிழ்ச்சி. அவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் என் கருத்தை தெரியப்படுத்த விரும்பி இந்தப் பின்னூட்டம்.
'அழுக்கின் அழகு' சிறுகதை ஒரு ஃபார்மெட்டுக்குள் எழுதப்பட்ட கதை. மேலும் அந்தக்கதையின் முடிவில் பின்குறிப்பாக..
//அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன்.//
என்ற என் கருத்தையும் தந்துள்ளேன். எல்லா படைப்புகளுமே படைப்பாளியின் முழு தத்துவார்த்தத்துடன் மலர்ந்துவிடுவதில்லைதான். எழுத்துக்களும் பல சமயங்களில் அரசியல் சாயம் பூசிக்கொண்டுதான் எழுதப்படுகின்றன. அதையும் மீறி அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தக்கதையை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடும்தான். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ள பத்தியில் எவற்றின் தொடர்ச்சியாக என்னை கலாச்சார காவலன் என்று சித்தரித்திருக்கிறீர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
//பெரும்பாலான பதிவுகள் கலாச்சார காவலர்களின் மறு பிரதியாகவே இருக்கின்றன....காந்தி புனிதமானவர், யாமறிந்த மொழிகளில் தமிழ் தான் இனிமை, குடிப்பழக்கம் சமுதாயத்தின் மிகப் பெரிய தீமை, தாய்மை வணங்கப்பட வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்படி நிறைய....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழகு..//
இது உங்கள் கூற்று. இதன் ஒரு வரியை உங்களுக்கு எதிராக திருப்பினால் எவ்வளவு அநாகரீகமாக மாறிவிடும்.? எவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்ற பொறுப்பில்லாத உங்களை என்ன சொல்வது நான்? அதையும் தவிர்த்து பெண்கள் உடைகளை திருத்தமாக அணிவது என்ற கருத்தை நான் சொல்லவந்ததாகவும், அது கலாச்சார காவலர்த்தனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட மேற்கூறிய பிற குற்றச்சாட்டுகளுக்கு என் பதிவுகளிலிருந்து எடுத்துக்காட்டு தரமுடியுமா? அல்லது பெண்கள் விஷயம் மட்டும்தான் என்னுடையது, பிற பிறரைப்பற்றியது எனில் அவற்றின் இணைப்புகளையும் தரவேண்டியதுதானே?
மாற்றுக்கருத்தும், பிடிக்காதவற்றைச் சொல்வதும் இயல்பானது என்றே நான் எண்ணுகிறேன். அதற்கு அனைவருக்கும் உரிமையிருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும். சரியான வாதம் இருக்கவேண்டும். சாட்டப்பட்டவர் வெட்கி ஒத்துக்கொள்வதாக இருக்கவேண்டும்.
மாறாக என் குறித்தும், நண்பர் பரிசல் குறித்தும் நீங்கள் சொல்வதைப்போல இருக்கலாகாது என நான் நினைக்கிறேன்.
பரிசல்காரன் மிகக்குறுகிய காலத்தில் 500க்கும் அதிகமான ஃபாலோயர்களையும், 3 லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் பெற்ற புகழ்மிக்கவர். இது அவரது எழுத்தால் எத்தனை பேரை கவர்ந்திருக்கிறார் என்பதைக்குறிக்கிறது. அத்தனை பேரைக்கவர்ந்த எழுத்து உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அதை இப்படித்தான் பதிவு செய்வதா.? நீங்கள் எழுதிய வரிகளில் கண்ணியமோ, குறைந்த பட்ச நியாயமோ இருப்பதாகப் படுகிறதா உங்களுக்கு.?
இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம்.
வாழ்த்துகள்.!
(இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.)
அன்புள்ள அதுசரி,
எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுத முடியாதுதான். இங்கே நீங்கள் கூறியிருப்பது ஏற்கனவே என் சுதந்திரதினப் பதிவில் நீங்கள் முன் வைத்த் கருத்துதான். அதை பிரசுரிக்கவும் செய்துள்ளேன். என்னை பெரிய கவிஞர் என நான் சொல்லிக் கொள்ளவில்லை. எனது பதிவொன்றிலேயே ‘நான் எழுதுபவையும் கவிதைகள்தானா’ எனத் திகைத்து நின்ற போது ‘அப்படியெல்லாம் யோசித்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவே முடியாது’ என நண்பர்கள் தந்த ஊக்கத்தில்தான் தொடர்ந்து எழுதினேன் என்றே குறிப்பிட்டிருப்பேன். உங்கள் போன்ற சிலருக்கு என் படைப்புகள் அத்தனை கஷடத்தைக் கொடுத்திருப்பதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதையெண்ணி என் எழுத்துக்கு எந்த வேகத் தடையும் விதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
பிரபலங்களோடு சேர்த்து பேசியிருப்பதாகப் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு பேச்சுக்கு சொல்ல வேண்டுமெனில் நானும் ஒரு பிரபலத்தை உதாரணப் படுத்துகிறேன். எனிட் ப்ளைட்டனை ஆரம்ப காலத்தில் பிபிசி குழந்தைகளுக்கு எழுதும் இவரைப் பேட்டி காண்பதா என ஒதுக்கியதைப் பற்றி ஒரு செய்தியை சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படித்தேன். அதற்காக அவர் எழுதுவதை நிறுத்தி விடாமல் தன் பாணியிலேயே தொடர்ந்து, வெற்றியும் கண்டார். வலைப்பூவின் கட்டற்ற சுதந்திரம் எப்படி விரும்பியதைப் பதிய வழிவகுத்திருக்கிறதோ அதே போல விரும்புவதைச் சுட்டி வாசிக்கவும் சவுகரியம் தந்துள்ளது. விருப்பமற்ற பின் உங்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாமென அக்கறையின்பால் கேட்டுக் கொள்கிறேன்.
விமர்சனங்கள் என்றைக்கும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் இது போன்ற விமர்சனங்களா என்று என்வரையில் எனக்குத் தெரியவில்லை. எனது சில கவிதைகளை [அப்படி நான் கூறிக் கொள்பவற்றை] ‘இணையத்திலிருந்து’ என்ற குறிப்புடன் செய்தித்தாள்கள் சிலவற்றின் வாரமலர்களில் அவர்களாகவே எடுத்து வெளியிடுகிறார்கள். இணைய இதழ்களும், பத்திரிகைகளும் என் படைப்புகளை அங்கீகரித்தே வருகின்றன. (இதை அச்சீவ்மெண்ட் என்றும் சொல்ல வரவில்லை). எளிமைக்காகவே என் எழுத்துக்களை விரும்புபவரும் உள்ளார்கள். உங்களுக்குப் பிடிக்காததால் எல்லோருக்கும் பிடிககாதென அர்த்தமில்லை என நீங்களே சொன்னபடி, பிடித்த அந்த வெகு வெகு சிலருக்காக மட்டும் தொடர்கிறேன். என்றைக்கேனும் என் படைப்புகளில் சில பள்ளிப்பாடத் திட்டத்தில் வருமேயானால் அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையுமே கொள்வேன்:)! மிக்க நன்றி.
அன்புடன்
ராமலக்ஷ்மி
Adhi and Ramalakshmi had left a comment on this post, but dont know what happened to their comments.
I am postings their comments from my email archive. Will reply to their comments as soon as possible.
Guess, there could be some problem with Google, as it throws error.
In anycase, their comments are not lost and will be resurrected from the archive
யம்மா..
ஏனப்பா இப்படி?
இளைய ராஜாவுமா?
அப்போ பிடிக்காத லிஸ்டில் என் பேரும் வந்துருக்கணுமே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
மன்னிக்கவும். வேலைப்பளுவினால் இந்தப் பதிவு பற்றி இப்போதுதான் அறிந்தேன். என் எழுத்து பற்றிய உங்கள் மதிப்பீடு குறித்து, எனக்கெந்த வருத்தமும் இல்லை. உங்கள் உள்ளத்தில் உள்ளது உள்ளபடி சொன்ன பாங்குக்கு என் சல்யூட்!
முடிந்தவரை, திருத்திக் கொள்ள முயல்கிறேன் பாஸூ!!!
//
Shrek said...
i have the same opinion on Nadigar, manidhargal, arasiyalvathi & padalaasiriyar.
but differ in other sections :)
what is it that you don't like in Ilayaraja? His music or Him as a person?
//
Thanks for visiting Shrek...Any difference in opinion is more than welcome ;0)))
Regarding Ilaiyaraja, no dont have anything against Ilaiyaraja as a person, neither I can have anything. But I do have certain things against the musician Ilaiyaraja.
Its difficult to explain here, probably I will write a post later.
Thank you.
//
பிரியமுடன்...வசந்த் said...
யம்மா..
ஏனப்பா இப்படி?
இளைய ராஜாவுமா?
அப்போ பிடிக்காத லிஸ்டில் என் பேரும் வந்துருக்கணுமே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
வாங்க வசந்த்...
ஆனா, எனக்கு உங்க பின்னூட்டம் புரியலை... இளையராஜா எனக்கு பிடிக்காது உண்மை...ஆனா, அதுக்கு உங்க பேரு ஏன் பிடிக்காத லிஸ்ட்ல வரணும்?
உங்களுக்கு இளையராஜாவை பிடிக்கலாம்...ஆனா, இளையராஜாவை பிடிச்சவங்க எல்லாரையும் எனக்கு பிடிக்காதுன்னு எப்படி சொல்றது?? :0)))
//
பரிசல்காரன் said...
மன்னிக்கவும். வேலைப்பளுவினால் இந்தப் பதிவு பற்றி இப்போதுதான் அறிந்தேன். என் எழுத்து பற்றிய உங்கள் மதிப்பீடு குறித்து, எனக்கெந்த வருத்தமும் இல்லை. உங்கள் உள்ளத்தில் உள்ளது உள்ளபடி சொன்ன பாங்குக்கு என் சல்யூட்!
முடிந்தவரை, திருத்திக் கொள்ள முயல்கிறேன் பாஸூ!!!
//
நன்றி பரிசல்...
நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது என்பதால் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமிருப்பதாக நான் நினைக்கவில்லை :0)))
உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது சொன்னீங்க. சரி, ஆனா மத்தவங்களை பத்தி கேவலமா எழுதறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களை சொல்லியும் குத்தமில்லை, இது தமிழனின் பிறவி குணம்.
Post a Comment