Sunday 18 October 2009

ஈலி ஈலி லாமா சபக்தானி.....



அதிகாலையில் எழுந்து வழக்கம் போல முகம் துடைத்து
கட்டாத வீட்டு லோன்...
திவாலான என் பென்ஷன் ஃபண்ட்...
தள்ளிப் போன மகளின் காலேஜ் ஃபீஸ்...
விவாகரத்து செய்து காம்பன்சேஷன் கேட்கும் முன்னாள் மனைவி..
விற்க முடியாத பழைய ஃபோர்டு கார்...
திவாலாக காத்திருக்கும் என் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்...
கீழே கீழே போகும் ஸ்டாக் மார்க்கெட்....

துடைக்க முடியாத முந்திய இரவுகளின் நினைவுகள் அலையடிக்க....
நாளான ஸ்காட்ச் விஸ்கி போல சிவப்பான கண் துடைத்து...

நேற்றைக்கும் அதன் முந்திய நாளுக்கும்
சென்ற வாரத்திலும் சென்ற மாதத்திலும்
செய்தது போல பல் துலக்கி....குளித்து....
அனிச்சையாய் பிபிசி நியூஸ் பார்த்து...
காய்ந்து போன பிரட்... ஆம்லெட் போட நேரமில்லை....

லண்டனின் அதிகாலை குளிரில் கை விறைத்து
வேகமாய் பறக்கும் கோழி பண்ணை போல‌
நிற்காமல் செல்லும் ட்யூப் பிடித்து...

விரும்பாத காதலாய் முகத்தில் முகம் உரசி
என் கழுத்தில் எவனோ எவளோ உதடு உரசி
எதேச்சையாய் பின்புறம் தழுவும் உடல் உதறி....

எத்தனை செய்தாலும்.....
அன்று நிச்சயமாய் ஒரு சந்தோஷம்...
இன்றைக்கு வெள்ளிக் கிழமை....

வெள்ளிக் கிழமை இரவுகள்....
க‌டவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவை....

============================

விழிப்பு....பயணம்...வேலை...உணவு...முயக்கம்...தூக்கம்...
எந்திரமாய் வாழ்க்கை....தீராத கவலைகள்....
கவலை சூழ் உலகில் மதுவை கண்டுபிடித்தவன் தேவன்....
அதை கடன் அட்டைக்கு விற்பவன் அதி தேவன்...

எல்லார் கையிலும் மதுக் கிண்ணம்....
பதினெட்டு...இருபது...
இருபதும் இன்றி முப்பதும் இன்றி இடையில்...
முப்பது தாண்டி...நாற்பது தாண்டி....

கொண்டாடத்தில் சில....
துக்கம் மறைக்க....மறுக்க...தூக்கம் பிடிக்க சில...

முற்றிலும் மறைக்கும் ஜீன்ஸ் பேண்ட்கள்...
கடவுள் போல் இருப்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் உள்ளாடைகள்....
இல்லாத‌தை இருப்பதாக காட்டும் மந்திரவாதிகள்...

தோள் தட்டி அழைக்கும் தேவதைகள்....
சிரிப்புடன் மறுக்கும் அழகான ராட்சசிகள்...

அவனவன் விருப்பத்திற்கு அவனவன் பார்க்க கடவன்.....
ஏவாளை ஜெயித்த ஆதாம் எவன்....

=====================

முகம் முழுதும் வியர்த்து...
கையில் கோப்பை ஏந்தி....
சில மணிநேரம் கவலை மறந்து....
என்னவென்றே புரியாத பாடலுக்கு ஆடும் போது....

ட்ட்ட்டொம்ம்ம்ம்...

சிந்திக்கும் நேரமில்லை....ஆனாலும்...
குடி போதையில் எவரேனும் குப்புற விழந்திருக்கலாம்...

சில விநாடி புரியவில்லை...என்னவென்று....
புரிந்த போது...

என்னை சுற்றிலும் புகை...
தேவதைகள் இருந்த இடமெங்கும் நெருப்பு...

என் கைகள்...என்னை விட்டு தள்ளி...

எரிந்து கொண்டிருந்தது...

இல்லை....இன்றைக்கு இல்லை....
நான் இன்றைக்கு சாக....விரும்பவில்லை...
அதுவும் நிச்சயமாக....
தோல் உரிக்கப்பட்ட கோழி போல....
நெருப்பில் வெந்து சாக எனக்கும் விருப்பமில்லை....

கண் எரித்த புகை விலக்கி பார்த்த போது....
கால தாமதம்....

காலையில் நான் போட்டிருந்த கறுப்பு பேண்ட்...
முந்திய இரவு பாலீஷ் செய்த ஷூக்கள்....
இடுப்புக்கு கீழ் இல்லை....எதுவும் இல்லை...
என் கால்கள் என்னிடம் இல்லை....

உள்ளும் புறமும் ஒன்றாக...
என் ரத்தம் உள் மட்டுமின்று வெளியிலும்.....
நகர முடியாது என் மீது விழுந்து கிடக்கும் உடல்கள்....
சென்ற வினாடியில் தேவதைகள்....
இந்த வினாடி அழுத்தும் பிணங்கள்....

======================

கட்டாத வீட்டு லோன்...
திவாலான என் பென்ஷன் ஃபண்ட்...
தள்ளிப் போன மகளின் காலேஜ் ஃபீஸ்...
விவாகரத்து செய்து காம்பன்சேஷன் கேட்கும் முன்னாள் மனைவி..
விற்க முடியாத பழைய ஃபோர்டு கார்...
திவாலாக காத்திருக்கும் என் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்...
கீழே கீழே போகும் ஸ்டாக் மார்க்கெட்....

கைகள் சிதறி கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி... மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

இராக் படையெடுப்புக்குக்கு...
எங்கள் பதில்....
ஏதேனும் காட்டுமிராண்டி கும்பல் நாளை குதூகலிக்கலாம்...

ஐந்து வயது தானென்றாலும்
பள்ளிக்கு போனால்...
பெண் முகத்தில் ஆசிட்
என்ற தலிபான்கள்....
ஆஃப்கனை விட்டு வெளியேறாவிட்டால்....
அறிக்கை விட்டு கொக்கரிக்கலாம்...

ஆஃப்கன் பிரச்சினையை எழுதினீர்களா...
இராக் ஆக்கிரமிப்பை எழுதினீர்களா...
குஜராத் கலவரத்தை எழுதினீர்களா...
பார்ப்பன பூனூல் தெரிகிறது...
உன் கொண்டை நீ எங்கு போனாலும் தெரிகிறது....
எல்லா குண்டுகளையும் காமன்மேன் தலையில் போடு...

சுகுணா திவாகர்கள் நாளை இடுகையிடலாம்....
முற்போக்குவாதிகள் நாளை என் மரணத்துக்கு காரணம் சொல்லலாம்.....
நியாயம் கற்பிக்கலாம்...
சூடு பறக்க தங்கள் வாதத் திறமைகளை நிரூபிக்கலாம்...
இன்ஷா மார்க்ஸ் என்று தன்னடக்கம் காட்டலாம்...

ஆனாலும்...

ஆஃப்கனில் அமெரிக்க படைகள் நுழைய நான் ஆணையிடவில்லை...
இராக் செல்லும் முன் என்னை யாரும் கேட்கவில்லை...
நான் பிறந்த மூன்றாம் நாள் செத்துப் போன தாய் மீது சத்தியமாக‌...
குஜராத் கலவரங்களுக்கு நான் காரணமில்லை...
பிறந்த நாள் முதல் இதுவரை நான் மும்பை போனதேயில்லை.....

==============

கைகள் சிதறி கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி...
மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

பதினொரு வயதில் காஜா பீடி...
காசு கிடைத்தால் வில்ஸ் ஃபில்டர்...
பள்ளி எஜுகேஷனல் டூர்... பொய் சொல்லி...பெயர் தெரியாத விஸ்கி...
ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எட்டாம்கிளாஸ் பெண்ணுக்கு லவ் லெட்டர்.... பத்தாவது படிக்கும் போது அஞ்சரைக்குள் வண்டி...

க‌ஷ்டப்பட்டு ப்ளஸ்டூ...கடினமாய் படித்து என்ட்ரன்ஸ்...
கடும் போட்டியில் எஞ்சினியரிங் காலேஜ்....
சின்ன சின்னதாய் கலவரங்கள்...

ங்கோத்தா சொல்லுடா....ம்மாள சொல்லுடா....
சின்ன சின்னதாய் ஹாஸ்டல் ராக்கிங்....

நீ இல்லன்னா நான் செத்துருவேண்டி...
காதலித்து....
அப்பனின் ஜாதி வெறியால்....
எவனுக்கோ மனைவியாய் போய்....
என் பெயரை மகனுக்கு சூட்டியவளிடம்
சின்ன சின்ன பொய்கள்.....

====================================

கைகள் சிதறி..... கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி...
மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

எல்லாம் ஞாபகம் வந்து....

கடைசியில் ஒன்று...
மறந்தே போனது...

ஈலீ...ஈலீ...லாமா சபக்தானி......
=================================

ஈலி ஈலி லாமா சபக்தானி....ஜீஸஸ் க்ரைஸ்ட் கடைசியாக சொன்ன ஹீப்ரு வாசகங்கள் என்று நம்பப்படுகிறது....இதற்கு அர்த்தம் "என் தந்தையே...என் தந்தையே....ஏன் என்னை கைவிட்டீர்"....

(You dont know NewYork Love....Let me show you....உற்சாக பந்தாய்....துக்கத்தில் அழும்போது இறுக்கி அணைக்கும் காதலியாய்....One day I'll be running this bank...and...you'll be likcking my foot....You Bastard.....Fucking Bastard....Nil Carboarandom Illegitmiti....But I tolerate you....just for your stupid smile.....பெண்களின் வலிமைக்கு உதாரணமாய்....எல்லாம் சொல்லி....எந்த கனவும் நனவாகாமல்.....ந்யூயார்க் ட்வின் டவர் தாக்குதலில் கருகி உயிர் இழந்த என் உயிர்த்தோழி Kirstine McKinnessக்கு அவளது பிறந்த நாளில் இந்த எழுத்து சமர்ப்பணம்....

I promise you this Kirstie....The fight with Taliban is not a fight between Taliban and America...It's a fight between Taliban Assholes and the human civilisation....We shall not stop until the Taliban and like minded assholes are annihilated!

24 comments:

அது சரி(18185106603874041862) said...

just to receive comments....

பழமைபேசி said...

அண்ணாச்சி, நான் இப்ப கடமைய ஆற்றிக்கிறேன்!

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
அண்ணாச்சி, நான் இப்ப கடமைய ஆற்றிக்கிறேன்!

//


நன்றி....நீங்க என்ன நினைக்கறீங்கன்னு சொல்லலாமே....

பழமைபேசி said...

க்கும், நீங்க எதுக்குமே காரணம் இல்லைன்னு சொல்லிட்டீங்க... அதுக்கு அப்புறம் நான் சொல்ல வேற என்ன இருக்கு? அய்ய்... எப்படியோ, நான் ஒப்பேத்திட்டேன்...

பழமை, நீ பலே ஆள்றா... போயிட்டே இரு போ....

Mahesh said...

நெம்ப நாள் கழிச்சு வாரதுக்கு மாப்பு கேட்டுக்கறேன்... சோலி சாஸ்திண்ணே :(

9/11 க்கு 10/18 ல கவிதையா? நடக்கட்டும்...

vasu balaji said...

/ஈலி ஈலி லாமா சபக்தானி..../

இது. இது மட்டுமே ஒவ்வொரு மனிதனுக்கும் விதித்ததோ. ஒவ்வொரு துக்கத்துக்கு பின்னும் இப்படித்தான் புலம்பி மரிக்க வேண்டும் போலும்.

/ஆஃப்கன் பிரச்சினையை எழுதினீர்களா...
இராக் ஆக்கிரமிப்பை எழுதினீர்களா...
குஜராத் கலவரத்தை எழுதினீர்களா...
பார்ப்பன பூனூல் தெரிகிறது...
உன் கொண்டை நீ எங்கு போனாலும் தெரிகிறது....
எல்லா குண்டுகளையும் காமன்மேன் தலையில் போடு.../

Torpedo மாதிரி அப்பாவிகளையே தேடிக் கொல்லும் ஆயுதங்கள் கண்டு பிடித்திருப்பார்கள் போலும்.

/சென்ற வினாடியில் தேவதைகள்....
இந்த வினாடி அழுத்தும் பிணங்கள்..../

கோரத்தை இதை விட சுருக்கமாய் சொல்ல முடியாது.

/ஆஃப்கனில் அமெரிக்க படைகள் நுழைய நான் ஆணையிடவில்லை...
இராக் செல்லும் முன் என்னை யாரும் கேட்கவில்லை...
நான் பிறந்த மூன்றாம் நாள் செத்துப் போன தாய் மீது சத்தியமாக‌...
குஜராத் கலவரங்களுக்கு நான் காரணமில்லை...
பிறந்த நாள் முதல் இதுவரை நான் மும்பை போனதேயில்லை.....
/

ஏதோ ஒரு கேவலம் கெட்ட நாய்க்குத் தவறாமல் ஓட்டு போட்டது தவிர.

/ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது..../

நுறையீரல்?
/You dont know NewYork Love....Let me show you....உற்சாக பந்தாய்....துக்கத்தில் அழும்போது இறுக்கி அணைக்கும் காதலியாய்....One day I'll be running this bank...and...you'll be likcking my foot....You Bastard.....Fucking Bastard....Nil Carboarandom Illegitmiti....But I tolerate you....just for your stupid smile.....பெண்களின் வலிமைக்கு உதாரணமாய்....எல்லாம் சொல்லி....எந்த கனவும் நனவாகாமல்.....ந்யூயார்க் ட்வின் டவர் தாக்குதலில் கருகி உயிர் இழந்த என் உயிர்த்தோழி Kirstine McKinnessக்கு அவளது பிறந்த நாளில் இந்த எழுத்து சமர்ப்பணம்..../

அந்தத் தேவதைக்கு என் வணக்கங்களும்.

இத்துணை ஆக்ரோஷமான ஒரு வெளிப்பாட்டை தந்தமைக்கு இந்த மூடில் சரியில்லையெனினும் சொல்லியாக வேண்டும். பாராட்டுகளும், நன்றியும்.

Unknown said...

கவிதை அருமையாக இருக்கிறது.

ஆஃப்கனுக்கும் நாம் படை அனுப்பவில்லை, கோத்ரா ரயிலிலும் நாம் தீ வைக்க வில்லை. அப்படியிருக்க, பூணுலும் தாடியும் தெரிவது எதற்காக என்று கேட்டிருக்கலாம். ஒரு பக்கமாக இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.

குடுகுடுப்பை said...

உங்கள் எண்ணம் ஈடேற மனிதனின் பகுத்தறிவு பக்கசார்பாக செயல்படாமல் மக்கள் சார்பாக செயல் பட வேண்டும் என் பகுத்தறிவு சொல்கிறது.

தாலிபானிசம் வெளியிலிருந்து ஒழிக்க முடியுமா? உள்ளிருந்து ஏற்படும் மக்களின் எழுச்சியே அதனை தோற்கடிக்கமுடியும்.

ஆனால் அமெரிக்காவால் மட்டுமே இப்போதைக்கு அடக்கமுடியும் இவர்களை.

குடுகுடுப்பை said...

கொமெண்டுகளை பெற.

கலகலப்ரியா said...

.. am searching for words...

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
க்கும், நீங்க எதுக்குமே காரணம் இல்லைன்னு சொல்லிட்டீங்க... அதுக்கு அப்புறம் நான் சொல்ல வேற என்ன இருக்கு? அய்ய்... எப்படியோ, நான் ஒப்பேத்திட்டேன்...

பழமை, நீ பலே ஆள்றா... போயிட்டே இரு போ....

//

எஸ்கேப் ஆயிட்டீங்க...இருக்கட்டும்....

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
நெம்ப நாள் கழிச்சு வாரதுக்கு மாப்பு கேட்டுக்கறேன்... சோலி சாஸ்திண்ணே :(

9/11 க்கு 10/18 ல கவிதையா? நடக்கட்டும்...

//

வாங்க மகேஷ்....டைம் கிடைக்கிறப்ப வாங்க...

9/11 க்கு 10/18 ல....எழுத வேணாம்னு தான் நினைச்சேன்...என்னவோ கோபம்...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...

அந்தத் தேவதைக்கு என் வணக்கங்களும்.
//

நன்றி வானம்பாடிகள் ஸார்....

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
கவிதை அருமையாக இருக்கிறது.

ஆஃப்கனுக்கும் நாம் படை அனுப்பவில்லை, கோத்ரா ரயிலிலும் நாம் தீ வைக்க வில்லை. அப்படியிருக்க, பூணுலும் தாடியும் தெரிவது எதற்காக என்று கேட்டிருக்கலாம். ஒரு பக்கமாக இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.

//

வாங்க முகிலன்....

//
ஆஃப்கனுக்கும் நாம் படை அனுப்பவில்லை
//

"நாம்" என்று நீங்கள் இந்தியாவை சொல்வதாக நினைக்கிறேன்....ஆனால் கவிதையில் வரும் "நான்" நானல்ல...அல்லது நான் மட்டுமல்ல...அது ஒருவனின் "நான்" அல்ல...பல பேருடைய "நான்"...தவிர குண்டு வைக்கும் மனநோய் பிடித்த பன்றிகளுக்கு காரணங்கள் தேவையில்லை....

//
அப்படியிருக்க, பூணுலும் தாடியும் தெரிவது எதற்காக என்று கேட்டிருக்கலாம். ஒரு பக்கமாக இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.
//

இது எனக்கு புரியவில்லை....ஒரு பக்கம் என்று எதை சொல்கிறீர்கள்??

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

தாலிபானிசம் வெளியிலிருந்து ஒழிக்க முடியுமா? உள்ளிருந்து ஏற்படும் மக்களின் எழுச்சியே அதனை தோற்கடிக்கமுடியும்.
//

உண்மை!

//
ஆனால் அமெரிக்காவால் மட்டுமே இப்போதைக்கு அடக்கமுடியும் இவர்களை.
//

முழுவதும் ஒப்புக் கொள்ள வேண்டியது!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
.. am searching for words...

//

Yes...Sometimes, there are no words....

கலகலப்ரியா said...

:)

ராஜ நடராஜன் said...

இந்த நடை எந்த எழுத்தின் தாக்கம்?கவிதையா?பின்னவீனத்துவமா?மனதின் அழுகையா?

உங்கள் நண்பிக்கும் மனக்கண்ணில் வந்து போகும் 9/11 சாதாரண மனிதர்களுக்கும் எனது அனுதாபங்கள்.

ஹீப்ரூவின் சத்தம் ஈலி ஈலி யா ? ஏலி ஏலியா?

ராஜ நடராஜன் said...

//முற்றிலும் மறைக்கும் ஜீன்ஸ் பேண்ட்கள்...
கடவுள் போல் இருப்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் உள்ளாடைகள்....
இல்லாத‌தை இருப்பதாக காட்டும் மந்திரவாதிகள்...//

நவீன ஹைக்கூ!

ராஜ நடராஜன் said...

பின்னூட்டத்தில் அமெரிக்கா பற்றி கூவற மாதிரி தெரியுது.அமெரிக்காவின் மக்கள் சுதந்திரம் என்ற உணர்வும்,நீதி துறை போன்றவை செயலாற்றும் முறையும் பாராட்டுதலுக்குரியது.உலகில் உண்மையான ஜனநாயகம் வளர வேண்டும் என்ற நேர்மையான வெளிநாட்டுக் கொள்கை இருந்திருந்தால் மத்திய கிழக்கு நாடுகள்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஜனநாயகம் மலரச் செய்து இருக்கலாம்.இருப்பதிலேயே ஈராக் மட்டுமே ஓரளவுக்கு முற்போக்கான சிந்தனைகளுடன் இருந்தது சதாம் என்ற சர்வாதிகார ஆட்சியிலும் கூட.

மாறும் காலங்களின் மாற்றத்தில் அமெரிக்கா மட்டுமே தலிபானுக்கு சரியான எதிர்ப்பைக் காட்ட முடியும் என்றால் அந்த எதிர்ப்புக்கான விலையை வேறு சில நாடுகள் தரவேண்டி வரும்.

உலகில் போர்களும்,போர்களுக்கான காரணங்களும்,காரணதாரிகளும் இருக்கும் வரை புது உலகம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கும்.

ராஜ நடராஜன் said...

தனக்குதவி திட்டத்தை இனிமேல் கைவிடற மாதிரி தெரியலியே:)

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
இந்த நடை எந்த எழுத்தின் தாக்கம்?கவிதையா?பின்னவீனத்துவமா?மனதின் அழுகையா?

உங்கள் நண்பிக்கும் மனக்கண்ணில் வந்து போகும் 9/11 சாதாரண மனிதர்களுக்கும் எனது அனுதாபங்கள்.

ஹீப்ரூவின் சத்தம் ஈலி ஈலி யா ? ஏலி ஏலியா?
//

இது எதன் தாக்கமும் இல்லை நடராஜன்...ஒரு தனிப்பட்ட ஒருவனின் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் ஒரு சிறிய இடைவெளியில் கசிகிறது...அவ்வளவே...

//
உங்கள் நண்பிக்கும் மனக்கண்ணில் வந்து போகும் 9/11 சாதாரண மனிதர்களுக்கும் எனது அனுதாபங்கள்.
//

தலிபான் பொறுக்கி பன்னாடைகளும், மற்ற வெறி பிடித்த மனநோயாளிகளும் எலும்பு கூட மிஞ்சாது மண்ணாகும் நாள் தான் உயிரிழந்தவர்களுக்கு உண்மையான நாள்...அது வரை, அவர்கள் மரணத்திற்கு அர்த்தமில்லை...

ஈலியா ஏலியா....எனக்கு தெரிந்த வரை இரண்டு விதமாகவும் உச்சரிக்கிறார்கள்....இரண்டு தரப்புக்குமே ஹீப்ரு தாய்மொழி இல்லை என்பதால் சரியாக சொல்ல முடியவில்லை...

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
பின்னூட்டத்தில் அமெரிக்கா பற்றி கூவற மாதிரி தெரியுது.அமெரிக்காவின் மக்கள் சுதந்திரம் என்ற உணர்வும்,நீதி துறை போன்றவை செயலாற்றும் முறையும் பாராட்டுதலுக்குரியது.உலகில் உண்மையான ஜனநாயகம் வளர வேண்டும் என்ற நேர்மையான வெளிநாட்டுக் கொள்கை இருந்திருந்தால் மத்திய கிழக்கு நாடுகள்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஜனநாயகம் மலரச் செய்து இருக்கலாம்.
//

பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லாமல் போக அமெரிக்கா காரணமா இல்லை அங்கிருக்கும் மதவாதிகள் காரணமா?? பிரச்சினைகள் இல்லாத நாடில்லை...ஆனால் பாகிஸ்தானில் நடக்கும் செயல்களுக்கு அடிப்படை நோக்கம் என்ன?? அமெரிக்காவா இல்லை மற்றொரு ஆஃப்கனிஸ்தானை உருவாக்கும் பொறுக்கி நாய்களின் செயலா??

//
இருப்பதிலேயே ஈராக் மட்டுமே ஓரளவுக்கு முற்போக்கான சிந்தனைகளுடன் இருந்தது சதாம் என்ற சர்வாதிகார ஆட்சியிலும் கூட.
//

அந்த சிந்தனையின் காரணம் முற்போக்கு அல்ல...வேறு காரணங்கள் உண்டு...பக்கத்தில் இருப்பது இரான் என்பதும் ஒரு காரணம்...ஆனாலும் மதவெறி பிடித்தவர்கள் இராக்கில் குறைவு என்பது உண்மையே...அதற்கும் வேறு காரணங்கள் உண்டு...

//
மாறும் காலங்களின் மாற்றத்தில் அமெரிக்கா மட்டுமே தலிபானுக்கு சரியான எதிர்ப்பைக் காட்ட முடியும் என்றால் அந்த எதிர்ப்புக்கான விலையை வேறு சில நாடுகள் தரவேண்டி வரும்.
//

அமெரிக்கா மட்டும் என்று சொல்ல வரவில்லை...ஆனால், மற்றவர்கள் அமெரிக்கா அளவு கூட செய்யவில்லை என்பது தானே உண்மை??

//
உலகில் போர்களும்,போர்களுக்கான காரணங்களும்,காரணதாரிகளும் இருக்கும் வரை புது உலகம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கும்.
//

புது உலகம் என்பதெல்லாம் கனவு....வரலாறு ஆரம்பித்த நாளில் இருந்து போர்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.... காட்டு மிராண்டி கும்பலுக்கு எதிராக நாம் ஜெயிக்க விரும்புகிறோமா இல்லை நம் பெண் குழந்தைகளின் முகத்தில் திராவகம் ஊற்றப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போகிறோமா என்பது தான் கேள்வி!

ராஜ நடராஜன் said...

நான் கூட ரொம்ப தூங்கிட்டேனோன்னு நினைச்சுட்டு படிச்சிகிட்டே வந்தா விட்ட இடத்துக்கு மறுபடியும் வந்தது நினைவுக்கு வருது.